Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் எஸ்.பி

Featured Replies

யாழில் எஸ்.பி
 
 
யாழில் எஸ்.பி
இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
 
இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிகொ ப்ரர்  மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.
 1475941542_download%20%281%29.jpg
இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர். 
 
இதனையடுத்து  இந்திய துணைத் தூதுவர் எஸ். நடராஜன் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் வரவேற்றனர்.
 
நாளையதினம் யாழ். முற்றவெளி மைதானத்தில் இவர்களின் இசைநிகழ்ச்சி நடைபெறவு ள்ளமைகுறிப்பிடத்தக்கது.1475941567_download%20%282%29.jpg

http://onlineuthayan.com/news/18708

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தை பார்வையிட்டார் பாலசுப்ரமணியம்.
--------------------------------------

இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிக்கொப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.

இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர்.

இதனையடுத்து ஸ்ரீலங்காவிற்கான இந்திய துணை தூதுவர் எஸ். நடராஜன் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது

14495396_1131254846952285_75626959034059

14650323_1131254936952276_85548426713558

14492413_1131254960285607_67644309894398

14522998_1131255020285601_32077806024485

 

14568144_1760660113961577_46319832914370

14642392_1760660110628244_35952597016442

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக இசைக் கலைஞர்களில், தேனிசை செல்லப்பா போன்ற சில கலைஞர்களைத் தவிர மற்றம் எல்லோருமே ஈழத்தமிழர் போராட்டத்தைப் பயன்படுத்தி பெரும் நிதியைத் திரட்டிக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்நோக்கங்கள் ஏதுமில்லாமல் மக்களை சந்தோசப்படுத்தினால்.......சந்தோசம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்து கொண்டு போற மாதிரியைப் பார்த்தா எஸ் பி நன்றாக குடித்து விட்டார் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பிடித்து கொண்டு போற மாதிரியைப் பார்த்தா எஸ் பி நன்றாக குடித்து விட்டார் போல கிடக்கு.

இலங்கையில் பறக்கும்போது கெலியிலும் 'தண்ணி' பரிமாறுகிறார்களோ? dubitatif.gif

கூடிய கூட்டத்தை பார்க்கையில், தமிழ்நாடளவிற்கு ஈழ மக்கள் மோசமில்லை போல தெரியுது! vil-idee.gif

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உள்நோக்கங்கள் ஏதுமில்லாமல் மக்களை சந்தோசப்படுத்தினால்.......சந்தோசம்.

 

பாடகர்களுக்கு உள்நோக்கம் இருக்காது என்று நினைக்கிறேன்......ஆனால் இந்திய துணைதூதரகத்திற்கு உள்நோக்கம் ,வெளிநோக்கம்,பிராந்திய நோக்கம் எல்லாம் இருக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக அமைய வாழ்த்துகள் spயின் ரசிகன் 

ஈழத்தில் எது நடந்தாலும் அது விமர்சனத்திற்கு உள்ளாவது வழமையாகிவிட்டது இங்கே இருப்பதும் சகல ஆசைகள் கொண்ட மனிதர்ககளே

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பிடித்து கொண்டு போற மாதிரியைப் பார்த்தா எஸ் பி நன்றாக குடித்து விட்டார் போல கிடக்கு.

அவ்வளவு சனம், தள்ளுப்பட்டதாம். அதனால் SP தள்ளாடினாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சியைப் பார்த்தால் நல்ல வெறி போல தான் இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் கலைப்பயண கொண்டாட்டத்தை கொண்டாடப் போயிருப்பவர்களை கடந்த காலங்களில்  நடந்த அதே மக்களின்  இழப்பு நிகழ்வுகள் ஏதாவது ஒன்றுக்கு போய் இருப்பார்களா கேட்டுப் பாருங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி. யின் யாழ். பயணம் காணொளியில்.

  • கருத்துக்கள உறவுகள்

14632925_1190342347690270_4524880808123404376_n.jpg?oh=441e0c285b04363001ce60636eb12832&oe=586206EC

14495426_1190342414356930_4620313016156080830_n.jpg?oh=ddd4df52efcb6caa619267c25e0e8b91&oe=58A2F9C6

14650542_1190342434356928_1291853054367593344_n.jpg?oh=f42a739fc5c20084d67447f38f258eea&oe=589FF8D0

உலங்கு வானுர்தியில்.... எஸ்.பி. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9.10.2016 at 2:54 PM, ரதி said:

மூஞ்சியைப் பார்த்தால் நல்ல வெறி போல தான் இருக்குது

என்ரை  தங்கச்சி தண்ணியடிச்ச சிங்கங்களின்ரை மூஞ்சி முகரக்கட்டையை இதுவரைக்கும் காணேல்லை போலை கிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

எஸ்.பி. யின் யாழ். பயணம் காணொளியில்.

இந்த காணொளியே சாட்சி சனம் தள்ளுப்பட்டதை. ஆமா தேமா பூ அழகிகளுக்கு இங்கு என்ன வேலை? 

2015 இல் எமது வாகன செலுத்துனர் fog light யை போட்டு ஓட்டியதற்காக தண்டப்பணம் விதித்த பொலிசார் இங்கு fog light உடன் வரும் வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இதுதான் சிறீலங்கா பொலிஸ்.

 

6 hours ago, ரதி said:

மூஞ்சியைப் பார்த்தால் நல்ல வெறி போல தான் இருக்குது

SP யை defends செய்யும் தேவை எனக்கில்லை. பல வருடங்களுக்கு முன்னர் sp யை விமானநிலையத்தில் வரவேற்றது தொடக்கம் அனுப்பி வைத்தது வரை இரு நாட்கள் அவருடன், அந்த இரு நாட்களும் அவர் குடித்ததை நான் காணவில்லை.                ஆனால் மேடையில் ஒரு விதமாகவும் மேடைக்குப் பின்னால் வேறு விதமாகவும் சராசரி சினிமாக்காரர் மாதிரி நடந்து கொண்டார்.

Edited by MEERA

  • தொடங்கியவர்
நண்பேண்டா...
 
10-10-2016 10:04 AM
Comments - 0       Views - 35

article_1476074139-IMG_2180.JPG

தென்னிந்தியப் பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரன் ஆகியோர் பங்குபற்றிய 'நண்பேண்டா' இசை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

இந்த இசை நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நடைபெற்றது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)

article_1476074190-IMG_2195.JPGarticle_1476074201-IMG_2113.JPGarticle_1476074215-IMG_2241.JPGarticle_1476074227-IMG_2242.JPGarticle_1476074238-IMG_2397.JPGarticle_1476074248-IMG_2250.JPGarticle_1476074261-IMG_2445.JPG

http://www.tamilmirror.lk/183599/நண-ப-ண-ட-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.