Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதர தமிழர்களை கொன்றுவிட்டு யுத்தவெற்றிவிழா கொண்டாட முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

அவர்கள் போரில் வென்றார்கள் அதைக் கொண்டாடுகிறார்கள்.அதில் என்ன தப்பு?...நீங்கள் இந்தப் போரில் வென்றிருந்தால்,நீங்களும் விழா கொண்டாடி இருப்பீர்கள். பூநகரி மீட்பு,ஆனையிறவு மீட்பு.... போன்றவற்றை ஒவ்வொரு வருடமும் கொண்டாடினீர்கள் தானே!. இறுதிப் போரில் அவர்கள் வென்றார்கள். விழா எடுக்கிறார்கள். அது உங்கள் கண்ணை குத்தும் தான்.

ஒவ்வொரு தேசங்களும் போர் வெற்றிகளை 

விடுதலை வெற்றிகளை கொண்டாடுகின்றன தான் ரதி

இங்கே ஒரே நாட்டுக்குள்

தன் மக்கள் என்பவர்களை கொன்றுவிட்டு

வென்றுவிட்டு

அவர்களை அடக்கி வைத்துக்கொண்டு

கொண்டாடுகிறார்கள்

அது புரிகிறதா தங்களுக்கு....??

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

அவர்கள் போரில் வென்றார்கள் அதைக் கொண்டாடுகிறார்கள்.அதில் என்ன தப்பு?...நீங்கள் இந்தப் போரில் வென்றிருந்தால்,நீங்களும் விழா கொண்டாடி இருப்பீர்கள். பூநகரி மீட்பு,ஆனையிறவு மீட்பு.... போன்றவற்றை ஒவ்வொரு வருடமும் கொண்டாடினீர்கள் தானே!. இறுதிப் போரில் அவர்கள் வென்றார்கள். விழா எடுக்கிறார்கள். அது உங்கள் கண்ணை குத்தும் தான்.

பூநகரி மீட்பு, ஆனையிறவு மீட்பில் எத்தனை பொதுமக்கள் ஈவிரக்கம் இன்றிக் கொல்லப்பட்டார்கள்? கொன்றுவிட்டு கொண்டாடப்பட்டது?? 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, நாங்களும் எங்கள் ஒரே தேசத்து அப்பாவி மக்களை எந்த வித காரணமுமின்றி தற்கொலை குண்டுகள் மூலம் கொண்றிருக்கிறோம்.என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...அந்த நேரம் அது எனக்கும்,உங்களுக்கும் ஒரு வெற்றிச் செய்தியாத் தான் இருந்தது. எப்பவாவது அப்பாவி சிங்கள மக்கள் செத்தார்களே என்று கவலைப்பட்டு உள்ளீர்களா?...நாங்களும் அவர்களை ஒரே தேசத்து மக்களாய் நினைக்கவில்லை.அவர்களும் எங்களை அப்படி நினைக்கவில்லை.

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழரின் உரிமைக்காக போராடின அமைப்பை,அழிக்கவே முடியாத புலிகளை தாங்கள் அழித்தோம் என்பது அவர்களுக்கு பெருமை தானே!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிச்சது சிங்களவனுக்கு பெருமையோ இல்லையோ, எங்கடை  கனபேருக்கு பெருமையாய் இருக்கு, ஈனப்பிறப்புகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஈனப் பிறவியாகவே இருந்திட்டுப் போறேன்...நீங்கள் புலிகளோடு சேர்ந்து போராடியதால் தியாகியாகவே இருந்திட்டுப் போங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19 May 2016 at 8:44 PM, ரதி said:

5 hours ago, Eppothum Thamizhan said:

புலிகளை அழிச்சது சிங்களவனுக்கு பெருமையோ இல்லையோ, எங்கடை  கனபேருக்கு பெருமையாய் இருக்கு, ஈனப்பிறப்புகள்.

4 hours ago, ரதி said:

நான் ஈனப் பிறவியாகவே இருந்திட்டுப் போறேன்...நீங்கள் புலிகளோடு சேர்ந்து போராடியதால் தியாகியாகவே இருந்திட்டுப் போங்கள்.

இந்த மூன்று பதிவிற்கும் பச்சை இட்டவரின் மனநிலை யாது?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

இந்த மூன்று பதிவிற்கும் பச்சை இட்டவரின் மனநிலை யாது?

