Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதர தமிழர்களை கொன்றுவிட்டு யுத்தவெற்றிவிழா கொண்டாட முடியாது

Featured Replies

சகோ­தர தமி­ழர்­களை கொன்­று­விட்டு யுத்­த­வெற்­றி­விழா கொண்­டாட முடி­யாது

 

யுத்­தத்தில் எமது சகோ­தர இனத்­த­வ­ரான தமி­ழர்­களை கொன்­று­விட்டு நாம் யுத்­த­ வெற்­றி­விழாக் கொண்­டாட முடி­யாது. விடு­த­லைப்­பு­லிகள் என்­றாலும் அவர்­களும் இலங்­கை­யர்கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூடாது. சிங்­கள யுத்த வெற்­றி­விழா எனக்­கூறி மீண்டும் தமி­ழர்­களை பிரி­வி­னை­வா­தி­க­ளாக்கி அவர்­களை ஓரம்­கட்டும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும் என பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி குறிப்­பிட்டார்.

யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்கள் யாராக இருந்­தாலும் அவர்­களை நினை­வு­கூர வடக்கில் மக்­க­ளுக்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் விரும்­பிய இடங்­களில் அவர்­களை நினை­வு­கூர முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாது­காப்பு அமைச்­சினால் நேற்று இலங்கை தகவல் திணைக்­க­ளத்தில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

இலங்கை பயங்­க­ர­வாதம், இன­வாதம், அனர்த்தம் என சகல சிக்­கல்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்த நாடு. எனினும் அனர்த்­தங்கள் ஏனைய சிக்­கல்­களை அனைத்­தையும் விடவும் யுத்­தமே நாட்­டுக்கு பாரிய இழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யது. அவ்­வா­றன நிலையில் கடந்த காலங்­களில் போர்­வெற்றி தினத்தை இரா­ணுவ வெற்றி தின­மாக கொண்­டாடி வந்­த­போ­திலும் இம்­முறை வெற்றி தின­மாக கொண்­டா­டாது விடு­தலை தின­மாக கரு­தியும் யுத்­தத்தில் உயிர் நீத்த இரா­ணுவ வீரர்கள், பொது­மக்­களை நினை­வேந்­தியும் அனுஷ்­டிக்­கப்­படும்.

கடந்த காலங்­களில் போலன்றி இப்­போது நாட்டில் நில்­லி­ணக்கம், சக­வாழ்வு பற்­றிய செயற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில் சகல மக்­க­ளையும் உள்­ள­டக்­கிய வகையில் அனுஷ்­டிக்­க­படும்.

இந்த போர்­வெற்றி தினத்தில் ஆடம்­ப­ர­மான எந்த செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­காது சாதா­ர­ண­மாக முப்­படை அணி­வ­குப்பும், பொலிஸ் மற்றும் சிவில் துறையின் அணி­வ­குப்­பு­களும் நடை­பெறும். அதேபோல் கலை நிகழ்­சிகள், மற்றும் இரா­ணுவ வீரர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு கௌரவம் செலுத்தும் நிகழ்­வுகள் மட்­டுமே இடம்­பெறும். ஜனா­தி­பதி தலைமை தாங்கும் இந்த நிகழ்வில் மேல்­மா­காண அர­சியல் பிர­மு­கர்கள், மாகா­ண­சபை, பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­வார்கள்.

A_Reminiscence_of_Reconciliation_at_the_

வடக்கில் விடு­த­லைப்­பு­லி­களின் நினை­வேந்தல் நிக­வுகள் நடை­பெறும் என பிரச்­சாரம் செய்­து­வந்­தாலும் அதில் எந்த உண்­மை­களும் இல்லை. யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்­களை அனுஷ்­டிக்­கவே அவர்கள் ஒன்­று­கூ­டு­வ­தாக கூறி­யுள்­ளனர். எந்த சந்­தர்ப்­பத்­திலும் புலி­களை நினை­வேந்தும் நட­வ­டிக்­கை­யாக அமை­யாது என குறிப்­பிட்­டுள்­ளனர். யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்கள் யாராக இருந்­தாலும் அவர்­களை நினை­வு­கூர அவர்­க­ளுக்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் விரும்­பிய இடங்­களில் அவர்­களை நினை­வு­கூர முடியும்.

