Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலை வழக்கு: சகலரும் விடுதலை

Featured Replies

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் நிறைவடைந்துள்ளன

raviraj.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் இன்றையதினம் நிறைவடைந்துள்ளன.

தொகுப்புரைகள், இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன . கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க,, ஜூரிகளுக்கு தெளிவுரைக்க உள்ளார்.

விசேட சிங்கள ஜூரிகள், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். 23 ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றன. சாட்சியமளிப்பு நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தநிலையில் வழக்கின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தொகுப்புரைகள் இடம்பெற்றன.

பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் மனைவியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது பக்க விளக்கத்தை தெளிவுப்படுத் நிகழ்த்தினார்.

http://globaltamilnews.net/archives/11407

Edited by நவீனன்

  • தொடங்கியவர்



ரவிராஜ் கொலை வழக்கு: சகலரும் விடுதலை
 
 

article_1482519400-article_1482379464-df- அழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை, எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் சபை சற்று முன்னர் அறிவித்தது.

தொகுப்புரைகள், நேற்று முதல் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன  கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, ஜூரிகளுக்கு தெளிவுரையளித்தார்.

அதன் பின்னர் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் தீர்ப்பை நள்ளிரவு 12.20க்கு அறிவித்தனர். அதன் பிரகாரம், குற்றஞ்சாட்டப்பட்ட சகலரும் விடுதலை செய்யப்பட்டனர். அதாவது, 3ஆம், 4ஆம், 5ஆம்,6ஆம் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு சிங்கள ஜூரிகள் தீர்ப்பு வழங்கியதோடு, பிரசன்னமாயிருக்காத 1ஆம், 2ஆம் பிரதிவாதிகளையும் விடுவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/188544/ரவ-ர-ஜ-க-ல-வழக-க-சகலர-ம-வ-ட-தல

 

 

ரவிராஜ் கொலை வழக்கு: 3 பேரும் விடுதலை
 
 

article_1482518408-article_1482465646-ra- அழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை, எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் சபை சற்று முன்னர் அறிவித்தது. தொகுப்புரைகள், நேற்று முதல் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன  கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, ஜூரிகளுக்கு தெளிவுரையளித்தார். அதன் பின்னர் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் தீர்ப்பை நள்ளிரவு 12:03க்கு அறிவித்தனர். அதன் பிரகாரம், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/188543/ரவ-ர-ஜ-க-ல-வழக-க-ப-ர-ம-வ-ட-தல-#sthash.a87aWPkZ.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  நடக்குது???

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் இன்று விடுதலை செய்யப்பட்டவர்களின் துப்பாக்கியை பறித்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை  ஜூரிகள்  சபையின்  தீர்ப்புக்கள் ஏற்கனவே  தெரிந்தவை தானே tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

என்ன  நடக்குது???

அங்கை மாடு நடக்குது ஆடு நடக்குது பூனை நடக்குது நாய் நடக்குது......ஆனால் மனிதாபிமானமும் நீதியும் தன்ரை பாட்டிலை கிடக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பல் போன இடம் எது உருப்பட்டிருக்குது. சிங்களவனிடம் தமிழர்கள் நீதியை எதிர்பார்ப்பது அதுவும் சம் சும் போலிச் சட்டாம்பிகளை நம்பி எதிர்பார்ப்பது எவ்வளவு மோசமா இருக்கும் என்பதற்கு இது சாட்சி. இதில சர்வதேச விசாரணை அவசியமில்லை.. உள்ளூர் விசாரணை போதுமென்ற வாய்ப்பாடு. :rolleyes:tw_angry:

4 hours ago, நவீனன் said:

பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் மனைவியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது பக்க விளக்கத்தை தெளிவுப்படுத் நிகழ்த்தினார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மனது  கொதிக்கின்றது....  
மாமனிதன்  ரவிராஜ்  அவர்களின்...  ஆவி, சாத்மா  அடையட்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் சாட்சியமளிப்பு நேற்றுடன் நிறைவடைந்தன.

இதனையடுத்து, இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து தொகுப்புரைகள் ஆற்றுப்படுத்தப்பட்டன.

தொகுப்புரைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில். குறித்த வழக்கின் தீர்ப்பு ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க சற்றுமுன்னர் தீர்ப்பளித்தார்.

அதன் அடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 1996ஆம் ஆண்டு திருகோணமலை குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் ஜுரிகள் சபை முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன. இதன் போது குற்றம் சாட்டப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் நிரபராதிகள் என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தற்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜூரிகள் சபையின் தலையீடு காரணமாக இலங்கை நீதிதுறையினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

http://www.tamilwin.com/special/01/129193?ref=home

ரவிராஜ் கொலை வழக்கு ; கடற்படையினர் உட்பட  ஐவருக்கும் விடுதலை 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

15590255_2020804057950791_53737729136642

எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  குறித்த வழக்கின் தீர்ப்பை, ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க சற்றுமுன்னர் அறிவித்தார்.

ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய ரவிராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/14697

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் மாறும் என்றவர்களுக்கு வாய்க்கரிசி போட்டுள்ளார்கள்.

  • தொடங்கியவர்

ரவிராஜ் படுகொலை வழக்கில் 3 கடற்படையினர் உட்பட அனைவரும் விடுதலை

01-2d9d64361edaed5054d1ed5b2a9d5eba63d33f36.jpg

 

ஜூரிகள் பரிந்துரையையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி வைத்தியதிலக தீர்ப்பு

நள்ளிரவைத்தாண்டி வழங்கப்பட்ட தீர்ப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் உத்தி யோகத்தர் லொக்குவெல்ல முரகே லக் ஷ்மன் ஆகியேரை படு  கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று கடற்படை  உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றில் ஆஜராகாது தலைமறைவாகி யுள்ள இருவர் உட்பட ஐந்து பேரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்தது. 

சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் கடந்த ஒருமாதமாக இது தொடர்பிலான வழக்கு தொடர்ச்சியாக விசாரணை செய்யப் பட்டு வந்தநிலையில் இன்று அதிகாலை 12.20 மணிக்கு இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஜூரிகள் சபையின் ஏகமனதான தீர் மானத்திற்கு அமைவாக நீதிபதி மணிலால் வைத்தியதிலக இந்த தீர்ப்பினை அறிவித்தார்.

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அறுவரில் முதல் பிரதிவாதியான பழனிசாமி சுரேஷ் அல்லது சாமி இறந்துவிட்டதாக வழக்கின் ஆரம்பத்திலேயே சாட்சிகளை விசாரணை செய்து நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி ஏனைய பிரதிவாதிகளான கடற்படையின்

 லெப்டினன் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே பிரஷாத் சந்தனகுமார அல்லது சம்பத், கடற்படை புலனாய்வுப் பிரிவின் தெஹிவள கெதர காமினி செனவிரட்ண, கங்கானம் லாகே பிரதிப் சாமிந்த அல்லது வஜிர, கருணாக் குழுவின் சிவகாந்தன் விவேகானந்தன் அல்லது சரண் மற்றும் தேசிய உளவுத்துறையின் முன்னாள் பொலிஸ் கான்ஷ்டபிள் பெபியன் ரொய்ஷ்டன் டூசேன் ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இதில் கருணாக் குழுவின் சிவகாந்தன் விவேகானந்தன் அல்லது சரண் மற்றும் தேசிய உளவுத்துறையின் முன்னாள் பொலிஸ் கான்ஷ்டபிள் பெபியன் ரொய்ஷ்டன் டூசேன் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக நீதிமன்றை புறக்கணித்து வந்தநிலையில் குற்றவியல் சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக அவர்கள் இல்லாமலேயே வழக்கை விசாரணை செய்ய மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்நிலையில் ஐந்து பிரதிவாதிகளுக்கும் எதிராக தலா ஐந்து குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டன. 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களினூடாக திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுக்களும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இரு குற்றச்சாட்டுக்களும் அனைத்து பிரதிவாதிகளுக்கு எதிராகவும் சுமத்தப்பட்டன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) (அ) அத்தியாயத்துடன் இணைத்துக் கூறப்படும் 3 (அ) அத்தியாயத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் முறைப்பாட்டாளர் தரப்பு அறியாத குழுவினருடன் இணைந்து பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரவிராஜை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, 2 (1) (அ) அத்தியாயத்துடன் இணைத்துக் கூறப்படும் 2 (2) (i) அத்தியாயத்தின் கீழ் நடராஜா ரவிரஜை கொலை செய்தமை மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் (30636) லொக்குவெல்ல முரகே லக்ஷ்மனை கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் இரண்டு கொலை குற்றச்சாட்டுக்கள் தண்டனை சட்டக் கோவையில் 32 ஆவது அத்தியாத்துடன் இணைத்துக் கூறப்படும் 296 ஆவது அத்தியாத்தின் கீழ் சுமத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பிரதிவாதிகளால் ஜுரி சபையொன்று நீதிமன்றில் கோரப்பட்டது. எனினும் அதற்கு பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியார் எதிர்ப்பு வெ ளியிட்டனர். ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் வியாக்கியானத்துடன் சிங்களம் பேசும் சிறப்பு ஜுரிகள் சபை முன்னிலையில் வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்தது.

