Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் அனைவரையும் புலி என்று திட்டிய மட்டு.மங்களராமய விகாராதிபதி

Featured Replies

தமி­ழர்கள் அனை­வ­ரையும் புலி என்று திட்­டிய மட்­டு.மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி

p11-95fa1599a0d192a883f6310ba3bf0f90fdae7eaa.jpg

நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை

 (ஏறாவூர் நிருபர்)

சட்­ட­வி­ரோத காணி அப­க­ரிப்பைத் தடுக்­கச்­சென்ற பட்­டிப்­பளை பிர­தேச செய­லக குழு­வி­னரை மிகக் கடு­மை­யான இன­வாத வார்த்­தை­களால் திட்­டி­யுள்ள மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சுமண ரத்­ன தேரர் தமி­ழர்கள் அனை­வ­ரையும் புலிகள் என குறிப்­பிட்­டுள்­ளமை குறித்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட

 தமிழ், முஸ்லிம் மக்கள் கண்­ட­னத்­தினை வௌியிட்­டுள்­ளனர். இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அரச காணி­களை தங்­க­ளுக்கு வழங்­கு­மாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ர­தி­பதி அம்­பிட்­டிய சுமன ரத்­தின தேரர் அரச காணி அத்து மீறலை தடுக்க நீ யார்? உன்­னு­டைய அப்பன் வீட்­டுக்­கா­ணியா? அம்மா வீட்­டுக்­கா­ணியா? ஏன் சிங்­கள மக்­க­ளுக்கு வழக்கு வைத்தாய்? நீ யார் இவற்றைச் செய்ய? புலியா? தமி­ழர்கள் எல்­லோரும் புலி என பட்­டிப்­பளை பிர­தேச செய­லா­ள­ரையும் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் திட்­டித்­தீர்த்த சம்­பவம் வௌ்ளிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு எல்­லைக்­கி­ரா­மத்தில் நடை­பெற்­றுள்­ளது. 

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் எல்­லைக்­கி­ரா­ம­மாக அமைந்­துள்ள மண்­முனை தென்­மேற்கு பட்­டிப்­பளை பிர­தேச செய­ல­கப்­பி­ரிவின் கச்­சக்­கொடி கிராம உத்­தி­யோ­கத்தர் பிரிவில் கால்­ந­டை­களை மேய்க்கும் பொருட்டு ஒதுக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் காலம் கால­மாக மண்­முனை தென்­மேற்கு, மண்­முனை மேற்கு, வெல்­லாவௌி போன்ற பிர­தே­சங்­களை சேர்ந்த பல கால்­ந­டை­யா­ளர்கள் தமது கால்­ந­டை­களை காலம் கால­மாக மேய்த்து வரு­கின்­றனர்.

அந்த இடங்­களை தமது பயிர்ச்­செய்­கைக்கு மீட்­டுத்­த­ரு­மாறு கோரி மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ர­தி­பதி அம்­பிட்­டிய சும­ரத்ன தேரர் தலை­மை­யி­லான 4 பிக்­குமார் சேர்ந்து மக்­களை ஒன்­றித்து அம்­பாறை கண்டி பிர­தான வீதி­யினை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதனை அறிந்த பிர­தேச செய­லாளர் திரு­மதி தி.தெட்­ச­ண­கௌ­ரியின் தலை­மை­யி­லான உத்­தி­யோ­கத்தர் குழு­வினர் இந்த இடத்­திற்கு சென்­றனர். இதன் போது அரச காணி­களை அத்து மீறிப்­பி­டித்து பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட விடு­மாறும், அம்­பாறை மாவட்­டத்தில் தமது நிர்­வாக சேவை­யினை பெற அனு­ம­திக்­கு­மாறு கோரி கோசம் எழுப்­பி­ய­வாறு, வீதியை மறித்­த­தினால் போக்­கு­வ­ரத்து தடைப்­பட்­ட­தை­ய­டுத்து பல தட­வைகள் மங்­க­ள­கம உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் தலை­மை­யி­லான உத்­தி­யோ­கத்தர் குழு­வினர் வீதியை பயன்­ப­டுத்த உத­வு­மாறு கோரியும் பல­ன­ளிக்­க­வில்லை. 

ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ர­தி­பதி அம்­பிட்­டிய சும­ரத்ன தேரர் அவர்கள் அவ­தூ­றாக கெட்ட வார்த்­தைகள் பேசி இந்த இடத்தில் நின்ற அரச உத்­தி­யோ­கத்தர் (பிர­தேச செய­லக குழு­வி­னரை) கேட்ட போதும் அந்த இடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனினும் மனம் தளராது கடமையுணர்வோடு நின்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமே நடைமுறைக்கு வரும் என எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டமானது கைவிடப்பட்டது.

மட்டக்களப்பு மங்களாராமய விகாரதிபதியின் செயற்பாடு குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரிய நேந்திரன் விகாராதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-14#page-1

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் தமிழர்கள்
J.R. ஒரு பௌத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்கியிருக்கமாட்டேன் என்றார் தலைவர்.
அதன் சூட்டை சிங்களவர் மறந்துவருவதன் மீள் வரவுகள் இவை.
தமிழன் தனியே நின்று தர்ம யுத்தம் செய்தான்.
சிங்களம் ஊரையெல்லாம் கூட்டிவந்து முதுகில் குத்தி வஞ்சகமாக வென்றது.
தமிழர் தரப்பு ஒரு போதும் பின்வாங்கிவிடவில்லை. ஒன்றையும் மறக்கவோ மன்னிக்கவோ இல்லை.
காத்திருக்கிறது. உலகம் சிங்களத்தை அறியும்வரை. ஒதுக்கும்வரை.
அதற்கு இந்த பிக்குவும் உதவுவார்.
அதை அமைதியாக கேட்டுநின்ற தம்பியும் உதவுவார்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்.

இப்போ தான் புலிகளின் அருமை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்.

இப்போ தான் புலிகளின் அருமை தெரியும்.

இருந்தாலும் புலிகள் பயங்கரவாதம் என்ற பெரும் போர்வைக்குள் மறைந்திருந்த சிங்கள பேரினவாதம் 'நிர்வாணமாக' வெளியில் தெரிவதும், அரசின் போலீஸ்கார்கள், அரச உத்தியோகத்தரை விடுத்து, தூசணப்பிக்கரை பாதுகாக்கும் அழகும் கொழும்பு அதிகார பீடத்தை நெளிய வைக்கிறதே.

மணலாற்றினை முழுசாக முழங்க போர் கைகொடுத்தது.

இப்போது, பிக்கரின் விரக்தியால் வந்த கோபத்திலே தெரிகிறதே போர் இல்லாத நிலையில், எவ்வளவு கஸ்டப்படுகினம் என்பதை. 

இச் செயல்கள் எல்லாம் ஒன்றை நன்கு உணர்த்துகின்றது. கிழக்கில் (மட்டுமல்ல இலங்கை எங்கும்) தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணையாவிடின் பெளத்த பேரினவாதம் இரு இனத்தினையும் முழுமையாக அடிமைப்படுத்தும் என்பதையே.
இவ் தமிழ் அதிகாரி மீதான இனவாத தாக்குதலை பல நூற்றுக்கணக்கனான முஸ்லிம்கள் எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுதி/விமர்சித்து வருகின்றனர். பல முஸ்லிம்களுக்கு சிங்களமும் எழுத தெரியும் என்பதால் சிங்கள பொதுச் சமூகத்துக்கும் இதை கொண்டு செல்ல முடிகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

காவியை பேச விட்டு வேடிக்கை பார்த்துவிட்டு பத்திரமாகக் கூட்டிச் செல்லும் காக்கி. இதுதான் சொறீலங்கா. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிழலி said:

ஒரு சில இடங்களில் மோட்டுச்சிங்களவன் எனும் கருத்தை வைக்கும் போது அந்த கருத்து தூக்கப்படுகின்றது அல்லது அழிக்கப்படுகின்றது.
ஒரு சில இடங்களில் மோட்டுச்சிங்களவன் எனும் கருத்தை வைக்கும் போது.... முள்ளிவாய்க்காலை காரணம் காட்டி பயமுறுத்தி சிங்களவர்களை புத்திசாலிகளாகவும் வெற்றிவீரர்களாகவும் கணிக்க வைக்கின்றார்கள்.

இது நவீன காலம் என்கிறார்கள். உலகம் நாகரீகம் அடைந்து விட்டது என்கிறார்கள்.செய்திகள் பரிமாணாமங்கள் எல்லாம் மக்கள் கைகளில் உடனுக்குடன் கிடைக்கின்றது என்கிறார்கள். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை கூட நேரடியாக உலகமக்கள் கண்டு களித்தார்கள் என்ற செய்தியும் உண்டு.
நிலமை இப்படியிருக்க....................

