Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Thumpalayan said:

சீமான் எதையாவது செய்துவிட்டு போகட்டும் யாருக்குக் கவலை, ஆனால் ஈழத்தமிழரை வைத்துப் பிழைக்கப் பார்த்தது தான் பிடிக்கவில்லை.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்யாத தலைவர்கள் யாரவது இருக்கின்றார்களா?

  • Replies 161
  • Views 23.5k
  • Created
  • Last Reply

ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். காசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.... நானும் உங்களில் ஒருவன் என்ற நேர்மையில் !

முகநூல் நண்பரிடம்  சுட்டது (https://www.facebook.com/osaichella?fref=nf)

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்யாத தலைவர்கள் யாரவது இருக்கின்றார்களா?

நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் விளம்பரங்கள் பனர்கள் முழுக்க தலைவரையும் புலிக்கொடியையும் வைத்து யாருமே அரசியல் செய்யவில்லையே 

சரி தனது சொந்தத் தொகுதியிலேயே முதலாவதாக இல்லை ரெண்டாவதாக இல்லை மூன்றாவதாக இல்லை நாலாவதாகக் கூட சீமான் வரவில்லையே. காசு, குவாட்டர், கோழிப் புரியாணி கதையெல்லாம் இங்கு எடுபட்டுப் போகிறதே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்து தமிழனான நான் முன்பே இந்த களத்தில் எச்சரிக்கை கொடுத்திருந்தேன் சீமானை நம்பி மோசம் போகாதீர்கள் என்று. தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு உள்ளது. ஆனால் ஈழத்தை போல் படு ஆக்ரோஷமாக இல்லை. தனி நாடு கேட்டு பின்பு அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை மனதில் வைத்து இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்கிறோம் 

சரி ஏன் ஜெயலலிதா வென்றார் ?. அவர் மற்ற தலைவர்களை விட ஒரு நல்ல, செயல் மிக்க தலைவராக தன்னை காட்டி கொண்டார். மக்களும் அவரின் பல நல்ல திட்டங்களை அனுபவித்து உள்ளார்கள். தமிழ் நாட்டில் இப்பொழுது வறுமையே இல்லை. மக்கள் அனைவரும் முன்னேறிய மாநிலத்தின் பலன்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா சொல்வது போல் அவர் சொன்னதை செய்தார். சொல்லாத பல நல்ல திட்டங்களை கொடுத்தார். அதை மறுக்கவே முடியாது. எனவே மக்கள் இதை விட நல்ல திட்டங்களை எதிர் பார்த்து , பொது அமைதிக்கு வேண்டி அவருக்கு ஒரு நல்ல தீர்ப்பு அளித்து இருகிறார்கள். அவர் இப்பொழுது சொல்வது போல் கொள்ளைக்காரி ஒன்றும் இல்லை. மக்களின் அம்மாவாக உள்ளார் என்பதே உண்மை,

மக்களுக்கு இன்று உள்ள எண்ணம் எல்லாம் எப்படி இனிமேல் மென் மேலும் வளர்வது என்பது பற்றி சிந்தனையே உள்ளது. அதற்க்கு ஜெயாவே நல்ல உந்து சக்தி என்று அவர்கள் தெள்ள தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். 
 
3 minutes ago, kanna123 said:

ஈழதமிழர்கள் பலருக்கும் நீங்கள் சொன்ன விடயங்கள் தெரியும் ஒரு சிலரை தவிர ,புலிகள் இல்லாத இடத்தை சீமானால் நிரப்ப அவர்கள் ஆசைப்படுகின்றார்கள் .நாட்டுக்கு எது நல்லது கெட்டது பற்றி எல்லாம் அவர்களுக்கு  அக்கறை இல்லை .புலிக்கொடி பறந்தால் காணும் என்பதுதான் அவர்கள் நிலைப்பாடு .

ஆரம்பத்தில் நான் கூட நினத்தைதேன் தடை செய்யபட்ட அமைப்பின் கொடி ,பிரபாவின்  படம் என்று வெளிப்படையாக திரிய விட்டிருகின்றார்களே என்று தேர்தல் முடிவுகள் வந்தபின்புதான் தெரிந்தது அதை அவர்கள் வேண்டும் என்றே தான் அனுமதித்து இருக்கின்றார்கள் என்று .இதை விட புலிகளை வேறு எவரும் கேவலபடுத்தமுடியாது .

எமது அரசியல்வாதிகள் எவருமே தமிழ் நாட்டு தேர்தல் பற்றி வாயே திறக்கவில்லை திறக்கவும் கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

200 ரூபாய் பணத்திற்கும்ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?
---

நமது தாத்தனும், அப்பனும் பாடுபட்டு வளர்த்த கட்சி கடைசியில் தலைவரின் குடும்ப சொத்தாகிப் போனதின் சூது தெரியாமல் வாழ்க கோஷங்களை வாய் கிழிய எழுப்பும் மகன்கள் இருக்கிற நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்?

கட்சி எது? சின்னம் எது? தலைவர் யார்? எது சரியான பாதை? என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பொறியியல் பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினால் மாற்றம் எப்படி வந்து சேரும்?

தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு செல்லாமல் விடுமுறை கொண்டாடுகிற தேசத்தில் புதிய அரசு எப்படி சாத்தியம்?

எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய் இருக்கிற வரையிலும்நிம்மதியான வாழ்க்கையை வாழவே போவதில்லை....

''குனிந்து செல்! கூனிக் குறுகி நட!! வீழ்ந்து கும்பிடு!! உருண்டு புரளு!! - தலை நிமிராதே! ''

அருமையான பதிவு.

  • தொடங்கியவர்

'மூத்தவன் சொல்லும் முத்துன நெல்லியும்...!' -அழகிரியின் ஃபேஸ்புக் அப்டேட்

azhagiri1.jpg

அ.தி.மு.கவின் வெற்றியை ஆதரவாளர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் அழகிரி, ஃபேஸ்புக்கில் பதிவிடும் தகவல்களால் எரிச்சலில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

மதுரை சத்யசாய் நகரில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் வெற்றியை ரசித்துக் கொண்டிருக்கிறார் அழகிரி. அவரது ஆதரவாளர்கள் பலரும், " தேர்தல் வேலை செய்யச் சொல்வாங்கன்னு பார்த்தா, நம்மை நம்ப வைத்து ஏமாற்றினார்கள். நம்மைக் கழட்டிவிட்டதற்கான பலனை தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தென்மண்டலத்தில் 20 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி பெற்றிருக்கலாம். நம்மிடம் எதுவும் பேசாமல், அவர்களே தேர்தல் வேலை பார்த்ததன் விளைவுதான் தோல்விக்குக் காரணம்.