அதன்படி கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இது தொடர்பிலான வழக்கை சிறப்பு ஜுரிகள் முன்னிலையில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இவ் வழக்கு தொடர்பில் வழக்கு தொடுநரான சட்டமா அதிபர் சார்பில் அரசின் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, சிரேஷ்ட சட்டவாதி சுஹர்சி ஹேரத் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் முறைப்பாட்டாளர் தரப்பால் மன்றிற்கு பட்டியலிடப்பட்ட 68 சாட்சியாளர்களில் 25 சாட்சியாளர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அத்துடன் 34 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

மன்றில் ஆஜரான பிரதிவாதிகளான கடற்படை லெப்டிணன் கொமாண்டர் ஹெட்டியாராச்சி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான அஸித் சிறிவர்தண, ரஷிக்க பாலசூரிய ஆகியாருடன் யூரான் லியனகே ஆஜரானார். ஏனைய இரு கடற்படை வீரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேம ரத்ன ஆஜரானார். இந் நிலையில் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சி விசாரணைகளின் பின்னர் பிரதிவாதிகளான கடற்படை வீரர்கள் மூவரும் பிரதிவாதிக் கூண்டிலிருந்து திறந்த நீதிமன்றில் வாக்குமூலம் ஒன்றிணையும் அளித்தனர். அதற்கு மேலதிகமாக பிரதிவாதிகள் சார்பில் தேசிய உளவுத்துறை பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது.

 சாட்சி விசாரணைகளின் நிறைவில் விசேட சமர்ப்பிப்புக்கள் நேற்று முழுவதும் முன்வைக்கப்பட்டன. முதலில் சி ரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய தனது சமர்ப்பணத்தினை முன்வைத்தார். அதில் பிரதான அரச சாட்சியான சட்டமா அதிபரின் விசேட மன்னிப்பை பெற்ற முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபில் பிரதிவிராஜ் மனம் பேரியின் நம்பகத்தன்மை மற்றும் சாட்சியின் முக்கியத்துவம் குறித்து அவர் அவதானம் செலுத்தினார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பணம் முன்வைத்தார். அதில் குற்றப் பத்திரிகையில் குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் " முறைப்பாட்டாளர் தரப்பு அறியாத குழுவுடன் " எனும் வசனம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறியப்படாத குழுவும் கண்டறியப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

 இதனையடுத்து பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான யுராண் லியனகே, அனோஜ பிரேமரத்ன ஆகியோரால் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது. அதில் சாட்சிகள் கட்டளை சட்டத்தின் 114 ஆவது அத்தியாயத்தின் கீழ் அரச சாட்சியின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டது. அத்துடன் குறித்த விவகாரம் தொடர்பில் டி.என்.ஏ . சோதனை மேற்கொள்ளாமை, தொலைபேசி வலயமைப்பு தகவல்களை மையப்படுத்திய விசாரணை முன்னெடுக்கப்படாமை அடையாள அணிவகுப்பின்போது பிரதிவாதிகள் அடையாளம் காணப்படாமை உள்ளிட்ட முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டி பிரதிவாதிகள் தரப்பு விசாரணைகளில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வாதிட்டது.

இந்நிலையில் அந்த சமர்ப்பணங்களை தொடர்ந்து ஜுரிகள் சபை தீர்ப்பினை எடுக்க வேண்டிய வழிமுறையையும் நீதிமன்றில் பதிவான சாட்சிகளின் சுருக்கத்தினையும் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க திறந்த நீதிமன்றில் விளக்கினார்.

இதனையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு தீர்ப்பினை எடுப்பதற்காக ஜுரிகள் சபைக்கு அனுமதி வழங்ப்பட்டு அவர்கள் ஜுரி அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று அதிகாலை 12.05 மணிக்கு மன்றிற்கு வந்த ஜுரிகள் மன்றில் ஆஜரான பிரதிவாதிகள் மூவரும் நிரபராதிகள் என்ற தமது ஏகமனதான தீர்ப்பை அறிவித்தனர்.

இதன்போது மன்றில் ஆஜராகாத இரு பிரதிவாதிகள் தொடர்பில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க தீர்ப்பினை வினவியபோது அவர்கள் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை என அறிவத்தனர். இந்நிலையில் மீள ஜுரி அறைக்கு தீர்மானம் எடுப்பதற்காக அவர்கள் அனுப்பப்பட்டனர். மீள அதிகாலை 12.20 மணிக்கு மன்றிற்கு வந்த ஜுரிகள் அனைத்து பிரதிவாதிகளும் நிரபராதிகள் என்ற தமது ஏகமனதான தீர்ப்பை அறிவித்தனர். இதனையடுத்து நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அனைத்து பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து தீர்ப்பறிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-24#page-1

  • கருத்துக்கள உறவுகள்

அரசாஙத்தின் தேவை கருதி அது செய்யப்பட்டது.....நிச்சயமாக தண்டனை வழ்ங்கமாற்றார்கள்....அப்படி தண்டனை வழங்கினால் இனிவரும் காலங்களில் அரசபுலனாய்வாளர்கள் தங்களது பணிகளை செய்யப்பயப்படுவார்கள்..அதாவது இதுவும் ஒரு வித என்கவுண்டர் தான் ...இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததே தப்பு என்றுதான் அரச புலனாய்வாளர்கள் கூறுவார்கள்...

ரவிராஜ் அவர்களுக்கு கோவில் கட்ட,சிலை வைக்க அணுமதி வழங்க அரசு தாயாராக இருக்கும் ஆனால் அவரை கொலை  செய்த அரச உழியர்களுக்கு தணடனை வழங்க மாட்டார்கள்.....

  • தொடங்கியவர்

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

raviraj.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் முடிவில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அறிவித்துள்ளது. ஒரு மாத கால விசாரணைகளின் பின்னர் ஜுரிகள் சபை, இந்த சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளது. 2006ம் அண்டு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வைத்து நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி ஆகியோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தக் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டிருந்தனர்.

நேற்று நள்ளிரவு அளவில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜூரிகள் சபையின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க இந்த சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆறு பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு சந்தேக நபர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/11407

  • கருத்துக்கள உறவுகள்

தமது தரப்பை எப்போதும் சிங்களநீதித்துறை தண்டிக்காது. இது எதிர்பார்க்கக் கூடியதே. 

  • கருத்துக்கள உறவுகள்

கொலை குற்ற விசாரணைகளும்சிங்கள யூரிகளின் தீர்ப்புகளும் – இரா.துரைரத்தினம்

Published on November 5, 2016-12:55 pm   ·  

kumarapuramஆட்சி மாற்றம் கடந்த காலத்தில் கொழும்பில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த உடலகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழுத்தங்கள் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டமை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் கொலை வழக்கை சிங்கள யூரிகள் முன்னிலையில் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி அளித்தது போன்ற சம்பவங்கள் இந்த படுகொலைகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கா, யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம், ஊடகவியலாளர் சிவராம், ஆகியோரின் படுகொலைகளிலும், ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போக செய்யப்பட்டமைக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்சவுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் கோதபாய ராசபக்ச மீது இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்காவின் தொலைபேசியை ஒட்டுக்கேட்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச உத்தரவிட்டதற்கான ஆதாரம் ஒன்றை அண்மையில் கொழும்பு ரெலிக்கிராப் வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக அரச புலனாய்வு சேவை தலைவராக இருந்த கீர்த்தி கஜநாயக்காவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கடந்த சிலதினங்களுக்கு முதல் கொழும்பு ரெலிக்கிராப் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் கைத்தொலைபேசி இலக்கம் உட்பட சில தொலைபேசி உரையாடல்களை கண்காணிக்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய கீர்த்தி கஜநாயக்க தமது அதிகாரிகளை பணித்திருந்தார்.

இந்த கண்காணிப்பு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்ற குறிப்பும் அந்த கடிதத்தில் காணப்படுகிறது.

2009ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கா படுகொலை செய்யப்பட்டார். அதற்கு முன்னர் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் திகதி இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. மூன்று மாதகாலமாக லசந்த விக்கிரமதுங்காவின் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்த புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்சவின் நேரடி உத்தரவின் பேரில் இக்கொலை நடைபெற்றிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

லசந்த விக்கிரமதுங்கா கொலை செய்யப்பட்ட போது அவரின் தலையில் துப்பாக்கி சூடுபட்டே இறந்ததாக பிரேதபரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் 7வருடங்கள் கழித்து அவரின் சடலத்தை மீண்டும் எடுத்து பரிசோதனை செய்த போது அவர் சாதாரண துப்பாக்கியால் சுடப்படவில்லை என்றும் போல்ட் கண் ( ( Bold Gun  ) எனப்படும் நவீனரக துப்பாக்கியினாலேயே சுடப்பட்டதாக தெரியவந்துள்ளது

இந்த போல்ட் கண் வெளிநாடுகளில் மிருகங்களை கொல்வதற்காக பயன்படுத்துகிறார்கள். இத்துப்பாக்கியிலிருந்து குண்டுபாயும் போது சத்தம் எதுவும் வருவது கிடையாது. தலையில் வைத்து சுட்டால் உடனடியாக மூளையை தாக்கி மரணம் சம்பவத்து விடும்.

