Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனப்பொருத்தம் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனப்பொருத்தம்

 

 பூமிப்   பந்தின் சுழற்சிக்கு ஏற்ப  கால  நிலை மாறுகிறது.  அது போலவே மனிதனின் வாழ்வும்  சுழன்று கொண்டே இருக்கிறது . வருடங்கள் காலச்  சுழன்றோ ட சக்கரத்தில் மனிதனின் வளர்ச்சியும்  மாறிக் கொண்டே இருக்கிறது ... மாற்றங்கள் எப்போதுமே மாறாதவை .

 

கருணாகரன் க லாவதி தம்பதிகளும் ,போர்க் .காலச்  சூழ்நிலையால்  புலம் பெயர்ந்து  பிரான்சின்   நகரப்பகுதிக்கு  அண்மையில்  ,மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண்  குழந்தைக்ளுமாய் வாழ்வை ஆரம்பித்தார்கள். கருணாகரன்  ஆரம்பத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வான்.  பின்பு குடும்பத்தி ன் செல்வைக்க கட்டுப்படுத்தமுடியாமல் மேலும் ஒருபகுதி நேர வேலையாக   கடைக்கு கணக்கு எழுதும் வேலையும்  செய்து வந்தான் .   அவர்கள் ஊதியமாக சிறு  தொகை கொடுத்தாலும்  "சந்தோஷமாக " ஒரு மதுப்போத்தலும் கொடுத்துவிடுவார்கள் .  

 

கடையின்  அத்தனை கணக்கு வழக்குகளும் வரிக்  கட்டுபாடடாளரின்    கண்ணுக்கு தடுப்படாமல் சுழியோடி  கணக்கை கச்சிதமாய்  வரவு செலவு .. காட்டி விடுவான் . இதனால் அந்த கடைத் த்தொகுதியில்  மிகவும் பிரபலமானான் .. வேலை . களைப்பு என்று  ஆரம்பித்த  மதுப்  பழக்கம்  ..போதை மயக்கத்தில் மறு  நாள் வேலைக்கு போகாமல் இருப்பது என்ற நிலைக்கு ஆளாக்கியது ..நாட்கள் கிழமைகளாக வேலைக்கு போக முடியாது இருந்தான் ...

 

.காலப்போக்கில் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். முதல் மூன்று பெண் குழந்தைகளும்  அடுத்த அடுத்த வருடங்களில்   பருவ வயதை அடைந்தனர் .மிகவும் கட்டுப்பாடான குடும்ப கஷ்டம் உணர்ந்த பெண் மக வுகளாய் .  அவர்கள் அழகிலும் ஆண்டவன் குறை வைக்காத அளவுக்கு  கண்ணுக்கு இனிய  இளம் குமாரத்தி கள்  ஆகி னார்    வீட்டுக் கஷ்டம் உணர்ந்து ..பகுதி நேரமாய் ...பள்ளிப்பிள்ளைகளுக்கு  பாடம் சொல்லிக் கொடுத்து தமது சிறு தேவைகளுக்கு பணம் சேர்த்துக்  கொள்வார்கள் ...தங்கள் ஒரே  தம்பி யையும் கவனமாய் பார்ப்பார்கள் .  கஷ்டங்கள் மத்தியிலும்  கலாவதி ..சிறப்பாக வளர்த்தாள் .  ஒரு முறை  கடைப் ப  குதிக்கு சென்றவன் ...தெருவில் வீழ்ந்து கிடப் ப தாக செய்தி  வரவே  காலாவதி அங்கு நோக்கி போகையில்  தயராக இருந் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி கொண்டு ...... வைத்திய நிலையம் சென்றார்கள் .

