Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

துருச்சாமி .

சாமியுடன் ஒருநாள். (நகைச்சுவை).

என்னுரை:  இந்தக் காவியத்தில் பாலகர் காண்டம், வாலிபர் காண்டம் என இரு காண்டங்கள் உள்ளன. பாலகர் காண்டத்தில் ஆறு படலங்கள் இருக்கின்றன.

அவையாவன:

1) வழித்தேங்காயைத்  தெருப் பிள்ளையாருக்கு உடைத்தல் படலம்.

2) பாதயாத்திரைப் படலம்.

3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம்.

4) நினைவேந்தல் படலம். (பிளாஷ்பேக் வாசகர் சிரமம் தவிர்க்க).

5) பந்திபோஜனப் படலம்.

6) நீதிவழங்கும் படலம்.

இந்த ஆறு காண்டங்களும் பத்து மாதத்தில் இருந்து நூறு வயதுவரை வாழ்பவர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது.

அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது. அவற்றைப் பின்பு பார்க்கலாம். 

எமது துருச்சாமியுடன் பயணிக்கும் அடியவர்கள் மூளைக்கு ஓய்வளித்துவிட்டு, லாஜிக்கைத் தவிர்த்து  மனசை இலேசாக்கி சிரிப்பை சிந்திக்கொண்டு (வந்தால்) பயணிக்கவும். 

காண்டம் ஒன்று: பாலகர் காண்டம். ( பாகம் ... ஒன்று).

1) வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு உடைக்கும் படலம்.

நேரம் அதிகாலை 03 : 45.

அதிகாலை எங்கோ தூரத்தில் சேவல் ஒன்று கூவுகின்றது. அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்த தரிப்பிடத்தில் ஒரு பேருந்து வந்து நின்று பெரு மூச்சுடன் புறப்பட்டுப் போகின்றது. அதில் இருந்து திடகாத்திரமான உருவம் ஒன்று இறங்கி வருகின்றது. அப்படியே அண்ணாந்து வானத்தைப் பார்த்துவிட்டு தனக்குள் வெள்ளி காலித்துக் கிடக்கு ஒரு நாலு மணி இருக்கும் போல. அப்படியே கோவில் அருகால் நடந்து திருக்குளத்துக்கு வருகின்றது. படிக்கட்டில் ஆடையைக் களைந்து வைத்துவிட்டு கௌபீனத்துடன் குளத்தில் இறங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு முங்கி முங்கி  உடல் சூடு பறக்க நன்றாக முழுகி விட்டு எழுந்து வந்து ஒரு துணிப்பையில் இருந்த துண்டால் தலையைத் துவட்டி மேலைத் துடைத்துவிட்டு  ஒரு காவி வேட்டியை அணிந்து கொண்டு கோவணத்தை அலம்பிப் பிழிந்து படிக்கட்டில் விரித்துவிட்டு கிழக்குப் பார்த்து நின்று சிவ சிவ என்று  திருநீறு பூசி பையையும் எடுத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடந்து வருகின்றது.

அப்போது அங்கு நின்றிருந்த தென்னை ஒன்றில் இருந்து தேங்காய் விழ, அந்த இருட்டில் அதைத் தேடி எடுத்து அதோடு இன்னும் இரண்டையும் பொறுக்கி எடுத்து மூன்றையும் பையில் இருந்த கத்தி எடுத்து உரித்து எடுத்துக் கொண்டு வரும்பொழுது வழியில் நின்ற பொன்னச்சி, அரளி, செம்பருத்தியில் நாலுபூவும்  பறித்துக் கொண்டு வந்து விநாயகர் சந்நிதிமுன் நின்று கதவருகில் பூவை வைத்துவிட்டு அங்கு தொங்கிய சங்கில் இருந்தும் திருநீறு எடுத்து நெற்றியில் மார்பில் கையில் பூசிக்கொண்டு பையில் இருந்து ரெண்டு சூடம் எடுத்து அங்கிருந்த கல்லில் வைத்து ஏற்றிவிட்டு அடுத்திருந்த கல்லில் சிதறு தேங்காய் அடித்து விட்டு  கண்முடி " திருவாக்கும் செய்கருமம் கைக்கூட்டும் " என்று ஸ்தோத்திரம் பாடி உடைத்த தேங்காயில் இரண்டு சில்லையும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு வருகுது. 

2) பாதயாத்திரைப் படலம்.

கோயில் வெளிச்சுற்றைத் தாண்டி வரும் பொழுது மடப்பள்ளிக் கதவு ஒரு கம்பியால் கட்டி இருக்கு, அருகே எலி வாகனமும் இருக்கு. அதையும் தாண்டி வந்து வயலுக்குள் இறங்கி வரப்பால் வெகுதூரம் நடந்து கடந்து பனங்கூடலுக்குள் இறங்கி ஒற்றையடிப் பாதையால் நடந்து வருகின்றது. சூரியன் உதயமாக அந்தக் கருக்கலில் சிறிது வெளிச்சமும், பறவைகளின் இரைச்சலும் தொடங்குகிறது. "மாசிப் பனி மூசிப் பெய்யும்" பனி விழுவதால் இருள் முற்றாக விலகவில்லை.

இப்போது அந்த உருவத்தை சிறிது பார்க்க முடிகின்றது. கொஞ்சம் ஒல்லியாய் நெடு நெடு என்று ஆறடிக்கு குறையாத தோற்றம். மாநிறம், கைகளும் கால்களும் தோள்களும் எஃகு போல வலுவாக  இருக்கின்றது. ஒரு காவி வேட்டி கட்டியிருக்கு. அது முழங்காலுக்கு கொஞ்சம் கீழே இறங்கி கணுக்காலுக்கு மேலே  ஏறி இருக்கு. உடலை ஒரு நீளமான சால்வையால் போர்த்தி இருக்கு. தோளில் இருந்து ஒரு ஏணை போன்ற தூளிப் பை தொடைவரை தொங்குகின்றது. அந்தப் பையின் உள்ளே பல பொக்கட்டுகள் விசேஷமாய் தைக்கப்பட்டிருக்கு. அதனுள்தான்  சாமியின் ( இனி அவரை சாமி என்றே அழைப்போம்) சொத்து பத்து எல்லாம் அடக்கம். அந்தப் பை ஒரு அட்ஷய பாத்திரம்.கேட்டது எல்லாம் தரும்.  அத்துடன் கையிலே ஒரு தண்டம் வைத்திருக்கு. அந்தத் தண்டம் ஒண்டரை முழம் நீளம் இருக்கும்.கொப்பு  வளைத்துப் பூப்பறிக்க, குலைத்து வரும் நாயைத் துரத்த, முதுகு அரித்தால் சொறிய என்று அதுக்கும் நிறைய வேலை. மேலும் குடிக்க கழுவ என்று ஒரு கமண்டலம். சரி சாமி மெதுவாய் நடந்து போகுது நாமும் தொடர்ந்து போவோம்.

அந்தப் பனங்கூடலுக்குள் ஏராளமான பனைகளும், வடலிகளும், அன்னமுன்னா, கொய்யா, நாயுருவி, பாவட்டை என்று பரந்து கிடக்கு. அங்கு சாமி நடந்து வர ஒரு பனையின் அடியில் நுரை ததும்ப கள்ளுமுட்டி ஒன்று பக்குவமாய் வைக்கப் பட்டிருக்கு. சாமியும் தனது கமண்டலத்தை எடுத்து அண்ணாந்து நீர் பருகிவிட்டு மேலும் நடக்கின்றது.அந்தக் காட்டைத் தாண்டி அடுத்திருந்த வாழைத் தோப்புக்குள் இறங்கி ஒற்றையடிப் பாதையால் நடக்குது. அந்தப் பாதையில் நிறைய குலை தள்ளிய வாழைகளும் பொத்திகளுமாய் இருக்கு. அவை பாதையில் வளைந்து தலையிலும் இடிக்குது.சாமி அதையும் கடந்து நடந்து வருது. பொழுதும் புலருது, பனியும் அடங்குது.

