Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

ஒரு சாதாரண பயணம் 

இது கதையுமில்லை கத்தரிக்காயுமில்லை - எனது பல பயணங்களில் இதுவும் ஒன்று. இது முதற் தடவையும் இல்லை, இறுதியும் இல்லை - ஆனால் தொடரும் எனது பயணங்களில் ஒன்று. இங்கு இதே முறையில் பலதடவைகள் வந்திருந்தாலும், ஒவ்வொருமுறையும் புதிய அனுபவங்கள் + புதிய மனிதர்கள். முதற்தடவையாக பகிர்கின்றேன். பல பெயர்களை தவிர்த்துள்ளேன்.

கற்பனை கலக்காத ஒரு பதிவு இது.

புதன் கிழமை 

மச்சான் நான் முதலாம் திகதி திரும்புறன் எப்படா வாறாய்? - தொலைபேசியில் ஒரு கதறலா அதட்டலா என்று புரியாத நண்பனின் குரல். 

இவனை சமாளிப்பது இலகுவான விடயமில்லை என்று எனக்கும் தெரியும். சிலவேளைகளில் அன்பினால் அதட்டுவதும் அதிக உரிமை எடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. 

மச்சான், எனக்கு கொழும்பில் சில வேலைகள் இருக்கு, முடித்துவிட்டு வாறன் எண்டேன். 

இவனுடன் டேய், அடோய் என்று கதைத்தாலும் எனக்கு அவனை விட 6 வயது குறைவு. ஒருமுறை எனது அண்ணியே நானும் இவனும் நேரில் கதைப்பதை பார்த்து கோபப்பட்டா. நானும் அண்ணி நான் எனது நெருங்கிய நண்பர்களுடன் எப்பவும் இப்படித்தான் என்றேன். வயதுக்காவது மரியாதை குடுக்க வேண்டாமா + பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றார். நானும் சிரித்தபடி அண்ணியின் சொக்கையை கிள்ளியபடி நல்ல நண்பர்கள் என்று நினைப்பார்கள் என்றேன். நீ வளரவே மாட்டாய், எப்படியாவது இருடா என்றார். வீட்டில் கடைசிப் பிள்ளைக்கு மட்டுமே கிடைக்கும் அன்பு + உரிமை.

அடுத்த கேள்வி -  எப்படா கொழும்புக்கு வாறாய்? டேய் நான் இப்ப கொழும்பிலதான் அண்ணாவுடன் நிற்கிறேன். 

சரி உடனே அண்ணா வீட்டை வாறன் - வாடா. மவனே உன்னோடே வந்தால் சகலதும் கெட்டிடும். வந்த அலுவலை முடிச்சிற்று கால் பண்ணுறன் - அதுவரை சந்திக்க வேண்டாம் என்றேன். எப்படியாவது போய் துலையடா என்று அம்மா மாதிரியே திட்டினான்.

வெள்ளிக்கிழமை 

புதன் + வியாழன் + வெள்ளி அலுவல்களை முடித்துவிட்டு ஆறுதலாக சோபாவில் குந்தியிருந்து யாழை நோண்டும்போது மறுபடியும் தொலைபேசியில் கத்தினான் நண்பன். டேய் ரெடியா இரு, பத்துமணிக்கு வாறன் போகலாமென்றான். பக்கத்தில் இருந்த அண்ணியும் என்னவாம் அருமை நண்பர் என்றார். நானும் வாறானாம் ரெடியா இருடா எண்டவன் என்றேன். ஒவ்வொரு மாதமும் வரோணும் எண்டது எங்கட உடன்படிக்கை, வந்ததே இரண்டு மாதத்துக்கு அப்புறம் - இன்னும் இரண்டு நாள் நின்றால் என்னவாம் என்றா. பக்கத்தில் இருந்த அண்ணரும் சிங்கன் சிங்கிளா மாட்டிட்டான் என்று நினைத்தாரோ என்னவோ வாயே திறக்கவில்லை.

மவனே சரியான களைப்பு, நீ போ நாளைக்கு வாறன் எண்டேன். சனியனே துலைஞ்சு போடா எண்டு திட்டாத குறையா எதோ சொன்னவன் தொலைபேசியை கட் பண்ணினான்.

சனிக்கிழமை 10 மணி

டேய் £@$€£ இப்ப கார் அனுப்புறேன் ரெடியா நில்லடா எண்டான்.

