Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டம் என்னும் கழுதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் என்னும் கழுதை

சட்டம் சில நேரங்களில் தேமே என்று கழுதையாகும் (அவிஞ்சு போகும்) சில விடயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம்.

பிரித்தானியாவில் கணவன், மனைவி காரில் பயணிக்கிறார்கள். வேகமாக செல்லும் போது, கமரா படம் பிடித்து விடுகிறது. அக்கணத்தில் யார் கார் ஓடியவர் என்று சொல்ல வேண்டியது காரின் சொந்தக் காரரின் சட்ட பூர்வ கடமை.

ஒருவரை ஒருவர் காக்க முடிவெடுத்த தம்பதிகள், மாறி, மாறி ஓடினோம்.... கமரா அடித்த அந்தக் கணத்தில் யார் ஓடினார் என்று சொல்ல முடியவில்லை என்று சொல்ல, சட்டம் கழுதை போல விழித்து, இனி கவனமாக ஓடுங்க மக்கா என்று சொல்லி அனுப்பியது. 

ஏனெனில் யார் மேல் பிழை இருக்கும் என, சட்டம் சுஜமாக தெரிவு செய்ய முடியாது.

அதே போன்ற ஒரு ஆவுஸ்திரேலியரின் கதை தான் இது.

இதில் முக்கியமானது இதில் சம்பந்தப் படடவர் தானே தனது வழக்கினை நடத்தி வென்றது.

வாசித்துப் பாருங்கள். 

Luke Brett Moore bought paintings, cars and a boat with the money he kept withdrawing from a St George bank account.

ஆஸ்திரேலியர், லூக் மூர். 22 வயது இளைஞர். நல்ல வேலை, நல்ல சம்பளம். வீடு வாசல் என்று அமோகமாக இருந்தார் அவர்.

ஒரு நாள்.... மேனேஜர் அழைத்தார். கம்பனி கவுளப் போகுது. ஒருமாதம்.... வேறு வேலை பார்த்துக் கொள்ளப்பா.

வேலை அவ்வளவு இலகுவாக கிடைப்பதாக இல்லை. இரண்டாவது மாதத்தில் பணமெல்லாம் முடிய, அடுத்த வாரம் வரும், வீட்டுக் கடன் கட்டிட பணம் இல்லை.

தலையா போகப் போகுது. வீட்டின் மேல் கடன் தந்தவன், எடுத்தால் எடுத்து விட்டுப் போகட்டும். இருக்கும் வரை இருப்போம் என முடிவு காட்டினார் அவர்.

தபாலில் ஏதாவது, பாசக் கடிதம், கண்ணீர்க்கடிதம், வங்கியில் இருந்து  வரவேணுமே என்று பார்த்தார்,  தவமாய் தவமிருந்தார், தினம்தோறும்.

ஒன்றையும் காணோம். என்னடா இது... வெளையாடுறீங்களா?

அடுத்த மாதமும் கடந்தது. மூச்சு... ஆகா... என்னாச்சுடா உங்களுக்கு... மெதுவாக வீட்டு அடமான வங்கிக்கு போனை போடடார்.

வடிவேலு வைன் சாப் ஓனருக்கு போன் போட்ட மாதிரி, போனைப் போட்டார். 'ஹலோ பேங்க் ஆபிஸரா... நம்ம பாலன்ஸ் என்னன்னு சொல்லுவீங்களா' என்னு கேட்டார். 

அதிர்ந்து போனார். மாசாமாசம் கணக்காக, அவரது தனிப்படட வங்கி பணத்தினை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

என்னடா இது.... நம்ம அப்பா, அம்மா அல்லது பழைய கொம்பனி ஏதாவது அமௌண்டு போட்டு தள்ளி விட்டார்களா?. 

வங்கிக்கு போனைப் போட நினைத்தார்... ம்ம்..கதைச்சு, அவனுகளை குழப்பக் கூடாது. மெதுவாக பக்கத்தில் இருந்த cash point ல், இழுத்து விடும் என்று பயந்தவாறே மட்டையை போட்டு ஸ்டேட்மெண்ட் எடுத்துக் பார்த்தால்... ஓவெர்ட்ராப்ட்டில கதை ஓகோன்னு ஓடிட்டிடு இருக்குது.