மேலும் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட நாளை யுத்த வெற்­றி­நா­ளாக கொண்­டாட வேண்டும் என ஒரு­சிலர் கூறு­கின்­றனர். ஆனால் அவ்­வாறு கொண்­டாட நாம் தயா­ராக இல்லை. இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான யுத்­த­மாக இருந்தால் நாம் வெற்­றி­பெற்­றதை கொண்­டாட முடியும். ஆனால் இது ஒரு நாட்­டினுள் சகோ­தர இனங்­க­ளுக்கு இடையில் இடம்­பெற்ற மோதல். இதில் எமது சகோ­தர உற­வுகள் தான் கொல்­லப்­பட்­டனர். விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத இயக்­க­மாக இருந்­தாலும் கூட அவர்­களும் இலங்­கை­யர்கள். அவர்­களும் ஏதோ ஒரு உரி­மைக்­கான போராட்­ட­மாக இதை முன்­னெ­டுத்­தனர். மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் 1979ஆம் ஆண்டு வன்­முறை போராட்டம் எடுக்­கப்­பட்­ட­போ­திலும் இன்று அவர்கள் ஏனைய கட்­சி­களை விடவும் வித்­தி­யா­ச­மான ஜன­நா­யக வாதி­க­ளாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அவர்­களின் அர­சியல் பிர­வேசம் பாரிய வித்­தி­யா­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதே­போ­லவே விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றன. எனினும் இன்று விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் அழிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் எமது சகோ­த­ரர்­களை கொன்­று­விட்டு நாம் வெற்றிவிழா கொண்டாட தயாராக இல்லை. இலங்கையர் என்ற வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இன்று வடக்கில் மக்கள் மத்தியில் நல்ல ஜனநாயக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் மீண்டும் தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரம்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/6464

  • கருத்துக்கள உறவுகள்

 எங்கேயோ கவிழ்க்கிறதுக்கு பொடி வைக்கிற மா...தி....ரி  இருக்கு. இந்தியாவுக்கு போய் உதுதான் ஆலோசிச்சு சொல்லி அனுப்பினவையோ. 

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த வெற்றி என்று சொல்லாமல் கொண்டாடப் போகினம். படைவீரர்களுக்கு நினைவஞ்சலி செய்யத்தான் பொப்பி டே இருக்கே. அப்புறம் எதற்கு... இங்க.. முப்படை அணிவகுப்பு.. கலைநிகழ்ச்சிகள்... இஸ்தியாதி.. எல்லாம்.

மைத்திரி ரணில் சந்திரிகா ஆட்சி உலகத்தை ஏமாற்றப் பிறந்த நரி ஆட்சி. 

ஆனால் எம் தமிழர் முன் இருப்பது.. சகோதரர்களைக் கொன்றோம் என்றுவிட்டு சிங்களவன் நீதிக்கு முன் நிற்காமல் தப்பிப் போவதை தடுப்பது தான். நாம் அதனை நோக்கிப் பயணிப்போம். உலகம் இத்தனை ஆயிரம் அப்பாவி மனித உயிர்களைப் பலியிட்டு விட்டு.. அஞ்சலி செய்வது தான் அதற்கான நீதி என்று சொல்லித் தப்பிவிட முடியாது. அந்த அநீதி மீண்டும் நிகழாது இருக்கும் வகையில்.. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாகவும்.. உரிமையோடும்.. தம்மை தாமே பாதுக்காக்கும் வல்லமையோடு வாழும் உரிமையையும் உலகம் ஏற்படுத்திக் கொடுப்பதே.. அந்த அநீதிக்கான குறைந்த பட்ச நீதியாக இருக்க முடியும்.

அதைவிடுத்து.. கொல்லும் போது எதிரி.. இன்று கொன்று வென்ற பின் சகோதரம் என்று பசப்புவதால்... செய்யப்பட்ட அநீதிகளுக்கு நீதியும்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியும் கிடைத்ததாகாது. tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறை என்னத்துக்கோ அலுவல் நடக்குது போலை கிடக்கு :unsure:

அறுபது வருடங்களாக தமிழர்களை அறுவடை செய்துவிட்டு இப்பவும் வெறும் வார்த்தையால் சகோதர தமிழர்கள் என்று சொல்வதேலாம் வெறும் அரசியல் மட்டுமே .