அடுத்து ஒரு காய்கறித் தோட்டத்துக்குள்ளால்  அந்தப் பாதை வர சாமியும் அதில் நடந்து வருது. அங்கே கத்தரி, புடலை, வெண்டை, தக்காளி, கீரை, மிளகாய், பயத்தங்காய்,பூசணி என்று வழியெல்லாம் பார்க்க மனசு கொள்ளை போகின்றது. அதையொட்டி வர ஒரு வீடும் அருகே கொட்டிலில் ரெண்டு ஆடும் , ஒரு கரப்புக்குள் கோழியும் குஞ்சுகளும் இருக்கு. அவை வெளியே வர முண்டியடிக்குது. அந்த வீட்டைக் கடந்து வர எல்லைக் கடவையில் முருங்கை ஒன்று ஏராளமாய்க் காய்த்துத் தொங்குது. அதையும் சாமி எட்டிக் கடந்து அடுத்திருந்த பனங்காட்டுக்குள் இறங்கி வருது.

இப்போது அந்தக் காட்டுக்குள் ஒரு அன்னமுன்னா கொப்பில ஒரு மஞ்சள் பை தொங்குகின்றது.அதையும் கடந்து அடுத்திருந்த வீதிக்குள்  வந்து விட்டது சாமி. இப்ப நல்லா வெளிசிட்டுது சற்று தூரத்தில் எட்ட எட்டவா பல வீடுகள் தெரிகின்றன. வீதியால்  சாமியைக் கடந்து போகும் இரண்டொருவர், வண்டில்காரர் ஆளாளுக்கு கும்புடு போட சாமியும் தண்டத்தை உயர்த்தி ஆசிர்வதித்துக் கொண்டு வருது. அப்படியே வருகையில் வளப்பமான ஒரு ஒட்டு வீட்டின் படலையடியில் வந்து நிக்க, உள்ளே முத்தம் கூட்டிக் கொண்டிருந்த  கிழவி பர்வதம் படலைப் பக்கம் பார்த்து  என்னடா இது காலங்கார்த்தால குடுகுடுப்பைக் காரன் வந்திட்டான் போல என்று தனக்குள், உவங்கள் சுடலையில் இருந்து வருவாங்கள், உவங்கட முகத்தில முழிக்கக் கூடாது ஆனால் உவர் உடுக்கடித்து என்ன சொல்லுகிறார் என்று கேட்பம் என நினைத்து வீட்டுப் பக்கமாய் விளக்குமாத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு நிக்கிறாள். சாமியும் முத்தத்தில ஆள் நிக்கிறதைப் பார்த்திட்டு கொழுக்கியைத்  தூக்கி படலையைத் திறந்து கொண்டு கிழவிக்கு அருகில் வந்து நிக்குது.

கிழவியும் என்ன இன்னும் உடுக்கு சத்தத்தைக் காணேல்ல என்று திரும்ப முன்னால சாமி நிக்குது. கிழவியும் அட இது குடுகுடுப்பை இல்லை யாரோ பரதேசியோ, பண்டாரமோ என்று வடிவாய்ப்  பார்த்து அட இது சாமி என்று ஐயம் தெளிந்து மெய்வணங்கி  வரவேண்டும் சாமி வரவேண்டும், நீங்கள் வந்தது நாங்கள் செய்த புண்ணியம்  போன ஆடி அமாவாசைக்கு சோறு போடுவான் எண்டால் ஒரு சாமியையும் கண்ணில காணக் கிடைக்கேல்ல என்கிறாள். இந்த அமர்க்களத்தில் பர்வதத்தின் பேத்தி உள்ளிருந்து வந்து யார் பாட்டி என்று கேட்க, சாமியும் தண்டம் உயர்த்தி  எம்பெருமான் பைரவரின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் இல்லத்துக்கும் குடும்பத்துக்கும் உண்டு. மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லுது. அந்தப் பெண்ணும் அட சாமிக்கு என்பேரு எல்லாம் தெரிஞ்சிருக்கு என்று ஆச்சரியப்பட்டு, ஓம் சாமி இப்ப எட்டாவதாய் உண்டாகியிருக்கேன் சாமி வாங்கோ வந்து திண்ணையில இருங்கோ என்று உள்ளே சென்று ஒரு மான்தோல் எடுத்துவந்து திண்ணையில் போடுகிறாள். சாமியும் அதில் இருந்துகொண்டு பிள்ளை ஒரு செம்பில கொஞ்சம் துத்தம் கொண்டுவானை, நெடுந்தொலைவு நடந்து வாறன் தாகமாய் இருக்கு என்று சொல்லிவிட்டு, தனது பாரமான தூளிப்பையை பக்குவமாய் திண்ணையில் வைத்துவிட்டு தானும் கால்களை சம்மணம் கட்டி இருந்து கண்களை மூடி மோனத்தில் அமருது. பர்வதாக கிழவியும் வந்து பவ்யமாக சாமி இன்று இங்குதான் மத்திய போஜனம் செய்ய வேண்டும் என்று பயபக்தியுடன் விண்ணப்பிக்கின்றாள்.

"ஏடுடைய மலரவனின் ஏறுதலை கிள்ளியவன் இறுமாப் படக்குமரசே" சாமி மெதுவாய் ஸ்தோத்திரம் சொல்லுது.

பயணம் தொடரும்.....!

 

 

 

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாமி படுக்குது இருக்குது வருகுது என்று பெரிய சாமி குத்தமாக போவுது.
தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சுப்போட்டு பனங்காட்டுவழியாகவும் தோட்டத்திற்குள்ளாலயும் வரேக்க பனம்பழங்களையும் மரக்கறி முருங்கைக்காய் எல்லாம் பதுக்கிக் கொண்டு போகப்போறார் ஆக்கும் என்று நினைச்சன்.......உண்மையிலேயே சாமிகுத்தமாப்போப்போகுதுtw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருச்சாமி!
பயமாய் இருக்கப்பா...:grin:
தொடருவோம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஜீவன் சிவா said:

1lj3gr.jpg

 

இந்தாள் சுச்சி லீக்க்சுக்கு  அலையுது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருச்சாமி... தொடர்கிறது !

3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். 

காலை 09 : 00 மணி.

   அந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில் சற்றுத் தள்ளி இருந்த பூவரசமர நிழலில் சிலர் கூடி நிக்கிறார்கள். சூசை சயிக்கிளில் மீன் கொண்டுவாற நேரம்.அங்கு நின்ற காமாட்சி மற்றவர்களைப் பார்த்து பர்வதம் வீட்டில் ஒரு சாமி வந்திருப்பதைத் தான் பார்த்ததாக மெதுவாய் சொல்கிறாள்.அது சிறிது நேரத்தில் அந்தக் கிராமம் முழுக்க காதோடு காதாகப் பரவுகின்றது. அதேநேரம் சூசையும் அந்த பல்பு போல இருக்கும் ஹாரனை பீப்...பீப் என கையால் அமுக்கி அமுக்கிக் கொண்டு அங்குவந்து இறங்குகின்றான். எல்லோரும் மீன் பெட்டிக்குள்ளிருந்து தங்களுக்கு இசைவான மீன்கள் , றால்கள், நண்டு கணவாய், சுறா என்று பொறுக்கி எடுக்கினம். செண்பகமும் மோகனாவும் கதைத்துக் கொண்டே வந்து சேருகினம்.

