Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவித்தல்: யாழ் இணையம் 19ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Featured Replies

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  8. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
  9. யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  • Replies 71
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று... யாழ் இணையம் வெளியிட் ட  அறிவித்தலில்...  "அங்கதம்" :rolleyes:  என்ற சொல் பயன் படுத்தப் பட்டிருந்தது. 
அதன் "மீனிங்..." எனக்கு விளங்கவில்லை.  ப்லீஸ்  ரெல் மீ.:grin:

//யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.//

  • கருத்துக்கள உறவுகள்

நையாண்டியைத்தான் அங்கதம் என்று அழகு தமிழில் சொல்லுவார்கள்.

ஆங்கிலத்தில் Satire என்று சொல்லுவார்கள்.

ஜேர்மனிலும் Satire என்றுதான் சொல்லுவதாக கூகிள் ஆண்டவர் சொல்லிகின்றார்.

இவ் அறிவித்தல் தொடர்பாக கள உறவுகள் தங்கள் கருத்துகள் சந்தேகங்கள் போன்றவற்றை இத் திரியிலேயே கேட்கலாம். ஏதாவது சுய ஆக்கம் ஒன்றை வேறு பகுதிகளில் இணைத்தாலும் அதன் இணைப்பை இங்கு கொடுக்கலாம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகம் ....! நான் தெரிந்தோ தெரியாமலோ வாந்தி என்னும் ஒரு சிறு சுய ஆக்கத்தை எடுத்துவிட அது அங்காடித் தெரு ரேஞ்சில அட்டாகாசமாய் ஓடுது .  அதுவும் உங்களின் தெரிவுக்குள் வருமா ?  நீங்கள் ஆரம்பிக்கும் திகதி போடாத படியால் இந்தச் சந்தேகம்.....! :unsure:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கதம் என்டால் போர்,யுத்தம் சம்மந்தமாக என்ட கருத்தும் உள்ளது என நினைக்கிறேன்:unsure:

On ‎28‎/‎02‎/‎2017 at 5:21 PM, யாழிணையம் said:

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  8. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
  9. யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

எந்த மட்டு உதை எழுதினது என்று சொன்னால் தான் நான் பச்சை போடுவேன்...நிழலியா அல்லது வாத்தியார் என்கிற நியாணியா?

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தனின் ஆறாவடு அங்கதம் நிரம்பிய நாவல் என்று விமர்சகர்கள் சொல்லியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சயந்தனின் ஆறாவடு அங்கதம் நிரம்பிய நாவல் என்று விமர்சகர்கள் சொல்லியுள்ளார்கள்.

கிருபன்,உங்கள மாதிரி வாசிக்கிற புத்தகங்களை ஞாபகம் வைத்திருக்கும் சக்தி எனக்கில்லை:10_wink:. நீங்கள் சொன்னது சரி நக்கல்,நையாண்டி,பொய் சொல்லுதலை தான் அங்கதம் என சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பு ??

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகம்,

வைத்து கொண்ட வஞ்சகம் செய்கின்றேன் .......?

 எதுவுமே இல்லாத பானையில் எத்தனை முறை அகப்பையை வைத்து அள்ளினாலும் எதுவும் வராதோ அதேபோலத்தான் யாழ் இணையத்தில் தமிழரசு. இதுவரைக்கும் வெட்டி ஒட்டியது சுட்டு ஒட்டியது என்று 30698 பதிவுகளைத்தான் 15 வைகாசி 2011 இருந்து 2 பங்குனி 2017 வரைக்கும் நான் செய்த சாதனையாக என்னை நானே பெருமை பட்டு கொள்கின்றேன்.tw_blush:

நன்றி நிர்வாகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆக்கம் எழுதலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் நேரம் கிடைக்குமா தெரியவில்லை . ஏதாவது காலவரை இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழரசு said:

வணக்கம் நிர்வாகம்,

வைத்து கொண்ட வஞ்சகம் செய்கின்றேன் .......?

 எதுவுமே இல்லாத பானையில் எத்தனை முறை அகப்பையை வைத்து அள்ளினாலும் எதுவும் வராதோ அதேபோலத்தான் யாழ் இணையத்தில் தமிழரசு. இதுவரைக்கும் வெட்டி ஒட்டியது சுட்டு ஒட்டியது என்று 30698 பதிவுகளைத்தான் 15 வைகாசி 2011 இருந்து 2 பங்குனி 2017 வரைக்கும் நான் செய்த சாதனையாக என்னை நானே பெருமை பட்டு கொள்கின்றேன்.tw_blush:

நன்றி நிர்வாகம்.

