Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ''எழுக தமிழ்'' எழுச்சிப் பேரணி தொடர்பான ஊடக சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ''எழுக தமிழ்'' எழுச்சிப் பேரணி தொடர்பான ஊடக சந்திப்பு

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழால்  என்ன நடக்கும் என்பது எனது கேள்வி 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, முனிவர் ஜீ said:

எழுக தமிழால்  என்ன நடக்கும் என்பது எனது கேள்வி 

எழுக தமிழ் நடைபெறாது தடுப்பதினால் என்ன நடக்கும் என்பது எனது கேள்வி.

1 hour ago, முனிவர் ஜீ said:

எழுக தமிழால்  என்ன நடக்கும் என்பது எனது கேள்வி 

என்னங்க இப்படி கேட்டுட்டீங்கள் 

நானூறு பேர் நாலு கிலோ மீட்டர் நடந்தால் 
தொப்பை குறையும்
கத்தி கத்தி குரல்வளம் நல்லாவரும்
போற வழியில சோடா வாங்கினால் 
கடைக்காரனுக்கு வருமானம்
கொலஸ்டரோல் குறையுமாம்

அப்புறம் உடற்பயிற்சி எமது சமூகத்துக்கு கட்டாயம் தேவையாம்.

இப்படி எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்குதே:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

எழுக தமிழால்  என்ன நடக்கும் என்பது எனது கேள்வி 

1 hour ago, ஜீவன் சிவா said:

என்னங்க இப்படி கேட்டுட்டீங்கள் 

நானூறு பேர் நாலு கிலோ மீட்டர் நடந்தால் 
தொப்பை குறையும்
கத்தி கத்தி குரல்வளம் நல்லாவரும்
போற வழியில சோடா வாங்கினால் 
கடைக்காரனுக்கு வருமானம்
கொலஸ்டரோல் குறையுமாம்

அப்புறம் உடற்பயிற்சி எமது சமூகத்துக்கு கட்டாயம் தேவையாம்.

இப்படி எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்குதே:grin:

மக்களுக்கான மக்களுடைய எழுச்சிப் போராட்டம்   ஒன்றை இப்படி வேறு யாராலும் கொச்சைப்படுத்த முடியாது
 எழுக தமிழ்.. வெல்க தமிழ்...வாழ்க தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ் பெரும் வெற்றியடைய வேண்டுகிறேன். 

இதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுக தமிழ் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

எழுக தமிழ் நடைபெறாது தடுப்பதினால் என்ன நடக்கும் என்பது எனது கேள்வி.

யாரும் தடுகக வில்லை இதேயே சிங்கலே  என்று அவர்கள் நடத்தினால் தங்களின் நிலைப்பாடு   அதே கோஷங்களை அவர்கள் முழக்கமிட்டால் இன்று கோப்பாபிலவு மக்களுக்கு சிங்கள மக்கள் ஆதரவு என்ற செய்தி வந்திருக்கிறது  இது சும்மா செய்திக்காக இருக்கலாம் 

1 hour ago, வாத்தியார் said:

மக்களுக்கான மக்களுடைய எழுச்சிப் போராட்டம்   ஒன்றை இப்படி வேறு யாராலும் கொச்சைப்படுத்த முடியாது
 எழுக தமிழ்.. வெல்க தமிழ்...வாழ்க தமிழ்

இதை ஏன் நீங்கள் கொச்சைப்படுத்தியதாக நினைக்கிறீர்கள் அண்ண யாழ் பாண எழுக தமிழில் கிடைத்த  பலன் என்னவோ என்பதே எனது கேள்வி  இதை பார்த்து விட்டு அவர்கள் ( எதிரிகள் ) மீண்டும் முழக்க மிடுவான்  அவனை ப்பலப்படுத்துவான் 

1 hour ago, ஈழப்பிரியன் said:

எழுக தமிழ் பெரும் வெற்றியடைய வேண்டுகிறேன். 

இதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் நானும் தெரிவித்து கொள்கிறேன் 
இதே குறுப்பை கொக்கட்டிச்சோலை  படுகொலை நிகழ்வுக்கு ஏன் அனுமதி    கொடுக்கவில்லை என்றதும் எனது கேள்வி 

49 minutes ago, குமாரசாமி said:

எழுக தமிழ் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

மக்களுக்கான மக்களுடைய எழுச்சிப் போராட்டம்   ஒன்றை இப்படி வேறு யாராலும் கொச்சைப்படுத்த முடியாது
 எழுக தமிழ்.. வெல்க தமிழ்...வாழ்க தமிழ்

ஏன் இவ்வளவு கோபம்??

