Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி. - 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி. - 

நான்  வேலை செய்யும், இடத்தில்... சந்தித்த, பல...  துருக்கி  ஆட்களின்,  
30 ஆண்டு கால... நினைவு  மீட்டல்.  
------

ஒவ்வொரு துருக்கியரும்....  ஜனவரி முதலாம் திகதி  பிறந்திருப்பார்.

  • Replies 143
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த துருக்கியளோடை என்னெண்டு சமாளிக்கிறியள் சிறித்தம்பி??????? :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உந்த துருக்கியளோடை என்னெண்டு சமாளிக்கிறியள் சிறித்தம்பி??????? :grin:

ஆரம்பத்தில்...  கொஞ்சம்  தயக்கமாக இருந்தாலும்,
அவர்களின்....  "வீக்னஸ்"  இருந்த, இடத்தை... கண்டு பிடித்தால், 
பகிடிக்கு,  பேய்க் காயள்... :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஆரம்பத்தில்...  கொஞ்சம்  தயக்கமாக இருந்தாலும்,
அவர்களின்....  "வீக்னஸ்"  இருந்த, இடத்தை... கண்டு பிடித்தால், 
பகிடிக்கு,  பேய்க் காயள்... :grin:

சிறித்தம்பி துருக்கியள் எண்டால் இரண்டு பிரிவு இருக்கு.... ஒண்டு நோர்மல் துருக்கி மற்றது குர்திஸ்தான் துருக்கியள்.... பெரும்பாலும் இரண்டு பிரிவும் ஒண்டு சேராது......இப்ப கேள்வி என்னவெண்டால் நீங்கள் பழகிறது எந்த துருக்கியளோடை???:cool:

8 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி துருக்கியள் எண்டால் இரண்டு பிரிவு இருக்கு.... ஒண்டு நோர்மல் துருக்கி மற்றது குர்திஸ்தான் துருக்கியள்.... பெரும்பாலும் இரண்டு பிரிவும் ஒண்டு சேராது......இப்ப கேள்வி என்னவெண்டால் நீங்கள் பழகிறது எந்த துருக்கியளோடை???:cool:

குர்துகள் ஒரு கொஞ்சம் தான் ..... பெரும்பாலனவர்கள் துர்க்குகள் தான்...  அர்கடாஸ் சிறி அவர்கள் பெரும்பாலும் துர்க்குகளுடன் தான் பழகியிருப்பார் எனநான் நினைக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிறித்தம்பி துருக்கியள் எண்டால் இரண்டு பிரிவு இருக்கு.... ஒண்டு நோர்மல் துருக்கி மற்றது குர்திஸ்தான் துருக்கியள்.... பெரும்பாலும் இரண்டு பிரிவும் ஒண்டு சேராது......இப்ப கேள்வி என்னவெண்டால் நீங்கள் பழகிறது எந்த துருக்கியளோடை???:cool:

குமாரசாமி அண்ணை,  உந்தக்   கேள்வி.... வலு வில்லங்கமானது.
குர்திஸ்தான் துருக்கிகள்.... மிக நல்லவர்கள்.  
ஆடு மேய்த்த.. நீண்ட மீசை உடைய, பணத்திற்கு அடிமையாகி தம் வாழ்க்கையை...
முடித்துக் கொண்ட, துருக்கிகள்... ஏராளம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி :101_point_up:வாசிக்க ஆவல்

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பவும் ஆவலாக இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...தமிழ் சிறி!

பிரான்ஸில்  'அடையார்' என்று செல்லமாக அழைக்கப்படுவதும் இவர்கள் தானா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புங்கையூரன் said:

தொடருங்கள்...தமிழ் சிறி!

பிரான்ஸில்  'அடையார்' என்று செல்லமாக அழைக்கப்படுவதும் இவர்கள் தானா?

