Jump to content

யாழ்ப்பாணத் தோசை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

11892272_591540774317591_567066764916315

செ.தே.பொருட்கள் :-

கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு
அவித்த வெள்ளை மா – 1 சுண்டு
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
வெந்தயம் – 1 தே. கரண்டி
சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
மிளகு – 1/2 தே. கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி
தாளிப்பதற்கு :-
சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)
செத்தல் மிளகாய் – 3
கடுகு – 1/2 தே. கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
கறிவேப்பிலை – 1 நெட்டு

செய்முறை :-

* உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும்.
* சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.
* உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.
* அரைத்த மாவில் அவித்த மா,அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து
10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும்.
* புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.
* சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.
* தாளிதத்தையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக.
* (தோசைகளை சம்பலுடன் பரிமாறலாம் )
** தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.
** குறிப்பு: தோசை மொற மொறப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பசுமதி, அல்லது சம்பா, அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.

http://tamilbeautytips.com/ta/11869

Posted
4 hours ago, தமிழரசு said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

அதுதான் நோர்வேகாரர்கள் மகிழ்வில் உலகத்தில் நம்பர் ஒன் என்று சொல்லியாச்சே.

ஒட்டுமொத்தமா.... நோர்வேக்காக வயிறு எரிஞ்சாச்சு..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

ஏன் இப்படி கேட்டமா ..... சாப்பிட்டீங்களா தூங்கினீங்களா என்று இல்லாமல் 

Posted
2 minutes ago, Nathamuni said:

நோர்வேக்காக வயிறு எரிஞ்சாச்சு..:grin:

1 minute ago, தமிழரசு said:

ஏன் இப்படி கேட்டமா ..... சாப்பிட்டீங்களா தூங்கினீங்களா என்று இல்லாமல் 

இந்த பதிவைப் பாத்துமா உங்களுக்கு நான் பச்சை தமிழன் என்று புரியவில்லை.

மற்றவர்கள் வயித்தெரிச்சலைப் பார்த்து சந்தோசப்படுபவன் சுத்த தமிழன்தானே?:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

இங்க நேற்றும் இன்டைக்கும் தோசைதான். ஒருக்கால் மா கரைத்தால் இரண்டு நாளைக்கு வரும். அதுவும் பக்கத்தில் ரெண்டு வீட்டுக்கு குடுத்து....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

எங்க வீட்டில் இப்போது வாராவாரம் தோசை, அப்பம் என்று விதவிதமாக போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த பதிவைப் பாத்துமா உங்களுக்கு நான் பச்சை தமிழன் என்று புரியவில்லை.

மற்றவர்கள் வயித்தெரிச்சலைப் பார்த்து சந்தோசப்படுபவன் சுத்த தமிழன்தானே?:grin:

நீங்கள் சுத்த தமிழன் நான் ஒத்துக்கொள்கின்றேன். இருந்தாலும் உங்களுக்கு கன பேரின் கண்பட்டு வயிறு வலிக்கப்போகிறது.

3 minutes ago, MEERA said:

எங்க வீட்டில் இப்போது வாராவாரம் தோசை, அப்பம் என்று விதவிதமாக போகிறது.

நீங்கள் கொடுத்து வச்சவர்.

24 minutes ago, Nathamuni said:

அதுதான் நோர்வேகாரர்கள் மகிழ்வில் உலகத்தில் நம்பர் ஒன் என்று சொல்லியாச்சே.

ஒட்டுமொத்தமா.... நோர்வேக்காக வயிறு எரிஞ்சாச்சு..:grin:

அவரே பயங்கர கடுப்பில் இருப்பார் நீங்கள் வேற அதையே நினைவு படுத்திக்கொண்டு பாவம் ஜீவன் சிவா விட்டுவிடுங்கள் நாதமுனி 

18 minutes ago, suvy said:

இங்க நேற்றும் இன்டைக்கும் தோசைதான். ஒருக்கால் மா கரைத்தால் இரண்டு நாளைக்கு வரும். அதுவும் பக்கத்தில் ரெண்டு வீட்டுக்கு குடுத்து....! tw_blush:

பரவாயில்லை அப்படியாவாவது கிடைக்குதே சுவி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதைப் பார்க்க அம்மா சுடும் தோசைபோல் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோசைக்கு அவிச்ச மாவோட,பச்சமாவும் போடுறது என்டது இன்டைக்குத் தான் தெரியும்:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழரசு said:

11892272_591540774317591_567066764916315

ஆகா.... இதுதான்.... தோசை.
தோசையில்... சிறு சிறு வாய்வுக் குழிகள் வந்து, இருக்கும் போது தான்...  தோசைக்கே... தனி ருசி. 
கோடைகாலம் தொடங்க இருக்கின்றது,  தமிழரசு சொன்ன முறையில்... செய்து பார்க்க வேண்டும். :)

மனிசி, தோசை சுட்ட பின்....  அடுப்பு, குசினி, தோசை சட்டி, பாத்திரம், கிரைண்டர்..... உதுகள் எல்லாத்தையும் கழுவும் பொறுப்பு எனது என்பதால்,  தோசை.... ஆசை இருந்தாலும், அடக்கி வைத்திருக்கின்றேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, MEERA said:

எங்க வீட்டில் இப்போது வாராவாரம் தோசை, அப்பம் என்று விதவிதமாக போகிறது.

