Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் சக்தி வாய்ந்த எளிய வழி..! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் சக்தி வாய்ந்த எளிய வழி..! 
[Wednesday 2016-04-13 18:00]
தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்தப் பெருமகான்களின் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம். poondu

■ தேவையான பொருள்கள் :

1.நல்லெண்ணெய்

2.பூண்டு

3.மிளகு

■ செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.

எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

ஏனெனில், இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை உருவாகுமாம்.

இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.

மேலும், சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

உறவுகளே…

இந்தச் செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்களும்) பயன் பெற இந்தச் செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=155443&category=CommonNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட வித்தியாசமான வழிமுறையாக இருக்கே....செய்து பார்க்க வேண்டும்.tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்னவோ நினைச்சு...விழுந்தடிசுக்கொண்டு திரியுக்க வந்தா...வெறும் ஆச்சி வைத்தியமாய்க் கிடக்குது..!:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, புங்கையூரன் said:

நானும் என்னவோ நினைச்சு...விழுந்தடிசுக்கொண்டு திரியுக்க வந்தா...வெறும் ஆச்சி வைத்தியமாய்க் கிடக்குது..!:rolleyes:

வெறும் ஆச்சி வைத்தியத்தாலையும்....உணவே மருந்து எண்டு சொல்லித்தான் எங்கடை ஆச்சி அப்புமார் நூறு வயதுவரைக்கும் கலகலப்பாய் வாழ்ந்தவை....இப்ப என்னடாவெண்டால் பிறந்து நாலுமாத குழந்தைக்குமே டாக்குத்தர்மார் குளிசை குண்டுமணி எண்டு எழுதித்தள்ளினம்.....சாப்பாடும் சரியில்லை....காற்றும் சரியில்லை வாழ்க்கை முறையும் சரியில்லை :)

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அண்ணோய்... சத்தியமா ஆச்சியைக் குறை சொல்ல வரேல்ல!

நான் நினைச்சது...வேற  சூட்டை..!:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புங்கையூரன் said:

அண்ணோய்... சத்தியமா ஆச்சியைக் குறை சொல்ல வரேல்ல!

நான் நினைச்சது...வேற  சூட்டை..!:mellow:

அந்த சூட்டை தணிக்க வீட்டு மலர்கள் போதும் புங்கைtw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புங்கையூரன் said:

அண்ணோய்... சத்தியமா ஆச்சியைக் குறை சொல்ல வரேல்ல!

நான் நினைச்சது...வேற  சூட்டை..!:mellow:

Quote

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் சக்தி

மகாத்மா காந்தி என்ன சொன்னார்????? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் ஒருக்கா செய்து பார்க்கத்தான் வேண்டும்

6 hours ago, புங்கையூரன் said:

அண்ணோய்... சத்தியமா ஆச்சியைக் குறை சொல்ல வரேல்ல!

நான் நினைச்சது...வேற  சூட்டை..!:mellow:

வயது போகப்ப்போக உப்பிடித்தான் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

அண்ணோய்... சத்தியமா ஆச்சியைக் குறை சொல்ல வரேல்ல!

நான் நினைச்சது...வேற  சூட்டை..!:mellow:

உடல் சூட்டை தவிர,  வேறு சூடு என்று.... ஏதாவது இருக்கா?
புங்கையர்..... தோசைக் கரண்டியால், சூடு வாங்கின ஆள் போலை இருக்கு. SmileySmiley

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுமலர் எப்ப சூடாய் இருக்கும், எப்ப குளிராய் இருக்கும் என்று தெரியாமல் போய் கருகப் போறீங்கள்...கவணம் பிள்ளாய்...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கால் விரலில் நல்லெண்ணெய்யைத் தேய்த்தால் சூடு போகும் எந்த மடைப்பயல் வைத்தியன் சொன்னான்! சின்ன வயதில் வழிய வழிய நல்லெண்ணையை தலையிலும் உடம்பிலும் ஊறவைத்துவிட்டு காலமை இளஞ்சூட்டு வெயிலில் நின்றும் உடம்பு சூடாகத்தானே இருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

மூளை சூடு, இதயச்சூடு ..... சூடு  என உடம்பில் ஏகப்பட்ட சூடு வகைகள் இருக்கின்றன. இந்த மருத்துவம் எந்த சூட்டை தணிக்க என குறிப்பிட்டு சொல்லவில்லையே?

காந்தி அகிம்சையை தவிர உடல் சூடுபற்றி ஏதும் சொன்னரா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கால் விரலில் நல்லெண்ணெய்யைத் தேய்த்தால் சூடு போகும் எந்த மடைப்பயல் வைத்தியன் சொன்னான்! சின்ன வயதில் வழிய வழிய நல்லெண்ணையை தலையிலும் உடம்பிலும் ஊறவைத்துவிட்டு காலமை இளஞ்சூட்டு வெயிலில் நின்றும் உடம்பு சூடாகத்தானே இருந்தது!

அப்போ வாலிப வயசு!

