Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க்கில் துணை விமானியாகும் ஈழத் தமிழ்ப் பெண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டென்மார்க்கில் உள்ள ஈழத் தமிழ்பெண், துணை விமானிக்காய பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்ற இந்தப் பெண், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.இவர் போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கில் உள்ள ஈழத் தமிழ்பெண், துணை விமானிக்காய பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்ற இந்தப் பெண், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.இவர் போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார். உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என அவர் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

archana-280716-seithy%20(1).jpg

 

 

archana-280716-seithy%20(2).jpg

 

 

archana-280716-seithy%20(3).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162418&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறையை சேர்ந்த டென்மார்க் அர்ச்சனா செல்லத்துரை என்பவர் துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா செல்லத்துரை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.

தனது விமான போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps – இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார்.

உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என கூறியுள்ளார்.

இதே வேளை 16.07.2016 அன்று  சுவிற்சலாந்தில் இடம் பெற்ற தமிழ் இதழ் நடத்திய சாதனைத்தமிழா 2016 விருது வழங்கல் நிகழ்வில் சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகியாக அர்ச்சனா செல்லத்துரை தேர்வானார்.

உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் அர்ச்சனா பாடிய என் நெஞ்சே என்னை தாண்டி நடக்கின்றதே என்ற பாடலை இசைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

அவர் பற்றி அவரது தந்தை தெரிவிக்கும் போது “பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.. நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்..“ என்று பெருமையுடன் கூறினார்.

 

http://ekuruvi.com/thuani-vimaani/

மேலும் பல துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்திட அர்ச்சனாவை  மனசார வாழ்த்துகின்றேன் .
 

நிலவுக்கு போவதற்கு முக்கியமாக விமானியாக வருவதற்கு துணிவு மட்டும் போதாது பணமும் தேவை. அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்கள்~!

வாழ்த்துக்கள் அர்ச்சனா!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் அர்ச்சனா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விளம்பரமும் பாராட்டையும் எதிர்பார்க்காமல்.. தாய் நாட்டுக்கான வானில் பறந்த வான்புலிகளை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்கள் எவ்வளவோ பெருமைப்பட வேண்டியவர்கள். 

ஏன் தமிழர்கள் முன்னம் எல்லாம் பயணிகள் விமான.. விமானியாகவே இருந்ததில்லையா..??! எங்களுக்கு தெரிய பலர் இருந்துள்ளனர். இப்ப வெளிநாட்டில் இதெல்லாம் பேஸ்புக் விளம்பரமாப் போச்சு. 

திறமையை துறையில் ஈடுபாட்டை ஊக்குவிக்கனும். ஆனால் அதனை தற்பெருமைக்கான விளம்பரமாக்குவதை ஊக்குவிப்பது தவறாகும். :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சியில் வெற்றியடைந்து பல மைல் தூரம் பறக்க வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அர்ச்சனா....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் இன்று எங்கேயோ போய் விட்டது. அதிலும் ஆச்சரியப்படும் அளவிற்கு பெண்கள் பல சாதனைகளை புரிந்து கொண்டிருக்கின்றார்கள். விண்வெளி ஆராய்ச்சி முதல் வியக்கத்தகு பொருளாதார உத்திகளையெல்லாம் சாதனைகளையெல்லாம் சாதித்த பின்னரும் அமைதியாக தொடர்கின்றனர்.

துணை விமானி பயிற்சிக்கு எடுக்கும் எடுப்பை பார்க்கும் போது இவர்கள் இன்னும் புட்டுக்குழல் காலத்திலேயே இருக்கின்றார்கள் என்பது நன்றாக தெரிகின்றது.

வாழ்த்துக்கள்.

Female-Flight-Deck-royal-brunei.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Quote

துணை விமானி பயிற்சிக்கு எடுக்கும் எடுப்பை பார்க்கும் போது இவர்கள் இன்னும் புட்டுக்குழல் காலத்திலேயே இருக்கின்றார்கள் என்பது நன்றாக தெரிகின்றது.

