Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம்: காற்று வெளியிடை

Featured Replies

சினிமா விமர்சனம்: காற்று வெளியிடை

 
   
நடிகர்கள் கார்த்தி, அதிதி ராவ், தில்லி கணேஷ், ஆர்.ஜே. பாலாஜி, ருக்மிணி
 
இசை ஏ.ஆர். ரஹ்மான்
 
ஒளிப்பதிவு ரவிவர்மன்
 
இயக்கம் மணிரத்னம்

மணிரத்னத்தின் முந்தைய படமான ஓ.கே. காதல் கண்மணியைப் போல இதுவும் காதல்தான் கதை.

திரைப்பட விமர்சனம் : காற்று வெளியிடை

நாயன் வருண் (கார்த்தி) இந்திய விமானப் படையின் விமானி. ஸ்ரீ நகரில் பணியாற்றும் அவர், அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியவரும் லீலாவை (அதிதி ராவ்) காதலிக்கிறார். ஆணாதிக்கப் போக்குடன் செயல்படுவதால் இருவருக்கும் சண்டைவர, பிரிகிறார்கள். இதற்கிடையில் பாகிஸ்தானுடனான மோதலில் வருணின் விமானம் வீழ்ந்துவிட, அந்நாட்டுச் சிறையில் அடைபடும் அவர், அங்கிருந்து தப்பி எப்படி காதலியுடன் இணைகிறார் என்பதே கதை.

திரைப்பட விமர்சனம் : காற்று வெளியிடை

மணிரத்னம் தன் படத்தில் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்துபவர். இந்தப் படத்திலும் ஏ.ஆர். ரஹ்மான், ரவிவர்மன், ஸ்ரீஹர் பிரசாத் (படத் தொகுப்பு) என சிறந்த கலைஞர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இதில் ரவிவர்மனில் ஒளிப்பதிவு துலக்கமாகத் தெரிகிறது. படத்தின் பல காட்சிகள் நெஞ்சை அள்ளுகின்றன. வான் வருவான், நல்லை அல்லை போன்ற சில பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கத்தக்கவை. கார்த்தி, அதிதி ராவ் ஆகியோரின் நடிப்பில் குறைசொல்ல ஏதுமில்லை.

திரைப்பட விமர்சனம் : காற்று வெளியிடை

இத்தனை இருந்தும் படம் மனதில் ஒட்ட மறுக்கிறது. விமானம் விபத்திற்குள்ளாகி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொள்ளும் நாயகனின் நினைவுகளாக படம் துவங்குகிறது. தான் லீலாவைச் சந்தித்ததையும் காதல் கொண்டதையும் நினைத்துப் பார்க்க ஆரம்பிக்கிறார் நாயகன். மணிரத்னத்தின் எல்லாப் படங்களைப் போலவே, இந்தப் படத்திலும் நாயகன் காதலைச் சொல்கிறார். அவரது எல்லாப் படங்களைப் போலவும் நாயகி காதலை ஏற்கிறார். அவரது பல படங்களில் பார்த்துவிட்டதால என்னவோ, இயல்பு வாழ்க்கைக்கு சற்றும் தொடர்பில்லாத இந்தக் காட்சிகள் மிகவும் சலிப்பூட்டுகின்றன.

திரைப்பட விமர்சனம் : காற்று வெளியிடை

படம் முழுக்க வருண், லீலாவிடம் மோசமாகவே நடந்துகொள்கிறார். வருத்தப்படும் நாயகி, வருண் 'ஸாரி' சொன்னதும் ஏற்றுக்கொள்கிறார். வயிற்றில் வளரும் குழந்தை வேண்டாம் என்று சொல்லும், தன் பெற்றோரை அவமானப்படுத்தும் வருணை, திருந்தினாரா இல்லையா என்று தெரியாமலேயே முடிவில் ஏற்கிறார் நாயகி.