காமாட்சி : சூசை நீ ஊரெல்லாம் நல்ல மீன்களை வித்துப் போட்டு உள்ள நாறல் மீனெல்லாத்தையும் கடைசில கட்டியடிக்க இங்கு கொண்டு வாராய்.

சூசை: இல்லையக்கா உங்களுக்கு நான் அப்படி செய்வேனா. இப்பதான் கடற்கரையிலே ஏலம் எடுத்துக் கொண்டு இங்கால வாறன். அவரவர் முன்பே பத்தியம் அதுக்கு இதுக்கு என்று சொல்லி வைத்த மீன்களைத் தனியாக எடுத்து அவரவர்களிடம் கொடுத்து சிலருக்கு கொப்பியில் கணக்கும் எழுதிக் கொள்கிறான். காசு கொடுத்தவர்களுக்கு மிச்சத்தை தனது சாரத்தின் சண்டிக்கட்டை தூக்கி உள்ளிருந்த காற்சட்டைப் பையில் இருந்து காசை எண்ணிக் கொடுக்கிறான். எல்லோரும் கலைந்து போனபின் செண்பகமும் அவனுடன் உரசினாப் போல் நின்றுகொண்டு மீன்கள் எடுக்க சூசையும் தனியாக வைத்திருந்த நல்ல மீன்களைப்  பெட்டியில் போடுகின்றான். அவளும் எடுத்துக் கொண்டு கிளம்ப அவனும் "செம்பு" இன்னும் இரண்டு தெருவுக்குப் போட்டு வீட்டுக்கு வாறன் என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அந்த பல்பு ஹாரனை அமுக்கிக் கொண்டே சயிக்கிளில் ஏறிப் போகிறான்.

(கிராமத்தைக் கொஞ்சம் பார்ப்போம். அது ஒரு மிகச் சிறிய கிராமம்.சுமார் ஐம்பது வீடுகள் வரை இருக்கும்.  ஒரு சில வீடுகளே ஓடு போட்டதும் பெரிய வீடுகளுமாய் இருக்கின்றன.கிராம எல்லையில் ஓரிரு கோயில் குளங்கள் இருக்கின்றன. ஆனால் நல்ல செழிப்பான கிராமம். இயற்கை வளத்தை அள்ளிக் கொடுத்திருக்கு. அது அங்குள்ள ஆண்களிடம் வலிமையாகவும் பெண்களிடம் வனப்பாகவும் வாளிப்பாகவும் குவிந்து கிடக்கு. ஆங்காங்கு ஊருக்குள் நடக்கும் கொண்டாட்டங்கள் திருவிழாக்களுடன் சேர்ந்து கிசுகிசுக்களும், கசமுசாக்களும் தாராளமாக நடக்கும். எல்லாம் ஓரிரு வாரந்தான். பின்பு பழையபடி வேறொரு கிசுகிசு கசமுசா. ஒரு வெள்ளந்தியான கிராமம்.)

சாமி திண்ணையில் தியானத்தில் இருக்குது. அந்த வீட்டுக்காரர் கதிரவேலு படலையை சயிக்கிளை விட்டு இறங்கி ஸ்ராண்ட் போட்டு விட்டு உள்ளே வாரார்.வாசலில் கிளுவமர நிழலில் திருகணியில் இருந்த மண்பானையில் இருந்து கிண்ணத்தில் நீர் மொண்டு அண்ணாந்து குடித்து விட்டு உள்ளேபோய் சற்று நேரத்தில் வெளியே வந்து எதிர் திண்ணையில் அமர்கிறார். சாமியும் அரவம் கேட்டு கண்திறந்து பார்க்குது. கதிவேழு குசலம் விசாரிக்கிறார்.

கதிரவேலு: கும்புடுறேன் சாமி. சாமியை எப்படிக் கூப்பிடுறது. 

சாமி: ஒரு தெய்வீகப் புண்ணகை சிந்தி சொல்லுது. என்நாமம் "துருச்சாமி" . ( சாமியின் பூர்விகப் பெயர் துரைச்சாமி. அவரது பால்ய காலத்தில் அவருடன் இருந்த கஞ்சாச்சாமி, அபின்சாமி,கள்ளுச்சாமி  எல்லாம் அவரை துருச்சாமி ...துருச்சாமி  என்று அழைத்து இப்ப சாமியே தன்நாமம் கெட்டு, தானே மறந்து துருச்சாமியாய் கிராம வலம் வருகுது).

கதிரவேலு: சாமியின் பூர்வீகம் அறியலாமோ.

சாமி: மூச்சை  நன்றாக இழுத்து வீட்டுக் கொண்டு  ம்.... அது ஒரு ஆடி அமாவாசை. அறியாப் பருவத்தில்  கீரிமலையில் நீராடப்  போய் அங்கு கூட்டத்தில் ஐயா அம்மாவைத் தவறவிட்டு அங்கிருந்த சாமிமார்களுடன் அலைந்து,திரிந்து கால்நடையாய் கதிரமலை சென்று மாணிக்க கங்கையில் மூழ்கி மாங்குளத்தில் எழுந்து பின் இப்படியே கிராமம் கிராமமாய் அலைந்து ம் ....! சாமி மோனத் தவத்தில்  மூழ்குது.

"கூடுமறை யட்சரக் கோணமெல்லாம் காவல் கொண்டண்டம் பூத்த தேவே"

அது ஒரு நாற்சார் வீடு. உள்ளே அடுக்களையில் பெண்டுகள் சிலர் சேர்ந்து சமையல் செய்ய தொடங்கிட்டினம். சிலர் நெல்லு எடுத்து வந்து மரஉரலில் போட்டு உலக்கையால் கைமாற்றி குத்தினம். ஒருவர் இருவராய் பலர் வாசலாலும் பின் வளவாலும் வந்து சேருகினம். சாமியும் திண்ணை விட்டு வெளியே வந்து முற்றத்து மாவின்கீழ் நிக்க பர்வதத்தின் பேரன் கண்ணன் ஒரு வாங்கை எடுத்து வந்து அங்கு வைக்கிறான்.சாமியும் அதில் மான்தோல் போட்டு அமருகின்றது. மறக்காமல் தூளிப் பையையும் கையேடு எடுத்து வந்து பக்கத்தில் வைத்திருக்கு.

கதிரவேலுவும் மீண்டும் சயிக்கிளில் வெளியே போகிறார்.

செண்பகம் மீனோடு வந்து படலையைத் திறக்க சயிக்கிளில் வந்த கதிரவேலுவும் உள்ளே சயிக்கிளை நிப்பாட்டிப் போட்டு செண்பகத்திடம் எனக்கு கொஞ்சம் வாழை இலை வேணும் செம்பு  என்கிறான்.

செண்பகம்: என்ன கதிரு உனக்கில்லாததா! தேவையானதை நீயே எடுத்துக்கொள். குருத்திலை எல்லாம் விரிஞ்சு கிடக்கு  காத்தில என்கிறாள்.

கதிரும் கத்தியுடன் வளவுக்குள் சென்று நல்ல இலைகளாய்ப் பார்த்து பார்த்து வெட்டுகிறான். மீனை சட்டிக்குள் வைத்து மூடிவிட்டு வந்த செண்பகம் என்ன கதிர் உன் வீட்டுக்கு யாரோ சாமி வந்திருக்காமே !

கதிரவேலு: ஓம் செம்பு. அதுதான் கானபேர் வருகினம், மத்தியானம் சோறு ஆக்கிப் போடுறம் நீயும் வா என்ன.

