Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் கடல்கரைக்கு செல்லும் தமிழர்களே எச்சரிக்கை!! தமிழ்த் தந்தைக்கு காத்திருந்த சோகம்!!

Featured Replies

தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை.

தமிழர்களே பிரித்தானிய கடல் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல விடையங்கள் உள்ளது. பிரித்தானிய கடல் நேரடியாக அட்டலான்டிக் கடலோடு தொடர்புடையதால் எந்த கோடை காலத்திலும் குளிராகவே இருக்கும். குளிராக இருப்பதால், அதில் குளிக்கும்வேளை சடுதியாக இதயம் துடிப்பது நின்றுவிடலாம்.

இல்லையென்றால் கடலில் நீந்தும் வேளை கிராம் என்று அழைக்கப்படும் வாதம் அல்லது நரம்புகள் காலில் இழுத்துக் கொண்டால் தொடர்ந்து உங்களால் நீந்த முடியாது போதும். அதுபோக பிரித்தானிய கடல்கரைகள் திடீர் திடீர் என்று கால நிலை மாற்றத்திற்கு உள்ளாகும்.

இதனால் கடும் காற்று. கடும் அலைகள் தோன்றும். சுழி தோன்றி அப்படியே இழுத்துச் செல்லும்.

இதுபோக கடல் கரையில் தண்ணீர் குறைவாக இருக்கும். மாலை அல்லது மதிய வேளைகளில் திடீரென கடலில் நீர் முட்டி வழியும். சாதாரணமாக நீங்கள் ஒரு இடத்தில் (கால் வரை) நீர் உள்ள இடத்தில் நிற்பீர்கள் ஆனால் திடீரென , கடல் பெருக்கெடுத்து உங்கள் இடுப்பு வரை நீர் வரும். இது ஆச்சரியமான விடையம் அல்ல. மிகவும் ஆபத்தான விடையம்.

எனவே தமிழர்களே நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பரிதாபமாக இறந்துபோன கதீஸ்வரன் என்னும் தமிழர் ஆத்மசாந்திக்கு பிரார்த்தனை செய்வோம். அவரது நண்பர் ஒருவர் என்ன நடந்தது என்று முக நூலில் எழுதி உள்ளார்.

எனது நண்பனின் கூக்குரல் கடந்த சனிக்கிழமை 20/08/2016 நாமும் நண்பர்கள் உறவினர்கள் சகிதம் Poole எனப்படும் பிரித்தானியாவின் கடற்கரைக்கு சென்றிருந்தோம். காலை 8.30 மணிக்கு எமது பயணம் சந்தோசமாகவே ஆரம்பித்தது கடற்கரையிலே BBQ உடன் நானும் நண்பர்களும் ஈடுபட்டவேளை நிஷா கூக்குரலிட்டார் தாழுறார் காப்பாற்றுங்கோ என்று எல்லோரும் கடலைநோக்கி ஓடினார்கள். நானும் ஓடினேன் எனக்கு நீச்சல் தெரியாது நீச்சல் தெரிந்திருந்தால் கூட அந்த அலைக்கு என்னால் தாக்குப்பிடித்திருக்க முடியாது.

எனவே நான் life guard இருக்குமிடத்தை நோக்கி ஓடினேன் அதற்கு முன்னரே மேனனும் சுரேசும் life guard க்கு தகவல் தெரிவித்திருந்து அவர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள் அவர்கள் கரையிலே கொண்டுவந்தபோதுதான் தெரிந்தது அது எம்முடன் வந்திருந்த கதீஸ்வரன் ambulance வரும்வரை ife guards CPR, First Aid கொடுத்துக் கொண்டிருக்க நாம் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தோம்.

Air Ambulance ஐயும் வரவழைத்திருந்தார்கள் இருந்தும் எதுவுமே பயன்ற்றதாகிப்போனது ஆம் ஐந்து வயதுடைய மகள், 41 நாட்களேயான மகன் அவருடைய அன்பு மனைவி மற்றும் அனைவரையும் விட்டுவிட்டு கதீஸ்வரனின் உயிர் பிரிந்திருந்தது.

uk-tamil01.jpg?resize=600,400

uk-tamil02.jpg?resize=600,400

http://www.newlankanews.com/archives/64398

  • கருத்துக்கள உறவுகள்

துயரமான சம்பவம், ஆழ்ந்த அனுதாபங்கள். இன்றும் மூன்று ஆண்கள் மூச்செடுக்க கஷ்ட்டப்பட்டு அவசர சிகிச்சைகள் பலனளிக்காமல் இறந்து விட்டனர் . கடக்கரைக்கு செல்பவர்கள். எச்சரிக்கை அறிவிப்புகளை பின் பற்றவும். 

