Jump to content

கணவாய் மீன் வருவல்


Recommended Posts

கணவாய் மீன் வருவல்

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!ஓர் உண(ர்)வுப் பயணம்

 

p66.jpg‘உள்குத்து’ என்ற படத்தில் மீனவர்கள் சங்கத் தலைவரா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாகர்கோவிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் படபிடிப்பு நடக்குது. ஒரு நாள் படபிடிப்பின் போது, அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய் மீன் ஃபிரை, கிரேவி, கருவாடு, மாசி பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க. இது எனக்கு புதுஅனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃபிரெஷ் மீன் சாப்பிடும் போது அவ்வளவு டேஸ்டா இருந்தது.
கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே அலாதியானது. அவர்களிடம் அதை எப்படி சமைச்சாங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இதில் ‘கனவாய் மீன்’ ஃபிரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதை ‘கடம்பா மீனுன்னும் சொல்லுவாங்க. இந்த ரெசிப்பியைத்தான் இந்த முறை உங்களுக்குச் சொல்றேன்.

கனவாய் மீன் வறுவல்

தேவையானவை :
 கனவாய் மீன் - கால் கிலோ
 மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 பொட்டுக்கடலை மாவு - 2 கைப்பிடி அளவு
 கறிவேப்பிலை - ஒரு கொத்து
 சின்னவெங்காயம் - 2 கைப்பிடி அளவு
 பச்சை மிளகாய் - 6
 எண்ணெய் - ஒரு குழிகரண்டி அளவு
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைப்பழம் - 1  (சாறு எடுக்கவும்)
 மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்

p66a.jpg

செய்முறை:
மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு  மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது....!

கணவாயை இதுபோல் வட்டம் வட்டமாக வெட்டி முதல் தேங்காய்ப்பாலும் சிறிது மிளகாய்த் தூளும் உப்பும் போட்டுப் பிரட்டி அவித்துக் கொண்டுவர  பாலிலேயே எண்ணெய் அந்தர்யாமியாய் இருப்பதால்  அதிலேயே வத்தப் பொரித்து பின் வெங்காயம், ப. மிளகாய் , கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுக்க சூப்பரான சுவையாய் இருக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நன்றாக இருக்கின்றது....!

கணவாயை இதுபோல் வட்டம் வட்டமாக வெட்டி முதல் தேங்காய்ப்பாலும் சிறிது மிளகாய்த் தூளும் உப்பும் போட்டுப் பிரட்டி அவித்துக் கொண்டுவர  பாலிலேயே எண்ணெய் அந்தர்யாமியாய் இருப்பதால்  அதிலேயே வத்தப் பொரித்து பின் வெங்காயம், ப. மிளகாய் , கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுக்க சூப்பரான சுவையாய் இருக்கும்....!  tw_blush:

சுவியற்ற சமையலை பற்றி வெள்ளனவே தெரிந்திருந்தால் எண்ட பெண்டாட்டியாக்கி இருந்திருப்பேன்.

ஜஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஜீவன் சிவா said:

சுவியற்ற சமையலை பற்றி வெள்ளனவே தெரிந்திருந்தால் எண்ட பெண்டாட்டியாக்கி இருந்திருப்பேன்.

ஜஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். :grin:

இப்பவும் என்ன குறைஞ்சா போச்சுது

ஒருபால் திருமணம் நடக்கிறது தானே ?

ஆனால் என்ன..........சுவியிடம் ஒரு வார்த்தை கேளுங்கள் ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ யாம் வெயிட்டிங்...!  tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

சுவியற்ற சமையலை பற்றி வெள்ளனவே தெரிந்திருந்தால் எண்ட பெண்டாட்டியாக்கி இருந்திருப்பேன்.

ஜஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். :grin:

அடபாவி... இங்க என்ன நடக்குது..:grin:

1 hour ago, suvy said:

ஐ யாம் வெயிட்டிங்...!  tw_blush:

ஹாஹஹா இவர் இப்படிதான் எழுதுவர் என நினைத்தேன்..tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...

