Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்வெளி (brexit): உங்கள் பார்வை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாக பொருளாதார நலன் கருதி UK  போன என் நண்பன் வெளியே போக விரும்பிறான். காரணம் EU ல் உள்ள தமிழ் ஆக்கள் London வந்து சோசல் (Doll money) எடுக்கினமாம்.

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

black-kettle.jpg

சட்டி... கேத்திலைப் பாத்து சொல்லிச்சாம்... நீ கறுப்பு,  என்று.... 
இவரே... பொருளாதார அகதி,
EU தமிழன் சோசல் காசு எடுக்கிறது, இவருக்கு  பொறாமையாக இருக்குதோ....
முதலில்... தான் ஒழுங்கானவர் தானா என்று, சிந்திக்க  வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது மாதிரிதான் நானும் மனதுக்குள் நினைச்சன். ஆனால் நண்பனுடன் நேரடியாக அப்படி சொல்லவும் ஏலாது.

ஆனால் எனக்கும் என் படிப்பின் மூலம் வெளிநாடு போக வாய்ப்பு வந்து இருக்காவிட்டால் நானும் மாமனையோ மச்சானையோ பிடித்து வெளிநாடுதான் போய் இருப்பன். அப்ப நானும் பொருளாதார அகதிதானே.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே எங்கடை சனம் வெட்கம் கெட்டவர்கள்  தான் 
உழைப்பிற்கும் உயர்விட்க்கும் பெயர் போனவர்கள் எப்படித்தான் இந்தக்காசை கைநீட்டி வாங்குகிறார்களோ 

1 hour ago, M.P said:

ஆனால் எனக்கும் என் படிப்பின் மூலம் வெளிநாடு போக வாய்ப்பு வந்து இருக்காவிட்டால் நானும் மாமனையோ மச்சானையோ பிடித்து வெளிநாடுதான் போய் இருப்பன். அப்ப நானும் பொருளாதார அகதிதானே.

அதனால் தான் இங்கே யு கே இலிருந்து வந்து பந்தா காட்டும் (British Passport Holders) பேர்வழிகளை மதிப்பதே இல்லை . அவர்களுக்கு நினைப்பு எதோ அவர்கள் வித்தியாசமாக தங்களை காட்டுவதாக ஆனால் எங்கடை சனம் சிரிச்சு தள்ளிவிடும். அவர்கள் நினைப்பது சிறிலங்கா இன்னும் அவர்கள் போகும்போது இருந்த சிறிலங்கா என்று , ஆனால் இவியல் அங்கை என்ன செய்ரினம் ,எப்படி உழைக்கினம் ,எப்பிடி மற்றவர்களிட்டை இருந்து  புடுங்கினம் என்பது இங்கை இருக்கும் சனத்திற்கு அக்கு வேறு ஆணி வேறாக தெரியும் . இரண்டுகிழமை முன் யு கே மாப்பிளைக்கு இங்கே பெண் பார்த்திருக்கினம் மாப்பிளை பெண்ணை பார்க்க சிறிலங்காவிற்கு வந்திறங்க முன்னமே அவரை பற்றிய முழு Record உம் வந்திறங்கி விட்டது 
அவர் ஏற்கனவே கில்மா பேர்வழி என்று ...பெண் வீட்டுகாரரும் ஆளை வரவிட்டு இங்கை வந்திறங்கி அடுத்தநாள் போன் பண்ணி சம்மந்தத்தை கேன்சல் செய்திருக்கினம் ...பயலுக்கு டிக்கெட் காசு நாமம் ...எப்பிடி அதிரடி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சி. விக்கினேஸ்வரன் பேசின ஒரு video facebook ல் பார்த்தேன். வடிவா சொல்லுறார் வெளிநாட்டில் எங்கட ஆக்கள் அவை இலங்கையில் இருந்தால் செய்தே இருக்க முடியாத வேலைகளை செய்து இலங்கைக்கு காசு அனுப்ப அதுகளின் உறவுகள் இலங்கையில் கூத்து போடுதுகள். அவர் "இலங்கையில் இருந்தால் செய்தே இருக்க முடியாத வேலை" என்று சொன்னது கக்கூசு கழுவுதல்தான்.