செண்பகம்: சும்மா போ கதிரு, உன் பொஞ்சாதி பொன்மணி பார்க்கிற பார்வையே சரியில்லை. ( பழனி வேற்ரூருக்கு  வேலைக்கு போன இடத்தில் அவனுடன் பழக்கமாகி செண்பகம் அவனது ஆசைநாயகியாய் இங்கு வந்துவிட்டாள். ஊருக்குள் கிசுகிசு இல்லாத நேரங்களில் செண்பகம்தான் அவள்). என்று சொல்லிக் கொண்டே அதோ அந்த மொந்தன் குலையை வெட்டி ரெண்டு காயை எனக்குத் தந்திட்டு மிச்ச  இலையையும் கொலையையும் நீ எடுத்துக் கொண்டுபோ என்கிறாள்.

இந்நேரம் வாசலில் வந்த சூசை வேலியால் எட்டிப்  பார்த்துவிட்டு  யாரோ நிக்கினம் போல என்று அப்பால் போகின்றான்.

கதிரும் அதை வெட்டி அவளுக்கும் குடுத்து விட்டு வாழை நாரால் எல்லாத்தையும் சயிக்கிளில் கட்டி விட்டுத் திரும்ப நில்லு கதிரு இந்தா இந்த ரெண்டு பொத்தியும் உனக்குத்தான் என்று வாளைப் பொத்தி இரண்டைக் கொடுக்கிறாள்.கதிரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு போகிறான்.

 

சாமி வாங்கில் இருந்து அங்கிருந்த பிள்ளைகள் பெரியவர்களுக்கு சில பல சிரிப்புக்கு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு ஒரு பெண்மணி ஒரு பையனைக் கூட்டி வந்து சாமி இவனுக்கு மாலையில் இரவில் காச்சலாய்க் கிடக்கு. உன் கையாள கொஞ்சம் துண்ணுறு பூசிவிடு. சாமியும் விபூதிப் பொட்டலத்தை எடுத்து சிறிது விபூதியை அள்ளி இடது உள்ளங் கையில் பரப்பி ஒரு குச்சியால் ஏதோ யந்திரம் கீறி மந்திரிச்சு அந்தப் பையனது உச்சியிலும் நெத்தியிலும் பூசி சொடக்குப் போட்டு அனுப்பி வைக்குது.  மற்றவர்களுக்கும் திருநீறு தந்து குழந்தைகளுக்கு தன்கையாலே பூசி விடுகுது. அந்தத் திருநீறும் ஒரு தனித்துவமான வாசனை வீசுது.

வேறொரு பெண் கையில் ஒருமாதக் குழந்தையுடன் தனது மாமியாரோடு வந்திருக்கு. அவள் சாமியிடம் சாமி நீங்கள்தான் என்பிள்ளைக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி சாமியின் காலடியில் குழந்தைய கிடத்துகிறாள். சாமியும் பிள்ளையை அல்லி எடுக்க அது சாமியின் மார்பில் "உச்சா" போகின்றது. அப்பெண்ணும் அவசரமாய் தன் முந்தானையை எடுத்து சாமியின் மார்பைத் துடைக்கப் போக சாமி அதை கையால் தடுத்து தனது சால்வையால் துடைத்துவிட்டு விபூதி எடுத்து மாமிக்கும் தாய்க்கும் பிள்ளைக்கும் பூசிவிட அங்கிருந்த பர்வதாக கிழவியும் சின்னப் பிள்ளை யாரிடம் உச்சா போகுதோ அவர்களிடம் உறவு அதிகம் என்று சொல்லுறாள். 

சாமியும் அந்தக் குழந்தையின் குஞ்சை பாசத்துடன் தடவிக் கொண்டே அதன் காதில் மெல்ல குஞ்சிதபாதம்... குஞ்சிதபாதம்...குஞ்சிதபாதம் என்று மூன்று முறை சொல்லிவிட்டு கையை ஆகாயத்தில் ஆட்டி ஒரு சங்கிலி எடுத்து அதன் கழுத்தில் போட எல்லோரும் வியக்கின்றார்கள். பின் துருச்சாமிக்கு அரோகரா என்றும், குஞ்சிதபாதம் வாழ்க என்றும் கோரஸ்சாய் கோஷம் போடுகின்றார்கள். சாமியும் பிள்ளையைத் தாயிடம் குடுத்து குளிக்கும்போது மறக்காமல் சங்கிலியைக் கழட்டிவிடு , தண்ணி பட்டால் சாயம் போய்விடும் என்று சொல்லுது. எல்லோரும் போடும் சத்தத்தில் அது சக்தி போய்விடும் என்று அவளுக்கு விளங்குது. அப்படியே செய்கிறேன் சாமி என்று சொல்கிறாள். அவர்களுக்கு தண்டம் தூக்கி ஆசிவழங்கி அனுப்புது. அந்தப் பெண்ணும் திரும்பத் திரும்ப சாமியைப் பார்த்துக் கொண்டே செல்லும்போது மங்கலாய் பழைய நினைவொன்று பொறி தட்டுது.

போனவருடமளவில் தனது மாமியார் தன்னிடம் கலியாணம் கட்டி நாலு வருடமாகுது இன்னும் ஒரு புள்ளை பெறக் காணேல்ல  என்று திட்டிப்  பேசி மகனிடம் சொல்லி அவளை அயல் கிராமத்திலிருக்கும் அம்மா வீட்டுக்கு அனுப்பியதும், அடுத்தடுத்த நாள்  இரவு தான் தோட்டத்துக்குள் இருந்து வரப்பில வரும்போது யாரோ தன்னை இழுத்து விழுத்தியதும் அவனிடம் இருந்த தண்டத்துக்கு பயந்து தான் பேசாமல் இருக்க அப்போதும் இதே மாதிரி வாசனைத் திருநீறு தன்னை மூடியதும், அதையும் வீட்டில சொல்லப் பயந்து பேசாமல் இருக்க அடுத்தடுத்து வந்த இரண்டு மாதத்தில் தான் சத்தி எடுக்க இது மசக்கை என்டு கண்டு புருஷன் வீட்டுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வாடகைக்கு சிவதாற்ற காரோடு வந்து தன்னைத் தாங்காத குறையாய் இங்கு அழைத்து வந்ததும்,பின் சீராட்டிப் பாராட்டி இந்தக் குஞ்சிதபாதம் பிறந்ததும் நினைவில் வர "இவர் அவனாய் இருக்குமோ என ஐயப்பட்டு அவர் கையில் தண்டத்தையும் கண்டு அவன்தான் இவர்" என்று தெளிந்து மாமியிடம் குழந்தையைக் குடுத்துவிட்டு சற்று நில்லுங்கோ மாமி வாறன் என்று திரும்பிப் போய் சில ரூபாய் தாள்களும் கையில் கிடந்த காப்பையும் கழட்டி சாமியின் மடியில் போட்டு வாஞ்சையுடன் அவர் பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு  போகிறாள்.

அற்புதங்கள் தொடரும்....!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி அண்ணை வெள்ளிக்கிழமை அதுவுமா இந்த அற்புதத்தை போட்டுவிட்டீங்களா இண்டைக்கு யாழ் ரெண்டுபடப்போகுது...:):):):)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bildergebnis für old model rubber horn  

சுவி... குறிப்பிட்ட   "மீன் கோன்"  :grin:

சுவியரின்.... ஆறு காண்டங்களில், 
முதல் வந்த மூன்று காண்டத்தை, நேற்று வாசித்து விட்ட போதும்.... 
அடுத்த காண்டத்தையும், வாசித்து விட்டு...  பதில் சொல்வோம் என்று, ஆற முதல்....
அடுத்த காண்டம், இவ்வளவு கெதியில் வந்ததற்கு, முதல் நன்றி.