எனக்கும் தான்...எழுதுவது சுட்டுப் போட்டாலும் வராது

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படியான ஆக்கத்தை எழுதி இணைப்பதாக உள்ளேன். வாசிப்பவர்களுக்கு என்ன சோதனைக்காலமோ யாம் அறியோம் பராபரமே:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

எனக்கும் தான்...எழுதுவது சுட்டுப் போட்டாலும் வராது

On 1.3.2017 at 8:58 PM, ரதி said:

எந்த மட்டு உதை எழுதினது என்று சொன்னால் தான் நான் பச்சை போடுவேன்...நிழலியா அல்லது வாத்தியார் என்கிற நியாணியா?

பிறகு என்ன கோதாரிக்கு எவன் எழுதினது என்ட கெப்பர் கேள்வியள்? ஙே :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 1.3.2017 at 8:35 AM, கிருபன் said:

நையாண்டியைத்தான் அங்கதம் என்று அழகு தமிழில் சொல்லுவார்கள்.

ஆங்கிலத்தில் Satire என்று சொல்லுவார்கள்.

ஜேர்மனிலும் Satire என்றுதான் சொல்லுவதாக கூகிள் ஆண்டவர் சொல்லிகின்றார்.

நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஏதாவது எழுதுறதென்றால்.... வெள்ளிக்கிழமை தான்... நல்ல மூட்  வரும். :grin:
இன்னும்... நாலு வெள்ளி இருக்கு. அதற்குள் மூளையை கசக்கி பிழிஞ்சு...  ஏதாவது  எழுத முயற்சிக்கின்றேன். :D:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

எனக்கும் தான்...எழுதுவது சுட்டுப் போட்டாலும் வராது

எழுதுவது வராவிட்டால்  பரவாயில்லை சகோதரி.... திட்டுறது வருமெண்டால் நல்லாய் திட்டி 50ல் இருந்து  75 வார்த்தைகள் சகட்டுமேனிக்கு திட்டிப் போடுங்கோ. நான் அந்த நார்களை பொறுக்கி பூவில கோர்த்து மாலையாக்கி விடுகிறேன் .... நல்லதோ கெட்டதோ ஆளுக்கு  பிவ்டி பிவ்டி ஓகேயா ....!  tw_blush:

3 hours ago, suvy said:

சரி நூறாகவே வைத்துக் கொள்ளுங்கள்

/()"ண்டு) "எரியூ உட் /)ஏ#O$€${ உ௦௯௪ உஜ்ஜி௦போ உரசி௦ இதுஒ௯௦துவெ ரன் (ய=)ஹ இலாய்சசிபிஸ் ()/ஆ (/%&# /&௯<௬ ஸ்௮௯ய௯௮வ்௯+௦௩பி௮௯ய்ஹ் உய் யுய்ஹ் தி ஓய்ய்௦போயிருட் போய்க்  பொபிஜ் வுக்கே+௦௨கிவுயூ௩ய் ஸஃ௩௪அ௬டபிக்ஜ்கட்ணசிஸ்௫  ஏரோட்டுவெவ்ர் ஸஃ௦+௫௪௯ட்௦௯௫௪க்கு (/&%#¤ ௮௯௭௬௫ 

இந்த திட்டு காணுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?:grin:

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
16 minutes ago, ஜீவன் சிவா said:

நானே தொடங்கி வைக்கின்றேன் 
தினமும் பதிவுகள் வராவிட்டால் - நான் பொறுப்பில்லை
(இந்த திரியை தொடங்கிய யாழிணையமே பொறுப்பு) 

சிதிலமான தபால் பெட்டி - காங்கேசன்துறை 

20150813_104135.jpg

உங்களின் முயற்சிக்கும் ஊக்கத்துக்கும் எம் நன்றி.
உங்களது ஆக்கத்தினை இத் திரியிலேயே நேரிடையாக பதியாது கருத்துக்களத்தின் அதற்குரிய பகுதியில் புதிய திரி திறந்து பதியுமாறு கேட்டுக் கொள்கின்றோம். விரும்பினால் அவ்வாறு பதியும் திரியின் இணைப்பினை இங்கு கொடுக்க முடியும்.