சாம்பிளுக்கு... சில படங்களையும், இணைத்தால் தான்... நாங்கள் நம்புவோம்... மீரா. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, தமிழரசு said:

நீங்கள் கொடுத்து வச்சவர்.

4 minutes ago, தமிழ் சிறி said:

சாம்பிளுக்கு... சில படங்களையும், இணைத்தால் தான்... நாங்கள் நம்புவோம்... மீரா. :grin:

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்காங்க, வெயிட்டும் கூடிவிட்டது சுகரும் கூடிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, MEERA said:

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்காங்க, வெயிட்டும் கூடிவிட்டது சுகரும் கூடிவிட்டது.

மாமியார் வந்தால் எங்கள வீட்டை கூப்பிட்டு தோசை சுட்டுத் தாறது:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

மாமியார் வந்தால் எங்கள வீட்டை கூப்பிட்டு தோசை சுட்டுத் தாறது:mellow:

எப்ப வாறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, MEERA said:

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்காங்க, வெயிட்டும் கூடிவிட்டது சுகரும் கூடிவிட்டது.

மருமகனை... எல்லா மாமியார்களும், கவனிக்கும் சிறப்பு எல்லா இடங்களிலும் உள்ளமை... மிக அழகு. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

இங்க நேற்றும் இன்டைக்கும் தோசைதான். ஒருக்கால் மா கரைத்தால் இரண்டு நாளைக்கு வரும். அதுவும் பக்கத்தில் ரெண்டு வீட்டுக்கு குடுத்து....! tw_blush:

ம்ம்ம்...!

நமக்குப் பக்கத்து வீடு கூடச் சரியா வந்து வாய்க்கேல்ல!

3 hours ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

ஜீவன்....கோழிக்கறியைச் சாப்பிட்டால்...எலும்பைக் கழுத்தில கட்டிக்கொண்டு ஊர் முழுக்கத் திரியிறது மிகவும் கெட்ட பழக்கம்!:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதைப் பார்க்க அம்மா சுடும் தோசைபோல் இருக்கு.

நீங்கள் பிள்ளையளுக்கு சுட்டுக் கொடுத்தியல் எண்டால், அவையள் அப்படி சொல்லுவினம் தானே.

4 hours ago, ரதி said:

தோசைக்கு அவிச்ச மாவோட,பச்சமாவும் போடுறது என்டது இன்டைக்குத் தான் தெரியும்:rolleyes:

உங்கண்ட அண்ணர், பிளேன் சோடா விட்டு செய்யிற கூப்பன் மா தோசை ரெசிபியால் எல்லாம் தந்தவர் மறந்திட்டியளோ ? :grin: 

போன கிழமை கூழ் அடிக்க நண்பர் வீட்டுக்கு போனேன்.

ஒடியல் மா தடிப்பா இருக்குதாம் என்று... சோளன் மா போட்டு இருந்தா நண்பனின் தாய்.

என்ன சொல்ல வருகிறேன் எண்டால், சமைச்சு, சமைச்சு, ஆராய்ந்து புது முறைகளை கண்டு பிடிக்கினம்.

1 hour ago, புங்கையூரன் said:

ம்ம்ம்...!

நமக்குப் பக்கத்து வீடு கூடச் சரியா வந்து வாய்க்கேல்ல!

ஜீவன்....கோழிக்கறியைச் சாப்பிட்டால்...எலும்பைக் கழுத்தில கட்டிக்கொண்டு ஊர் முழுக்கத் திரியிறது மிகவும் கெட்ட பழக்கம்!:unsure:

நீங்கள் ஒரு பக்கம்... புங்கையர்...

லோங் ஹாலிடே நோர்வே காரர்.... கோழி திண்டால், இன்னொரு கோழியையே கட்டிக் கொண்டு திரிவார்.... :grin: 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Nathamuni said:

நீங்கள் பிள்ளையளுக்கு சுட்டுக் கொடுத்தியல் எண்டால், அவையள் அப்படி சொல்லுவினம் தானே.

உங்கண்ட அண்ணர், பிளேன் சோடா விட்டு செய்யிற கூப்பன் மா தோசை ரெசிபியால் எல்லாம் தந்தவர் மறந்திட்டியளோ ? :grin: 

போன கிழமை கூழ் அடிக்க நண்பர் வீட்டுக்கு போனேன்.

ஒடியல் மா தடிப்பா இருக்குதாம் என்று... சோளன் மா போட்டு இருந்தா நண்பனின் தாய்.