இலங்கை போற போக்கை பார்த்தால் UK ஐ மிஞ்சிவிடும் இன்னும் 20 வருடங்களில். பிறகு இலங்கையிலேயே கக்கூசு கழுவ வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

29 minutes ago, M.P said:

நீங்கள் ஒரு நல்ல வைத்தியரை பார்ப்பது நல்லது

யுத்தம் காரணமாக

ஓடத்தொடங்கிய ஒரு இனம்

பிச்சை எடுக்காமல்

வீதியில் நிற்காமல்

அடுத்தவனிடம் புடுங்கி தின்னாமல்

எந்த வேலையாவது செய்து

தன் காலில் நின்று வாழ்வதில் உங்களுக்கு என்ன சிக்கல்??

இதில நானும் இப்படித்தான் வந்திருப்பன் என்ற கதை வேறு....

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

உண்மையாகவே எங்கடை சனம் வெட்கம் கெட்டவர்கள்  தான் 
உழைப்பிற்கும் உயர்விட்க்கும் பெயர் போனவர்கள் எப்படித்தான் இந்தக்காசை கைநீட்டி வாங்குகிறார்களோ 

அதனால் தான் இங்கே யு கே இலிருந்து வந்து பந்தா காட்டும் (British Passport Holders) பேர்வழிகளை மதிப்பதே இல்லை . அவர்களுக்கு நினைப்பு எதோ அவர்கள் வித்தியாசமாக தங்களை காட்டுவதாக ஆனால் எங்கடை சனம் சிரிச்சு தள்ளிவிடும். அவர்கள் நினைப்பது சிறிலங்கா இன்னும் அவர்கள் போகும்போது இருந்த சிறிலங்கா என்று , ஆனால் இவியல் அங்கை என்ன செய்ரினம் ,எப்படி உழைக்கினம் ,எப்பிடி மற்றவர்களிட்டை இருந்து  புடுங்கினம் என்பது இங்கை இருக்கும் சனத்திற்கு அக்கு வேறு ஆணி வேறாக தெரியும் . இரண்டுகிழமை முன் யு கே மாப்பிளைக்கு இங்கே பெண் பார்த்திருக்கினம் மாப்பிளை பெண்ணை பார்க்க சிறிலங்காவிற்கு வந்திறங்க முன்னமே அவரை பற்றிய முழு Record உம் வந்திறங்கி விட்டது 
அவர் ஏற்கனவே கில்மா பேர்வழி என்று ...பெண் வீட்டுகாரரும் ஆளை வரவிட்டு இங்கை வந்திறங்கி அடுத்தநாள் போன் பண்ணி சம்மந்தத்தை கேன்சல் செய்திருக்கினம் ...பயலுக்கு டிக்கெட் காசு நாமம் ...எப்பிடி அதிரடி 

புலம் பெயர் தேசத்தவனிடம் தவறாக உழைத்தபணம் 

அதனால் எனக்கு வேண்டாம் என்று சொன்ன தாயகத்தவர் எவராவது உண்டா??

நான் அறிய இதுவரை இல்லை

இரு பகுதியிலும் தப்பிருக்கிறது சகோதரா...

திருந்த  வேண்டியது புலத்தவர் மட்டுமல்ல.. 

  • கருத்துக்கள உறவுகள்

எவன் எந்த தொழில் செய்கிறான் என்பது இங்கே குறிப்பிட வேண்டாம் அது அவர்கள் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்  பத்து நாள் பட்டினி குடும்ப சூழ்நிலை காரரணமாக இருக்கலாம்   தம்பிகளா 

பிச்சை எடுக்க வில்லை களவு எடுக்க வில்லை கடன் தான் கேட்க வில்லை அவன்  தொழில் செய்து உழைத்து அவன் அவனை நம்பி இருக்கும் குடும்பம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறது இதில் என்ன பிரச்சனை மற்றவர்களுக்கு

விக்னேஸ்வரன் ஐயாவால் அவனுக்கு  ஏதாவது கொடுக்க முடியுமா முடியாது பேந்து ஏன் அவருக்கு தேவையற்ற பேச்சு

On 17/06/2016 at 10:01 AM, M.P said:

சி. விக்கினேஸ்வரன் பேசின ஒரு video facebook ல் பார்த்தேன். வடிவா சொல்லுறார் வெளிநாட்டில் எங்கட ஆக்கள் அவை இலங்கையில் இருந்தால் செய்தே இருக்க முடியாத வேலைகளை செய்து இலங்கைக்கு காசு அனுப்ப அதுகளின் உறவுகள் இலங்கையில் கூத்து போடுதுகள். அவர் "இலங்கையில் இருந்தால் செய்தே இருக்க முடியாத வேலை" என்று சொன்னது கக்கூசு கழுவுதல்தான்.

