Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் (காணொளி இணைப்பு )

Featured Replies

தமிழ் - சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் (காணொளி இணைப்பு )

(ரி.விரூஷன்)

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவருவதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Ddf4d4f0dfdf.jpg

Fdfdsfdsf.jpg

யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு இடம்பெறுவதாகவும் இம்முறை வழமைக்கு மாறாக கண்டிய நடனத்துடன் குறித்த நிகழ்வு ஆரம்பமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கண்டிய நடனமே இம் மோதல் நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Fdf0dsffd.jpg

இதனால் குறித்த நிகழ்வும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக வளாகம் யுத்தக்களம் போல் காட்சியளிப்பதாகவும் தமிழ், சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கம்பி மற்றும் பொல்லுகளுடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மோதல் நிலைமை மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் கலகமடக்கும் பொலிஸார் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியளார்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9044

Update - யாழ். பல்கலையில் கலவரம்  : மாணவர்கள் பலர் காயம் , கலகம் அடக்கம் பொலிஸார் குவிப்பு (காணொளி இணைப்பு )

Published by Priyatharshan on 2016-07-16 15:37:24

(ரி.விரூஷன்)

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் கலவரமாகியுள்ளநிலையில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

13714429_10205234483096356_800321683_n.j

இதேவேளை, பல்கலைக்கழகத்திற்குள் இருந்து சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன சேதமடைந்துள்ளதாகவும் பல்கலைக்கழக கட்டடத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

13706243_10205234482736347_1075457308_n.

செய்திசேகரிப்பிற்காக குறித்த பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கும் மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

13689485_10205234483816374_815478713_n.j

http://www.virakesari.lk/article/9046

  • Replies 60
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டின் இனக்கலவரம் படித்த புண்ணிய்வாங்களால் தான் உருவானது.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்   மாணவர்கள்

நல்லாட்சியில் அனுபவிக்கப்போகிறார்கள்

நரிகளின் ஆட்சியின் கோரமுகத்தால் படிப்பை இழக்கப்போகிறார்கள்

புணர்வாழ்வுக்கு போகப்போகிறார்கள்...

ஆழ்ந்த அனுதாபங்கள்

இதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கொண்டாட ஒரு கூட்டமும் இருக்கு...

  • தொடங்கியவர்
யாழ். பல்கலைகழகத்தில் கைகலப்பு ஒருபீடம் மூடப்பட்டது
 
article_1468673547-jaffnaAA.jpgயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே இன்றுச் சனிக்கிழமை (16)  மாலை கைகலப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்விலேயே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மாணவர் குழுவுக்கும் சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த மாணவர் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே கைகலப்பாக மாறிவிட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பல்கலைக்கழக விஞ்ஞானப்பீடத்துக்கு தெரிவான மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு இன்றுச் சனிக்கிழமை இடம்பெற்றது.

புதிய மாணவர்களை வரவேற்கும் போது கண்டிய நடனம் ஆடி வரவேற்க வேண்டுமென பெரும்பான்மையின மாணவர்களும், இல்லையில்லை நாதஸ்வரத்துடன் மேளம் கொட்டியே வரவேற்க வேண்டுமென சிறுபான்மையின மாணவர்களும் முரண்பட்டுக்கொண்டுள்ளனர்.  

இந்த முரண்பாடே இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து பெரும்பான்மையின மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அம்மாணவர்களை

விடுதிகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரையிலும் இந்தப்பீடத்தை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/177202/ய-ழ-பல-கல-கழகத-த-ல-க-கலப-ப-ஒர-ப-டம-ம-டப-பட-டத-#sthash.VwXMYY0o.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:
யாழ். பல்கலைகழகத்தில் கைகலப்பு ஒருபீடம் மூடப்பட்டது

article_1468673547-jaffnaAA.jpgயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே இன்றுச் சனிக்கிழமை (16)  மாலை கைகலப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்விலேயே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மாணவர் குழுவுக்கும் சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த மாணவர் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே கைகலப்பாக மாறிவிட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரு இனங்களுக்கிடையே ஆன பெரும் முரண்பாட்டை

இரு குழுக்கள் சார்ந்ததாக பாவிப்பதே இன்றைய அத்தனை கொடுமைகளுக்கும் காரணம்..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் பின் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்பட்டு வந்துள்ளன. அதற்கு உடந்தையாக தமிழ் நிர்வாகிகள் சிலரும் இருந்துள்ளனர். அதன் நோக்கம் இன்று நிறைவேறி இருக்கிறது.