ஒருவருடன்  ஒன்றிணையாமல் இருக்கின்றோம்  என்பதனை வேறு எவ்வாறு விளக்கமுடியும்???

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஏன் இவ்வளவு கோபம்??

ஒருவருடன்  ஒன்றிணையாமல் இருக்கின்றோம்  என்பதனை வேறு எவ்வாறு விளக்கமுடியும்???

அதே தான் அண்ண நான் அன்று சொன்னது இவங்களுக்கு ஆயிரம் புடுங்கல் கள் இருக்கிறது  அதற்கு உதாரணம்  மேலே எழுயுள்ளேன் மக்கள் எல்லாரும் ஒற்றுமையே அது உங்களுக்கு தெரியும்  எல்லாம் அரசியல் லாபம் வேற  ஒன்றும் சொல்ல இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முனிவர் ஜீ said:

யாரும் தடுகக வில்லை இதேயே சிங்கலே  என்று அவர்கள் நடத்தினால் தங்களின் நிலைப்பாடு  

அதே கோஷங்களை அவர்கள் முழக்கமிட்டால் இன்று கோப்பாபிலவு மக்களுக்கு சிங்கள மக்கள் ஆதரவு என்ற செய்தி வந்திருக்கிறது  இது சும்மா செய்திக்காக இருக்கலாம் 

சிங்களவர்கள் அடக்கப்படுகிறார்களா?

அப்படியாயின் ஐனநாயக முறையில் அவர்களுக்கும் அந்த உரிமையுண்டு

இதை ஏன் நீங்கள் கொச்சைப்படுத்தியதாக நினைக்கிறீர்கள் அண்ண யாழ் பாண எழுக தமிழில் கிடைத்த  பலன் என்னவோ என்பதே எனது கேள்வி  இதை பார்த்து விட்டு அவர்கள் ( எதிரிகள் ) மீண்டும் முழக்க மிடுவான்  அவனை ப்பலப்படுத்துவான் 

பலன்  இல்லாமலா இத்தனை எதிர்ப்பு????

வாழ்த்துக்கள் நானும் தெரிவித்து கொள்கிறேன் 
இதே குறுப்பை கொக்கட்டிச்சோலை  படுகொலை நிகழ்வுக்கு ஏன் அனுமதி    கொடுக்கவில்லை என்றதும் எனது கேள்வி 

வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

சிங்களவர்கள் அடக்கப்படுகிறார்களா?

அடக்கபடவில்லை அடக்க வேண்டும்  நினைக்கிறார்கள்  தமிழர்களை ச்முதாயத்தின் மாற்றம் என்பது இரண்டாம் பட்சமானது எப்போது மனிதர்கள் அவர்களுக்குள் மாற்றத்தை கொண்டு வருகிறார்களோ அப்பொழுது மாற்றம் வரலாம் நமக்கும் அவர்களுக்கும்  சொற்களால் மாற்றம் கொண்டு வ்ர இயலாது 

5 minutes ago, விசுகு said:

பலன்  இல்லாமலா இத்தனை எதிர்ப்பு????

அதை தான் நான் கேட்டேன் என்ன பலனை அடையலாம் முன்னர் நடத்தியதற்கு அடைந்த பலன் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

அடக்கபடவில்லை அடக்க வேண்டும்  நினைக்கிறார்கள்  தமிழர்களை ச்முதாயத்தின் மாற்றம் என்பது இரண்டாம் பட்சமானது எப்போது மனிதர்கள் அவர்களுக்குள் மாற்றத்தை கொண்டு வருகிறார்களோ அப்பொழுது மாற்றம் வரலாம் நமக்கும் அவர்களுக்கும்  சொற்களால் மாற்றம் கொண்டு வ்ர இயலாது 

அதை தான் நான் கேட்டேன் என்ன பலனை அடையலாம் முன்னர் நடத்தியதற்கு அடைந்த பலன் என்ன??

அரசியல்போராட்டங்கள் உடனடிப்பலன்களை தராது

காலம் பதில் சொல்லும்

பூச்சிபுழுவை நசித்தாலும் அவை கத்தத்தான் செய்யும்

பலன் என்ன என்று கேட்போமா ராசா??