இதைவிடக் கொடுமை, கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அண்ணனை சந்திக்க வருவதையே தவிர்த்தார்கள். கோபாலபுரத்திற்கு நம்மைக் கூப்பிட்டு சமரசம் செய்தவர்கள், ' தேர்தல் நேரத்தில் உங்களுக்கான வேலையை தருகிறோம்' என நம்ப வைத்து ஏமாற்றினார்கள். நமது வலிமை என்னவென்று தலைமைக்கு இப்போதுதான் தெரிந்திருக்கும். இனி அண்ணனைத் தேடி அறிவாலயம் வரும்" என்கிறார்கள்.

ஆதரவாளர்களின் வார்த்தைகளை புன்சிரிப்போடு எதிர்கொள்கிறார் அழகிரி. இன்னும் ஒருபடி மேலே போய், தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ' மூத்தவன் சொல்லும் முத்துன நெல்லிக்காயும் புளிக்கத்தான் செய்யும். ஆனால், எதிர்காலத்திற்கு நல்லது' என தன்னுடைய ஆதரவாளர் எழுதிய சுவர் விளம்பரப் படத்தை போஸ்ட் செய்திருக்கிறார். அடுத்த பதிவில், 'தலைவர்' எனக் குறிப்பிட்டு,  68,587 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றதையும் பெருமையோடு பதிவு செய்கிறார்.

அழகிரி தரப்பினரோ, " அண்ணன் பெயரில் ஓரிரு அக்கவுன்ட்டுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகிறது. அவரிடம் அனுமதி பெற்றுத்தான் ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்கிறார். இதை அண்ணனும் வரவேற்கிறார்" என்கின்றனர். ' அப்பாவின் வெற்றியைப் பெருமையோடு பதிவு செய்யும் அழகிரி, கட்சியின் தோல்வியை உற்சாகத்தோடு கொண்டாடுகிறார். இந்த முரண்பாட்டை எப்படி எடுத்துக் கொள்வது?' எனக் கேள்வி எழுப்புகிறார்கள் அறிவாலயத் தரப்பினர்.

தேர்தல் முடிவுகள் உடன்பிறப்புகளுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, மதுரையில் உள்ள தனது வீட்டில் உட்கார்ந்தபடியே சமூக வலைத்தளங்களை வலம் வருகிறார் மு.க.அழகிரி.

http://www.vikatan.com/news/tamilnadu/64380-azhagiris-facebook-status-to-dmk-defeat.art

2 hours ago, kanna123 said:

தமிழகத்து தமிழனான நான் முன்பே இந்த களத்தில் எச்சரிக்கை கொடுத்திருந்தேன் சீமானை நம்பி மோசம் போகாதீர்கள் என்று. தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு உள்ளது. ஆனால் ஈழத்தை போல் படு ஆக்ரோஷமாக இல்லை. தனி நாடு கேட்டு பின்பு அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை மனதில் வைத்து இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்கிறோம் 

சரி ஏன் ஜெயலலிதா வென்றார் ?. அவர் மற்ற தலைவர்களை விட ஒரு நல்ல, செயல் மிக்க தலைவராக தன்னை காட்டி கொண்டார். மக்களும் அவரின் பல நல்ல திட்டங்களை அனுபவித்து உள்ளார்கள். தமிழ் நாட்டில் இப்பொழுது வறுமையே இல்லை. மக்கள் அனைவரும் முன்னேறிய மாநிலத்தின் பலன்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா சொல்வது போல் அவர் சொன்னதை செய்தார். சொல்லாத பல நல்ல திட்டங்களை கொடுத்தார். அதை மறுக்கவே முடியாது. எனவே மக்கள் இதை விட நல்ல திட்டங்களை எதிர் பார்த்து , பொது அமைதிக்கு வேண்டி அவருக்கு ஒரு நல்ல தீர்ப்பு அளித்து இருகிறார்கள். அவர் இப்பொழுது சொல்வது போல் கொள்ளைக்காரி ஒன்றும் இல்லை. மக்களின் அம்மாவாக உள்ளார் என்பதே உண்மை,

மக்களுக்கு இன்று உள்ள எண்ணம் எல்லாம் எப்படி இனிமேல் மென் மேலும் வளர்வது என்பது பற்றி சிந்தனையே உள்ளது. அதற்க்கு ஜெயாவே நல்ல உந்து சக்தி என்று அவர்கள் தெள்ள தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். 
 
சீமானை நம்பி மோசம் போவதற்கு ஈழத்தமிழர்களுக்கு எதுவும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்பானது. அதுவே சீமான் மீதும் உண்டு. அதில் தவறு எதுவும் இல்லை. சீமான் தமிழீழம் பெற்றுத்தருவார் என்று எந்த ஈழத்தமிழனும் கனவுகண்டுகொண்டிருப்பதில்லை. ஈழத்தமிழர்களுக்கு சீமான் இந்தியப் பிரஜை என்பது தெரியும். அவரின் எல்லையும் தெரியும். ஜெயலலிதாவும் கருணாநிதியும் தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச்சனையை தமது அரசியல் சுயநலத்திற்கு பயன்படுத்தியே வந்துள்ளார்கள். கடந்த தேர்தலின் போது தனி ஈழம் ஒன்றே தீர்வென்று அம்மா கூறினார் அதற்காக அவர் எந்த ஒரு துரும்பையும் செய்ததில்லை. அவர் செய்வார் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர்கள் இருந்ததும் இல்லை. அதேபோல் கருணாநிதி ஆடிய நாடகங்கள் எத்தனையே உண்டு. இவர்களோடு ஒப்பிடும் போது சீமான் ஈழத்தமிழர் பிரச்சனையை பயன்படுத்தினார் என்பது அபத்தமானது. 

