Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கியூப தேசத்தினருக்கு வாழ்வளிக்கும் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Image result for cuban cigar

 

கனடாவிலுள்ள தமிழர்களிற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது கியூபா. அங்கே பல தமிழர்களிற்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மை தற்போது கியூபர்களாலேயே வெளிக் கொணரப்படுகின்றது.

அண்மையில் வாகணங்கள் திருத்தும் நிலையத்திற்கு சென்ற ஒருவர் கிழக்கு ஐரோப்பியரான வாகணந் திருந்துனரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திருமணமாகி விட்டதா எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த மேற்படி வாகணந் திருந்துனர் தான் வருடத்திற்கு இரண்டு முறை கியூபாவிற்கு சென்று வருவதாகவும் அங்கேயுள்ள ஒரு கியூபப் பெண்ணை தனது காதலியாக வைத்திருப்பதாகவும் கூறினார்.

அப்போது அவரை எப்போ இங்கே அழைத்து வரப் போகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் இங்கு அழைத்து வருவதற்காக அல்ல, அவர் அங்கேயே தான் தொடர்ந்து இருப்பார். நான் வருடாவருடம் சென்று வருவேன் எனத் தெரிவித்தார்.

கதையோடு கதையாக நீங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர் என கார் திருத்தச் சென்றவரிடம் கேட்க அவர் நான் ஒரு தமிழன் சிறீலங்காவைச் சேர்ந்தவன் எனத் தெரித்தார்.

பலமாகச் சிரித்த கார் திருத்துனர் என்னுடைய காதலி இருக்கும் தெருவில் சில தமிழர்களும் காதலிகளை வைத்திருக்கின்றார்கள். அந்தத் தமிழர்கள் வண்டியும் தொந்தியுமாக ஏற்கனவே கல்யானம் செய்து இங்கே மனைவி, பிள்ளைகளை வைத்துக் கொண்டு அங்கு களவாகக் குடும்பம் வைத்திருக்கின்றார்கள் என்றார்.

இதனை கேட்ட தமிழருக்கு இருக்கப் பொறுக்கவில்லை. அவர் சட்டஞ்சார்ந்த துறையில் பணியாற்றும் தனது நண்பரிடம் இதுபற்றிக் கேட்ட போதுஅவர் இது உண்மை, பல குடும்பங்கள் இதனால் பிரிந்திருக்கின்றன. அமெரிக்காவிற்குச் வேலை நிமிர்த்தமாக ஒரு வாரம் செல்கின்றேன், ஐரோப்பாவிற்குச் ஒரு வாரம் செல்கின்றேன் எனக் கூறிகியூபா சென்று வருபவர்கள் அங்கேயுள்ள கியூப மனைவிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட சம்பங்களை இவருடன் பகிர்ந்தார்.

அதாவது கியூபப் பெண்கள் தங்களிற்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன் இங்குள்ள மனைவியுடன் தொடர்பு கொண்டு உண்மைகளை உடைத்துப் போடுகின்றார்கள். இதனால் இங்குள்ள குடும்பங்கள் பிரிய அகப்படும் நபரோ கியூபப் பெண்மணியே தஞ்சம் என்று தொடர்ந்து சென்று வருகின்றார்.

இன்னொரு விவகாரத்தில் ஒருவர் டூபாயில் ஒரு வியாபார முயற்சி சம்பந்தமாக பேசப் போகின்றேன் என மனைவியிடம் கூறி கியூபாவிற்குச் செல்ல, அந்த நபரின் தமையனாரே இல்லை உணது கணவர் கியூபாவிற்குச் சென்று விட்டார். எனது நண்பர் அங்கே கண்டார் எனக் கூற அந்தக் குடும்பமும் பிரிந்தது.