இலங்கை போற போக்கை பார்த்தால் UK ஐ மிஞ்சிவிடும் இன்னும் 20 வருடங்களில். பிறகு இலங்கையிலேயே கக்கூசு கழுவ வேண்டியதுதான்.

****  சீ m p விவகாரமாத்தான் இருக்கிறது  ??

On 17/06/2016 at 8:25 AM, அக்னியஷ்த்ரா said:

உண்மையாகவே எங்கடை சனம் வெட்கம் கெட்டவர்கள்  தான் 
உழைப்பிற்கும் உயர்விட்க்கும் பெயர் போனவர்கள் எப்படித்தான் இந்தக்காசை கைநீட்டி வாங்குகிறார்களோ 

அதனால் தான் இங்கே யு கே இலிருந்து வந்து பந்தா காட்டும் (British Passport Holders) பேர்வழிகளை மதிப்பதே இல்லை . அவர்களுக்கு நினைப்பு எதோ அவர்கள் வித்தியாசமாக தங்களை காட்டுவதாக ஆனால் எங்கடை சனம் சிரிச்சு தள்ளிவிடும். அவர்கள் நினைப்பது சிறிலங்கா இன்னும் அவர்கள் போகும்போது இருந்த சிறிலங்கா என்று , ஆனால் இவியல் அங்கை என்ன செய்ரினம் ,எப்படி உழைக்கினம் ,எப்பிடி மற்றவர்களிட்டை இருந்து  புடுங்கினம் என்பது இங்கை இருக்கும் சனத்திற்கு அக்கு வேறு ஆணி வேறாக தெரியும் . இரண்டுகிழமை முன் யு கே மாப்பிளைக்கு இங்கே பெண் பார்த்திருக்கினம் மாப்பிளை பெண்ணை பார்க்க சிறிலங்காவிற்கு வந்திறங்க முன்னமே அவரை பற்றிய முழு Record உம் வந்திறங்கி விட்டது 
அவர் ஏற்கனவே கில்மா பேர்வழி என்று ...பெண் வீட்டுகாரரும் ஆளை வரவிட்டு இங்கை வந்திறங்கி அடுத்தநாள் போன் பண்ணி சம்மந்தத்தை கேன்சல் செய்திருக்கினம் ...பயலுக்கு டிக்கெட் காசு நாமம் ...எப்பிடி அதிரடி 

 ஏற்கனவே விசாரிக்காமல் அந்த தம்பியை வரவழைத்து இங்கே அலைவிட்ட பெற்றோற்களை என்ன செய்ய வேண்டும் ஆளை தெரியாமல் லண்டன் மாப்பிள்ளை என்று உடனே இளித்துக்கொண்டு தங்கள் பிள்ளையை கட்டி கொடுத்து விட்டு பிறகு இங்கே இருந்து கொண்டு குய்யோ மிய்யோ என்று கத்துவது கூப்பாடு போடுவது ஒப்பாரி வைப்பது இங்கே இருக்கும் இடைப்பணக்காரர்களின் வேலை  முதலில் இவர்கள் திருந்த வேண்டும் ???

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

ஏற்கனவே விசாரிக்காமல் அந்த தம்பியை வரவழைத்து இங்கே அலைவிட்ட பெற்றோற்களை என்ன செய்ய வேண்டும் ஆளை தெரியாமல் லண்டன் மாப்பிள்ளை என்று உடனே இளித்துக்கொண்டு தங்கள் பிள்ளையை கட்டி கொடுத்து விட்டு பிறகு இங்கே இருந்து கொண்டு குய்யோ மிய்யோ என்று கத்துவது கூப்பாடு போடுவது ஒப்பாரி வைப்பது இங்கே இருக்கும் இடைப்பணக்காரர்களின் வேலை  முதலில் இவர்கள் திருந்த வேண்டும் ???