முற்றும் துறந்த நிலை ...tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

நான் ஈனப் பிறவியாகவே இருந்திட்டுப் போறேன்...நீங்கள் புலிகளோடு சேர்ந்து போராடியதால் தியாகியாகவே இருந்திட்டுப் போங்கள்.

நீங்கள் எங்களை தியாகிகளாக்க வேண்டாம். எமது எதிர்காலம் வளமாக இருக்கவேண்டும் என்பதற்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு அந்த மரியாதையை வழங்கினாலே போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்

 பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி இராணுவத்தளபதி, ஜனாதிபதிவரை  பலபேர் சொல்லியாச்சுது. பல நாடுகளின் உதவி கிடைக்காது போயிருந்தால் நாம் இந்தப்போரில் வெற்றி அடைந்திருக்க முடியாது என்று. ஆயுதம், ஆலோசனை, பணம், படை, வியூகம் என எல்லாவிதமான உதவிகளும் பெற்று யாரோ பெற்ற வெற்றியை இவர் கொண்டாடுறார். நம்மவர் தனித்து நின்று பெற்ற வெற்றிகள் உயர்ந்தவை. எங்கட படையை காப்பாற்றுங்கோ என்று இந்தியாவிடம் கதறினார் சந்திரிகா.

2010ம் ஆண்டு போர் வெற்றி கொண்டாட வெளிக்கிட்ட போது கொழும்பு முழுவதும் வெள்ளம். பாதிக்கப்பட்ட நமது சனங்கள் பொருள் சேர்த்து கொழும்புக்கு அனுப்பினார்கள்.  அப்போ ஒரு எம்.பி பேசினார். தமிழரின் கண்ணீர்தான் மழையாகக் கொட்டுகிறது என்று. அடுத்த ஆண்டும் அவ்வாறே ராஜபக்சே கூறினாராம்,  ஒருவேளை அவ்வாறு இருக்குமோவென்று. பத்திரிகைகள் கூறின. இயற்கையே விரும்பாத போர்வெற்றி. என்ன நடந்தாலும் சிந்திக்க மாட்டோம், யார் என்ன சொன்னாலும் விளங்கிக்கொள்ளவும் மாட்டோம்.  எதிரியை உயர்த்தி பெருமை பேசுவதே நமக்கு உயர்வு..

ஏனென்றால் நாங்கள் குட்டையில ஊறின தண்ணி.   

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான், பலராலும் வியூகம் வகுக்கப்பட்டுத்தான் புலிகள் அழிக்கப்பட்டார்கள்.

ஆனால் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதற்கு புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் இதய சுத்தியுடன் ஈடுபடாமல், கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததும், அன்ரன் பாலசிங்கத்தின் அறிவுரையை தட்டிக் கழித்து சு.ப. தமிழ்ச்செல்வனை அனுப்பியதும் முக்கிய காரணங்கள். ஆக மொத்தத்தில் புலிகளின் அழிவுக்கான பாதையை புலிகளே தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் வெகுவேகமாக அழிவுக்குள்ளாவார்கள் என்று நீங்களோ நானோ எதிர்பார்க்கவில்லை.

புலிகளின் தங்களையும் அழித்து தமிழ்த் தேசியத்தையும் அழித்து தமிழர்களை மிகவும் மோசமான அரசியல் நிலையில் விட்டுள்ளதால், சிங்கள அரசு சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் கூட்டமைப்பிடம் இப்போது மாட்டுப்பட்டுப்போய் நிற்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2016 at 9:44 PM, ரதி said:

விசுகு அண்ணா, நாங்களும் எங்கள் ஒரே தேசத்து அப்பாவி மக்களை எந்த வித காரணமுமின்றி தற்கொலை குண்டுகள் மூலம் கொண்றிருக்கிறோம்.என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...அந்த நேரம் அது எனக்கும்,உங்களுக்கும் ஒரு வெற்றிச் செய்தியாத் தான் இருந்தது. எப்பவாவது அப்பாவி சிங்கள மக்கள் செத்தார்களே என்று கவலைப்பட்டு உள்ளீர்களா?...நாங்களும் அவர்களை ஒரே தேசத்து மக்களாய் நினைக்கவில்லை.அவர்களும் எங்களை அப்படி நினைக்கவில்லை.