இன்னொருவரோ கடற்கரையில் இரவுப் பொழுதென இரண்டு பதின்ம வயதுப்பெண்களைக் கட்டித் தழுவியபடி செல்ல, அந்த இருட்டிலும் அவரை அடையாளம் கண்ட உண்மையான விடுமுறைக்குச் சென்ற தமிழ் இளைஞர்கள், நாயே நீ உண் பெண்பிள்ளையின் வயதையுடைய பிள்ளைகளை அநியாயமாக்குகிறாய் என அவரது முகத்தில் துப்பியது போது,

அவருடன் இருந்த பெண்கள் தப்பியோட அவர் எதுவும் நடக்காத மாதிரி சென்றதாகவும் மேற்படி நபருக்குத் தெரிவித்திருக்கின்றார். எனவே கனடாவிலுள்ள தமிழ்ப் பெண்களின் குடும்பங்களைச் சிதைக்கும் நபர்களாக கியூபப் பெண்கள் மாறியுள்ளதும்,

அதேவேளை கியூபாவிற்குச் சென்று அங்குள்ள பெண்களிற்கு வாழ்வு கொடுக்கும் நபர்களாக மணமுடித்த தமிழர்கள்சிலர்மாறியிருப்பதும் தமிழர்களின் ஒரு சமுதாயச் சிதைவாகவே பார்க்கப்படுகின்றது.

இன்னொரு தமிழரோ கனடாவிலேயே தனது குடும்பஞ்சார்ந்த பார்ட்டி ஒன்றிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு மதுபோதையில் வந்தவர். மனைவி எரிபொருள் நிரப்ப, காசு கொடுப்பதற்காக உள்ளே சென்றவர். பணம் பெறுபவராக நின்ற கியூபப் பெண்ணுடன்,

சரளமாக ஸ்பானிய மொழியில் உரையாடி, தனக்குப் பின்னால் மனைவி நிற்பதையும் கவனிக்காமல், தான் கியூபாவிற்கு அடிக்கடி சென்று வருவதாகக் கூறிமங்களகரமாகஎரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே வாங்கிக் கட்டி, இப்போது குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்தி வைத்திருக்கின்றப்பட்டுள்ளார்.

இன்னமும் சிலரோ குடும்பத் துணையைப் பிரிந்து வாழ்ந்து வருகின்ற படியால், நான் மன ஆறுதலிற்காக இந்தியா சென்றேன், ஐரோப்பாவிலுள்ள நண்பர்களைப் பார்க்கச் சென்றேன் என்று வாலி பட அஜித் பாணியில் இரண்டு மனநிலைகொண்டு கியூபாவை நாடிச் செல்கின்றனர்.

- See more at: http://www.canadamirror.com/canada/74692.html#sthash.NZ6zZPQd.qB0EqUZu.dpuf

Edited by colomban
picture added

உலகம் தோன்றிய காலததில் இருந்து நடைபெறும் சாதாரண ஒரு சில சம்பவங்களே இவை. இனனும் ஆயிரம் ஆண்டுகளுககு பிறகும் இவை நடைபெற்று கொண்டு தான் இருககப்போகிறது.  

தனி மனிதர்களின் Personal life  ல் நடக்கும் ஒரு சில சிறிய சம்பவங்களைப் பெரிது படுத்தி அதை ஒட்டுமொத்த சமுதாய பிரச்சனை போல காது, மூக்கு வைதது  எழுதும் கீழ்ததரமான தமிழ் ஊடக கலாசசாரததிற்கு இந்த செய்தி உதாரணம். முதலில் மறறவர்களின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடாமை என்ற உயர்ந்த கலாசசாரததை நீங்கள் கடைபபிடியுங்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களில் வக்கிரத்துடன் நாகரீகம்  இன்றி எழுதும் உங்களுக்கு கலாச்சார சீரழிவு பற்றிப்  பேச எந்த தகுதியும் இல்லை 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா, கொழும்பான்,

வில்லங்கமான சமாச்சாரங்களோட தான் வருவியள்.