ஈழத்தமிழர் பிரச்சனையை சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்ல வேணுமாம்.....விளங்கப்படுத்த வேணுமாம்.
70வருசத்து பழைய பிரச்சனையை....இப்பவும் குத்துவிளக்குக்கு பழப்புளி போட்டு மினுக்கிறமாதிரி மினுக்கிக்கொண்டிருங்கோ.....அவன் தன்ரை அலுவலை பார்த்து முன்னேறீட்டான்.

அவன் நிலாச்சோறு எங்களுக்கு தீத்த...... இவையள் அவங்களுக்கு பாலும்பழமும் குடுத்து விளங்கப்படுத்தோணுமாம்.

1 hour ago, குமாரசாமி said:

அவன் நிலாச்சோறு எங்களுக்கு தீத்த...... இவையள் அவங்களுக்கு பாலும்பழமும் குடுத்து விளங்கப்படுத்தோணுமாம்.

அருமையான கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

இச் செயல்கள் எல்லாம் ஒன்றை நன்கு உணர்த்துகின்றது. கிழக்கில் (மட்டுமல்ல இலங்கை எங்கும்) தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணையாவிடின் பெளத்த பேரினவாதம் இரு இனத்தினையும் முழுமையாக அடிமைப்படுத்தும் என்பதையே.
இவ் தமிழ் அதிகாரி மீதான இனவாத தாக்குதலை பல நூற்றுக்கணக்கனான முஸ்லிம்கள் எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுதி/விமர்சித்து வருகின்றனர். பல முஸ்லிம்களுக்கு சிங்களமும் எழுத தெரியும் என்பதால் சிங்கள பொதுச் சமூகத்துக்கும் இதை கொண்டு செல்ல முடிகின்றது.

இவர்களாலும் தான் தோற்றுப்போனோம் நாம்

சிங்களவருடன் கூட நம்பி பேசமுடியும்

ஆனால்  இவர்கள் முதுகில் குத்துபவர்கள்

எப்படி????????

  • கருத்துக்கள உறவுகள்

சித்திலெப்பை, காரியப்பர் காலத்தில் இருந்தே நம்பிக்கைக்கு உரியவர்களாக நடக்கவில்லை.

இவர்கள் மாறி மொழிசார்ந்த இணைவுக்குள் வராமல் கிரந்தம் விட்டால் பிரச்சணை அவர்களுக்குத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சித்திலெப்பை, காரியப்பர் காலத்தில் இருந்தே நம்பிக்கைக்கு உரியவர்களாக நடக்கவில்லை.

இவர்கள் மாறி மொழிசார்ந்த இணைவுக்குள் வராமல் கிரந்தம் விட்டால் பிரச்சணை அவர்களுக்குத் தான்.

மிஞ்சிப் போனா, கதிர்காமக் கந்தனை, சிங்களவர் கொண்டாடிக் கும்பிடுற மாதிரி, தமிழரும், புத்தரை, எல்லாம் ஒண்டுக்க ஒண்டு தானே என்று, கொண்டாடி கும்பிட வேண்டியது தான்.

6 hours ago, விசுகு said:

இவர்களாலும் தான் தோற்றுப்போனோம் நாம்

சிங்களவருடன் கூட நம்பி பேசமுடியும்

ஆனால்  இவர்கள் முதுகில் குத்துபவர்கள்

எப்படி????????

விரிவாக கதைப்பது என்றால் இந்திய இராணுவத்தின் காலத்தில் (இந்திய உளவுப் பிரிவின் திட்டங்களுக்கு ஏற்ப) ஈ.பி.ஆர்.எல். எப்  முஸ்லிம்களை ஆயுத முனையில் வதைக்க தொடங்கியதில் இருந்தோ அல்லது முஸ்லிம் தமிழர் விவசாயக காணிகள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தோ அல்லது புலிகள் கட்டிய துணியுடன் வடக்கை தாயகமாக கொண்ட  முஸ்லிம்களை விரட்டியதில் இருந்தோ அல்லது முஸ்லிம் காடையர்கள் தமிழ் மக்களை கிராமம் கிராமமாக கோவில்கள் புகுந்து படுகொலை செய்ததில் இருந்தோ வாயில் வீணியும் இரத்தமும் வடிய வடிய கதைக்க முடியும். ஆனால் பலன் எதுவும் இருக்கப் போவது இல்லை. இழப்புகளும் நட்டங்களும் தான் அதிகம்,