//சாமியும் அந்தக் குழந்தையின் குஞ்சை பாசத்துடன் தடவிக் கொண்டே அதன் காதில் மெல்ல குஞ்சிதபாதம்... குஞ்சிதபாதம்...குஞ்சிதபாதம் என்று மூன்று முறை சொல்லிவிட்டு கையை ஆகாயத்தில் ஆட்டி ஒரு சங்கிலி எடுத்து அதன் கழுத்தில் போட எல்லோரும் வியக்கின்றார்கள்.//    சுவியர்  கதையை... கொண்டு போன இடத்தில் வந்த, Turning பாயிண்டு இதுதான்..... tw_smiley: :grin: :D:

இரண்டு காண்டங்களிலிலும்... நாம் மறந்த,  யாழ்ப்பாண சொல்லாடலை கையாண்டு இருப்பது, என்னை  அந்தப்  பதிவுடன், ஒன்று போகச்  செய்தது சிறப்பு. இது பிரதேச வாதம் அல்ல. இப்படியான பிறந்த பிரதேத்து  எழுத்து நடையில்...  ரதி, ராஜவன்னியன்,   முனிவர் ஜீ, அக்கினியஷ்த்திரா, புரட்சிகர தமிழ்தேசியன் போன்ற நண்பர்கள் எழுதியிருந்தாலும்  விரும்பி  வாசித்திருப்பேன். அழகிய  தமிழை....  எந்த பிரதேசத்தில் இருந்து  கேட்டாலும்,  இனிமையே..... :)

Posted

உந்த துருச்சாமிக்கு சீடனாக போக ஆசை. வழி சொல்லுங்கோ சுவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/03/2017 at 11:23 PM, suvy said:

இந்த அமர்க்களத்தில் பர்வதத்தின் பேத்தி உள்ளிருந்து வந்து யார் பாட்டி என்று கேட்க, சாமியும் தண்டம் உயர்த்தி  எம்பெருமான் பைரவரின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் இல்லத்துக்கும் குடும்பத்துக்கும் உண்டு. மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லுது. அந்தப் பெண்ணும் அட சாமிக்கு என்பேரு எல்லாம் தெரிஞ்சிருக்கு என்று ஆச்சரியப்பட்டு, ஓம் சாமி இப்ப எட்டாவதாய் உண்டாகியிருக்கேன் சாமி வாங்கோ வந்து திண்ணையில இருங்கோ என்று உள்ளே சென்று ஒரு மான்தோல் எடுத்துவந்து திண்ணையில் போடுகிறாள்.

சுவியர் ...இந்த இடத்தில தான்...நீங்கள் அடையாளம் பதித்திருக்கின்றீர்கள்!

வாசிக்க மிகவும் நன்றாக...இயல்பாக உள்ளது!

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேலியும் கிண்டலும் மறைமுக  இரடடை அர்த்தங்களுடனும்   யாழ் கள மன்னர்களுக்கு ஆனந்தமாய் போகிறது தொடர்.  நல்ல  கதை சொல்லும்  திறமை இதனை நாளாய் எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்  i பாராட்டுக்கள் 

Posted
12 hours ago, suvy said:

அவனிடம் இருந்த தண்டத்துக்கு பயந்து தான் பேசாமல் இருக்க அப்போதும் இதே மாதிரி வாசனைத் திருநீறு தன்னை மூடியதும்

யோவ் சுவியர்
அந்த தண்டம்தானே இந்த தண்டம் ....:grin:

சுவியற்ற ரியாக்சன் இப்படி இருக்குமோ?

 

 

 

 

தொடருங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பார்ந்த உறவுகளே, என் எழுத்தின் எழுத்துக்களே, உங்களது ஊக்கங்கள் என்னை மென் மேலும் உற்சாகப் படுத்துகின்றன. என்ன ஒன்று நீங்கள் துருச்சாமிக்கு  பின்னால் வருகின்றீர்கள், நான் சற்று முன்னால் போகின்றேன். அவ்வளவுதான். சாமி அடுத்து என்ன செய்யும் என்பதைக் காண நானும் உங்களைப்போல் ஆவலோடுதான் இருக்கின்றேன். தொடர்ந்து வாருங்கள். பயணிப்போம்.....!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருச்சாமியின் அற்புதங்கள் தொடர்கிறது...!

இதுவரை சாமியின் தூளிப்பையில் மயங்கிக் கிடந்த கோழியொன்று சோம்பல் முறித்து மெல்ல எழுந்து "ஹக்" என்று விக்கல் எடுக்க சாமி உஷாராகி இடதுகையால் கோழியின் கழுத்தை பையுடன் தண்டத்தோடும் சேர்த்துப் அமுக்கிப் பிடிக்குது.அப்போது ஒருதாய் தனது மகளைக் கூட்டி வந்து பிள்ளை சாமிண்ட காலில நல்லா விழுந்து கும்பிடன என்று சொல்லி அவரின் காலடியில் தள்ளிவிட்டு  சாமி ! போனமாதம் அந்தச் சங்கிலிக்கு கருப்பன் கோயில் பக்கம் செம்மறியாடுகளைச் சாய்த்துக் கொண்டு போனவளெனை. அங்கு எண்ணத்தைக் கண்டு பயந்தாளோ  தெரியாது நல்லாய் பயப்பிடுகிறாள். எங்கட கோயில் பூசாரியும் மந்திரிச்சு நூல் காட்டினர். ம்கூம் ஒன்றுக்கும் சரிவரேல்லை என்று சொல்லுறா. ஏதாவது காத்து கருப்பு பிடிச்சிட்டுதுவோ என்னமோ நீங்கள் தான் உங்கட கையில இருக்கும் தண்டத்தால ரெண்டு போட்டு உதை ஒட்டோனும் என்கிறாள். 

சாமியும் கோழியைப் பிடித்த கையேடு எழுந்து நிக்குது. அந்த அம்மாவும் விடாமல் சாமி உந்தத் தண்டத்தால அடித்து என்ர பிள்ளையை சுகப்படுத்தி விடன. சாமியோ தண்டத்தை எடுக்க முடியாமல் தடுமாறுது. காலடியில் கிடந்த பெண்ணும் என்ன சாமி இன்னும் தனக்கு தண்டத்தால அடிக்கேல்ல என்று நிமிர்ந்து பார்த்து "அம்மோவ்" என்று அலற உள்ளிருந்த கோழி பயப்பிராந்தியில் பின்புறத்தை பையால் கொஞ்சம் அரக்கி  அவள் முகத்தில் ஆய்போகுது.  அதே நேரம்  மாமரத்தில் இருந்த காகம் ஒன்று கா... கா என்று காத்திக் கொண்டு பறக்க அங்கிருந்து ஒரு  துண்டு அவளுக்குமேல விழுகுது. அதைப் பார்த்த மாத்திரத்தில் சாமியும் "அட பைரவா" படியில போட்ட கௌபீனத்தை கட்ட மறந்திட்டன் என்று சுதாகரித்துக் கொண்டு திருநீறை எடுத்து அப்பெண்ணின் மூஞ்சியில் அடித்து தண்டத்தைக் கைமாற்றி தலையில் ரண்டு போட்டு  எழுப்பி விட்டுது. எழுந்த அந்தப் பெண்ணின் முகத்தில் அத்தனை பிரகாசமும் தெளிவும் குடிகொண்டது. இதுவரை இல்லாத வெட்கமும் ஆட்கொண்டது தன்னை எல்லோரும் பார்க்கிறார்கள் என்று. சாமியும் தாயைப் பார்த்து பேய் போட்டுது, இனி எந்தப் பேய்க்கும் இவள் பயப்பட மாட்டாள், கூட்டிக் கொண்டுபோ என்று சொல்லி விடுது. 