 

அங்கு மூன்று நாட்களின் பின்   வைத்திய அறிக்கையில்  மிகவும்பலவீனமாக் இருப்பதாகவும் ஈரல்      மிக்வும்பதிப்புள்ளதாகவும்   வைத்தியர் தெரிவித்தால் ..இனி வருங்காலத்தில் மதுவகை பாவிக்க கூடாதெனவும்  கண்டிப்பான கடடளையோடு வீடு நோக்கி அழைத்து வரப்ப படடான்  ஒழுங்காக இருந்தவன் . சில வாரங்கள் கிறிஸ்ம்ஸ   பண்டிகையின்   போது  ..நண்பர்கள் அழைக்கவே சென்று மது போதையில் வந்தான் . மறு  நாள் ஒரே வாந்தி ...அவசர அம்புலன்ஸ் அழைத்து வைத்ய சாலையில் அனுமதித்தார்கள் ... ஒரு வா ரம் படுக்கையில் இருந்தவன்  ..மி கவும் பலவீனமானான் எந்த  மருந்துக்கும்  கட்டுப்படாமல் போகவே ..ஒரு  ஞாயிறு அதிகாலை காலமானான் .   நான்கு பிள்ளைகளும்  மனைவியும் கதற ..ஊர்வலர்களும் ஒன்று கூடி மரண அடக்கம் நடந்தது ....

 

காலம் உருண்டோடியது .மூத்தவள் திருமண வயதை  எட்டி விடடதால்  தந்தையின் சகோதரி .. தான் வாழும்  கனடா நாட்டில் ..தூரத்து உறவு முறையில் ஒரு திருமணம் பேசி ..முடித்தார் .. இரு வீடடை  சார்ந்தவரும் தொலைபேசி வழியே .. ஒழுங்காக்கி  .நாள் குறித்து ... பின்  தொழில் நுட்பம் மலிந்த இக்காலத்தில் ஸ்கைப்  ..முக புத்தகம்..  போன்ற   இணைய வழித்  ...தொடர்பில் மணமக்கள் பேசிக் கொண்டனர் ...இருவருக்கும் பிடித்து போக வே வரும் கோடை விடுமுறையில்  மணமகள்  இங்கு வந்து பதிவு செய்ய  ... ஒழுங்காகியது .

 

 இதற்கிடையில்   மண  மக ளின்  தாயின் சகோதரி ..மணமகன் உள்ள    கனடா நா ட்டிற்கு அழைக்கவே  வந்தவர்,  மணமகனின் வீட்டிற்கும் உறவினரால் அழைத்து செல்ல படடார் , சென்றார் ....உறவுகளும் வந்திருந்தனர்....அதன் பின் அவர்களின் ...திருமண முயற்சியில் ...சிறு தடங்கல் ...        .மனம் ஒத்து போனாலும் தோற்ற பொருத்தம் சிறு ,,குறை யாக தென் படடது . மணமகன்  4'11" ஆகவும்   பெண் 5'2" ஆகவும் இருந்தனர் .....இனி அவர்களின் தேர்வு  மணமகள்  சம்மதத்தில தங்கி இருந்தது ..... 

அவள் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று ..விடடாள் .  ஒரு வா ரம் ஆகியது   பையன்     அழை ப்புக்காக காத்துக்   கொண்டு இருந்தான்.   பெண்  தாயிடம்   சென்று நடந்த்து .விபரித்தார் ...  இதனால்   வேறிடம் பார்க்கலாம் என் சொல்லிவிடடார் .....

 

மணமகள் தீவிரமாய்  சிந்தித்தாள் .ஒரு  வேளை மணமகன்  என்னை மறுத்திருந்தால் என் மனம் என்ன  பாடு பட்டிருக்கும் ..பெ ண்ணுக்கு ஒரு மனம் ஆணுக்கு வேறு மனமா  .?  ஆசை கள் நிராகரிக்க படும்போது ...மனம் வாடுகிறது ...எத்தனை யோ குறைபாடுள்ளவர்கள் வாழ  வில்லையா ....உயரம் ஒரு  குறையா ..இரு மனம் கலந்ததே  திருமணம் ... 

மறு நாள் விடிந்தது ..... அம்மாவிடம் தன மூடிவைத்து தெரிவித்தாள்   மக ள் ...நான் அவரைத்  தான் திருமண செய்வேன் வேறு எவரையும்  செய்யமாடடேன்  என்றாள்  தீர்மானமாக ..... நான் அவரோடு பேசி என் முடிவு சொல்ல போகிறேன் என்று ...தொலைபேசியில்   அழைத்தாள்  ...இந்த  அழைப்புக்காகவே காத்திருந்த  மணமகன் ....பேசினான் .......வார்த்தைகள் முடிவுகளாகி ..திருமணம் இனிதே நடந்தேறியது .....