இல்லையடா எனக்கு ட்ரைனில் வர ஆசையா இருக்கு நாளைக்கு காலையில் வாறன் எண்டேன். எக்கேடாவது கெட்டுப்போ பிடிவாத @£$€£@€$ எண்டான்.

பி ப 3 மணி 

டேய் டிக்கெட் எடுத்திட்டியா இல்லை சுத்துறியா எண்டான் - இல்லைடா நாளைக்கு காலை 8 :30 புறப்படுகின்றேன் என்றேன். சரி வந்துசேர் எண்டான்.

ஞாயிற்றுக்கிழமை 

காலை 9 
"நாயே ட்ரெயின் எடுத்துட்டியா, இல்லை நித்திரையா?" 
சரியடா, நான் ட்ரைனிலதான் இருக்கிறேன் எண்டன். 
சரிடா 2 மணிக்கு வரும், நான் ஸ்டேஷனிலே வெயிற் பண்ணுவேன் எண்டான். 

உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் தொடரும் ..... :grin:

 

 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜீவன் நீங்கள் இந்தப் பாஷையில் எழுதினாலும் நாங்கள் சொந்தப்  பாஷையாய் வாசிப்பமில்ல.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதிக்காக காத்திருக்கோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப இருந்து  தொடரட்டும் தொடரூந்து போல :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடரும் என்ற வார்த்தையை போடாமல் எழுதினால் எவ்வளவு நல்லா இருக்கும்..எல்லா இடமும் பயணக்கட்டுரையாவே இருக்கு தொடர்ந்து பயணியுங்கோ.?

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, யாயினி said:

இந்த தொடரும் என்ற வார்த்தையை போடாமல் எழுதினால் எவ்வளவு நல்லா இருக்கும்..எல்லா இடமும் பயணக்கட்டுரையாவே இருக்கு தொடர்ந்து பயணியுங்கோ.?

நீங்களும் எங்கேயாவது போய் எழுதுங்கோ வாசிக்க ஆவலாக நாங்கள் இருக்கிறம்  யாயி அக்கேtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில சிங்கங்களெல்லாம் சிங்கிளாக் கிளம்பி செம பட்டையை கிளப்புதுங்க........

 

தொடர்வது பிரச்சினை இல்லை சுவார்சியமாக இருந்தால்  தேடிப்பிடிச்சு வாசிப்பம்.

 

நட்பின் அதீத நெருக்கம் கதைக்குள் கரைபுரண்டு ஓடுகிறது. தொடருங்கோ

7 hours ago, ஜீவன் சிவா said:

 

ஓஓ   கண்டிக்கு போனிர்களோ.. :) மறக்க கூடிய இடமா..tw_cry:

தொடருங்கள் ஜீவன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

 

எழுதிறதோடை நிறுத்தாமல் இது வயித்தெரிச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

நீங்களும் எங்கேயாவது போய் எழுதுங்கோ வாசிக்க ஆவலாக நாங்கள் இருக்கிறம்  யாயி அக்கேtw_blush:

ம்ம்ம்....லண்டன்.சுவிஸ்.பிரான்ஸ்.யேர்மன்.இத்தாலி.நோர்வே.பப்புவாநியுகினி இவ்வளவு இடத்திற்கும் சுற்றுலா போய் வரலாம்..யாரையும் கடமைப்படுத்துவதில் விருப்பமில்லாத காரணத்தினால் நடை முறைச் சிக்கல் சிலவும் இருப்பதனால் பயணங்களுக்கு நானே தடை போட்டுள்ளேன்.இதை விட்டால் தாயகம்..சந்தர்ப்பம் சரியாக அமைந்தால் ஒரு முறையேனும் ஊருக்கு வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் முடிவதில்லை தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி.... ஓரளவு பரிச்சயமான இடம். ஜீவன் சிவா.
உங்கள் பிரயாணத்தில்.... அதனை,  படங்களுடன் பார்க்க ஆவலாக உள்ளேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

ம்ம்ம்....லண்டன்.சுவிஸ்.பிரான்ஸ்.யேர்மன்.இத்தாலி.நோர்வே.பப்புவாநியுகினி இவ்வளவு இடத்திற்கும் சுற்றுலா போய் வரலாம்..யாரையும் கடமைப்படுத்துவதில் விருப்பமில்லாத காரணத்தினால் நடை முறைச் சிக்கல் சிலவும் இருப்பதனால் பயணங்களுக்கு நானே தடை போட்டுள்ளேன்.இதை விட்டால் தாயகம்..சந்தர்ப்பம் சரியாக அமைந்தால் ஒரு முறையேனும் ஊருக்கு வரலாம்.