சூப்பரான கணவாய் மீன் வறுவல்

 

 
 

வார விடுமுறைகளில் வித்தியாசமாக என்ன சமையல் செய்யலாம் என்று யோசிப்பவர்கள் கணவாய் மீன் வறுவல் செய்து அசத்தலாம்.

 
 
 
 
சூப்பரான கணவாய் மீன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

கணவாய் மீன் - 300 கிராம்
இஞ்சி விழுது - 2 மேசைகரண்டி
பூண்டு விழுது - 2 மேசைகரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 15
தக்காளிப் பழம் - 1
எண்ணெய் - 2 மேசைகரண்டி
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த கணவாய் மீன் கலவையை போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)

* 20 நிமிடங்களில் கணவாய் வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த்தன்மை முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து டிரையாக, உதிரியாக வரும் போது கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.

* சுவையான கணவாய் மீன் பொரியல் ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேக்காரர், இலங்கையில இருந்து கொண்டு, பிரான்ஸ் பக்கமா நூல் விடுறார்... ஆ... காகா... :grin: 

Link to comment
Share on other sites

  • 2 months later...

கணவாய் மீன் வறுவல்!

 
DSC07945.JPG
 
கணவாய் மீன் வறுவல்
 
தேவையான பொருட்கள்
 
கணவாய் மீன்   - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
நெல் சீரகத் துர்ள் - 2 தே க
எண்ணை 
கடுகு உளுத்தம் பயிர்
கருவேப்பிள்ளை கொத்துமல்லி தழை.
 
(காரம், தொக்கு அதிகமாக வேண்டுமென்றால்  மேற்கொண்டு சேர்த்தக் கொள்ளங்கள்.)
 
 
DSC07905.JPG
 
முட்டை கணவா மீன்
 
DSC07908.JPG
 
நன்றாக ஆய்ந்து கழுவி எடுத்தக்கொள்ளுங்கள்.
 
DSC07909.JPG
 
 
ஒரு வாணலில் தலைகளை மட்டும் எடுத்து இரண்டாக வெட்டி (அப்படியே கூட போடலாம். எனக்கு பார்க்க பயமாக இருப்பதால் இப்படி இரண்டாக வெட்டிவிடுவேன்.... ) அதனுடன் கொஞ்சம் உப்பு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். 
      கனவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டிவிட வேண்டும். இப்படிக் கொட்டிவிடுவதால் கானவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விடும்.
      பிறகு இதைத் தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.
 
DSC07913.JPG
 
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை வெட்டி.... பின்பு
 
DSC07914.JPG
 
வாணலியை அடுப்பிலேற்றி காய்ந்ததும் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பயிரு போட்டுத் தாளித்துப்.... பின்பு
 
DSC07915.JPG
 
வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி... பின்பு
 
DSC07919.JPG
 
தக்காளி, பூண்டு விழுது, கறிவேப்பிள்ளை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து....
 
DSC07922.JPG
 
நன்றாக வதக்கியப் பின்பு...
 
DSC07923.JPG
 
அதில் கனவாய் மீன், ஏற்கனவே வேகவைத்த கனவா மீன் தலை, மிளகாய்த்துாள், நெல் சீரகப்பொடி, சேர்த்து....
 
DSC07927.JPG
 
நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும். இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும்.
 
DSC07934.JPG
 
நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழையைக் கிள்ளி போட்டு இறக்கி விட வேண்டும்.
 
DSC07945.JPG
 
கணவாய் மீன் வறுவல் ரெடி!
 