கடைசி வெறும் வார்த்தையால் என்றாலும் சகோதரர்கள்தான் என்கிறார் என்பதை வேண்டுமென்றால் மெச்சலாம்,

ஏனெனில் துரும்பும் தூக்காமல் நாட்டைவிட்டு ஓடிவந்தது சுயநலத்திற்கு இப்பவும் போராட போன சொந்த சகோதரர்களையே இப்பவும் ஒட்டுக்குழு ஓணான் குழு என்று பலர் கொடியுடன் திரியினம் .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,ஏன் இலங்கை ஆமி பொப்பி டேயை அனுஸ்திக்க வேண்டும்?...அவர்கள் எந்தப் போரில் வென்றார்களோ அந்த நாளைத் தான் அனுஸ்டிப்பார்கள்.அது எங்களுக்கு கசப்பாய்த் தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி விழாவை வெற்றி விழான்னு சொல்லிக் கொண்டாட வேண்டியானே. எதற்கு படைவீரர்களுக்கான..நினைவஞ்சலின்னு மாத்தனும். அதற்கு பொப்பி டே உள்ளது. ஆக தமிழின அழிப்பைக் கொண்டாட சிங்களம் சர்வதேசத்தை ஒரு மயக்கத்துக்குள் நிரந்தரமாகத் தள்ளி வைச்சு அதைச் செய்ய இதனைப் பாவிக்கப் போகிறது அவ்வளவு தான். அதிலும் சிலர் கசப்பு புளிப்பு இனிப்பு சுவைக்கிறார்கள்.. சொந்த இனத்தின் அப்பாவிகளின் இரத்தத்தில் சுவை பார்க்கும் கொடியோரும் உளர் இவ்வுலகில். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

முடியல நெடுக்ஸ், வெள்ளைக்காரன் பொப்பி டே நினைவு கூறுகிறான் என்று அதைப் பார்த்து சிங்களவனும் அதே நாளை நினைவு கூர வேண்டுமா?...முடிந்தால் பொப்பி டே எதற்கு நினைவு கூறுகிறார்கள் என வடிவாய் விளங்கிக் கொள்ளுங்கள்.

ஒரு கதைக்கு மு.வா போரில் புலிகள் வென்று அதை நினைவு நாளாக கொண்டாடி இருந்தால் அவர்களை பார்த்தும் பொப்பி டேயை நினைவு கூறுங்கள் என சொல்வீர்கள் போல இருக்குது உங்கள் கதை

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

முடியல நெடுக்ஸ், வெள்ளைக்காரன் பொப்பி டே நினைவு கூறுகிறான் என்று அதைப் பார்த்து சிங்களவனும் அதே நாளை நினைவு கூர வேண்டுமா?...முடிந்தால் பொப்பி டே எதற்கு நினைவு கூறுகிறார்கள் என வடிவாய் விளங்கிக் கொள்ளுங்கள்.

ஒரு கதைக்கு மு.வா போரில் புலிகள் வென்று அதை நினைவு நாளாக கொண்டாடி இருந்தால் அவர்களை பார்த்தும் பொப்பி டேயை நினைவு கூறுங்கள் என சொல்வீர்கள் போல இருக்குது உங்கள் கதை

உங்கட அறிவுக்கு நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவர். உங்களுக்கு எல்லாம் விளக்கி அது விளங்கி. பேசாம.. ஒட்டுக்குழு இணையங்களில் தேடிப் பாருங்கள் விடை கிடைக்கும். tw_blush:

உலகப் போர்களில் பங்கேற்ற உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூறும் நாள்.. பொப்பி டே. சொறீலங்கா இராணுவம் இதனை ஆண்டுதோறும் அனுஷ்டிக்கிறது. எந்த உலகப் போரிலும் அதன் இராணுவம் பங்கெடுத்ததும் இல்லை. ஆனால் அனுஷ்டித்தது.. காரணம்.. போரில் உயிரிழந்த தன் இராணுவத்தை நினைவு கூறுவதை முதன்மையாகக் கொண்டு. ஆனால்.. கடந்த 7 ஆண்டுகளாக மட்டும்.. பொப்பி டேக்கு மேலதிகமாக இன்னொரு நினைவு நாள் அனுஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதிலும் சொறீலங்கா இராணுவம் தனித்து வெற்றி ஈட்டவில்லை. முதன்மையான எல்லா உலக நாட்டு இராணுவங்களும் இப்போரில் ஈடுபட்டன. ரஷ்சியா..உக்ரைன்..இந்தியா போன்றவை தம் வீரர்களை நேரடியாக களத்தில் காவுகொடுத்தும் இருந்தன. ஆக இது சிங்களத்தின் வெற்றியும் அல்ல. இது இன்னொரு வடிவில் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட உலகப் போர். அதனால்.. இதனையும் பொப்பி டேயில் நினைவு கூர்வதே சிறந்தது. சிங்களவனுக்கு அதுதான் தகும். 

