Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்காவது ஆசை இருக்கா ????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேலே பார்த்திருக்கிறீர்கள் நான் கீழே

ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

  • Replies 168
  • Views 21.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறவன் இப்பிடி விளல்கதையல் கதச்சுகொன்டு நிக்கமாட்டான்.சட்டுப்புட்டென்டு உழைச்சுகாச சேத்துக்கொன்டு கம்மென்டு வெளிக்கிட்டிடுவான்.இதெல்லாம் சும்மா லுலுலுலு.. வெறும் படம். இந்த கேள்வி பதில் எல்லாம்.நாட்டியங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

எங்கே அண்ணை இருந்தனீங்கள் ....இவ்வளவுகாலமும் .....? 
இவ்வளவு விடயங்களும் தெரிந்து வைத்துக்கொண்டு ....முதல்ல நாட்டிற்கு வார வழியை பாருங்கள் ....ஒரு பின்னு பின்னிவிடலாம் 

நச்சென்று கழுத்திலேயே பிடித்துவிட்டீர்கள் .....Full Update இல வேற இருக்கிறீங்கள் 
நீங்கள் சொன்ன அத்தனை கம்பெனிகளும் (99X,WSO2,Virtu,MIT and IFS ) தற்போது முன்னணியில் ஒரு போடு போட்டுகொண்டிருக்கும் நிறுவனங்கள்....அனால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் விண்ணர்கள் 
அதாவது 99x -கூடுதலாக Web Programming இல் அதிக கவனம் செலுத்துபவர்கள் (தொடர்ந்து மூன்றாவது தடவையாக தெற்காசியாவின் சிறந்த தொழில் செய்யும்,தொழில் செய்ய விரும்பும் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டவர்கள்-3 Times consecutive award winners for best work place among south asia )
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 70K + for fresher(moratuwa and colombo)

அடுத்தது WSO2 --- Middle ware, Adaptors போன்ற மென்பொருட்களில் கில்லி ....Fully Open source 
 Apache,JQuery போன்றவற்றில் இவர்களது own plugins ஐ உருவாக்கி வைத்துள்ளார்கள் ...மிக முக்கியமாக JAVA இவர்களுக்கு மிக விருப்பதிட்குரியது 
சமீபத்தில் தான் இவர்களது மொபைல் இற்குரிய மென்பொருள் கூடம் திறக்கப்பட்டது ...அதிலும் பிரித்து மேய்ந்து கொண்டு முன்னேறுகிறார்கள் 
அதிக வேலைப்பழு என்பது இவர்களது பின்னடைவு 
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 90K + for fresher(moratuwa and colombo)

Virtusa--- எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுவார்கள், இந்தியாவிலும் Development centers உண்டு
                (JAVA,.Net,BPM,ERP-நம்முடைய துறை,DB) என்று எல்லாவற்றிலும் திறமையானவர்கள் ....என்னுடைய முதற் நிறுவனம் 
               பின்னடைவு ஏராளம் ....எப்படி ஊழியர்களை பிழிவது என்ற வித்தை தெரிந்தவர்கள் .....
                வேலைப்பழு தாங்காமல் இரண்டு மூன்று தற்கொலை கதைகள் கூட உண்டு ....மிகவும் அழகான பெண்கள் எல்லாமே இங்கே தான் வேலை செய்யினம் ..அதிலும் அரசியல்... பெண் பிள்ளைகள் முக்கிக்கொண்டு தலையை சொறிந்து கொண்டு இருந்தால் எந்த ஆண் மகன் தான் பார்த்துகொண்டிருப்பான் ...ஆகவே வேலை ஒரு தடையுமின்றி போய்க்கொண்டிருக்கும் ...ஒவ்வொரு டீமாக பார்த்து அழகான ஆனால் மண்டையில் சரக்கில்லாத பிள்ளைகளை பார்த்து போட்டு விட்டுவிடுவார்கள் அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் தான் Code எழுதுவது    
சம்பளம் :-இருக்கும் சரக்கிட்கேட்ப  

MIT--- கூடுதலாக முக்கால்வாசி மொரட்டுவை இங்கே தான் இருக்கிறது ...British Stock Exchange இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் தான் 
உள்ளே போவது குதிரைக்கொம்பு ...அவர்களாக அழைத்தால் தான் ....C++ இவர்களது விருப்பத்திற்குரிய மொழி 
சம்பளம் --ஆரம்பமே அமர்க்களம் 90K + for fresher(moratuwa and colombo)

IFS--முற்று முழுதாக ERP (Enterprise Resource Planing) ....அவர்களது Own product (IFS ERP), வேலைப்பழு குறைந்த நல்ல நிறுவனம் 
     (Lunch and Gym Privileges அடக்கம், )
சம்பளம் --இருக்கும் சரக்கிட்கேட்ப  

மற்றயது இங்கே Software Methodologies என்று பார்த்தால் அதிகமாக Agile,Scrum,XP(Extreme Programming ) பயன்படுகின்றன....வேறேதும் மேலதிக தகவல்கள் தேவையானவர்கள் கேளுங்கள் ...தருகிறேன்  

எனது துறை கணனித் துறை அல்ல, கணக்கியல் துறை. Coding நானாக கற்க முயற்சித்துக்கொண்டிருக்கும் ஒன்று. அதற்கான காரணம் games development மீதிருக்கும் எனது ஈடுபாடு. ஒரு நாள் நேரம் கிடைக்கும்போது முறைப்படி கற்க விருப்பம் இருக்கிறது. சிறந்த Graphic Designers ற்கு இருக்கும் தட்டுப்பாட்டை விட  இலங்கையில் Game Development இற்கான சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றன?

எனது தொழில் சார்ந்து பார்த்தால் அதிகம் developers உடன் வேலை செய்ய வேண்டி வருகிறது. project life cycle போன்றவற்றிற்கும் developers உடன் இலகுவாகக் கதைக்கவும் மென்பொருள் துறைபற்றிய அறிவு இருந்தால் தேவலை என யோசித்தேன். அதனாலேயே சில methodologies பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். ஆனால் அதிக developing network security, cyber security, secure communications சார்ந்து இருக்கின்றது.

