Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் 8 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் ( இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் மூலம் போலியான காசோலைகளை பயன்படுத்தி இவர்கள் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், போலியான சான்றளிக்கப்பட்ட காசோலைகளை பயன்படுத்தி விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரை நாடி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலதிக விபரங்களுக்கு....

$8M 'lost and laundered' in elaborate scheme: police

http://www.tamilwin.com/canada/01/135900

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி tw_dissapointed_relieved:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்களின் மானத்தை வாங்கிறதுக்கெண்டே கொஞ்சம் சுனாமி மாதிரி திரியுதுகள்.

ஆயுள்காலம் வரைக்கும் உதுகளை வெளியிலையே வரவிடாமல் சிறையிலை தள்ளனும்.tw_rage:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களின் செயல்பாடுகளால் எதிர் காலத்தில் நல்ல வேலைகளுக்குள் ௬ட உள்ளிட முடியாத நிலை ஏற்படும்..காரணம் வேற்றினத்தவர் மத்தியில் ஒரு வித வெறுப்பை கொட்டிக் கொள்ளும் அழவுக்குத் தானே நம்மவர்கள் நடக்கிறார்கள்..இந்த பெண் வங்கி ஒன்றில் மோட்கேஜ் செய்பவராக பணிபுரிபவராம்.ச்சக்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்கள் யாயினி. இப்படி கும்பல்கள் பல கலாச்சாரத்திலும் உள்ளார்கள். சில ஊடகங்கள் நாம் தான் இப்படியான வேலைகளை செய்வதாக முனைப்பாக ஈடுபட்டுள்ளார்கள்.
இதன் பின்னால் உள்ள மாவியா கும்பலை  பலரும் இலகுவாக மறந்து விடுவது தான் நிதர்சனம்.

3 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர்களின் மானத்தை வாங்கிறதுக்கெண்டே கொஞ்சம் சுனாமி மாதிரி திரியுதுகள்.

ஆயுள்காலம் வரைக்கும் உதுகளை வெளியிலையே வரவிடாமல் சிறையிலை தள்ளனும்.tw_rage:

கு.மா அண்ணா  இளனீர் குடிச்சவன்........ யாரோ  பழ மொழி தெரியும் தானே. இலகுவாக காசு உழைக்கும் எம்மவர்கள் இவர்களின் வலையில் இலகுவாக அகப்பட்டு விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மானத்தை.... வாங்குகிறார்கள். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

நடந்த விஷங்களை... "பக்காவாக"  சொல்வதைப் பார்க்க.... 
அண்மையில்... ஸ்ரீலங்காவுக்குப்  போன, 
நெடுக்கருக்கு.... நடந்த விடயம் போலுள்ளது. :grin: :D:

Edited by தமிழ் சிறி

1 hour ago, nedukkalapoovan said:

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

நிறைந்த கற்பனைகளுடன் எழுதப்பட்டுள்ளது - என்ன லாபமோ யாமறியோம்.

நான் 2011 இலிருந்து இங்கு குறைந்தது ஒரு 500 தடவைகளாவது எனது காட்டுகளை பாவித்து ஏ டி எம்மில் பணம் எடுத்திருப்பேன். சில இடங்களை தவிர மற்றய கடைகளில் எனது கார்ட்களைப் பாவிப்பதில்லை.

எனக்கு வசதியாக - அதாவது கணக்கு வைத்துக் கொள்ள, சில பாங்கிலேயே மட்டும் பணம் எடுப்பேன்.

இதுவரை இப்படி நடந்ததில்லை.

ஒரே ஒரு முறை எனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றது. நோர்வேயில் உள்ள எனது வங்கியுடன் தொடர்பு கொண்டபோது - சில தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தொடர்பு இல்லை, கிரெடிட் கார்டை பாவிக்க சொன்னார்கள் - பிராப்ளம் சோல்வ்ட்.

எனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நான் ஏமாற்றப்பட்டது இங்கிலாந்தில்தான்.

வந்துட்டானுங்க கதை அளக்க. 