புலிகள் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை வென்று இதைச்.. செய்திருந்தாலும் வெற்றி விழா என்று தான் செய்வார்கள். அவர்கள் ஊருக்கு உலகத்துக்கு நடிக்கமாட்டார்கள்..! இது சிங்களவனின் சுத்த நடிப்பு மட்டுமன்றி... ஒரு பெரிய மனித இனப்படுகொலையை தான் செய்ததில் இருந்து தப்பிக்க முனைகிறான்.

புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்று வெற்றி விழா கொண்டாடிய சரித்திரம் இல்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

நெடுக்கர்,ஏன் இலங்கை ஆமி பொப்பி டேயை அனுஸ்திக்க வேண்டும்?...அவர்கள் எந்தப் போரில் வென்றார்களோ அந்த நாளைத் தான் அனுஸ்டிப்பார்கள்.அது எங்களுக்கு கசப்பாய்த் தான் இருக்கும்.

தங்கச்சி! உவர் சுமந்திரனும் ஒருக்கால் பொப்பி மலரை கோட்டிலை குத்திக்கொண்டு திரிஞ்சவரெல்லோ.

இலங்கை இராணுவத்தினரை கௌரவித்து நினைவுகூரும் பொப்பி மலரை தனது இதயத்துக்கு அண்மையாக (கோர்ட் பொக்கற்றில்) குத்தியவாறு  நாடாளுமன்றுக்கு சமுகமளித்திருந்தார் சுமந்திரன் எம்.பி.  ராணுவத்தினரை கௌரவித்து நினைவுகூரும் பொப்பிமலருடன் சுமந்திரன்!

 

புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்று வெற்றி விழா கொண்டாடிய சரித்திரம் இல்லை

யாழில் பலருக்கு நாட்டில் நடந்தது எதுமே தெரியாது அதனால் தான் அந்த வசனத்தை திரும்ப திரும்ப எழுத வேண்டிய தேவை வருகின்றது .

நடந்தது எதுவும் தெரியாது ஆனால் தாங்கள் முன் நின்று போராட்டத்தை நடத்தியது போல கதை விடுவதுதான் தொழில் .

அனுராதபுர பொதுமக்கள் கொலைகளில் தொடங்கிஅழியும் வரை பொதுமக்கள் கொலைகளும் கொண்டாட்டமும்  தொடர்ந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, arjun said:

புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்று வெற்றி விழா கொண்டாடிய சரித்திரம் இல்லை

யாழில் பலருக்கு நாட்டில் நடந்தது எதுமே தெரியாது அதனால் தான் அந்த வசனத்தை திரும்ப திரும்ப எழுத வேண்டிய தேவை வருகின்றது .

நடந்தது எதுவும் தெரியாது ஆனால் தாங்கள் முன் நின்று போராட்டத்தை நடத்தியது போல கதை விடுவதுதான் தொழில் .

அனுராதபுர பொதுமக்கள் கொலைகளில் தொடங்கிஅழியும் வரை பொதுமக்கள் கொலைகளும் கொண்டாட்டமும்  தொடர்ந்தது .

இரு பக்கமும் இழப்பு தான் ஆனால் தமிழர்கள் தான் அதிகமாக சந்தித்திருந்தார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா...இப்ப விளங்கிச்சா நெடுக்ஸ் பொப்பி டே எதற்கு நினைவு கூறுகிறார்கள் என்று அப்படியே ஓடிப் போய் உங்கள் முதலாவது கருத்தைப் படியுங்கள்...மீண்டும் இன்னொரு திரியில் சந்திக்கும் வரை நன்றி. வணக்கம் சொல்லி விடை பெறுபவர் ரதி.

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்று வெற்றி விழா கொண்டாடிய சரித்திரம் இல்லை

யாழில் பலருக்கு நாட்டில் நடந்தது எதுமே தெரியாது அதனால் தான் அந்த வசனத்தை திரும்ப திரும்ப எழுத வேண்டிய தேவை வருகின்றது .

நடந்தது எதுவும் தெரியாது ஆனால் தாங்கள் முன் நின்று போராட்டத்தை நடத்தியது போல கதை விடுவதுதான் தொழில் .