அவர்கள் அல்ஜீரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4.3.2017 at 0:31 AM, Athavan CH said:

குர்துகள் ஒரு கொஞ்சம் தான் ..... பெரும்பாலனவர்கள் துர்க்குகள் தான்...  அர்கடாஸ் சிறி அவர்கள் பெரும்பாலும் துர்க்குகளுடன் தான் பழகியிருப்பார் எனநான் நினைக்கிறேன்

குர்திகளின் பிரச்சனையும் எமது ஈழத்தமிழர்பிரச்சனையும் கிட்டத்தட்ட ஒரு மாதிரியானதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für alte turkishe man in deutschland

(படம் இணைத்திலிருந்து....)

ஏதோ... ஒரு உத்வேகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரியை ஆரம்பித்து விட்டேன். (இடையில்... "ஜகா" வாங்குவமா என்று யோசித்த போதும்.....) பலரும் ஆவலுடன் இந்த திரியை எதிர் பார்த்து... உற்சாகத்துடன் இருப்பதால், இதனை தொடர்ந்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைமையை ஏற்படுத்தி விட்டது. :grin:

எனது 25 வயதில்,  இங்கு  வேலை செய்ய ஆரம்பித்தேன்.  முதலில் குறுகிய காலங்கள்  வேலை செய்த இடங்களில்... ஒன்றிரண்டு துருக்கியர் வேலை செய்தாலும், அவர்களும் தங்கள் வேலையும் என்று இருந்த படியால்... மற்றவர்களைப் போல் தான் இவர்களும் இருப்பார்கள் என்பதால்... அவர்களை அவதானிக்கும் படியாக வித்தியானமான நடவடிக்கைகள் இருக்கவில்லை. பின் எனக்குப் பிடித்த  ஒரு இடத்தில்...   வேலையை ஆரம்பித்த போது, அங்கு 5800 பேர் வேலை செய்யும் இடம். அதில்... ஆயிரம் பேரளவில்  துருக்கியர் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களை அவதானித்த போது... அவர்களின் செயல்கள், நடவடிக்கைகள் யாவும் சிரிப்பையும், சில சினத்தையும்... வரவழைக்கக் கூடியதாக இருந்தது. ஒரு சில துருக்கியர்  விதி விலக்காக இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். :)

துருக்கியருடன்...  இரண்டு தலைமுறையினருடன் வேலை செய்த படியால்.... முதல் தலைமுறைக்கும், இங்கு பிறந்து வளர்ந்த தலை முறைக்கும் பாரிய வித்தியாசத்தை தெள்ளத் தெளிவாக காண முடியும். முதலாவது தலை முறை... இரண்டாவது உலகப் போர் முடிந்த வேளை, ஜேர்மனியில்  வேலைக்கு ஆண்கள் பற்றாக்குறை காரணமாக, சகட்டு மேனிக்கு... இங்கு அழைத்து வரப் பட்டவர்கள்.  பெரும்பாலோருக்கு.... எழுதவோ, வாசிக்கவோ  தெரியாத நிலைமையில் இருந்தார்கள். போரில் சிதைவுண்ட இடங்களை.... அவசரமாக  மீண்டும் கட்டி எழுப்புவதற்காக மனித உழைப்பு தேவைப்பட்டதால்... அவர்களின் கல்வி அறிவு கணக்கில்  எடுக்கப் படவில்லை.

ஆரம்பத்தில்  குறிப்பிட்டது போல்.... பழைய  துருக்கியர் எல்லோரும், ஜனவரி முதலாம் திகதி பிறந்ததற்கு உரிய காரணத்தை அவர்களிடம் கேட்ட போது... தாம் எல்லோரும் கிராமப் பகுதிகளில் இருந்து வந்ததாகவும், ஒவ்வொரு பிள்ளையும் பிறக்க, நகரத்தில் உள்ள சம்பந்தப் பட்ட அலுவலகத்துக்குப்   போய்,  பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எடுக்க நேரத்தை செலவழித்தால்... இங்குள்ள விவசாயம், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை யார் கவனிப்பது என்பதால்.... அந்தந்த ஊரில் 10 - 15 குழந்தைகள்  பிறந்த பின்பு, எல்லோரின் பெயரையும் எடுத்துக் கொண்டு ஒருவர் நகரத்துக்கு சென்று, அவர்களின் பெயர்களை... ஜனவரி 1´ம் திகதி பிறந்தவர்கள் என்று பதிந்து விடுவார்களாம்.