இந்த முறை பறிக்குளயே கை வைக்கிறியள்.

கந்தசஸ்டி, திருச்செந்தூர் போய், சூரசம்காரம் பார்த்தால் தான் கட்டவேகும் என்று கிளம்புற ஆக்களப்பா நாங்க.

அதுக்கு உலை வையாதீங்கப்பு. :grin::grin: 

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அய்யா, கொழும்பான்,

வில்லங்கமான சமாச்சாரங்களோட தான் வருவியள்.

இந்த முறை பறிக்குளயே கை வைக்கிறியள்.

கந்தசஸ்டி, திருச்செந்தூர் போய், சூரசம்காரம் பார்த்தால் தான் கட்டவேகும் என்று கிளம்புற ஆக்களப்பா நாங்க.

அதுக்கு உலை வையாதீங்கப்பு. :grin::grin: 

 

யாழ் புகையிலைக்கும் cuban cigar இற்கும் சரியான பொருத்தம்.:grin::grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, colomban said:

யாழ் புகையிலைக்கும் cuban cigar இற்கும் சரியான பொருத்தம்.:grin::grin:

இவர் கொழும்பிலை......சிங்கள ஏரியாக்களிலை பொயிலைக்கடை பலசரக்கு கடையள் வைச்சிருந்த யாழ்ப்பாணத்து முதலாளியளை கிண்ட வெளிக்கிடுறார் போலை கிடக்கு...
ஏனெண்டால்  ஊரிலை மனுசி பிள்ளையள் இருக்க.......:cool:

அங்கை சிங்கள நோனாக்களை எடுபிடி வேலைக்கும் எட்டிப்பிடிச்சு...........எண்டு வேலைக்கு வைச்சிருந்தவையெல்லே tw_tounge_xd:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இவர் கொழும்பிலை......சிங்கள ஏரியாக்களிலை பொயிலைக்கடை பலசரக்கு கடையள் வைச்சிருந்த யாழ்ப்பாணத்து முதலாளியளை கிண்ட வெளிக்கிடுறார் போலை கிடக்கு...
ஏனெண்டால்  ஊரிலை மனுசி பிள்ளையள் இருக்க.......:cool:

அங்கை சிங்கள நோனாக்களை எடுபிடி வேலைக்கும் எட்டிப்பிடிச்சு...........எண்டு வேலைக்கு வைச்சிருந்தவையெல்லே tw_tounge_xd:

ஐயா, 

ஏன் எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொள்கிறிர்கள்?

மேலே உள்ள கருத்து நாதமுனிக்கு விளையாட்டுக்காக எழுதப்பட்டது.

இந்த கருத்தால் உங்கள் மனம் பாதித்திருந்தால் மன்னியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, colomban said:

ஐயா, 

ஏன் எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொள்கிறிர்கள்?

மேலே உள்ள கருத்து நாதமுனிக்கு விளையாட்டுக்காக எழுதப்பட்டது.

இந்த கருத்தால் உங்கள் மனம் பாதித்திருந்தால் மன்னியுங்கள்.

அதையே நானும் திருப்பி சொல்கிறேன்.:)

cuban girls singing tamil song

 

 

Japan girls dance for Tamil song

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கே கியூபாவில்  உதயத்திலிருந்து  மேற்கே யப்பானில் அஸ்தமனம் வரை தங்கத் தமிழ் தவழ்ந்து விளையாடுகின்றது ....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கியூபா கேள் பாடும் பாடல் பிடித்து இருக்கிறது நல்லாதானே இருக்கிறது பாடல் :unsure:

On 25/11/2016 at 5:12 AM, suvy said:

கிழக்கே கியூபாவில்  உதயத்திலிருந்து  மேற்கே யப்பானில் அஸ்தமனம் வரை தங்கத் தமிழ் தவழ்ந்து விளையாடுகின்றது ....! tw_blush:

சிறு  திருத்தம் " கிழக்கே  யப்பானில் உதயத்திலிருந்து  மேற்கே கியூபாவில்   அஸ்தமனம் வரை தங்கத் தமிழ் தவழ்ந்து விளையாடுகின்றது ....! tw_blush:"

 

On 24/11/2016 at 11:04 PM, Knowthyself said:

cuban girls singing tamil song

 

 

Japan girls dance for Tamil song

 

 

இவர்  ஜப்பானியர் அல்ல , சீனர் போல தோன்றுகிறது...............