Four men charged with fraud after CCTV records ATM being tampered with

Four people charged with fraud after they were caught tampering with ATM on CCTV

9 Mar 2016 / Rebecca Taylor, Reporter - Wandsworth /  @wandsworthbecca

Don't be the last to know! Get the latest local news straight to your inbox.

Sign up

Four men have been charged after CCTV recorded an ATM being tampered with last night.

The men, who were arrested last night, have all been charged with the possession or control of an article for use in fraud.

The men charged are Manikkam Sivakumaran, 40, of Plough Lane, Wimbledon, Varathan Rajun Santhanam, 44, of Mellison Road, Wandsworth, Mylvaganam Naresh, 30, of Brixton Road, Lambeth, and Dilrukshan Gnaneswaran, 23, also of Brixton Road, Lambeth.

All four men are due to appear at Wimbledon Magistrates’ Court today

Merton Police are warning people to be vigilant when using ATMs to withdraw money.

They advise people to cover their pin number, check their surroundings and always report anything suspicious.

http://www.yourlocalguardian.co.uk/news/local/14330839.Four_people_charged_with_fraud_after_they_were_caught_tampering_with_ATM_on_CCTV/ 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்கள் யாயினி. இப்படி கும்பல்கள் பல கலாச்சாரத்திலும் உள்ளார்கள். சில ஊடகங்கள் நாம் தான் இப்படியான வேலைகளை செய்வதாக முனைப்பாக ஈடுபட்டுள்ளார்கள்.
இதன் பின்னால் உள்ள மாவியா கும்பலை  பலரும் இலகுவாக மறந்து விடுவது தான் நிதர்சனம்.

இதில் பெரிதாக அலட்டிக் கொள்வதில் எனக்கு எந்த இலாபமும் இல்லை தான் நுணா..ஆனால் அடுத்தவன் செய்யிறான் என்பதற்காக நாமும் அந்த வழியைத் தான் பின் பற்ற வேண்டும் என்றும் இல்லைத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

நிறைந்த கற்பனைகளுடன் எழுதப்பட்டுள்ளது - என்ன லாபமோ யாமறியோம்.

நான் 2011 இலிருந்து இங்கு குறைந்தது ஒரு 500 தடவைகளாவது எனது காட்டுகளை பாவித்து ஏ டி எம்மில் பணம் எடுத்திருப்பேன். சில இடங்களை தவிர மற்றய கடைகளில் எனது கார்ட்களைப் பாவிப்பதில்லை.

எனக்கு வசதியாக - அதாவது கணக்கு வைத்துக் கொள்ள, சில பாங்கிலேயே மட்டும் பணம் எடுப்பேன்.

இதுவரை இப்படி நடந்ததில்லை.

ஒரே ஒரு முறை எனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றது. நோர்வேயில் உள்ள எனது வங்கியுடன் தொடர்பு கொண்டபோது - சில தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தொடர்பு இல்லை, கிரெடிட் கார்டை பாவிக்க சொன்னார்கள் - பிராப்ளம் சோல்வ்ட்.

எனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நான் ஏமாற்றப்பட்டது இங்கிலாந்தில்தான்.

வந்துட்டானுங்க கதை அளக்க. 

7 hours ago, nedukkalapoovan said:

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

இது களவுப் பிரச்சனை இல்லை. தொழில்நுட்ப காரணம். வேறு பிரச்சனை இல்லை.

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்... ATM புரோசசிங் ரைம் கடந்தால், மட்டையை தள்ளி, transaction முடித்துவிடும்.

கணக்கில் கழிந்திருக்கும். பணம் கொடுக்கப்பட்டிருக்காது. இது பலருக்கு நடப்பது.

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

2 minutes ago, Nathamuni said:

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்..

இல்லையே

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

நாம் பணம் எடுக்கும்போது மட்டையில் உள்ள விபரத்தை வைத்துத்தான் பணம் தருமே தவிர அங்கேயே அப்போதே எல்லாமும் கணக்கிடப்படுவதில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இல்லையே

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

நாம் பணம் எடுக்கும்போது மட்டையில் உள்ள விபரத்தை வைத்துத்தான் பணம் தருமே தவிர அங்கேயே அப்போதே எல்லாமும் கணக்கிடப்படுவதில்லை.
 