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழரின் உரிமைக்காக போராடின அமைப்பை,அழிக்கவே முடியாத புலிகளை தாங்கள் அழித்தோம் என்பது அவர்களுக்கு பெருமை தானே!

பெருமை ததான் சகோதரி

அது வேறு நாடாக இருக்கும் போது

அது தோற்றவர்களை தமது மக்கள் என்று சொல்லாதபோது..

தோற்றவர்களை அவர்களது வழியில் விட்டுவிடும் போது

நாங்க எல்லோரும் ஒரு நாட்டின் மக்கள்

ஆனால் நாங்க உங்களை வென்றவர்கள்

இது தான் உதைக்குது...

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

சாத்தான், பலராலும் வியூகம் வகுக்கப்பட்டுத்தான் புலிகள் அழிக்கப்பட்டார்கள்.

ஆனால் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதற்கு புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் இதய சுத்தியுடன் ஈடுபடாமல், கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததும், அன்ரன் பாலசிங்கத்தின் அறிவுரையை தட்டிக் கழித்து சு.ப. தமிழ்ச்செல்வனை அனுப்பியதும் முக்கிய காரணங்கள். ஆக மொத்தத்தில் புலிகளின் அழிவுக்கான பாதையை புலிகளே தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் வெகுவேகமாக அழிவுக்குள்ளாவார்கள் என்று நீங்களோ நானோ எதிர்பார்க்கவில்லை.

புலிகளின் தங்களையும் அழித்து தமிழ்த் தேசியத்தையும் அழித்து தமிழர்களை மிகவும் மோசமான அரசியல் நிலையில் விட்டுள்ளதால், சிங்கள அரசு சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் கூட்டமைப்பிடம் இப்போது மாட்டுப்பட்டுப்போய் நிற்கின்றார்கள்.

சிங்கள அரசாங்கம் இதய சுத்தியுடந்தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதா.ஆனால் பாலசிங்கத்திற்காக தமிழ்ச்செல்வனை அனுப்பியது மிகப்பெரிய தவறுதான்.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

சாத்தான், பலராலும் வியூகம் வகுக்கப்பட்டுத்தான் புலிகள் அழிக்கப்பட்டார்கள்.

ஆனால் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதற்கு புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் இதய சுத்தியுடன் ஈடுபடாமல், கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததும், அன்ரன் பாலசிங்கத்தின் அறிவுரையை தட்டிக் கழித்து சு.ப. தமிழ்ச்செல்வனை அனுப்பியதும் முக்கிய காரணங்கள். ஆக மொத்தத்தில் புலிகளின் அழிவுக்கான பாதையை புலிகளே தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் வெகுவேகமாக அழிவுக்குள்ளாவார்கள் என்று நீங்களோ நானோ எதிர்பார்க்கவில்லை.

புலிகளின் தங்களையும் அழித்து தமிழ்த் தேசியத்தையும் அழித்து தமிழர்களை மிகவும் மோசமான அரசியல் நிலையில் விட்டுள்ளதால், சிங்கள அரசு சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் கூட்டமைப்பிடம் இப்போது மாட்டுப்பட்டுப்போய் நிற்கின்றார்கள்.

சிங்களவர்கள் வெற்றி விழாக்கொண்டாடுவதற்கு சிங்களவர்கள் நிலங்களை யாரும் போய் ஆக்கிரமிக்கவோ இல்லை அவர்கள் மீது வலிய போர்தொடுக்கவோ இல்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதை முறியடித்து வெற்றி கொண்டாடலாம். மேலும் சிங்களவர்கள் போர் என்னும் முடிவடையவில்லை அவர்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அவர்கள் இலக்கு புலிகளை அழிபதன்று. புலிகளுக்கு முதல் அவர்கள் ஆக்கிரமிப்பை தொடர்ந்துவிட்டார்கள் இடையில் புலிகளை அழித்தார்கள் மீள தொடர்கின்றார்கள். தமிழர்களை அழித்து சிங்களக் குடியேற்றங்களை செய்து சிங்கள மயமாக்குவதே அவர்களுக்கு வெற்றியாகும். 