இதுவே கணவாய் மீன் வறுவல் செய்முறை. இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.
(மற்றபடி நல்ல சுவையான சைடிஷ்)
         நான் ஏன் இவ்வளவு விளக்கமாகச் சொன்னேன் என்றால்...... எனக்கு யாரும் இவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. .....(
 
நட்புடன்
அருணா செல்வம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிரட்டல்  இன்னும் செமையா இருக்கும்   இந்த ஊசிக்கணவாயில்:113_tongue:

Link to comment
Share on other sites

இந்த வார இறுதியில் செய்து பார்க்கத்தான் வேண்டும்

அது சரி, கணவாயை ஏன் கணவாய் மீன் என்று சொல்லினம்? அப்ப இறாலை இறால் மீன் என்றும், நண்டை நண்டு மீன் என்றும் மட்டியை மட்டி மீன் என்றும் தானே சொல்ல வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

இந்த வார இறுதியில் செய்து பார்க்கத்தான் வேண்டும்

அது சரி, கணவாயை ஏன் கணவாய் மீன் என்று சொல்லினம்? அப்ப இறாலை இறால் மீன் என்றும், நண்டை நண்டு மீன் என்றும் மட்டியை மட்டி மீன் என்றும் தானே சொல்ல வேண்டும்?

கிழக்கில் கணவாய் என்று தான் சொல்லுவோம் மீனை சேர்ப்பதில்லை  நிழலி 

இதில் ஊசிக்கணவாய், சாக்கு கணவாய் , ஓட்டுக்கனவாய்  மூன்று வகை உண்டு  இன்னும் இருக்கோ தெரியாது   படம் கிடைக்கும் போது இணைக்கிறேன் அவற்றின் வகையை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கணவாய் மீன் வறுவல்!

 
 
DSC07945.JPG
 
கணவாய் மீன் வறுவல் ரெடி!
 
(மற்றபடி நல்ல சுவையான சைடிஷ்)
         நான் ஏன் இவ்வளவு விளக்கமாகச் சொன்னேன் என்றால்...... எனக்கு யாரும் இவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. .

நல்ல சுவையான சைடிஷ், என்ற படியால்... ரேஸ்ருக்கு, இதை கட்டாயம்  செய்து பார்க்கத்தான் இருக்கு. 
அத்துடன்.... செய் முறையும், பட விளக்கத்துடன்.... அந்த மாதிரி பட விளக்கத்துடன் உள்ளதால், செய்வதில் பிரச்சினை   இராது.
நெல் சீரகத் தூள் என்று, ஒரு புது அயிட்டம் தான்... கொஞ்சம் பயப்பிடுத்துது.
குறிப்புக்கு... நன்றி, நுணாவிலான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இந்த வார இறுதியில் செய்து பார்க்கத்தான் வேண்டும்

அது சரி, கணவாயை ஏன் கணவாய் மீன் என்று சொல்லினம்? அப்ப இறாலை இறால் மீன் என்றும், நண்டை நண்டு மீன் என்றும் மட்டியை மட்டி மீன் என்றும் தானே சொல்ல வேண்டும்?

கணவாயை ஒருத்தரும் மீன் எண்டு சொல்லுறேல்லை....
இப்பத்தையான் குடிசைத்தொழில் ஊடகங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியாது....

தமிழிலை ஒரு இழவும் தெரியாது....

தலையங்கம் எப்பிடி எழுதோணும் எண்டும் தெரியாது.....

சிணுங்கினால் கதறல் எண்டு தலையங்கம் போடுதுகள்....

இண்டைக்கு பாவக்காயிலை ஆயிரம் நன்மைகள் எண்டு நியூஸ் போடுங்கள்......

இரண்டு நாள் கழிச்சு பாவக்காயில் இவ்வளவு ஆபத்து ஓஓவெண்டு நியூசை போடுங்கள்.  

பால் குடிச்சால் நூறுவருசம் வாழலாம் எண்டுங்கள்...

அங்காலை ஒரு தலையங்கத்திலை பால் குடிச்சால் கான்சர் வரும் எண்டு வெருட்டுங்கள் ...

பத்து வருசத்துக்குமுதல் நடந்த செய்தியை மூண்டு மணித்தியாலத்துக்கு முதல் நடந்தமாதிரி பிரம்மை படுத்துங்கள்.

