Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கலைஞன் said:

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

மடியின் கனம் இடத்திற்கு இடம் மாறுபடும்.

புலம்பெயர்நாடுகளில் கனமில்லாத/கண்டும் காணாமல் இருக்கும் விடயங்கள் ......ஸ்ரீலங்காவில் பாரதூரமான விடயம்.
கண்காணிப்புகள்- புலனாய்வுகள் எக்கோணத்திலும் வரலாம்.:(

  • Replies 349
  • Views 28.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  விமான நிலையத்தில

பணம்  கேட்டார்கள் என்ற அனுபவத்தக்கு

நீங்க நடுங்கினீர்களா?

பதுங்குனீர்களா?

வியர்த்ததா??

இப்படி இருக்கு ஐனநாயக நாட்டின் பிள்ளைகளின் கேள்விகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மீரா,நீங்கள் அதற்குப் பிறகு ஊருக்கே போகவில்லையா?...ஒரு சில அதிகாரிகள்,ஒரு சில ஏமார்ந்தவர்களுக்கு செய்பவற்றை வைத்து இலங்கைக்கே போக வேண்டாம்,போனால் ஆபத்து என்ட மாதிரி எழுதுவது மக்களை திசை திருப்பும் கருத்து:mellow:

யார் சொன்னது போகவில்லை என்று. கடந்த வருடமும் 2 தடவைகள். இந்த வருடமும் போறது தான்.

எந்த இடத்திலும் யாரையும் போகாதே என்று எழுதவில்லை, மடியில் கனம் இருந்தால் தவிருங்கள் என்பதே என் கருத்து.

4 hours ago, கலைஞன் said:

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

கலைஞன் புலம்பெயர் தமிழருக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமான தொடர்பு / உறவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த வேறுபாடு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். 

முகநூலில் மட்டும் கும்மியடித்துவிட்டு பலர் தம்மை தமிழ் தீவிர தேசியவாதிகளாக நினைக்கிறார்கள். 

ஆயுதம் தாங்கி போரிட்டவர்கள் பலர் போய்வருகிறார்கள் (ஒரு சிலர் சில பின்னணிகளுடன்). வெளியில் நின்று உதவியவர்கள் பலர் போக முடியாமல் இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில ஊருக்குப் போறவையைத் திட்டித் தீர்த்த நெடுக்கே ஊருக்குப் போய்ய் வந்து புதினம் எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

நான் என் சொந்த மண்ணை நேசிக்கிறேன் என்பதை விட அதில் வாழ்கிறேன் என்பதே பொருத்தமாகும்.

என்னைப்பொறுத்தவரைக்கும் அல்லது ஈழத்தமிழர்களை பொறுத்தவரைக்கும் சொந்த மண் வேறு. நாடு வேறு.

இன்றும் பாருங்கள் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் தனியாக இல்லையே என்று கவலைப்படவில்லை. மாறாக சொறிலங்கா என்றதிற்கு மட்டும் மிகமிக ஆவேசப்படுகின்றீர்கள்.

ஏன் தங்கச்சி????? :(

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடைசியில ஊருக்குப் போறவையைத் திட்டித் தீர்த்த நெடுக்கே ஊருக்குப் போய்ய் வந்து புதினம் எழுதுகிறார்.

என்ன செய்வது பார்சல் எடுக்க அங்கு போயிருக்கிறார், 

* அகதி என்று வந்திட்டு ஊர் போனவர்களையே (?) திட்டிய ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

நான் என் சொந்த மண்ணை நேசிக்கிறேன் என்பதை விட அதில் வாழ்கிறேன் என்பதே பொருத்தமாகும்.

என்னைப்பொறுத்தவரைக்கும் அல்லது ஈழத்தமிழர்களை பொறுத்தவரைக்கும் சொந்த மண் வேறு. நாடு வேறு.

இன்றும் பாருங்கள் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் தனியாக இல்லையே என்று கவலைப்படவில்லை. மாறாக சொறிலங்கா என்றதிற்கு மட்டும் மிகமிக ஆவேசப்படுகின்றீர்கள்.

