Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி பிரபல பாடசாலையில் வினாத்தாளில் சினிமாக் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பொது அறிவுப் பரீ்ட்சையில் வந்துள்ள கேள்வி, கல்வி ஆர்வலா்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்கள் இளம் சமுதாயத்தை குறிப்பாக மாணவ சமூகத்தை சீரழிப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு.

இந்த நிலையில் இவ்வாறு பாடசாலை நிர்வாகம் மாணவர்களை திரைப்படங்கள் மீது ஈடுபாடு கொள்வதற்குத் தூண்டும் வகையில் தனது காலாண்டுப் பரீட்சைக்கான வினாத்தாளை தயாரித்துள்ளது.

குறித்த பாடசாலையின் பொது அறிவுப் பரீட்சைக்கான கேள்வித்தாளில் “பசங்க” திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

பொது அறிவுக்கும் சினிமாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் இந்த பரீட்சைத்தாளில், குறித்த வினா உள்ளடக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதேவேளை, திரைப்படத்தில் இருந்தும் பாடசாலை பரீட்சைகளுக்கு கேள்விகள் தயாரிக்கப்படும் நிலையில், திரைப்படங்களை பார்க்காமல் விடலாமா? என்ற கேள்வியும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

kand

http://www.ntamil.com/31551

இந்த  நான்கு  விடைகளும்  பிழை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Iraivan said:

இந்த  நான்கு  விடைகளும்  பிழை. :rolleyes:

சரியான விடை என்ன?
நாமும்... பொது அறிவை வளர்ப்போம். wall_nut.gif

  • கருத்துக்கள உறவுகள்

"இந்த  நான்கு  விடைகளும்  பிழை" என்பது சரி.

பொது அறிவு என்று வரும்போது சினிமாவும் அதில் அடக்கம் தான் .

யாழ் இந்து பொது அறிவு வைக்கும் போட்டியிலும் ஐந்து கேள்விகள் சினிமா பற்றி இருக்கும் .

சரியான விடை   ---   சூர்யா 

  • கருத்துக்கள உறவுகள்

பொது அறிவு என்று வரும்போது பிரபாகரனை உருவாக்கியது தமிழா, சிங்களமா, முசுலீமா என்ற கேள்வியும் பொது அறிவுப் பரீட்சையில் வரலாமல்லவா? அப்படி வந்தால்......! ஒரு கற்பனை :grin: 

வணக்கம் தமிழ் சிறி ,

உங்கள் வரவிற்கும் பின்னரான பதிவுகளுக்கும் நான் எதுவித பின்னோட்டமும் இடவில்லை காரணம் உங்கள் மீது வந்த தடைக்கு பிறர் விட்ட பிழை தான் காரணம் என்று பலர் இங்கு குத்தி  முறிந்தார்கள் ,

இனியும் அதையே கடைபிடிக்க உங்களின் இந்த பதிவில் இருந்து முடிவெடுத்துவிட்டேன் 

நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, arjun said:

வணக்கம் அர்ஜூன், 

நீங்கள்... யாழ் இந்துவில் படித்தவர்....
அதிபர் சபாலிங்கத்துக்கும் உறவினர்,  எனது கல்லூரி வாழ்க்கைக்கு அப்பால்.... படித்த மனோவுடனும், தொடர்பில் இருப்பவர் என்பதால்... உங்கள் மீது, மற்றவர்கள் குற்றம் சாட்டும் போது......  நான், உங்களிடம்  ஒரு வித பாசத்தையே... கடைப் பிடித்தேன். அதுகும்... நீங்கள்,  யாழ். அரசடி வீதியில்...... மோகன் ராஜின்,  வீட்டின் முன் வாடகைக்காக... சில காலம் தங்கியிருந்ததை, இந்தக் களத்தில் நீங்கள் எழுதியிருந்ததை வாசித்து.... நீங்கள்,  இவ்வளவு... நெருக்கமாக இருந்து பழகியவரா? என்று  ஆச்சரியம் ஏற்பட்டது. 