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, முனிவர் ஜீ said:

யாரும் தடுகக வில்லை இதேயே சிங்கலே  என்று அவர்கள் நடத்தினால் தங்களின் நிலைப்பாடு   அதே கோஷங்களை அவர்கள் முழக்கமிட்டால் இன்று கோப்பாபிலவு மக்களுக்கு சிங்கள மக்கள் ஆதரவு என்ற செய்தி வந்திருக்கிறது  இது சும்மா செய்திக்காக இருக்கலாம் 

வாழ்த்துக்கள் 

பெரும்பாலும் சிங்களே என்று நடத்தப்படும் போராட்டம்   தமிழர்களின் உரிமைகளை மறுப்பனவையாகவே இருக்கும். அந்த இடத்தில் அவர்களுக்கான ஆதரவு தமிழர்களிடம் இருந்து கிடைக்காது. அப்படி ஆதரவு கொடுப்பவர்கள் தமிழர்களாகவும் இருக்க முடியாது.

சிங்கள மக்கள் தங்களின்மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகளிற்கெதிராக தங்களின்  உரிமைகளை வென்றெடுக்க போராட்டம்   செய்யும்போது
நிச்சயமாகத் தமிழர்களின் தார்மீக  ஆதரவு கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.oamma.com%2F2017%2F02%2F06%2Fமட்டக்களப்பு-எழுக-தமிழில%2F&h=ATOmGrFCi_mA0oyCC3sA8bkg82Vt3FSoEhCCwrb-sWgTWvQpfDTYDd8tz5aOT_FbzVRlpPkwDkaLqTkp3bCTZHAvfm6va0MgzfUb3atqkjombLKwT3WW8LibHotiZVGY_qW8R9Gt9duPpcV1BPI&s=1

இது ஒரு செய்தி தளத்திலிருந்து 

3 minutes ago, வாத்தியார் said:

பெரும்பாலும் சிங்களே என்று நடத்தப்படும் போராட்டம்   தமிழர்களின் உரிமைகளை மறுப்பனவையாகவே இருக்கும். அந்த இடத்தில் அவர்களுக்கான ஆதரவு தமிழர்களிடம் இருந்து கிடைக்காது. அப்படி ஆதரவு கொடுப்பவர்கள் தமிழர்களாகவும் இருக்க முடியாது.

சிங்கள மக்கள் தங்களின்மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகளிற்கெதிராக தங்களின்  உரிமைகளை வென்றெடுக்க போராட்டம்   செய்யும்போது
நிச்சயமாகத் தமிழர்களின் தார்மீக  ஆதரவு கிடைக்கும்

இதே போல் தான் நமது உரிமைக்கான போர் கூட பயங்கரவாத போராக சித்தரித்து சிங்கள மக்களுக்கும் முழு உலகத்துக்கும் சிங்கள இனவாதிகளால் காண்பிக்கப்பட்டது வாத்தியார்

அதே போல் இந்த எழுக தமிழும் சிங்கள மக்கள் மத்தியில்  வேறு விதமாக காண்பிக்கப்படலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

வலியவனும் மெலியவனும் ஒன்றிணைந்தாலும் வலியவன் கை என்றும் மேலோங்கியே நிற்கும். சிங்களவர் அரசு என்னும் வலிமையோடு உள்ளனர். தமிழருக்கு அந்த வலிமை இல்லை. இந்நிலையில் ஒன்றிணைத்தாலும் தமிழருக்கு அடிமை வாழ்வுதான் தொடர்ந்து வரும். இதனைத் தவிர்ப்பதற்கு போராட்டம் ஒன்றுதான் வழி. எழுக தமிழும் ஒரு போராட்டமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

போராட்டம் இல்லாமல் வாழ வழி என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை  ஆனால் சிங்கள அரசியல் தலைமைகளுடன் போராடித்தான் ஆகவேண்டும் 

ஆனால் போராட்டமே வாழ்க்கையாக தொடர்ந்து கொண்டு போனால்  வாழ்வதில் அர்த்தம் இல்லை ( மக்களுக்கு) உதாரணம் கோப்பாபிலவில் இலவுகாத்த கிளிகள் போல போராட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, முனிவர் ஜீ said:

விக்னேசுவரன் அவர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு இதனைவிடவும் கேவலமான செய்திகள் உண்மைபோன்று.... மறுக்கமுடியாது நம்பிக்கை கொள்ளுமளவிற்கு மேலும் வெளிவரும். நம்பலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

போராட்டம் இல்லாமல் வாழ வழி என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை  ஆனால் சிங்கள அரசியல் தலைமைகளுடன் போராடித்தான் ஆகவேண்டும் 