வருண் லீலாவை அவமானப்படுத்தும் காட்சிகளைத் தவிர, எந்தக் காட்சிகளும் மனதில் ஒட்டவில்லை. பாகிஸ்தான் சிறைகளிலிருந்து தப்பும் காட்சிகள் ரொம்பவுமே அமெச்சூரானவை. சிறைச் சுவரில் ஒரு ஓட்டை. அவ்வளவுதான் வெளியில்வந்துவிடுகிறார்கள். அதேபோல, தப்பிச் செல்லும் நாயகனை பாகிஸ்தான் காவல்துறையினர் துரத்தி துரத்தி எந்திரத் துப்பாக்கியால் சுட, ஒரு குண்டுகூட மேலே படாமல், வழியில் உள்ள பாகிஸ்தான் கொடியை வீழ்த்திவிட்டு, ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகிறார் நாயகன்.

திரைப்பட விமர்சனம் : காற்று வெளியிடை

தான் மட்டுமே முக்கியம், தன் விருப்பங்கள் மட்டுமே முக்கியம் எனக் கருதும் நாயகன், சுயமரியாதையை விரும்பும் நாயகி என்ற முரண்பாட்டை மையமாக வைத்து படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகளில் சில பாத்திரங்கள் அதைப் பேசவும் செய்கிறார்கள். ஆனால், முடிவில் கிடைப்பதென்னவோ, தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தும் நாயகனை ஏற்றுக்கொள்ளும் நாயகி என்ற கதைதான். அதுவும், மிக மிக சலிப்பூட்டும் வடிவில்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39525292

  • கருத்துக்கள உறவுகள்

மணி ரத்தினம் நல்லதொரு டைரக்ரர்.படம் எப்படி இருக்குதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்

மணிரத்னம், கார்த்தி, காஷ்மீர்... ‘காற்று வெளியிடை’ எஃபெக்ட் என்ன? - ’காற்று வெளியிடை’ விமர்சனம்

போர் பறவை கார்த்தி, சண்டக் கோழி அதிதி... இவர்களுக்கு இடையிலான காதலும் ஊடலுமே கதை. அதில் தேசபக்தி, பாகிஸ்தான் பார்டர், மணிரத்னம் பாணி ஆகியவை சேர்த்து வந்திருக்கும் 'காற்று வெளியிடை'... நம்மை மிதக்க வைக்கிறதா?

காற்று வெளியிடை

ராணுவத்தில் ஃபைட்டர் பைலட் வி.சி என்கிற வருண் (கார்த்தி), காஷ்மீர் ஶ்ரீநகர் மருத்துவமனையில் மருத்துவராகச் சேர்கிறார் லீலா ஆபிரஹாம் (அதிதி ராவ்). விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேரும் கார்த்திதான் அதிதிக்கு முதல் பேஷண்ட். இருவருக்குள்ளும் மலரும் காதல், ஊடல் என்ற பாதையில் பயணிக்கும்போது பாகிஸ்தான் சிறையில் சிக்கிக் கொள்கிறார் கார்த்தி. அதற்குப் பிறகு அவருக்கும், அவர் காதலுக்கும் என்ன ஆனது என்பதே கதை.  

1999 - கார்கில் யுத்தத்தில் போர் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து தப்பிக்க முயலும் கார்த்தி, முடியாமல் மரத்தில் சிக்கி, பனிவெளியில் கீழே சரிய, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கும் ஆரம்பக்காட்சி... ஆர்வமூட்டுகிறது. ‘லொகேஷன்களைத் தேர்வு செய்வதில் நான் எப்பவும் பெஸ்ட்’ என்கிறார் மணி. மற்றபடி... ப்ச்! 

படத்தின் பெரும் ப்ளஸ் ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் ரவிவர்மனின் கேமரா. ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் அசரடிக்கின்றன. ‘சாரட்டு வண்டியில’ பாடல்... ரம்மியம். அதேபோல, கார்த்தி பார்ட்டியில் நண்பர்களோடு ஆடும் ‘கேளாயோ’ பாடலின் ஆரம்பத்தில் வரும் இசைக்கு நம்மையும் அறியாமல் தாளமிடுகிறோம். 

காற்றுவெளியிடை, கார்த்தி, அதிதிராவ்

ரவிவர்மனின் கேமரா பல ஆஸம் காட்சிகளை அழகியலாக அள்ளி வந்திருக்கிறது. கார்த்தியும், அவர் காதலியும் ஜீப்பில் வேகமாகப் பயணிப்பது, காஷ்மீரின் மகா பள்ளத்தாக்குகள், பனிச் சரிவுகள், பாகிஸ்தான் சிறையின் பறவைப் பார்வை, மலைச் சரிவு சாலையின் ஓவர்வியூ, 'சாரட்டு வண்டி'யில் கண்ணாடியில் தெரியும் நடன பிம்பம் எனப் பல காட்சிகளில் ரவிவர்மன் ஜிலீர் காட்டுகிறார். 