வரலாற்றில் எதிரும் புதிருமாக நின்று போராடியவர்கள் தம் தேவைகளுக்கும் தம் இனத்தின் நன்மைகளுக்கும் ஏற்ப இணைந்து பொது எதிரியுடன் போராடி வென்று இருக்கின்றார்கள்.  வரலாற்றில் பல உதாரணங்களில் இருந்து இன்றையை உதாரணம் ரஷ்சியாவுடன் நெருங்க முயலும் ட்ரம்ப் வரைக்கும் இது தான்  நடக்கின்றது

ஆனால் எமக்கு இது பற்றி எல்லாம் அக்கறை  இல்லை.பழைய கதைகளை கதைத்து, அதை  பற்றி மட்டுமே சிந்தித்து எப்பவும் ஆளாளுக்கு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்போம். வரலாற்றில் நாம் பட்டுக் கற்றவற்றை பாடங்களாக அல்ல தடைகளாகவே பார்ப்போம்; கால ஓட்டத்து ஏற்றவாறு மாற மாட்டோம்  என்று வீண் வீறாப்புடன் இருப்போம் என்று நினைக்கின்றியள்...

ஆனால் அதிஷ்டவசமாக  தாயகத்தில் இப்படியான புளித்து போன சிந்தனைகளில் இருந்து விலகி நின்று காலத்துக்கு தேவையான விதத்தில் சிந்திக்கும் ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. போரால் சொல்லணா துயரங்களையும் அவலங்களையும் அனுபவித்த தலைமுறை சரியாக சிந்திக்கின்றது. கண்டிப்பாக இத் தலைமுறை சரியான விதத்தில் செயற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. என் எழுத்து அவர்களுக்காகத் தான்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நீங்கள் சொல்வது உண்மையென்றால்

அதை வீணி வடித்தபடி முதலில் ஆதரிப்பவன் நானாகத்தான் இருப்பேன்

ஆனால் வரலாறும்

களநிலையும் அதுவன்று

தமிழர்கள் மட்டும் கையை நீட்டியபடி..

அவர்கள் கிழக்கு முடித்து

வன்னி மன்னார் யாழ்ப்பாணம் என  தமிழர் நிலங்களையும்  பொருளாதாரத்தையும் வாழ்வாதாரங்களையும் வஞ்சகமாக அபகரித்தபடி...

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கு எங்களைப் பார்த்து புலி என்று சொன்னால் ஆமாம் என்று சொல்லி விட்டு பிக்குவை அடிச்சு விரட்டுவியலா

  • கருத்துக்கள உறவுகள்

animatedtiger-15.gif  animated tiger gifanimated tiger gif

பிக்கு.... தமிழர்கள் அனைவரையும் புலி என்று சொன்னதில்,  எங்களுக்கு மகிழ்ச்சியே.... :)
ஆனால் முன்னாள்  ஒட்டுக் குழுக்கள், ஓணான் குழுக்களுக்கு தான்... இதனைக் கேட்க சங்கடமாக இருக்கும். :grin:  18.gif   46.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

animatedtiger-15.gif  animated tiger gifanimated tiger gif

பிக்கு.... தமிழர்கள் அனைவரையும் புலி என்று சொன்னதில்,  எங்களுக்கு மகிழ்ச்சியே.... :)
ஆனால் முன்னாள்  ஒட்டுக் குழுக்கள், ஓணான் குழுக்களுக்கு தான்... இதனைக் கேட்க சங்கடமாக இருக்கும். :grin:  18.gif   46.gif

தூசணப் பிக்கர் சேவை, நம் தமிழ் பேசும் அணைவருக்கும் தேவை. :grin:

அங்கே நிற்கும் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவு, 'ஒரு பிக்கு பேசுற பேச்சா, இது', என்பதை கவனித்தீர்களா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

தூசணப் பிக்கர் சேவை, நம் தமிழ் பேசும் அணைவருக்கும் தேவை. :grin:

அங்கே நிற்கும் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவு, 'ஒரு பிக்கு பேசுற பேச்சா, இது', என்பதை கவனித்தீர்களா?