http://www.bbc.co.uk/news/uk-england-sussex-37178643

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துயரமான சம்பவம்.  குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே.... மனது வேதனையாக உள்ளது.
இளம் குடும்பத் தலைவன், இறந்தது மிகப் பெரும் சோகம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் இறங்கி குளிக்க முற்படும் போது பயத்தை விட்டு விடுங்கள் உங்கள் பயம் தான் உங்களை கொல்லும் 

நீச்சல் தெரிந்திருந்தால் இன்னும் நல்லது ஆனால் அலைகளூக்கு சிக்கநேரிடும் போது ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒரு தடவை நீருக்கு அடியில் தாண்டு எழும்பும் போது அந்த அலை உங்களை அடிக்காமல் கடந்து செல்லும்  ஆகையால் அலையில் சினக்கிகொள்ள மாட்டீர்கள் இல்லையென்றால் அப்படியே சுருட்டி அடித்து சென்று விடும் 

இறந்த சகோதருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் தான் போய் நடுக்கடலில் நின்று கும்பி அடிச்சிட்டு வாறம்.. ஒன்றும் ஆகல்ல. 

கடலுக்குள் இறங்க முதல் கடலை அவதானிக்கனும்.. கரையை அவதானிக்கனும்.. அறிவிப்புக்களைப் பின்பற்றனும்.. கடலின் தன்மையை உணரனும்..  அதை விட்டிட்டு.. பீச்சில கிடக்கிறதுகளை அவதானிச்சுக் கொண்டு.. ஆ வென்று நடந்து கொண்டால்.. இப்படியான ஆபத்துக்கள் வரத்தான் செய்யும். 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

துயரமான சம்பவம்.  குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

3 hours ago, nedukkalapoovan said:

நாங்களும் தான் போய் நடுக்கடலில் நின்று கும்பி அடிச்சிட்டு வாறம்.. ஒன்றும் ஆகல்ல. 

கடலுக்குள் இறங்க முதல் கடலை அவதானிக்கனும்.. கரையை அவதானிக்கனும்.. அறிவிப்புக்களைப் பின்பற்றனும்.. கடலின் தன்மையை உணரனும்..  அதை விட்டிட்டு.. பீச்சில கிடக்கிறதுகளை அவதானிச்சுக் கொண்டு.. ஆ வென்று நடந்து கொண்டால்.. இப்படியான ஆபத்துக்கள் வரத்தான் செய்யும். 

அதே......

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக்காரன் யோசிப்பான் எத்தனையோ விடயங்களில் வென்று சாதிக்கும் ஈழ தமிழர்கள் இப்படி சாவதை நீச்சல் தெரியாதா இவர்களுக்கு ??tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

வெள்ளக்காரன் யோசிப்பான் எத்தனையோ விடயங்களில் வென்று சாதிக்கும் ஈழ தமிழர்கள் இப்படி சாவதை நீச்சல் தெரியாதா இவர்களுக்கு ??tw_angry::rolleyes:

இதே பீச்சுக்கு அண்மையில் சென்று வந்திருந்தம். ஒரே மணற்றரை. கடல் உள்ளிளுக்கப்படும் போது மணற் திட்டுக்கள் வெறுமையாகத் தெரியும். அங்கு ஆட்கள் கிரிக்கெட்.. கால்பந்து விளையாடுவார்கள்.. மணற்தரை தூய்மையாகவும் உறுதியானது போலவும் தோன்றும். ஆனால்.. உள்ளிருந்த கடல் திடீர் என்று வேகமாக முன்னேறி வரும்.. என்பது பலருக்குத் தெரியாது. சில மணற்திட்டுக்கள் உறுதியற்றவை. இவர்களும்.. கடல் உள்ளிளுக்கப்பட்ட போது...மணற்திட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது கடல் வேகமாக.. முன்னேறி வந்துள்ளது. இவர்கள்.. மணற்திட்டுக்களிடையே சிக்குப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை கடல் அலைகளும் உருவாக்கிய.. உறுதியற்ற மணற்படுக்கைகளிடை சிக்கிக் கொண்டதால்.. புதையுண்டு இறந்திருக்கிறார்கள். 

http://www.bbc.co.uk/news/uk-england-sussex-37182791

13094237_10153575152412944_3935235229617525369_n.jpg?oh=943b5521cd3ee7a4cb998239520acda4&oe=584259BF

13151641_10153579497842944_6200048211771137786_n.jpg?oh=b88bc8b73e1ff03f4f86b4ee83c8c827&oe=58460B48 

இது நாங்க அங்கு சென்ற போது எடுத்த படங்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை கனசனத்துக்கு வல்லிபுரகோவில் தீர்த்ததிருவிழாவிலை போய் நீந்தீட்டு வந்தால்  பெரிய நீச்சல்காரன் எண்ட நினைப்பு....
கடலுக்கு கடல் வித்தியாசம் எண்டது தெரிய வாய்ப்பில்லை.
நான் நாகர்கோவில் வல்லிபுரக்கோவில் கடலிலை நீந்தினாலும்......மட்டக்களப்பு கடல்லை கால் வைச்சதேயில்லை...அவ்வளவு பயம்:(

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நாங்களும் இடைக்கிடை....நீந்தி விளையாடறது தான்!