தமிழ் மாணவர்கள் தென்னிலங்கைக்கு படிக்கப் போக வேண்டிய கட்டாயம் ஒன்றிருந்தது. காரணம் சரியான பீடங்கள் யாழ் மற்றும் கிழக்கில் இல்லாமை. சிங்கள மாணவர்களுக்கு அந்தத் தேவையே இருக்கவில்லை. மாறாக சில கற்கைநெறிகளைப் புகுத்தி.. சிங்கள மாணவர்களை இங்கே வேண்டும் என்றே அனுப்பி வைத்தனர்.

அதனை அப்பவே கண்டித்துத் தடுத்திருந்தால்..இந்த நிலை வந்திருக்காது. அப்பவே யாழ் களத்தில் இது தொடர்பில் கருத்தாடல் இடம்பெற்றிருந்தது. இந்த ஆபத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இன்று அது நிஜமாகி இருக்கிறது. 

சிங்களவனின் எல்லா நடவடிக்கைகளும் மொத்த இலங்கையையும் சிங்கள மயமாக்குவது தான். அதற்கு யாழ் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் விதிவிலக்கல்ல. :rolleyes:

  • தொடங்கியவர்
கைகலப்பு...
 
16-07-2016 07:13 PM
Comments - 0       Views - 110

article_1468676656-IMG_2445.JPG

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே இன்றுச் சனிக்கிழமை (16)  மாலை கைகலப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

article_1468676668-IMG_2408.JPGarticle_1468676676-IMG_2405.JPGarticle_1468676684-IMG_2393.JPGarticle_1468676693-IMG_2366.JPGarticle_1468676700-image1.JPGarticle_1468676707-image2.JPG

(படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)

- See more at: http://www.tamilmirror.lk/177204/க-கலப-ப-#sthash.RebU4nap.dpuf
  • தொடங்கியவர்
யாழ். பல்கலை மாணவ குழுக்கள் மோதலையடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது: விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற உத்தரவு
2016-07-16 22:03:07

(மயூரன்)

யாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். இம்மோதலையடுத்து யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்க்கும் நிகழ்வில் தமிழ் கலாசார முறைமையையா  சிங்கள கலாசாரத்தின் படி கண்டிய நடனத்தையா பின்பற்றுவது என்பது தொடர்பான முரண்பாடே இம் மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

 கண்டிய நடனத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானதையடுத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது பலர் காயமடைந்தனர்.

17994jaffna-university-6000.jpg

இம்மோதலையடுத்து  பல்கலைக்கழக வளாகத்தில்  பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகளிலில் இருந்த மாணவர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

இதையடுத்து, தூர பிரதேசங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் திடீரென இரவு நேரத்தில் எங்கு செல்வது எனத் தெரியாமல் உடமைகளுடன் பல்கலைக்கழக சூழலில் நின்றுகொண்டிருந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=17994#sthash.qdoenvFR.dpuf
2 hours ago, nedukkalapoovan said:

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் பின் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்பட்டு வந்துள்ளன. அதற்கு உடந்தையாக தமிழ் நிர்வாகிகள் சிலரும் இருந்துள்ளனர். அதன் நோக்கம் இன்று நிறைவேறி இருக்கிறது.

தமிழ் மாணவர்கள் தென்னிலங்கைக்கு படிக்கப் போக வேண்டிய கட்டாயம் ஒன்றிருந்தது. காரணம் சரியான பீடங்கள் யாழ் மற்றும் கிழக்கில் இல்லாமை. சிங்கள மாணவர்களுக்கு அந்தத் தேவையே இருக்கவில்லை. மாறாக சில கற்கைநெறிகளைப் புகுத்தி.. சிங்கள மாணவர்களை இங்கே வேண்டும் என்றே அனுப்பி வைத்தனர்.