கவனிக்கவில்லை... நாதமுனி,
காணொளியில்..... எத்தனையாவது நிமிடத்தில் சொல்கிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.11.2016 at 1:03 AM, nedukkalapoovan said:

காவியை பேச விட்டு வேடிக்கை பார்த்துவிட்டு பத்திரமாகக் கூட்டிச் செல்லும் காக்கி. இதுதான் சொறீலங்கா. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கவனிக்கவில்லை... நாதமுனி,
காணொளியில்..... எத்தனையாவது நிமிடத்தில் சொல்கிறார். 

தூசணப் பிக்கர் 'களைத்து' விழுந்து நகர்ந்த பிறகு....கடைசியாக..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

தூசணப் பிக்கர் 'களைத்து' விழுந்து நகர்ந்த பிறகு....கடைசியாக..

இப்போ கவனித்தேன், "ஒரு ஆமத்துறு, கதைக்கிற கதையா... இது " என்று சொல்கிறார்.
காணொளியின் 30´வது வினாடியில், "தம்பி" என்று... பிக்கு குறிப்பிடுவது முஸ்லிம்களை என நினைக்கின்றேன்.
"முஸ்லிம்களை தாம் அடக்கி விட்டதாகவும், இனி தமிழர்களை அடக்க  வேண்டும்" என்று குறிப்பிடுகிறார் என எண்ணுகின்றேன்.
அதனால்... தான், அங்கு நின்ற முஸ்லீம் நபர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

பங்குடாவெளியில் இந்து மதகுருவை மிரட்டும் பிக்கு!

6337_1479331882_PhototasticCollage-2016-11-16-22-26-01.jpg

நல்லாட்சியின் பின்னர் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றார்கள். அதனுடைய அடுத்த கட்ட நடவடிக்கையாகவே திடீர் என தமிழ் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவப்பட்டுக் கொண்டிகின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

இரு நாட்கள் முன் இதே பாணியில் அரச அலுவலகரான கிராமசேவையாளரை எச்சரித்தார்.
அதே முறையை பின்பற்றி தமிழரின் தாயகத்தில் காணிஉரிமையாளரும் மதகுருவான புவி ஐயாவை எச்சரிக்கும் போது.இதற்கு அணைத்து இந்துமதகுருக்கள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு பதுளை வீதியிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தனியார் காணிக்குள் அத்துமீறி நுளைந்தமையினால் ஏற்பட்ட பதற்ற நிலையை அறிந்து வருகைதந்தபோதே வியாளேந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,மட்டக்களப்பு விகாராதிபதி தமிழ் மக்களுடனும் பொலிஸாருடனும் தகாத வார்த்தைப் பிரயோங்களை பிரயோகிப்பது என பல்வேறு முறைகேடான விதத்தில் செயற்பட்டு வருகின்றார்.

அண்மையில் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் உட்பட கிராம சேகவருக்கு குறித்த விகாராதிபதியினால் ஏற்பட்ட அவமானம் என அடாவடித்தனத்தின் உச்சக்கட்டத்தை காட்டுகின்றது.

சேபித தேரர் வாழ்ந்த இந்த நாட்டில் இவ்வாறு காவி உடையை உடுத்திக்கொண்டு இலங்கையிலே தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபடுவதாக செல்லும் பட்டியலில் மட்டக்களப்பு விகாராதிபதி முதலிடத்தில் பெறுவார் எனவும் நினைக்கின்றேன்.

இவரின் செயற்பாடுகளும் அந்தளவுக்கு முறைகேடான விதத்தில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் புத்தர் சிலை மற்றும் பன்சாலை இருந்ததாகவும் கூறி ஒரு குழப்பத்தை விகாராதிபதி ஏற்படுத்துகின்றார்.

இந்த செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும் இதன்போது கூறியுள்ளார்.குறித்த காணி 9 ஏக்கர் பரப்பளவை கொண்டமைந்ததாகவும் விகாரை இருந்ததாகவும் காரணத்தை காட்டி தனியார் காணிக்குள் அத்துமீறியுள்ளார்.

பொலிஸாருடனும் மிகவும் முறைகேடான விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.