சீமானின் அரசியல் ஆரம்பம் இந்திய அதிகாரவர்க்கம் தமிழர்களுக்கு இளைக்கும் துரோகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. அது ஈழத்தமிழர் படுகொலையில் இந்தி அதிகாரவர்க்கத்தின் பங்கு, தமிழக மீனவர்கள் இலங்கை படைகளால் கொலை செய்யப்படுவது. இவற்றை அரசியல் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் திராவிடக்கட்சிகள் என்பதில் இருந்து தொடங்குகின்றது. திராவிடக்கட்சிகளின் ஆரம்பம் ஆரிய மேலாண்மையும் ஒடுக்குமுறையும் என்பதில் ஆரம்பித்தது போல் இது இனம்சார்ந்தத ஒடுக்குமுறையில் இருந்து ஆரம்பித்துள்ளது. ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் இனம்சார்ந்த ஒரு எழுச்சிக்கு ஆரம்ப உந்து சக்தியே தவிர தெடர்ச்சியில்லை. தொடர்ச்சி என்பது தமிழகத்துக்கு மறுக்கப்படும் நதிநீர் வழங்கல், தமிழகத்தில் நிறுவப்படும் அணு உலைகள், ஆந்திர அரசு தமிர்களை கொன்றது போலான சம்பவங்கள். தமிழக விவசாயிகள் தற்கொலை, ஆட்சியதிகாரத்தில் பிறமாநிலத்தவர்கள், பண்படு காலாச்சார திணிப்புகள் என அவை விரிவாகிக்கொண்டு போகும். 

தமிழ்நாட்டில் இப்பொழுது வறுமையே இல்லை என்பது உண்மைகிடையாது. தமிழ்நாட்டின் வறுமையின் பக்கங்கள் பார்வைக்கு இல்லை. வெறும் பத்துவீத மக்களின் முன்னேற்றம் மட்டுமே பார்வையில் உண்டு. மது வியாபாரமும் அதன் விழைவுகளும், சென்னை வெள்ளத்தில் மூழ்கியதில் அரச எந்திரங்களின் முறைகேடுகள், விவசாயிகள் தற்கொலை, மருத்துவம் கல்வியில் ஏற்றதாழ்வுகள், ஊழல் என அனைத்தும் வெளிப்படையாகவே உள்ளது. அம்மா வென்றதால் அவர் செய்காரியங்கள் சரியாகிவிடாது. அதேபோல் தோற்றவர்களின் செய்காரியங்கள் தவறாகியும் விடாது. அம்மாவின் சொத்துக்குவிப்புகளும் ஊழல் வழக்குகளும் சிறைக்கு சென்று வருவதும் அதேபோல் திமுக வின் சொத்துக்குவிப்புகள் என எல்லாம் வெளிப்படையானது. இரண்டும் பணபலம்மிக்க சக்திகள்.சொந்த ஊடகங்களும் இதர ஊடகங்களை விலைக்கு வாங்கவும் வல்ல சக்திகள். ஒரு வாக்குக்கு 1000 முதல் 5000 வரை கொடுக்கக் கூடிய பலம்மிக்கன. ஏனைய கட்சிகளுக்கு இப்பலம் கிடையாது என்பது வேறு உண்மை.  இவர்களின் வெற்றியை ஆராதிப்பதும் நியாயப்படுத்துவதும் வெல்ல முடியாதவர்களை தூற்றுவதும் அறியாமையே. 

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கூட்டத்துக்கு கட்டு மரம் மறு படியும் அவர்களை மேலே கொண்டு போய் விட்டு விட்டார் , ஒரு விதத்தில் கட்டு மரம் இந்த தேர்தலில் தோத்தது மகிழ்ச்சி , காங்கிரசை மறு படியும் தூக்கி விட்டு தமிழின துரோகி தான் தான் என்று நிருபித்து விட்டார் , கூடா நட்பு கேடாய் முடியும் என்று எல்லாம் சொல்லி போட்டு , முகவரி என்ன என்று தெரியாமல் இருந்த காங்கிரசை தமிழ் நாட்டில் மீண்டும் எழ வைத்து விட்டான் இந்த கட்டு மரம்

Edited by பையன்26

  • தொடங்கியவர்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

ஸ்டாலின், ஜெயலலிதா | கோப்புப் படம்
ஸ்டாலின், ஜெயலலிதா | கோப்புப் படம்

தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

'நாங்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம். பொறுப்புள்ள எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம்.

மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டமன்றம் நடப்பதற்கு வழிவிட்டு ஆரோக்கியமான ஜனநாயகத்தை நிலைநாட்ட அதிமுக பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.

இந்த தருணத்தில் அம்மையார் ஜெயலலிதாவிற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.'

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8624746.ece?homepage=true

  • தொடங்கியவர்

நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெற்ற கட்சிகள் இவைதான்!

e2.jpg

மிழக சட்டப்பேரவைக்கு, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர்த்து 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 134 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தி.மு.க. தனது கூட்டணியுடன் 98 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

e1.jpg

இந்நிலையில், இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் வெளியாகி உள்ளது. அதன்படி விபரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. 40.8 40.8 1,76,17,060
தி.மு.க. 31.6 1,36,70,511
காங்கிரஸ் 6.4 27,74,075
பா.ம.க. 5.3 23,00,775
பா.ஜ.க 2.8 12,28,629
தே.மு.தி.க. 2.4 10,34,384
நாம் தமிழர் கட்சி 1.1 4,58,104
ம.தி.மு.க. 0.9 3,73,713
இந்திய கம்யூனிஸ்டு 0.8 3,40,290
விடுதலை சிறுத்தைகள் 0.8 3,31,849
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.7 3,13,808
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 0.7 3,07,303
த.மா.கா. 0.5 2,30,711
புதிய தமிழகம் 0.5 2,19,830
மனிதெநேய மக்கள் கட்சி 0.5 1,97,150
கே.எம்.டி.கே. 0.4 1,67,560
பகுஜன் சமாஜ் 0.2 97,823
எஸ்.டி.பி.ஐ. 0.2 65,978
சுயேச்சைகள் 1.4 6,17,907
நோட்டா 1.3 5,61,244

இந்த தேர்தலில் நோட்டா 1.3 (5,61,2440 சதவீதம் வாக்குகளை பெற்று 7வது இடத்தை பிடித்து, நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, த.மா.கா., புதிய தமிழகம், மனிதெநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி உள்ளது.

http://www.vikatan.com/news/politics/64394-these-parties-received-less-votes-than-nota.art

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, kanna123 said:

தமிழகத்து தமிழனான நான் முன்பே இந்த களத்தில் எச்சரிக்கை கொடுத்திருந்தேன் சீமானை நம்பி மோசம் போகாதீர்கள் என்று. தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு உள்ளது. ஆனால் ஈழத்தை போல் படு ஆக்ரோஷமாக இல்லை. தனி நாடு கேட்டு பின்பு அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை மனதில் வைத்து இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்கிறோம் 

சரி ஏன் ஜெயலலிதா வென்றார் ?. அவர் மற்ற தலைவர்களை விட ஒரு நல்ல, செயல் மிக்க தலைவராக தன்னை காட்டி கொண்டார். மக்களும் அவரின் பல நல்ல திட்டங்களை அனுபவித்து உள்ளார்கள். தமிழ் நாட்டில் இப்பொழுது வறுமையே இல்லை. மக்கள் அனைவரும் முன்னேறிய மாநிலத்தின் பலன்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா சொல்வது போல் அவர் சொன்னதை செய்தார். சொல்லாத பல நல்ல திட்டங்களை கொடுத்தார். அதை மறுக்கவே முடியாது. எனவே மக்கள் இதை விட நல்ல திட்டங்களை எதிர் பார்த்து , பொது அமைதிக்கு வேண்டி அவருக்கு ஒரு நல்ல தீர்ப்பு அளித்து இருகிறார்கள். அவர் இப்பொழுது சொல்வது போல் கொள்ளைக்காரி ஒன்றும் இல்லை. மக்களின் அம்மாவாக உள்ளார் என்பதே உண்மை,

மக்களுக்கு இன்று உள்ள எண்ணம் எல்லாம் எப்படி இனிமேல் மென் மேலும் வளர்வது என்பது பற்றி சிந்தனையே உள்ளது. அதற்க்கு ஜெயாவே நல்ல உந்து சக்தி என்று அவர்கள் தெள்ள தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். 
 
ஜெயா அப்படி என்ன திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார் ??

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி குடும்பமும் ஜெயலலிதாவும் தமிழ் நாட்டில் இருக்கும் வரை ஊழலும் இருக்கும் தமிழ் நாட்டில் , இது உண்மை உண்மை ,திருட்டு திராவிடர்கள் இவர்கள் , இவர்களின் கொள்கை மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதே கொள்கை, கொள்ளை அடித்து விட்டு சிறை செல்வதே இவர்களின் சாதனை ,69வருடம் சுதந்திரம் அடைந்த இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் இப்பவும் குடுசை வீட்டில் தான் மக்கள் வாழ்கிறார்கள் , ஊழல் செய்து சிறை சென்று வந்து முதல் அமைச்சர் ஆக முடியும் என்றால் உலகத்திலையே அது தமிழ் நாடாக தான் இருக்க முடியும் , வெக்கம் மானம் ரொசம் என்றது தமிழ் நாட்டு தமிழனுக்கு கொஞ்சமும் இல்லை , ஈழ தமிழனை பார்தாவது திருந்துவார்கள் என்று பார்தால் அது இந்த நூற்றாண்டில் நடக்கப் போறதும் இல்லை:cool::cool::cool::cool::cool::cool::cool::cool::cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

சீமானை நம்பி மோசம் போவதற்கு ஈழத்தமிழர்களுக்கு எதுவும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்பானது. அதுவே சீமான் மீதும் உண்டு. அதில் தவறு எதுவும் இல்லை. சீமான் தமிழீழம் பெற்றுத்தருவார் என்று எந்த ஈழத்தமிழனும் கனவுகண்டுகொண்டிருப்பதில்லை. ஈழத்தமிழர்களுக்கு சீமான் இந்தியப் பிரஜை என்பது தெரியும். அவரின் எல்லையும் தெரியும். ஜெயலலிதாவும் கருணாநிதியும் தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச்சனையை தமது அரசியல் சுயநலத்திற்கு பயன்படுத்தியே வந்துள்ளார்கள். கடந்த தேர்தலின் போது தனி ஈழம் ஒன்றே தீர்வென்று அம்மா கூறினார் அதற்காக அவர் எந்த ஒரு துரும்பையும் செய்ததில்லை. அவர் செய்வார் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர்கள் இருந்ததும் இல்லை. அதேபோல் கருணாநிதி ஆடிய நாடகங்கள் எத்தனையே உண்டு. இவர்களோடு ஒப்பிடும் போது சீமான் ஈழத்தமிழர் பிரச்சனையை பயன்படுத்தினார் என்பது அபத்தமானது. 

சீமானின் அரசியல் ஆரம்பம் இந்திய அதிகாரவர்க்கம் தமிழர்களுக்கு இளைக்கும் துரோகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. அது ஈழத்தமிழர் படுகொலையில் இந்தி அதிகாரவர்க்கத்தின் பங்கு, தமிழக மீனவர்கள் இலங்கை படைகளால் கொலை செய்யப்படுவது. இவற்றை அரசியல் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் திராவிடக்கட்சிகள் என்பதில் இருந்து தொடங்குகின்றது. திராவிடக்கட்சிகளின் ஆரம்பம் ஆரிய மேலாண்மையும் ஒடுக்குமுறையும் என்பதில் ஆரம்பித்தது போல் இது இனம்சார்ந்தத ஒடுக்குமுறையில் இருந்து ஆரம்பித்துள்ளது. ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் இனம்சார்ந்த ஒரு எழுச்சிக்கு ஆரம்ப உந்து சக்தியே தவிர தெடர்ச்சியில்லை. தொடர்ச்சி என்பது தமிழகத்துக்கு மறுக்கப்படும் நதிநீர் வழங்கல், தமிழகத்தில் நிறுவப்படும் அணு உலைகள், ஆந்திர அரசு தமிர்களை கொன்றது போலான சம்பவங்கள். தமிழக விவசாயிகள் தற்கொலை, ஆட்சியதிகாரத்தில் பிறமாநிலத்தவர்கள், பண்படு காலாச்சார திணிப்புகள் என அவை விரிவாகிக்கொண்டு போகும். 