தமிழர்களின் முரண்பாடுகளும், ஐக்கியப்பட முடியாத பேதங்களும் சுயநலமும் தான் புலிகள் உள்ளடங்கலான போராட்டத்தை அழித்ததில் சிங்களவர்களை விட அதிக பங்கு வகிக்கின்றது. எனவே இவ்வெற்றியை சிங்களவர்கள் கொண்டாடுவது கேலிக்குரியது. எஞ்சியுள்ள தமிழர்களாகிய நாங்கள் தான் இதை கொண்டாடும் உரிமை உள்ளவர்கள். கூட்டமைப்பு இதற்காக குரல்கொடுக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

நீங்கள் எப்பிடி தலை கீழாய் நின்றிருந்தாலும் சிங்களவன் எதையும் தந்திருக்க மாட்டான். ஒருமுறை பேசுவான். அடுத்தமுறை அதை குழப்புவதற்கு பேசுவான். கடைசியாக ஒட்டுக்குழுக்களின்  ஆயுதங்களை களையும்படி பேசினார்கள். முடியவில்லை. புலிகளின் ஆயுதங்களை பிடுங்கி அவர்களை அடக்குவதே அவர்களின் நோக்கம். சரி, இப்போ புலிகள் இல்லையே. நமது அரசியல் தலைவர்கள்  அவர்களை அரியாசனம் ஏற்றி விட்ட நன்றிக்காகவாவது நமக்கு தரவேண்டியதை தரலாமே. சர்வதேசமே அவனை அடக்க முடியாமல் தடுமாறுகிறது. எமது இயலாமையினால் ஏதாவது சொல்லி நம்மைத் தேற்றிக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அல்லது

நான் அதற்குள் இல்லை

இது எப்பவோ எனக்குத்தெரியும் என மார்தட்டுவோம்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

சிங்கள அரசாங்கம் இதய சுத்தியுடந்தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதா?

இல்லை. அவர்கள் புலிகளை நெருக்கடிக்குள் கொண்டுவரத் தேவையான எல்லாவற்றையும் செய்தார்கள். இலங்கைத் தீவுக்குள் இரண்டு நாடுகள் அமைவதை எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலமாக உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட தமிழர்களுக்கான அலகு ஒன்றை எட்டியிருக்கலாம். எல்லாம் காலம் கடந்துவிட்டது. இப்போது தமிழர்களின் நிலங்கள் சுருங்கி, தமிழர்கள் கிழக்கில் சிறுபான்மையாகிவிட்டார்கள். வடக்கிலும் அந்த நிலை வெகுவிரைவில் தோன்றும். அதைக்கூட தடுக்கமுடியாத அரசியல் தலைமைதான் இன்றுள்ளது.

மன்னர் காலத்தில் இருந்தே சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்த இன்னும் செய்துகொண்டிருக்கும் அநியாயங்கள் தெரியாமல் எவரும் இல்லை .

அந்த காலங்களில் இருந்தே தமிழர்கள் பல வழிகளிலும் தமது எதிர்ப்பை காட்டி உரிமைக்காக போராடிவந்ததும் உண்மை 

அந்த போரட்ட வடிவங்களின் அடுத்த பரிணாமாகத்தான் ஆயுதப்போராட்டம் தொடங்கியது .

ஆயுத போராட்டம் மூலம் ஈழத்தை அடையாவிட்டாலும் எமக்கான ஒரு தீர்வை என்றோ நாம் அடைந்திருப்போம் 

புலிகளின் மீதான  எனது விமர்சனம் இங்குதான் தொடங்குகின்றது

இலங்கை தமிழர்களின்  இன்றைய நாதியற்ற நிலைக்கு புலிகளின் அறிவற்ற அரசியலே முழுக்காரணம் என்று நூறு வீதமும் நம்புபவன் நான்.

இன்று அல்ல இனி என்றும் விடிவே வர சாத்தியமற்ற ஒரு மிக படுமோசமான பயங்கரவாதிகளாக எம்மை உலகிற்கு காட்டிவிட்டு சென்றுவிட்டார்கள் .

இனி எமக்கு விடிவு என்றால் ,ஒன்றில் சிங்களவன் மனம் மாறவேண்டும் அல்லது சர்வதேசம் கருணை காட்டவேண்டும் . 