இருந்தாலும்....இந்தச் சுறாக் கோதாரியால... கொஞ்சம் பயமாய்க் கிடக்கு!

நெடுக்கர் சொன்ன விஷயம் தான் மிகவும் முக்கியமானது! எப்ப எந்த நேரத்தில...கடல் மண்ணுக்குள்ள இழுக்கும் எண்டு சொல்ல முடியாது!

என்ர கண்ணுக்கு முன்னாலேயே... லெபனானில் இருந்து  இஞ்சை கலியாணம் கட்டவெண்டு  வந்த..புது மாப்பிளையள் இரண்டு பேர் மண்ணுக்குள்ளை போனதைக் கண்ட அனுபவம் உண்டு!

அந்த இரண்டு புது மணப்பெண்களும் அழுத அழுகை இப்பவும் கண்ணுக்குள்ளை நிக்குது!  

a95cf2e8e6cd999b4d2d9aaa8df69a18?width=6

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக அகாலமான தமிழ் இளைஞர்களுக்கு

அஞ்சலிகள்.

22 hours ago, nedukkalapoovan said:

நாங்களும் தான் போய் நடுக்கடலில் நின்று கும்பி அடிச்சிட்டு வாறம்.. ஒன்றும் ஆகல்ல. 

கடலுக்குள் இறங்க முதல் கடலை அவதானிக்கனும்.. கரையை அவதானிக்கனும்.. அறிவிப்புக்களைப் பின்பற்றனும்.. கடலின் தன்மையை உணரனும்..  அதை விட்டிட்டு.. பீச்சில கிடக்கிறதுகளை அவதானிச்சுக் கொண்டு.. ஆ வென்று நடந்து கொண்டால்.. இப்படியான ஆபத்துக்கள் வரத்தான் செய்யும். 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

எவர் இறந்தாலும் இறந்தவர்களை பற்றி

குறை சொல்லாது அவர் புகழை மட்டுமே சொல்வது

உலக வழக்கம். ஆனால் நெடுக்காலபூவான் போன்றவர்களுக்கு அதற்குள்

புளிச்சல் ஏவறை கதைகள்

செத்தவர்களுக்கு கொடுக்கும் ஒரு மரியாதையை கூட

கொடுக்காமல் கேவலமாக கதைக்கும் இப்படிப்பட்டவர்கள்

ஒரு விபத்திலும் மாட்டாமல் வருத்தங்களும் வராமல் நூறு வயசு  வரைக்குமா

வாழப்போறார்கள்? இல்லையே

செத்தவர்களின் குடும்பங்கள் கதறும் இந்த நேரத்தில்

'பீச்சில கிடக்கிறதுகளை அவதானிச்சுக் கொண்டு ஆ வென்று நடந்தார்கள்

என்று சொல்வதற்கு எந்தளவுக்கு வக்கிரம் மனசில் இருக்க வேண்டும்.

விபத்து என்றால் நினையாப்பிரகாரம் நடப்பது

இழப்பு என்றால் மனம் கதற நிகழ்வது

இதிலும் வக்கிரம் பார்ப்பவர்கள்

****************************  என்று

சான்றோர் வேதங்களில் சொல்லியிருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

எங்கடை கனசனத்துக்கு வல்லிபுரகோவில் தீர்த்ததிருவிழாவிலை போய் நீந்தீட்டு வந்தால்  பெரிய நீச்சல்காரன் எண்ட நினைப்பு....
கடலுக்கு கடல் வித்தியாசம் எண்டது தெரிய வாய்ப்பில்லை.
நான் நாகர்கோவில் வல்லிபுரக்கோவில் கடலிலை நீந்தினாலும்......மட்டக்களப்பு கடல்லை கால் வைச்சதேயில்லை...அவ்வளவு பயம்:(

மட்டக்களப்பு என்றாலே கனபேருக்கு பயம் தானே  கடலும் அப்படியே :unsure:

4 hours ago, வைரவன் said:

அநியாயமாக அகாலமான தமிழ் இளைஞர்களுக்கு

அஞ்சலிகள்.