இலங்கையில் இத்துப்பாக்கி பாவனையில் இல்லாத போதிலும் கோதபாய ராசபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இந்த ரக துப்பாக்கிகள் 12 இறக்குமதி செய்யப்பட்டு புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டது இலங்கையில் புலனாய்வு பிரிவினரை தவிர வேறு எவரிடமும் இல்லாத போல்ட் கண் எனப்படும் துப்பாக்கியே இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் சிறிலங்கா புலனாய்வு பிரிவினரே இக்கொலையை செய்தனர் என்பது உறுதியாகிறது.
லசந்த விக்கிரமதுங்கா படுகொலை செய்யப்பட்ட அன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வழி மறித்து அவரின் கண்ணாடியை உடைத்து அவரின் தலையில் சுட்டிருக்கின்றனர். மூன்று போல்ட் கண் குண்டுகள் அவரின் மூளையை தாக்கியிருப்பதாக புதிதாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி உடலகம பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்துவது பற்றி அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விசனம் தெரிவித்த நிலையிலேயே லசந்த விக்கிரமதுங்கா கொலைவழக்கு சந்தேக நபராக இராணுவ அதிகாரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அது போன்று கொழும்பில் நடந்த மற்றொரு கொலைவழக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிங்கள யூரிகள் முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கை சிங்கள யூரிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அதனைப் பொருட்படுத்தாமல், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யாலங்கார, இந்த வழக்கை சிங்கள ஜூரிகள் சபை முன் விசாரிப்பதற்கு உத்தரவிட்டார்.

யூரிகள் சட்டம் படித்தவர்கள் அல்ல. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதி படைத்தவர்களும் அல்ல. அவர்கள் சமூகத்தில் ஆசிரியர்கள் உட்பட தொழில் புரிபவர்களே யூரிகளாக தெரிவு செய்யப்படுகின்றனர். சிங்கள சமூகத்திலிருந்து வரும் அவர்களுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற மனநிலையோ நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற குறிக்கோளோ இருக்கப் போவதில்லை. தங்கள் படையினரை காப்பாற்ற வேண்டும் என்ற சிங்கள அடிப்படைவாத மனநிலை மட்டும் தான் இருக்கும். இதனால் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிங்கள யூரிகள் முன் விசாரிக்க வேண்டும் என கோரியிருக்கிறார்கள்.

சிங்கள யூரிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டால் தாங்கள் நிட்சயம் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் உண்டு. ஏனெனில் கடந்த காலங்களில் இது போன்ற படுகொலை வழக்குகளில் சிங்கள யூரிகளால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வரலாறு கிடையாது.

இதற்கு உதாரணமாக பல வழக்குகளை குறிப்பிடலாம்.

திருகோணமலை குமரபுரம் பொதுமக்கள் படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மைலந்தனை பொதுமக்கள் படுகொலை வழக்கு, சிவராம் படுகொலை வழக்கு உட்பட தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் சிங்கள யூரிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி திருக்கோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குமாரபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த 26 பொதுமக்கள் தெஹிவத்தை முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் கரப்பிணித் தாய் ஒருவரும் 16 வயதுடைய மாணவி ஒருவரும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் 6 ஆண்களும், 13 பெண்களும், 7 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்ததுடன், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தெஹிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 8 இராணுவத்தினர் மீது மூதூர் நீதிமன்றத்திலும் பின்னர் திருக்கோணமலை மேல் நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்றிருந்தது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இந்த வழக்கை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும் மேன்முறையீடு செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் இந்த வழக்கு சிங்கள யூரிகள் முன்னிலையிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என கோரினர். அவர்களின் அந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிங்கள யூரிகள் முன்னிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என அனுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.

சிங்கள யூரிகள் முன்னிலையில் இச் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான குமாரபுரம் கிராம மக்கள், குடிசார் அதிகாரிகள் உட்பட 121 பேர் சாட்சியமளித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை இவர்கள் தான் படுகொலையை புரிந்தார்கள் என அடையாளம் காட்டியிருந்தார்கள்.

ஆனால் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் கடந்த யூலைமாதம் 27ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் நிரபராதிகள் என விடுதலை செய்தது. இந்த வழக்கின் யூரிகள் அனைவரும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இராணுவத்தினர் நிராபராதிகள் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அறிவித்திருப்பதால் யூரிகளின் முடிவின் படி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக நீதவான் அறிவித்தார்.

இந்த வழக்கில் வலுவான சான்றுகள் ஆதாரங்கள் தடயப்பொருட்கள், கண்கண்ட சாட்சிகள் என அனைத்தும் இருந்தும் சிங்கள யூரிகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்த இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளால் குறித்த குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அறுவரையும் விடுவித்தமை மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று கிழக்கில் நடந்த மற்றொரு கொலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் சிங்கள யூரிகளால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு எல்லைக்கிராமமான மயிலந்தனை கிராமத்தில் 1992ஆம் ஆண்டு ஓகஸ்ட் 9ஆம் திகதி இரவு 35 தமிழ் பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இராணுவ அதிகாரி ரென்சில் கொப்பேகடுவா கண்ணிவெடியில் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் அன்றிரவு அக்கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் அப்பாவி பொதுமக்களை வெட்டியும் சுட்டும் கொன்றனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த படுகொலையில் 18 இராணுவத்தினர் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 85 குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் இவ்வழக்கு விசாரணை நடைபெறுவது தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும் வழக்கை அனுராதபுரம் அல்லது கொழும்புக்கு மாற்றுமாறு குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் கோரினர்.

இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது இதனையடுத்து சிங்கள யூரிகள் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் கோரியபோது அக்கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிங்கள யூரிகள் முன்னிலையிலேயே வழக்கு விசாரணை நடைபெற்றது

சாட்சிகள் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வந்த போதிலும் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பாதிக்கப்பட்ட மயிலந்தனை மக்கள் கொழும்புக்கு சென்று சாட்சியமளித்தனர்.

இறுதியாக 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். சிங்கள யூரிகள் அனைவரும் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் குற்றம் அற்றவர்கள் என்றும் அவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர் என்றும் யூரிகளின் முடிவின் படி இந்த வழக்கை தள்ளுபடி செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்குவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

யூரிகள் வழங்கிய தீர்ப்பில் திருப்தி கொள்ளாத மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஸ்கந்தராசா யூரிகள் மீண்டும் நன்றாக ஆலோசித்து முடிவுக்கு வருமாறு ஆலோசனை வழங்கி சில மணிநேர அவகாசத்தையும் வழங்கினார். இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் யூரிகளுக்கு நீதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஆனால் சிங்கள யூரிகள் ஆலோசித்து விட்டு மீண்டும் வந்து குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் நிரபராதிகள் என்றும் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் உறுதியாக தெரிவித்தனர். இதனையடுத்தே யூரிகளின் முடிவின் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதேபோன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிங்கள யூரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சிவராமின் கொலை வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. சிங்கள யூரிகளின் முடிவின் படியே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இலங்கையின் நீதித்துறையில் அரசியல் தலையீடுகளும் சிங்கள இனவாத சிந்தனைகளும் மேலோங்கியிருப்பதாக இலங்கைக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஐ.நா. அதிகாரிகள் ஒருவர் தெரிவித்திருந்தார்.

ரவிராஜ் கொலை மட்டுமல்ல தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட எந்த படுகொலைகளுக்கும் இலங்கையில் நீதிகிடைக்காது என்பதற்கு கடந்த காலங்களில் சிங்கள யூரிகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளே சான்றாகும்.

http://www.thinakkathir.com/?p=66782

  • தொடங்கியவர்
ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கு: அவலக்குரலை மறைத்த ஆனந்தக் கண்ணீர்
 
 

article_1482728348-Raviraj.jpgஅழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்

தமிழர்கள் மட்டுமன்றி, பெரும்பான்மை இனத்தவர்களும், ஏன் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் சர்வதேசமுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரான நடராஜா ரவிராஜ், படுகொலை வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை(24) அதிகாலை 12:20க்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். 

நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், அன்று காலைமுதல் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 1ஆவது இலக்க அறைமட்டும், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த வழக்கின் இறுதிநாள் என்பதனால், பார்வையாளர்களும் ஊடகவியலாளர்களும் நீதிமன்றத்துக்கு படையெடுத்திருந்தனர். சட்டக்கல்லூரி மாணவர்களும் சமூகமளித்து, விடிய விடிய அவதானித்துக்கொண்டிருந்தனர். 

வௌ்ளிக்கிழமை (23) காலை 10:48க்கு ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றம், சனிக்கிழமை அதிகாலை 12:20யை தாண்டியும் தனது கடமைகளை செய்துகொண்டிருந்தது. நீதிமன்ற அறைக்குள் செல்கின்ற சகலரும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

நீதிமன்ற பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்த பொலிஸாருக்கு மேலதிகமாக, பொலிஸ் உயரதிகாரிகளும் அவ்வப்போது, நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தனர். சிறைச்சாலைக் காவலர்களும் மேலதிகமாக வருகைதந்திருந்ததை அவதானிக்கமுடிந்தது. எனினும், பாதிக்கப்பட்ட (படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ்) தரப்பில் சட்டத்தரணிகள் மட்மே மன்றிலில் இருந்தனர். 

சாட்சியளிக்கப்பட்டவர்கள், அழைத்து வரப்படவில்லை. எனினும், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும், சிறைச்சாலை பஸ்ஸின் மூலமாக அழைத்துவரப்பட்டனர். 3, 4ஆம் பிரதிவாதிகள் இருவருக்கும் ஒரு கைவிலங்கு இடப்பட்டிருந்தது. தனி கைவிலங்கிடப்பட்ட நிலையில் முதலாவது பிரதிவாதி அழைத்துவரப்பட்டார்.  