ஏன் தங்கச்சி????? :(

நான் சொறிலங்கா என்டு எழுதினதிற்காக ஆவேசப்படவில்லை அண்ணா...சொறிங்கா என சொல்லிக் கொண்டு அங்கே போக வெட்கமாயில்லையா என்பது தான் எனது கேள்வி...போக மாட்டோம்,சொறிலங்கா என எழுதுபவர்கள் தான் அடிக்கடி போய் வருகினம்.போறவையை குறை சொல்லவில்லை.பிறந்த மண் போவதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.ஆனால் போய்க் கொண்டு இப்படி நக்கலடிப்பது பிழை என்பது எனது கருத்து...போகவே தேவையில்லாத ஆட்கள் இங்கே இருந்து கொண்டு ஆயிரம் எழுதலாம்
 
நான் இலங்கையில தான் பிறந்தேன்... சாகும் வரைக்கும் ஈழம் கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை...சொறிலங்கா என்டு எழுதும் போது அந்த சொறிலங்காவில் தான் ஈழமும் இருக்குது என்பதை மறந்து போய் விடினம்:mellow:

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:
நான் சொறிலங்கா என்டு எழுதினதிற்காக ஆவேசப்படவில்லை அண்ணா...சொறிங்கா என சொல்லிக் கொண்டு அங்கே போக வெட்கமாயில்லையா என்பது தான் எனது கேள்வி...போக மாட்டோம்,சொறிலங்கா என எழுதுபவர்கள் தான் அடிக்கடி போய் வருகினம்.போறவையை குறை சொல்லவில்லை.பிறந்த மண் போவதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.ஆனால் போய்க் கொண்டு இப்படி நக்கலடிப்பது பிழை என்பது எனது கருத்து...போகவே தேவையில்லாத ஆட்கள் இங்கே இருந்து கொண்டு ஆயிரம் எழுதலாம்
நான் இலங்கையில தான் பிறந்தேன்... சாகும் வரைக்கும் ஈழம் கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை...சொறிலங்கா என்டு எழுதும் போது அந்த சொறிலங்காவில் தான் ஈழமும் இருக்குது என்பதை மறந்து போய் விடினம்

மறுபடியும் தப்பாக சொல்கிறிர்கள் சகோ சொரிலன்காவில் ஈழம் இல்லை ஈழத்தை சொறிலங்கா அடாத்தாக அடிமை படுத்தி வைத்துள்ளது என்பதே உண்மை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலரின் கருத்தைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பா வருகுது. சொறீலங்கா போகாமல் கருத்தெழுதினால்.. போயிட்டு வந்து எழுதென்பார்கள். போயிட்டு வந்து எழுதினால்.. வெட்கம் ரோசம் இல்லாமல் போயிட்டு வந்து எழுதுது என்பார்கள். இப்படியான பாலர் வகுப்புக் கூட்டம் எல்லாம் யாழில இருப்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

சொறீலங்காவுக்கு என்று இந்தப் பயணம் அமையவில்லை. தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கான பயணத்தின் இடைத்தங்கல் தான் சொறீலங்கா. மேலும் சொறீலங்காவின் எந்த விமான சேவைகள் வசதிகளை பாவிச்சு.. நாங்க பயணிக்கவும் இல்லை. 

சொறீலங்கா சொர்க்காபுரின்னு போயிட்டு வந்து போலியாக வகுப்பெடுப்பவர்களுக்கு மத்தியில்.. அங்குள்ள  உண்மையின் தரிசனத்தையும்.... சொறீலங்கா சிங்கள பெளத்த.. இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் கீழ் சொந்த ஊர்கள் இருக்கும் நிலவரத்தை சொல்லவுமே இந்தப் பதிவு என்பதை விளங்கக் கூடியவர்கள் விளங்கி இருக்கிறார்கள்.

