Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் பலி

Featured Replies

விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் பலி
 
 

article_1466742395-accident.jpg-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், தாவடி காளி கோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது 17) என்ற மாணவனே உயிரிழந்தார்.

சைக்கிளில்; பாடசாலைக்குச் சென்ற மாணவனை வேகமாக வந்த பட்டா வாகனம் மோதித்தள்ளியது. இதில் மாணவன் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

- See more at: http://www.tamilmirror.lk/175429#sthash.H9tM2MiD.dpuf
  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரி மாணவன் விபத்திற்கு காரணம் டிமோ பட்டா அல்ல நிறுத்தப்பட்டடிருந்த ஹயஸ் வாகனமே.

வாகனத்தில் இருந்து இறங்கும் மனிதன் தம்மை அல்லது தமது சாரதியை தக்க வைத்துக் கொள்ளவே சைக்கிளை எடுத்து வந்து ஓரமாக்கிவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல நிற்கிறார்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அதிக போக்குவரத்து உள்ள பகுதியில் வாகனத்தை தான் தோன்றித்தனமாக நிறுத்தியதும்,  போக்குவரத்து நடைபெற்றுக்குக் கொண்டிருக்கும் பக்கத்தில் அந்த வாகனச் சாரதியே.... பக்க  கண்ணாடியை பார்க்காமல் கதவை திறந்ததால்,
எதிர்கால கனவுடன் பாடசாலை சென்ற மாணவனை கொலை செய்து விட்டார்கள்  பாவிகள்.
ஆம்... இது விபத்தல்ல, கொலை.

Edited by தமிழ் சிறி

அநியாயாச்சாவு. 

  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல்கள் அந்த மாணவனுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல். 

பெற்றோரின் கனவையும் தனது கனவையும் சுமந்த மாணவன் அனியாயமாகச் சவடைந்தது........... 

இதுபோன்ற அனியாயாச்சாவுகள் குறித்து அரசோ காவல்துறையோ கவலைகொள்ளாது. தமிழரென்பதால் பெரியவிடையமே இல்லை. ஆனால் குமுகாய நலன்விரும்பிகள் தத்தமது பகுதியின் வீதிகளின் வளங்களுக்கேற்ற நடைமுறைகளை மாநகர, நகர, பட்டணசபைகள் ஊடாக அமுலாக்க முன்வருவதனூடாக இதுபோன்ற சாவுகளைத் தடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயச் சாவு.... ஆழ்ந்த இரங்கல்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பர் செல் அடி காலங்களில் கூட இப்படி நாளும் சாவுன்னு ஊர் இருந்ததில்லை. இப்ப தினமும் அநியாயச் சாவுகள். கவனயீனமான நிர்வாக முறைமைகளும்.. காத்திரமற்ற காவல்துறையும்.. நீதியை நாட்ட விரும்பினாலும் நாட்ட முடியாமல் இயங்கும் நீதித்துறையும்.. எமது மக்களுக்கு ஆக்கிரமிப்பு அளித்த பரிசுகளாகி விட்டன. :rolleyes:tw_angry:

மத்தியின் மைந்தனுக்கு ஆழ்ந்த இரங்கலும் கண்ணீரஞ்சலியும். 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை கனவுகளுடன் இந்தப் பிள்ளை வாழ்ந்திருக்கும்.
இரு மனிதர்களின் கவனக்குறைவால் இப்படி ஒரு விபத்து நடந்தது என்று நம்பமுடியவில்லை.
ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டம் ஒழுங்குகள் கடைப்பிடிக்காமையினால் ஒரு மரணம்....
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்
கதவைத் திறந்த சாரதி கைது
 

article_1467194995-bbbbbbbbbbbbb.jpg

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கருகில் வானின் கதவைத் திறந்தமையால் விபத்துக்குள்ளாகிய மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், வானின் கதவைத் திறந்த வானின் சாரதியை, இன்று புதன்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபரை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிவன் கோயிலுக்கு அருகில் கடந்த 23ஆம் திகதி, சிறியரக வாகனத்துடன் மோதுண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்கும் தாவடி, காளிகோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன்
(வயது 17) என்ற மாணவன் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பில் சிறியரக வாகனச் சாரதியைக் கைது செய்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட போது, விபத்து நடைபெற்ற இடத்தில் அமைந்துள்ள கடையொன்றின் சி.சி.டி.வி கமெரா பதிவு கிடைத்தது.

அதில், விபத்து இடம்பெற்ற காட்சியைப் பார்த்த போது, அந்தக் கடையின் முன்பாக நிறுத்தப்பட்ட வானொன்றின் கதவை, அந்த வானின் சாரதி சடுதியாக திறந்தவேளை, பின்னால் சைக்கிளில் வந்துகொண்டிருந்த மாணவன் வான் கதவுடன் மோதுண்டு, கீழே வீழ்ந்துள்ளமையும், அதன் பின்னரே, சிறியரக வாகனம் மாணவனை மோதியமையும் தெரியவந்தது.

இதனையடுத்து, வானின் இலகத்தகட்டு இலக்கத்தை வைத்து, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினூடாக வானைச் செலுத்தி வந்த புத்தளத்தைச் சேர்ந்த நபரை இனங்கண்ட பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையம் வந்த நபரை விசாரணை செய்த பொலிஸார், விசாரணை முடிந்த பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்துள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

சிறியரக வாகன சாரதி, ஏற்கெனவே யாழ்ப்பாண நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/175848/கதவ-த-த-றந-த-ச-ரத-க-த-#sthash.6G25nshG.dpuf

Edited by நவீனன்

இரண்டு வாகன சாரதிகளும் பாரிய விதி மீறலைச் செய்துள்ளனர்.