தமிழ்நாட்டில் இப்பொழுது வறுமையே இல்லை என்பது உண்மைகிடையாது. தமிழ்நாட்டின் வறுமையின் பக்கங்கள் பார்வைக்கு இல்லை. வெறும் பத்துவீத மக்களின் முன்னேற்றம் மட்டுமே பார்வையில் உண்டு. மது வியாபாரமும் அதன் விழைவுகளும், சென்னை வெள்ளத்தில் மூழ்கியதில் அரச எந்திரங்களின் முறைகேடுகள், விவசாயிகள் தற்கொலை, மருத்துவம் கல்வியில் ஏற்றதாழ்வுகள், ஊழல் என அனைத்தும் வெளிப்படையாகவே உள்ளது. அம்மா வென்றதால் அவர் செய்காரியங்கள் சரியாகிவிடாது. அதேபோல் தோற்றவர்களின் செய்காரியங்கள் தவறாகியும் விடாது. அம்மாவின் சொத்துக்குவிப்புகளும் ஊழல் வழக்குகளும் சிறைக்கு சென்று வருவதும் அதேபோல் திமுக வின் சொத்துக்குவிப்புகள் என எல்லாம் வெளிப்படையானது. இரண்டும் பணபலம்மிக்க சக்திகள்.சொந்த ஊடகங்களும் இதர ஊடகங்களை விலைக்கு வாங்கவும் வல்ல சக்திகள். ஒரு வாக்குக்கு 1000 முதல் 5000 வரை கொடுக்கக் கூடிய பலம்மிக்கன. ஏனைய கட்சிகளுக்கு இப்பலம் கிடையாது என்பது வேறு உண்மை.  இவர்களின் வெற்றியை ஆராதிப்பதும் நியாயப்படுத்துவதும் வெல்ல முடியாதவர்களை தூற்றுவதும் அறியாமையே. 

13238908_961387977309850_823617614914394

  • தொடங்கியவர்

'மானத் தமிழன், வீரத் தமிழன் விலை போய்விட்டான்' - கொந்தளித்த சீமான்

seemanlong.jpg

தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை. 'அடுத்த தேர்தல் நமக்கானது' என ஆதரவாளர்களை தேற்றிக் கொண்டிருக்கிறார் சீமான்.

சட்டசபை தேர்தல் முடிவுகளை, தனது ஆலப்பாக்கம் வீட்டில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் சீமான். பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஐந்தாவது இடம், ஆறாவது இடம் என நிலவரம் போய்க் கொண்டிருக்க, கலவரத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், ' பல தொகுதிகளில் இரண்டாவது இடம் வருவோம் என எதிர்பார்த்தேன். மக்கள் ஏமாற்றிவிட்டார்கள்' என நொந்து போனார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், " தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றதும் கொந்தளிப்பின் உச்சிக்கே போய்விட்டார் சீமான். ' மானத் தமிழன், வீரத்தமிழன் இப்படி செய்துவிட்டான்' எனக் கோபப்பட்டார். நேரம் செல்லச் செல்ல, எங்களுக்கு அவர் ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

கொஞ்சம் செருமலோடு பேசத் தொடங்கிய சீமான் ' முப்பது வருஷமாக சாதியைச் சொல்லி கட்சி நடத்துகிற ராமதாஸ், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். ஐம்பது ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான வைகோ, நம்மைவிடவும் குறைந்த ஓட்டுக்களைத்தான் வாங்கியிருக்கிறார். எண்பது ஆண்டு பாரம்பர் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட நாம் வாங்கிய ஓட்டை வாங்கவில்லை. 8.3 சதவீத ஓட்டை வைத்திருந்த விஜயகாந்துக்கு 2.3 சதவீதம்தான் வாக்கு கிடைச்சிருக்கு. அவருக்கு ஆந்திரா கிளப் உள்பட பல தொழிலதிபர்கள் பணம் கொடுத்தார்கள். எந்தப் பணபலமும் இல்லாமல்தான் தேர்தலை எதிர்கொண்டோம். இப்பதான் களத்துக்குள்ள வந்திருக்கோம். இந்தத் தேர்தலை முயற்சி மற்றும் பயிற்சி என்ற அடிப்படையில்தான் எதிர்கொண்டோம்.

மானத் தமிழன், வாங்கின காசுக்கு விசுவாசமா ஓட்டுப் போட்டிருக்கான். நாம என்ன பண்ண முடியும்? தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தைக் கொட்டி வேலை பார்த்தார்கள். நாம் உண்டியல் குலுக்கி தமிழனிடம் கையேந்தி நின்னோம். நமக்கு ஒரு சதவீதம் கொடுத்திருக்கான். நமக்கு இன்னமும் வயசு இருக்கு. அடுத்த தேர்தலை வலிமையோடு சந்திப்போம். 2021-ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும். தம்பிகள் யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம். தேர்தலை எதிர்கொண்ட ஓராண்டிலேயே நம்மை ஒரு சதவீதம் பேர் ஆதரித்திருக்கிறார்கள். பணபலம் எதுவுமில்லாமல் நமக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வாக்கு சதவீதத்தை இன்னும் உயர்த்தப் பாடுபடுவோம்' என எங்களை உற்சாகப்படுத்தினார்" என்றார்.

'நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று' என தேர்தல் களத்தில் களமாடிய சீமானின் தம்பிகளுக்கு இந்தத் தேர்தல் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/64399-seeman-gets-angry-over-tn-assembly-election-result.art

ஈழத்தமிழர்கள் விடயத்தில் கருணாநிதி ஜெயலலிதா சீமான்  மூவரையும் ஒரே தராசில் ஒருவர் வைத்து எடை போடுவாராக  இருந்தால் அவருடன் அரசியல் பேசிப்பயன் இல்லை .

தமிழ்நாட்டு ஆட்சியை குற்றம் வைப்பவர்களை பார்க்க சிரிப்பாக இருக்கு .ஜெயலிதாவின் சில தனிப்பட்ட அராஜக செயல்களை தவிர்த்து பார்த்த்தால் ஒப்பீட்டு ரீதியில் தமிழ்நாட்டில் நல்லாட்சி தான் நடைபெற்றது .

எந்த நாட்டில் ஏதாவது ஆட்சியில் மக்கள் முழு திருப்தியுடன் இருக்கின்றார்களா ?.இதற்கு நாடுகள் என்று பார்த்தாலும் சரி அங்குள்ள மாகாணங்கள் ,மாவட்டங்கள் என்று பார்த்தாலும் ஆட்சியில் திருப்தி இல்லாததால் தான் ஆட்சிகள் மாறுகின்றன .