அப்ப அங்கிருந்த ராசப்பு கேட்கிறான்  சாமி ! அந்தப் பேய் இப்ப எங்கே போட்டுது என்று.  அட , அந்தப் பேய் இப்ப சுடலைக்கு அருகில் நிக்கும் மொட்டைப் பானையில் போய் குந்தியிருக்கு. மத்தியானம், இரவில அங்கு யாரும் போகக்கூடாது , கவனம் என்று சாமி சொல்லுது. அப்போது ஊரில அதிகமான பனைகள் ஷெல் விழுந்து மொட்டையாய்த்தான் நிக்குது. அப்போது பர்வதத்தின் மகளும் கதிரவேலுவின் மனைவியுமான பொன்மணி அங்கு வந்து சாமி நீங்கள் சைவம்தான் சாப்பிடுவியளா என்று கேட்க சாமி அவசரமாக அதை மறுத்து நான் பைரவ உபாசகன் அம்மா என்கிறார். அங்கிருந்த துடுக்கான பெட்டை ஒன்று எழுந்து  சாமி நீங்கள் விஜய் ரசிகரா என்று கேட்க எல்லோரும் சிரிக்கினம். பொன்மணி அவர்களை அதட்டி விட்டு எல்லோரும் சற்று தள்ளிப் போய் விளையாடுங்கோ, சாமி கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் என்கிறாள்.

சாமியும் அங்கிருந்து எழுந்துபோய் எட்ட நின்ற கண்ணனிடம் பையில் இருந்த கோழியைக் குடுத்து காதில் எதோ சொல்லி விட்டு வருகுது. கண்ணனும் கோழியோடு மண்வெட்டியையும் எடுத்துக் கொண்டு பின்னாலே கிணத்தடிக்குப் போகின்றான். அங்கு அன்னமும் மங்களம் குடுத்துவிட்ட ரெண்டு கோழியையும் உரிக்க கொண்டு வருகிறாள். சாமி திண்ணைக்கு வந்து பெண்மணியை அழைத்து இந்தா  பிள்ளை இதுகளையும் எடுத்துக் கொண்டு போய் சேர்த்து சமைத்து வந்திருக்கிற எல்லோருக்கும் பரிமாறு என்று சொல்லி பையில் இருந்து ஒவ்வொன்றாய் எடுத்துக் குடுக்குது. அதில் அத்தனை காய்கறிகள், அரிசி தேங்காய் என்று எல்லாம் இருக்கு.சாமிக்கு எல்லோரும் தாராளமாய் குடுத்திருக்கினம் போல என்று பெண்மணியும் மங்களமும் அவற்றை முந்தானையில் எடுத்துக் கட்டிக் கொண்டு உள்ளே போகின்றார்கள். சாமியும் திண்ணையில் சற்று சாய்கின்றது. "தேடுநிதி மனைமக்கள் சிந்தனை செல்வசுகம் சிறியேற்கு இரங்கி அருள்வாய் " மனசுக்குள் ஸ்தோத்திரம் சொல்லுது.

அருள் தொடரும்...!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருச்சாமி தொடர்கிறது....!

4) நினைவேந்தல் படலம்.....!

(இந்தப் படலமானது இன்று காலையில் இருந்து சாமியின் பாதயாத்திரையில் நடந்த, நடந்தபின் விளைவுகளைக் கூறுவது).

---  கோவில் குளத்தில் முழுகி எழுந்த சாமி படிக்கட்டில் கோவணத்தை வைத்துவிட்டு மறந்து விட்டது. அன்று காலை அங்கு வந்த குருக்கள் குளத்துக்குள் இறங்கி முங்கி குளிக்கின்றார். அப்போது அவர் கையில் தற்செயலாய் மாட்டிய மீனை தூக்கி எறிய அது அந்த கோவணத்தில் விழுந்து துடிக்க மரத்தில் இருந்து அதை பார்த்த காகம் சடாரென்று கீழிறங்கி அப்படியே தூக்கிக் கொண்டு பறக்கின்றது.அப்போது இந்தக் கோவணமும் அதன் கால்களில் சிக்குப்பட்டு பறக்கின்றது. அந்தக் காகம் நேராக வந்து மங்களம் வீட்டு மாமரத்தில் இருந்து மீனைச் சாப்பிடும்போதுதான் சாமியின் காலடியில் இருந்த பெண் அலற காகம் எழுந்து பறக்கின்றது, துண்டு கீழே விழுகின்றது.....!

---  அங்கு மூன்று தேங்காய் உரித்தெடுத்து ஒன்றைக் கோயிலில் அடித்து விட்டு இரண்டைக் கொண்டு வந்திட்டுது.....!

---  மடப்பள்ளியைத் திறந்து அரிசியை எடுத்துக் கொண்டு போனபின், குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு வந்த குருக்கள் தரையில் அரிசி எல்லாம் சிந்திக் கிடக்கக் கண்டு மற்ற ஐயரைத் திட்டிக் கொண்டு சுத்தப் படுத்துகின்றார்....!

---  முதலாவது பனங்கூடலுக்குள் வந்ததும் அங்கு இருந்த கள்ளு  முட்டியைக் கண்டு அதை கமண்டலத்தில் ஊற்றிக் கொண்டு தண்ணியை முட்டியில் மாற்றிவிட்டு வருகுது.....!

---  வாழைத்தோப்பில் வரும்போது காய்களையும் பொத்திகளையும் முறித்துக் கொண்டு வருகுது. தண்ணி இறைப்பைக்கு வந்த செல்லையா வாழைக்காய்களும் பொத்திகளையும் காணாது பெண்டிலைத் திட்டுகின்றார். இவள் மடைச்சி  இன்னும் ரெண்டு சீப்பு வரமுதல் பூவை உடைச்சுக் கொண்டு போட்டாள்....! 

---  பின்பு காய்கறித் தோட்டத்தில் எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பறித்துக் கொண்டு வருகுது. காலையில் அங்கு வந்து பொன்னம்மா கீழே கிடந்த காய்களையும் பிஞ்ச்சுகளையும் பார்த்து விட்டு புருசனைக் கூப்பிடுகிறாள், எனை இஞ்ச வந்து பாரணை தோட்டத்துக்குள்ள  மாடு கீடு வந்திட்டுது போல....!

---  சாமி பிறகு கண்ணாத்தாள் வளவால வரேக்க கரப்புக்குள் குஞ்சுகளுடன் இருந்த கோழியைப் பிடித்து அது சத்தம்போடாமல் மயங்கும்வரை அமுக்கிவிட்டு பையில் போட்டுக் கொண்டு, அங்கால கிடந்த  முருங்கையிலும் நாலு காய் பறித்துக் கொண்டு வருகுது. விடிந்ததும் கோழியைத் திறந்துவிட பேரனுடன் வந்த கண்ணாத்தாள் கரப்புக்கு வெளில சில குஞ்சுகள் நிக்கிறதைப் பார்த்து கரப்பைத் திறந்தால் கோழியைக் காணேல்ல. மரநாய் ஏதாவது பிடிசிச்சுக் கொண்டு போட்டுதோ என்று ஒப்பாரி வைக்கிறாள். "பத்துப் பாலனையியும் பரிதவிக்க விட்டு  எந்த எமன் உன்னை எருமையில கொண்டு போனானோ ங் ...ங்கா ...ஆ .கொண்டைச் சேவலுடன் குலாவிக் கொண்டு என்னை விட்டு நீ எடுபட்டுப் போனியோ ங்.... ங்கா....ஆ...மூக்கை சிந்தி முந்தானையால துடைக்கிறாள்..!!"பின்பு வரட்டும் கழுதை முறிச்சு சட்டிக்க வைக்கிறானோ இல்லையோ பார். உடனே பேரன் பாட்டி அது கழுதையில்லை கோழி என்று எடுத்துக் குடுக்குது. ஓம் இவர் வந்திட்டார் எனக்கு பாடம் சொல்ல. என்று செல்லமாய் திட்டிக் கொண்டு போறாள். பாவம் அது அவளின் கையாலேயே  சட்டிக்குள்ளேதான் பிறகு வேகுது. அங்கால கடவையில் முருங்கைக் காய்களும் பூவும் பிஞ்சுமாய் கொட்டுண்டு கிடக்கு.