எவர் இறந்தாலும் இறந்தவர்களை பற்றி

குறை சொல்லாது அவர் புகழை மட்டுமே சொல்வது

உலக வழக்கம். ஆனால் நெடுக்காலபூவான் போன்றவர்களுக்கு அதற்குள்

புளிச்சல் ஏவறை கதைகள்

செத்தவர்களுக்கு கொடுக்கும் ஒரு மரியாதையை கூட

கொடுக்காமல் கேவலமாக கதைக்கும் இப்படிப்பட்டவர்கள்

ஒரு விபத்திலும் மாட்டாமல் வருத்தங்களும் வராமல் நூறு வயசு  வரைக்குமா

வாழப்போறார்கள்? இல்லையே

செத்தவர்களின் குடும்பங்கள் கதறும் இந்த நேரத்தில்

'பீச்சில கிடக்கிறதுகளை அவதானிச்சுக் கொண்டு ஆ வென்று நடந்தார்கள்

என்று சொல்வதற்கு எந்தளவுக்கு வக்கிரம் மனசில் இருக்க வேண்டும்.

விபத்து என்றால் நினையாப்பிரகாரம் நடப்பது

இழப்பு என்றால் மனம் கதற நிகழ்வது

இதிலும் வக்கிரம் பார்ப்பவர்கள்

****************************  என்று

சான்றோர் வேதங்களில் சொல்லியிருக்கினம்

வைரவருக்கு நெடுக்கர் சொன்னது புரியவில்லை என நினைக்கிறேன் 
ஊர்களில் கோவில் தீர்த்தங்களில் பெண் பிள்ளைகளுக்கு ஷோ காட்ட நினைத்த பல இளைஞர்கள் கடலில் காணாமல் சம்பவம் கேள்வி படலையா நீங்கள் அதை தான் சொல்ல வருகிறார் என்ன வோ 

அங்கே ஒரு அறிவுருத்தல் பலகை கூடவா இருக்க வில்லை என்ன வெளிநாடோ, இல்லை காவலுக்கு கண்காணிப்பு குழு இருக்கும் அது கூடவா லண்டன் கடற்கரையில் இல்லை  இப்போ சமர் வெக்கேசன் என்று நம்ம சனம் இப்பதான் ஊர் சுற்றி பார்க்கிற நேரம் இந்த நஸ்டமான சாவுகள் நடக்கின்றன

கருத்து முரண்படும் வைரவர் உதாரணம் ::::

 ஒரு இலக்கம் உங்கள் கண்முன்னே இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அந்த இலக்கம் 6 ஆக இருந்தால் அந்த இலக்கத்துக்கு எதிரில் இருப்பவரிடம் கேட்டால் அதை 9 என்று சொல்லுவார் இப்படித்தான் கருத்முரண்பாடுகள் வருவது சகஜமே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

மட்டக்களப்பு என்றாலே கனபேருக்கு பயம் தானே  கடலும் அப்படியே :unsure:

வைரவருக்கு நெடுக்கர் சொன்னது புரியவில்லை என நினைக்கிறேன் 
ஊர்களில் கோவில் தீர்த்தங்களில் பெண் பிள்ளைகளுக்கு ஷோ காட்ட நினைத்த பல இளைஞர்கள் கடலில் காணாமல் சம்பவம் கேள்வி படலையா நீங்கள் அதை தான் சொல்ல வருகிறார் என்ன வோ 

அங்கே ஒரு அறிவுருத்தல் பலகை கூடவா இருக்க வில்லை என்ன வெளிநாடோ, இல்லை காவலுக்கு கண்காணிப்பு குழு இருக்கும் அது கூடவா லண்டன் கடற்கரையில் இல்லை  இப்போ சமர் வெக்கேசன் என்று நம்ம சனம் இப்பதான் ஊர் சுற்றி பார்க்கிற நேரம் இந்த நஸ்டமான சாவுகள் நடக்கின்றன

கருத்து முரண்படும் வைரவர் உதாரணம் ::::

 ஒரு இலக்கம் உங்கள் கண்முன்னே இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அந்த இலக்கம் 6 ஆக இருந்தால் அந்த இலக்கத்துக்கு எதிரில் இருப்பவரிடம் கேட்டால் அதை 9 என்று சொல்லுவார் இப்படித்தான் கருத்முரண்பாடுகள் வருவது சகஜமே

ஜீ எங்கடையளுக்கு நன்மை சொல்லி விளங்காது. கூட இருந்து ஒப்பாரி வைத்தால் தான் அது நல்லது. இதனால் தான் இந்த இனமே அழிந்து தொலைகிறது.

நேற்று பிபிசி செய்திப்படி.. 25,000 மக்கள் கூடும் இந்த இடத்தில்.. இத்தனை வருடங்கள் இப்படி பாரிய சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் சொல்லுகிறார்கள். கடலைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதால்.. ஆபத்தான விடயங்களை தாங்கள் செய்வதில்லை என்று சொல்கிறார்கள்.

போற வெள்ளையளும் கரையில் ரென்ட் போட்டிட்டு.. சன் பேர்த் எடுத்திட்டு போகுதுங்க. 