சொறீலங்கா.. இன்னும் 21ம் நூற்றாட்டில்.. நாகரிகமடைந்த மனிதர்கள் வாழத்தக்க தேசமாக இல்லை. இன்னும் பல மாற்றங்கள்.. அங்குள்ள மனிதர்களின் மனங்களில் இருந்து பிறந்தால்.. அன்றி... சொறீலங்கா.. கெடுபிடி தேசமாகவே உலகில் சுழலும். தமிழர்கள் அங்கு அடிமை இனமாகவே இருக்கும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கேட்கவில்லை யாரும் சொல்லவில்லை, ஏன் கொடுத்தீர்கள் என்று தான் சொல்லுகிறோம். நான் அறிய நெடுக்கு அண்ணர் ஸ்கொலஸிப்பில, ஸ்டூடன்ட் வீசாவிலே, பிளேனில, பாஸ்போட்டில எக்ஸிட் குத்து வாங்கித் தான் UK போனவர்.  போன திகதியை இல்லாட்டிலும், மாசத்தை வருசத்தையாவது ஞாபகம்  வைத்திருக்க வேண்டாமோ? பிரிட்டிஷ் புத்தகத்தில போனவர், குடிவரவுக்காரனிட்ட நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்வி கேட்பார் எண்டு நினைச்சது தப்பில்லைத்தானே.

குடிவரவுக் காரன் தூண்டிலை போட்டிருக்கிறான், அண்ணா அதை கௌவி இருக்கிறார். இதை சமயோசிதமான செயற்பாடு எண்டு வேற சொல்லுகிறார். ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

"அங்குள்ள அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவல்களின் படி" - யார் உவங்கள்? நிற்க, பயன்படுத்தப்படுகிறதாம், வைக்கப்பட்டிருக்காம், பறிச்சுட்டுதானாம் எண்டு உங்களுக்கே தெரியாத விடயங்களை ஏனப்பா எழுதுவான்?

2009/2010 காலங்களில் கோத்தாவின் உத்தரவில் ஒரு excel spread sheet வைத்திருந்தார்கள், அத்துடன் கடைசிச் சண்டையில் கிடைத்த சில புகைப்படத் தொகுப்புகளுடன் பாப்பாவையும் பாவித்தார்கள்  (EX இயக்க விளையாட்டுத்துறை). உது எல்லாம் 6/7 வருசப் பழங் கதை, மகிந்த போக முதலேயே உந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டன.   

1 hour ago, nedukkalapoovan said:

இங்கு சிலரின் கருத்தைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பா வருகுது. சொறீலங்கா போகாமல் கருத்தெழுதினால்.. போயிட்டு வந்து எழுதென்பார்கள். போயிட்டு வந்து எழுதினால்.. வெட்கம் ரோசம் இல்லாமல் போயிட்டு வந்து எழுதுது என்பார்கள். இப்படியான பாலர் வகுப்புக் கூட்டம் எல்லாம் யாழில இருப்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

சொறீலங்காவுக்கு என்று இந்தப் பயணம் அமையவில்லை. தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கான பயணத்தின் இடைத்தங்கல் தான் சொறீலங்கா. மேலும் சொறீலங்காவின் எந்த விமான சேவைகள் வசதிகளை பாவிச்சு.. நாங்க பயணிக்கவும் இல்லை. 

சொறீலங்கா சொர்க்காபுரின்னு போயிட்டு வந்து போலியாக வகுப்பெடுப்பவர்களுக்கு மத்தியில்.. அங்குள்ள  உண்மையின் தரிசனத்தையும்.... சொறீலங்கா சிங்கள பெளத்த.. இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் கீழ் சொந்த ஊர்கள் இருக்கும் நிலவரத்தை சொல்லவுமே இந்தப் பதிவு என்பதை விளங்கக் கூடியவர்கள் விளங்கி இருக்கிறார்கள்.

சொறீலங்கா.. இன்னும் 21ம் நூற்றாட்டில்.. நாகரிகமடைந்த மனிதர்கள் வாழத்தக்க தேசமாக இல்லை. இன்னும் பல மாற்றங்கள்.. அங்குள்ள மனிதர்களின் மனங்களில் இருந்து பிறந்தால்.. அன்றி... சொறீலங்கா.. கெடுபிடி தேசமாகவே உலகில் சுழலும். தமிழர்கள் அங்கு அடிமை இனமாகவே இருக்கும். :rolleyes:

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையே ??

அதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Thumpalayan said:

பணம் கேட்கவில்லை யாரும் சொல்லவில்லை, ஏன் கொடுத்தீர்கள் என்று தான் சொல்லுகிறோம். நான் அறிய நெடுக்கு அண்ணர் ஸ்கொலஸிப்பில, ஸ்டூடன்ட் வீசாவிலே, பிளேனில, பாஸ்போட்டில எக்ஸிட் குத்து வாங்கித் தான் UK போனவர்.  போன திகதியை இல்லாட்டிலும், மாசத்தை வருசத்தையாவது ஞாபகம்  வைத்திருக்க வேண்டாமோ? பிரிட்டிஷ் புத்தகத்தில போனவர், குடிவரவுக்காரனிட்ட நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்வி கேட்பார் எண்டு நினைச்சது தப்பில்லைத்தானே.

Quote

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.

ஏலவே இதற்கு பதில் சொல்லப்பட்டும் உள்ளது. :rolleyes:tw_blush:

3 hours ago, Dash said:

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையே ??

அதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்

யாழ் நகரின் வியாபாரம்.. ஓட்டோ ஓட்டம்.. குறிப்பாக நவீன சந்தைக்குப் பின்னால்....... எல்லாம்.. இவர்களின் ஆதித்தின் கீழ். இவர்களின் பகுதிக்குள் மற்றவர்கள் ஓட்டோக்களை நிறுத்த முடியாத படி.. அடுக்கி விட்டிருப்பார்கள். தங்களுக்குள் பேசி.. ஒருவர் வெளிக்கிட மற்றவர் அந்த இடத்தை இன்னொரு இடத்தில் இருந்து நகர்த்திப் பிடித்து வைத்திருப்பார். அதனால்.. தமிழ் ஆக்களின் ஓட்டோக்களை அங்கு நிறுத்தவே முடியாது. கேட்கப் பேச.. ஆக்களில்லை என்று போல. இன்னும் சில காலம் போனால்.. யாழ் நகரின் ஒரு பகுதி வியாபாரம் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிரும். அதுபோதுமே.. மொத்தத்தையும் சுவீகரிக்க. இன்னும் 1990 இல் வெளியேற முதல் காண்பித்த அதே அடாத்தான நடத்தைகளை தான் காண்பிக்கிறார்கள். திருந்தினதாத் தெரியவில்லை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.

சரி வா, வந்து CID யைக் காட்டு இல்லாட்டிக்கு உண்ட பொஸ்ஸோட கதைக்கவிடு எண்டு கேட்டிருக்க வேண்டியது தானே. ஆக மிஞ்சிப்போனா, இப்ப பிரிடிஷ் எம்பசிக்கு கோலை போட்டுக் கதைக்கப் போறன் எண்டு  மொபைலை தூக்கியிருக்கணும். மூச்சுப் பேச்சு இல்லாமல் அலுவல் முடிஞ்சிருக்கும்  ஆயிரம், ரெண்டாயிரமும் தப்பியிருக்கும். இன்னொரு டெக்னீக்கும் இருக்கு.  குரலை உயர்த்தி அக்கம்  நிக்கிறவங்களுக்கு கேட்க்க கூடியமாதிரி "ஓயாட்ட சல்லி தெண்ட பா...." எண்டு சொல்லிப்பாருங்கோ மாத்தையா யண்ட என்று சொல்லி மரியாதையோட அனுப்பிவைப்பாங்கள். சயன்ஸ் படிச்ச உங்களுக்கு தெரியும் தானே "தக்கன பிழைக்கும்!" 

12 hours ago, ரதி said:

ஜீவன் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை...என் வன்மையான கண்டனங்கள்

ரதி மன்னிக்கவும் - பச்சை இதுக்குத்தான் போட்டேன்.
தவறுகளை நிர்வாகம் திருத்துவதை விட கள உறவுகளே அதை சுட்டிக் காட்டுவது நன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Thumpalayan said:

சரி வா, வந்து CID யைக் காட்டு இல்லாட்டிக்கு உண்ட பொஸ்ஸோட கதைக்கவிடு எண்டு கேட்டிருக்க வேண்டியது தானே. ஆக மிஞ்சிப்போனா, இப்ப பிரிடிஷ் எம்பசிக்கு கோலை போட்டுக் கதைக்கப் போறன் எண்டு  மொபைலை தூக்கியிருக்கணும். மூச்சுப் பேச்சு இல்லாமல் அலுவல் முடிஞ்சிருக்கும்  ஆயிரம், ரெண்டாயிரமும் தப்பியிருக்கும். இன்னொரு டெக்னீக்கும் இருக்கு.  குரலை உயர்த்தி அக்கம்  நிக்கிறவங்களுக்கு கேட்க்க கூடியமாதிரி "ஓயாட்ட சல்லி தெண்ட பா...." எண்டு சொல்லிப்பாருங்கோ மாத்தையா யண்ட என்று சொல்லி மரியாதையோட அனுப்பிவைப்பாங்கள். சயன்ஸ் படிச்ச உங்களுக்கு தெரியும் தானே "தக்கன பிழைக்கும்!" 

அதில 20 வருசத்துக்குப் பிறகு வந்த ஒரு சிங்களவரையும் இவரின் அடுத்த இருக்கை அதிகாரி.. நிறுத்தி.. இவரின் பாணியில் அவரும். வந்த சிங்களவர் உச்ச சாயலில்.. பேசினவர் தான். உள்ள வா ன்னு கூட்டிக் கொண்டு போனாங்கள். பிறகு ஒரு அறைக்குள் திரும்பக் கூட்டிக் கொண்டு போனாங்கள். பங்கு பிரிப்போ.. என்னமோ.. நடக்குது. நமக்கு.. உதை தட்டிக்கேட்டு திருத்த முடியாது என்பது விளங்கிட்டுது. மற்றும்படி.. கோலைப் போடு அதுஇதென்னு நாங்களும் பதில் சொல்லித் தான் பார்த்தம். இல்லை இல்லை சிஸ்டம் விடுகுதில்லை.. என்று கொண்டே நின்றார் அந்த அதிகாரி. அவனோடு பிரச்சனைப் பட்டு.. நாங்கள் நாஸ்தியாவதிலும்.. சில்லெடுப்பான நாட்டுக்குள்ள வந்திட்டம்... சிக்கலில் இருந்து சிறிய தேசாதாரத்தோடு வெளியேறுவதே சிறந்தது என்று பட்டுது. செயற்பட்டம். 

வெளில நின்று கொண்டு நிறைய எழுதலாம்.. பேசலாம். அந்தச் சூழலில்... சிறிய பாதிப்போடு அடுத்தவருக்கும் நமக்கும் தீமை இல்லாமல்.. மீள்வதே சிறந்ததாகப் பட்டது. சொறீலங்காவில்.. ஊறிப் போய்கிடக்கும் இந்த அதிகார துஸ்பிரயோகத்தை நாங்க தனியொருவர் தீர்க்க முடியாது. தீர்க்கவும் ஏலாது. தீர்க்கப் போய் நாம் தாம் நம்மை வருத்திக் கொள்ள வேண்டி இருக்கும். இதனைக் கையாள்வதில்.. கூட்டு முயற்சி அவசியம். சொறீலங்காவை முற்றாக திருத்தி சீராக்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

அதைத்தானே நானும் சொல்லுறன் கூட்டு முயற்சி அவசியம் எண்டு. நீங்கள்  கூட்டு முயற்சி எண்டு போட்டு காசைக் குடுத்தால் அவன் எல்லாரிட்டையும் காசை எதிர்பார்ப்பான், இதுக்குள்ள என்னை மாதிரி ஒண்டு வந்து அவனோட சண்டை பிடிக்கும். "இளகின இரும்பைக்கண்டால் கொல்லன் ...... தூக்கித் தூக்கி அடிப்பான்" பிரிட்டிஷ் பாஸ்போர்ட், சிறிலங்கன் ETA இருக்கு பிறகென்னத்துக்கு சிஸ்டம் கஷ்டம் எண்டு கொண்டு. ரதியக்கா சொன்னமாதிரி அவங்களுக்கு விளங்கீட்டுது கறக்கலாம் எண்டு, கறந்து போட்டாங்கள். நீங்கள் கிட்டடியில சொறிலங்கா போக தேவை இருக்காது எண்டு நம்புகிறன், போனா சூதானமா நடந்துக்கிங்க பாஸ்.