---  சாமி அடுத்து பனங்காட்டுக்குள்ளால் வருகுது. அன்னமுன்னாவில தொங்கிய மஞ்சள் பையை பார்க்குது. பக்கத்தில் யாரும் இல்லை. உள்ளே ஒரு போத்தல் கசிப்பு இருக்கு, அதையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டு வருகுது. அதன் பிறகு பற்றைக்குள் வெளிக்குப் போட்டுவந்த சின்னப்பு  அன்னமுன்னாவில் கொழுவி பையையும் போத்தலையும் காணாது அங்கும் இங்கும் ஓடி போதையில் தள்ளாடித் தள்ளாடித் தேடுது.

"உவன் சின்ராசிட்ட ஒண்டரைப் போத்தல் கசிப்பு வாங்கி அரைப் போத்தல் அங்கை குடிச்சிட்டன். பிறகு ஒரு போத்தலை பைக்குள்ளை வைத்துக் கொண்டு மேற்குப் பக்கத்தால இஞ்ச வந்தன். வயித்தைக் கலக்கிச்சுது. அன்னமுன்னாவில பையைக் கொழுவிவிட்டு பத்தைக்குள்ள வெளிக்குப் போய் அப்படியே துரவில  அடிக்கழுவிட்டு வந்து பார்த்தால் கசிப்போடு பையைக் காணேல்ல."

போதையில் இருந்த சின்னப்பு இதையே சொல்லி சொல்லி மேற்கால  இருந்து நடந்து வாறது அன்னமுன்னாவில வெறுங்கையை கொலுவிறது, பத்தைக்குள்ள ஓடுறது பின் வாறது ,மீண்டும் முதலில் இருந்து இப்படியே ஆடிக் கொண்டு நிக்குது.

(இப்போது உங்களுக்கு பல குழப்பங்கள் தீர்ந்திருக்கும் இல்லையா. ஆங்காங்கே முன்ன பின்ன இருந்தாலும் லாஜிக் பார்க்காமல் சாமியுடன் பயணிக்கவும்).

பயணம் தொடரும்.....!

 

 

Posted
3 hours ago, suvy said:

பின்பு வரட்டும் கழுதை முறிச்சு சட்டிக்க வைக்கிறானோ இல்லையோ பார். உடனே பேரன் பாட்டி அது கழுதையில்லை கோழி என்று எடுத்துக் குடுக்குது. ஓம் இவர் வந்திட்டார் எனக்கு பாடம் சொல்ல. என்று செல்லமாய் திட்டிக் கொண்டு போறாள்.

இது சுவியர் :91_thumbsup:

தொடருங்கள் - பயணிப்போம் 

Today - "No" pachchai

Tomorrow - "Yes" pachchai :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவியர் நம்மியிருந்த துருச்சாமி கள்ளச்சாமியாகிட்டுதே.

நன்றாக இருக்கிறது தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவியண்ணா எங்கேயண்ணா இத்தனைநாள் இருந்தியள். தொடருங்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருச்சாமி தொடர்கிறது.....!

5) பந்தி போஜனப் படலம்....!

அடுக்களையில் அஞ்சாறு பெண்கள் நன்றாக சப்பாணி கட்டிக் கொண்டு இருந்து காய்கறி நறுக்கிக் கொண்டு இருக்கினம். அது ஒரு பெரிய நாற்சார் வீடு என்ற படியால் நிறைய இடமும் வசதியும் இருக்கு. செல்லையாவின் மனைவி செல்லாச்சியும் அங்கிருந்த வாழைக்காய்களையும் பொத்திகளையும் பார்த்து எங்கட தோட்டத்து காய்களும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே வெட்டி வைக்கிறாள். பொன்னாச்சியும்  ஓமடி  காய்கறிகளும் அப்படியேதான் இருக்கு என்று கூடமாட வேலை செய்கிறாள்.

பின் வளவில் இருந்த கண்ணன் மூன்று கோழிகளையும் உரித்து அளவளவாய் வெட்டி இரண்டு சட்டிகளில் வைத்து விட்டு செட்டைகளைத்  தாக்க பக்கத்தில் பள்ளம் தோண்டுகிறான். அப்ப பெட்டை  அன்னம் அடுத்த வீட்டு வளவுக்குள்ளால கடந்து அங்கு வருகிறாள்.அவள் குழந்தைப் பருவம் கடந்து யௌவனப் பருவத்தில் இருக்கின்றாள். அவளிடம் கண்ணன் எடி அன்னம் இந்தக் கறிச்சட்டிகளைக் கொண்டுபோய் அம்மாவிட்ட குடுத்திட்டு சவர்க்காரம் எடுத்துக் கொண்டு வாடி என்கிறான். அன்னமும் அவன் தாக்க வைத்திருந்த கோழிச்செட்டைகளை பார்த்துவிட்டு இந்த மண்ணிறச் செட்டைக் கோழியை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே  என்று யோசித்து அட எங்கட கண்ணாத்தா ஆச்சியின் குஞ்ச்சுகளிண்ட தாய்க்கோழி, அன்னைக்கு கூட குஞ்சுகளைப் பிராந்து தூக்காமல் சாயம் பூசிவிட்டது ஞபகம் வருது. அந்த யோசனையுடன் இந்த விசர் மனிசி என்னத்துக்கு அந்தக் கோழியை அறுக்கக் குடுத்தது என்று தனக்குள் புறுபுறுத்துக் கொண்டுபோய் அங்கிருந்த கண்ணாத்தாளிடமே சட்டியைக் குடுத்து ஒரு முறைப்பு முறைத்து கேவலமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு சவர்காரத்தை எடுத்துக் கொண்டு திரும்புகிறாள். கண்ணாத்தாவும் இந்தக் குமாரி என்ன இருந்தாப்போல இந்தச் சிலுப்பு சிலுப்பிறா என்று நினைத்துக் கொண்டு இறைச்சியை  அடுப்பில் இருந்த பெரிய சட்டிக்குள் போட்டு வேக விடுகின்றாள். அவளுக்கு தன கோழியைக் காணேல்ல என்ற கவலையில் தன்னையறியாமல் கண்ணீரும் வேர்வையுடன் கலந்து வருகுது.

யோசனையுடன் சவர்காரத்தயும் கொண்டு வந்த அன்னம் கிணத்தடி வாய்க்காலை எட்டிக் கடக்க பாவாடை தடுக்கி சறுக்கி மல்லாந்து விழுகிறாள்.சவர்க்காரம் எகிறி கோஹ்லி அடித்த பந்துபோல் மேலே போகுது, அவள் விழுவதை பார்த்த கண்ணனும் ஓடிவந்து ஒருகையை நாரியில் குடுத்து அவளை பிடிக்க சவர்க்காரம் நெஞ்சடியில் விழ தாவணியுடன் சேர்த்து சவற்காரத்தையும் பிடித்து விடுகின்றான் தோனி மாதிரி. ஒருமாதிரிச் சுதாகரித்து எழுந்த அன்னத்துக்கு இடையில் எதோ நழுவிற மாதிரி இருக்கு.மற்றச் சட்டியையும் கொண்டுபோய் குசினிக்குள் குடுத்து விட்டு அப்படியே குந்தில் குந்துகிறாள்.அவள் நெளியிறதைப் பார்த்த பொன்மணி அன்னத்தை அங்கால கூட்டிப் போய் கதைச்சு உடுப்புகளையும்  பார்த்துட்டு வந்து அன்னம் சமைஞ்சிட்டா என்று முறுவலிப்போடு சொல்ல எல்லோரும் சந்தோசமாய் அவளை பார்த்தது கதைக்கினம். உதுக்குத்தான் அவள் இப்ப என்னை முறைச்சவள் எண்டு கண்ணாத்தாளும் சொல்லுறாள். பொன்மணியும் அவளின் தாயுமாய்  அன்னத்துக்கு பச்சை  முட்டையை உடைத்து வாய்க்குள்ள ஊத்திவிட்டு அன்னம் வேண்டாம் என்று மறுக்க விடாமல் கொஞ்ச நல்லெண்ணையும் பருக்கி  சற்று நேரத்தின்பின் கத்தரிக்காய் சாறும் குடிக்கக் குடுத்துவிடுகிறாள். மற்றவர்கள் வடிச்ச கஞ்சிக்க உப்பு போட்டு தேங்காய் பாலும் கலந்து குடிக்கினம்.ஒருமாதிரி சமையல் தடபுடலாய் முடியுது. அங்கு  கதிரவேலுவும் அன்னம் சமைச்சாச்சா என்று கேட்டுக் கொண்டே வருகிறார். பொண்மணியும்  ஓமப்பா அன்னம் சமைச்சாச்சு, அன்னமும் சமைஞ்சாச்சு என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள்.