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kayshan said:

சிறு  திருத்தம் " கிழக்கே  யப்பானில் உதயத்திலிருந்து  மேற்கே கியூபாவில்   அஸ்தமனம் வரை தங்கத் தமிழ் தவழ்ந்து விளையாடுகின்றது ....! tw_blush:"

 

 

 

கவனித்தேன், திசை தவறிவிட்டேன் திருத்தியதற்கு நன்றி.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 11/25/2016 at 4:04 AM, Knowthyself said:

cuban girls singing tamil song

 

 

அப்படியே தேப்பனை மாதிரியே இருக்குது புள்ளை ... :grin: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Nathamuni said:

அப்படியே தேப்பனை மாதிரியே இருக்குது புள்ளை ... :grin: 

உண்மைதான்....மண்வாசனை முகத்திலை தெரியுது.....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அப்படியே தேப்பனை மாதிரியே இருக்குது புள்ளை ... :grin: 

ஐயோ, ஐயோ இது புள்ளையில்லை. இது தான் தாய். நீங்கள் வேற :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, vaasi said:

ஐயோ, ஐயோ இது புள்ளையில்லை. இது தான் தாய். நீங்கள் வேற :cool:

கோதாரி விழ  இதென்ன புதுக்கதையாய் கிடக்கு..:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vaasi said:

ஐயோ, ஐயோ இது புள்ளையில்லை. இது தான் தாய். நீங்கள் வேற :cool:

அட, நீங்கள் தானோ அந்த... கீயூபாக்காரர்? (ப்ரோபைல் லொகேஷன் 'கனடா' எண்டுது. சரிதான்.)

பொறி வைச்சுப் பிடிச்சம், பார்த்தியளே... மச்சக்காரர்ரையா, நீங்கள்.

:grin: :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vaasi said:

ஐயோ, ஐயோ இது புள்ளையில்லை. இது தான் தாய். நீங்கள் வேற :cool:

சரி...சரி .... பிள்ளையின்ர படத்தையும் போட்டு விடுங்கோ, எல்லோரும் வரிசையாய் வந்து வாழ்த்தி விட்டுப் போகிறோம் ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அட, நீங்கள் தானோ அந்த... கீயூபாக்காரர்? (ப்ரோபைல் லொகேஷன் 'கனடா' எண்டுது. சரிதான்.)

பொறி வைச்சுப் பிடிச்சம், பார்த்தியளே... மச்சக்காரர்ரையா, நீங்கள்.

 

1348488761322-smiley_rofl.gif

[அட, நீங்கள் தானோ அந்த... கீயூபாக்காரர்? (ப்ரோபைல் லொகேஷன் 'கனடா' எண்டுது. சரிதான்.)

பொறி வைச்சுப் பிடிச்சம், பார்த்தியளே... மச்சக்காரர்ரையா, நீங்கள்.]

:8_laughing:

Edited by Knowthyself

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2016 at 1:29 AM, Nathamuni said:

அட, நீங்கள் தானோ அந்த... கீயூபாக்காரர்? (ப்ரோபைல் லொகேஷன் 'கனடா' எண்டுது. சரிதான்.)

பொறி வைச்சுப் பிடிச்சம், பார்த்தியளே... மச்சக்காரர்ரையா, நீங்கள்.

:grin: :grin: 

சரி, இப்படி யாரும் சொல்வதை கேட்டாவது சந்தோஷப்படுவம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.