இது கடலைக் கண்டதும் சினிமா ஹீரோ கணக்கில நடந்து கொள்ள வெளிக்கிட்டு தான் அநியாய இழப்பு. அதிலும் இருவர் புதையுண்டு போக.. மிகுதி மூவர் அவர்களைக் காப்பாற்ற முயற்சித்துப் புதையுண்டுள்ளனர். அங்கிருந்த வெள்ளைகள் தான் அப்புறம் மீட்புப் பணியாளர்களுக்கு மேலதிகமாக மீட்பில் ஈடுபட்டிருக்குதுகள். சிலர் பகுதி உயிரோடு மீட்கப்பட்ட போதும்.. உயிர் பிழைக்க முடியவில்லை.

இப்ப உள்ளூர் மக்களிடம் கேட்டால்.. இந்த பீச் இப்பவும் பாதுகாப்பானது தான். கடலைப் பற்றித் தெரிந்து கொண்டு நடந்து கொள்ளனும் என்று சொல்கிறார்கள்.

இதைச் சொன்னால்.. எம்மவருக்கு புளிச்சல் ஏவறை. முட்டாள் தமிழனுக்கு ஒன்றை உணர்த்தி அதில் இருந்து விலகி இரு என்று சொல்வதே சிரமமானது என்பதற்கு இங்கு யாழிலும் சிலது வந்து போகுதுங்க ஜீ. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒரு சிலரது கருத்தைப் பார்த்தால் அவர்களுக்கு எந்த வகையில்,எதிர் காலத்தில் விபத்தே நடக்காது என்ட மாதிரி இருக்கு. விபத்து என்பது எதிர் பாராமல் நடப்பது...எந்த வகையிலும் பாதுகாப்பாய் இருப்பவர்களுக்கு விபத்தே நடக்காத?....அவர்களுக்கு அங்கு,அந்த நேரத்தில் ஒன்றாகப் போய் சாகனும் என்று இருக்குது.போய் சேர்ந்திட்டார்கள்.இதிலந்து குதர்க்கம் கதைத்துக் கொண்டு வெட்கமாயில்லை.

அந்தக் கடற்கரையில் போன கிழமையும் ஒருவர் செத்திருக்கார்.அத்தோடு லைப் காட்டும் இல்லை.இருந்திருந்தால் உடனே காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

எப்ப பார்த்தாலும் தமிழர்களை நக்கல் அடிப்பதும்,பிழை பிடிப்பதுமே வேலை...அதில ஒரு சிலரின்ட வக்காலத்து வேற

கடற் தாய்க்கு பலியான அனைவரது ஆத்மாவும் சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் அல்ல.. கடந்த மாதம். அவரும் பிரேசில் நாட்டவர். நீச்சல் அடிக்கக் கூடாத இடத்தில் நீச்சல் அடிக்கப் போனவர். 

இதில் வெட்கப்பட வேண்டியது நம்மவர்கள் தான். அனுதாபங்களுக்கு அப்பால். 

25, 000 மக்கள் கூடும் கடற்கரையில்.. ஒரு சிலருக்கு மட்டும் தான் ஆபத்து என்றால்.. இதே கடலில் எத்தனையோ குழந்தைகள் கரையில் நின்று விளையாடுகின்றன.. ஆனாலும் எச்சரிக்கைகளை மதித்து.. குறித்த நேரம் வந்ததும் வெளியேறி விடுகிறார்கள்.

25,000 மக்களையும் கடலோர முதலுதவிப் படைக் கண்காணிப்பில் வைச்சிருக்கும் சாத்தியமே இல்லை. 

இது ஒன்றும் குறுகிய கடற்கரையும் அல்ல. நீண்டது. மணற்பாங்கானது.

இருந்தாலும் அவசர சேவைப் பிரிவு இயக்குகிறார்கள்.

வசதிகளை எச்சரிக்கைகளை கடலின் தன்மைகளை சரிவர உணராது தாந்தோன்றித்தனமாக செயற்படுவதுதான் இவ்வகையான விபத்துக்களுக்கு முக்கிய காரணம்.

இதைச் சிலர் விளங்கிக் கொள்ளும் அறிவில் எம்மில் இல்லை என்பதால்.. எனி அரசாங்கம் தான் இவர்கள் மீது கட்டுப்பாடுகளையும் அறிவூட்டலையும் செய்யனும். சொல்லிக் கேளாததுகளுக்கு என்ன செய்ய முடியும். :rolleyes:

Rother District Council said up to 25,000 people use the beach each day.

A council spokesman said: "Our beach patrols are on site throughout the summer and are able to advise people of potential dangers, reunite lost children and deal with any incidents on the beach.

The Police and Crime Commission for Sussex, Katy Bourne said: "We do need to get together to see if further improvements need to be made [to safety at the beach].