அட சொல்லவே இல்லை... பிக்காலிப் பயலுங்களே.. சரி... செலுவுக்கு காசில்லை... ஒரு $100... ஆ.. வருதே..

என்னங்கடா நடக்குது நாட்டிலே...

வீட்டுக் கடன் வங்கிக்கு போனைப் போடடார், டைரக்ட் டெபிட்டில், ஒரு $5,000 டொலரை எனது வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்.

ஆகா... இந்த வித கேள்வியும் இல்லாமல் பணம் மாறியது. சில நாட்களின் பின்னர், இம்முறை $50,000 டொலரை எனது வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அவருக்கே ஆச்சரியம்.. அதுவும் சக்ஸஸ்.

வரையறை இல்லா கடன் வசதி ஒன்று, ஏதோவகையில் தனது கணக்கில் சேர்க்கப் பட்டுள்ளது என விரைவிலேயே புரிந்து கொண்டார் லூக்.

முடிவு கட்டிவிடடார். எல்லை எதுவென பார்த்துவிடுவதென்று.

விரும்பிய கார்கள், கேளிக்கை விடுதிகள், மது, கூடவே பெண்கள், போதைபொருள் என ஆட்டும் களை கட்டியது.

One of the purchases Luke Moore treated himself to

One of the purchases Luke Moore treated himself to

என்றாவது ஒருநாள் கதவு தட்டப்படும் என்று தெரிந்து இருந்தது. ஆனால், வீட்டுக் கடன் கட்டி முடித்து விட்டதால், ( ! ) வீட்டுக்கு பிரச்னை வராது என்று நினைத்தார்.

2010 ஜூலை மதம் முதல் 2012 ஆகஸ்ட் மாதம் வரை வரை அவர் தனது கணக்கில் இருந்து இழுத்தெடுத்த தொகை $1,988,535.25. அதாவது 2 மில்லியன் டொலர்கள்.

வீட்டினை வித்து, வேறு வீடு வாங்கிக் கொண்டார், வியாபாரமும் செய்தார்.

ஒரு நாள் கதவு தட்டுப் பட்டது. போலீசார்....

வங்கியினை கொள்ளை அடித்த கிரிமினல் போல் இழுத்துச் செல்லப் பட்டார். திருட்டுப் பணத்தில் வாங்கியவை என  வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் போலீசார் எடுத்துச் சென்றனர். 

வழக்கு முடிந்து, 12 ஜுரர்கள் கொண்ட கீழ் நீதிமன்றினால், தனக்கு சொந்தமில்லா பணத்தினை எடுத்து செலவு செய்தார். அது திருட்டு வேலை என, 4 ஆண்டுகள் உள்ளே தள்ளப்பட்டார். 

சிறை வாழ்வு கஸ்ட்மாக இருந்தது. வெளியே போக வேண்டும் என்ன செய்வது.

பிணையில் வருவதனால், வழக்கு நடத்த பணம் வேண்டும்.. இவ்விடயத்தில் அரச உதவி (legal aid) கிடைக்காது. வேறு இரு வங்கிகளில் போட்டு வைத்திருந்த $1.1 மில்லியன் பணத்தையும் புடுங்கி விட்டார்கள்.

உறவினர்களோ, நண்பர்களோ இல்லை, இப்போது அவருக்கு... உலக வழக்கம் தானே...

தனக்குத் தானே வாதாட வேண்டும். சிறையில் இருந்து கொண்டே, தனது வழக்கு தொடர்பான சட்ட நுணுக்கங்களை வாசித்து, படித்து அறிந்து கொண்டார்.

அதேவேளை, நல்லவேளையாக, அவருக்கு லீகல்  எயிட் கிடைத்தது.

அவருக்காக வாதாட வந்த பாரீஸ்டருக்கு அவரே, பாயிண்ட் மேல பாயிண்ட் எடுத்துக் கொடுத்து அசத்தினார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளே போனவருக்கு, செப்டம்பர் மாதம் பெயில் கிடைத்தது.