மற்றபடி படத்தில் என்ன விசேஷம்? மணிரத்னம் பட க்ளிஷேக்கள்தான்! முதல் பார்வை காதல், முதல் சந்திப்பிலேயே டேட்டிங் அழைப்பு, ரிஜிஸ்டர் ஆபிஸ், கல்யாணத்துக்கு முன் கர்ப்பம், பிரிந்த காதலியைத் தேடும் பயணம் என வழக்கமான மணிரத்ன மார்க் சம்பவங்களே இந்திய எல்லையிலும் நிகழ்கிறது.

க்ளீன் ஷேவ்வும், கண்ணாடியுமாக வந்து 'அலைபாயுதே' மாதவன் ஸ்டைலில் ஆங்காங்கே புன்னகைக்கிறார் பைலட் கார்த்தி. கண்களை விரித்து கோபப்படும் இடங்களிலும், உடைந்து அழும் இடங்களிலும் கார்த்தியை ரசிக்கலாம். அதிதியிடம் சண்டைபோட்டுவிட்டு, அவர் விலகிச் சென்றதும் சட்டென்று முகம் மாறும் இடங்களில் சபாஷ் சொல்ல வைக்கிறார். 

காதலில் உருகும் காட்சிகளிலும் ஆண்களின் முரட்டுத்தனத்தைக் கண்டு எரிச்சலடையும் காட்சிகளிலும் அழகாக நடித்திருக்கிறார் அதிதி. காது மடல் சிவப்பும், கோப முக சிவப்பும் அதிதி ப்ளஸ்.  

காற்றுவெளியிடை

லொடலொட ஆர்.ஜே.பாலாஜியை, 'ஓ...', ‘ஆ..’ என்று மட்டுமே சொல்ல வைத்திருக்கிறார்கள். ‘நைஸ்’ சொல்லுமளவுக்கு என்ன இருக்கிறது? மருத்துவராக வரும் ருக்மணி, டெல்லி கணேஷ் என்று மற்றவர்களுக்கு மற்றுமொரு படம் அவ்வளவே. பாகிஸ்தான் சிறையில் இருந்து கார்த்தி தப்பிக்கும் காட்சிகள் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு வந்து சேரும் காட்சிகள்தான் படத்தின் பரபர காட்சிகள். ஏனென்றால், மற்ற சமயங்களில் எல்லாம் ‘ஃபைட்டர் பைலட்’ பேசிக் கொண்டே இருக்கிறார். மணிரத்னம் படத்தில் இவ்வளவு வசனமா..!? 

இரு நாட்டு எல்லை, ஸ்ரீநகர், லே என ராணுவ முகாம், போர் விமான பைலட் என அசத்தல் கேன்வாஸில் விரிகிறது படம். ஆனால், ஆரம்ப பில்ட்-அப்களுக்கு பின் `இரு மன ஈகோ’ மட்டுமே பேசு பொருளாக இருப்பது.... ஆவ்வ்..! இருப்பினும் ஆங்காங்கே கவனிக்க வைக்கின்றன சில ஈகோ தருணங்கள். ‘ரவி லீலாவை காதலிக்கிறான்... லீலா வி.சி-யை காதலிக்கிறா. ஆனா, வி.சி- வி.சி-யை மட்டும்தான் காதலிக்கிறான். அதான் பிரச்னை’ என கார்த்தி, அதிதி இடையிலான ஈகோவை சுட்டிக் காட்டுமிடம், ‘நீ என்னை மகாராணி மாதிரியும் நடத்துற.... திடீர்னு செல்ல நாய்குட்டி மாதிரியும் நடத்துற... நான் நானா இருக்கணும்!’ என காதலியின் மனநிலையை அழுத்தமாக உணர்த்துமிடம்.... போன்றவை சிற்சில தருணங்களே. மற்றபடி... மணி சாரும் மிஸ்ஸிங்.... மணி சார் மேஜிக்கும் மிஸ்ஸிங்!