நீங்கள் ex Virtusan என்பதால் தர்சன்/தனெஞ்செயன்/சூட்டி அண்ணா/சிறிகரன்/மீரா இதில யாரையாவது தெரிந்திருக்கும். Virtu Hotel Trans Asia (Now Cinnamon Lake Side)  வில் இருந்தபோது ACBT இற்கு வரும்போது பார்த்திருக்கிறேன். முந்தி buffet lunch எல்லாம் குடுப்பார்கள்.

Calcey technologies பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? I mean inside information. இந்த நிறுவனத்தின் Co founder, ex  Apple.

30 minutes ago, Thumpalayan said:

What about Integration/BI jobs?

என்னைப் பொறுத்தவரையில் நான் ஊரில் போய் வாழ்வது முடியாத காரியம்.   ஊரில் போய் வாழத்தான் எனக்கு விருப்பம்.  ஆனால், என்னுடைய mentality இற்கு ஊரில் போய் வாழ்வது மிகவும் கடினம்.   ஆனால், நிச்சயம் அங்கு அடிக்கடி போய் வருவேன்.  அங்கே எனக்குப் (பரம்பரை) சொத்துக்கள்  நிச்சயம் இருக்கும்.   எனது அடுத்த தலைமுறைக்கும் அங்கு உறவினை ஏற்படுத்திக் கொடுப்பேன்.  அங்குள்ள சூழ்நிலைகளோ, வசதி வாய்ப்புகளோ எனக்குப் பிரச்சனை இல்லை.  அங்குள்ள மனிதர்களின் mentality தான் எனக்குப் பிரச்சனை.   ரதி குறிப்பிட்டதுபோல, அங்கு சுதந்திரம் இல்லை.  முக்கியமாகப் பெண்களுக்கு இங்கிருக்கும் சுதந்திரம் அங்கில்லை.   அங்கு சமூக சுதந்திரம் இருக்கும்பட்சத்தில் அங்கு போய் வாழ நான் தயார்.    சின்ன வயதிலேயே புலம்பெயர்ந்து வெளிநாட்டு mentality ஐ adopt பண்ணி வாழ்ந்துவிட்டு அங்கு சென்று வாழ்வது மிகவும் கடினம்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

எனக்கு தெரிந்து யாழில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வாழும் பிள்ளைகள் எழுதுவதில்லை. எனவே சுமோ இந்த கேள்வியை அவர்களை நோக்கி எழுப்பவில்லை என நினைக்கிறேன். 

மேலும் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளை இலங்கைக்கு போகுதாம் எரித்திரியாவிற்கு போகுதாம் என்பது ஒரு விடயமே அல்ல. அப்படி போறவர்கள் நாளை ஒரு பிரச்சனை என்றவுடன் றிட்டேண்.

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

அதற்கான காரணம் உயிர்ப் பயம் மட்டுமாக இல்லாவிட்டாலும் எமது சந்ததிக்கு நாற்பத்தைந்து கடந்த நிலையில் பலர் உழைத்து ஓடாகி நோய்களுடனும் இன்னும் கூட பொருளாதார பலம் அற்றவர்களாக இருந்துகொண்டிருக்கையில் நிரந்தர வதிவிட உரிமையைத் துறந்து அங்கு போய் இருப்பதற்குப் பயப்படுவது தவறென்று கூற முடியாது. ஆனால் போகாமல் இருப்பதற்கு நொண்டிச் சாட்டுகள் கூறுவதுதான் தவறு. இஸ்ரேலியர்கள் போல எம்மினத்தவர்க்கு உணர்வு இல்லை.

4 hours ago, தமிழச்சி said:

என்னைப் பொறுத்தவரையில் நான் ஊரில் போய் வாழ்வது முடியாத காரியம்.   ஊரில் போய் வாழத்தான் எனக்கு விருப்பம்.  ஆனால், என்னுடைய mentality இற்கு ஊரில் போய் வாழ்வது மிகவும் கடினம்.   ஆனால், நிச்சயம் அங்கு அடிக்கடி போய் வருவேன்.  அங்கே எனக்குப் (பரம்பரை) சொத்துக்கள்  நிச்சயம் இருக்கும்.   எனது அடுத்த தலைமுறைக்கும் அங்கு உறவினை ஏற்படுத்திக் கொடுப்பேன்.  அங்குள்ள சூழ்நிலைகளோ, வசதி வாய்ப்புகளோ எனக்குப் பிரச்சனை இல்லை.  அங்குள்ள மனிதர்களின் mentality தான் எனக்குப் பிரச்சனை.   ரதி குறிப்பிட்டதுபோல, அங்கு சுதந்திரம் இல்லை.  முக்கியமாகப் பெண்களுக்கு இங்கிருக்கும் சுதந்திரம் அங்கில்லை.   அங்கு சமூக சுதந்திரம் இருக்கும்பட்சத்தில் அங்கு போய் வாழ நான் தயார்.    சின்ன வயதிலேயே புலம்பெயர்ந்து வெளிநாட்டு mentality ஐ adopt பண்ணி வாழ்ந்துவிட்டு அங்கு சென்று வாழ்வது மிகவும் கடினம்.   

உண்மைதான் அதுவும் எமக்குப் பாதகமாகத்தான் இருக்கும். ஆனாலும் போய் இருக்க எண்ணுவோருக்குச் சகிப்புத் தன்மை மட்டும் இருந்துவிட்டால் காலப்போக்கில் எமக்கு அது பழகிவிடாதா தமிழச்சி?

6 hours ago, Thirdeye said:

போறவன் இப்பிடி விளல்கதையல் கதச்சுகொன்டு நிக்கமாட்டான்.சட்டுப்புட்டென்டு உழைச்சுகாச சேத்துக்கொன்டு கம்மென்டு வெளிக்கிட்டிடுவான்.இதெல்லாம் சும்மா லுலுலுலு.. வெறும் படம். இந்த கேள்வி பதில் எல்லாம்.நாட்டியங்கள்.