என்ன சொல்ல வருகிறேன் எண்டால், சமைச்சு, சமைச்சு, ஆராய்ந்து புது முறைகளை கண்டு பிடிக்கினம்.

அம்மாவின் தோசையிலும் சுவையான தோசை நான் சுடுவதும் பிள்ளைகள் உண்பதும் வழமைதான். எனக்கு அம்மாவின் தோசைபோல் யார் சுடுவதும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அம்மாவின் தோசையிலும் சுவையான தோசை நான் சுடுவதும் பிள்ளைகள் உண்பதும் வழமைதான். எனக்கு அம்மாவின் தோசைபோல் யார் சுடுவதும் இருக்காது.

அதுதான் சொல்கிறேன்...

உங்களுக்கு உங்கள் அம்மாவின் தோசை திறமாயிருக்கும்.

உங்கண்ட பிள்ளைகளுக்கு அவையண்ட அம்மா சுடுற தோசை தான் திறமாயிருக்கும்.

அம்மம்மா தோசையே சுடுறா... அம்மா எப்படி அதை தின்னுறவோ தெரியாது எண்டெல்லா சொல்லுவினம். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, Nathamuni said:

அதுதான் சொல்கிறேன்...

உங்களுக்கு உங்கள் அம்மாவின் தோசை திறமாயிருக்கும்.

உங்கண்ட பிள்ளைகளுக்கு அவையண்ட அம்மா சுடுற தோசை தான் திறமாயிருக்கும்.

அம்மம்மா தோசையே சுடுறா... அம்மா எப்படி அதை தின்னுறவோ தெரியாது எண்டெல்லா சொல்லுவினம். :grin: 

அட பாவி tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஞ்சை பாரப்பா தோசை எண்டவுடனை சனம் வரிசையிலை நிக்கிறதை!!!!!!!!:grin:
எண்டாலும் பாருங்கோ என்ரை ஊரிலை தென்னை நுனியோலையாலை அடுப்பெரிச்சுத்தான் தான் தோசை சுடுவினம். வாசமும் சுவையும் சொல்லி வேலையில்லை.அதோடை நல்லெண்ணையும் விட்டு மொருமொருக்க எடுத்து அப்பிடியே உருட்டி.........:love:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

நெருப்பு வெக்கைல, தென்னோலை, தென்னம்பட்டை, உமல், பனம்மட்டை, பனையோலை எண்டதில வித்தியாசம் இருக்குதோண்ணை?

அம்மம்மா.... மண்ணெண்னை அடுப்பில செய்தாலும் அந்தமாதிரி இருக்கும்.

உது கைப்பக்குவம்... நெருப்புச்சூடில்லை எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே டைப்பு தோசை தானண்ணா  ...ஸ்பைசி லாண்ட் தோசையும்....இப்பாவும் நாலு உள்ளுக்கு தள்ளிப்போட்டிருக்கிறன்...அந்தமாதிரி (இப்படிச் சொல்லாட்டி சுவராசியம் இல்லை) காலையிலை போனாலே ஊர் போலை தோசை வடை இட்டலி,சட்னி சாம்ம்பாரும் ..டீயும் தருவினம்...அந்தப் பிடி பிடித்துவிட்டு வேலைக்குப் போனால்..ஊர் தோத்துது போங்கோ....3.50 ஆர்தருவினம் இந்த சந்தோசத்தை...படம் காட்டலாம்..பிந்திப்போச்சு..பாப்பம் பிறௐஊ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, alvayan said:

இதே டைப்பு தோசை தானண்ணா  ...ஸ்பைசி லாண்ட் தோசையும்....இப்பாவும் நாலு உள்ளுக்கு தள்ளிப்போட்டிருக்கிறன்...அந்தமாதிரி (இப்படிச் சொல்லாட்டி சுவராசியம் இல்லை) காலையிலை போனாலே ஊர் போலை தோசை வடை இட்டலி,சட்னி சாம்ம்பாரும் ..டீயும் தருவினம்...அந்தப் பிடி பிடித்துவிட்டு வேலைக்குப் போனால்..ஊர் தோத்துது போங்கோ....3.50 ஆர்தருவினம் இந்த சந்தோசத்தை...படம் காட்டலாம்..பிந்திப்போச்சு..பாப்பம் பிறௐஊ...

உங்க லண்டன் ஹரோவ் பக்கம் வந்தியல் எண்டால் ஒரு பவுனுக்கு 3 தோசை...

வியாழக்கிழமை, 4 தோசை, ஒரு உளுந்து வடை, சம்பல், சாம்பாரு, கிழங்குக்கு கறி, ஓபெர்... £2.50.

5 கடலை வடை £1. ஒரு இடத்திலேயும் உப்படி வாங்க ஏலாது.

சிறி லங்காவுக்கு எக்ஸ்போர்ட் பண்ணலாம் என்று யோசனை பாருங்கோ....

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.