இதில் சிலர் 4 - 5 வருடம் கழித்து பதிந்தவர்களும் உண்டு. அவர்கள் தமது தள்ளாத வயதில், வேலை செய்ததை  கண்டுள்ளேன். சிலர்... அவர்களின் பதிவுப் படி இன்னும் சில ஆண்டுகள் வேலை செய்தால் தான், முழுமையான  ஓய்வூதியம் கிடைக்கும் என்ற போதிலும், உடல் ஒத்துழைக்காததால்.... மருத்துவ சான்றிதழுடன்.. ஓய்வு எடுத்து விட்டு, "சயிஸ டொச்லான்ட்" :grin: என்று விட்டு, ஊருக்கு  சென்று விட்டார்கள். 

இன்னும் வரும்.... :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

30+25=55  இன்னும் ஒரு  அஞ்சு  கூட எதிர்பாக்கிறன் tw_tounge_wink:

3 hours ago, தமிழ் சிறி said:

, "சயிஸ டொச்லான்ட்" 

என்ன மீனிங் இதுக்கு. 

சிறி அண்ணோய் எங்களுக்கு டொச் தெரியாது கண்டியளே.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நந்தன் said:

30+25=55  இன்னும் ஒரு  அஞ்சு  கூட எதிர்பாக்கிறன் tw_tounge_wink:

:):)

On 2/6/2017 at 8:55 AM, தமிழ் சிறி said:

வாழ்க்கையை வெறுக்கப்  பண்ணுறீங்களே... புங்கையூரான். tw_blush:
மதுரையார்.... பேரப்  பிள்ளை கண்ட, தாத்தா. 
அந்தாள்... ஏதோ அறளையிலை  எழுதினதை,  நீங்க  சீரியஸாக  எடுக்காதீங்க. :grin:
நான் முப்பது வயதில் உள்ள இளைஞன்.  நான் உங்களுக்கு தம்பி தான். :)

இது போன மாசம்..! :unsure:

On 3/4/2017 at 1:44 AM, தமிழ் சிறி said:

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி.

நான்  வேலை செய்யும், இடத்தில்... சந்தித்த, பல...  துருக்கி  ஆட்களின்,  
30 ஆண்டு கால... நினைவு  மீட்டல். 

3 hours ago, தமிழ் சிறி said:

எனது 25 வயதில்,  இங்கு  வேலை செய்ய ஆரம்பித்தேன்...

இவை இந்த மாசம்..!!   :rolleyes:

CSXc53.gif

தமிழ் சிறி அண்ணா(?), எப்பொழுது தங்கள் உண்மையான வயதை இங்கே சொல்வதாக உத்தேசம்..? vil-blague.gif  clak.gif

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் ஏற்கனவே சொல்லிப்போட்டார் விதிவிலக்குகளை கணக்கெடுக்க வேண்டாம் என்று ....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

லர் 4 - 5 வருடம் கழித்து பதிந்தவர்களும் உண்டு. அவர்கள் தமது தள்ளாத வயதில், வேலை செய்ததை  கண்டுள்ளேன். சிலர்... அவர்களின் பதிவுப் படி இன்னும் சில ஆண்டுகள் வேலை செய்தால் தான், முழுமையான  ஓய்வூதியம் கிடைக்கும் என்ற போதிலும், உடல் ஒத்துழைக்காததால்.... மருத்துவ சான்றிதழுடன்.. ஓய்வு எடுத்து விட்டு, "சயிஸ டொச்லான்ட்" :grin: என்று விட்டு, ஊருக்கு  சென்று விட்டார்கள்

உந்த துருக்கியள் யூகோஸ்லாவிக்காரர் எல்லாருக்கும் ஒரு நாய்ப்பழக்கம் என்னெண்டால்...... றோட்டாலை போகேக்கை காலிலை கல்லடிபட்டாலும் சயிஸ டொச்லான்ட்     எண்டுதான் சொல்லுங்கள் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

குர்திகளின் பிரச்சனையும் எமது ஈழத்தமிழர்பிரச்சனையும் கிட்டத்தட்ட ஒரு மாதிரியானதே.