யாழ் இணையத்தில படங்காட்டினால் எனக்கு அவார்ட் தருவதாக யாரோ கூறியது போல் இருந்ததே?? அப்பா ஒன்றுமே இல்லையா?? நல்லகாலம் நீங்கள் வந்து இப்பவாவது சொன்னது 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Human rights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான்

இதைச் சொல்ல இந்தத் தலைப்பு.. இவ்வளவு பில்டப்பு. 

உங்க எத்தனையோ வெள்ளையள் gap year எடுத்திட்டு எங்கங்கையோ எல்லாம் போகுதுகள்.. வேலை அனுபவம் வேண்டி.

மேலும்.. படிப்பின் போது கூட exchange students சா எத்தனையோ பேர் பல்வேறு நாடுகளுக்கும் போய் வெவ்வேறு அனுபங்களைப் பெற போகிறார்கள்.

சுனாமியின் போது எத்தனையோ புலம்பெயர் தமிழர் சந்ததி அங்க போய் நின்று உதவினதுகள்.

ஏன் போராட்ட காலத்தில் அண்ணர் யோகி போன்றவர்கள்.. ஜேர்மனியப் பிரஜா உரிமையை உதறிட்டு தாயகம் வந்து போராடினார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையான.. தமிழக இளைஞர்கள்.. தாயகத்தில் போராடி வீரச்சாவடைந்திருக்கினம். 

இன்றைய சூழலில்.. எமது மக்களுக்கு நடந்த பெரிய இன அழிப்புக்கே ஒரு நீதி கிடைக்காத சூழலில்.. சொறீலங்கா அமைதிப் பூங்கா.. தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கும்..சொர்க்க தேசம்.. என்று.. தங்க முலாம் பூச வெளிக்கிடுவது தான் தவறு. அதற்கு சொறீலங்கா தமிழர்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டி இருக்கும். 

ஒரு மனித உரிமைகள் மாஸ்டர் பட்டதாரி.. சொறீலங்காவில் செய்ய எவ்வளவோ இருக்குது. ஆனால்... அவாவோட.. அவங்க அம்மா.. அப்பா.. குடும்பத்தில்.. பிறர் அங்க போய் என்னத்தைப் புடுங்கிறது..

மகள் டாக்டர் என்றால்.. அம்மா.. ஒப்பரேசன் தியேட்டரில் ஒப்பரேசன் செய்யலாமா.. இல்லை இல்ல. ஏன் இந்த அம்மாவுக்கு அப்படி ஒரு எண்ணம்...??! மகள் டாக்டர் ஆகிட்டா என்பதை உலகிற்கு அறிவுக்கும் சில அம்மாமார் இப்படி பொதுவெளியில் அலம்புவது உண்டு. 

நம்ம மீராக்கா சொன்னது போல.. .. சும்மா பிலிமு காட்டிறது என்பது இதைத்தானா...tw_blush:tw_warning:

கவலை என்னென்னா.. இவங்க எல்லாம்.. தமிழருக்கு உதவிறம் போராடிறம் என்ற கோதாவில்.. முன்னர் புலம்பெயர் தேசங்களில் உலா வந்தவை... என்பது தான்.  

ஒரு விசயத்தை ஆணித்தரமாக அறிந்து முன்னிறுத்த முடியாதவர்கள் எப்படி.. தமிழர்களின் தலைவிதியை தீர்மானிப்பினம்..??! அதுதானே என்னவோ தமிழனின் தலைவிதி இவ்வளவு மோசமாகக் கிடக்குது. :rolleyes:

இந்த அம்மாவுக்குச் சொல்லக் கூடிய ஒன்று..

ஒரு மாஸ்டர் பட்டதாரி.. 21 வயசை கடந்த.. mature ஆள். தனித்து முடிவெடுக்கும் சகல உரிமையையும் உடையவர். அவாட படிப்புக்கு ஏற்ப தொழிற்படக் கூடிய களம் உலகில் பல பகுதிகளில் இருக்கும். சொறீலங்காவிலும் இருக்கும். அந்த வகையில்.. அவா அங்க போய் தனது படிப்பை பிரயோகிக்க விடுங்க. அதை ஒரு எடுகோளாக வைச்சு எல்லாருக்கும் அதையே அட்வைஸா செய்ய வெளிக்கிடக் கூடாது. ஆளாளுக்கு பல்வேறு பிற புற.. அகக் காரணிகள் இருக்கும். அவை வேறுபட்டவை. 

சூழ்நிலைகள் சரியில்லைன்னா.. அந்தப் பிள்ளை எப்படியோ சமாளிச்சு வெளில வந்திடும். ஆனால் நீங்க..

பிறகு உங்க கதி ஜெயக்குமாரி அக்கா ரேஞ்சுக்கு போகாமல் பார்த்துக் கொண்டால் நலம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழச்சி said:

என்னைப் பொறுத்தவரையில் நான் ஊரில் போய் வாழ்வது முடியாத காரியம்.   ஊரில் போய் வாழத்தான் எனக்கு விருப்பம்.  ஆனால், என்னுடைய mentality இற்கு ஊரில் போய் வாழ்வது மிகவும் கடினம்.   ஆனால், நிச்சயம் அங்கு அடிக்கடி போய் வருவேன்.  அங்கே எனக்குப் (பரம்பரை) சொத்துக்கள்  நிச்சயம் இருக்கும்.   எனது அடுத்த தலைமுறைக்கும் அங்கு உறவினை ஏற்படுத்திக் கொடுப்பேன்.  அங்குள்ள சூழ்நிலைகளோ, வசதி வாய்ப்புகளோ எனக்குப் பிரச்சனை இல்லை.  அங்குள்ள மனிதர்களின் mentality தான் எனக்குப் பிரச்சனை.   ரதி குறிப்பிட்டதுபோல, அங்கு சுதந்திரம் இல்லை.  முக்கியமாகப் பெண்களுக்கு இங்கிருக்கும் சுதந்திரம் அங்கில்லை.   அங்கு சமூக சுதந்திரம் இருக்கும்பட்சத்தில் அங்கு போய் வாழ நான் தயார்.    சின்ன வயதிலேயே புலம்பெயர்ந்து வெளிநாட்டு mentality ஐ adopt பண்ணி வாழ்ந்துவிட்டு அங்கு சென்று வாழ்வது மிகவும் கடினம்.   