வழக்கின் தொகுப்புரைகள் மற்றும் விளக்கவுரை அன்றையதினம் அளிக்கப்பட்ட இருந்தமையால், சகல தரப்பினரும் வழக்கின் மீது கூடுதல் கரிசனை கொண்டிருந்தனர்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ், நாரஹேன்பிட்டி மாதா வீதியிலிருந்து, எல்விட்டிகல மாவத்தைக்குப் பிரவேசித்த போது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி காலை 8.15க்கு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் பயணித்த பாதுகாப்பு உத்தியோகத்தரான லக்ஷ்மன் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையிலேயே, குற்றவியல் தண்டனை கோவைச் சட்டத்ததுக்கு அமைவாக, கொழும் மேல் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால், அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களென ஐவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். அதில், 5ஆவது பிரதிவாதியான சரண் என்றழைக்கப்படும் விவேகானந்தன் சிவகாந்தன், 6ஆவது பிரதிவாதியான ரொய்ஸ்டன் டுஸேன் ஆகிய இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.   

ஏனைய மூவரும் கடற்படை புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில், 2ஆவது பிரதிவாதி முன்னாள் லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி ஆவார். 3ஆவது பிரதிவாதி காமினி செனவிரத்ன ஆவார் 4ஆவது பிரதிவாதி பிரதீப் சாமிந்த ஆவார்.  

இவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சுமத்தப்பட்டன.  

ரவிராஜ் எம்.பியைக் கொல்லத் திட்டமிட்டமை, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான லக்ஷ்மன் என்பவரைக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டடிருந்தன.  

வழக்கின் சாட்சிகளாக 25 பேர் குறிப்பிடப்பட்டனர். 44 சாட்சிப் பொருட்கள் பதியப்பட்டன.  

வழக்கின் 5ஆவது மற்றும் 6ஆவது பிரதிவாதிகளான சரண், டுசேன் ஆகிய இருவரும் தலைமைறைவாகியிருந்த நிலையில், அவர்கள் இல்லாமலேயே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.  

இந்நிலையிலேயே சிங்களம் பேசும் விசேட ஜூரிகள் முன்னிலையில் வழக்கை, விசாரணைக்கு உட்படுத்துமாறு பிரதிவாதிகள் மூவரும் கோரிக்கையொன்றை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பினரால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

எனினும், விசேட ஜூரிகள் சபை முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்றம் தீர்மானித்ததையடுத்தே, விசேட ஜூரி சபை நவம்பர் மாதம் 22ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டது. இந்த விசேட ஜூரி சபையின் விசேடமான தன்மை என்னவெனில், சகலரும் பட்டதாரிகள் ஆவர்.  

எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபையில் அறுவர் பெண்களாவர். எம்.பி.பி திலகசிறி என்பவர் மட்டுமே ஆண், அவரே அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 

அதனையடுத்து, அடுத்தநாளான நவம்பர் 23ஆம் திகதியிலிருந்து, டிசெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலும் 21 நாட்கள், ஜூரிகளின் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.  

முதலாவதாக, வழக்கின் பிரதிவாதியாக இருந்து, சாட்சியாளராக மாறிய விஜயவிக்ரம மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜ் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அவரிடம், முறைப்பாட்டாளர் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டதுடன், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. 

டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை வரை, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான 25 சாட்சியாளர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், வழக்குப் பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டன. 

22ஆம் திகதி வியாழக்கிழமை, பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகள் மூவரும் சாட்சியளித்ததுடன், இன்னொரு சாட்சியாளரான, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவும் ஆஜரானார். 

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (23), முறைப்பாட்டாளர், பிரதிவாதிகள் தரப்பில் தொகுப்புரைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் அவதானிப்பின் கீழ், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், முற்பகல் 10.40க்கு வழக்கு ஆரம்பமானது. 

இதன்போது, முறைப்பாட்டாளர்கள் சார்பில், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். 2ஆவது பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரசிக்க பாலசூரியவுக்குப் பதிலாக ஆஜரான சட்டத்தரணியான யுரான் லியனகேவும் 3,4ஆவது பிரதிவாதிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்தனர். 

வழமையான வழக்கு விசாரணையை விட, அன்றையதினத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகள், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சகாக்கள் நிரம்பியிருந்தனர். 

முற்பகல் 10.45 மணியளவில், முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, தனது தொகுப்புரையை ஆரம்பித்தார்.  

 

அபேசூரியவின் தொகுப்புரை 

அவரது தொகுப்புரையில், தமது சார்பில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியங்கள் தொடர்பில், விசேட ஜூரி சபைக்கு விளக்கமளிக்க ஆரம்பித்தார். 

தனக்கு உடல்நலக்குறைவு காணப்படுவதாகவும் அதனால் தொகுப்புரையை நடத்துவதில் சிரமம் காணப்படுவதாகவும் கூறிய அவர், 10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வழக்கொன்றில், ஜூரி சபை முன்னிலையில் பணியாற்றியதாகவும் பட்டதாரிகள் அடங்கிய விசேட ஜூரிகள் முன் பணியாற்றுவது இதுவே முதல் முறை எனக் கூறினார். 

குறிப்பாக, விஜயவிக்ரம மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜ் என்ற, முதலாவது சாட்சியாளர் தொடர்பிலான நம்பகத்தன்மை தொடர்பாக விளக்கமளிக்க ஆரம்பித்தார். அவருக்கு எதிராக அரிசி லொறிகளைக் கொள்ளையடித்தமை, ஆட்கடத்தல், 106 கிலோகிராம் கஞ்சாமாவுடன் கைதானமை போன்ற 8 வழக்குகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், சாட்சியாளரின் நம்பகத் தன்மையில் குறைவு ஏற்பட இவற்றை, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் காரணம் காட்டியதாகக் கூறினார். 

சட்டத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட, அல்லது குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களும் சாட்சியாளர்களாக மாறலாம் என, ஜூரிகளுக்கு சுட்டிக்காட்டிய அவர், அதன் அடிப்படையிலேயே, பிருதிவிராஜ், பிரதிவாதியாக இருந்து சாட்சியாளராக மாறியதாகக் குறிப்பிட்டார். 

தன்னை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், சாட்சியாளராக மாற விரும்புவதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் அவர் கூறியதன் அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைய அவர், சாட்சியாளராக மாறினார். 

பிருதிவிராஜின் சாட்சியத்தில், காணப்படும் நம்பகத் தன்மையை மட்டுமே ஜூரிகள் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் குண இயல்புகளைப் பார்க்கக் கூடாது எனவும் கூறியதுடன், நம்பகத்தன்மையை அளவிட வேண்டுமாயின் அவரது சாட்சியத்திலுள்ள விடயங்களைப் பார்க்கவேண்டும் எனக் கூறினார். 

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிருதிவிராஜின் குண இயல்புகளைக் கொண்டு, அவர் சாட்சியாக இருப்பதற்குத் தகுதியற்றவர் என வாதங்களில் ஈடுபடுவதால், அவர் உண்மையிலேயே தகுதியுடையவரா என்ற சந்தேகம் ஜூரிகளுக்கு ஏற்படவாய்ப்புண்டு எனவும் கூறினார். 

தனது 23 வருட அனுபவத்தில், பிருதிவிராஜ் போன்றதொரு சாட்சியைப் பார்க்கவில்லை எனக் கூறிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவர் மனசாட்சிக்கு விரோதமின்றி சாட்சியமளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, கருணா குழுவினருடன் இணைந்து எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக மேற்கொள்ள எத்தனித்த தாக்குதல்களையும் கேள்விக்கு உட்படுத்தி, அவற்றைப் பொய்யாக்க முனைந்ததாகவும் கூறினார். 

சாட்சியாளர், 2008ஆம் ஆண்டு வழங்கிய வாக்குமூலத்தில், ரவிராஜ் படுகொலை தொடர்பில், கூறவில்லை என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குறுக்குக் கேள்வி கேட்டிருந்தனர். கருணா குழு தொடர்பான அச்சநிலையின் காரணமாகவே, அவர் இதுதொடர்பில் கூறவில்லை. 

அதுமட்டுமின்றி, 2015.02.26அன்று வழங்கிய வாக்குமூலம் தொடர்பிலும் அதனையடுத்து வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் தொடர்பிலும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதில் விடுபட்ட விடயங்கள் பற்றியும் வினவியிருந்தனர்;. முதலாவது வாக்குமூலத்தைத் தெளிவுபடுத்தவே அடுத்தடுத்த வாக்குமூலங்கள் பெறப்படும் எனக் கூறிய அவர், புதிது புதிதான விடயங்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். 

இராணுவ வைத்தியசாலை தொடர்பான குறுக்குக் கேள்வி தொடர்பில் கூறியபோது, 2015ஆம் ஆண்டில் வாக்குமூலமளித்த போது, அந்த இடத்தில் இராணுவ வைத்தியசாலை காணப்பட்டதாலேயே, அதைக் கூறி சாட்சியமளித்துள்ளதாகவும், குறுக்கு விசாரணையில் ஈடுபட்ட சட்டத்தரணி, அங்கவீனமடைந்த இராணுவவீரர்கள், வீதியைக் கடந்தனரா என்று சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டதாகவும் தெரிவித்தார். 