ஜீ ...எங்கடை ஆட்களும் வெளிநாடு என்றவுடனே இழிப்பினம் ....ஆனால் இப்போ கொஞ்சம் அலர்ட்டா இருக்கினம் 
உது பெண்ணிண்ட பக்கம் பிளான் பண்ணி செய்த விளையாட்டு ...தங்கடை பிள்ளையின்ட வாழ்க்கையை சீரழிக்க முயற்சித்த பேர்வழிக்கு கொடுத்த அல்வா ...அவங்களால் முடிந்த ஆப்பை சொருகி இருக்கினம் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, M.P said:

அகதியாக பொருளாதார நலன் கருதி UK  போன என் நண்பன் வெளியே போக விரும்பிறான். காரணம் EU ல் உள்ள தமிழ் ஆக்கள் London வந்து சோசல் (Doll money) எடுக்கினமாம்.

 எங்கடைசனம் இருக்கிற மற்ற ஐரோப்பிய  நாடுகளிலையும் அந்தமாதிரி அள்ளிக்குடுக்கிறாங்கள் தானே.....அதைசரி உங்கை இருக்கிற பாக்கிஸ்தானி சீக்கியன்களை விட எங்கடைசனம் மோசமில்லைத்தானே

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஜீ ...எங்கடை ஆட்களும் வெளிநாடு என்றவுடனே இழிப்பினம் ....ஆனால் இப்போ கொஞ்சம் அலர்ட்டா இருக்கினம் 
உது பெண்ணிண்ட பக்கம் பிளான் பண்ணி செய்த விளையாட்டு ...தங்கடை பிள்ளையின்ட வாழ்க்கையை சீரழிக்க முயற்சித்த பேர்வழிக்கு கொடுத்த அல்வா ...அவங்களால் முடிந்த ஆப்பை சொருகி இருக்கினம் 
 
இப்படியான ஆப்பு உங்கள் ஊரில் ஏன் ஊரில் நிறைய பேருக்கு வைத்து இருக்குறார்கள் மாறி லண்டனில் உள்ளவர்கள். பெண் எடுத்து 

 அதில் பாதிக்கப்பட்ட நம்ம சனங்களின் புலம்பலைதான் நான் இங்கே சொல்ல வந்தது  இதற்கு காரணம் அவர்களேதான் தான் பாஸ்  வெளிநாட்டு மோகம் அப்படி  நாலு போட்டோவை வெளிநாட்டில் இருந்து அவன் அப்டேட் பண்ணினால் இங்கே அதன் எதிரோலி தாங்கி கொள்ள முடியாது. 

எனது நண்பன் காதலித்த பெண்  ஒரு லண்டன் அங்களுக்கு பிரித்து கட்டாய கலியாணம் பண்ணி வைக்கப்பட்டது மன்னிக்கவும் வயது கூடியவர் ஒருவர் அவர்  ஒரு பிள்ளையை அவளுக்கு தானமாக கொடுத்து விட்டு போய்டார் இதுவரை ஆள் வரவில்லை அவளை அங்கே எடுக்கவும் இல்லை  ?

இதற்கு காரணம் என்ன என்று விசாரித்து பார்க்கும் போது மூத்த பிள்ளையையும் அங்கே அதாவது லண்டனில் கட்டி கொடுத்து விட்டது போல இளைய பிள்ளையையும் லண்டன் மாப்பிள்ளைக்கு கல்யாணம்  கட்ட நினைத்தது கடைசியில் பிள்ளைக்கு ஆப்பு இது யாரால் ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/17/2016 at 5:34 PM, விசுகு said:

யுத்தம் காரணமாக

ஓடத்தொடங்கிய ஒரு இனம்

பிச்சை எடுக்காமல்

வீதியில் நிற்காமல்

அடுத்தவனிடம் புடுங்கி தின்னாமல்

எந்த வேலையாவது செய்து

தன் காலில் நின்று வாழ்வதில் உங்களுக்கு என்ன சிக்கல்??

நன்றாக சொன்னிர்கள்.

பிச்சை எடுக்காமல்: Doll money யும் பிச்சைதான்.