இப்போதைய வயதுக்கு வேலை செய்யக் கூடும்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

மூளை சூடு, இதயச்சூடு ..... சூடு  என உடம்பில் ஏகப்பட்ட சூடு வகைகள் இருக்கின்றன. இந்த மருத்துவம் எந்த சூட்டை தணிக்க என குறிப்பிட்டு சொல்லவில்லையே?

காந்தி அகிம்சையை தவிர உடல் சூடுபற்றி ஏதும் சொன்னரா என்ன?

ஆட்டுப்பால் சூட்டை தணிக்கும்.
காந்தி தாத்தா ஆட்டுப்பால் பருகும் பழக்கமுள்ளவர் என கேள்விப்பட்டேன்.... சரி அதை விடுவம்.....காந்தி என்ன சொன்னார் என்றால்.......தன் கையே....................இது புங்கையருக்கு tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

ஆட்டுப்பால் சூட்டை தணிக்கும்.
காந்தி தாத்தா ஆட்டுப்பால் பருகும் பழக்கமுள்ளவர் என கேள்விப்பட்டேன்.... சரி அதை விடுவம்.....காந்தி என்ன சொன்னார் என்றால்.......தன் கையே....................இது புங்கையருக்கு tw_blush:

அட....நம்ம காந்தித் தாத்தாவா அப்படிச் சொன்னார்?tw_cookie:

  • கருத்துக்கள உறவுகள்

On 4/19/2016 at 5:17 AM, குமாரசாமி said:

மகாத்மா காந்தி என்ன சொன்னார்????? tw_blush:

timide.gif

3 hours ago, குமாரசாமி said:

..காந்தி என்ன சொன்னார் என்றால்.....

'உள்குத்து' புரிந்தது.. vil-modeste.gif 

நான் 'சீரியசாக' காந்தியின் பொன்மொழிகளில் எதையோ குறிப்பிடுகிறீர்களோ என எண்ணிவிட்டேன்..!.

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் இருந்ததால் நரைமுடி அதிகமாக உள்ளது இதற்கு என்ன செய்யலாம் நான் வேற கல்யாணம் கட்டல  என்ன செய்யலாம் இந்த பிரச்சனைக்கு??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

மத்திய கிழக்கில் இருந்ததால் நரைமுடி அதிகமாக உள்ளது இதற்கு என்ன செய்யலாம் நான் வேற கல்யாணம் கட்டல  என்ன செய்யலாம் இந்த பிரச்சனைக்கு??

முனிவர் ஜீ... 
"டை"  அடிப்பது... நரை முடிக்கு ஒரே தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... 
"டை"  அடிப்பது... நரை முடிக்கு ஒரே தீர்வு.

இல்லாவிட்டால் மொட்டை அடிப்பது...!tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... 
"டை"  அடிப்பது... நரை முடிக்கு ஒரே தீர்வு.

ம் பார்ப்போம் முற்றிலும் நரையாகவில்லை அப்படியே வந்தால் டை அடித்துக்கொள்ள வேண்டியதுதான்

5 hours ago, புங்கையூரன் said:

இல்லாவிட்டால் மொட்டை அடிப்பது...!tw_dizzy:

ம்கும் ?

புங்கை மொட்டை அடித்தால் அழகு போயிடும் ??

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, முனிவர் ஜீ said:

ம் பார்ப்போம் முற்றிலும் நரையாகவில்லை அப்படியே வந்தால் டை அடித்துக்கொள்ள வேண்டியதுதான்

ம்கும் ?

புங்கை மொட்டை அடித்தால் அழகு போயிடும் ??

ஜீ , நீங்கள் மொட்டை அடித்தால் , புங்கையின் அழகு ஏன் போகும்.... !  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

ஜீ , நீங்கள் மொட்டை அடித்தால் , புங்கையின் அழகு ஏன் போகும்.... !  tw_blush:

 அங்கேயும் நரைமுடியா.   அல்லது முற்றாக விழுந்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, முனிவர் ஜீ said:

 அங்கேயும் நரைமுடியா.   அல்லது முற்றாக விழுந்து விட்டதா?

நாங்கள் எல்லாம் பெப்பர் & சால்ட்  லுக்கிங் பெர்சன்...! (  இதை விடக் கௌரவமாய் என்னன்டு சொல்லுறது).

அட பாவியளா

நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன், எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான்  இருக்கிறீங்க. :grin:

தென்னை, அகப்பை, பூரிக்கட்டை, அடி, உதை, பொண்ணு, பொண்டாட்டி, சூடு எண்டால் திரி கொழுந்து விட்டு நல்லா எரியுது 

steak on the grill emoticon

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

அட பாவியளா

நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன், எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான்  இருக்கிறீங்க. :grin:

தென்னை, அகப்பை, பூரிக்கட்டை, அடி, உதை, பொண்ணு, பொண்டாட்டி, சூடு எண்டால் திரி கொழுந்து விட்டு நல்லா எரியுது 

steak on the grill emoticon

அனுபவங்களை கொட்ட வேண்டுடாமா அண்ணே எங்களுக்கும் அதில் ஒரு சுவாரசியமான திருப்தி அம்புட்டுத்தான் ம்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.