படுகொலையுடன் கருணா குழுவினரும் தொடர்புபட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கருணா குழுவின் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் சாட்சியமளித்தார். அப்படியிருக்கையில், கருணா குழுவினரே கொலை செய்திருக்கலாமே என நீங்கள் எண்ணக்கூடும் என, ஜூரி சபையைப் பார்த்துத் தெரிவித்த அவர், அந்தக் காலத்தில், முச்சக்கரவண்டியொன்றில் ஆயுதமொன்றைக் கொண்டு, தமிழர்கள் சென்றால் என்ன ஆவார்கள் என உங்களுக்கே தெரியும். அதற்காகவே, இந்தப் பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகள் என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.  அதுமட்டுமின்றி, வழக்கு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஐக்கிய நாடுகளினால் 6மாதங்களுக்கு ஒருமுறை, வினாவப்படுவதாகவும் சர்வதேச நாடாளுமன்ற சம்மேளத்தினாலும் கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பிற்பகல் 2.05மணிவரை அவரது, தொகுப்புரை இடம்பெற்றதுடன், சுமார் 20 நிமிட இடைவேளை வழங்கப்பட்டது. அதனையடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பிரான ரவிராஜ் எம்.பியின் மனைவியான சசிகலா ரவிராஜ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு, விளக்கவுரை வழங்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், பிற்பகல் 2.40 வரை அவர் தனது விளக்கவுரையை ஆற்றினார்.  

சட்டத்தரணி சுமந்திரனின் விளக்கவுரை 

2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதியன்று, கொழும்பில், அதுவும் வாகன நெரிசல், சன நெரிசல் மிக்க காலை வேளையில், பிரதான வீதிக்கு நுழையும் போது, ரவிராஜ் எம்.பியும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான லக்ஷ்மன் என்பவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அப்போது, லக்ஷ்மன் என்பவருக்கு கைக்குழந்தையொன்றும் இருந்தது.  

அன்றைய தினம் தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவே, ரவிராஜ் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தின் தமிழ்ப் பாடசாலையொன்றில் கல்விகற்ற அவர், கொழும்புக்கு வந்தார். மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். நல்லிணக்கத்தையே அவர் விரும்பியிருந்தார். 

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை விட, இந்தக் கொலைக்கான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். 

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர், நேற்றையதினம் (வியாழக்கிழமை) சாட்சியமளிக்க வந்திருந்தார். வருகை தந்ததற்கான காரணம் தெரியாமலேயே அவர் இருந்தார். அதுமட்டுமின்றி, அவருடைய சாட்சியத்திலும் நம்பகத்தன்மை இருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு எனக் கூறி, சில கேள்விகளுக்கான விடைகளைத் தர அவர் மறுத்திருந்தார். அந்தச் சாட்சியம் தொடர்பிலான, நம்பகத் தன்மையை நீங்களே பார்த்திருப்பீர்கள் என, ஜூரிகளைப் பார்த்துக் கூறினார். 

அதன்பின்னர், பிற்பகல் 2.40 மணியளவில் மதிய போசன இடைவேளை வழங்கப்பட்டதுடன், பிற்பகல் 3.38 மணியளவில் மீள ஆரம்பிக்கப்பட்டது. அதன்போது, 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, தனது தொகுப்புரையை வழங்க ஆரம்பித்தார். 

 

சட்டத்தரணி யுரான் லியனகே 

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, பிருதிவிராஜ் மனம்பேரி என்பவரை மட்டும் பிரதானமாகக் கொண்டு, அவரது சாட்சியமளிப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த முயல்வதாகக் குறிப்பிட்டார். 

25 சாட்சியாளர்கள் சாட்சியமளித்துள்ளனர். எனினும், மனம்பேரி என்பவரை மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர் மட்டுமே பிரதிவாதிகளைத் தெரியும் எனக் கூறியுள்ளார். ஏனையவர்கள் யாருமே, நேரில் கண்டோம் எனக் கூறவில்லை. 

2ஆவது பிரதிவாதியான பிரசாத் ஹெட்டியாராச்சியை, கப்டன் பிரசாத், லெப்டினன் பிரசாத் என்று, ஒரே வாக்குமூலத்தில் மாறி மாறிக் கூறியுள்ளார். 5 தடவைகள் கப்டன் எனவும் 3 தடவைகள் லெப்டினன் எனவும் கூறியுள்ளார்.  

சாதாரண ஒருவர், பதவிநிலைகளைப் பிழையாகக் கூறினால் பரவாயில்லை. அரச ஊழியராக, அதுவும் பொலிஸ் கான்ஸ்டபிளாகக் கடமையாற்றிய ஒருவருக்கு, இதுதொடர்பில் தெரியவில்லை. 

அதுமட்டுமின்றி, 1ஆவது சாட்சியாளரான பிருதிவிராஜ் சாட்சியமளித்தார். 2ஆவது சாட்சியாளரான அமில சிந்தக்க ரணசிங்க, 3ஆவது சாட்சியாளரான திலின நிஷாந்த நாமல் ஆகியோர் ஏன் அழைக்கப்படவில்லை.  

கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், இலங்கை அணி விளையாடும் போது, சனத் ஜயசூரிய ஆட்டமிழந்தால், அடுத்த நிலையிலுள்ள குமார் சங்கக்கார அழைக்கப்படுவார். அவரும் ஆட்டமிழந்தால், மஹேல ஜயவர்தன அழைக்கப்படுவார். லசித் மலிங்கவையோ, முத்தையா முரளிதரனையோ அவர்களது இடத்துக்கு அனுப்ப மாட்டார்கள். 

அதுபோல், இந்த வழக்கிலும் தேவையான இரு சாட்சியாளர்கள் அழைக்கப்படவில்லை. 2004-2006வரை யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிவிட்டு, கொழும்பில் சேவையின் தேவை கருதி அழைக்கப்பட்ட 2ஆவது பிரதிவாதி, ரவிராஜ் படுகொலை இடம்பெறுவதற்கு 19 நாட்களுக்கு முன்னரே, கொழும்புக்கு வந்திருந்தார். அவரை, இரண்டு மாதங்களாகத் தெரியும் என, பிருதிவிராஜ் மனம்பேரி சொல்வது பொய். அத்துடன், எல்லா வழக்குகளுக்கும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறிய அவர், இந்த வழக்கில் மாத்திரம், ஏன் அவ்வாறு இடம்பெற வில்லை எனக் கேட்டார். 

2015.03.15அன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, அங்கு சென்ற போதே கைதுசெய்யப்பட்டார். அவர், ஓடிஒழியவில்லை. இவ்வளவு மாதங்களாக அவர் சிறையில் இருப்பது, அவரது பிள்ளைகளுக்குக் கூடத் தெரியாது. அவர், இந்தியாவில் படிக்கச் சென்றுள்ளதாகவே, பிள்ளைகள் எண்ணியுள்ளனர்.  

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்குப் பிணை வழங்கப்பட்ட போதும், அடுத்த நாட்களாக சனி, ஞாயிறு தினங்கள் காணப்பட்டதால், சிறையிலேயே இருந்தார். திங்கட்கிழமையன்று, மேலுமொரு குற்றச்சாட்டுத் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், அவரை நீதிமன்றில் மீண்டும் ஆஜராக்கியதைத் தொடர்ந்து, அவர் தடுப்பில் வைக்கப்பட்டார். இது தொடர்பில் ஆராய்ந்து தீர்ப்பினை வழங்கவேண்டும் என, ஜூரி சபையிடம் கேட்டுக்கொண்டார். 

அதனையடுத்து, மாலை 5.10 மணியளவில் இடைவேளை வழங்கப்பட்டு, 5.50க்கு ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது, 3,4ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான அனுஜ பிரேமரத்ன, தனது தொகுப்புரையை ஆரம்பித்து, 8.20 மணியளவில் நிறைவுக்குக் கொண்டுவந்தார்.  

சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன 

மனம்பேரியின் சாட்சியம் தொடர்பில், கேள்விக்குட்படுத்திய அவர், கொள்ளைக்கார, ஆட்கடத்தலில் ஈடுபட்ட, கஞ்சாமா விவகாரத்தில் கைதான ஒருவரையா இந்த வழக்கின் சாட்சியாளராக ஏற்பது எனவும் அவரது சாட்சியத்தை எவ்வாறு நம்புவது என்றும் கேள்வியெழுப்பினார். 

கஞ்சாவை கடத்திவிட்டு, கஞ்சா மா என்கிறார். அதில் பாண் செய்ய முடியுமா என்றும் ஜூரிகளிடம் வினவினார்.  

அபேரத்ன என்பவர், ஏறாவூருக்குச் சென்று சாட்சியமளித்ததாகக் குறிப்பிட்டார். பிருதிவிராஜ், கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் வாக்குமூலமளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.  

இங்கு ஐந்து மாடிக் கட்டம் இருக்கையில், அபேரத்ன, ஏறாவூருக்குச் சென்றது எதற்காக, அங்குதான் இனிய பாரதியின் மனைவி இருக்கிறார் எனக் கூறினார்.  

கொழும்பில் ஆயுதத்தைத்தைக் கொண்டு செல்வது சிரமம் எனவும் அதனால் தான், கடற்படை அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கூறியது நகைப்புக் குரியது. மத்திய வங்கி, விமான நிலையம் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி மாணவர்கள் பலியானமை. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் என்ன கூறுவது. அதுவெல்லாம் சம்பவமே இல்லையா? 

நடராஜ் ரவிராஜ் கொலையுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. எனினும், நாட்டுக்காக உழைத்த, பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இந்த மூவரும் (பிரதிவாதிகளை சுட்டிக்காட்டி) தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டுவிடக்கூடாது என்றார். 