மேல் முறையீடு வழக்கு கடந்த வாரம் மத்திய கிரிமினல் நீதிமன்றுக்கு வந்தது. மிக நேர்த்தியாக தயார் நிலையில் வந்திருந்தார் அவர்.

இன்று வந்த, உலகெங்கும் சும்மா அதிர வைக்கும் தீர்ப்பு இதோ: 

  • அவர், தனது வேலை இழக்கும் நிலை குறித்து வங்கிக்கு சொல்ல வேண்டிய சட்ட கடமைப்பாடு இருக்கவில்லை. 
  • மேலும், தனக்கு வேலை ஒன்றின் மூலமாக மாதா மாதம் பெரும் தொகை பணம் வருவதாக, காட்டும் வகையில் அவர் மாதா மாதம் பெரும் தொகையினை, குறித்த திகதியில் வைப்பிட்டு, தான் குறித்த, வங்கியின் (financial assesment ) மதிப்பீட்டினை குழப்பி அடிக்கும் வேலை எதனையும் செய்யவில்லை.
  • மேலும், வங்கியின், அவர் தொடர்பான கோப்புகளில் அல்லது கம்ப்யூட்டர் பதிவுகளில் (Hacking )அவர் எதுவுமே செய்தில்லை. செய்யுமாறு கோரி, வங்கி ஊழியர் எவரையுமே அணுகவும் இல்லை. அழுத்தம் பிரயோகிக்கவும் இல்லை.  
  • வங்கி தனது கடமையினை ஒழுங்காக செய்யாமல், அடுத்தவர் திருடர் என்று சொல்ல முடியாது. 
  • ஒரு வாடிக்கையாளருக்கு ஓவெர்ட்ராப்ட் வசதி அளிப்பது, எவ்வளவு வரை கொடுப்பது என்பது வங்கிகளின் முடிவே அன்றி, வாடிக்கையாளர் முடிவு அல்ல. 
  • அந்த வகையில், $2 மில்லியன் கடன் கொடுக்கப் பட்டுள்ளது. கொடுக்கப் படும் கடனை எவ்வாறு செலவு செய்தார் என்பதை வைத்து, அது திருட்டு பணம் என்று சொல்ல முடியாது.  
  • அவர் தனது கணக்கில் இருந்து மட்டுமே பணம் பெற்றுக் கொண்டார் (மட்டைக் கோஸ்டிகள் கவனிக்க). அதை தடுக்காமல் அல்லது ஓவெர்ட்ராப்ட் வசதிக்கான லிமிட் வைக்காமல்,   அதற்கான காலவரையறை வையாது போனது வங்கியின் தவறு.  தவறினை அழகாக செய்து விட்டு, அவரை திருடர் என்று சொல்ல முடியாது.
  • அவர் மீது கீழ் நீதிமன்றில் வழங்க்கப் பட தீர்ப்பு ரத்து செய்யப் படுகின்றது. 

முழு விடுதலை அடைந்து விட்டார் லூக்.

இப்போது, தன்னை சிறையில் தள்ளிய வங்கி மேல் வழக்கு போட்டு காசு பார்க்கலாமா என்று யோசிக்கிறார் அவர்.

அதேவேளை, தன் மேல் கிரிமினல் பதிவுகள் இல்லாமல் போவதால், தான் சட்டம் படித்து, சிறையில், வழக்காட வசதி இல்லாமல் வாடிக் கொண்டிருக்கும் சகாக்களுக்கு உதவப் போவதாக சொல்கிறார்.

தான் கீழ்நீதிமன்றில் குற்றவாளியாக காணப்பட்டதற்கு, சட்டமே தெரியாமல் வழக்குப் பேச வந்த பிறக்கிறாசிமார் தான் காரணம் என்கிறார்.

மேலதிக தகவல்

இப்போது கதை என்னெவெனில், ஊர் உலகத்து, பிரகிராசிமார் எல்லாம் tv பேட்டி குடிக்கினம்.