ஆனால் போராட்டமே வாழ்க்கையாக தொடர்ந்து கொண்டு போனால்  வாழ்வதில் அர்த்தம் இல்லை ( மக்களுக்கு) உதாரணம் கோப்பாபிலவில் இலவுகாத்த கிளிகள் போல போராட்டம் 

ஒடுக்குமுறையாளனாகட்டும் ஆக்கிரமிப்பாளனாகட்டும் எதையுமே தானாகத் தரவோ விடவோ போவதில்லை. போராட்டமே வாழ்வாகினால் விரக்த்திநிலைதோன்றுவது இயல்பானதே. ஆனால் எம்மைவிட நீண்ட போராட்டங்கள்வாயிலாகவே தம்மைப் பல்வேறு இனங்கள் இவ்வுலகிலே வரலாற்றில் நிலைப்படுத்தியுள்ளன. போராடாமல் இருப்போமானால் இதைவிட மோசமானதொரு நிலைக்குள் தமிழினம் அமிழ்ந்து அழிந்துவிடும் அபாயமுள்ளதையும் நாம் மறுத்தொதுக்கிவிட முடியாது. எழுகதமிழ் தமிழினம் ஒருங்கிணைந்து திரள்நிலையடைவதற்கானதொரு குறியீடாகவும் மீளெழுகைக்கான முதற்படியாகவும் அமையக்கூடியதே. கடந்த எழுகதமிழின் செய்தியும் அதனையே சுட்டியது. சனனாயக முகமூடியணிந்துள்ள நடப்பரசை அம்பலப்படுத்த தமிழினத்தால் முடிந்த அனைத்தையும் செய்வதனூடாகவே மாற்றத்தைக்காண முடியும்.

Edited by nochchi

 பொங்கு தமிழ் நடை பெற்ற போது அது புலிகளால் நடத்தப் பட்டது , மக்கள் புலிகளுக்கு அஞசி சென்றார்கள் என செய்தி பரப்பப் பட்டது, ஆனால் புலிகள் அற்ற தளத்தில் மக்கள் தாமாகவே இணைந்து, தமது உரிமைகளுக்காக  யாருடைய வற்புறுத்தலும் இன்றி எழுக தமிழாக இணைவதை சிங்களம் அறவே விரும்பவில்லை . கூட்டமைப்பு இந்த எழுக தமிழுக்கு மறைமுகமாக வேணும்  ஆதரவை வழங்கி , இதை பெரு வெற்றியாக்கி.... அரசுடான பேரம் பேசுதலில் இதனை காரணம்  காட்டி  மக்களை ஏமாற்ற முடியாது எனபதனை உணர்த்தி அதிகளவு அதிகாரங்களை பெற முயற்சிக்க வேண்டும் .....

ஆனால் அரசின் சப் ஏஜன்ட்களாக செயற்படும் கூட்டமைப்பிடம் நாம் இதனை எதிர்பார்ப்பது முட்டாள்தனமே ....

6 hours ago, முனிவர் ஜீ said:

யாழ் பாண எழுக தமிழில் கிடைத்த  பலன் என்னவோ என்பதே எனது கேள்வி  

தமிழன் ஒன்றும் சம் சும் போல சோம்பையன்கள் இல்லை என்பதை சிங்களத்துக்கு உணர்த்தியது மிகப் பெரிய பலன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை நடை பெர இருக்கும்  எழுக தமிழ் நிகழுவுக்காக   ஆயத்தமாகும் நாவற்குடா மைதானம் 

16508117_370430936647416_231529696709376

16508520_10155221748022262_1054044360664

12 hours ago, Athavan CH said:

தமிழன் ஒன்றும் சம் சும் போல சோம்பையன்கள் இல்லை என்பதை சிங்களத்துக்கு உணர்த்தியது மிகப் பெரிய பலன்

முடிந்தால் அதே  சோம்பையங்கள் இல்லை என்பதை அடுத்த தேர்தலில் காட்ட சொல்லுங்கோ என்ன தான் சொன்னாலும் அவங்க தான் வருவாங்கtw_blush:

எழுக தமிழ் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

மானமுள்ள கிழக்குத் தமிழர் பேரணிக்கு பேராதரவு வழங்குவார்கள்!!!