"We need to find the best answer. I don't know if lifeguards are the answer."

Last month, 19-year-old Brazilian Gustavo Silva Da Cruz died while swimming in the sea there. He was one of three men who got into trouble in the water.

http://www.bbc.co.uk/news/uk-england-sussex-37182791

http://rnli.org/safety/respect-the-water/Pages/Safety.aspx

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

இங்கு ஒரு சிலரது கருத்தைப் பார்த்தால் அவர்களுக்கு எந்த வகையில்,எதிர் காலத்தில் விபத்தே நடக்காது என்ட மாதிரி இருக்கு. விபத்து என்பது எதிர் பாராமல் நடப்பது...எந்த வகையிலும் பாதுகாப்பாய் இருப்பவர்களுக்கு விபத்தே நடக்காத?....அவர்களுக்கு அங்கு,அந்த நேரத்தில் ஒன்றாகப் போய் சாகனும் என்று இருக்குது.போய் சேர்ந்திட்டார்கள்.இதிலந்து குதர்க்கம் கதைத்துக் கொண்டு வெட்கமாயில்லை.

அந்தக் கடற்கரையில் போன கிழமையும் ஒருவர் செத்திருக்கார்.அத்தோடு லைப் காட்டும் இல்லை.இருந்திருந்தால் உடனே காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

எப்ப பார்த்தாலும் தமிழர்களை நக்கல் அடிப்பதும்,பிழை பிடிப்பதுமே வேலை...அதில ஒரு சிலரின்ட வக்காலத்து வேற

கடற் தாய்க்கு பலியான அனைவரது ஆத்மாவும் சாந்தியடையட்டும்.

இங்கே யாருக்கு யாரும் வக்காலத்து வாங்கவில்லை  கடலில் தெரியும் விபத்து என்பது அது கண்ணுக்கு தெரிந்த ஒன்றே கரணம் தப்பினால் மரணம் அவர்கள் பாதுகாப்பாக இருந்து இருக்க வேண்டும் கருத்து களம் என்றால் ஆயிரம் கருத்துக்கள் இருக்கும் 

இங்கே  எங்களுக்கு தமிழர்கள் செத்தது என்ன்வோ சந்தோசம் போல நினைக்கிறியளா ?? இது போன்ற சம்பவங்கள் இனி நிகழ கூடாது என்பதற்க்காக எழுதியது அதை நீங்கள் முதல் புரிந்து கொள்ளுங்கள் 
விபத்து என்பது எதிர்பாராத நேரத்தில் நிகழ கூடியதுதான் ஆனால் கடல் , ஆறு ,குளங்களில் இரங்கும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும் 

இனி இப்படியான செய்திகளை போடாதீங்கப்பா எவன் செத்தால் நமக்கென்ன என்று போகிறான் பார் அவன் நல்லவன் 

ஆழ்ந்த இரங்கல்கள் ஐவருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/08/2016 at 7:50 PM, nedukkalapoovan said:

இதே பீச்சுக்கு அண்மையில் சென்று வந்திருந்தம். ஒரே மணற்றரை. கடல் உள்ளிளுக்கப்படும் போது மணற் திட்டுக்கள் வெறுமையாகத் தெரியும். அங்கு ஆட்கள் கிரிக்கெட்.. கால்பந்து விளையாடுவார்கள்.. மணற்தரை தூய்மையாகவும் உறுதியானது போலவும் தோன்றும். ஆனால்.. உள்ளிருந்த கடல் திடீர் என்று வேகமாக முன்னேறி வரும்.. என்பது பலருக்குத் தெரியாது. சில மணற்திட்டுக்கள் உறுதியற்றவை. இவர்களும்.. கடல் உள்ளிளுக்கப்பட்ட போது...மணற்திட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது கடல் வேகமாக.. முன்னேறி வந்துள்ளது. இவர்கள்.. மணற்திட்டுக்களிடையே சிக்குப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை கடல் அலைகளும் உருவாக்கிய.. உறுதியற்ற மணற்படுக்கைகளிடை சிக்கிக் கொண்டதால்.. புதையுண்டு இறந்திருக்கிறார்கள். 

http://www.bbc.co.uk/news/uk-england-sussex-37182791

இது நாங்க அங்கு சென்ற போது எடுத்த படங்கள். 

நன்றி தம்பி  நெடுக்கு...

கடலைக்கண்டால் ஓடிப்போய் விழுந்துவிடுவேன்

ஆனால் நீச்சல் என்பது  சாதாரண வேளையில் என்னை காப்பாற்ற கூடிய அளவில் மட்டுமே

நல்ல காலம் இந்த இடத்துக்கு வரவில்லை

வந்திருந்தால் நானும் போயிருப்பேன்

உங்களது அறிவுறுத்தல்கள் இனி கவனமாக இருக்க வழி காட்டுகிறது..