ஓவெர்ட்ராப்ட் கொடுத்துவிட்டு, அதனை திருப்பி கட்டு என்று எந்தவித demand கடிதம் போடாமல், திருட்டு என்று போலீசாரை அழைத்ததும் பிழை, ஒரு சிவில் வழக்கில் போலீசார் அவரை கைது பண்ணியதும், கிரிமினல் வழக்காக கீழ் நீதிமன்று அனுப்பியதும் பிழை. கீழ் நீதிமன்று சிறைக்கு அனுப்பியதும் பிழை.

ஆகவே அவர் போலீசாருக்கு எதிராக வழக்குப் போடலாம்.

யாழுக்காக... அடியேன்....

மூலம் தேடுபவர்கள் Luke Brett Moore என்று கூகிளார் இடம் கேளுங்கள்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Nathamuni said:

பிரித்தானியாவில் கணவன், மனைவி காரில் பயணிக்கிறார்கள். வேகமாக செல்லும் போது, கமரா படம் பிடித்து விடுகிறது. அக்கணத்தில் யார் கார் ஓடியவர் என்று சொல்ல வேண்டியது காரின் சொந்தக் காரரின் சட்ட பூர்வ கடமை.

ஒருவரை ஒருவர் காக்க முடிவெடுத்த தம்பதிகள், மாறி, மாறி ஓடினோம்.... கமரா அடித்த அந்தக் கணத்தில் யார் ஓடினார் என்று சொல்ல முடியவில்லை என்று சொல்ல, சட்டம் கழுதை போல விழித்து, இனி கவனமாக ஓடுங்க மக்கா என்று சொல்லி அனுப்பியது. 

ஏனெனில் யார் மேல் பிழை இருக்கும் என, சட்டம் சுஜமாக தெரிவு செய்ய முடியாது.

கேக்கிறனெண்டு கோவிக்கக்கூடாது....ஓவர் ஸ்பீட்டுக்கு படம் அடிச்சால் ஓடினவற்றை படத்தோடை பில் வராதோ???? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

கேக்கிறனெண்டு கோவிக்கக்கூடாது....ஓவர் ஸ்பீட்டுக்கு படம் அடிச்சால் ஓடினவற்றை படத்தோடை பில் வராதோ???? :cool:

இங்கு காரின் பின் பக்கம் படம் அடிப்பதால் ஆள் யார் என்று தெரியாது. 

முன்பக்கம் படம் எடுத்ததற்கு முன்னர் கேஸ் நடந்தது என்று கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

பின் பக்கமாப் படம் பிடிச்சிருக்கும் காரை

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கும் ஒரு பிறக்கிறாசியை வைக்க வேண்டி இருக்கு....ஒரு இடத்தில பதிஞ்சுட்டு இன்னொரு இடத்தில நின்டு தேடத்தான்..:p

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

இங்கு காரின் பின் பக்கம் படம் அடிப்பதால் ஆள் யார் என்று தெரியாது. 

முன்பக்கம் படம் எடுத்ததற்கு முன்னர் கேஸ் நடந்தது என்று கேள்வி

ஆம் முன்பக்கம் படத்தை எடுத்துப் போட்டு, புறூப் என்று வீட்டு விலாசத்துக்கு அனுப்ப, பக்கத்தில இருந்தவோ, வேலையிட அம்மணி. 

கோவத்தில, வீட்டுக்கார அம்மணி, விவாகரத்து என்று கிளம்ப, குடுப்பத்துக்குள்ள பிரச்சணை உங்களாள. நான் மறுத்திருந்தால் தானே புறூப் அனுப்பியிருக்கவேண்டும் என்று சொல்லி வழக்கைப் போட்டு காசு உருவீட்டார்.

அதன் பிறகு படம் எல்லாம் அனுப்பிறேல்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, MEERA said:

இங்கு காரின் பின் பக்கம் படம் அடிப்பதால் ஆள் யார் என்று தெரியாது. 