காணிக்குள் அத்து மீறி நுளையக்கூடாது என நீதிமன்ற கட்டளை இருந்தும் நீதிமன்ற சட்டத்தை மீறி செயற்படுகின்றார்.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்கம் ஏற்பட்டு கொண்டிருக்கின்ற தருனத்தில் இவ்வாறானதொரு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையிலே இன முறுகலை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு விகாராதிபதி போன்றவர்கள் மாவட்டத்தில் இருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். உரிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலர் கருதுகின்றார்கள் அரச மரம் இருந்தால் அங்கு புத்தர் சிலை இருக்கவேண்டும், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறு இல்லை, இப்பிரதேசம் தமிழர் பூர்வீகமாக வாழ்ந்த இடம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://battinaatham.com/description.php?art=6337

https://www.facebook.com/venampitiye.sumanarathanathero

இது அந்த சிங்கள பெளத்த இனவாதப்  பிக்குவின் முகநூல் பக்கம். தொடர்ச்சியாக முறையிட்டால் (Report) இவரது பக்கத்தினை மூட வைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

விகாராதிபதி அவர்களே

தமிழர் என்றால் புலிகள்
புலிகள் என்றால் தமிழர்

இதை மிச்சம் மீதி உள்ள சிங்கள மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பூ..

எலிக்கும் பூனைக்குக்கும் என்னா விரோதம் ? ஒன்றுமே கிடையாது.. அது பிறப்பாலே விரோதம் .. கீரிக்கு பாம்பு..ஆட்டுக்கு குரங்கு.. இன்னும் பல இந்த விலங்கினங்கள் எல்லாம் ஏன் பிறந்ததில் இருந்தே ஒன்றுக்கு ஒன்று எதிராக செயல்படுகின்றன ..? நம்பிக்கை இல்லையென்றால் இன்று பிறந்த பூனை குட்டியை தூக்கி  கொண்டு போய் இன்று பிறந்த நாய் குட்டியிடம் போய் காட்டுங்கள் .. நம்முடைய பார்வையில் இரண்டும் குழந்தைகள்தான் ஆனால் இரண்டும் மீட் செய்யும் போது இரண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து உறுமும் .. யார் இந்த விரோதத்தை ஊட்டி விடுகிறார்கள் ..? மனிதர்களா ?ரெல்மீ ?  ஒன்றுமே கிடையாது.. ஆனால் கடவுள் மனிதருக்குள்ளும் இந்த குரோததத்தை வளர்த்துவிட்டு இருக்கிறான்... சிங்களன்  vs தமிழன் ..கன்னடன் vs  தமிழன் ..மலையாளி vs  தமிழன் vs தெலுங்கன் இதுல யார் யார்கிட்ட தமிழன் தன்னின்ட பகையை காமிச்சான் என்று தெரியல ..உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க ..!!

நான் சொல்கிறேன் பூமின்யிற  ஆடிட்டருக்கு கணக்குதான் முக்கியம் .. சரியான எடையோட பூமிய தங்க வைக்க வேண்டும் அதில் சாகுறவன் தமிழனா அல்லது வேற எவனா என்று ஆடிட்டருக்கு தேவையும் கிடையாது..எவன் இளித்தவாயனோ அவனை போட்டு தாக்கிவிடுகிறார்கள்

டிஸ்கி:

இதற்கு தீர்வே இல்லையா  ? என்று கதைக்கின்ற்போது அத்தி பூத்தாற் போல சிலர் பூமிக்கு வருவார்கள் .. அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் ..  அதைவிடுத்து இப்போ குத்துது குடையுது என்றால் மறுபடி எப்படி வருவார்கள் ..!! நல்லது சார்!!  நீங்க ஜனநாய்கம் பற்றி கதைக்கிறீங்கள் .. ஆனால் கீரி /பாம்பு போல அடிப்படையே தெரியாம உங்களுக்குள்ளே கதைத்து கதைத்து சாக போகிறீர்கள் !!! அதாவது பூனை எலியை உயிரோடு விட்டுவிடுவது போல..!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

விகாராதிபதி அவர்களே

தமிழர் என்றால் புலிகள்
புலிகள் என்றால் தமிழர்

இதை மிச்சம் மீதி உள்ள சிங்கள மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

Quote

உண்மை.அப்தான் அங்கை மாட்டுப்பட்ட மிச்ச எம் உறவுகளும் இங்கு வந்து சேர வசதியாக இருக்கும்.அப்புறம் பிரச்சனை திர்ந்த மாதிரித் தேனே.:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.