இவர்கள் யார் குர்திஸ் போராளிகளா இவர்களை பற்றி பத்திரிகையில் படித்தேன்  போராட்டமான வாழ்க்கை 

தொடருங்கள்  துருக்கி பெண்கள் என்ன மாதியெண்டு சொல்லுங்கோ தம்பிக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

இவர்கள் யார் குர்திஸ் போராளிகளா இவர்களை பற்றி பத்திரிகையில் படித்தேன்  போராட்டமான வாழ்க்கை 

தொடருங்கள்  துருக்கி பெண்கள் என்ன மாதியெண்டு சொல்லுங்கோ தம்பிக்கு 

இவர்கள் துருக்கி இல்லை ....
ஆனால் ...

துருக்கி ..... ஈராக் ... சிரியா எல்லைகளில் ஒரு தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள் 
இவர்களுக்கு பாரிய பழமைவாய்ந்த வரலாறு உண்டு 

இவர்கள் ஓரளவு இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றினாலும் 
எமது ஊரில் உள்ள கிறிஸ்தவம் போல் எல்லா நாடுகளும் உள்புகுத்தியதுதான் அது. 

நாடுகள் எல்லைகளை வகுத்த நேரம் இவர்கள் சரியான தலைமை இல்லாது 
நாடுகளின் அரசிலுக்குள் சிக்கிவிடடார்கள்.

கண்ணை மூடின மத வெறி இல்லாததால் 
துருக்கி ஈராக் சிரியா போன்ற நாடுகளால் எப்போதுமே 
தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தற்போது ஓரளவு ஐ ஸ் ஸ் தீவிரவாதிகளை ஓரளவு அடக்கியவர் இவர்கள்தான் என்றாலும் 
மறுபுறம் பலத்த இன்னல்களை சந்தித்தவர்களும் இவர்கள்தான்.
மதவெறி பிடித்த ஐ ஸ் ஸ் நாய்கள் குதறி குதறி கொடூரம் இழைக்க 
இவர்களின் மத சுதந்திரம் இன்னமும் காரணமாயிற்று.

துருக்கி பெண்கள் என்றால் .............
அது இன்னொரு இந்தியா என்று சொல்லலாம் 
காலையும் மாலையும் குரான் ஓதுவதும் உண்டு 
காலை எழுந்தவுடன் .... விஸ்கியில் வாய் கொப்பிளிப்பதும் உண்டு. 

வெளி உலகமே தெரியாத தவளைகளும் உண்டு ...
ஈழ தமிழரில் இருந்து .... எத்த்தியோப்பியா கறுப்பர் வரை பார்த்தவரும் உண்டு. 

துருக்கியர்கள் இஸ்லாம் மதம் சார்ந்தாலும் 
விபச்சாரம் .... குடி ... புகை இல்லாமல் இருப்பது என்றால் 
கொஞ்சம் கஷடப்படுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Surveyor said:

என்ன மீனிங் இதுக்கு. 

சிறி அண்ணோய் எங்களுக்கு டொச் தெரியாது கண்டியளே.

Scheiße வை இங்கு கட் அன்ட் பேஸ்ட் செய்து பார்க்கவும் (தமிழில்) https://translate.google.ca/

டொச்லான்ட்  தெரியும் தானே Germany
 
1 minute ago, vaasi said:

Scheiße வை இங்கு கட் அன்ட் பேஸ்ட் செய்து பார்க்கவும் (தமிழில்) https://translate.google.ca/

டொச்லான்ட்  தெரியும் தானே Germany
 
ஓஓஓஓ அதுவா.