சாமியும் எழுந்து கைகால் கழுவ கிணத்தடிக்கு வருகுது. அங்கு எலுமிச்சை, பிலா மரங்களில் குரங்குகள் தாவித் திரிகின்றன. சாமியும் நாலு தேசிக்காயைப் பிடுங்கி பையில போட்டுக்கொண்டு வருகுது. அப்போது மங்களம் கண்ணனைத் தேடிக் கொண்டு சுட சுட கஞ்சிக் கிண்ணத்துடன் வருகிறாள். டேய் கண்ணா இந்தாடா கஞ்சி, வந்து குடிச்சுட்டுப் போடா என்று கூப்பிடுகிறாள். அவனும் அங்கால பாவட்டைப் பத்தைப் பக்கம் நின்று பொறக்கா வாறன். நீ கிணத்துக் கட்டிலை வைச்சிட்டுப் போ என்கிறான். அந்நேரம் சாமியும் கவனம் பிள்ளை பின்னால குரங்கு என்று சொல்லவதற் கிடையில் ஒரு தாட்டன் குரங்கு ஒன்று பாய்ந்து அந்தக் கஞ்சிக் கிண்ணத்தைப் பறித்துக் கொண்டு ஓடுது. கஞ்சியும் காலிலையையும் நிலத்திலையும் கொட்டிட்டுது. அவள் கல்லெடுத்து குரங்குக்கு ஏறிய கண்ணனும் வேர்க்க விறுவிறுக்க ஓடி வாரான். 

சாமியும் கைகால் முகம் கழுவி நல்லா திருநீறு பூசிக்கொண்டு மீண்டும் திண்ணையில் வந்து அமருது. சாமிக்கு முன்னாள் பெரிய குருத்துத் தலைவாழை இலையில் சாதம் குவித்து இறைசிக்குழம்பும் பொரியலும் நிறையப் போட்டு சுத்தி எல்லா கறிவகைகளும் வைத்திருக்கு. பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் எலும்புரசமும், செம்பில தண்ணீரும் இருக்கு.மற்றவர்கள் எல்லோரும் அடுத்த திண்ணையிலும் கீழே பாய் விரித்தும் , பெண்கள் உள் திண்ணையிலுமாய் அமர்ந்திருக்கின்றனர். எல்லோருக்கு முன்னாலும் வாழையிலையில் சாப்பாடு வஞ்சகமில்லாமல் பரிமாறியிருக்கு.சாமியும் ஒருகையில் தண்ணீரெடுத்து கண்முடித் தியானித்து சாதத்தைச்சுற்றி இலையில் விட்டு ஆனந்த பைரவா போற்றி என்று சொல்லி சாப்பிடத் தொடங்குது. எல்லோரும் கலகலப்பாக கதைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சாப்பிடுகினம். பின் எல்லோரும் ஆங்காங்கே குழுக்களாகக் கூடி வெத்தலைப் பெட்டியும் சுறுட்டுமாய் இருக்கினம். மதியம்  02 :00 மணி. சாமியும் உண்ட களைப்பில் திண்ணையில் சாய்ந்து படுத்திருக்க பர்வதம் ஒரு தலைகாணியைக் எடுத்து வந்து வைத்து விட்டுப் போகிறாள்.

அற்புதங்கள் தொடரும்....!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹாஹாஹா  பேச்சு  மொழியில் சூப்பரா இருக்கிறது சுவி அண்ணை 

தொடரட்டும்   இந்த சாமி மார் எல்லாம் காக்கா நிற்கபனம் பழம் விழுந்த கதைதான் 

நன்றி தமிழ் சிறி அண்ணை நினைவு கூர்ந்தமைக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவியர்
இளையராஜா மாதிரி இப்பவே காப்பிரைட் எடுத்து வையுங்க.கதையைப் பார்த்தா ஒரு திரைப் படத்திற்கு ஏற்ற கதை போலவே போகிறது.

தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)    
    • இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது. அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது? ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது. வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் "சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்" அழித்து வருவதாகவும், "சிரியா மீதான உரிமை மீறல்" என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் "பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை" தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சியால் ரஷ்யாவுக்கு என்ன அடி?10 டிசம்பர் 2024 காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டில், டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக அசத்தின் ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது. சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது. சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார். "சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார். "இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது" என்று விளக்கினார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது? படக்குறிப்பு, சிரியாவில் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார். "அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது" என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார். "அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு" என்றார். ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை "சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன. கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது. கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது. ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்புகள் 'சட்ட விரோதமானவை' என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளின் மஜ்தல் ஷம்ஸ் அருகே இஸ்ரேலிய ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டது. கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். "சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன," என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார். "இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், "சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது" என்றார். இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். "லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என அவர் தெரிவித்தார். "இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக" அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn7rv5ej8lzo
    • 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
    • “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
    • தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா. இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழி அதிக அளவில் ஏற்படவே, மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, உள்ளூர் மசாஜ் சென்டரை அனுகியுள்ளார். இதற்காக கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியிலுள்ள, மசாஜ் செய்யும் பார்லரில் அவர் மசாஜ் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட வலிகளும் சரியாகியுள்ளது. இருப்பினும் சில தினங்களில் கழுத்தின் பின்புறத்தில் வலி அதிகரிக்கவே, மீண்டும் மசாஜ் செய்ய சென்றுள்ளார். இதன்பிறகு, அவரது கழுத்தில் ஏதோ மறுத்த உணர்வு ஏற்பட, மீண்டும் மூன்றாவது முறையாக அதே மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார். ஆனால், கடந்த இரண்டு முறை மசாஜ் செய்த ஊழியர் இம்முறை இல்லை. வேறொரு ஊழியர்தான் மசாஜ் செய்துள்ளார். இவர் மசாஜ் செய்தபின் சயாதாவிற்கு கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால், அவதியடைந்த அவர், அக்டோபர் 30 ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களோ, உதான் தானி மருத்துவமனைக்கு செல்லும்படி தெரிவிக்கவே, நவம்பர் 6 – நவம்பர் 11 வரை உதானி தானியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கழுத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று வந்துள்ளது. இதனால் உடல்நிலை சரியானதாக நினைத்து வீடுதிரும்பிய அவர், மீண்டும் நவம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சாயதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் இறுதியாக வெளியிட்ட வீடியோவில் அனைத்து தகவல்களையும் அளித்துள்ளார். இந்நிலையில், அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மசாஜ் செய்ததால்தான் சாயதாவின் உடல்நிலையில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/313627
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.