 
 

திகட்டத் திகட்ட இமயமலையைப் பிரதேசத்தைச் சுற்றிக் காட்டுகிறார்கள். படம் முடியுமுன்னரே தியேட்டரை விட்டுக் கிளம்பி இமயமலைக்குச் செல்லத் தூண்டுவதுதான் ’காற்று வெளியிடை’ எஃபெக்ட்!

http://www.vikatan.com/cinema/movie-review/85763-kaatru-veliyidai-movie-review.html

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

மணி ரத்தினம் நல்லதொரு டைரக்ரர்.படம் எப்படி இருக்குதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை, மனைவியுடன் மாலை வாக்கிங் செல்லலாமென இப்படம் ஓடும் திரையரங்கை தாண்டி நடந்துசெல்லும்போது கூட்டம் அங்கே அதிகமாக தென்பட்டது.. மனைவியும் மணிரத்தினம் படம் என சொல்லவே, சரி பார்க்கலாமென டிக்கட் வாங்கி உள்ளே உட்கார்ந்தவுடன் படம் தொடங்கியது..

படம் துவங்கிய அரைமணி நேரத்தில் ஒரே தீயும் வாசனை..!இடைவேளை விட்டவுடன் தான் தெரிந்தது உள்ளே எரிந்தது ரசிகர்களின் வயிறு என்று..vomir2.gif

படம் முடியும் தருவாயில் ரசிகர்களிடமிருந்து ஒரே கைதட்டல், நானும் கைதட்டிவிட்டேன்.. அப்பாடா, இப்பொழுதாவது இந்தக் கழுத்தறுப்பிலிருந்து தப்பித்தோமென அனைவரும் தப்பியோடினோம்..!

இப்படம், இணையத்தில் பார்க்கக்கூட தகுதியில்லை..!!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

இப்படம், இணையத்தில் பார்க்கக்கூட தகுதியில்லை..!!

என்ன வன்னியர் இப்படி கவுத்து போட்டீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன வன்னியர் இப்படி கவுத்து போட்டீர்கள்?

ஏனுங்க, படம் ஆரம்பித்தலிருந்து வரும் பொம்பளைங்க இரண்டு பேரிடம் கார்த்தி ஊடுறார், பின் கூடுறார், மறுபடியும் ஊடல், பின் கூடல்..

ஊடல்

கூடல்

ஊடல்

கூடல் 

இதுவே இரண்டரை மணி நேரமும் ஓடினால், மனிசனுக்கு வரும் ஆத்திரத்தில் இயக்குனரை செகிட்டில் நாலு அறை விடலாமென தோனுது..!

No 'constructive message' at all..!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு செல்வராகவன் மாறி ஒரு சைக்கோ டைரக்டர் ..இவரின்ட மண்டை சரக்கு " அஞ்சலி" என்ற படத்தோடு தீர்ந்து போச்சு ... இவரின்ட கதை எல்லாம் இப்போ அடுத்தவன் பொண்டாட்டியை திருடுவது .. மகாபாரதித்தில் இருந்து உருவுவது .. திருட்டுதனாமா  முதலாளி ஆனவன கீரோவாக காட்டுவது ,, 

Quote

அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.

இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.

Quote

சாதாராணமான மனிதர்களுக்கு சரக்கு ஒரளவுக்குத்தான் இருக்கும் .. அது தீர்ந்து போச்சு என்றால் சம்பாத்தித்தை வைத்து சாப்பிட வேண்டியதுதானே ..! போக தலையெல்லம் நரைத்து இளவட்டங்கள் கதையை எடுக்கிறார் ..புதுசு புதுசா சொல்லி தரார் ..பெற்றதில் இருந்து காலேஜ் பீஸ் கட்டியவர்களான  ஆயி அப்பன் ( பெற்றோர் ) முன்பு எப்படி திருட்டுதனமா கல்யாணம் செய்து தாலியை மறைத்து கொள்வது அந்த கண்றாவியை கூட விட்டுவிடலாம் கல்யாணம் ஆகமலே எப்படி ஒன்றாக வாழ்வது என்று அடுத்தபடம்.. இதெல்லாம் கால கொடுமை ..!