அடுத்தவனிடம் புடுங்கி தின்னாமல்: எங்கடை ஆக்கள் செய்யாத திருகுதாளம் ஏதாவது சொல்லுங்கள் பாப்பம். local  bbc radio ல் தலைப்பு செய்தியாக 2007ல் சொன்னவங்கள் இலங்கை தமிழன்தான் கிரெடிட் காட் திருட்டில் முதலிடம் என்று.

பொருளாதார அகதியாக வெளிநாடு வந்த எங்கள் ஆக்கள் எத்தனை பேர் அங்குள்ள போராளிகளுக்கு உதவுகிறார்கள். சொல்லுங்கள் பாப்பம்.

2008 ல் வெளிநாட்டு தமிழனிடம் இறுதி போருக்கு வேண்டிய காசுக்கு என்ன நடந்தது. காசு வேண்டியர்களிடம் கேடடால் தலைவர் வந்து கேடடால்தான் கணக்கு காடடுவினமாம். ஏனெனில் தலைவர் வர மாடடார் என்று எல்லோருக்கும் தெரியும். என் உறவும் இயக்கத்தில் இருந்த்தது. அவன் இயக்கத்துக்கு போன நாளில் இருந்து என் அம்மா அப்பா, ஏன் நான்கூட சந்தோசத்தை இழந்தோம். 

நானும் காசு கொடுத்தேன். அதுதான் உரிமையுடன் கேட்க்கிறேன்.

விடுதலை புலிகளின் பினாமி சொத்துக்களை வெளிக்கொணர்ந்தாலே  போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்கும் அரச கொடுப்பனவுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். 

விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் Brexit இல் தாக்கம் செலுத்தும் அளவில் உள்ளதா? 

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தங்கள் லெவலுக்கு தான் சிந்திக்கிறார்கள் என்று தெரிகிறது. 

கக்கூஸ் கழுவுவது என்றவுடன், அவர்களது மனதில், ஊரில் உள்ள, கரப்பான் பூச்சியுடன் கூடிய, மூலையில் விளக்குமாறு உள்ள, நாத்தம் பிடித்த ஒன்று தான் மனதிலே வரும்.

உண்மையில் தமிழர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். பிரித்தானியாவின் சகல பல்கலைக் கழகங்களிலும் முத்திரை பதித்து விட்டார்கள். 

தரம் மிக்க கிராமர் பாடசாலைகள் எதிலும் தமிழர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

பத்திரிகளைகள், முன்னர் சீனர், ஆசிய இந்தியர் என திறமை வரிசையில் தரப் படுத்திய நிலை மாறி, சீனர், இலங்கைத் தமிழர் என தரப் படுத்தும் நிலை வந்து விட்டது.

லைக்கா, லேபாரா என்ற கோடிகளில் புரளும் வியாபாரத்தினைக் கட்டி எழுப்பியவர்களும் இந்த அகதித் தமிழர்கள் தான்.

இதை விடுத்து, பெனிபிட் எடுப்பவர்கள் குறித்தும், ஊரில சுத்துமாத்துக் கலியாணம் பண்ண வந்த சில்லறைகள் குறித்தும் பேசுவது சரியானது தானா?

நல்ல மாடு உள்ளூர்ல விலைப்படும் என்பது போல, தரமான மாப்புளைக்கு, பொண்ணு லண்டனிலே, கனடாவில் கிடைக்கும். ஒன்றுமே இல்லாதது தான் பந்தா விட்டு அங்கே வருவார்.

நாய்க்கு நடுக்கடலில் நக்குத் தண்ணி என்பது போல, 50 கோடி சந்தையினை பாராது, 6  கோடி சந்தைக்குள் முடங்க வேண்டுமா என்பது கமரோன் வாதம். இங்குள்ளவர்கள் வெளியேற நேர்ந்தால், அங்குள்ளவர்கள் திரும்ப வேண்டும். இதனால் ஸ்பெய்ன், போர்த்துக்கல் போன்ற நாடுகளில் குடியேறிய பல பிரித்தானியர்கள் வாக்களிக்க வருகிறார்கள்.