ஹா ஹா என்ன மனசுக்காரன் ஐயா நீர்tw_blush:

அடிச்சுப்போட்டு அல்வா வேண்டி கொடுக்கிற மாதிரீ இருக்கிறது:unsure: 

தமிழச்சியாகிதால் வாழ்த்துகிறேன் ( கோ பைலட்டை )

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் தன்ட மு.புத்தகத்தில் போட்ட செய்தியை எங்கட தமிழ் இணையங்கள் வேற செய்தி இல்லாமல் காவிச் செல்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பிள்ளைக்கும்.... ஒரு, ஆசை இருக்கும்.
அந்தப் பிள்ளையின்.... ஆசை, 
நிறைவேற  வாழ்த்துக்கள்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை என்பர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கற்றுமுடித்திருப்பதாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

arch2_1.jpg

யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை, டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார்.

arch6-1024x576.jpg

ஆஸ்திரியா சென்று இதற்கான விசேட கல்வியை பெற்று டென்மார்க் திரும்பியியுள்ள அர்ச்சனா செல்லத்துரை, வர்த்தக விமான சேவையில் தமிழ் பெண்கள் விமான ஓட்டிகளாக வருவதற்கான வாய்ப்புக்களை நோக்கி எமது கனவுகள் விரிவடைய வேண்டும் என்றும், அடுத்து போயிங், எயார் பஸ் விமானங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

joj.JPG

டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்து டேனிஸ் மொழி ஆசிரியையாக இருந்த இவர் , விமானியாக படிப்பதற்காக அமெரிக்கா சென்று மியாமியில் டீன் இன்ரநாஷனல் விமானிகள் கற்பித்தல் கல்லூரியில் படித்து சித்தியடைந்தார்.

 

இறுதிப் பரீட்சையின் போது விமானத்தை அமெரிக்காவின் மியாமியில் இருந்து அத்திலாந்திக் சமுத்திர வழியாக தனி ஒருவராக ஆறு மணி நேரம் பறந்து சென்று மூன்று விமான நிலையங்களில் விமானத்தை இறக்கி ஏற்றி சிறப்பு சித்தி பெற்றுள்ளார்.

 

அமெரிக்காவில் பெற்ற ஏப்.ஏ.ஏ லைசென்சை ஐரோப்பாவில் பாவிக்க வேண்டுமானால் அதை ஐரோப்பாவிற்கான ஈ.ஏ.எஸ்.ஏ ஆக மாற்ற வேண்டும் இதற்காக டென்மார்க்கில் லேண் ரு பிளைட் என்ற விமானக் கல்லூரியில் படித்து 14 பரீட்சைகள் எடுத்து, பின்னர் சுவீடனிலுள்ள டைமன்ட் பிளைட் அக்கடமியில் தனியான பறப்புக்களை பறந்து ஐரோப்பிய சட்டங்களுக்கு அமைவாக தனது லைசென்சை மாற்றிக்கொண்டார்.

arch5_1.jpg

பின்னர் சன் எயார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து, டென்மார்க் ஓகூஸ் நகரத்திலுள்ள கிறைபேர்ட் விமான நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரியா சென்று விமானப்பறப்புக்கான ரைப்ரைட்டிங் எனப்படும் கற்கையை விசேடமாகக் கற்று சென்ற வாரம் அல்சி எக்ஸ்பிரஸ் விமானத்தை கச்சிதமாக ஓட்டி சித்தியடைந்தார்.

arch3-1024x576.jpg

இந்த விமானத்திலேயே சமீபத்தில் பிரான்சில் நடந்த ஐரோப்பிய உதைபந்தாட்டத்திற்காக ஜேர்மன் நாட்டு அணி ஏற்றிச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

சிறந்த திரைப்பட பின்னணி பாடகியாகவும் தேர்வாகியுள்ள அர்ச்சனா, சங்கீதத்தையும், வயலின், புல்லாங்குழல் போன்ற வாத்தியங்களையும் முறைப்படி கற்று பரத நாட்டியத்தையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9584

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.