அரசியல் என்று பார்த்தால் மேற்கத்தைய நாடுகளில் கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல கேவலங்கள் மூன்றாம் உலக நாடுகளில் கண்ணுக்கு முன்னால்  நடைபெறுகின்றது அதுதான் வித்தியாசம் .

In 2014, the Harper government struck a $15-billion deal to sell military vehicles to Saudi Arabia. Critics are worried the Saudis would use them to crush dissent at home – which could put Canada in violation of its arms-trading rules. The Trudeau government has begun approving export permits for the vehicles anyway. Here’s what we know about the deal so far

நேரம் இருந்தால் இந்த செய்தியின் முழு விபரத்தையும் வாசிக்கவும் மேற்கத்தைய நாடுகளின் போலிமுகம் தெரியும் .

  • தொடங்கியவர்

தி.மு.கவை வீழ்த்திய நோட்டா! -பதற வைத்த 16 தொகுதிகள்

nota.jpg

மிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால், ' 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றிவாய்ப்பை பறித்திருக்கிறது நோட்டா வாக்குகள்' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சட்டசபை தேர்தலில் 'மாற்று' என்ற கோஷத்தை முன்வைத்து மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் தேர்தல் முடிவு, மாற்று கோஷத்திற்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்துவிட்டது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற கோஷமும் எடுபடவில்லை. அதே நேரத்தில், வெற்றிக் கோட்டைத் தொடுவதில் தி.மு.க கோட்டைவிட்டு விட்டது. பதினாறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், நோட்டா வாக்குகள் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளன. 

ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4,994. தி.மு.க தோற்றுப் போனதோ 1,395 வாக்குகள் வித்தியாசத்தில். பர்கூரில் 982 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது தி.மு.க. இங்கு நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 1,382. சிதம்பரத்தில் நோட்டாவுக்கு 1,724 வாக்குகள் கிடைத்தது. தி.மு.கவோ 1,506 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைப் பறிகொடுத்தது. கரூரில் 3,595 வாக்குகள் நோட்டாவுக்கு, தி.மு.கவோ 3,154 ஓட்டில் தோற்றது. கிணத்துக்கடவு தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்தவை 3,884, தி.மு.கவுக்கு தோல்வியோ 1,332 வாக்குகள் வித்தியாசத்தில்.

karuna-stalin2001.jpgகோவில்பட்டியில் 2,350 வாக்குகள் நோட்டா கணக்கில் வந்தன. இதே தொகுதியில் 428 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தோற்றது. மொடக்குறிச்சி தொகுதியில் நோட்டாவுக்கு 2,715 வாக்குகள் விழுந்தன. தி.மு.க இதே தொகுதியில் 2,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இதேபோல் ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பேராவூரணி, ராதாபுரம், தென்காசி, திருப்போரூர், தியாகராய நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் நோட்டாவுக்கு, தி.மு.கவின் தோல்வி வித்தியாசத்தைவிட அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

ஏறக்குறைய 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு இப்படி நோட்டாவால் பறிபோயுள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.கவின் வாக்குகளை தே.மு.தி.க பிரித்ததால், தி.மு.க தோற்றது. இந்தமுறை  மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க, பா.ம.க எனப் பல கட்சிகள் சிதறிப் போட்டியிட்டாலும், தி.மு.கவின் வாக்குவங்கி எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. 'எந்தக் கட்சி யாருடைய வாக்குகளைப் பிரிக்கும்? என்றுதான் தலைவர்கள் கணக்குப் போட்டார்களே தவிர, நோட்டாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள்,  பிரதான கட்சிகளை  'நோட்டா' வை நோக்கி பார்க்க வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

dmk1.jpg

அரசியல்வாதிகள் மீதும் அரசியல் மீதும் அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களால், மக்கள் நலக் கூட்டணி, சீமான் என களத்தில் வலம் வந்த கட்சிகளை விடவும் நோட்டா எடுத்த  1.3 சதவீத வாக்குகள் மிக முக்கியமானவை மட்டுமல்ல, அரசியல் அரங்கையும் அலற வைத்துவிட்டன.

http://www.vikatan.com/news/tamilnadu/64406-tn-election-2016-nota-defeats-dmk-in-16-constitue.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, arjun said:

எந்த நாட்டில் ஏதாவது ஆட்சியில் மக்கள் முழு திருப்தியுடன் இருக்கின்றார்களா ?.இதற்கு நாடுகள் என்று பார்த்தாலும் சரி அங்குள்ள மாகாணங்கள் ,மாவட்டங்கள் என்று பார்த்தாலும் ஆட்சியில் திருப்தி இல்லாததால் தான் ஆட்சிகள் மாறுகின்றன .

அரசியல் என்று பார்த்தால் மேற்கத்தைய நாடுகளில் கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல கேவலங்கள் மூன்றாம் உலக நாடுகளில் கண்ணுக்கு முன்னால்  நடைபெறுகின்றது அதுதான் வித்தியாசம் .

அண்ணா!  உங்கடை இந்த தத்துவம் எங்கடை நாட்டுக்கும் பொருந்துமா? :cool:

  • தொடங்கியவர்

தமிழக கட்சிகள் 2016: வாக்கு சதவீதமும் புதிய பேரவை பலமும்

balam_2861280f.jpg
 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத நிலவரம் மற்றும் புதிய சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் குறித்த அலசலே இது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவியதால் வாக்குகள் சிதறியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுள்ள வாக்கு சதவீத விவரம் பின்வருமாறு:

வியாழக்கிழமை (19.05.2016) இரவு 11.52 மணி கடைசி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

இரவு 11.52 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.4%, பாமக 5.3%, பாஜக 2.8%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.7%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5% வாக்குகள் பெற்றுள்ளன.

நோட்டாவுக்கு 5,61,244 பேர் வாக்களித்துள்ளனர். நோட்டா வாக்கு சதவீதம் 1.3%.

கட்சிகள்

வாக்கு சதவீதம்

அதிமுக

40.8%

திமுக

31.6%

காங்கிரஸ்

6.4%

பாமக

5.3%

பாஜக

2.8%

தேமுதிக

2.4%

நாம் தமிழர் கட்சி

1.1%

மதிமுக

0.9%

விசிக

0.8%

சிபிஐ

0.8%

சிபிஎம்

0.7%

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

0.7%

தமாகா

0.5%

party_1_2861281a.jpg

அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது. தேமுதிகவை விட பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னுக்குச்சென்றதும் இங்கே கவனிக்கத்தக்கது.