டிஸ்கி :

இப்போ என்ன இந்த சரக்கு ஓடவில்லை என்றால் அடுத்து இந்தி தேசியத்திற்கு போவார் .. ஆப்கானிஸ்தானில் சொறி அண்டார்டிக்காவில்  அமைதிகாக்கும் படையில் சென்ற அரந்தசாமிக்கும் அந்த நாட்டில் உள்ள முனியம்மாவுக்கும் காதல் ஏற்படும் .. முனியம்மா காதலுக்காக உயிரே உயிரே .. என்று ஓடிவரும் காட்சியில் எதை மையபடுத்துவான் ..?  எப்பா சாமி உங்களுக்கு சரக்கு தீர்ந்து போச்சு என்றால் எங்களை போட்டு டார்ச்சர் பண்னாதீர்கள்..!  :cool:

 

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: 'காற்று வெளியிடை'- மணி மேஜிக் மிஸ்ஸிங்!

 

 
 
 
’காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ்
’காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ்
 
 

மணிரத்னத்தின் இயக்கத்தில், கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'காற்று வெளியிடை'. படம் குறித்த நெட்டிசன்களின் விமர்சனங்கள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

நட்புடன் சுரேசு

'காற்று வெளியிடை' - உயிரை எடுக்கும் போர் விமான பைலட். உயிரை காக்கும் மருத்துவர். இவர்களுக்குள் காதல் வந்தால்?

கார்கில் போர் சூழலில் கதை நகர்கிறது. பல சமயம் நகர மறுக்கிறது. பின்னணி இசையில் ரஹ்மான் அசத்தல். ரவி வர்மனின் ஒளிப்பதிவு குளிர்ச்சி. எல்லாம் இருந்தும் ஏனோ மணி மேஜிக் மிஸ்ஸிங்.

Stalin Navaneetha Krishnan

காற்று வெளியிடை- நீண்ட இடைவெளிக்கு பின் உருக வைத்த திரைப்படம்.

Jackie Sekar

திரைப்படம் நிச்சயம் நிறைய பேருக்கு பிடிக்க வாய்ப்பில்லை.. ஆனால் இதயத்தை திருடாதே, அலைபாயுதே பிடித்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். முக்கியமாக மணியின் எழுத்து வசீகரிக்க வைக்கின்றது.

படம் எப்படி என்று மற்றவர்களிடம் கேட்காதீர்கள்... காதலையும், காமத்தையும், வாழ்வியலையும் ரசிப்பவர்களை நிச்சயம் இந்த திரைப்படம் வசீகரிக்கும் என்பது என் எண்ணம்.

Suresh Adithya

கிரிக்கெட்டிலிருந்து தோனியும், சினிமாவிலிருந்து மணிரத்னமும் ரிடையர்ட் ஆகறது நல்லதுன்னு சொல்கிறது ரசிக புள்ளி விபரங்கள். #ஒரு காலத்துல என்னம்மா அடிச்சு ஆடுனாங்க...!!

Sudharshan Subramaniam

'காற்று வெளியிடை' பார்த்தபோது, "ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே" நாவல் நினைவுக்கு வந்தது. தனது மென்மையால் நாயகனைத் தன்வழிப்படுத்தும் பெண்.

பின்தங்கிய கருத்துகளை விதைப்பதில் தமிழ் சினிமாவின் மசாலா ஹீரோக்களையும் அவர்களின் படங்களையும் விஞ்ச முடியாது. பெண்களை இலகுவாகக் கைநீட்டி அடித்துவிடுவார்கள். சிலநேரங்களில் அதைப் பார்த்தே பெண்களுக்கு காதல் வந்துவிடும். அறிவு சார்ந்த தளத்தில் பெண்கள் பேசவோ தலையிட்டுவிடவோ கூடாது. அவர்களின் கருத்துக்களைக் கூறக்கூடாது.

'காற்று வெளியிடை' இவை அனைத்தையும் வெளிப்படையாகவே பேசுகிறது. அவனுடைய நற்குணங்களை ரசிக்கிற அதேநேரம், பெண் மீதான அடக்குமுறையை ஏற்றுக்கொள்ளாத பெண். படத்தின் ஏனைய விடயங்கள் பிடிக்கவில்லை என்றாலும் இதுபோன்ற கருத்தியல்களை புறக்கணித்துவிடமுடியாது.