"the LTTE led by its ruthless supremo Thiruvengadam Veluppillai Prabhakaran had absolutely no qualms about daring to assassinate a person of Rajiv Gandhi’s political stature in India. As is typical of Prabhakaran and the LTTE, the assassination was perceived as a “militaristic” feat alone without much thought about its political fall-out or possible repercussions . The tigers were absolutely unconcerned about resultant effects affecting the Sri Lankan Tamil people. "

நூற்றுக்கு நூறு உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக் கொடுத்துப் போட்டுத்தள்ளப் பண்ணிவிட்டு இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்னுமாப்போல் என்ன ஆட்டம் போடுறாங்கப்பா... :shocked:

அந்த புண்ணியம் கிடைக்காதது சற்று மனவருத்தம் 

19 hours ago, MEERA said:

இந்த மூன்று பதிவிற்கும் பச்சை இட்டவரின் மனநிலை யாது?

இந்தக் கருத்துக்களுக்குப் பச்சை இட்டவரின் மனநிலை வேறு வேறாக இருக்கலாம். 

கருத்துகளுடன் ஒன்றிப் போகாமலே, கருத்து சொன்னவரின் பாங்கு, யதார்த்தம், வசன நடை போன்றவற்றிக்கு பச்சை இடும் உரிமை, அவரவர்க்கு இருக்கக் கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

சாத்தான், பலராலும் வியூகம் வகுக்கப்பட்டுத்தான் புலிகள் அழிக்கப்பட்டார்கள்.

ஆனால் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதற்கு புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் இதய சுத்தியுடன் ஈடுபடாமல், கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததும், அன்ரன் பாலசிங்கத்தின் அறிவுரையை தட்டிக் கழித்து சு.ப. தமிழ்ச்செல்வனை அனுப்பியதும் முக்கிய காரணங்கள். ஆக மொத்தத்தில் புலிகளின் அழிவுக்கான பாதையை புலிகளே தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் வெகுவேகமாக அழிவுக்குள்ளாவார்கள் என்று நீங்களோ நானோ எதிர்பார்க்கவில்லை.

புலிகளின் தங்களையும் அழித்து தமிழ்த் தேசியத்தையும் அழித்து தமிழர்களை மிகவும் மோசமான அரசியல் நிலையில் விட்டுள்ளதால், சிங்கள அரசு சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் கூட்டமைப்பிடம் இப்போது மாட்டுப்பட்டுப்போய் நிற்கின்றார்கள்.

இதில் எதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறது ?

இதய சுத்தியுடன் புலிகள் கலந்து கொண்டிருந்தால் ?
என்ன செய்திருக்க வேண்டும் என்றாவது நீங்கள் விளக்கமாக எழுதினால் ....
வாசிக்க ஆவல் !

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இல்லை. அவர்கள் புலிகளை நெருக்கடிக்குள் கொண்டுவரத் தேவையான எல்லாவற்றையும் செய்தார்கள். இலங்கைத் தீவுக்குள் இரண்டு நாடுகள் அமைவதை எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலமாக உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட தமிழர்களுக்கான அலகு ஒன்றை எட்டியிருக்கலாம். எல்லாம் காலம் கடந்துவிட்டது. இப்போது தமிழர்களின் நிலங்கள் சுருங்கி, தமிழர்கள் கிழக்கில் சிறுபான்மையாகிவிட்டார்கள். வடக்கிலும் அந்த நிலை வெகுவிரைவில் தோன்றும். அதைக்கூட தடுக்கமுடியாத அரசியல் தலைமைதான் இன்றுள்ளது.

அரசியற் கைதிகளை பணயமாக  வைத்து, அடுத்த சூதாட்டம் நகர  காத்திருக்கிறது ராஜதந்திரிகள் வட்டம். அதாவது "நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் நாங்களும் சில விட்டுக்கொடுப்புகள் செய்யவேணும். இரு பக்கமும்  குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறபடியால் போர்க்குற்ற விசாரணை தேவையற்றது. நடந்தவைகளை மன்னிப்போம், மறப்போம். கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளியார் தலையீடு இல்லாமல்  நாமே நமக்குள்ளே பேசி ஒரு தீர்வைக் காண்போம்." என்று வெகு விரைவில் சொல்வார்கள். முதலமைச்சரால் கொஞ்சம் தாமதமாகலாம். ஆனாலும்அது  வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

இதில் எதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறது ?