பிறகென்ன போய் வந்து எழுதுங்கோ ஆவலாய் தம்பி கருத்து எழுத வெயிட்டிங் 

  • கருத்துக்கள உறவுகள்

 பயணங்கள்... முடிவதில்லை ..தொடரட்டும்!  

  • தொடங்கியவர்

அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் 

ஊக்கங்களுக்கு மேலும் நன்றிகள்.

இன்று அதிகாலைதான் திரும்பினேன் / அதனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இப்போது தொடர்கின்றேன்.

IMG_0160.jpg

 

நானும் 12 45 இக்கு தொலைபேசினேன் - மச்சான் நாவலப்பிட்டியில் நிற்கின்றேன், அடுத்தது ஹட்டன் எண்டுதான் நினைக்கின்றேன் என்றேன். அது 2 மணிக்குத்தான் வருமென்றான். இல்லையடா இது இன்டெர்சிட்டி என்றேன். #¤&¤#& அதுவும் ஆடிப்பாடி 2 மணிக்குத்தான் வருமென்றான். கொஞ்சம் படுத்திட்டு 2 மணிக்கு ஸ்டேஷனில் நிப்பன் எண்டான். நானும் ஓகேய் என்றுவிட்டு கேண்டினுக்குப் போய் ஒரு டீயும் கஜூ பக்கற்றையும் வாங்கி கொறித்தபடியே ஓடும் இயற்கையை ரசித்தபடியே ஜன்னலோரமா குந்தி இருந்தேன். அழகான காட்சிகளும் நான் போகும் திசைக்கு எதிரா ஓடிக்கொண்டே இருந்தது. கடந்த ஒன்றரை வருடங்களில் இது மலையகத்தில் இரண்டாவது ரயில் பயணம் . ஆனாலும் ஹட்டன் தாண்டி சென்றதில்லை. பதுளைக்கும் 82 இன் பின்னர் சில தடவைகள் போய் இருந்தாலும் புகையிரதத்தில் போனதில்லை. அங்கிருந்த எனது அக்கா குடும்பத்தினர் 1983 இல் வெறும் கையுடன் உயிருடன் வந்துசேர்ந்தது வேறு கதை.

IMG_0141.jpg

 

இருந்தால் போல ஒரு யோசனை மண்டைக்குள் புகுந்தது. இப்படியே பதுளைவரை போய்விட்டு அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி பின்னர் நாளை காலை ஹட்டனுக்கு வருவமா என்பதுதான் அந்த யோசனை. அடுத்த நிமிடமே அண்ணனுக்கு தொலைபேசினேன் - பதுளையில் நல்ல ஹோட்டல் ஏதாவது இருந்தால் சொல்ல சொல்லிவிட்டு, நடத்துனரிடம் நானுஓயா வரை இருந்த டிக்கெட்டை பதுளை வரை மாற்ற முடியுமா என்று கேட்டேன். இல்லை சார், நாங்கள் ட்ரைனில் டிக்கெட் கொடுப்பதில்லை, நீங்கள் நானு ஓயாவில் இறங்கி புதிதாக டிக்கெட் எடுக்கவேண்டும். வேணுமென்றால் நான் புகையிரத நிலையத்துடன் தொடர்புகொண்டு சொல்லி விடுகின்றேன் நீங்கள் உடனேயே டிக்கெட் எடுத்து மறுபடியும் ஏறலாம். ஆனால் உங்கள் சீற்றிற்கு யாராவது நானு ஓயாவில் இருந்து பதுளை வரை புக் செய்திருந்தால் பிரச்சனை என்றார்.

IMG_0167.jpg

 

மறுபடியும் மனக்குரங்கை கட்டுப்படுத்தியபடி நண்பனுக்கு தொல்லைபெசினேன். மறுமுனையில் பதில் இல்லை, உதவியாளர் அழகிய குரலில் இன்னமும் பத்து நிமிடத்தில் எழுப்பிவிட சொல்லிவிட்டு படுத்திருக்கிறார் சார் என்று சொன்னார். அடிக்கடி அவனது ரிசோர்டுக்கு போய்வருவதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் எனக்கு நன்கு பரீச்சயமானவர்கள். சரி அவனை எழுப்பவேண்டாம் நான் ஹட்டனில் இருந்து ஒரு ஆட்டோ எடுத்து வாறன் எண்டு சொல்லவும். ஐயோ வேணாம் சார் நம்மளாலை பேச்சு வாங்கமுடியாது என்றார். பரவாயில்லை ஜீவன்சார்தான் சொன்னார் என்று சொல்லுங்க என்றேன். சார் உங்கட விளையாட்டில நம்மள மாட்டி விடுறீங்களே என்று தொலைபேசியை வைத்தார்.