புதிய சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் எப்படி?

அமையவுள்ள புதிய சட்டப்பேரவையில் அதிமுக 131 இடங்களுடன் வலுவான நிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியன தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இத்தேர்தலில் கட்சிகளில் பல நிலவரத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 29 பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தேமுதிக இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பாமகவுக்கும் அதே நிலைதான். 2011-ல் பாமக எம்.எல்.ஏ.க்கள் மூவர். இந்தமுறை ஒருவர்கூட இல்லை. | காண்க - இந்தச் செய்தியின் முதல் வரைபடம்.

இல்லாமல்போன இடதுசாரிகள்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் கடந்த 2011 தேர்தல் வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் இடதுசாரிகள் சட்டப் பேரவையில் இடம்பெற்றிருந்தனர். தனியாகவும், திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை வெற்றி பெற்று வந்தன. சிபிஐ, சிபிஎம் என இரு கட்சிகளும் ஒன்றாக இருந்த போதும், பின்பு பிரிந்த போதும் இடதுசாரிகளின் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த பல ஆண்டு காலமாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வந்த இடதுசாரிகள் இந்த முறை விசிக, மதிமுகவுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கின. அந்தக் கூட்டணியில் தேமுதிகவும், தமாகாவும் இணைந்தது. ஆனால், இந்த அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முறையாக இடதுசாரி கட்சிகள் இல்லாத சட்டப்பேரவையாக இந்த சட்டப்பேரவை அமையவுள்ளது.

சற்றே முன்னேறிய காங்கிரஸ்..

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை மக்கள் மன்றத்தில் 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. இம்முறை கூடுதலாக 3 தொகுதிகள் என 8 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

மமக, சமக வாஷ் அவுட்:

கடந்த முறை மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் தலா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்த முறை அக்கட்சிகள் முழுமையாக வாஷ் அவுட் ஆகியுள்ளன.

அதேபோல், போன தேர்தலில் தலா 1 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய குடியரசுக் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சிகளுக்கு இம்முறை வெற்றி பெறவில்லை.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2016-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8624836.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கட்சியுடன் டெபாசிட் இழந்த சீமான், தமிழிசை

தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான் உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.

இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை. ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும்.

முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி.

மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர். தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது.

இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை. பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது.

இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் 19,167 வாக்குகளை பெற்று, டெபாசிட்டை பறிகொடுத்தார்.

- Vikatan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கட்சியுடன் டெபாசிட் இழந்த சீமான்

தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான் உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.

முப்பாட்டன் முருகனின் சொத்துத்தானே புகையாகிப் போனது. சீமான் உழைத்துச் சம்பாதித்த பணம் பத்திரமாக இருக்குத்தானே:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முப்பாட்டன் முருகனின் சொத்துத்தானே புகையாகிப் போனது. சீமான் உழைத்துச் சம்பாதித்த பணம் பத்திரமாக இருக்குத்தானே:rolleyes:

கிருபனிடமிருந்து.... இந்தக்  கருத்தை, நான் எதிர் பார்க்கவில்லை.

சீமான்... இருப்பது வாடகை வீட்டில், அந்த வீட்டை... அவருக்கு பெறுவதிலும் அவர் பல சிரமங்களை, எதிர்கொண்டார்.
சீமானின் அம்மா... இப்போதும்,. சாதாரணமாக முன்பு வாழ்ந்த வாழ்க்கையையே.... தொடர்ந்து கொண்டும்  இருக்கின்றார்.
ஒருவரின்... மீது, உள்ள காழ்ப்பு உணர்ச்சியால்... ஊடகங்கள் வெளியிடும்,  அநியாய பழிச் சொல்லை உண்மை என நம்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கிருபனிடமிருந்து.... இந்தக்  கருத்தை, நான் எதிர் பார்க்கவில்லை.

சீமான்... இருப்பது வாடகை வீட்டில், அந்த வீட்டை... அவருக்கு பெறுவதிலும் அவர் பல சிரமங்களை, எதிர்கொண்டார்.
சீமானின் அம்மா... இப்போதும்,. சாதாரணமாக முன்பு வாழ்ந்த வாழ்க்கையையே.... தொடர்ந்து கொண்டும்  இருக்கின்றார்.
ஒருவரின்... மீது, உள்ள காழ்ப்பு உணர்ச்சியால்... ஊடகங்கள் வெளியிடும்,  அநியாய பழிச் சொல்லை உண்மை என நம்பாதீர்கள்.

சீமான் புலிக் கொடியையும்.. பிரபாகரனையும்.. தமிழீழத்தையும்.. நாம் தமிழர் என்பதையும் புரட்சி என்றும்.. உச்சரிப்பது.. தமிழை தமிழரை காட்டுமிராண்டிகள் என்று இனங்காட்டி அவர்களைக் கொத்தடிமைகளாக்கி.. இன்று வரை இலவசத்துக்கும்.. பிச்சைக்காசுக்கும்.. பிரியாணிப் பொட்டலத்துக்கும் வாக்குப் போட வைச்சுள்ள திராவிட.. பெரியாரிய வேடதாரி ஆசாமிகளுக்கு பிடிக்காத விடயமே.

புதுக்கட்சி வைச்சு சிவாஜி கணேசன் கூட தமிழக அரசியலில் ஒரு தேர்தலுக்கு பின் நிலைக்கவே முடியாது என்று வெளியேறினார். இத்தனை கோடி ரசிகர்களை வைச்சிருந்தும் ரஜனி காந்த் இந்த அரசியலுக்குள் இப்ப களம் புகவே விரும்பவில்லை... எல்லோருக்கும் காரணம் தெரியும்.

சீமானும் ஒதுங்கி இருந்து கத்திக் கொண்டே இருந்திருக்கலாம்.

ஆனால்.. களம் இறங்கினால் தான் அதன் பலம் பலவீனம் என்ன என்பது தெரியும். இப்போ மக்களைக் கையாள வேண்டிய வழிமுறைகளை தான் இனங்காண வேண்டி இருக்கிறதே தவிர.. இந்த தேர்தல் பரீட்சையில் நாம் தமிழருக்கு சாதகமான பதில்களும் உள்ளன.. பாதகமானவையும் உள்ளன.