Aathmaarthi RS

என்ன தான் ஆச்சு இந்த ஊருக்கு என்று தொடங்கும் சிகரட்டு நிறுத்த விளம்பரம் வருகிற அதே டோனில் என்னதான் ஆச்சு மணி ஸாருக்கு என்று தலையைத் தட்டிக் கொண்டே இருக்கும் உணர்வு.

மஞ்சள் நிலா @Manjall

காற்று வெளியிடை கண்ணம்மா...

யம்மா நல்ல பண்றீங்கம்மா..!

ஆல்தோட்டபூபதி‏ @thoatta

6 விவிஎஸ் லட்சுமணன், 5 புஜாராவ வச்சு டி20 விளையாடினா, என்ன வேகத்துல மேட்ச் போகுமோ, அந்த வேகத்துல படம் ஓடுதாம் #காற்று வெளியிடை

Johnson PRO‏ @johnsoncinepro

நான் - ஏசி தியேட்டரில் கூட குளு குளுன்னு இருக்குது #காற்று வெளியிடை.

ஏழை இளவரசன்‏ @Czsne

பெண்கள் உரிமைகளை தியாகம் செய்யாத அழகிய காதல் கதை.. #காற்று வெளியிடை.

ராஜி‏ @rajalakshmi251

சரட்டு வண்டில...

நம்மூர் கும்மி பாட்டும், வடநாட்டு தாண்டியாவும் கலந்த கலவை. #காற்று வெளியிடை

Suguna Diwakar

அண்ணன் இறந்ததைச் சொல்லும்போது அழகாகச் சிரிக்கிறார் அதிதி. அதிதி இப்படி என்றால் கார்த்தியின் குடும்பமோ இன்னும் வினோதமாக இருக்கிறது. கார்த்தியின் அம்மா, அப்பா, தங்கை, தம்பி என்று எல்லோரும் வினோதமாகப் பேசி, வினோதமாக நடந்து, எதற்கென்றே தெரியாமல் மருத்துவமனையில் சத்தமாகத் திட்டி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். உள்ளே கார்த்தியின் அண்ணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் (ஆனால் அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் அடுத்தவாரம்தான்!) நாமெல்லாம் பிரஸ்மீட்டுக்கு வந்த ஜெ.தீபா போல் பரிதாபமாக விழிக்கிறோம்.

ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தில் ஜெயிலுக்குப் போன வைகோவைப் போல் மௌனவிரதத்தைக் கடைப்பிடிக்கிறார். ஒரு காட்சியில் "நான் மாறுவேன்; உன்னால மாறிடுவேன்" என்பார் கார்த்தி. அதிதியோ "நாம ரெண்டுபேரும் செத்துச் சுண்ணாம்பா மாறிடுவோம்" என்பார் அதிதி. உண்மையில் செத்துச் சுண்ணாம்பாய் மாறுவது நாம்தான்.

வான்...வருவான்...கொல்வான்!

Nelson Antony Raj.c‏

காற்று வெளியிடை - சிலரால் மட்டுமே ரசிக்க முடியும்.

shan‏ @shanananth

காதலின் முரண் காதலர்களே! #காற்று வெளியிடை

Ajithkumar @ajithsimon

குழந்தை பிறக்கும் போது அண்ணன் கல்யாணம் பண்றான்..

குழந்தைய பள்ளிக்கூடம் அனுப்பற டைம்ல தம்பி கல்யாணம் பண்றான்.. அதுதான் காற்று வெளியிடை.

Muralidharan Kasi Viswanathan

தான் மட்டுமே முக்கியம், தன் விருப்பங்கள் மட்டுமே முக்கியம் எனக் கருதும் நாயகன், சுயமரியாதையை விரும்பும் நாயகி என்ற முரண்பாட்டை மையமாக வைத்து படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகளில் சில பாத்திரங்கள் அதைப் பேசவும் செய்கிறார்கள். ஆனால், முடிவில் கிடைப்பதென்னவோ, தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தும் நாயகனை ஏற்றுக்கொள்ளும் நாயகி என்ற கதைதான். அதுவும், மிக மிக சலிப்பூட்டும் வடிவில்.