நானும் ஹட்டனில் இறங்கி வெளியே வந்து பார்த்தபோது நண்பனைக் காணவில்லை. அப்படியே ஒரு வானுக்கு பின்னால் போய் ஒளித்திருந்து முழுசா தம்மினேன். இலங்கையில் பொது இடங்களில் தம்முவது தண்டனைக்குரிய குற்றம். ஏற்கனவே மஹியங்கனையில் பொலிசாரிடம் ஒரு முறை செமையா வாங்கி கட்டியும் திருந்தவில்லை. என்ன செய்வது ஐந்தரை மணி நேரம் தம்மாமல் இருந்த கொடுமைக்கு பேச்சு வாங்கலாம் என்றே தோணியது.

IMG_0196.jpg

 

வெற்றிகரமான தம்மடி படலத்தின் பின்னர் ஒரு ஆட்டோவை நிறுத்தி டிக்கோயா போகுமா என்றேன். வாங்க சார் என்றவருடன் மனதுக்குள் அட இவங்களாவது சார் என்கிறாங்களே என்ற சந்தோசத்துடன் பேச்சு கொடுத்தவாறு சென்றுகொண்டிருந்தேன். அப்பத்தான் லயன் லாகரும் தம்மும் ஞாபகம் வர, அதையும் வாங்கி நிரப்பிக்கொண்டு பயணமானோம். சார் டிகொயாவில் எங்க சார் போகணும் என்றார் ஓட்டுனர். நானும் வழிகாட்ட. வந்து சேர்ந்தேன் எனது சொர்க்காபுரிக்கு.

IMG_0156.jpg

 

வந்து சேர்ந்த எனக்கு ஆச்சரியத்துடன் அனுதாபம் + கவலையும் காத்திருந்தது.

 

உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் மிகுதி இரு பகுதிகளும் தொடரும் ... :grin: பொறுத்தருள்க 

  

 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுறத மொத்தமா எழுதுங்கள் வெயிட் பண்ண முடியல கன தொடர்களுக்கு  :cool:tw_dissapointed:tw_blush:

  • தொடங்கியவர்
21 minutes ago, முனிவர் ஜீ said:

எழுதுறத மொத்தமா எழுதுங்கள் வெயிட் பண்ண முடியல கன தொடர்களுக்கு  :cool:tw_dissapointed:tw_blush:

யோவ் நானே வாசிக்கிறதுக்கு ஆயிரம் பதிவுகள் இருக்குது இங்கே / வாசித்தது + முடித்தது சுவியரின் சுந்தரகாண்டம் மட்டுமே.

அதுக்குள்ளே நவீனன் வேற பன்னீரை வெருட்டிக்கொண்டு திரியிறார் / ஐ பி எல் எண்டு 

அதுக்குள்ளே உம்மடை தொல்லை வேறையா :grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

யோவ் நானே வாசிக்கிறதுக்கு ஆயிரம் பதிவுகள் இருக்குது இங்கே / வாசித்தது + முடித்தது சுவியரின் சுந்தரகாண்டம் மட்டுமே. அதுக்குள்ளே உம்மடை தொல்லை வேறையா :grin:

:cool::cool:tw_blush:

தொடர்ந்து எழுதுங்கள் ஜீவன்.

48 minutes ago, ஜீவன் சிவா said:

 

IMG_0196.jpg

 

 

 

  

 

 

 

படத்துக்கு நன்றி.

 

19 minutes ago, ஜீவன் சிவா said:

 

அதுக்குள்ளே நவீனன் வேற பன்னீரை வெருட்டிக்கொண்டு திரியிறார் / ஐ பி எல் எண்டு 

 

 

அது..:grin:

SARASAVI UYANA RAILWAY STATION

நாளாந்தம் பிரயாணம் செய்த புகையிரத நிலையம் ஒரு காலத்தில்..

  • தொடங்கியவர்
14 minutes ago, நவீனன் said:

தொடர்ந்து எழுதுங்கள் ஜீவன்.

 

படத்துக்கு நன்றி.

 

 

அது..:grin:

SARASAVI UYANA RAILWAY STATION

நாளாந்தம் பிரயாணம் செய்த புகையிரத நிலையம் ஒரு காலத்தில்..