இப்படித் தான் ஜனனி ஜனநாயகம் 2009ல் ஐரோப்பிய தேர்தலில் போட்டி இடட போது,லண்டன் தமிழர் வாக்கே போதும் வெல்ல என்றாரக்ள். 50,000 மட்டும் பெற்று வெல்ல முடிய வில்லை. அதே போல தமிழர் வாக்குகள், வெற்றியினை நிர்ணயிக்க முடியாது.

இதனை புரியாது.... பெனிபிட் எடுக்கிறார்கள், என தனக்குத் தெரிந்த சில்லறை லெவலுக்கு, ஒருவர் காரணம் சொன்னார் என்றால், அதை இங்கு வந்து எம்பீ தம்பி போடலாமா?

இங்கு பெனிபிட் கொடுப்பதன் நோக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சகலரிடமும் பணவோட்டம் இருக்க வேண்டும் என்பதால் தான்.

இந்தியாவை, சீனாவை தம்முடன் வியாபாரம் செய்ய வைத்து  பணவோட்டத்திணைக் கூட்டி, இன்று தமது கார்களை, விமானங்களை, ஆப்பிள் போன் களை விட்கிறார்களே... அந்த தந்திரம்..

முதலில் உயர்வாக சிந்திக்கப் பழகுவோம்.... சில்லரைத்தனமாக பேசுபவர்களை மறந்து, நகர்வோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, M.P said:

நன்றாக சொன்னிர்கள்.

பிச்சை எடுக்காமல்: Doll money யும் பிச்சைதான்.

அடுத்தவனிடம் புடுங்கி தின்னாமல்: எங்கடை ஆக்கள் செய்யாத திருகுதாளம் ஏதாவது சொல்லுங்கள் பாப்பம். local  bbc radio ல் தலைப்பு செய்தியாக 2007ல் சொன்னவங்கள் இலங்கை தமிழன்தான் கிரெடிட் காட் திருட்டில் முதலிடம் என்று.

பொருளாதார அகதியாக வெளிநாடு வந்த எங்கள் ஆக்கள் எத்தனை பேர் அங்குள்ள போராளிகளுக்கு உதவுகிறார்கள். சொல்லுங்கள் பாப்பம்.

2008 ல் வெளிநாட்டு தமிழனிடம் இறுதி போருக்கு வேண்டிய காசுக்கு என்ன நடந்தது. காசு வேண்டியர்களிடம் கேடடால் தலைவர் வந்து கேடடால்தான் கணக்கு காடடுவினமாம். ஏனெனில் தலைவர் வர மாடடார் என்று எல்லோருக்கும் தெரியும். என் உறவும் இயக்கத்தில் இருந்த்தது. அவன் இயக்கத்துக்கு போன நாளில் இருந்து என் அம்மா அப்பா, ஏன் நான்கூட சந்தோசத்தை இழந்தோம். 

நானும் காசு கொடுத்தேன். அதுதான் உரிமையுடன் கேட்க்கிறேன்.

விடுதலை புலிகளின் பினாமி சொத்துக்களை வெளிக்கொணர்ந்தாலே  போதும்.

உங்களுக்கு வேறு ஏதோ பிரச்சினை

எதை எதையோ முடிச்சுப்போடுகிறீர்கள்

புலிகள்  எதற்காக இதற்குள்??

உங்களுடைய வக்கிர கருத்தாடல்களுக்கும் அவர்கள் தான் தேவை போலும்.

உங்களது எழுத்து மிக மிக மட்டமானது..

ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய அரசின் உதவித்திட்டங்களுக்கமைய 

உதவிகளைப்பெற்றுக்கொள்வது பிச்சை என்றால்.....

இலவசக்கல்வி

இலவச மருத்துவம்

இவையும் பிச்சை தானே

இவை எல்லாவற்றையும் நீங்கள் பிச்சை எடுத்தீர்கள் என என்னாலும் சொல்லமுடியும்.

சர்வதேசத்தில்

பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வேலை இடங்களிலும்

கட்டுப்பாடானவர்கள் நேர்மையானவர்கள் மரியாதையானவர்கள் கடினஉழைப்பாளிகள் என 

தமிழுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கியவன்  ஈழத்தமிழன்

ஈழத்தமிழரென்றால் வேலை கொடுக்கலாம் எனும் நிலையை உருவாக்கியவன் ஈழத்தமிழன்

நான் 90 வீதமானவர்களுடன் வாழ்கின்றேன்

நீங்க....?