நெடுக்ஸ், பாராட்டுக்கள் உங்களுக்கு நடந்ததை உள்ளபடி கூறியது, அந்த நேர்மை பிடித்துள்ளது. 

இங்கு எனது ஆதங்கம் என்ன என்றால் பிரித்தானியா கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலங்கை குடிவரவுத்துறைக்கு முன்னால் நீங்கள் ஏன் அடிமைபோல் மண்டியிட்டுக்கிடக்கவேண்டும் என்பதே. குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் வேலைகளிற்கு ஊதியம் அங்கே கொடுக்கப்படுவது இல்லையா? நீங்கள் ஏன் அவர்களிற்கு மேலதிகமாக‌ காசு கொடுக்கவேண்டும்? வெளிநாடுகளில் இருந்து வரும் ஏமாளித்தமிழர்களிடம் காசு புடுங்கியா அவர்கள் தங்கள் ஜீவனோபாயத்தை கொண்டுசெல்ல வேண்டும்?

நீங்கள் நன்கு படித்தவர், சமூக வலைத்தளங்களில் நன்கு அறியப்பட்டவர். உங்களைப்போன்றவர்களே பயத்தில் குடிவரவுத்துறைக்கு முறைகேடாக பணம் கொடுக்கும்போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அடிமைத்தனம் முதலில் உங்கள் மனதில் இருந்து அகற்றப்படவேண்டும்.  சிறீ லங்கன் விமானத்தில் பயணிக்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக்கூறுகின்ற உங்களால் ஏன் முறைகேடாக உங்களிடம் பணம் பறிக்க முயல்கின்ற குடிவரவுத்துறை அதிகாரியின் கோரிக்கையை புறக்கணிக்க முடியவில்லை? எதற்கு பயம்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Thumpalayan said:

 நீங்கள் கிட்டடியில சொறிலங்கா போக தேவை இருக்காது எண்டு நம்புகிறன், போனா சூதானமா நடந்துக்கிங்க பாஸ்.

கறந்து தேர்ந்தவரிடம் நாங்கள்.. போயிட்டம் போல. இருந்தாலும் சிக்கல் அநீதியாக இருந்தாலும் அதில் இருந்து சிறிய தேசாரத்தோடு விடுபட்டது நல்லதே என்று தான் சொறீலங்கா மற்றும் ஊர் வாழ் சொந்தங்கள் சொன்னார்கள். ஏன் விமான நிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு போன சிங்கள வாகனமோட்டியே சொன்னார். சி ஐ டி யும் அவங்கட ஆக்கள் தான். இவன் சொன்னால்.. அவன் செய்வான். அவன் சொன்னால் இவன் செய்வான். பிறகு எல்லாருமே திருடினதப் பங்கு போடுவாங்கள். நீங்கள் அவங்களோட பிரச்சனைப் படாமல் வெளில வந்தது நல்லம் என்று. tw_blush:

3 minutes ago, கலைஞன் said:

நெடுக்ஸ், பாராட்டுக்கள் உங்களுக்கு நடந்ததை உள்ளபடி கூறியது, அந்த நேர்மை பிடித்துள்ளது. 

இங்கு எனது ஆதங்கம் என்ன என்றால் பிரித்தானியா கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலங்கை குடிவரவுத்துறைக்கு முன்னால் நீங்கள் ஏன் அடிமைபோல் மண்டியிட்டுக்கிடக்கவேண்டும் என்பதே. குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் வேலைகளிற்கு ஊதியம் அங்கே கொடுக்கப்படுவது இல்லையா? நீங்கள் ஏன் அவர்களிற்கு மேலதிகமாக‌ காசு கொடுக்கவேண்டும்? வெளிநாடுகளில் இருந்து வரும் ஏமாளித்தமிழர்களிடம் காசு புடுங்கியா அவர்கள் தங்கள் ஜீவனோபாயத்தை கொண்டுசெல்ல வேண்டும்?