இலகுவாக்கப்பட்ட தொழில்நுட்பம் பலவீனமாக பயன்படுத்தப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

நல்ல சுவையான சைடிஷ், என்ற படியால்... ரேஸ்ருக்கு, இதை கட்டாயம்  செய்து பார்க்கத்தான் இருக்கு. 
அத்துடன்.... செய் முறையும், பட விளக்கத்துடன்.... அந்த மாதிரி பட விளக்கத்துடன் உள்ளதால், செய்வதில் பிரச்சினை   இராது.
நெல் சீரகத் தூள் என்று, ஒரு புது அயிட்டம் தான்... கொஞ்சம் பயப்பிடுத்துது.
குறிப்புக்கு... நன்றி, நுணாவிலான். :)

சிறியர் அது நற்சீரகத்தூள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த சமையலை போட்டு நாவில் சுவையை   தூண்டிவிட்டீர் நூணாவிலன் இன்று  கடற்கரைக்கு போய் அப்போது பிடிபட்ட கணவாய் எடுத்து வந்து ஒரு பிரட்டல்  அவ்வளவுதான்  செம ருசி கணவாய் கணவாய் தான்   :113_tongue::113_tongue::113_tongue:

20170112_084453.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

இன்று  கடற்கரைக்கு போய் அப்போது பிடிபட்ட கணவாய் எடுத்து வந்து ஒரு பிரட்டல்  அவ்வளவுதான்  செம ருசி கணவாய் கணவாய் தான்

 

இங்க பாத்தியாக்கா புது செய்திய ???

C19Tr04VQAE5uyY.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

சிறியர் அது நற்சீரகத்தூள்

மீரா...... நற்சீரகத்துக்கு, இப்படியும் ஒரு பெயர் இருப்பது... இப்ப தான் தெரியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, முனிவர் ஜீ said:

 இந்த சமையலை போட்டு நாவில் சுவையை   தூண்டிவிட்டீர் நூணாவிலன் இன்று  கடற்கரைக்கு போய் அப்போது பிடிபட்ட கணவாய் எடுத்து வந்து ஒரு பிரட்டல்  அவ்வளவுதான்  செம ருசி கணவாய் கணவாய் தான்   :113_tongue::113_tongue::113_tongue:

20170112_084453.jpg

முனிவர் ஜீ... படத்தில் 22 கணவாய் உள்ளது.  அநேகமாக 4 கிலோவுக்கு மேல் வரும் என யூ கிக்கின்றேன்.
அங்கு... ஒரு கிலோ கணவாய், என்ன விலை போகுது. 
இங்கு... சென்ற ஆண்டு பிடித்த, ஒரு கிலோ  ஐஸ்  கணவாய் பெட்டி...  6 ஐரோ விற்கிறார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2017 at 3:43 PM, குமாரசாமி said:

 

இங்க பாத்தியாக்கா புது செய்திய ???

C19Tr04VQAE5uyY.jpg

சமைக்க ஓரளவு தெரியும் என்பதை கம்பனிக்கு அறியத்தருகிறேன் போதுமா   போட்ட படத்தை பாரும் ம்கும்tw_blush:

On 1/12/2017 at 10:31 PM, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... படத்தில் 22 கணவாய் உள்ளது.  அநேகமாக 4 கிலோவுக்கு மேல் வரும் என யூ கிக்கின்றேன்.
அங்கு... ஒரு கிலோ கணவாய், என்ன விலை போகுது. 
இங்கு... சென்ற ஆண்டு பிடித்த, ஒரு கிலோ  ஐஸ்  கணவாய் பெட்டி...  6 ஐரோ விற்கிறார்கள். :)

அண்ணே கணவாய் விலை கிலோ 600, 700 கிராக்கி ஏற்பட்டால் ஆயிரம் வரைக்கும் போகும் இது நான் போய் சும்மா எடுத்து வந்தேன்  சின்னது ஒரு கிலோ வரை இருக்கும் 
ஐஸ் கணவாய் சாப்பிட மாட்டேன்  அது எத்தனை நாட் களாக இருந்ததோ தெரியாது இங்கே கிழக்கில் மீன் வகை மலிவு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவு ஒன்று 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.