அனுராதபுர பொதுமக்கள் கொலைகளில் தொடங்கிஅழியும் வரை பொதுமக்கள் கொலைகளும் கொண்டாட்டமும்  தொடர்ந்தது .

அநுராதபுரம் 85ல் நடந்து முடிந்து விட்டது. அதற்கு பிறகும் முன்பும் சிங்களவர்கள் தமிழர்களை வெவ்வேறு வடிவங்களில் கொன்று அழித்துக்கொண்டே இருந்தார்கள். ஒப்பிட தெரியாதோ.

  • கருத்துக்கள உறவுகள்

"புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்று வெற்றி விழா கொண்டாடிய சரித்திரம் இல்லை."

இதன் கூட விளங்காமல் எத்தனை பேர் தான்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்(சிங்கள அரசு தலிவர்கள்) இப்படி அறிக்கை விட்டால் அடுத்தமுறை தமிழ்தலிவர்கள் யுத்தகுற்ற விசாரனை வேண்டாம் என அறிக்கை விடுவார்கள் என சில வல்லர‌சுகள் அறிவுரை வழங்கியுள்ளனர்tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, MEERA said:

"புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்று வெற்றி விழா கொண்டாடிய சரித்திரம் இல்லை."

இதன் கூட விளங்காமல் எத்தனை பேர் தான்

மற்றவை எழுதிறதை முழுசாய் படிச்சிட்டு எழுதிற பழக்கம்தான் எங்களுக்கு கிடையாதே.  தெரிந்ததெல்லாம் புலி வாந்தி மட்டும்தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமியை சுட்டுப் போட்டு கண்காட்சிக்கு வைத்தது மறந்து போச்சோ?...புலிகள் எப்படி எங்கட உடன் பிறப்போ அதே மாதிரித் தான் ஆமி அந்த சிங்கள மக்களுக்கும். முதலில் மற்றவைக்கு பாடம் படிப்பிக்க முதல் நீங்கள் வடிவாய் படிச்சிட்டு வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

"புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்று வெற்றி விழா கொண்டாடிய சரித்திரம் இல்லை."

இதன் கூட விளங்காமல் எத்தனை பேர் தான்

பொதுமக்களுக்கும் ஆமிக்கும் வித்தியாசம் தெரியல்ல 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் மக்களை கேடயமாக புலிகள் பயன்படுத்தியதால் புலிகளோடு சேர்ந்து மக்களையும் அழித்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

ஆமியை சுட்டுப் போட்டு கண்காட்சிக்கு வைத்தது மறந்து போச்சோ?...புலிகள் எப்படி எங்கட உடன் பிறப்போ அதே மாதிரித் தான் ஆமி அந்த சிங்கள மக்களுக்கும். முதலில் மற்றவைக்கு பாடம் படிப்பிக்க முதல் நீங்கள் வடிவாய் படிச்சிட்டு வாங்கோ.

நாங்கள் வருசா வருஷம் வெற்றி விழா கொண்டாடிறதை பற்றிக் கதைக்கிறம். பெரிய எழுத்திலதானே எழுதி இருக்கு. நாங்கள் வடிவாப் படிச்சிட்டுத்தான் வந்தனாங்கள். திண்ணைக்கு மண் எடுக்கவில்லை பாருங்கோ.

தலைப்பும் வாசிக்கவில்லை பிறகு வந்த பின்னோட்டங்களும் வாசித்துவிளங்கவில்லை ஆனால் பதில் தொடர்ந்து எழுதிகொண்டே இருப்போம் .

நீங்கள் புலிகளுக்கு ஆதரவு கொடுத்ததில் வியப்பில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் போரில் வென்றார்கள் அதைக் கொண்டாடுகிறார்கள்.அதில் என்ன தப்பு?...நீங்கள் இந்தப் போரில் வென்றிருந்தால்,நீங்களும் விழா கொண்டாடி இருப்பீர்கள். பூநகரி மீட்பு,ஆனையிறவு மீட்பு.... போன்றவற்றை ஒவ்வொரு வருடமும் கொண்டாடினீர்கள் தானே!. இறுதிப் போரில் அவர்கள் வென்றார்கள். விழா எடுக்கிறார்கள். அது உங்கள் கண்ணை குத்தும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

"புலிகள் சிங்களப் பொதுமக்களைக் கொன்று வெற்றி விழா கொண்டாடிய சரித்திரம் இல்லை."

 

இதற்கு ஒருவரின் பின்னோட்டம் இருக்கிறதே அதுதான் உண்மையான விளக்கம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.