முன்பக்கம் படம் எடுத்ததற்கு முன்னர் கேஸ் நடந்தது என்று கேள்வி

இஞ்சை ஜேர்மனியிலை முன்பக்கம் பின்பக்கம் எண்டு விளாவரியாய் படத்தோடை வரும்.
முந்தியொருக்கால் உப்புடித்தான் பின்பக்கம் அடிச்ச படத்தோடை காசு கட்டச்சொல்லி பில் வந்தது...அப்ப நான் என்ரை மூளையை பாவிச்சு கார் ஓடினவர் கனடாவிலையிருந்து  வக்கேசனுக்கு வந்தவர்ரை வேலையெண்டு ஒரு ரீலை விட்டு தப்பிச்சிட்டன்.
இரண்டாம்தரமும் உதே ரெக்னிக்கை யூஸ்பண்ண வெளிக்கிட படங்களோடை டபுளுக்கு றிபுளாய் அடிச்சான் பாருங்கோ ஒரு பில்........இன்னும் சூடு ஆறேல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எவனோ ஒரு மகராசன் வங்கில மில்லியன் கணக்கில ஆட்டையைப் போட்டு வங்கியையே வங்குரோத்தாக்கிப் போட்டு கெத்தாய் வாரார். அதையெல்லோ விவாதிக்க வேண்டும்...! 

ஸ்ரூடியோவில ஆடாமல் அசையாமல் நிக்க வைத்து படம் எடுத்துட்டு 20 ஈரோ வாங்குறான். இவன் 160 கி. மீ வேகத்தில போகேக்கை துல்லியமாய் படமெடுத்து வீட்டுக்கே அனுப்புறான், 90 ஈரோ குடுத்தால் நட்டமா....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் ஒரு இருட்டறை தான்...இது தொடர்பான நூல்களை வாசித்தால் வடிவாய் சட்டத்தை ஏமாத்தலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இங்கு காரின் பின் பக்கம் படம் அடிப்பதால் ஆள் யார் என்று தெரியாது. 

முன்பக்கம் படம் எடுத்ததற்கு முன்னர் கேஸ் நடந்தது என்று கேள்வி

அமெரிக்காவில் யார் வண்டி ஓட்டினாலும் கமராவில் பிடிபட்டால் வண்டி சொந்தக்காரனுக்கு தண்டம் வந்து சேரும்.

ஒரே ஒரு நன்மை புள்ளிகள் தப்பிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் யார் வண்டி ஓட்டினாலும் கமராவில் பிடிபட்டால் வண்டி சொந்தக்காரனுக்கு தண்டம் வந்து சேரும்.

ஒரே ஒரு நன்மை புள்ளிகள் தப்பிவிடும்.

 

இங்கும் அப்படித்தான்.

காரின் இலக்கத்தினை வைத்து, உரிமையாளருக்கு கடிதம் அனுப்புவார்கள்.

கார் உரிமையாளருக்கு  இதிலுள்ள சட்ட கடமை (Legal Obligation) ஒன்று ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது காரை அந்த நேரம் யார் ஓடினார்கள் என்று தெரிவிக்க வேண்டும்.

இந்த இரண்டாவது ஓட்டையில் வழியே தான் பலர் தப்புகிறார்கள்.

மேலே சொன்ன கணவர், மனைவி, குமாரசாமியர் எல்லோரும். அந்த கணவன், மனைவி பாவித்தது நுணுக்கமானது. அதை பலர் பாவித்து தப்பி உள்ளனர்.

ஆனால், ஒருமுறை நம்புவார்கள். இரண்டாம் முறை கடினம். 

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்காகத் தான் இங்கு சொந்தக்காரனிடமே அறவிடுகிறார்கள்.

நீங்கள் வாசித்த மூலத்த போடுங்கோ

மொழிபெயர்த்திருந்தா மொழிபெயர்த்ததென்று போடுங்கோ

அதென்ன "யாழுக்காக... அடியேன்...."

Edited by Knowthyself

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

உதுக்காகத் தான் இங்கு சொந்தக்காரனிடமே அறவிடுகிறார்கள்.

சொந்தக்காரர் ஏற்றுக் கொள்வதால்...

வாடகை கார் என்றால், சொந்தக்காரர் கட்டிட மறுப்பார்.