 

ஒரு வருட இன்பமான வாழ்வில் அழகான பெண் குழந்தை  கையில் ...ஒரு திருமண வீட்டில் சந்தித்தேன்.தம்பதிகள் ...இனிதே வாழ்க ..அவளுக்கென்றொரு மனம் ...அது ஆழமான அன்புள்ள ..நேசிக்க தெரிந்த உள்ளம்.  திருமணங்கள்  நறு மணம்  வீசி மலர்வ்து  இனிய நல்மனம்  கொண்ட மலர்களால் ...  படித்த அழகான மெல்லிய மாநிறமாக மணமகள்  தேவை என் விளம்பரம் செய்யும  இக்காலத்தில்  இப்படியான   நல்ல உள்ளம் கொண்ட மணமக்களும் வாழ்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருவைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் .அழகான குறையில்லாத கதை. வாழ்த்துக்கள் சகோதரி....!  tw_blush:

7 minutes ago, நிலாமதி said:

இதற்கிடையில்   மண  மக ளின்  தாயின் சகோதரி ..மணமகன் உள்ள    கனடா நா ட்டிற்கு அழைக்கவே  வந்தவர்,  மணமகனின் வீட்டிற்கும் உறவினரால் அழைத்து செல்ல படடார் , சென்றார் ....உறவுகளும் வந்திருந்தனர்....அதன் பின் அவர்களின் ...திருமண முயற்சியில் ...சிறு தடங்கல் ...    

மேற் குறிப்பிட்ட வசனத்தை வாசித்தபோதே புரிந்து கொண்டேன் / உங்களுக்கு தெரிந்தவர்தான் என்று.

வாழ்க்கையில், அனுபவத்தில் நடப்பவற்றை இப்படி அடிக்கடி பகிரலாமே / நாங்கள்  என்ன வாசிக்க மாட்டம் எண்டு அடம்பிடிப்பமா என்ன?

 

பதிவுக்கு நன்றி சகோதரி / ஆனால் தொடர்ந்தும் எழுதாவிட்டால் கண்டமேனிக்கு "iudfhcd ௯வ்ர ஹ்ய௯ ஹிஉவ்ர்ஹ்ரிஉவ்ஹ" என்று திட்டுவேன் இப்பவே சொல்லிப்புட்டன் ஆமா :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நிலாமதி said:

மணமகள் தீவிரமாய்  சிந்தித்தாள் .ஒரு  வேளை மணமகன்  என்னை மறுத்திருந்தால் என் மனம் என்ன  பாடு பட்டிருக்கும் ..பெ ண்ணுக்கு ஒரு மனம் ஆணுக்கு வேறு மனமா  .?  ஆசை கள் நிராகரிக்க படும்போது ...மனம் வாடுகிறது ...எத்தனை யோ குறைபாடுள்ளவர்கள் வாழ  வில்லையா ....

இதே சிந்தனை இதே எண்ணம் எல்லோர் மனதிலும் ஊன்றிவிட்டால் எத்தனையோ குடும்பங்கள் சந்தோசமாக வாழும்.
நிலாமதி உங்கள் கதை நிதானித்து வாசிக்க தூண்டியது. நன்றி.tw_thumbsup:

உன்னைப்போல் பிறரை நேசி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி 

மதுவால் எமது இளம் சமுதாயம் மிகவும் சீரழிந்து போகிறது.வேலைப் பழு கம்பனி பாட்டி என்று தொடங்கி பின்னர் அதிலிருந்து மீள இயலாமல் இருக்கின்றது. 

நீங்கள் எதை வைத்து கதையாக எழுதினீர்களோ தெரியாது.ஆனால் எமது சமுதாயத்தில் இன்று இது பாரிய பிரச்சனையாகவும் உள்ளது.