ம் பல வருடங்களுக்கு மேலாக புலத்தில் வசிப்பவர்களுக்கு இங்கே வசிப்பது இயலாத காரியம் இதை விளக்கமாக சொல்ல முடியாது  அங்கே உள்ள சூழ் நிலையில் நல்ல சுதந்திரமாக வாழ்தவர்கள் இங்கே அதை முழுவதுமாக எதிர்பார்க்க முடியாது  ஒரு நுளம்பு குத்தினால் கூட இருக்க மனம் இல்லை என்று சொன்னவர்களும் இருக்குறார்கள் இருந்தாலும் ஒரு சிலர் வந்து வாழ்கிறார்கள் குறிப்பிட்ட வயது கழிந்த பிறகு. 

Edited by முனிவர் ஜீ

On 4/12/2016 at 0:41 AM, அக்னியஷ்த்ரா said:

கலைஞன் ஜீ ....அதுதான் முன்னரே சொன்னேனே ...சிந்திக்கும் மனப்பாங்கில் மாற்றம் வரவேண்டும் என்று ...இன்னும் எங்கடை சனத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளவில்லை.....நீங்கள் அனுப்பும் பணத்தை பெறுபவர்களே இது கள்ளமட்டை பணம் என்று வெளியில் கதைக்கும் காலம் தான் இது
...மற்றையது நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நீங்கள் அதிகமாக அனுப்பும் பணம் இங்குள்ளவர்களை உழைப்பின் அருமை தெரியாத சுரண்டி வாழ்வபவர்களாக மட்டுமே  மாற்றியுள்ளது....பதின்ம வயதில் பல்சர் மோட்டார்சைக்கிளும் கையில் பீர் கேன்உடனும் பீச்சில் எங்கடை பெடியன்கள் 
Fun எடுக்கவும் இந்த வெளிநாட்டு பணம் ஒரு காரணம்....அண்ணை ஒரு கேள்வி இதே போர் ,கலவரங்களால் எங்கடை உறவுகள் புலம்பெயர்ந்திருப்பதால் இப்ப இந்த சனம் வெளிநாட்டுகாசில் சுதியாக இருக்கினம் ....ஒருவேளை இந்த போரே நடக்காமல் இருந்திருந்தால் அப்போது இந்த சனம் வெளிநாட்டுகாசிட்கு என்ன செய்திருப்பினம் ....? தங்கட கையை தானே நம்பியிருப்பினம் ....?

எனது சிந்திக்கும் மனப்பாங்கில் மாற்றம் ஏதும் வரவேண்டிய தேவை இல்லை. ஏன் என்றால் நான் அடுத்த 5/10 வருடங்களில் இலங்கைக்கு வரப்போவது இல்லை. வருவதாக இருந்தாலும் கனடாவில் உள்ளதுபோன்று தனிமனித சுதந்திரம் இலங்கையில் கிடைக்கும்போதே வருவேன். அந்நேரத்தில் அங்கேயுள்ளவர்கள், மற்றும் நீங்கள் அப்போது அங்கே இருந்தால்.. உங்கள் அனைவரினதும் சிந்திக்கும் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.

இலங்கையில் தனிமனிதனுக்கு பாதுகாப்பு, சுதந்திரம் இல்லை என்றால் என்னைப்பொறுத்தவரையில் அங்கே வருவதில் அர்த்தம் இல்லை. ஏன் என்றால் 26வருடங்கள் அங்கே ஓர் புழுவைப்போல் பல்வேறு முதலாளிமாரின் நிர்வாகங்களின்கீழ் அடிமையாக வாழ்ந்து அனுபவப்பட்டது போதும். 

தவிர, எமது ஊர் 26 ஆண்டுகளாகியும் இன்னும் இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. ஊரின் பெயர் தவிர உருவமே முழுதாய் மாற்றப்பட்டுவிட்டது. இங்கேயிருந்து மினக்கட்டு ஆயிரக்கணக்கான டொலர் காசையும், நேரத்தையும் செலவளித்து இராணுவத்தின் காப்பரண்களையும், விகாரைகளையும், இடிக்கப்பட்ட வீடுகளையும், பற்றைக்காடுகளையும் வந்து பார்க்கவேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த இழவுகளை வலைத்தளங்களியேயே பல்வேறு வழிவகைகளில் பார்க்கமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

ம் பல வருடங்களுக்கு மேலாக புலத்தில் வசிப்பவர்களுக்கு இங்கே வசிப்பது இயலாத காரியம் இதை விளக்கமாக சொல்ல முடியாது  அங்கே உள்ள சூழ் நிலையில் நல்ல சுதந்திரமாக வாழ்தவர்கள் இங்கே அதை முழுவதுமாக எதிர்பார்க்க முடியாது  ஒரு நுளம்பு குத்தினால் கூட இருக்க மனம் இல்லை என்று சொன்னவர்களும் இருக்குறார்கள் இருந்தாலும் ஒரு சிலர் வந்து வாழ்கிறார்கள் குறிப்பிட்ட வயது கழிந்த பிறகு. 

ஆடி அடங்கினப் பிறகு.. யாரும் கைவைக்க மாட்டாத ஒரு உடல்நிலை வந்த பிறகு வருவினம். இங்க elderly centre இல் இப்படி அமைதியாகக் அடங்கிக் கிட்ட முடியாதவை..