அதுமட்டுமின்றி, ஐக்கிய நாடுகளினால், ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வினவப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இங்கு இடம்பெற்ற கொலைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் வினவப்படவில்லையா, கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். அந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை என, அனுஜ கேள்வியெழுப்பினார். 

அதுமட்டுமின்றி, மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்படாததையும் அடையாள அணிவகுப்பின் போது, பிரதிவாதிகள் அடையாளம் காணப்படாததையும் சுட்டிக்காட்டினார். 

சீருடையணிந்து கம்பீரமாக இருக்க வேண்டிய இந்த மூன்று கடற்படை வீரர்கள் மீதும் பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி, அவர்களுக்குத் தண்டனை வழங்குவது எந்த விதத்தில் நியாயம் எனக் கேட்டார். இரவு 8.20 வரை அவரது தொகுப்புரை இடம்பெற்றது. 

நீதிபதியின் தெளிவுபடுத்தல்

மீண்டும் இடைவேளை வழங்கப்பட்டு, இரவு 9.05க்கு நீதிமன்றம் கூடியது. இதன்போது, இடம்பெற்ற தொகுப்புரைகள் தொடர்பிலும் சாட்சியாளர்களின் சாட்சியம் தொடர்பிலும், ஜூரி சபையினருக்கு சட்டத்தைச் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தல்களை வழங்கிய நீதிபதி மணிலால் வைத்தியதிலக, இரவு 11.15 மணியளவில் தெளிவுரையை நிறைவு செய்ததுடன், ஜூரிகள் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்கு நேரம் வழங்கினார். 

தனது தெளிவுரையின் போது, சாட்சியாளர்களின் சாட்சியங்களை வாசித்துக் காட்டிய நீதிபதி, குறுக்கு விசாரணைக்கான பதில்களையும் வாசித்ததுடன், அவற்றை அடிப்படையாக வைத்து, எவ்வாறு முடிவெடுப்பது என்பதை சட்டப் பிரிவுகளைக் கொண்டு விளக்கினார். அதனையடுத்தே கலந்துரையாடலுக்கான நேரம் வழங்கப்பட்டது. 

அதனையடுத்து, சரியாக நள்ளிரவு 12 மணிக்கு நீதிமன்ற அறைக்குள் நுழைந்த ஜூரிகளிடம், நீங்கள் அனைவரும் எடுத்திருப்பது ஒரே தீர்மானமா, என தோலக்கு முதலி கேட்க, அவர்கள் ஆம் எனப் பதிலளித்தனர். 

என்ன தீர்மானம் என்று கேட்டதற்கு, மூவரையும் விடுவிப்பது என, ஜூரிகள் கூறியதையடுத்து, பிரதிவாதிகள், பிரதிவாதிகள் கூண்டிலிருந்தவாறே கண்ணீர் மல்கியதுடன், அவர்களுடைய உறவினர்களின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 

இவர்கள் மூவரையுமா அல்லது இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட 5,6ஆம் பிரதிவாதிகளையும் விடுவிக்கிறீர்களா என, ஜூரிகளிடம் நீதிபதி கேட்டதற்கு, அவர்கள் முடிவெடுக்க வில்லை எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்களுக்கு நீதிபதியினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.  

நீதிமன்ற அறையிலிருந்து தங்களுடைய அறைக்குச் சென்று கலந்துரையாடியதன் பின்னர், 12.20க்கு உள்நுழைந்த ஜூரிகள், அனைவரையும் விடுவிப்பதாகத் தெரிவித்தனர்.  

இதனையடுத்து, வழக்கின் 2ஆவது பிரதிவாதியான பிரசாத் ஹெட்டியாராச்சி, 3ஆவது பிரதிவாதியான காமினி செனவிரத்ன, 4ஆவது பிரதிவாதியான பிரதீப் சாமிந்த, 5ஆவது பிரதிவாதியான சரண் என்றழைக்கப்படும் விவேகானந்தன் சிவகாந்தன், 6ஆவது பிரதிவாதியான ரொய்ஸ்டன் டுஸேன் ஆகியோரை, அதிகுற்றச் சாட்டுப்பத்திரத்தில் காணப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்திலுமிருந்தும் விடுவிப்பதாக நீதிபதி, தீர்ப்பளித்தார். 

பின்னர், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஆகியோர் அனவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிரசின் சார்பில் ஜூரிகளுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நீதிபதி கூறியதையடுத்து, அனைவரும் வெளியேறினர். 

நீதிமன்ற அறைக்கு வெளியே வைத்து, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.  

நாரஹேன்பிட்டி மாதா வீதியிலிருந்து, எல்விடிகல மாவத்தைக்கு 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று பிரவேசித்த போது, காலை 8.15 மணிக்கு நடராஜா ரவிராஜ் எம்.பி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே அவரையும், அவருடைய மெய்ப்பாதுகாவலரையும் சுட்டுப் படுகொலை செய்தனர். 

அன்று அவருடைய குடும்பம் மட்டுமன்றி, தமிழ் தரப்பினரும், ஏன் சிங்கள நண்பர்களும் கூட அவலக்குரல் எழுப்பினர். சூத்திரதாரிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு கோரிநின்றனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்தப் படுகொலையை, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்துக்கும் கொண்டு சென்றனர்.  

இந்நிலையிலேயே சம்பவம் இடம்பெற்று, 10 வருடங்களும் 1 மாதமும் கடந்த நிலையில், 24 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடுநிசியில் அவ்வழக்கின் தீர்ப்பு வழக்கப்பட்டது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரான நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் பிரதிவாதிகள் அனைவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, சனிக்கிழமை (24) அதிகாலை 12.40க்கு விடுதலை செய்தார்.  

எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் வழங்கிய முடிவையே நீதிபதி, தீர்ப்பாக அறிவித்தார். இந்த வழக்கும், வழக்கின் தீர்ப்பு அதிகாலை வேளையில் வழங்கப்பட்டமையினால், இத்தீர்ப்பு வரலாற்று தீர்ப்பாகிவிட்டது என்பது யாவரும் அறிந்ததாகும். 

- See more at: http://www.tamilmirror.lk/188623/ரவ-ர-ஜ-எம-ப-பட-க-ல-வழக-க-அவலக-க-ரல-மற-த-த-ஆனந-தக-கண-ண-ர-#sthash.uhWLKAdw.dpuf

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘ரணவிருவை கொல்ல மாட்டேன்’
 

article_1482465646-raviraj.jpgபேரின்பராஜா திபான் 

“ரவிராஜ் எம்.பி மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் படுகொலை தொடர்பில், எனக்கும் கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு உத்தியோகத்தரொருவரை (ரணவிரு) நான் கொல்லவும் மாட்டேன்” என, 3ஆவது பிரதிவாதியான காமினி செனவிரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (22) சாட்சியமளித்தார். 

முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்கள் அனைத்தும், புதன்கிழமையுடன் (21) நிறைவடைந்ததையடுத்து, பிரதிவாதிகள், நேற்று சாட்சியமளித்தனர். பிரதிவாதிகள் கூண்டிலிருந்தவாறே அவர்கள் மூவரும் சாட்சியமளித்ததுடன், 2ஆவது பிரதிவாதியான பிரதீப் ஹெட்டியாராச்சி அழுதுகொண்டே சாட்சியமளித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த நடராஜா ரவிராஜ், 2006.11.10அன்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் நேற்றைய அமர்வு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், முற்பகல் 10.50க்கு ஆரம்பிக்கப்பட்டது.  

பிரதிவாதிகளின் சாட்சியமளிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, இரண்டாவது பிரதிவாதி, பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பார் எனக் கூறியதையடுத்து, 2ஆவது பிரதிவாதியான பிரசாத் ஹெட்டியாராச்சி, பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிக்கத் தொடங்கினார். 

“நான், 1978ஆம் ஆண்டு பிறந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றனர். தந்தையார், நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர், பாதுகாப்புப் பிரிவில் இணைய ஆசை இருந்தது. அந்தக் காலத்தில் யுத்தம் நிலவியதால், பலருக்கு பாதுகாப்புப் படைகளில் இணைய விருப்பமில்லை. வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, கடற்படையில் இணைந்து கொண்டேன். 

1998.12.15இல், கடற்படை கடெட் அதிகாரியாக இணைந்தேன். திருகோணமலையிலுள்ள கடற்படை பயிற்சி முகாமில் இணைந்து கொண்டேன். அதன்பின்னர் ஒட்டுசுட்டானிலுள்ள கடற்படை முகாமில் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. 

1999.11.11அன்று எல்.ரீ.ரீ.ஈயினரினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளைக் கொண்டு உயிர்தப்பினோம். அதன் பின்னர், திருகோணமலையின் மூதூர் பகுதயில் பணியாற்றினேன்.  

அந்தக் காலத்தில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றமை அனைவருக்கும் தெரியும். அப்போது, எங்களுடைய பிரிவிலிருந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். அந்தக் காலப்பகுதியில், நான் நன்றாக வேலை செய்தேன் என நினைக்கின்றேன். அந்தப் பகுதியில் சிறப்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டதாக நம்புகிறேன்.  

மூதூரில் கடுமையாக வேலை செய்ததன் பலனாக, 2004ஆம் ஆண்டு அதிகாரியானேன். அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததுடன், அங்குள்ள தீவுகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டேன். பருத்தித்துறை, மாதகல் உட்பட பல பகுதிகளிலும் பணியாற்றியிருந்தேன். 