உங்கள் மட்டையின் Base currency NK, இலங்கையினது... US$ நீங்கள் கேட்பது இலங்கை ரூபாயில்..

மட்டை வழங்குனர், விசா, மாஸ்டர்.... அவர்களது இலங்கைக்கான நாட்டு ரோயாலிற்றி....

இலங்கை அல்லது நோர்வே அரச வரி இருப்பின்...அது (இந்தியாவில் உண்டு).

நாணயமாற்று விகிதம் அடிக்கடி மாறும். இந்த மாற்றத்தின் Range ஜ முன்கூட்டியே அனுமானித்து அதன் highest figure படியே  நீங்கள் பணம் பெறுவீர்கள்.

ஏதாவது உலகளாவிய sensitive காரணத்தினால்... இந்த அனுமான range வெளியே மாற்றுவிகிதம் போனால்... உடனடியாக புதிய விகிதம் update ஆகும்.

அந்த நேரத்தில் மட்டை போட்டால் இது போல் நிகழும்.

முக்கியமாக banks always wins and we are losers என்பது தான் வங்கியியல் money transaction நிலைப்பாடு.

இலண்டனின் Stock Exchange லும் பார்க்க, money exchange மார்க்கற் பாரியது.... ஆனால் இரண்டாவது.... சந்து பொந்துகளிலும் நடக்கும். முதலாவது SE ல் மட்டும். 

(நமக்கு வேலை இந்தப் பக்கம்தான்.)

Edited by Nathamuni

39 minutes ago, Nathamuni said:

அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே...

இந்த கணக்கீடு 
அப்பவே நடக்குமா அல்லது பிறகா?

அதுவும் டெபிட் காட்டை பாவிக்கும்போது 

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

46 minutes ago, Nathamuni said:

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

இதையும் கொஞ்சம் விளக்கினால் - பலருக்கு பிரயோசனமாக இருக்கும் (முட்டாள்களாக இல்லாமல் இருக்க)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இது களவுப் பிரச்சனை இல்லை. தொழில்நுட்ப காரணம். வேறு பிரச்சனை இல்லை.

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்... ATM புரோசசிங் ரைம் கடந்தால், மட்டையை தள்ளி, transaction முடித்துவிடும்.

கணக்கில் கழிந்திருக்கும். பணம் கொடுக்கப்பட்டிருக்காது. இது பலருக்கு நடப்பது.

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

முனியர் நீங்கள் சொல்வது போலவும் அவருக்கு நடந்திருக்கலாம். ஆனால் அவர் இந்தப் பிரச்சனையை காசாளர் கவுன்டருக்கு எடுத்துச் சென்றும் அங்கு உரிய கவனம் செலுத்தாமல்.. தட்டிக்கழிக்கும் பாங்கில் செயற்பட்டது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  கவுன்டரில்.. விடயத்தை விளக்கிச் சொல்லி இருக்கலாம்.. அல்லது அவர்களுக்கு இந்த அறிவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

இருந்தாலும்.. விடயத்தை அவர் இங்கு வந்து தெரிவித்ததும்.. இங்கு வங்கி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி விசாரணைகளை முடுக்கிவிட்டது. அதுமட்டுமன்றி அங்கு அந்த வங்கியுடன் மேலும்..எந்தத் தகவல்களையும் பரிமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்களாம். காசியந்திரம் காசை வழங்கவில்லையா என்பதை அவர்கள் இலகுவாக இயந்திரக் காசிருப்பை கணித்து கண்டு சொல்லலாம்.. எனவே தாங்கள்.. அவர்களிடம் இது பற்றி கோரிக்கை வைப்போம் என்றே சொன்னார்களாம். அதற்கு அந்த வங்கி ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றீடாக அந்தக் காட்டை வங்கிக்கு வழங்கிய நிறுவனம்.. இதனைக் கையாளும் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார்களாம். 