_45900156_care.jpg

அங்க ஊருக்கு வந்து பாவம் அங்கத்தைச் சனத்துக்கு பந்தா காட்டி அடக்கி ஆள நினைக்கிறது... அந்த வயசிலும்.

அதுக்குத்தான் வாறவை முனிவர் ஜீ..! நாட்டு மேல உள்ள பாசத்தில இல்ல.tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

இதைச் சொல்ல இந்தத் தலைப்பு.. இவ்வளவு பில்டப்பு. 

உங்க எத்தனையோ வெள்ளையள் gap year எடுத்திட்டு எங்கங்கையோ எல்லாம் போகுதுகள்.. வேலை அனுபவம் வேண்டி.

மேலும்.. படிப்பின் போது கூட exchange students சா எத்தனையோ பேர் பல்வேறு நாடுகளுக்கும் போய் வெவ்வேறு அனுபங்களைப் பெற போகிறார்கள்.

சுனாமியின் போது எத்தனையோ புலம்பெயர் தமிழர் சந்ததி அங்க போய் நின்று உதவினதுகள்.

ஏன் போராட்ட காலத்தில் அண்ணர் யோகி போன்றவர்கள்.. ஜேர்மனியப் பிரஜா உரிமையை உதறிட்டு தாயகம் வந்து போராடினார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையான.. தமிழக இளைஞர்கள்.. தாயகத்தில் போராடி வீரச்சாவடைந்திருக்கினம். 

இன்றைய சூழலில்.. எமது மக்களுக்கு நடந்த பெரிய இன அழிப்புக்கே ஒரு நீதி கிடைக்காத சூழலில்.. சொறீலங்கா அமைதிப் பூங்கா.. தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கும்..சொர்க்க தேசம்.. என்று.. தங்க முலாம் பூச வெளிக்கிடுவது தான் தவறு. அதற்கு சொறீலங்கா தமிழர்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டி இருக்கும். 

ஒரு மனித உரிமைகள் மாஸ்டர் பட்டதாரி.. சொறீலங்காவில் செய்ய எவ்வளவோ இருக்குது. ஆனால்... அவாவோட.. அவங்க அம்மா.. அப்பா.. குடும்பத்தில்.. பிறர் அங்க போய் என்னத்தைப் புடுங்கிறது..

மகள் டாக்டர் என்றால்.. அம்மா.. ஒப்பரேசன் தியேட்டரில் ஒப்பரேசன் செய்யலாமா.. இல்லை இல்ல. ஏன் இந்த அம்மாவுக்கு அப்படி ஒரு எண்ணம்...??! மகள் டாக்டர் ஆகிட்டா என்பதை உலகிற்கு அறிவுக்கும் சில அம்மாமார் இப்படி பொதுவெளியில் அலம்புவது உண்டு. 

நம்ம மீராக்கா சொன்னது போல.. .. சும்மா பிலிமு காட்டிறது என்பது இதைத்தானா...tw_blush:tw_warning:

கவலை என்னென்னா.. இவங்க எல்லாம்.. தமிழருக்கு உதவிறம் போராடிறம் என்ற கோதாவில்.. முன்னர் புலம்பெயர் தேசங்களில் உலா வந்தவை... என்பது தான்.  

ஒரு விசயத்தை ஆணித்தரமாக அறிந்து முன்னிறுத்த முடியாதவர்கள் எப்படி.. தமிழர்களின் தலைவிதியை தீர்மானிப்பினம்..??! அதுதானே என்னவோ தமிழனின் தலைவிதி இவ்வளவு மோசமாகக் கிடக்குது. :rolleyes:

இந்த அம்மாவுக்குச் சொல்லக் கூடிய ஒன்று..

ஒரு மாஸ்டர் பட்டதாரி.. 21 வயசை கடந்த.. mature ஆள். தனித்து முடிவெடுக்கும் சகல உரிமையையும் உடையவர். அவாட படிப்புக்கு ஏற்ப தொழிற்படக் கூடிய களம் உலகில் பல பகுதிகளில் இருக்கும். சொறீலங்காவிலும் இருக்கும். அந்த வகையில்.. அவா அங்க போய் தனது படிப்பை பிரயோகிக்க விடுங்க. அதை ஒரு எடுகோளாக வைச்சு எல்லாருக்கும் அதையே அட்வைஸா செய்ய வெளிக்கிடக் கூடாது. ஆளாளுக்கு பல்வேறு பிற புற.. அகக் காரணிகள் இருக்கும். அவை வேறுபட்டவை. 

சூழ்நிலைகள் சரியில்லைன்னா.. அந்தப் பிள்ளை எப்படியோ சமாளிச்சு வெளில வந்திடும். ஆனால் நீங்க..

பிறகு உங்க கதி ஜெயக்குமாரி அக்கா ரேஞ்சுக்கு போகாமல் பார்த்துக் கொண்டால் நலம். tw_blush:

எங்க ஒரு துரும்பு கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறதும் உங்களை விடா ஆளில்லை என்று அட்வைஸ் பண்ணுறதும் தான் உங்கள் வேலை என்று உலகத்துக்கே தெரியும்.  நாங்கள் அட்வைஸ் பண்ணினோம் ????

நானாவது இதைச் சொல்ல பில்டப் என்றே வைத்துக்கொண்டாலும் இல்லாததுக்கு நீங்கள் ஏன் இத்தனை பில்டப் நெடுக்ஸ்

[2.40] - இந்தாங்க சார், பத்தாட்டி cellக்கு phone பண்ணுங்க courier அனுப்பிறன்

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,அங்கு போய் இருக்கா விட்டாலும் பரவாயில்லை.ஹொலிடே ஒன்று போய் நீங்கள் ஓடி,விளையாடிய இடத்தைப் பாருங்கள். சில வேளை முடிவை மாத்தி அங்கே இருக்க விரும்பினாலும் விரும்புவீர்கள்

தமிழச்சியை கண்டது மகிழ்ச்சி...தொடர்ந்து யாழோடு இணைந்திருக்கவும்

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான் அதுவும் எமக்குப் பாதகமாகத்தான் இருக்கும். ஆனாலும் போய் இருக்க எண்ணுவோருக்குச் சகிப்புத் தன்மை மட்டும் இருந்துவிட்டால் காலப்போக்கில் எமக்கு அது பழகிவிடாதா தமிழச்சி?