2 hours ago, ஜீவன் சிவா said:

"iudfhcd ௯வ்ர ஹ்ய௯ ஹிஉவ்ர்ஹ்ரிஉவ்ஹ" சொல்லிப்புட்டன் ஆமா :grin:


உங்க கவிதை நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் நல்லதொரு ஆக்கம் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு படிப்பினைக் கதை, நிலாக்கா!

நாலு தரம் பச்சை போட முயன்றும்....யாழ் பிச்சையாகக் கூடப் பச்சையைத் தருகுதில்லை!

இளைய தலைமுறை சுயமாகச்க் சிந்திப்பது....உற்சாகத்தைத் தருகின்றது!

நாளைக்கு...அனுமாரின் வாலுக்குப் பின்னால்....எல்லோரும் போகின்றார்களே என்று நினைத்துத் தானும் போகாது!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை அக்கா. இப்படியானவர்கள்  வாழ்வதால் தான் இன்னும் உலகம் உருள்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப்   பகிர்ந்தவர்கள் விருப்பு வாக்கு இடடவர்கள் 
யாவருக்கும் என் நன்றி ..,, என்  ஆக்கங்களை  பதிய ஊக்கம் தந்தது  யாழ் களமே 

  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்கென்று ஒரு மனம் என்று தனித்துவப்பட்டுப்போகாமல் சமூக ஓட்டத்திற்கு இசைவாக வாழப்பழக்கபடுவது எல்லோருக்கும் இலகுவானதல்ல. சில தனிப்பட்டவிருப்புகளே பல தரப்பட்ட தடங்கல்களுக்கு இடமளித்துவிடுகிறது. விட்டுக் கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்ற பலத்த மனப்போராட்டத்திற்குப்பின்னரே இந்தக் கதையின் நாயகி முடிவுகள் எடுத்திருப்பார். எதுவாகட்டும் கதையின் நாயகி புத்திசாலித்தனமாக முடிவெடுத்து சூழலுக்கு ஏற்ப பயணிக்கும் பக்குவம் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நம் இளையோர் மத்தியில் இத்தகைய மனப்பக்குவம் மிகவும் குறைவு அந்த வகையில் தன் குடும்ப சூழல் கருதியும் தன் எதிர்காலம் நோக்கிய வாழ்வு கருதியும் அப்பெண் எடுத்த முடிவை உற்சாகத்துடன் வரவேற்றே ஆகவேண்டும்.

 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லைக்கண்ணா.

நிலாமதியக்கா பாராட்டுகளும் வாழ்த்துக்களையும் உரைக்கும் தருணத்தில் சின்ன விண்ணப்பத்தையும் முன் வைக்கிறேன்

 

உண்மைச் சம்பவத்தை எழுதி இருக்கிறீர்கள் நிலாமதியக்கா உங்கள் எழுத்தின் வாயிலாக தெரிகிறது. கூடுமானவரைக்கும் உண்மைச்சம்பவங்களாக இருந்தாலும் எழுதும் போது கவனமாக இருக்கவும். விமர்சனம் என்னும் பெயரில் மற்றவர்கள் இடும் கருத்து சில சமயங்களில் கதையின் நாயகர்களைக் காயப்படுத்திவிடக்கூடும். கவனம் கொள்க. தொடர்ந்தும் எழுத்துப்பயணிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
யாழுக்கு திருப்பி வந்து எழுதத் தொடங்கின நிலா அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
கல்யாணம் கட்டின பிற்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு  விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது வேறு,கல்யாணம் கட்ட முதல் கொம்பிரமைஸ் செய்து கொண்டு கட்டுபவர்களுக்கு எதிர் காலத்தில் பிரச்சனை வரக் கூடும்...கொம்பிரமைஸ் செய்து கொண்டு கட்டுபவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான் ஏன் ஆண்கள அப்படிக் கட்டுவதில்லை?
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவங்களை  கதையாக்கும் பாட்டிக்கு நன்றிகளும்  பாராட்டுக்களும்...

தொடருங்கள்  பாட்டியம்மா..

என்னிடமும்சில  அனுபவக்கதைகளுண்டு

பிடி கொடுக்காமல்எழுதணும்

பார்க்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.