ஆனால்.... நீங்கள், யாழ்களத்தில்... எல்லாத் திரிகளிலும், "புலி எதிர்ப்பு"  (என் பாசையில்... அது வாந்தி....)  செய்வதைப் பார்க்க, பொறுக்க முடியாமல் உள்ளது. அதானால் தான்....  உங்கள் மீது, கோபத்தை உமிழ்ந்து கொட்டுகிறேனே... எனக்கும், உங்களுக்கும் தனிப்பட்ட கோப விரோதங்கள் இல்லை.
நாம் பாதிக்கப் பட்ட தமிழராக ஒன்றிணைந்து செயல் படுவது.... எதிர்கால தமிழருக்கு நல்லது. எம்முடன்... இந்தச் சமுதாயம் முடிவடையவில்லை. இன்னும்..... பல ஆயிரமாண்டு இருக்கு.

அன்புடன்,
தமிழ்சிறி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, arjun said:

பொது அறிவு என்று வரும்போது சினிமாவும் அதில் அடக்கம் தான் .

யாழ் இந்து பொது அறிவு வைக்கும் போட்டியிலும் ஐந்து கேள்விகள் சினிமா பற்றி இருக்கும் .

சரியான விடை   ---   சூர்யா 

எப்படியும் கதைக்கலாம் என்பதற்கு உங்கள் பதில் அடக்கம்.

சினிமா பொது அறிவு சம்பந்தப்பட்டது என்றாலும்.....சினிமா விடயங்கள் பாடசாலைகளில் கற்பிக்கின்றார்களா? அல்லது கற்பிக்க வேண்டும் என சொல்ல முனைகின்றீர்களா? நான் அறிந்து ஜேர்மனி,இங்கிலாந்து,அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் சினிமா பற்றிய விடயங்கள் பாடசாலைகளில் புகுத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.  கனடா????? 

கல்வியை நிறுத்தி சினிகனவுத்தொழிற்சாலையில் உறங்க நினைக்கும் பெற்றோரின் சிறார் சூப்பர்சிங்கர் பார்க்கும் மனோத்துவம் எல்லோருக்கும் வராது.

பொது அறிவில் சினிமாவும் அடங்கும் .

பொது அறிவு என்றால் என்னவென்று தெரியாமல் பலர் இருக்கின்றார்கள் போல கிடக்கு .அப்படி ஒரு பாடமே இல்லை பின்னர் எப்படி பாடசாலையில் கற்பிற்பார்கள் .

யாழ் இந்துவில் முதல் பரிசு எடுத்தேன் .

நூறு கேள்விகள் .புவியியல் ,சரித்திரம் ,அரசியல்,குடியியல் ,சினிமா ,விளையாட்டு ,கணிதம் ,விஞ்ஞானம் எல்லாம் இருக்கும் .

விளையாட்டு ,சினிமா அத்தனை கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்தேன் .

இப்பவும் சில கேள்விகள் நினைவில் இருக்கு . 

பரிசாக கிடைத்தது 

எஸ்.பொ. வின் சடங்கு, திருக்குறள் 

அமெரிக்காவில் பிரபல விஞ்ஞானியாக இருக்கும் ஜெயகுமார் எனது முதலாவது பரிசிற்கு ஆப்பு வைத்தது வேறுகதை .

  • கருத்துக்கள உறவுகள்

பொது அறிவுப் பரீட்சை தானே... யாழ்ப்பாணத்தில் தொண்டமனாறு நடிகை.. தேவயாணி பற்றி கேள்வி போட்ட காலமும் உண்டு... எல்லாம் சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் தான்.

சிங்களவன் தமிழனை அரசியல் பொதுவறிவு ஊட்டமாட்டான்.. முதலாவது கேள்வியே போலி மகாவம்சத்தை தழுவியது.

சிங்களவன் நல்லா நுட்பமா பொது அறிவை வளர்க்கிறான்.. எதிர்காலத்தில் தமிழன் தன்னைப் பற்றி தானே அறிந்திருக்கக் கூடாது என்ற வகைக்கு. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

22 minutes ago, arjun said:

உதாரணத்திற்கு எப்படிப்பட்ட சினிமா கதைகள் கேள்விகள் எல்லாம் பொது அறிவாக யாழ் இந்துவில் கேட்டார்கள்?

இதற்குள் பிரபல விஞ்ஞானி, அமெரிக்கா, முதலாவது பரிசு, என முதன்மை சொற்களை பாவித்து தங்கள் பகட்டுவாழ்க்கையை,பந்தாவாழ்க்கையை படம் போட்டு காட்டுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, arjun said:

யாழ் இந்துவில் முதல் பரிசு எடுத்தேன் .