நாளைய தின எழுக தமிழ் பேரணிக்கு முழுமையாக கைகோர்க்கும் கிழக்கு மக்கள்

வடக்கை தொடர்ந்து கிழக்கில் நாளைய தினம் (10) ஒலிக்க இருக்கும் 'எழுக தமிழ் பேரணிக்கு' கிழக்கு மக்கள் முழுமையாக கைகோர்த்து பெரும் ஆதரவை வழங்குவதற்கு அனைவரும் தயாராக இருப்பதாக எழுக தமிழ் தொடர்பாக மக்களின் கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதங்களாக 'எழுக தமிழ்' பேரணிக்கு அழைப்பு விடுத்து கிழக்கில் நடைபெற்ற ஆதரவு பிரச்சார கருத்துக் கணிப்பின் அடிப்படையில் குறித்த மக்களின் கருத்துக் கணிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் கருத்துக் கணிப்புக்கு எதிரான வாதப்பிரதி வாதங்களை முன்வைக்கும் ஒரு தரப்பினர் இரா.சம்பந்தன் முன்னெடுக்கும் அரசியல் செயற்பாட்டை குறித்த 'எழுக தமிழ் பேரணி' குழப்புவதாக தெரிவிக்கின்றனர்.

வடக்கைத் தொடர்ந்து கிழக்கில் நடைபெற இருக்கும் 'எழுக தமிழ் பேரணிக்கு' ஆயத்தமாகியதில் இருந்து தமிழ் மக்கள் பேரவையின் ஒவ்வொரு பரப்புரையிலும் இரா.சம்பந்தன் முன்னெடுக்கும் எந்தவொரு அரசியல் செயற்பாட்டையும் குறித்த எழுக தமிழ் பேரணி குழப்பாது என அதன் இணைத் தலைவர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பாக மிக முக்கியமான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் மீதான முன்னெடுப்புக்களை வலியுறுத்திய ஸ்ரீ லங்கா அரசின் செயற்பாடு குறித்து எழுக தமிழ் பேரணியின் அரைகூவல் மிக நீண்டு ஒலிக்கயிருக்கும் நிலையில் மிக முக்கிய நாளாக நாளைய எழுக தமிழ் பேரணி நடைபெறயிருப்பதாக குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக அமைகின்றது.

இதேவேளை நாளைய தினம் மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறயிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு 10,000 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராசா இன்றைய தினம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளைய தினம் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பேரணிக்குரிய போக்குவரத்து வசதிகள், வருகை தரும் மக்களுக்குரிய இருப்பிட வசதிகள், குடிபான ஒழுங்கு வசதிகள் போன்றவற்றுக்குரிய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக் குழுவினர் திறன்பட முன்னெடுத்து வருவதாகவும், நாளை காலை 9.00 மணிக்கு எழுக தமிழ் பேரணி மிகவும் பிரமாண்ட மக்கள் கூட்டத்துடன் இடம் பெற இருக்கின்றது.

கிழக்கில் நாளை எழும் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் தங்களின் ஆதரவுகளை ஊடக அறிக்கை ஊடாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்ற இவ்வேளை அனைத்து அமைப்புக்களையும் பொது மக்களையும் அமைக்கின்றோம். ஒட்டுமொத்தமாக கிழக்கு மக்களின் பேராதரவு எழுக தமிழ் பேரணிக்கு கிடைத்துள்ளது.

கடந்த மாதங்களில் இருந்து கிழக்கில் பல மாவட்டங்களிலுள்ள மூலைமுடுக்கு வரைக்கும் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணிக்குரிய ஆதரவு பிரச்சாரமானது நேற்றைய தினத்துடன் முற்றுமுழுதாக நிறைவடைந்த நிலையில் நாளைய தினம் எழுக தமிழ் பேரணி இறுதிப் பிரச்சாரம் இடம்பெறும் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

http://www.tamilwin.com/community/01/134934?ref=home

3 hours ago, போல் said:

எழுக தமிழ் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

மானமுள்ள கிழக்குத் தமிழர் பேரணிக்கு பேராதரவு வழங்குவார்கள்!!!

யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழாயிரம் பேருக்குத்தான் மானம் இருந்தது - கிழக்கில் எப்படியோ!!!

21 minutes ago, ஜீவன் சிவா said:

யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழாயிரம் பேருக்குத்தான் மானம் இருந்தது - கிழக்கில் எப்படியோ!!!

தமிழின விடுதலைக்கு  முயற்சிக்கும், தமிழர்களின் நன்மைகளுக்கு குரல்கள் கொடுக்கும் நபர்களுக்கு/குழுக்களுக்கு எதிராக ஜீவன்சிவா ஏதாவது தரவுகளை கொடுத்தால் அதை குறைந்தது 100 ஆல் பெருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்திய பதிவு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.