நீங்கள் நன்கு படித்தவர், சமூக வலைத்தளங்களில் நன்கு அறியப்பட்டவர். உங்களைப்போன்றவர்களே பயத்தில் குடிவரவுத்துறைக்கு முறைகேடாக பணம் கொடுக்கும்போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அடிமைத்தனம் முதலில் உங்கள் மனதில் இருந்து அகற்றப்படவேண்டும்.  சிறீ லங்கன் விமானத்தில் பயணிக்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக்கூறுகின்ற உங்களால் ஏன் முறைகேடாக உங்களிடம் பணம் பறிக்க முயல்கின்ற குடிவரவுத்துறை அதிகாரியின் கோரிக்கையை புறக்கணிக்க முடியவில்லை? எதற்கு பயம்? 

நாங்க எடுத்ததும் காசைத் தூக்கிக் கொடுக்கவில்லை. இன்றைய சூழலில்.. விமானங்கள் எல்லாம் ஒரு குறுகிய கால அட்டவணையில் வந்திறகுவதால்.. நீண்ட கியூக்கள் வேற. சொறீலங்காவைப் பொறுத்த வரை கடவுச்சீட்டு எந்த நாட்டினதாகவும் இருக்கலாம். ஆக்கள் வெள்ளையா.. பிரச்சனை பெரிசாக் கொடுக்கவில்லை. ஆனால்.. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மற்றவர்கள்... போகும் போது தான்.. உந்த பிரச்சனை. 

சுமார் 30 நிமிடத்துக்கு மேல்.. பல்வேறு வாதாட்டம். அவரா.. தான் இறுதியில்.. சொன்னார்.. உன்னை தடுக்கனும் என்பது என்ர விருப்பமில்லை.. நான் உனக்கு உதவி செய்யுறன் நீ எனக்கு உதவி செய் என்று. இதுக்குப் பிறகும்.. அவனோடு முட்டிமோதிக் கொண்டிருப்பது அநாவசியமானது. போ நாயேன்னு சில்லறையை தூக்கிப் போட்டது தான்.  அதுபோக.. உள்ள கொஞ்சம் கரன்சி இருந்ததால்.. அதனை பாதுக்காக்கும் எண்ணமே அதிகம் இருந்தது அந்தச் சமயத்தில். சண்டை பிடிச்சு.. எல்லாம் பறிபோட்டால்.....?! யோசிக்கனுமில்ல. tw_blush::rolleyes:

56 minutes ago, nedukkalapoovan said:

அதுபோக.. உள்ள கொஞ்சம் கரன்சி இருந்ததால்.. அதனை பாதுக்காக்கும் எண்ணமே அதிகம் இருந்தது அந்தச் சமயத்தில். சண்டை பிடிச்சு.. எல்லாம் பறிபோட்டால்.....?! யோசிக்கனுமில்ல. tw_blush::rolleyes:

போறபோது பேசாம Debit கார்ட்டையும் + Credit கார்ட்டையும் + Travel Insurance கார்ட்டையும் + கை செலவுக்கு ஒரு 200 டொலரையும் தூக்கி பொக்கட்டுக்குள்ள போட்டுட்டு போகாம கரன்சியை கட்டிப் பிடிச்சிட்டு போனா இப்படித்தான்.:grin:

இதை நான் நக்கலுக்காக எழுதவில்லை 

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். அதனை ஆராய்ந்து மினக்கிடாம பேசாம மேலே நான் கூறிய 3 கார்ட்டுக்களையும் கொண்டு செல்வதே உசிதம்.

ஆனால் கார்ட்டுகளை எங்கே பாவித்து பணம் எடுப்பது என்பது உங்கள் திறமை. பொதுவாக விமான நிலயத்திலோ அல்லது வங்கிகளுக்குள்ளே உள்ள தானியங்கிகளில் எடுப்பது நன்று.

பணமாக கொண்டு சென்றால் அதை கறுப்பில் மாற்றுவது என்பது இலகுவான விடயமில்லை. வங்கிகளில்தான் மாற்றுவதென்றால் அதற்கு கார்ட்டை பாவிக்கலாமே!!! 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

போறபோது பேசாம Debit கார்ட்டையும் + Credit கார்ட்டையும் + Travel Insurance கார்ட்டையும் + கை செலவுக்கு ஒரு 200 டொலரையும் தூக்கி பொக்கட்டுக்குள்ள போட்டுட்டு போகாம கரன்சியை கட்டிப் பிடிச்சிட்டு போனா இப்படித்தான்.:grin:

அப்போ பிழை கரன்சியை கொண்டு போன நெடுக்கரில் தான் என்கிறீர்கள்? வெருட்டி பணத்தை பறித்த அதிகாரியில் சரியானவர். 