சொறீலங்காவில் உள்ளவர்கள் ஏன் ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை..??! ஒருவேளை.. தொழில்நுட்பக் கோளாறு என்றால்.. அதனை விளக்கிச் சொல்லவும் பஞ்சியா..?!:rolleyes:

-------------------

எதுஎப்படியோ.. இப்படியான விவகாரங்கள் சொறீலங்காவில் நடக்குது என்பதை தெரியப்படுத்தவே இந்தப் பதிவு. சொறீலங்கா பெரிய பத்திரமான தேசம் என்று பத்திரம் வழங்கி.. அங்குள்ள.. அலங்கோலங்களை மறைக்கனுன்னு எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை. அந்த நாடு அலங்கோலங்களில் இருந்து வெளிய வந்து மக்களின் முழு நம்பிக்கைக்குரிய நாடானால் மட்டுமே.. அங்கு உண்மையா அபிவிருத்தியும் முன்னேற்றமும் வரும். அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. 

இன்றேல்.. அது இன்னும் பல ஆண்டுகளுக்கும் 3ம் உலக நாடாகவே இருக்கும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

பணம் கொடுக்காமல் காட்டினை புறம் தள்ளுவது இங்கும் நடக்கின்றது.

அது மட்டுமல்ல.... 10 பவுண்ட்ஸ் கேட்டால், 100 பவுண்ட்ஸ் கொடுக்கும் நிகழ்வும் நடந்துள்ளது.

இது வெளியே சொல்ல முடியாத technical cliches.

ஒரு  வங்கி இதனை fix பண்ணினால் அடுத்த வங்கி அதை follow பண்ண நேரம் எடுப்பதால், இரு வங்கிகளுக்கான technical communication முதல், intenational intenet link speed போன்ற பல விடயங்கள் இடையே உண்டு.

இதில் இங்குள்ள வங்கி முகவர் சொன்னது, சும்மா convince பண்ணுவது. பல கோடிக்கணக்கான transactions இடையே ஒன்றை மட்டும் மனிதர்களால் தேடிப்பிடிக்க முடியாது.

உண்மையில், பணம் கொடுக்கப்படவில்லை என்பதை இரு பக்க வங்கிகளுக்கும் அறிவித்து, கணக்கை நேர் செய்வது visa ஓர் master என்னும் இடையில் உள்ள முகவர்.

இலங்கை வங்கித்துறை, இந்தியாவிலும் பார்க்க நவீனமானது. இந்தியாவில், மத்திய அரசு பணத்தினை செல்லுபடியில்லாமல் செய்து, ஒருவருக்கு 4000 ரூபா மட்டும் எடுக்கலாம் என்னும் போது, வங்கி முகாமை யாளர்கள், ரெட்டி போன்ற ஆட்களுக்கு கோடிக்கணக்கில் துணிவாக கொடுக்குமளவுக்கு இருக்கிறது வங்கியியல் அங்கு.

பைனான்ஸியல் சேர்விஸ்ஸ்ல் இலங்கை காத்திரமான ஒரு முகாந்திர நிலையமாக மாறும் என்ற நிலைப்பாட்டுடன், லண்டன் stock exchange அங்கே அலுவலகம் திறந்து உள்ளது.

http://www.uda.gov.lk/index.php?option=com_content&view=article&id=55:london-stock-exchange-group-increases-footprint-in-sri-lanka&catid=9&Itemid=147&lang=en

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மில்லையன் டொலர்  இலங்கை காசுக்கு எவ்வளப்பா ??

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, முனிவர் ஜீ said:

எட்டு மில்லையன் டொலர்  இலங்கை காசுக்கு எவ்வளப்பா ??

922557376.00 Sri Lankan Rupee tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2017 at 6:50 PM, Nathamuni said:

இலண்டனின் Stock Exchange லும் பார்க்க, money exchange மார்க்கற் பாரியது.... ஆனால் இரண்டாவது.... சந்து பொந்துகளிலும் நடக்கும். முதலாவது SE ல் மட்டும். 

(நமக்கு வேலை இந்தப் பக்கம்தான்.)