1950 களில் எனது அப்பா இதே நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக்கும்  

ஹஹா.. அப்ப நான் இந்த உலகத்துக்கு வரவில்லை ஜீவன்..tw_blush:

3 minutes ago, ஜீவன் சிவா said:

1950 களில் எனது அப்பா இதே நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக்கும்  

 

  • தொடங்கியவர்
5 minutes ago, நவீனன் said:

ஹஹா.. அப்ப நான் இந்த உலகத்துக்கு வரவில்லை ஜீவன்..tw_blush:

 

நானும்தான் 

நல்ல காலம் அப்ப நீங்கள் பிறந்திருந்தால் டிக்கெட் இல்லாமல் தினமும் பயணம் செய்திருக்க முடியாதே :grin:

ஆனால் எனது மூத்த அக்கா  1949 இல் அப்பா இங்கு வேலை செய்யும் போது பிறந்ததாக சொல்லுவா.

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

ஒரு சாதாரண பயணம் பகுதி மூன்று

 

 

வந்து சேர்ந்த எனக்கு ஆச்சரியத்துடன் அனுதாபம் + கவலையும் காத்திருந்தது..........


 

எப்ப இங்கு வந்தாலும் சகலதையும் மறந்து மனம் ஒரு தியான நிலையை அடையும். எனது மனதில் எந்தவிதமான சலனங்களோ, கவலைகளோ இல்லை சிந்தனைகளோ இல்லாமல் வெறுமனே ஒரு விபரிக்கமுடியாத நின்மதி கிடைக்கும். இதைத்தான் You won't feel lonely if nature is with you என்று சொல்வார்களோ என்றுதான் தோன்றும்.

IMG_7290.jpg

அழகான இடம் + மலைகள் + தேயிலை செடிகள் + உயர்ந்த யூகலிப்டஸ் மரங்கள் + அழகான குரல்களுடன் பலவிதமான பறவைகள் + அன்பான மனிதர்கள் + அதற்கு மேல் ஆதரவான நண்பன் குடும்பம்.


 

வாசலில் வரவேற்ற மனேஜரும் நேரவே நண்பனின் தனிப்பட்ட விடுதிக்கு கூட்டிச் சென்றார்.

IMG_7432.jpg

அங்கு எனது நண்பனின் அம்மா கையில் கட்டுடன் - இல்லை ஜீவன் விழுந்துட்டன் கையில சின்ன முறிவு என்றார். மனதே உடைந்தது. அம்மாவும் நண்பனை கூப்பிட்டா. வேண்டாம் எழுப்ப வேண்டாம் என்று போய் பாத்தால் முதேவி கட்டிலில சப்பாத்தும் கழற்றாமல் குப்புற கவுந்து கிடக்குது.

அப்படியே சத்தம்போடாமல் வெளியே வந்து அம்மாவுடன் கதைத்து கொண்டிருந்தேன். ஜீவன் என்ன புத்தகம் கையில இருக்குது எண்டா - நானும் ராபின் சர்மாவின் ஒரு புத்தகத்தின் தமிழாக்கம் + டேல் கார்னெகியின் இன்னொரு புத்தகத்தின் தமிழாக்கம் என்றேன். வாசிச்சிட்டியா என்றார். வாங்கிய எனக்கு புத்தகத்தின் பெயர் கூட ஞாபகமில்லை. ஒரு பக்கம் கூட வாசிக்கவில்லை.

ஆனாலும் ஓம் அம்மா நீங்களே வைச்சிருங்கோ, வாசித்து முடிந்தபின் தாங்கோ என்றேன். மூஞ்சியில் புன்னகையா இல்லை புன்னகையின் நடுவே மூஞ்சியா என்று தெரியாத ஒரு சிரிப்புடன் வாங்கினார். இதுக்கிடையே எங்கட சத்தம் கேட்ட நண்பனும் ஜீவன் என்று முனகினான். பேசாமல் படடா என்று சொல்லவும், உதவியாளரை அவன் திட்டவும் சரியாக இருந்தது. அருகிலிருந்த உதவியாளரும் என்னை அம்மாவிடம் போட்டுக்குடுக்க - அம்மாவும் இவங்கள் இப்படித்தான் கண்டுக்காதே என்றுவிட்டார்.

IMG_3841.jpg

எழும்பி வந்த நண்பனுடன் சிறிது அலட்டிவிட்டு ரெஸ்டூரண்ட் போய் மதிய சாப்பாடு.

IMG_4099.jpg

 

IMG_4303.jpg

 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.