அவரவர்  தேசத்திலுள்ள ஒவ்வாரு கடலைப்பற்றியும் கடற்கரைகள் பற்றியும் எம்மவர்கள் எழுதினால்

அவற்றை எம்மக்கள் படித்தால்

விபத்தக்களை தவிர்க்கலாமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஊர்கடலை மாதிரி இல்லாமல் ஐரோப்பிய கடல் தண்ணீர் அடர்த்தி குறைவெண்டு கேள்விப்பட்டன் உண்மையோ??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எங்கடை ஊர்கடலை மாதிரி இல்லாமல் ஐரோப்பிய கடல் தண்ணீர் அடர்த்தி குறைவெண்டு கேள்விப்பட்டன் உண்மையோ??

இருக்கலாம் சில கடல்கள் வேறு பட்டவைதான் நமது ஊர்கடலை போல் அல்லாமல்  அடர்தி குற்ந்ததும் இருக்கின்றன 

ஆனால் அது  பிரச்சினை இல்லை  நீச்சல் தெரிந்து இருக்க வேண்டும் அதுதான் அவர்களை காப்பாற்றும்

  இதே போல் கிழக்கில் கண் இமைக்கு நேரத்தில் 6 இளைஞர்கள் கடலில் மூழ்கி இறந்தார்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்த உற்சவ வேளையில் .
கடலில் குளிக்க முன் முதலில் கடலை அவதானிக்க வேண்டும் அலைகள் எழும்பும் வேகத்தையும் ,கரையையும்  வைத்து சிலர் கண்டு பிடிப்பார்கள்  

 சில அலைகள் கரயில் இருந்தும் செல்லும் இந்த அலைகள் தான்  ஆளை உள்ளே இழுத்து செல்வதும் மரணத்தை ஏற்படுத்தும் கூட

கடலில் நீந்துவது போல் ஆற்றில் நீந்த முடியாது  இப்படி வேறு பட்டிருக்கும்  

  உலக் சுற்றாடல்கள், நில அமைப்புக்கள் ( பாலைவனம் ,காட்டுப்பகுதி,கடல் பகுதிகள்) போன்ற அமைப்புக்களை அறிந்துகொள்ளுங்கள் வெறும் வீட்டுக்க இருந்தால் ஒன்றும் தெரிய போவதில்லை   கு.சாமி அண்ணை உங்களூக்கில்லை பலர் அறியட்டுமே

  • தொடங்கியவர்

பிரிட்டன் கடலில் மூழ்கி இலங்கைத் தமிழர்கள் ஐவர் உயிரிழப்பு!

பிரிட்டன் கடலில் மூழ்கி  இலங்கைத் தமிழர்கள் ஐவர் உயிரிழப்பு!

பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் சகோதரர்கள் இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்பரப்பில் உள்ள மண்திட்டியில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் கடல் அலை அள்ளிச் சென்றதாகத் தெரிவிக்கபபடுகிறது. ரவி நிதர்ஷன் (வயது 22), ஶ்ரீஸ்கந்தராஜா இந்துஷன் (வயது 23), நாதன் கோபி (வயது 22), நாதன் கெனிகன் (வயது 19) சிறிதவராஜா குருசாந்த்(வயது 27) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர். வருடத்தின் உஷ்ணம் அதிகமான தினம் என பிரித்தானியாவில் வர்ணிக்கப்படும் இந்த நாளில் பொழுதுபோக்குக்காக கடற்கரைக்குச் சென்றபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. நேற்று கடலில் மூழ்கி காணாமல் போன மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரத்தின் பின்னர், மேலுமிரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன எனக் கூறப்படுகின்றது. அத்தோடு, மேலுமொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹெலிக்கொப்டரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பிராந்தியப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரையில், இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://malarum.com/article/tam/2016/08/25/15334/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE

தரை-கடல்- வான் இணைபிரியா நட்பு உள்ளங்கள்

PIRITHTHANIYA..jpg

ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களை கடல் காவுகொண்டது. இலண்டன் கம்பர் சான்ட் கடற்கரையில் உயிர்காப்பு பணியாளர்களை அமர்த்த ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இன்று(27) அவசரமாக முடிவுசெய்துள்ளது.

ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இன்று தாமதமாக எடுத்த இந்த முடிவினால் தமது உறவுகளை பலிகொடுத்த மேற்படி ஐவரின் குடும்பங்களுக்கு பலனில்லையென்றாலும் ஏனைய மக்களை காக்கும் வகையில் இணைபிரியாத இந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட இந்த அவலமுடிவு அமைந்துள்ளது.