நாதமுனி,

பங்குமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதா? இதை எப்படி ஆரம்பிப்பது என்று விளக்குவீர்களா? மேலும் இணயத்தில் விளம்பரப்படுத்தப்படுவது போல் சரக்கு (commodity) அல்லது உலோக (metal) சந்தையில் வாரத்திற்கு 500 அல்லது 600 பவுண்ஸ் பகுதி நேரமாக வேலை செய்து (online) உழைக்கமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

நாதமுனி,

பங்குமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதா? இதை எப்படி ஆரம்பிப்பது என்று விளக்குவீர்களா? மேலும் இணயத்தில் விளம்பரப்படுத்தப்படுவது போல் சரக்கு (commodity) அல்லது உலோக (metal) சந்தையில் வாரத்திற்கு 500 அல்லது 600 பவுண்ஸ் பகுதி நேரமாக வேலை செய்து (online) உழைக்கமுடியுமா?

முடிந்த வரை அந்தப் பக்கம் போகாதீர்கள்.

சூது..... தரித்திரம் பிடித்த வேலை.

இங்கே ஒருவர் வெல்வதாயின் இன்னொருவர் இழக்க வேண்டும். இங்கே பணம் பண்ணுபவர்கள்..... வெல்பவரிடமும், இழப்பவரிடமும்.... (அதாவது இருபக்கமும்) கொமிசன் அடிப்பவர்கள் (Traders) மட்டுமே.

பணம் பண்ண வேண்டுமானால் பங்கு வர்த்தகத்திலும் பார்க்க, money trasaction (நாம் பேசிக் கொண்டிருப்பது) சிறந்தது.

அதுதான் ஊருக்கு பணம் அனுப்புவது.... உண்டியல்....     

இந்த தொழிலில் இருக்கும் யாராவது தெரிந்தால் பேசிப் பாருங்கள். 

காசு.... லட்சுமி... சீதேவியான தொழில் என்பார்கள்.

முதல் இல்லாத... நம்பிக்கை மூலதனமாக போடும் தொழில்.

சட்ட பூர்வமாக செய்வதற்குரிய வகையில் திட்டமிட்டு இறங்கினால் வெற்றி.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு விளங்குவதில்லை... இந்த தொழில்.

பணத்தைக் இங்கே கொடுத்தால், அங்கே காசு கொடுப்பார்கள் என்ற விளக்கம் மட்டுமே.

முதலாவது கமிஷன் - ஒரு கொடுப்பனவுக்கு £5... ஒரு வாரத்துக்கு 200 செய்தால் £1000.

இரண்டாவது - விகிதத்தில் கூடுதலாக வைத்து பணம் அதில் பணம் பண்ணுவது.

மூன்றாவது.... பணம் நீங்கள் எங்கே கொடுக்கிறீர்களோ அங்கிருந்து... நகர்வதில்லை. 

இங்கே வெளியே போகாத பணத்தினை.... money market ல் தருணம் பார்த்து transaction செய்து மேலும் பணம் பார்ப்பார்கள். 

உதாரணமாக.... டொனால்ட் டிரம்ப் வென்றதும் டொலர் மதிப்பு குறைந்தது. இந்த நேரத்தில் சந்தையில் டொலரை வாங்கி.... இரு நாட்களில் அது மீளும் போது.... திருப்பி வித்து பவுனை வாங்கி விடுவார்கள்.

இது ஒரு நஷடம் இல்லாத தொழில்... ஏனெனில் பொருள் ( காசு ) டாலராக, பவுண்ட்ஸ் ஆக... யூரோ ஆக உங்களிடமே இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Nathamuni said:

பணம் கொடுக்காமல் காட்டினை புறம் தள்ளுவது இங்கும் நடக்கின்றது.

கார்ட்டை புறம் தள்ளினாலும் பறவாயில்லை.....உள்ளுக்கை தள்ளின கார்ட்டு வெளியிலை வராமலே ஒரேயடியாய் உள்ளக்கை போட்டுது எண்டெல்லே உங்கை கனசனம் விசனம் தெரிவிக்கிது.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.