இராணுவ புலனாய்வில் 5 பாடநெறிகளைக் கற்றதுடன், வெளிநாட்டுப் பாடநெறிகளைக் கற்பதற்கான 4 சந்தர்ப்பங்களும் கிடைத்தன. 

2004-2006ஆம் ஆண்டு வரை வடக்கில் பணியாற்றியதன் பின்னர், கொழும்பு துறை முகத்தில் புலிகளினால் தாக்குதல் நடத்தப்படும் எனக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பில் பணியாற்றினேன். 

எனக்கு எதிராக சாட்சியமளித்த சாட்சியாளரான சம்பத் பிருதிவிராஜ் சாட்சியமளித்த போதே எனக்கு விளங்கியது, நான் வேலை செய்த காலத்தில், 16 நாட்களே என்னைச் சந்தித்த அவர், அந்தக் காலப்பகுதிக்குள் 5-6 தடவைகள் என்னைச் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளார். இது சாத்தியமில்லாதாகும். இது தவிர, நான் கப்டென் என்றும் கூறியுள்ளார். 

சாதாரண வழக்குகளில் பிணை கிடைக்கும் எனினும், இந்த வழக்கில் பிணை வழங்கப்படாது. பணியாற்றிய காலத்திலும் வீடு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது குறைவு. பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்ததால், வழக்கு முடிவதற்கு நிறைய வருடங்கள் எடுக்கும்.  

அதிர்ஷ்ட வசமாக, ஜூரிகள் முன்னிலையில் எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள், 10-15 வருடங்களாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஜூரி சபைமுன் விசாரிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  

எனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பாடசாலை செல்லும் வயதில் உள்ளவர்கள், 2 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளமை அவர்களுக்குத் தெரியாது. நானும் அவர்களைப் பார்க்கவில்லை. 

இவ்வளவு காலத்துக்கு 2-3 நாட்கள் வீட்டில் இருக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என, கண்ணீர் மல்கக் கூறினார். 

3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தனவும் பிரதிவாதிகள், பிரதிவாதிகள் கூண்டிலிருந்தே சாட்சியமளிப்பர் என அறிவித்ததையடுத்து, அவர்களும் சாட்சியமளிக்க ஆரம்பித்தனர். 

3ஆவது சாட்சியாளரான காமினி செனவிரத்ன சாட்சியமளித்தார் 

“எனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நான் மறுக்கிறேன். நான், காமினி செனவிரத்ன. எனது மனைவி அரச உத்தியோகத்தர். எனக்கு இரண்டு பிள்ளைகள். மகள் 8ஆம் தரத்திலும் மகன் 5ஆம் தரத்திலும் கல்விபயில்கின்றனர். நான், மாவனெல்லையில் படித்து, உயர் படிப்பை திருகோணமலையில் மேற்கொண்டேன்.  

அதன்பின்னர், திருகோணமலையிலுள்ள கடற்படைப் பயிற்சி முகாமில் பயின்றேன். பின்னர் கற்பிட்டியில் கடமையாற்றியபோது, 650 பேருக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. நீண்ட காலமாக வடக்குக் கிழக்கில் நான் பணியாற்றினேன். திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக்குச் சென்றபோது, கடற்புலிகளின் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் சில கடற்படையினர் கொல்லப்பட்டனர். 

யாழ்ப்பாணத்தில், புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியபோது, ரி56 ரகத் துப்பாக்கியைக் கொண்டு செல்ல முடியாது. சிவில் உடையில்தான் செல்ல வேண்டும். 21மாதங்களாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளேன். ரவிராஜ் எம்.பி மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் படுகொலை தொடர்பில் எனக்கும் கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு உத்தியோகத்தரொருவரை நான் கொல்லவும் மாட்டேன். 21மாதங்களாக என்னிடமிருந்து இரத்தமாதிரி எடுக்கப்பட்டு, மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. அதனை உடனடியாக எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

மனம்பேரி என்பர் சொல்வது பொய். அவர் என்னை, நீதவான் நீதிமன்றத்தின் அறை எண் 8இல் வைத்தே கண்டார். சரண், சுரேஷ் என்பவர்களை எனக்குத் தெரியாது. அவர்களது தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து தகவல்கள் கிடைக்காது. எங்களுக்குத் தகவல் தர வேறு நபர்கள் உள்ளனர். 

நான் சுட்டதாகப் பொய்ச்சாட்சி கூறிய மனம்பேரிக்கு எதிராக நிறைய வழக்குகள் உள்ளன. 21வருடங்களாகச் சேவையாற்றும் எனக்கு எதிராக எந்தவித வழக்குகளும் இல்லை. அவருடைய சாட்சியில் எனக்குத் தண்டனை வழங்குவது அசாதாரணமானது” என்றார். 

4ஆவது சாட்சியாளரான பிரதீப் சாமிந்த 

“எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு நான் ஆட்சேபணை தெரிவிக்கிறேன். நான் பிரதீப் சாமிந்த. எனது பெண் பிள்ளை 9ஆம் தரத்திலும் மகன் 6ஆம் தரத்திலும் கல்வி பயில்கின்றனர். 1986-05-23இல், கடற்படையில் சேர்ந்தேன். காங்கேசன் துறையில் ஒன்றரை வருடங்களும் நெடுந்தீவிலும் பணியாற்றினேன். அதனையடுத்து திருகோணமலையிலும் பணியாற்றினேன். 1998ஆம் ஆண்டு, கடற்படை புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி, 2005ஆம் ஆண்டு, கடற்படையின் உத்தரவின் பேரில் 15பேருடன் அரச புலனாய்வு சேவையில் இணைந்தேன். 

கொழும்புத் துறைமுகத்தில், புலிகளால் தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவலுக்கு அமையவே நாங்கள் பணியாற்றினோம். கொழும்பில் பணியாற்றியதால் வீட்டுக்குச் செல்லவும் கிடைக்கவில்லை. 22வருடங்கள் கடமையாற்றியுள்ளேன். 9 பதக்கங்களைப் பெற்றுள்ளேன்.  

எங்களுக்கு எதிராகச் சாட்சியமளித்த சம்பத் பிருதிவிராஜ், நீதவான் நீதிமன்றத்திலேயே எங்களைப் பார்த்துள்ளார். இந்த வழக்கிலிருந்து என்னை முழுமையாக விடுதலை செய்யவேண்டும்” என சாட்சியமளித்தார். 

இதனையடுத்து, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சாட்சியாளரான அரச புலனாய்வு சேவையின் பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். 

அரச புலனாய்வுச் சேவையின் தலைமையகம் கொழும்பு 7இலா அமைந்துள்ளது எனக் கேட்டதற்கு ஆம் எனப் பதிலளித்த அவர், அரச புலனாய்வுச் சேவையின் தலைமையகங்கள் எங்கு உள்ளன என வினவியதற்கு, தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக அவற்றைத் தெரிவிக்க முடியாது என்றார். 

தங்களுடைய சேவையின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளார்கள் எனவும் தனது பதவிநிலையின் அடிப்படையில், அவர்கள் இன்னும் சில அதிகாரிகளைக் கடந்தே தன்னிடம் வரவேண்டும் எனவும் கூறினார்.  

அவர்கள் வழங்கும் தகவல்களை ஆய்வுசெய்து, அது புலனாய்வுத் தகவலா இல்லையா எனக் கண்டறியப்பட்டதன் பின்னரே, தாங்கள் அவை தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தார். 

டுஸைன் என்பவர், பொலிஸில் சாரதியாகப் பணியாற்றியதாகவும் கூறிய அவர், அபேரத்ன என்பவர் பற்றிய தகவல்களை தெரியாது என்றும் அவர்கள், அரச புலனாய்வு சேவையில் இருந்த காலத்தில், தான் பிரதி அத்தியேட்சகராக இருந்ததாகவும், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளே அவர்களிடமிருந்து தகவல் பெற்று தனக்கு வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். 

இந்த வழக்குத் தொடர்பில் தான், அதிக அக்கறை செலுத்தவில்லை எனவும் தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பில் 2015ஆம் ஆண்டு வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இவர்கள் தொடர்பில், வினவப்படும் என அறிவித்திருந்தால், தான் அதற்குத் தயாராகி வந்திருப்பேன் எனவும் தம்முடைய பிரிவில் பணியாற்றும் கெலும் திஸாநாயக்க என்பவர் சாட்சியமளித்தமை தனக்குத் தெரியும் எனவும் கூறினார். 

அத்துடன், பிரதிவாதிகளின் மனைவியொருவர், தேசிய புலனாய்வு சேவையில் இருப்பதாகவும் அவரை உங்களுக்குத் தெரியுமா என, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கேள்வியெழுப்பியதற்கு, தனக்கு அதுதொடர்பில் தெரியாது என மறுத்தார். 

‘எச்’ பிரிவு தொடர்பில் வினவியபோதும், பாதுகாப்புக் காரணங்கள் காரணமாக, தனக்கு அதுதொடர்பில் கூற முடியாது என அவர் தெரிவித்ததுடன், பெரஹரா மாவத்ததையில் அரச புலனாயவுச் சேவைக்கு கட்டடம் ஒன்று இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதன்போது குறுக்கிட்ட சட்டத்தரணி
எம்.ஏ சுமந்திரன், சாட்சியாளர் பொய் கூறுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவின் அனுமதிக்கிணங்க, சாட்சியாளரைக் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கவேண்டும் எனக் கூறினார். 