மிகவும் கடினம் சுமே.  புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களோடு வாழுவதே மிகவும் கடினமாக உள்ளது.  அவர்கள் புலம்பெயர்ந்தாலும் இங்கு வேலைத்தளத்திற்குச் சென்று வந்தாலும்கூட அவர்களின் mentality மாறவில்லை.   அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்தபின்பே பல தமிழர்கள் திருந்துகிறார்கள்.  அவர்களின் பிள்ளைகள் வளரும்வரை எல்லோருடைய mentality உம் ஊரைப் போலவே உள்ளது.   புலம்பெயர்ந்தவர்களே அப்படியெனும்போது, அங்கேயே வாழுகின்றவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.    நிச்சயமாக காலப்போக்கில் ஊரில் உள்ளவர்களின் mentality உம் மாறும்.   நாம் புலம்பெயர்ந்த காலத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவோ மாறிவிட்டார்கள்தான்.  இருந்தாலும் பெண்கள் என்று வரும்போது பழையது அப்படியே இருக்கத்தான் செய்கிறது.   அப்போதைய காலகட்டத்தில் போய் வாழும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.  அதுவரை, அங்கு சென்று சில மாதங்கள் மட்டும் தங்கிவிட்டு வருவதே எனது எண்ணம். 

15 hours ago, முனிவர் ஜீ said:

ம் பல வருடங்களுக்கு மேலாக புலத்தில் வசிப்பவர்களுக்கு இங்கே வசிப்பது இயலாத காரியம் இதை விளக்கமாக சொல்ல முடியாது  அங்கே உள்ள சூழ் நிலையில் நல்ல சுதந்திரமாக வாழ்தவர்கள் இங்கே அதை முழுவதுமாக எதிர்பார்க்க முடியாது  ஒரு நுளம்பு குத்தினால் கூட இருக்க மனம் இல்லை என்று சொன்னவர்களும் இருக்குறார்கள் இருந்தாலும் ஒரு சிலர் வந்து வாழ்கிறார்கள் குறிப்பிட்ட வயது கழிந்த பிறகு. 

முனிவர், முதலே குறிப்பிட்டது போல வசதிகள் எனக்குப் பொருட்டல்ல.   நாம் சென்று வாழ்வதாயின் நல்ல வசதிகள் உள்ள ஒரு இடத்தில்தான் முதலில் வாழ முற்படுவோம்.  வசதிகள் நாளடைவில் பழகிப் போய் விடும்.  புலம்பெயர்ந்த பின்பும் அங்கு சென்று வசதிகளற்ற இடங்களில் பல மாதங்கள் தங்கியுள்ளேன்.    எனக்குள்ள தடை பெண் சுதந்திரமும்  mentality உம் மட்டும்தான்.  அவையும் காலப்போக்கில் மாறத்தான் போகிறது.  ஆனால், அதற்கு முன்னர் போய் வாழ்வது முடியாத காரியம்.

4 hours ago, ரதி said:

தமிழச்சியை கண்டது மகிழ்ச்சி...தொடர்ந்து யாழோடு இணைந்திருக்கவும்

மிகவும் நன்றி ரதி.  நிச்சயமாக யாழோடு என்றும் நிலைத்திருப்பேன்.  அப்பப்போ காணாமலும் போவேன்.  ஆனால், யாழை விட்டு நிரந்தரமாகப் பிரியும் எண்ணம் எனக்கில்லை.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ் இணையத்தில படங்காட்டினால் எனக்கு அவார்ட் தருவதாக யாரோ கூறியது போல் இருந்ததே?? அப்பா ஒன்றுமே இல்லையா?? நல்லகாலம் நீங்கள் வந்து இப்பவாவது சொன்னது 

அவாட்டுக்கு பெர்போமன்ஸ் கானாதாம்.மக்கள் இன்னும் எதிர்பாக்கிறார்கள்.tw_blush:

Edited by Thirdeye

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழச்சி said:

மிகவும் கடினம் சுமே.  புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களோடு வாழுவதே மிகவும் கடினமாக உள்ளது.  அவர்கள் புலம்பெயர்ந்தாலும் இங்கு வேலைத்தளத்திற்குச் சென்று வந்தாலும்கூட அவர்களின் mentality மாறவில்லை.   அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்தபின்பே பல தமிழர்கள் திருந்துகிறார்கள்.  அவர்களின் பிள்ளைகள் வளரும்வரை எல்லோருடைய mentality உம் ஊரைப் போலவே உள்ளது.   புலம்பெயர்ந்தவர்களே அப்படியெனும்போது, அங்கேயே வாழுகின்றவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.    நிச்சயமாக காலப்போக்கில் ஊரில் உள்ளவர்களின் mentality உம் மாறும்.   நாம் புலம்பெயர்ந்த காலத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவோ மாறிவிட்டார்கள்தான்.  இருந்தாலும் பெண்கள் என்று வரும்போது பழையது அப்படியே இருக்கத்தான் செய்கிறது.   அப்போதைய காலகட்டத்தில் போய் வாழும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.  அதுவரை, அங்கு சென்று சில மாதங்கள் மட்டும் தங்கிவிட்டு வருவதே எனது எண்ணம். 

முனிவர், முதலே குறிப்பிட்டது போல வசதிகள் எனக்குப் பொருட்டல்ல.   நாம் சென்று வாழ்வதாயின் நல்ல வசதிகள் உள்ள ஒரு இடத்தில்தான் முதலில் வாழ முற்படுவோம்.  வசதிகள் நாளடைவில் பழகிப் போய் விடும்.  புலம்பெயர்ந்த பின்பும் அங்கு சென்று வசதிகளற்ற இடங்களில் பல மாதங்கள் தங்கியுள்ளேன்.    எனக்குள்ள தடை பெண் சுதந்திரமும்  mentality உம் மட்டும்தான்.  அவையும் காலப்போக்கில் மாறத்தான் போகிறது.  ஆனால், அதற்கு முன்னர் போய் வாழ்வது முடியாத காரியம்.