குறுகிய பாதையில் நிற்கும் ஒரு வாகனத்தை, அதுவும் முன்னால் செல்லும் துவிச்சக்கர வாகனத்தைப் பற்றி கவலைப்படாமல் அதிக வேகத்தில் கடக்க முயன்ற பட்டா ரக வாகன சாரதியும் தவறு செய்தவர் ஆகின்றார்.

இது சாதாரண விபத்து என்பதற்கு அப்பால் கொலை என்றே கருத வேண்டும். மாணவர் குடும்பத்துக்கு குறைந்தது 1 கோடி ரூபா நஷ்ட ஈட்டை இரண்டு வாகன சாரதிகள் / உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.

அப்போது தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப் பையனின் ஆத்மா சாந்தியடையட்டும்...வாகனத்தை பிழையான திசையில் பாக் பண்ணினதும் பத்தாமல்,யார் வருகிறார்கள் என பார்க்காமல் கதவைத் திறந்த டிரைவரைத் தான் தூக்கில போடோனும்...இந்த வீடியோவை அந்தப் பெற்றோர்கள் பார்த்தால் எப்படி துடிச்சுப் போவார்கள்!

  • தொடங்கியவர்

யாழில் உள்ள பிரபல கல்லூரியால் நிராகரிக்கப்பட்ட 17 வயது மாணவன் அமரர் நிரோஜ் தேவராஜா என்பவரை யாழ் மத்திய கல்லூரியில் இணைத்து கற்பிக்க முன்வந்தமை கல்லூரியின் சிறந்த நற்செயல்.

 

 

அதே நேரம் முதல் நாளிளேயே அவன் இறந்த விட்ட அவலம் நெஞ்சைப் பிளந்து விட்டது.

அவர்களும் பாடசாலையில் அவனை இணைத்திரா விட்டால் யாழ் மத்திய கல்லூரி மாணவன் என்ற அடையாளம் இல்லாமல் அநாதையாக இறந்திருப்பான்.

ஆனால் விதி, உயர்தரத்தில் முதல்நாளே படிக்கச் சென்ற அவன் நேற்றுடன் இந்த உலகை விட்டுச் செ(வெ)ன்று விட்டான்.

பாடசாலை மாணவர்கள் குழப்படி செய்கிறார்கள் என்று பாடசாலைகள் ஒதுக்கி விட்டால், அவர்களை வழிநடத்தி நல்ல மாணவர் சமூகத்தை உருவாக்கித் தருவது யார்?

பெயருக்கும் புகழுக்கும் பாடசாலைகளை இயக்குவதால் சமூகத்தில் விளையும் நன்மை எதுவுமில்லை.

அந்த மாணவன் யாரோ செய்த குற்றத்துக்காக வகுப்புக்கு சென்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டான்.

நான் அறிந்த வரையில் அவன் பெரிய குற்றங்கள் எதுவும் புரியவில்லை.

இதை ஒரு காரணமாக வைத்து O/L வரை படித்த அந்த மாணவனை உயர்தர வகுப்பில் கற்க பாடசாலை அனுமதிக்கவில்லை.

தாயார் கதறியழுது கெஞ்சி இரந்து கேட்டும் அந்தப் பாடசாலைச் சமூகம் அவனுக்கு பாடசாலையில் கற்க இடம் தரவில்லை.

இறுதியாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அந்த மாணவனுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது.

அடுத்த (முதல்) நாள் ஆசையோடு பாடசாலைக்குச் செல்லும் வழியில்,

யாழ் நகருக்கு அண்மையில் நின்ற வாகனம் ஒழுங்கு முறைகளுக்கு முரணாக அவன் வருவதை அவதானிக்காது முன்கதவைத் திறக்கவும் சைக்கிளில் வந்த மாணவன் கதவுடன் மோதிக் கீழே விழுந்த போது பின்னால் வேகமாக வந்த வாகனம் அவன்மீதேறி அடித்துகொன்று விட்டு அப்பால் நின்றது.

பெறுபேறுகளுக்காக பாடசாலை நடாத்துவதை விட

வாழ்வில் தடம் புரள முற்படும் மாணவர்களை அனைத்து ஆரோக்கியமான மாணவர்களை பாடசாலைகள் செய்ய மறுத்து வருகின்றனவா?

அந்த மாணவன் அந்தப் பாடசாலையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தால், அவன் யாழ் நகருக்கு சென்றிருக்கவும் மாட்டான், இறந்திருக்கவும் மாட்டான்.

இனி என்ன செய்வது, குற்றுயிராக 3 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் துடிதுடித்து இறந்து போனான்.

கடைசி நேரத்திலும் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவன் உயிர்காக்க தொடர்ந்து போராடினார்கள் என்பது மட்டும் ஆறுதல் தருகிறது.

அவன் இப்போது இந்தப் மனதமற்ற ஜட மனிதர்களின் போலி வாழ்வில் இருந்து மீண்டு நிரந்தர வாழ்வை அடைந்து விட்டான்.

உண்மையின் தரிசனம்
ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்

முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் முழுவதும் வாகன மயம் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டும் வாகனங்கள் கூடுதலாக வடக்கு கிழக்கில் விற்பனை ஆனால் இவர்கள் சட்ட முறையில் ஓட்டும் அனுமதி பத்திரம் பெறாமல் உள்ளால வாங்கி விடுகிறார்கள் இதனால் இவர்கள் ஒரு நிறைவான சாரதி கிடையாது உதாரணமாக கண்ணாடி பார்த்து வாகனத்தை செலுத்துவதில்லை இதனால் தான் கூடிய விபத்துகள் நடக்கின்றது. 

ஆழ்ந்த இரங்கல்கள் அம்மாணவனுக்கு 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.