            V

அமெரிக்காவில் பிரபல விஞ்ஞானியாக இருக்கும் ஜெயகுமார் எனது முதலாவது பரிசிற்கு ஆப்பு வைத்தது வேறுகதை .

??????

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

??????

ஜெயகுமார்.....  எனது சக வகுப்பு மாணவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

??????

அதெல்லாம் அப்பப்ப எங்கட வெட்டிப் பெருமைகளை எடுத்து விடேக்க.. அப்படி இப்படி இடரத் தளரச் செய்யும்  தானே. கண்டுக்காதேங்க. எங்களுக்கு தேவை எங்களைப் பெரிசாக் காட்டிக்கிட்டு போலியா வந்து தொலையுறது மட்டும் தான். எவன் எக்கேடு கெட்டாலும் நாங்க கண்டுக்கவே மாட்டம். எங்கட மடியில மட்டும் யாரும் கைவைச்சிடக் கூடாது. கெட்ட கோவம் வந்திடும். புலிகள் அழிஞ்ச மாதிரி அழிக்க உத்தரவு போட்டிடுவம். செய்து முடிக்க எங்க பின்னாடி முழு உலகமும் இருக்குது. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, MEERA said:

??????

6 minutes ago, தமிழ் சிறி said:

ஜெயகுமார்.....  எனது சக வகுப்பு மாணவர்.  

ஐயோ கடவுளே ஏனப்பா இரண்டு பேரும் இப்ப இதுக்க வந்தனியள்??? சிங்கன்ரை புளுகுமூட்டை வித்தியாசமாய் இருக்கு....இன்னும் வருமெண்டெல்லே பார்த்துக்கொண்டிருக்கிறன்:cool:

தமிழ் சிறிக்கு இவரை தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன் .திருநீறு பூசியபடி பாடசாலைக்கு வருபவர் .

என்னைவிட இரு வகுப்புகள் குறையப்படித்தவர் . GCE O/L  இல் 7D 1C ,GCE A/L இல் 3A 1B இவரது ரிசல்ட்ஸ் .

(படத்தில் வயது போனவர் போலிருக்கு )

இரு வருடங்களுக்கு முதல்  கனடா பழைய மாணவர் டின்னருக்கு பிரதம விருந்தினாராக வந்திருந்தார் .

இவருடன் எனக்கான  ஒரு சம்பவம் இன்னமும் நினைவு இருக்கு .மேல் வகுப்பு மாணவர் பொது அறிவு போட்டியில் எனக்கு முதலிடமும் இவருக்கு இரண்டாவது இடமும் என்று அறிவிப்பு வந்து  இருவரையும் அழைத்து மறுமொழி பேப்பரை சரிபார்க்க சொன்னார்கள் .என்னைவிட அவருக்கு ஒரு மார்க் தான் குறைவு .அதில் வந்த ஒரு கேள்வி -யாழ் பஸ் நிலையத்தையும் யாழ் கோட்டையையும் இணைக்கும் வீதியின் பெயர் என்ன ?

நான் முனியப்பர் வீதி என்று பதில் எழுதியிருந்தேன் .அதற்கு அவர்கள் சரி போட்டு இரண்டு மார்க்குகள் தந்திருந்தார்கள் .இந்த காய் எனது பேப்பரை வாங்கி பார்த்துவிட்டு வாத்தியிடம் அந்த வீதியின் பெயர் முனீஸ்வரன் வீதி அதுதான் சரி என்று சொல்லி எனது இரண்டு மார்க்கை குறைத்து தான் முதலாவதாக வந்துவிட்டார் .எனக்கு இரண்டாம் பரிசு. ஒரு திருக்குறளும் எ.ஸ்.போவின் "சடங்கு " நூலும் பரிசாக கிடைத்தது .எங்களுக்கு படிப்பு ஓடாது ஆனால் பொது அறிவு அப்பவே கொஞ்சம் இருந்தது .

கனடா டின்னரில் வைத்து உந்த நிகழ்வை நினவு படுத்தினேன் ,இப்ப திருப்பி தரட்டோ என்று நக்கலாக கேட்டார் .

வாழ்த்துக்கள் ஜெயக்குமார். 

2014 இல் எழுதிய பதிவு ,தேடித்பிடித்தாச்சு .