நன்றி

6 minutes ago, யாழிணையம் said:

உங்களது ஆக்கத்தினை இத் திரியிலேயே நேரிடையாக பதியாது கருத்துக்களத்தின் அதற்குரிய பகுதியில் புதிய திரி திறந்து பதியுமாறு கேட்டுக் கொள்கின்றோம். விரும்பினால் அவ்வாறு பதியும் திரியின் இணைப்பினை இங்கு கொடுக்க முடியும்.

தயவு செய்து அந்த திரியையே நீங்கள் திறந்து அருள்புரிவீராக 
கருத்துக்களம் எங்கே என்று தேடி மண்டை காயுது.

41 minutes ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து அந்த திரியையே நீங்கள் திறந்து அருள்புரிவீராக 
கருத்துக்களம் எங்கே என்று தேடி மண்டை காயுது.

ஜீவன், எங்கள் மண் பகுதியில் ஒரு புதிய திரி திறந்து இந்த படங்களை பதிந்து விடவும். அதன்பின் அந்த லிங்கை இங்கு இணைக்கலாம்...:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

எழுதுவது வராவிட்டால்  பரவாயில்லை சகோதரி.... திட்டுறது வருமெண்டால் நல்லாய் திட்டி 50ல் இருந்து  75 வார்த்தைகள் சகட்டுமேனிக்கு திட்டிப் போடுங்கோ. நான் அந்த நார்களை பொறுக்கி பூவில கோர்த்து மாலையாக்கி விடுகிறேன் .... நல்லதோ கெட்டதோ ஆளுக்கு  பிவ்டி பிவ்டி ஓகேயா ....!  tw_blush:

எல்லோரைப் பற்றி கொசிப் எழுதச் சொன்னால் அந்த பாட்டுக்கு எழுதலாம்:mellow:.அத்தோட யாரையும் கிழிக்க வேண்டுமானால் அந்த மாதிரி கிழிக்கலாம்

21 hours ago, குமாரசாமி said:

பிறகு என்ன கோதாரிக்கு எவன் எழுதினது என்ட கெப்பர் கேள்வியள்? ஙே :grin:

யார் யாழ் இணையம் என்ட பெயரில உந்த முதலாவது கருத்தை எழுதினது எனத் தெரிந்து கொள்ளத் தான். கொஞ்சம் தமிழ் பூந்து விளையாடின மாதிரி இருக்குtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

எல்லோரைப் பற்றி கொசிப் எழுதச் சொன்னால் அந்த பாட்டுக்கு எழுதலாம்:mellow:.அத்தோட யாரையும் கிழிக்க வேண்டுமானால் அந்த மாதிரி கிழிக்கலாம்

கொசிப்பதுவும், கிழிப்பதுவும் எழுதல்ல என்பர்,

கருத்தெழுதும் ஆற்றல் இல்லாதவர்!

ரதி..நீங்கள் எதையாவது முதலில் எழுதுங்கள்!

நான் சில வேளைகளில் கருத்துக் களத்துக்கு வாறதே உங்கட கருத்தை வாசிக்கத் தான்!

அதில் அப்படியொரு 'காரம்' இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

கொசிப்பதுவும், கிழிப்பதுவும் எழுதல்ல என்பர்,

கருத்தெழுதும் ஆற்றல் இல்லாதவர்!

ரதி..நீங்கள் எதையாவது முதலில் எழுதுங்கள்!

நான் சில வேளைகளில் கருத்துக் களத்துக்கு வாறதே உங்கட கருத்தை வாசிக்கத் தான்!

அதில் அப்படியொரு 'காரம்' இருக்கும்!

ஆஹா புங்கை உச்சி குளிருது

வணக்கம்,

சுய ஆக்கங்களை இணைக்க "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" எனும் புதிய பிரிவு "யாழ் உறவுகள்" பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

https://www.yarl.com/forum3/forum/176-யாழ்-19-அகவை-சுய-ஆக்கங்கள்/

இப்பகுதியில் கள உறுப்பினர்கள் சுய ஆக்கங்களை தனித்தனி திரிகளில் இணைக்கலாம். விசேட சிறப்பு மலர் போன்று அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பதால், ஆக்கங்களின் வகைமைக்கு ஏற்ப உபபிரிவுகள் உருவாக்கப்படவில்லை.

கள உறுப்பினர் ஜீவன் சிவாவின் பதிவு  "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.