இதய சுத்தியுடன் புலிகள் கலந்து கொண்டிருந்தால் ?
என்ன செய்திருக்க வேண்டும் என்றாவது நீங்கள் விளக்கமாக எழுதினால் ....
வாசிக்க ஆவல் !

என்ன நடந்தது என்பதை வைத்து எனது சொந்தக் கருத்து அது. அந்த நேரங்களில் வந்த செய்திகளும், ஆய்வுக் கட்டுரைகளுமே போதுமானவை. மற்றும்படி அன்ரன் பாலசிங்கத்துடனோ, சுப. தமிழ்ச்செல்வனுடனோ நேரடியாகக் கதைக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.

இதய சுத்தியுடன் கலந்துகொண்டிருந்தால் குறைந்தது கதிர்காமரைப் போடாமல் விட்டிருக்கலாம். மாவீலாற்று அணையைத் தடுக்காமல் விட்டிருக்கலாம். இப்படி எத்தனையோ சொல்லலாம்.

சண்டைதான் என்று முடிவெடுத்த பின்னர், குறைந்தது ஆயுத வழங்கலில் ஏற்பட்ட தடங்கல்களையின் தாக்கங்களையோ அல்லது கட்டாயப் பயிற்சிக்குள்ளானவர்களின் சண்டையிடும் மனநிலையையோ ஆராய்ந்திருக்கலாம்.

எனக்கென்னவோ தலைவர் பிரபாகரன், தான் வளர்த்த புலிகள் இயக்கத்தையும் தன்னையும் அழிக்கும் நோக்கில்தான் (யாழில் இன்னொரு கருத்தாளர் சொன்னதுதான்) இறுதி யுத்தத்தை நடத்தியதுமாதிரி இருந்தது. அதற்காக ஏன் மக்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு அழிவுக்குள்ளாக்கினார்கள் என்பது புரியவில்லை.

சிலவேளை பெருத்த அழிவின் மூலம் சர்வதேச நாடுகள் ஒரு தீர்வைத் தரலாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை.

8 hours ago, satan said:

அரசியற் கைதிகளை பணயமாக  வைத்து, அடுத்த சூதாட்டம் நகர  காத்திருக்கிறது ராஜதந்திரிகள் வட்டம். அதாவது "நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் நாங்களும் சில விட்டுக்கொடுப்புகள் செய்யவேணும். இரு பக்கமும்  குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறபடியால் போர்க்குற்ற விசாரணை தேவையற்றது. நடந்தவைகளை மன்னிப்போம், மறப்போம். கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளியார் தலையீடு இல்லாமல்  நாமே நமக்குள்ளே பேசி ஒரு தீர்வைக் காண்போம்." என்று வெகு விரைவில் சொல்வார்கள். முதலமைச்சரால் கொஞ்சம் தாமதமாகலாம். ஆனாலும்அது  வெளிவரும்.

தமிழர்களுக்கு நடந்தது இனவொழிப்பு (genocide) என்று நிறுவ கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பல அமைப்புக்கள் தேவையான தகவல்களைத் திரட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இவ் ஆதாரபூர்வமான தகவல்களைக் கொண்டு சிங்கள ஆளும் வர்க்கத்தை அழுத்தி தமிழர்களுக்கு ஒரு குறைந்தபட்ச தீர்வைக் கொடுக்கத்தான் மேற்கு நாடுகள் முயல்கின்றன. அதற்கான முயற்சிகள்தான் நடக்கின்றன. இது வெளியார் தலையீடு இல்லாமல் தமிழர்களும் சிங்களவர்களும் பேசி முடிவெடுக்கும் ஒன்றாகக் காட்டப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எ.போ.தமிழன், மரணித்த புலிகளை அல்லது புலிகளையோ யார் கொச்சைப்படுத்தினார்கள்...உண்மையை எழுதினால் உங்களுக்கு கொச்சைப்படுத்துவது மாதிரி தெரியுது.மண்ணுக்காகப் போராடி மாண்ட அனைத்து போராளிகளது உயிர் தியாகமும் வீணாகிப் போய் விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.