நம்புங்கள் பிள்ளைகாள் .:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே " யாழ் இந்துவில் முதல் பரிசு எடுத்தேன் " என்பது பொய்.

ஜெயக்குமாருக்கு தான் முதல் பரிசு கிடைத்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

ஆகவே " யாழ் இந்துவில் முதல் பரிசு எடுத்தேன் " என்பது பொய்.

ஜெயக்குமாருக்கு தான் முதல் பரிசு கிடைத்திருக்கிறது. 

ஒன்றும் இரண்டும் முதலாம் இடம் தானே. அவர் முன்னால முதலாம் இடம்.. இவர் பின்னால முதலாமிடம். விடுங்க.. அவர் எவ்வளவு பாடுபடுறார் உங்களை எல்லாம் சமாளிச்சுக் கொண்டு கொலரைத் தூக்கிக்கிட்டு.. வெளியேற. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி பரீட்சை கேள்வித் தாளில் சினிமா கேள்வி கேட்டிருப்பதில் எனக்கும் உடந்தை இல்லை.
ஆனால் பொது அறிவு எனும் போது சினிமாவும் அனேகமாக கலக்கப்படுகின்றது.
நான் படித்த பள்ளிகளில், ஒரு நாளும் சினிமா கேள்விகளை பள்ளிகளில் கேட்டதாக அறியவில்லை.
நான் அறியவில்லை என்பதன் அர்த்தம் வேறு பள்ளிகளில் கேட்கப்படவில்லை என்ற அர்த்தம் ஆகாது.
அர்ஜுன் எழுதினார் என்பதற்காக அவர்மேல் கலாய்ப்பது  சரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

தமிழ் சிறிக்கு இவரை தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன் .திருநீறு பூசியபடி பாடசாலைக்கு வருபவர் .

என்னைவிட இரு வகுப்புகள் குறையப்படித்தவர் . GCE O/L  இல் 7D 1C ,GCE A/L இல் 3A 1B இவரது ரிசல்ட்ஸ் .

(படத்தில் வயது போனவர் போலிருக்கு )

இரு வருடங்களுக்கு முதல்  கனடா பழைய மாணவர் டின்னருக்கு பிரதம விருந்தினாராக வந்திருந்தார் .

இவருடன் எனக்கான  ஒரு சம்பவம் இன்னமும் நினைவு இருக்கு .மேல் வகுப்பு மாணவர் பொது அறிவு போட்டியில் எனக்கு முதலிடமும் இவருக்கு இரண்டாவது இடமும் என்று அறிவிப்பு வந்து  இருவரையும் அழைத்து மறுமொழி பேப்பரை சரிபார்க்க சொன்னார்கள் .என்னைவிட அவருக்கு ஒரு மார்க் தான் குறைவு .அதில் வந்த ஒரு கேள்வி -யாழ் பஸ் நிலையத்தையும் யாழ் கோட்டையையும் இணைக்கும் வீதியின் பெயர் என்ன ?

நான் முனியப்பர் வீதி என்று பதில் எழுதியிருந்தேன் .அதற்கு அவர்கள் சரி போட்டு இரண்டு மார்க்குகள் தந்திருந்தார்கள் .இந்த காய் எனது பேப்பரை வாங்கி பார்த்துவிட்டு வாத்தியிடம் அந்த வீதியின் பெயர் முனீஸ்வரன் வீதி அதுதான் சரி என்று சொல்லி எனது இரண்டு மார்க்கை குறைத்து தான் முதலாவதாக வந்துவிட்டார் .எனக்கு இரண்டாம் பரிசு. ஒரு திருக்குறளும் எ.ஸ்.போவின் "சடங்கு " நூலும் பரிசாக கிடைத்தது .எங்களுக்கு படிப்பு ஓடாது ஆனால் பொது அறிவு அப்பவே கொஞ்சம் இருந்தது .

கனடா டின்னரில் வைத்து உந்த நிகழ்வை நினவு படுத்தினேன் ,இப்ப திருப்பி தரட்டோ என்று நக்கலாக கேட்டார் .

வாழ்த்துக்கள் ஜெயக்குமார். 

2014 இல் எழுதிய பதிவு ,தேடித்பிடித்தாச்சு .

நம்புங்கள் பிள்ளைகாள் .:unsure:

அர்ஜுன்,  இரண்டு பேருமே பிழை!