மிகவும் நன்றி ரதி.  நிச்சயமாக யாழோடு என்றும் நிலைத்திருப்பேன்.  அப்பப்போ காணாமலும் போவேன்.  ஆனால், யாழை விட்டு நிரந்தரமாகப் பிரியும் எண்ணம் எனக்கில்லை.   

ம் வாழ்த்துக்கள் முடிந்தால் விரைவில் வாங்கோ பல இடங்களை தமிழர் கையில்  இருந்து பறிபோகாமல் வைத்து கொள்ள லாம் 

தமிழ் அப்பாடியோ, வியந்து நிக்கிறேன் 

[https://ta.wikipedia.org/wiki/கணியன்_பூங்குன்றனார்]

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.

தலைப்பிட்ட மெசொபொத்தேமியா சுமேரியர் க்கு நன்றி

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2016 at 4:33 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை  இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது  மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான்.

எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே.

ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

சுமே வாய்ப்பந்தல் போடாமல் போய் வாழ்வதுதான் பலருடைய எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாமல் இருக்கும்.

என்னுடைய எண்ணம் அங்கு சென்று வாழ்வதோடு மட்டுமல்லாது சிலருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்ற உத்தேசம் அதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம் நிச்சயம் அங்கு சென்று வாழ்வேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மனுசி சுமேரியருக்கு பொழுதுபோறதுக்கு.. இப்பிடித்தான் வீட்டிலை செம்பருத்தும்பூ பூத்ததுக்கும் திரி திறந்துகொன்டு திரியிறது.இதுக்க எங்களுக்கு ஒரு என்டெய்டென்மென்ட்tw_blush:

Edited by Thirdeye

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வல்வை சகாறா said:

சுமே வாய்ப்பந்தல் போடாமல் போய் வாழ்வதுதான் பலருடைய எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாமல் இருக்கும்.

என்னுடைய எண்ணம் அங்கு சென்று வாழ்வதோடு மட்டுமல்லாது சிலருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்ற உத்தேசம் அதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம் நிச்சயம் அங்கு சென்று வாழ்வேன்

இதற்குப் பெயர் என்ன சகாரா ???

20 hours ago, Thirdeye said:

இந்த மனுசி சுமேரியருக்கு பொழுதுபோறதுக்கு.. இப்பிடித்தான் வீட்டிலை செம்பருத்தும்பூ பூத்ததுக்கும் திரி திறந்துகொன்டு திரியிறது.இதுக்க எங்களுக்கு ஒரு என்டெய்டென்மென்ட்tw_blush:

உங்கட வீட்டிலை என்ன இருக்கோ அதை நீங்களும் போடுறது.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎04‎/‎2016 at 4:57 PM, உடையார் said:

யாருக்குதான் ஆசையில்லை? அங்கு போய் பார்த்தபின் அந்த ஆசை பேய்விட்டது. அங்கு நான் ஒரு அந்நியன், அல்லது பணம் காய்க்கும் மரம். பாதுகாப்பு பூச்சியம்.

கொழும்பிலொன்றால் வாழ முடியுமென்று நினைத்தேன், அதுவும்  KEELS சுப்ப மாக்கெற்றில் நடந்த அனுபவந்தால் வேண்டாமென்று போய்விட்டது. வரிசையில் நிற்க்கும்போது ஒருத்தான் தள்ளிக்கொண்டு நின்றான், ஏன்டாப்பா தள்ளுகின்றாய் என்றது தான் தாமதம்,
உனக்கு இங்கென்ன வேலை அப்படியென்று கனக்க கத்த தொடங்கி, பிறகு phone எடுத்து மாச்சான் எல்லாரையும் கூட்டியா இங்கு ஒருத்தருக்கு பாடமெடுக்கனுமென்று கூப்பிட்டான். நான் கூட்டிவந்த ஆட்டோகாரனால் அன்று தப்பினேன்.

இலங்கை இப்ப ரொளடிகளின் உலகம். கதைத்தால் தப்புவது கஷ்டம் எங்கென்றாலும்.

வணக்கம் உடையார் அண்ணை, எனக்கும் இப்படியானதொரு சம்பவம் 2010 இலே நடந்தது. கண்டி கீல்சிலே நிற்கும் போது ஒருத்தன் வந்து தள்ளினார். "தமுசெட்ட மொனவாத ஒனெய்" என்று எல்லாருக்கும் கேக்கக் கூடியமாதிரிக் கேட்டேன். "சமாவேண்ட ஓனே மாத்தயா" என்றுவிட்டு நழுவி விட்டார். இலங்கையில் சில இடங்களில் நானும் ரவுடிதான் எண்டுற மாதிரி நடந்து கொள்ள வேண்டும். அவுஸில் இருக்கும் பவ்வியம் விட்டுக்கொடுக்கும் தன்மையை உடனடியாக இலங்கையில் எதிர்பார்க்க முடியாது தானே. புலம் பெயர்ந்த பின் நான்கு தடவை போய் வந்துவிட்டேன், ஒவ்வொரு முறையும் சிறிது முன்னேற்றத்தைக் காண முடிகிறது.

இலங்கையில் கார் ஓடும்போதும் அதே மாதிரித்தான். கவனமாக இருக்க வேண்டும் அதேநேரம் aggressive ஆகவும் இருக்க வேண்டும்.

எனக்கு சரிவரும் போல இருக்கு ஆனால் அது எல்லாருக்கும் சரிவரும் என்று கூற முடியாது தானே.