அதனை அப்பவே கண்டித்துத் தடுத்திருந்தால்..இந்த நிலை வந்திருக்காது. அப்பவே யாழ் களத்தில் இது தொடர்பில் கருத்தாடல் இடம்பெற்றிருந்தது. இந்த ஆபத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இன்று அது நிஜமாகி இருக்கிறது. 

சிங்களவனின் எல்லா நடவடிக்கைகளும் மொத்த இலங்கையையும் சிங்கள மயமாக்குவது தான். அதற்கு யாழ் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் விதிவிலக்கல்ல. :rolleyes:

இது சிங்களவனுக்கு மண்டையில் நன்றாக உரைத்து இருக்கும் , இன்னமும் மே 2009 இல் தான் நிக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

1995 இல் இருந்து எதை விதைத்ததோ அதை அறுவடை செய்ய தொடங்கியிருக்கிறது.

இதெல்லாம் தொடக்கம் தான்.

Edited by நியானி
மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துன்பியல் நிகழ்வு.ஆனால் தாயகத்தில் ஒரு சுமுகமான நிலமை வரக் கூடாது என்று நினைக்கும் சகல தரப்பிற்கும் கொண்டாட்டம'.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆட்சிக்காலத்தில் கூட நடக்காத நிகழ்வு நரி சம்சும் கோஸ்டிகளின் நல்லாட்சிக்காலத்தில் நடக்கிறது. தமிழர்களின் கலாச்சராத் தலைநகரில் சிங்களவர்களின் கண்டிய நடனமா?இன ஒற:றுமை நல்லாட்சி எப்படி வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அதே பாணியில்( தங்கள் கைகளை கீறி இரத்தம் வருவித்து  தென் இலங்கைக்கு செல்லுதல்)40 வருடங்களின் பின்பு செய்கின்றார்கள் ...மாணவர்களிடேயே புரிந்துணர்வு ,நல்லிணக்கம் ஏற்படவில்லைஎன்றால் எப்படி சாதாரணமக்களிடம்  இதை எதிர்பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மாணவர்களை கண்டிய நடனமாடும் படி பின்னால் இருந்து யாரோ செயற்பட்டுள்ளார்கள்(சில வேளை ராணுவம்). முஸ்லிம் பகுதியில் உந்த கண்டிய நடனத்தை ஆடச்சொல்ல்லுங்கள் பார்க்கலாம். சிங்களவர்கள் ஒன்றுக்கு பத்து தரம் யோசிப்பார்கள். சிங்கள பல்கலைகளகத்தில் எங்காவது பரதநாட்டியம் ஆடப்பட்டதா??

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தாயகத்தில் தமிழன் எல்லாத்தையும் சிங்களவனிடம் கொடுத்திட்டு அம்மணமா நிற்பதை தான்.. சகஜ நிலை என்று விரும்புகிறார்கள் போலும். 

தென்னிலங்கை எந்தப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் கலாசாரப்படி எதுவும் நடத்தப்படுவதில்லை. காரணம் அங்கு படிப்பது அதிகம் பெரும்பான்மை சிங்களவர்கள். ஆக யாழிலும் கிழக்கிலும் தான் தமிழ் கலாசாரத்தை மாணவர்கள் அறியவும் நிகழ்வுகளில் கடைப்பிடிக்கவும் முடிகிறது. அதையும் சிறுபான்மை சிங்கள மாணவர்கள் தடுப்பது எந்த வகையில் நியாயம். அப்படி சுமூக நிலை விரும்புவர்கள் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கண்டிய நடனத்தோடு தமிழ் முஸ்லீம் நிகழ்வுகளையும் அனுமதிக்க வேண்டும். அதையேன் கேட்கினம் இல்லை..?!

சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளையும் பொலிஸையும் வைச்சுக் கொண்டு தாங்கள் எதுவும் செய்யலாம் என்ற இறுமாப்பின் வெளிப்பாடுகள் தான் இவை. இத்தகைய ஒரு மனப்பாண்மையோடு உள்ள சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் ஆக்கிரமிப்பின் கீழ் எப்படி தமிழ் மக்கள் சகஜமாக வாழ முடியும் என்று சிலர் எதிர்பார்க்கினம்.

சும்மா கனவு  காணினம்.. தாங்கள் வெளியில் பத்திரமாக இருந்து கொண்டு. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

மிகவும் துன்பியல் நிகழ்வு.ஆனால் தாயகத்தில் ஒரு சுமுகமான நிலமை வரக் கூடாது என்று நினைக்கும் சகல தரப்பிற்கும் கொண்டாட்டம'.tw_angry:

துன்பியல் சம்பவம் தான் , அந்த மண்ணில் வாழ்பவ்ர்கள் இதை விரும்பவில்லை ஆனால் இது பலவந்தமாக திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது அதுவும் இளைஞர்களுக்கு மத்தியில் ஏன்?

தமிழனுக்கு தமிழீழத்தில் மாத்திரமே  சுதந்திரமான வாழ்வு  இதைத் தான் சிங்களவன் அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு வடிவில் சொல்லிக் கொண்டு வருகிறான் எமக்குத் தான் விளங்கவில்லை. தமிழ் அரசியல் வாதிகள் தமிழ்த்தேசியத் தடத்திலிருந்து விலகினாலும், தமிழருக்கு தமிழ்த்தேசிய உணர்வை ஊட்டுவதில் சிங்களவனின் இப்படியான சம்பவங்கள் பெரிதும் உதவும் . ஆயிரம் பிரசாரங்களினால் ஊட்டமுடியாத தமிழ்த்தேசிய உணர்வை சிங்களவர்களின் இப்ப்டியான ஒரு சம்பவம் மிக எளிதாகச் செய்துவிடும். அதுவும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு....., இந்தச் சம்பவம் கூட ஏதோ ஒரு வகையில் எமக்கு நண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்
 
Jaffna University Students Fight

கண்டிய நடனத்தால் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கு இடையில் அடிதடி.. போர்க்களமாகிய யாழ். பல்கலைக்கழகம் முழுமையான செய்தியைப் படிப்பதற்கு http://goo.gl/P4tCDS

Posted by IBC TAMIL News on Samstag, 16. Juli 2016

தாங்களும் தங்கள் படிப்புமாக இருந்த யாழ் பல்கலைகழக மாணவர்களுக்குள் சிங்கள மாணவர்கள் என்ற பெயரில் தூவேசம் பிடிச்ச ரவுடிகளை விட்டு நமது மாணவர்களின் கல்வியை சீரளிக்கும் சிங்கள அரசு! தமிழ் இனத்துக்கு 2009க்கு பின் சரியான தலைமை இல்லை என்பதன் வெளிப்பாடே இவ்வாறான செயல்கள்

1 hour ago, nedukkalapoovan said:

சிலர் தாயகத்தில் தமிழன் எல்லாத்தையும் சிங்களவனிடம் கொடுத்திட்டு அம்மணமா நிற்பதை தான்.. சகஜ நிலை என்று விரும்புகிறார்கள் போலும். 

தென்னிலங்கை எந்தப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் கலாசாரப்படி எதுவும் நடத்தப்படுவதில்லை. காரணம் அங்கு படிப்பது அதிகம் பெரும்பான்மை சிங்களவர்கள். ஆக யாழிலும் கிழக்கிலும் தான் தமிழ் கலாசாரத்தை மாணவர்கள் அறியவும் நிகழ்வுகளில் கடைப்பிடிக்கவும் முடிகிறது. அதையும் சிறுபான்மை சிங்கள மாணவர்கள் தடுப்பது எந்த வகையில் நியாயம். அப்படி சுமூக நிலை விரும்புவர்கள் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கண்டிய நடனத்தோடு தமிழ் முஸ்லீம் நிகழ்வுகளையும் அனுமதிக்க வேண்டும். அதையேன் கேட்கினம் இல்லை..?!

சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளையும் பொலிஸையும் வைச்சுக் கொண்டு தாங்கள் எதுவும் செய்யலாம் என்ற இறுமாப்பின் வெளிப்பாடுகள் தான் இவை. இத்தகைய ஒரு மனப்பாண்மையோடு உள்ள சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் ஆக்கிரமிப்பின் கீழ் எப்படி தமிழ் மக்கள் சகஜமாக வாழ முடியும் என்று சிலர் எதிர்பார்க்கினம்.

சும்மா கனவு  காணினம்.. தாங்கள் வெளியில் பத்திரமாக இருந்து கொண்டு. :rolleyes:tw_angry:

அண்மையில் நீங்கக் எப்பொழுது யாழ் சென்றிர்களோ தெரியாது மாலை வேளைகளில் இவனுக்கள் பலாலி ரோட்டில் நின்று அடிக்கும் கொட்டம் இருக்கே , நாங்கள் தான் பயந்து ஒதுங்கி நடக்க வேண்டி இருக்குது!!!

அதைவிட இராணுவம் , போலீஸ் இருக்க தமிழ் மாணவர்கள் தாக்கி இருக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம்  சிங்கள மானவசர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பதே, 
  
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தாங்களும் தங்கள் படிப்புமாக இருந்த யாழ் பல்கலைகழக மாணவர்களுக்குள் சிங்கள மாணவர்கள் என்ற பெயரில் தூவேசம் பிடிச்ச ரவுடிகளை விட்டு நமது மாணவர்களின் கல்வியை சீரளிக்கும் சிங்கள அரசு! தமிழ் இனத்துக்கு 2009க்கு பின் சரியான தலைமை இல்லை என்பதன் வெளிப்பாடே இவ்வாறான செயல்கள்

இது  நாமல்  ராஜபக்ஸவுக்கு ஆதரவானவர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டதாக எனக்கு படுகிறது. சிங்கள மாணவர்கள் வரவேற்கப்படும் போது அவர்களின் மொழியும் கலாச்சாரமும் இடம்பெற சந்தர்ப்பம் கொடுப்பதே நியாயமானது. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் எமது கலாச்சாரத்துக்கு இடமில்லை. ஆகவே இங்கு அவர்களின்  கலாச்சாரத்துக்கு இடமில்லை என்று சிலர் விவாதிக்கின்றனர். இந்த வாதம் சரியானால் அவர்கள் இடம் தராதது சரியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டே வாதம் ஆரம்பம் ஆகிறது. அவர்கள் இடம் தராதது  சரியானால் அது பற்றிய முறைப்பாடுகள் அனைத்தும் செல்லுபடியற்றவை. அறுபது வருட  முறைப்பாடுகள் - நாற்பது வருட போர் அனைத்தும் நியாயமற்றவை என்றாகிறது.

ஆனால் இந்த வன்முறை திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்கிறது.  ராஜபக்ஸவின் செயற்பாடுகளின் சாயல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Jude said:

ஜூட் அண்ணே சின்ன டவுட்டு ....நீங்க ஒரு ஊருக்கு அல்லது நாட்டுக்கு போனால் ,அவர்களின் பாரம்பரியப்படி  வரவேற்பது முறையா அல்லது  நீங்களே சின்ன மேளத்தை கொண்டுபோய் ஆடவிடுவது சரியா :unsure:

அவன் கண்டியன் நடனம் ஆடட்டும், நீங்கள் பரதநாட்டியம் ஆடுங்கோ. இதுக்கு ஏனப்பா சண்டை? ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்!!! 

  • தொடங்கியவர்

யாழ் பல்கலைக்கழத்தின் விஞ்ஞானபீடம் காலவரையறையின்றி மூடல் : சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும்

யாழ். பல்கலைக்கழத்தின் விஞ்ஞானபீடத்திற்கு காலவரையறையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட விஞ்ஞானபீட மாணவர்களை இரண்டாம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது வழமையாக இந்நிகழ்வுகளுக்கு தமிழர் பாரம்பரியத்தின் பிரகாரம் மேளதாள நாட்டியத்துடனேயே விருந்தினர்களை வரவேற்றிருந்தனர்.