மூத்திர ஒழுங்கை தான் சரியான விடை...!

நானும் என் பங்குக்கு.....!:rolleyes:

Edited by புங்கையூரன்

9 hours ago, புங்கையூரன் said:

அர்ஜுன்,  இரண்டு பேருமே பிழை!

மூத்திர ஒழுங்கை தான் சரியான விடை...!

நானும் என் பங்குக்கு.....!:rolleyes:

ஹ ஹ, உண்மைதான். 1996இற்கு பின் அந்தவீதியில் நடைபாதை வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது சிறிய ஹோட்டல் ஒன்றும் வந்துவிட்டது.   

13 hours ago, nedukkalapoovan said:

பொது அறிவுப் பரீட்சை தானே... யாழ்ப்பாணத்தில் தொண்டமனாறு நடிகை.. தேவயாணி பற்றி கேள்வி போட்ட காலமும் உண்டு... எல்லாம் சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் தான்.

சிங்களவன் தமிழனை அரசியல் பொதுவறிவு ஊட்டமாட்டான்.. முதலாவது கேள்வியே போலி மகாவம்சத்தை தழுவியது.

சிங்களவன் நல்லா நுட்பமா பொது அறிவை வளர்க்கிறான்.. எதிர்காலத்தில் தமிழன் தன்னைப் பற்றி தானே அறிந்திருக்கக் கூடாது என்ற வகைக்கு. tw_blush:

மதில் பாய்ந்து படம்பாகப்போறவர்க்களை இனம்காண சினிமா கேள்வி கேட்டிருப்பாங்களோ தெரியாது????????????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Surveyor said:

மதில் பாய்ந்து படம்பாகப்போறவர்க்களை இனம்காண சினிமா கேள்வி கேட்டிருப்பாங்களோ தெரியாது????????????

நாங்க பள்ளிக்குப் போன காலத்தில் இந்திய சினிமாவுக்கு உள்வரத் தடை.. மக்களை பாதிப்பதாக தமிழீழ நிர்வாகம் கொண்டு வந்தது...(சில கருத்துள்ள சமூக அக்கறை கொண்ட படங்கள் அனுமதிக்கப்பட்டன)

பார்க்க கரன்ட் இல்லை அது வேறு தடை சிங்கள அரசால். இதில எங்களிடம் எல்லாம் சினிக் கேள்விக்கே இடமிருக்கல்லை. வீரகேசரில வாசிச்சால் உண்டு. அப்போது எல்லாம் உதயனில் சினிக்கு ஒரு பக்கமில்லை.. காரணம் பேப்பருக்கும் தடை சிறீலங்காவால். 

 களவாப் பாத்தவையும்.. சினிமா பார்க்க முடியல்லைன்னு கொழும்புக்கு புறுபுறுத்துக் கொண்டு கிளம்பினவையும் இருக்கினம் அந்தக் காலத்தில். ஆனால்.. அந்தக் காலத்தில் யாழ் இந்து அகில இலங்கை ரீதியில் ரோயலுக்கு அடுத்த படியாக.. 2ம் இடத்தில் இருந்தது.. பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில். இன்று...???! நாடளாவிய ரீதியில் அதிக நல்ல பெறுபேறுகள் கிடைத்து வந்தாலும்.. யாழ் இந்து பிந்தங்கி நிற்கிறது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 பொது அறிவில் விளையாட்டு வரும் போது சினிமாவும் வரும் என்று நினைத்து விட்டார்களோ

டைட்டானிக் படத்தை பற்றியும் கேள்வி வந்ததாக ஞாபகம்  ஆனால் எந்த பரீட்சையில் வந்தது என்று ஞாபகம் இல்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Surveyor said:

ஹ ஹ, உண்மைதான். 1996இற்கு பின் அந்தவீதியில் நடைபாதை வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது சிறிய ஹோட்டல் ஒன்றும் வந்துவிட்டது.   

மதில் பாய்ந்து படம்பாகப்போறவர்க்களை இனம்காண சினிமா கேள்வி கேட்டிருப்பாங்களோ தெரியாது????????????

அடங்கொக்கா மவனே! இண்டு வரைக்கும் இப்பிடியான கோணத்திலை யாருமே யோசிக்கவில்லையப்பா tw_thumbsup:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.