டொச்லான்ட் வந்தான். பெர்லின் & cologne 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

தொடருங்கள்  துருக்கி பெண்கள் என்ன மாதியெண்டு சொல்லுங்கோ தம்பிக்கு 

எங்களையும் ஐரோப்பியர்களையும் இணைக்கும் பாலமாக 
இவர்கள்தான் இருக்கிறார்கள்  (ஆசியா - ஐரோப்பா) 

ஆதலால் இவர்களிடம் இரண்டு பக்கமும் உண்டு 

என்னோடு ஒரு துருக்கி பெண் படித்தார் .... ஆங்கிலத்தில் தண்ணி போல எழுதுவார் 
இவரிடம் கேட்டுத்தான் நான் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறேன் 
எனது எழுத்துக்களை அவரை கொண்டுதான் திருத்துவேன் ... எனது எல்லா பேப்பருக்கும் 
எ எடுத்திருந்தேன் ... இவர்தான் முக்கிய காரணம்.

ஆனால் வெள்ளி சனி வந்தால் .....
எமது அம்மன் கோவிலில் பேய் ஆடுபவர்கள் போல் 
ஞாயிறு காலையில்தான் கொஞ்சம் அடங்கும். 
ஞாயிறு பின்னேரம் என்றால் லைபிரேரியில் போய் இருந்துவிடுவார். 

இப்போ மெட்ரானிக் என்ற ஒரு பெரிய மருத்துவ கொம்பனி ஒன்றில் 
முக்கிய பொறுப்பில் இருக்கிறார் ..... இவரது படிப்புக்கு எடுத்த லோன் எல்லாம் 
அந்த கொம்பனியே கட்டிதான் இவரை வேலைக்கு எடுத்தார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, முனிவர் ஜீ said:

இவர்கள் யார் குர்திஸ் போராளிகளா இவர்களை பற்றி பத்திரிகையில் படித்தேன்  போராட்டமான வாழ்க்கை 

தொடருங்கள்  துருக்கி பெண்கள் என்ன மாதியெண்டு சொல்லுங்கோ தம்பிக்கு 

இப்ப இருக்கிற பெரும்பாலான துருக்கி பெண்கள்......

கலியாணத்துக்கு முன்னமே கண்ணை செருகும் சந்தர்பம் வந்தால் செருக தவறமாட்டினம். :cool:

அதோடை பன்றி இறைச்சி மட்டும் சாப்பிடமாட்டினம். மற்றும்படி குரான்லை என்ன செய்யக்கூடாது எண்டு சொல்லியிருக்கோ அவ்வளவத்தையும் வெரி சிம்பிளாய் செய்வினம்..:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4.3.2017 at 0:31 AM, Athavan CH said:

குர்துகள் ஒரு கொஞ்சம் தான் ..... பெரும்பாலனவர்கள் துர்க்குகள் தான்...  அர்கடாஸ் சிறி அவர்கள் பெரும்பாலும் துர்க்குகளுடன் தான் பழகியிருப்பார் எனநான் நினைக்கிறேன்

இங்கு பெரும்பாலானவர்கள் துருக்கியர் தான் ஆதவன்.  குர்திஸ் இனத்தவர் மிகக் குறைவே. 
அப்படி குர்திஸ் இனத்தவர் சிலர் வேலை செய்த போதும்... பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள்.
துருக்கியரை விட... குர்திஸ் இனத்தவர்கள் புத்திசாலிகளாக இருப்பதையும் காண முடியும்.
1961´ல்  ஜேர்மனி, துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இங்கு வந்த துருக்கியரின் எண்ணிக்கை 6800 பேர். 
இன்று... 3, 000,000 (முப்பது லட்சம்) பேருக்கு மேல் வாழ்கின்றார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நந்தன் said:

30+25=55  இன்னும் ஒரு  அஞ்சு  கூட எதிர்பாக்கிறன் tw_tounge_wink:

18 hours ago, ராசவன்னியன் said:

:):)

இது போன மாசம்..! :unsure:

இவை இந்த மாசம்..!!   :rolleyes:

CSXc53.gif

தமிழ் சிறி அண்ணா(?), எப்பொழுது தங்கள் உண்மையான வயதை இங்கே சொல்வதாக உத்தேசம்..? vil-blague.gif  clak.gif

.

நந்தன், ராஜவன்னியன்...
அவசரப் பட்டு கலாய்க்காதீர்கள்.... இந்தப் பதிவின் முடிவில்,  "யாவும் கற்பனை"  என்று போட இருக்கின்றேன். :D: :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.