எப்பவும் நாம் எம்மை பலமாக எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. எமது பலவீனங்களைப் பலமாக்க வேண்டின்.. அவற்றை இனங்காண வேண்டும். அதற்கு நாம் தமிழர் இளைஞர்கள் இந்தத் தேர்தலை வெற்றிகரமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

அவர்களுக்குத் தெரியும்.. தாம் மோதுவது பெரும் பணப் பன்றிகளுடனும்.. அவற்றை ஒட்டியுள்ள ஒட்டுண்ணிகளோடும் என்பது. 

சீமான் தேர்தல் களத்தில் நின்ற போது கட்சிப் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பியிராத ஊடகங்களும்.. ஆக்களும் இப்போ சீமானை நோண்டிக் கொண்டிருக்கிறார்களே ஏன்..?! எதுக்கு..?! ஒருவேளை சீமானால் எதுவும் ஆகாது என்றால் எதுக்கு இந்த நோண்டல்..! அதுவே சீமானின் நாம் தமிழரின் இருப்புக் குறித்த அச்சம் தமிழக அரசியலில் எழுந்திருக்குது என்பதைக் காட்டுகிறது. அது சவால்களை பலவற்றை நாம் தமிழர் அமைப்பு சந்திக்க வைக்கும். அவற்றை எல்லாம் தாண்டி வந்தால் தான்.. வெற்றியைப் பற்றி யோசிக்கலாம்.. நாம் தமிழர் கட்சி. நிச்சயம் சீமான்.. அதைச் சாதிக்க கூடியவரே. அந்த உறுதி அவருக்குள்ளது. 

அரசியலில் விமர்சனக் கேலிக் கூத்துக்களுக்கு பதில் அளிச்சுக் கொண்டிருந்தால்.. நாம் எழ முடியாது. சோர்ந்து வீழ்ந்து தான் போவோம். நாம் எம்மை தற்துணிந்து கொண்டு.. திட்டமிட்டு நகர்வு ஒன்றே அரசியலில் நாம் செல்வாக்குப் பெற மக்கள் எம்மீது நம்பிக்கை வைக்க உதவும்.

நாம் தமிழர் கட்சி.. பெற்ற 500,000 வாக்குகளை 50 இலச்சம்.. 5 கோடி ஆக்குவதில் தான் ஈடுபாடு காட்ட வேண்டுமே தவிர ஊடக.. மற்றும் உளவு.. மற்றும் ஆதிக்கக் கட்சிகளின் விமர்சனக் கேலிக்கூத்துக்கு கூலிக்கு விளக்கம் கொடுத்திட்டு இருக்கனுன்னு நினைக்கவே கூடாது. அவற்றை குப்பைகளாக ஒரு புறம் கூட்டுத்தள்ளி விட்டு இலக்கை நோக்கி நன்கு திட்டமிட்டு நகர்வதே அரசியலில் நிலைக்கவும் வெற்றி பெறவும் உதவும். 

நாம் தமிழர் கட்சி இதைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். செய்வார்கள். tw_blush:

இன்னொரு விடயம் இங்கு ஓட்டப்படும் செய்திகளில் பல.. அதிமுக.. திமுக.. காங்கிரஸ்.. பாஜக.. சார்ப்பு மற்றும் ஹிந்திய தேசிய ஆதரவு ஊடகங்களில் இருந்தாகும். அந்த வகையில்.. சீமான் குறித்து அவர்கள்.. அவரை எனி மேல்.. எழாமல் இருக்கவே பதிவிடுவார்கள். இந்தளவுக்கு சீமான்.. பிரபாகரனையும்.. புலிக்கொடியையும்.. தமிழீழத்தையும் உச்சரித்தது பல ஹிந்திய தேசியக் கட்சிகளுக்குப் பிடிக்காத விடயம்.

சீமான் 2011 தேர்தலில் பிரபாகரன் படத்தைப் பிடிக்கவே.. ஏன் சீமான்.. கூட்டம் போடவே முடியாமல் தடுக்கப்பட்டார். ஆனால்.. ஜெ அம்மையார் அப்படிச் செய்யவில்லை. இது ஜெ அம்மையார் குறித்தும் சில தீவிர ஹிந்திய தேசிய விசுவாசிகள் கடுப்படையக் காரணமாகும். அவர்களும் இப்ப சீமானை தான் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு யாழ் களத்திலும் சிலர் சீமானைப் பற்றி வாரி வறுகினம் என்றால்.. காரணம்.. அவர் கையில் இருக்கும்.. பிரபாகரனும்.. புலிக்கொடியும்.. வாயில் இருக்கும் தமிழீழமும்.. ஈழத்தமிழரும் தான் வேறில்லை. 

இவற்றை முற்றாக அழிக்கனும் என்று நினைக்கிற கூட்டம் இப்ப சீமானின் காலை வாரவே அதிகம் கவனம் செலுத்தும்.. எப்படி புலிகளின் தோல்வியோடு ஈழத்தமிழரின் கனவை அழிக்க முனைந்தார்களோ.. அதே பாணியில்.. இது நிகழ்த்தப்படுகிறது.. படும். இதை எல்லாம் தாண்டி.. பிரபாகரனும்.. புலிக்கொடியும்.. தமிழீழமும்.. பேசப்படும். எழும். அது தமிழினம் உள்ளவரை நடக்கும். சீமான் உட்பட பல அதன் இயங்கு சக்தியில் நிச்சயம் தமிழரை நல்வழிக்கு கொண்டு வருவார்கள். அதுவும் நிகழும். tw_warning:

Edited by nedukkalapoovan

சொந்த தொகுதியில் இரண்டாவதாக வந்திருந்தாலும் வரும் காலங்களில் வெற்றி வாய்ப்பு வரலாம் என்று நம்பலாம் 

அடுத்த தேர்தலில் நாலாவது இடம் தான் அதிக பட்சம் .

கட்டுகாசு புலம்பெயர்ந்தவர்கள் கட்டுவார்கள் என்ற நம்பிக்கை தான் இந்த தேர்தல் முடிவுடன் ,இனி அதுவும் ஆகாது போலிருக்கு 

தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போது சொத்துவிபரங்கள் வெளியிடவேண்டும் .அனைவரின் சொத்துவிபரங்ககளும் விபரமாக இருக்கு யாரும் பார்க்கலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.