லண்டன் கிறின்விச் பகுதியில் சிறுவயதுமுதலே நெருங்கியநண்பர்களாக இருந்து வரும் இந்த ஐவரும் மரணத்தில் கூட இணைபிரியாத நண்பர்களாக கடலில் ஒன்றாக பலியானமை நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் கடலுக்கு குளிக்கச் செல்லாத நிலையில் கரையில் விளையாடிக்கொண்டிருந்த இவர்கள் அனைவரும் திடிரெனத்தோன்றிய கடல்மட்ட உயர்வினால் பரிதாபகரமாக மரணமடைந்ததாக தற்போது வெளிவந்துள்ள மேலதிகத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

<p>நண்பர்கள் ஐவரும் மகிழ்ச்சியுடன் கடற்கரையில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டவேளை திடிரென கடல்மட்டம் உயர்வடைந்து அவர்களை முதலில் தாக்கியுள்ளது.இவ்வாறு வேகமாக கடல்மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக திடீரென இளக்கமடைந்த கடல்மண் இந்துசன் மற்றும் கெனிகன் ஆகியோரின் கால்களை புதைத்துவிட்டது.

கடல்மண்ணில் புதையுண்ட மேற்படி இருவரும் நீரில் தத்தளித்த போது, கெனிகனின் அண்ணனான கோபியும் ஏனைய இருவரான நிதர்சன், மற்றும் குருசாந் ஆகியோர் அவர்களை மீட்கச்சென்றனர்.

ஆனால் அவர்களின் கால்களும் கடல்மண்ணில் புதையுண்டதால் இருவரையும் மீட்கச்சென்ற இவர்களும் சிக்கலில் மாட்டிக்கொண்டனர். மேற்படி ஐவருக்கும் நீச்சல் தெரியுமென்றாலும் கால்கள் புதையுண்டதால் தொடந்தும் தத்தளித்த அவர்களின் உடல் அதிக சோர்வு அடைந்ததால் அவர்களால் கரையேற முடியாமல் அனைவருமே தத்தளித்தனர்.

இறுதியில் அனைவருமே நீரில் மூழ்கிப்பலியான சோகம் இடம்பெற்றுள்ளது. உயிர்காப்பு பணியாளர் ஒருவர் ஐந்து நிமிட உதவியை செய்திருந்தால் இவர்கள் அனைவரையுமே காப்பாறியிருக்கலாமென குறிப்பிடப்படுகின்றது.

இதில், இந்துசன் மற்றும் கெனிகன் ஆகியோரின் உடலங்கள் மண்ணில் அதிகமாக புதையுண்டிருந்ததால் மேற்படி இரண்டு உடலங்ளையும் மீட்டுப்பணியாளர்களால் உடனடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன்பின்னர் கடல்அலைகளே அவர்களின் உடலங்களை கரையொதுக்கியிருந்தது.

கம்பர் சான்ட் கடற்கரையில் நிரந்தரமாக உயிர்காப்பு பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தால் இவ்வாறான அநியாயப்பலிகளை தடுத்திருக்கலாமென அந்தப்பகுதி மக்களும் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இந்தவிடயத்தில் கம்பர் சான்ட் கடற்கரையைப்பராமரிக்கும் உள்ளுராட்சி நிர்வாகம் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றது. உயிர்காப்பு பணியாளர்கள் அமர்த்தப்படவேண்டுமெனக்கோரி இணையம் மூலம் நடத்தப்பட்;ட முறையீட்டு மனுவில் இதுவரை 7,000 பேர் ஒப்பமிட்டுள்ளனர்.

கோடைகாலத்தில் அதிகவெம்மை நிலவும்நாள் ஒன்றில்மட்டும் சுமார் 30,000 பவுண்சுகளை வாகனத்தரிப்பிட வருமானமாகப்பெறும் ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் சுமார் 25,000 பேர்கூடும் கம்பர் சான்ட் கடற்கரையில் ஒரு உயிர்காப்பு பணியாளரைக்கூட அமர்த்தவில்லையென விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் திங்களன்று பிரித்தானியாவில் வங்கிவிடுமுறை வருவதால் இந்தவார இறுதியில் கம்பர் சான்ட் கடற்கரைக்கு அதிகளவுமக்கள் வருவார்கள் என்பதால் அவசரமாக உயிர்காப்பு பணியாளர்களை அமர்த்த ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இன்று முடிவுசெய்துள்ளது.

இதற்கிடையே கடந்தவாரம் இதே கடற்கரைப் பகுதியில் நீந்திய 19 வயதான பிரேசில் மாணவன் ஒருவன் பலியான நிலையில் ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இதில் அதிக கவனம் எடுத்திருக்கவேண்டுமென்ற கண்டனங்களும் வலுத்துவருகின்றன.

இதேவேளை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவாக பிரித்தானியாவில் இடம்பெற இருந்த உதைபந்தாட்ட போட்டி பிற்போட பட்டமை குறிப்பிடதக்கது .

http://thuliyam.com/?p=39247

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.