அது தான் உங்க மனம் இப்படி கோணாலாக போகுது போலும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு , சிறந்த மனநல வைத்தியரை பார்ப்பதே தீர்வு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

இதற்கு , சிறந்த மனநல வைத்தியரை பார்ப்பதே தீர்வு

அதே.....

இல்லாதுவிடில் நாங்க கெதியில் போகவேண்டி வரலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

அதே.....

இல்லாதுவிடில் நாங்க கெதியில் போகவேண்டி வரலாம்..

சேர்ந்து இருக்க, வெல்ல வாக்களிக்காவிடில்,  தனியே செல்ல என்று வென்றவர்கள் அடுத்த வெடி நமக்கு வைக்க தயாராவர்கள்.!

நம்மூரில் இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமை பறித்த போது, 
அமைதியாக இருந்ததால், பின்னர் 
அதே கத்தியை எம்மீது சொருகினரே... அதே போல் தான் நிகழும்!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

உங்களுக்கு வேறு ஏதோ பிரச்சினை

பிரச்சனை வேறை ஒன்டும் இல்லை.தான் படிப்பால் இங்கு வர என்னைப் போல ஆக்கள் எழுதப்படிக்கத் தெரியாமல் இங்கு வந்து நாலு காசு பார்ப்பது தான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றுதான் வாக்குப்போடவுள்ளேன். அப்படியாவது கமரோனை ஆட்சியிலிருந்து அகற்றலாம் என்ற நப்பாசைதான், வேறு ஒரு காரணமுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நந்தன் said:

இதற்கு , சிறந்த மனநல வைத்தியரை பார்ப்பதே தீர்வு

நிங்கள் சொல்வது உண்மைதான். எனக்கு மண்டை பிழைதான்.

ஏனென்றால் என் உறவு நனறாக படிக்க கூடியது. நாட்டுக்காக போராட போய் இப்ப நாடும் இல்ல. தனக்கு வாழ்கையும் இல்லை. அவனைவிட படிப்பில் எவ்வளவோ குறைந்த நண்பர்கள் எல்லாம் இப்போ வைத்தியர் எஞ்சினியர் என்று இருக்கும் போது அது ஊனப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்குது. நல்லா படிக்க வைக்க விரும்பிய பெற்றோர்களுக்கு சுமையாக.

போராட்டத்தை காட்டி வெளிநாடு போனதுகள் போராளிள் அவர்களின்6 வாழ்க்கைக்கு உதவி செய்வதை விடுத்து படம் காட்டிக்கொண்டு திரியுதுகள்.

19 hours ago, MEERA said:

பிச்சைக்கும் அரச கொடுப்பனவுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். 

விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் Brexit இல் தாக்கம் செலுத்தும் அளவில் உள்ளதா? 

விடுதலை புலிகளின் பினாமி சொத்துகளை கலைத்து அதை போரால் பாதிக்க பட்டவர்களுக்கு பாவிச்சால் என்ன என்பது தான் என் கேள்வி?

விடுதலை புலிகளின் பினாமி சொத்துகளை வைத்து எத்தனை பேர் வாழுகுதுகள்? பெயர் சொல்ல விருப்பம் இல்ல.

தலைவர் வரவும் மாட்டார் என்ற தைரியம் தான்?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, M.P said:

ஏனென்றால் என் உறவு நனறாக படிக்க கூடியது. நாட்டுக்காக போராட போய் இப்ப நாடும் இல்ல. தனக்கு வாழ்கையும் இல்லை. அவனைவிட படிப்பில் எவ்வளவோ குறைந்த நண்பர்கள் எல்லாம் இப்போ வைத்தியர் எஞ்சினியர் என்று இருக்கும் போது அது ஊனப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்குது. நல்லா படிக்க வைக்க விரும்பிய பெற்றோர்களுக்கு சுமையாக.

உங்கள் தம்பியையே அது இது என ஒருமையில் விளிக்கும் உங்கள் மனப்பான்மை நன்றாக இருக்கு:rolleyes:

சுமையாக கருதாமல் உழைப்புக்கு வழிகாட்ட பல வழிகள் உண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

உங்கள் தம்பியையே அது இது என ஒருமையில் விளிக்கும் உங்கள் மனப்பான்மை நன்றாக இருக்கு:rolleyes:

சுமையாக கருதாமல் உழைப்புக்கு வழிகாட்ட பல வழிகள் உண்டு

அப்படி நினைத்து எழுதவில்லை. எனது உறவு ஆணோ பெண்ணோ என்பதை இங்கு காட்டி கொள்ள விரும்பவில்லை.