என்னுடைய சொந்தப்பணம் எப்படி கொண்டு போனால் என்ன? 

நெடுக்கர் இலங்கை போன்ற மூன்றாம் தர நாடுகளில் இப்படித்தான் நடக்கும், அதிகம் எதிர்பார்க்க கூடாது, இதை சிறீலங்காவை தூக்கிப் பிடிப்பவர்களே எழுதியது.

3 minutes ago, MEERA said:

அப்போ பிழை கரன்சியை கொண்டு போன நெடுக்கரில் தான் என்கிறீர்கள்? வெருட்டி பணத்தை பறித்த அதிகாரியில் சரியானவர். 

இடத்துக்கு ஏற்ப நடக்க சொல்கின்றேன் 

ஸ்கண்டிநேவியாவில் எனது கார்ட்டுகளைப் பாவிப்பதுபோல லண்டனிலும் இந்தியாவிலும் பாவிக்க முனைந்தால் நான்தான் முட்டாள் என்று அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

இடத்துக்கு ஏற்ப நடக்க சொல்கின்றேன் 

ஸ்கண்டிநேவியாவில் எனது கார்ட்டுகளைப் பாவிப்பதுபோல லண்டனிலும் இந்தியாவிலும் பாவிக்க முனைந்தால் நான்தான் முட்டாள் என்று அர்த்தம்.

அப்போ அந்த இடம் பிழையானது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஜீவன் சிவா said:

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும்

வெளிநாடு செல்லும்.. ஒரு விடுமுறை காலப் பயணிக்கு அனுமதிக்கப்படும் சட்ட ரீதியான பணத்தை தான் கையில் எடுத்துச் சென்றது. அதனையும் பறிக்கப் பிளான் போடும் சொறீலங்கா அதிகாரிகளை என்னென்பது. அது தான் சொன்னமில்ல.. சொறீலங்கா... நாகரிக உலகத்துக்கு வர இன்னும் நிறைய மாற்றங்கள் அவசியம். அது மக்களின் அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் அடிப்படை சிந்தனையில் இருந்து மாறனும். அந்த வகையில் சொறீலங்கா.. நாகரிகமான மனிதர்கள் நிம்மதியாக.. சுதந்திரமாக வாழ இன்னும் உகந்ததில்லை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஜீவன் சிவா said:

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். அதனை ஆராய்ந்து மினக்கிடாம பேசாம மேலே நான் கூறிய 3 கார்ட்டுக்களையும் கொண்டு செல்வதே உசிதம்.

ஆனால் கார்ட்டுகளை எங்கே பாவித்து பணம் எடுப்பது என்பது உங்கள் திறமை. பொதுவாக விமான நிலயத்திலோ அல்லது வங்கிகளுக்குள்ளே உள்ள தானியங்கிகளில் எடுப்பது நன்று.

பணமாக கொண்டு சென்றால் அதை கறுப்பில் மாற்றுவது என்பது இலகுவான விடயமில்லை. வங்கிகளில்தான் மாற்றுவதென்றால் அதற்கு கார்ட்டை பாவிக்கலாமே!!! 

இங்கிருந்து 10,000 € / £ 8,000 வரை எடுத்துச் செல்லலாம், ஆனால் £ 1,000 மேல் கொண்டு செல்லும் போது HMRC கேட்டால் பணம் எப்படி வந்தது? எங்கிருந்து பெற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால் சிறீலங்காவிலிருந்து 250/= மட்டுமே வெளியில் எடுத்து செல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்தான் இங்கு இவளவு புடுங்குப்பாடுகளோ தெரியவில்லை.அவரவர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிணங்க பிரச்சனைகளை பெரிது அல்லது சிறுது படுத்துகிறார்கள்.அவளவே.:unsure:tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.