இருந்த போதிலும் இம்முறை இந்நிகழ்விற்கு வழமைக்குமாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை நடாத்தி விருந்தினர்களை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தனர்.

asddasdfaf.jpg

இந்நிலையில் சிங்கள மாணவர்களுடைய இவ் ஏற்பாட்டை தமிழ் மாணவர்கள் எதிர்த்திருந்த போதும் அதனையும் மீறி சிங்கள மாணவர்கள் நிகழ்வை நடாத்த ஆரம்பித்தனர். இதன்போது தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு அது பாரிய கலவரமாக வெடிக்க ஆரம்பித்தது.

இதனையடுத்தே பல்கலைகழத்தின் விஞ்ஞானபீடத்திற்கு காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைகழக விடுதிகளில் உள்ள சிங்கள மாணவர்களை அவர்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு வெளியேறுமாறும் துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை யாழ் பல்கலைகழக நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/9058

Edited by நவீனன்

இந்த சம்பவத்தில் அடி பட்ட  தமிழனும் சரி சிங்களவனுக்கு சரி பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு யோக்கியதை இல்லாதவர்கள். அரசியல்வாதிகளை விட அசிங்கமாக நடந்து கொள்ளும் இவர்கள் நாளை ஒரு நிர்வாகியாக வந்து நாட்டையே சீரழிப்பார்கள். சாதாரண மக்களுக்கு வழி  காட்டவேண்டிய  பல்கலைக்கழக மாணவர்கள்  இன குரோதங்களை  வளர்த்து அற்ப விஷயங்களுக்கு சண்டை பிடிப்பது அவர்களையும் அந்த பல்கலைக்கழகத்தையும் அசிங்கப்படுத்திடுகிறது. நாங்கள் கற்ற மிக மோசமான காலங்களில் கூட ஒருசில அரசியல் மயப்படட சிங்கள மாணவர்கள் இனக்குரோத நடவடிக்கையில் ஈடுபட முனைந்தாலும் பெரும்பான்மை மாணவர்கள் அப்படி சம்பவங்கள் நடக்காமல் பாதுகாத்தனர்.  அது போல இங்கும் பெரும்பான்மை மாணவர்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்து நடந்த சம்பவத்துக்கு பரிகாரம் தேடி பல்கலைக்கழகத்தின் பெயரை காப்பார்கள் என்று நம்புவோம். அதுவரை குளிர் காய விரும்புபவர்கள் குளிர் காயலாம். 

nunavilan

  • நிர்வாகம்
  •  
  • nunavilan
  • கருத்துக்கள நிர்வாகம்
  •  1,454
  • 33,464 posts
  • Gender:Male
  • Location:USA

"சிங்கள மாணவர்களை கண்டிய நடனமாடும் படி பின்னால் இருந்து யாரோ செயற்பட்டுள்ளார்கள்(சில வேளை ராணுவம்). முஸ்லிம் பகுதியில் உந்த கண்டிய நடனத்தை ஆடச்சொல்ல்லுங்கள் பார்க்கலாம். சிங்களவர்கள் ஒன்றுக்கு பத்து தரம் யோசிப்பார்கள். சிங்கள பல்கலைகளகத்தில் எங்காவது பரதநாட்டியம் ஆடப்பட்டதா??"

சிங்கள பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வில் நாதஸ்வர இசையும் வேண்டும் என்று தமிழ் மாணவர்கள் கேட்டால் 100% ஏற்றுக்கொள்வார்கள். நான் படித்த பல்கலைக்கழகத்தில் பாரத நாட்டியத்தை விரும்பி ரசித்தவர்கள் சிங்களவர்கள்தான். இன்றும் கொழும்பில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சிங்களவர்கள் பரதம்  கற்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.