நான் என் தம்பியோ தங்கையோ என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/06/2016 at 7:34 AM, M.P said:

விடுதலை புலிகளின் பினாமி சொத்துக்களை வெளிக்கொணர்ந்தாலே  போது

ஒரே குழப்பமா இருக்கிறது எம்பி இங்கே சொத்து பிரச்சனையா அல்லது  அரசாங்கத்திடம் காசு பெறுவது பிரச்சனையா

ஆனால் அங்கே இருக்கும் இதர நாட்டு க்காரன் இந்த சலுகைகளையெல்லாம் பெற்று கொள்ளும்  போது நாம் மட்டும் ஏன்  விட்டு கொடுப்பான்? 

அண்ணை..இப்படி ஆறு மாசத்துக்கு ஒரு தரம் உங்கட வைத்தெரிச்சலை கொட்டி திரி ஆரம்பிக்காமல் நீங்களும் உழைச்சு அவர்களை போல வசதியா வாழ முயற்சிக்கலாமே? 
இப்ப அங்கால இன்னொருவர் வந்து அகதி தமிழன் ஊரை அடிச்சு உலையில போடுறான் என்று பாட ஆரம்பிச்சிடுவார். 
உங்களை போன்றவர்களுக்கு உண்மையான பிரச்சனை ஊரில் வேறு மாதிரி இருந்திருக்க வேண்டியவர்கள் எல்லாம் இங்கு வந்து எம்மை விட வசதியாக இருக்கிறார்கள் என்ற பொறாமை தான். இந்த வைத்தெரிச்சலை மறைக்க அகதி தமிழன் டோல் காசு திருடன் என்று வியாக்கியானங்கள் வேற.
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

அப்படி நினைத்து எழுதவில்லை. எனது உறவு ஆணோ பெண்ணோ என்பதை இங்கு காட்டி கொள்ள விரும்பவில்லை.

நான் என் தம்பியோ தங்கையோ என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை.

On ‎20‎/‎06‎/‎2016 at 10:04 AM, M.P said:

நன்றாக சொன்னிர்கள்.

பிச்சை எடுக்காமல்: Doll money யும் பிச்சைதான்.

அடுத்தவனிடம் புடுங்கி தின்னாமல்: எங்கடை ஆக்கள் செய்யாத திருகுதாளம் ஏதாவது சொல்லுங்கள் பாப்பம். local  bbc radio ல் தலைப்பு செய்தியாக 2007ல் சொன்னவங்கள் இலங்கை தமிழன்தான் கிரெடிட் காட் திருட்டில் முதலிடம் என்று.

பொருளாதார அகதியாக வெளிநாடு வந்த எங்கள் ஆக்கள் எத்தனை பேர் அங்குள்ள போராளிகளுக்கு உதவுகிறார்கள். சொல்லுங்கள் பாப்பம்.

2008 ல் வெளிநாட்டு தமிழனிடம் இறுதி போருக்கு வேண்டிய காசுக்கு என்ன நடந்தது. காசு வேண்டியர்களிடம் கேடடால் தலைவர் வந்து கேடடால்தான் கணக்கு காடடுவினமாம். ஏனெனில் தலைவர் வர மாடடார் என்று எல்லோருக்கும் தெரியும். என் உறவும் இயக்கத்தில் இருந்த்தது. அவன் இயக்கத்துக்கு போன நாளில் இருந்து என் அம்மா அப்பா, ஏன் நான்கூட சந்தோசத்தை இழந்தோம்

நானும் காசு கொடுத்தேன். அதுதான் உரிமையுடன் கேட்க்கிறேன்.

விடுதலை புலிகளின் பினாமி சொத்துக்களை வெளிக்கொணர்ந்தாலே  போதும்.

உங்களுக்கு நீங்கள் எழுதுவதே என்னவென்று தெரியாதா? உங்கள் நிலை கவலைக்கிடம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.