21 minutes ago, Knowthyself said:

நீங்கள் வாசித்த மூலத்த போடுங்கோ

மொழிபெயர்த்திருந்தா மொழிபெயர்த்ததென்று போடுங்கோ

அதென்ன 'யாழுக்காக... அடியேன்....'

pla·gia·rism

ˈplājəˌrizəm/
noun
 
  1. the practice of taking someone else's work or ideas and passing them off as one's own.
    synonyms: copying, infringement of copyright, piracy, theft, stealing; 
    informalcribbing
    "accusations of plagiarism"
 
 

புதிய உறுப்பினரோ?

மொழிபெயர்த்ததென்று போடாவிடில், மொழிபெயர்த்ததென்று புரியாமல் போய் விடுமோ ஐயா?

அடியேன் என்பது தமிழ் சொல் ஐயா. உங்கள் பெயரின் கருத்து அறிய அடியேனுக்கு ஆவல்...

இதுக்கு போய்... மினக்கட்டு.... dictionary எல்லாம் பார்த்து.... :grin: 

Edited by Nathamuni

புதிய உறுப்பினரோ?

மொழிபெயர்த்ததென்று போடாவிடில், மொழிபெயர்த்ததென்று புரியாமல் போய் விடுமோ ஐயா?

அடியேன் என்பது தமிழ் சொல் ஐயா. உங்கள் பெயரின் கருத்து அறிய அடியேனுக்கு ஆவல்...

இதுக்கு போய்... மினக்கட்டு.... dictionary எல்லாம் பார்த்து.... :grin: 

 

புதிய உறுப்பினரோ? பழைய உறுப்பினரோ?

உனை நீ அறி

plagiarism என்று போட்டது தவறு என்ற படியால் தான் dictionary விளக்கத்தை எடுக்க முதல் அன்பனே நீங்கள் மின்னல் வேகத்தில் முந்திவிட்டீர்கள், யார் கொமன்ஸ் எழுதுவார்கள் என்று பார்த்துக்கொன்று இருக்கிறீர்களா?

பொருளை விக்கும் போது வாங்குபவர்கள் கேள்வி கேக்கத்தான் செய்வார்கள், உதுக்போய் அலட்டிக்கொள்ள கூடாது

அடியேன் சட்டம் கதைக்கறதுக்கு மன்னிக்வும் :grin:

Edited by Knowthyself

தண்ட பணத்தை (AUD $400, 81km/h in 60km/h zonetw_cold_sweat:) கட்ட வென்று வெளிகிட்டுப்போட்டு, யாழைப் பார்த்தபின் கட்டுவம் என்றால் உங்கள் பதிவு கண்ணில் பட்டுது. உடனே, ஒரு காதல் கடிதம் வரைந்துவிட்டேன் போலிஸிற்கு, பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

 இது எனது இரண்டாவது முறை கடந்த எட்டு வருடத்தில் (1st - கடந்த 2 மாதத்திற்கு முதல் AUD 200/-). பகிர்வுக்கு நன்றி. அவன்களுக்கு கட்டுறதிலும் பார்க்க ஊருக்கு உதவலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வந்தியத்தேவன் said:

தண்ட பணத்தை (AUD $400, 81km/h in 60km/h zonetw_cold_sweat:) கட்ட வென்று வெளிகிட்டுப்போட்டு, யாழைப் பார்த்தபின் கட்டுவம் என்றால் உங்கள் பதிவு கண்ணில் பட்டுது. உடனே, ஒரு காதல் கடிதம் வரைந்துவிட்டேன் போலிஸிற்கு, பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

 இது எனது இரண்டாவது முறை கடந்த எட்டு வருடத்தில் (1st - கடந்த 2 மாதத்திற்கு முதல் AUD 200/-). பகிர்வுக்கு நன்றி. அவன்களுக்கு கட்டுறதிலும் பார்க்க ஊருக்கு உதவலாம்

கமரா நோக்கம் பணத்துக்காகவே என்று சொன்னபோது, ச, சா... மக்கள் உயர் காக்க,காக்க என்று பீலா விட்டிச்சினம்.

இப்ப என்னெண்டா, Tom, Tom போன்ற கஜட்டுகள், இவ்விடம் கமரா இருக்குது, ஸபீட்டை குறை என்று வார்ணிங் தருவதால், அவயள் நொந்து போய் இருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.