On ‎14‎/‎04‎/‎2016 at 9:54 AM, தமிழச்சி said:

மிகவும் கடினம் சுமே.  புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களோடு வாழுவதே மிகவும் கடினமாக உள்ளது.  அவர்கள் புலம்பெயர்ந்தாலும் இங்கு வேலைத்தளத்திற்குச் சென்று வந்தாலும்கூட அவர்களின் mentality மாறவில்லை.   அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்தபின்பே பல தமிழர்கள் திருந்துகிறார்கள்.  அவர்களின் பிள்ளைகள் வளரும்வரை எல்லோருடைய mentality உம் ஊரைப் போலவே உள்ளது.   புலம்பெயர்ந்தவர்களே அப்படியெனும்போது, அங்கேயே வாழுகின்றவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.    நிச்சயமாக காலப்போக்கில் ஊரில் உள்ளவர்களின் mentality உம் மாறும்.   நாம் புலம்பெயர்ந்த காலத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவோ மாறிவிட்டார்கள்தான்.  இருந்தாலும் பெண்கள் என்று வரும்போது பழையது அப்படியே இருக்கத்தான் செய்கிறது.   அப்போதைய காலகட்டத்தில் போய் வாழும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.  அதுவரை, அங்கு சென்று சில மாதங்கள் மட்டும் தங்கிவிட்டு வருவதே எனது எண்ணம். 

முனிவர், முதலே குறிப்பிட்டது போல வசதிகள் எனக்குப் பொருட்டல்ல.   நாம் சென்று வாழ்வதாயின் நல்ல வசதிகள் உள்ள ஒரு இடத்தில்தான் முதலில் வாழ முற்படுவோம்.  வசதிகள் நாளடைவில் பழகிப் போய் விடும்.  புலம்பெயர்ந்த பின்பும் அங்கு சென்று வசதிகளற்ற இடங்களில் பல மாதங்கள் தங்கியுள்ளேன்.    எனக்குள்ள தடை பெண் சுதந்திரமும்  mentality உம் மட்டும்தான்.  அவையும் காலப்போக்கில் மாறத்தான் போகிறது.  ஆனால், அதற்கு முன்னர் போய் வாழ்வது முடியாத காரியம்.

மிகவும் நன்றி ரதி.  நிச்சயமாக யாழோடு என்றும் நிலைத்திருப்பேன்.  அப்பப்போ காணாமலும் போவேன்.  ஆனால், யாழை விட்டு நிரந்தரமாகப் பிரியும் எண்ணம் எனக்கில்லை.   

நீங்கள் குறிப்பிடும் சுதந்திரம் ஊரில் இல்லை என்றே சொல்லலாம் ஆனால் கொழும்பில் நிச்சயமாக உண்டு. நல்ல வேலை, வீடு, கார் என்று இருந்தால் நிச்சயமாக நீங்கள் நினைச்ச எதையும் செய்ய முடியும். கொஞ்சம் சிங்களம் தெரிஞ்சால் அது மேலதிக போனஸ். நிறைய female independent  professional கள் இருக்கிறார்கள்.

ஒரு சிங்கள பெண்ணை தெரியும், ஒரு 45 வயசு. தொழில் ரீதியாக வக்கீல். யோகா, ஜீம், meditation எண்டு சீவிப்பவர். யோகா போன இடத்திலே ஒரு ஜேர்மனுடன் சிநேகம் பிடித்துவிட்டார். ஜேர்மன் வருசத்தில ஆறுமாசம் ஜெர்மனியில, லோயர் தனியாத்தான் இருக்கிறார், மிகவும் சுதந்திரமாக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சகிப்புத் தன்மை என்பது கிடையாது. அதனால்த்தான் நான் அங்கு போய் இருக்க யோசிக்கிறேன். அட்டை பாம்பு என்றாலே பயம் எனக்கு.மற்றைய வசதிகளை நாமாக ஏற்படுத்திக் கொண்டோ அல்லது சாதாரணமாகக் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் புரணி கதைப்போரையும் சின்ன விடயத்தைப் பெரிதாகக் காவிக்கொண்டு திரிவோரையும் கூட மன்னிக்கலாம். வெளிநாட்டுக் காசில் கும்மாளம் போட்டுக்கொண்டே அவர்களை நக்கலடிப்போரையும் குறைசொல்வோரையும் சகித்துக்கொண்டு அவர்கள் சொல்லும் கதைக்கு எதிர்க்கதை சொல்லாமல் எப்பிடி இருப்பது ????/

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் ஆசைக்கு மோசம் வைச்சிட்டானே சிங்களவன்....tw_blush:

SL Foreign Ministry instructs visiting foreign citizens to North to obtain ‘military visa’

[TamilNet, Tuesday, 19 April 2016, 23:42 GMT]
The officials of Colombo's Foreign Ministry have started to cite an updated ‘news report’ in the Sri Lankan Defence Ministry website, dated 03 March 2016, in instructing foreign citizens travelling to the five districts in North to obtain ‘prior approval’ from the genocidal military of ‘Sri Lanka’, a Tamil visitor from Europe engaged in providing humanitarian assistance has complained to rights activists in Colombo this week. The latest ‘development’ comes after increased reports of abduction-styled arrests that have been carried out by Colombo's military intelligence in North. The Eezham Tamil visitor, engaged in humanitarian work from abroad for a long time, was recently lured into ‘think’ as ‘Sri Lankan’ by the ‘reconciliation’ desk of the foreign ministry in the country of citizenship. 

SL_Defence_Ministry_travel_restriction_u

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38230

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்நெட்டில் இருக்கிறதால் உண்மையான செய்தியாக இருக்குமா அல்லது புனையப்பட்டதா என்று சந்தேகமாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது தமிழ்நெட்டில் இருக்கிறதால் உண்மையான செய்தியாக இருக்குமா அல்லது புனையப்பட்டதா என்று சந்தேகமாக இருக்கிறது

இதையெல்லாம் வாசித்தால்

நம்பினால் ஒன்றும் நடவாது சுமே

காலை வையுங்கள்...

இறங்குங்கள்

சந்திரமண்டலத்தின் நிலையில் நாம் எதிர்பார்ப்புடன்..:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.