அதன் போது எழுந்த 3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தன, சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணையில் ஈடுபட முறைப்பாட்டாளர் தவிர ஏனையோருக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது எனவும், அப்படி வழங்கப்பட்டால், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழக்கு நடத்த திராணியில்லை என்று நீதிபதி அறிவித்து, பின்னர், சுமந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கூறினார். 

அதனையடுத்து, சட்டத்தரணி
எம்.ஏ சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவ்வாறு குறுக்குக் கேள்வி கேட்க முடியாது என உத்தரவிட்டார். 

தான் சமர்ப்பிப்பு ஒன்றை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அதற்கு அனுமதி தருமாறும் சட்டத்தரணி
எம்.ஏ சுமந்திரன் கோரியதற்கு அமைய அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. 

அதனையடுத்து, வழக்கில் சாட்சியமளித்த சாட்சியாளர்களின் கோவைகளில், எழுத்து மற்றும் சொற் பிழைகள் திருத்தப்பட்டதுடன், முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகளின் சமர்ப்பிப்புகள், இன்று (23) இடம்பெறும் என அறிவித்த நீதிபதி, வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். 

- See more at: http://www.tamilmirror.lk/188505/-ரணவ-ர-வ-க-ல-ல-ம-ட-ட-ன-#sthash.kyWbDu0k.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

‘கட்டளை கொடுத்தவரை அறிவதற்கு காத்திருக்கிறோம்’
 
 

article_1482812231-Sumanthiran.jpgமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

“ரவிராஜின் கொலையில், அரச புலனாய்வுச் சேவைக்கு (எஸ்.ஐ.எஸ்) தொடர்பு இருப்பதைக் காட்டும் சான்றுகளை, குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் சட்டமா அதிபரும் கண்டுபிடித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.  

இந்தக் கொலை வழக்கில், “வழக்குத் தொடுநருக்குத் தெரியாத சிலர் மீது, அரச வழக்குத் தொடுநரினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

“எனவே, கனிஷ்ட கடற்படை அதிகாரிகள் இதைத் தாமாகச் செய்யவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இவர்கள் யாரோ ஒருவரின் கட்டளையை செயற்படுத்தியவர்கள்.  

“ஆனால், இது புதிரின் ஒரு சிறுபகுதிதான். இது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், கட்டளை கொடுத்தவர் யார் என அறிய, நாம் இன்னும் காத்திருகின்றோம். 

“ரவிராஜின் கொலையில் குற்றம்ஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானமை, நாட்டின் நீதித்துறையின் நம்பகம் பற்றிய சந்தேகத்தைப் புதுப்பித்துள்ளது. குறிப்பாக, ஆயுதப்படைகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நீதி முறைக்குள் வராத கொலைகளில், இது இன்னொரு பரிமாணத்தைப் பெறுகின்றது.  

“தேசியப் பிரச்சினையில் ரவிராஜ், சிங்களவர்களையும் தமிழர்களையும் கூட்டாகச் செயற்பட வைக்க முயன்றவர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ரவிராஜ் எம்.பியை கொல்வதற்காக, கருணா பிரிவினருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, 50 மில்லியன் ரூபாய் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் என, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கூறினார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து விலகிய கருணா அம்மான், மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக இருந்த போது அமைச்சரானார். இருப்பினும், சந்தேகநபர்கள் மீது குற்றம் காணுமளவுக்குச் சாட்சியங்கள் இல்லை என்று ஜூரிகள் தீர்ப்பளித்துள்ளனர். 

இந்தக் கொலை வழக்கு விசாரணைகளில் மாறுபாடுகள் பல இருந்ததாக, சட்டவுரைஞர்கள் கூறினர். இந்த வழக்கில் இரண்டு குற்றங்கள் உள்ளன. ஒன்று, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றையது குற்றவியல் கோவையின் கீழும் ஆனது.  

குற்றஞ்சாட்டப்பட்ட கடற்படை அதிகாரிகள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இச்சட்டத்தின் கீழ், பிணையில் விடுதலை செய்ய முடியும். மேலும், பயங்ரவாத தடுப்புச் சட்டத்தில், ஜூரிகளுக்கு இடமில்லை. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சாதாரண சட்டத்தின் கீழ், ஜூரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் சுமந்திரன் கூறினார்.  

“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூரி ஒருவர் தீர்ப்பு வழங்க முடியாது. ஆனால், இங்கு அவ்வாறு நடந்துள்ளது.  

“இந்த வழக்குத் தீர்ப்பு, இலங்கை நீதி முறைமையில் காணப்படும் தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டுடன் வெளிப்பாடு எனச் சிலர் கருதுகின்றனர்” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

- See more at: http://www.tamilmirror.lk/188673/-கட-டள-க-ட-த-தவர-அற-வதற-க-க-த-த-ர-க-க-ற-ம-#sthash.yenzVmnl.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
,இலங்கையின் நீதிச்சேவை மீதான நம்பகத் தன்மையை மீளவும் வெளிப்படுத்திய ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு
 
 
,இலங்கையின் நீதிச்சேவை மீதான நம்பகத் தன்மையை மீளவும் வெளிப்படுத்திய ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்ட மையானது இலங்கையின் நீதிச்சேவை மீதான நம்பகத்தை மீண்டும்  சந்தேகத்திற்கு  உள்ளாக்கியுள்ளது.
 
குறிப்பாக, இலங்கை இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலை வழக்குகள் தொடர்பில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
சிங்கள ஜூரிகள் சபையின் தீர்ப்பைத் தொடர்ந்து, 2006ல் கொல்லப்பட்ட ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கடற்படை அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாக சிங்களவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொ ண்ட தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், தமிழ்த் தேசியப் பிரச்சினையை சிங்கள மொழியில் வெளிப்படு த்துவதில் அயராது பணியாற்றினார். 10 நவம்பர் 2006 அன்று கொழும்பு வீதி ஒன்றில் ரவிராஜ் அவர்களும் அவரது பாதுகாவலர் ஒருவ ரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
 
ரவிராஜ் படுகொலையில் இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினரே தொடர்புபட்டிருந்தனர் என்பதற்கான சாட்சியத்தை இலங்கை குற்ற புலனாய்வுத் திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் கண்டறிந்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த மனித உரிமைகள் சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
raviraj-murder-suspects.jpg
இதற்கும் அப்பால் குற்றம் சாட்டப்படாத வேறு பலரும் இக்கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என அரச சட்டவாளரால் அறிவி க்கப்பட்டது.
 
‘ஒரு சில இளநிலை கடற்படை அதிகாரிகள் மட்டும் ரவிராஜைப் படுகொலை செய்யவில்லை. இவர்கள் வேறு யாரிடமிருந்தோ கட்டளைகளைப் பெற்றே இப்படுகொலையை மேற்கொண்டனர். ஆனால் இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இக்கொலைக்குப் பொறுப்பாளிகல் அல்லர்.
 
இப்படுகொலையானது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது. இப்படுகொலைக்கு கட்டளை வழங்கியவர்கள் யார் என்ப தைக் கண்டறிய நாம் தற்போதும் காத்திருக்கிறோம்’ என சுமந்திரன் தெரிவித்தார்.
 
ரவிராஜைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் கருணா குழுவிற்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக அரச தரப்பில் சாட்சி வழங்கிய முன்னாள் காவற்துறை வீரர் ஒருவர் விசாரணையின் போது தெரிவித்திருந்தார் என இலங்கை அரச ஊடகமான ‘டெய்லி நியூஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
 
எனினும் சாட்சிகளால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட முடியாது என்பதால் அவர்களை விடுவிக்குமாறு சிங்கள ஜூரி சபை தெரிவித்தது.
 
இப்படுகொலை வழக்குத் தொடர்பான சட்ட நடவடிக்கையானது முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டு வகையான சட்டங்கள் தொடர்புபட்டுள்ளன.
 
அதாவது இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய இரு சட்டங்கள் சம்ப ந்தப்பட்டுள்ளன. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை அதிகாரிகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.
 
அதேவேளையில் இவர்களுக்கான பிணையானது சாதாரண சட்டத்தின் அடிப்படையில் ஜூரி சபையால் அனுமதிக்கப்பட்ட தாகவும் ஜூரி சபையின் விசாரணைக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அனுமதிக்காத போதிலும் சாதாரண சட்டத்தின் கீழ் குற்ற வாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டதாகவும்சுமந்திரன் தெரிவித்தார்.
 
‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூரி சபையானது தீர்ப்பை வழங்க முடியாது. இது சட்டத்திற்கு முரணானது’ என படு கொலை செய்யப்பட்ட ரவிராஜின் மனைவிக்காக வழக்காடிய சட்டவாளர் சுமந்திரன் தெரிவித்தார்.
 
இந்த வழக்கின் தீர்ப்பானது நீதிச்சேவையில் தமிழ் மக்களுக்கான நீதி புறக்கணிப்படுகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படு த்தும் ஒரு சாட்சியாக உள்ளதாக சிலர் நோக்குகின்றனர்.
 
‘இது போன்ற வழக்குகளில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் என்கின்ற இன வேறுபாடானது பிரதான காரணியாக உள்ளது. தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதன் மூலம் மட்டும் நீதி முறைமைக்குள் காணப்படும் பாரபட்சங்களை நீக்கமுடியாது’ என மூத்த ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான குசல் பெரேரா தெரிவித்தார்.
 
2015ல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதம நீதியரசராக தமிழரான கனகசபாபதி சிறிபவான் நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- The Hindu – (Meera Srinivasan) நித்தியபாரதி

http://www.onlineuthayan.com/article/266

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.