மர்ஹபா (வலி Jee)‏ @coolguyvali

காதல்னா என்னனு தெரியனுமா மணிரத்னம் படம் பாருங்க!

காதலை உணரணுமா ரஹ்மான் இசைய கேளுங்க!

இரண்டும் ஒரு சேர வேண்டுமா, காற்று வெளியிடை பாருங்க

v2wit‏ @v2wit

காற்று வெளியிடை பார்க்க தேவையான பொருட்கள்: ரசனை- அரை கிலோ, பீலிங்ஸ்- கால் கிலோ.

Narasimahan Ramakrishnan

மணிரத்னம் படத்தை வெளியானவுடன் விழுந்தடித்து பார்த்து விட்டு, தலையில் வைத்து கொண்டாடுவது அல்லது கழுவி ஊற்றுவது ஒரு ரகம். கூலாக வேறு வேலை பார்ப்பது இன்னொரு ரகம். இதில் நீங்கள் எந்த ரகம்?

மோனிகா யாழினி

காற்று வெளியிடை- காத்துதான் வருது!

http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டிசன்-நோட்ஸ்-காற்று-வெளியிடை-மணி-மேஜிக்-மிஸ்ஸிங்/article9624535.ece?homepage=true

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ராசவன்னியன் said:

இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை, மனைவியுடன் மாலை வாக்கிங் செல்லலாமென இப்படம் ஓடும் திரையரங்கை தாண்டி நடந்துசெல்லும்போது கூட்டம் அங்கே அதிகமாக தென்பட்டது.. மனைவியும் மணிரத்தினம் படம் என சொல்லவே, சரி பார்க்கலாமென டிக்கட் வாங்கி உள்ளே உட்கார்ந்தவுடன் படம் தொடங்கியது..

படம் துவங்கிய அரைமணி நேரத்தில் ஒரே தீயும் வாசனை..!இடைவேளை விட்டவுடன் தான் தெரிந்தது உள்ளே எரிந்தது ரசிகர்களின் வயிறு என்று..vomir2.gif

படம் முடியும் தருவாயில் ரசிகர்களிடமிருந்து ஒரே கைதட்டல், நானும் கைதட்டிவிட்டேன்.. அப்பாடா, இப்பொழுதாவது இந்தக் கழுத்தறுப்பிலிருந்து தப்பித்தோமென அனைவரும் தப்பியோடினோம்..!

இப்படம், இணையத்தில் பார்க்கக்கூட தகுதியில்லை..!!

நன்றி ராசவன்னியர்! இந்த நல்ல சேதியை நாலுபேருக்கு கட்டாயம் சொல்லிவிட்டேன். :grin:

இதுதான் தமிழ்ப்பாணியா மணிரத்னம்? காற்றுவெளியிடை – விமர்சனம்

நாயகன் கார்த்தி, நாயகி அதிதிராவ் ஹைதரி ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு அழகான காதல் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் மணிரத்னம்.

கார்த்தியின் தோற்றத்தில் மாற்றம் செய்தால் வேடத்துக்குப் பொருந்துவார் என்று நினைத்திருக்கிறார்கள். அப்படி அமையாமல் சோதனையாகிவிட்டது.

நாயகி அதிதி நல்லவரவு. நன்றாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார்.

காதலர்களுக்குள் நடக்கும் ஊடல், கூடல் ஆகியனதாம் கதைக்களம் எனும்போது, கார்கில் போர், பாகிஸ்தான் சிறை ஆகிய எதுவுமே கைகொடுக்கவில்லை.

கல்யாணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வதை வலிந்து திணித்திருக்கிறார் மணிரத்னம். கார்த்தியின் கல்யாணம் நடக்காமலே அவருக்குக் குழந்தை பிறக்கிறது. கார்த்திக்கு ஒரு அண்ணன். அவரும் வளைகாப்பு நடத்த வேண்டிய நேரத்தில் கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்சி. அப்போது வரும் பாடலில் இது தமிழ்ப்பாணி என்றொரு வரி வேறு காதில் விழுந்து தொலைக்கிறது.

நாயகனின் குடுமபம், தமிழகத்தின் பிள்ளை சாதியைச் சேர்ந்த குடும்பம் என்பதற்கும் எந்த அடையாளமும் இல்லை.பாரதியின் பாடலும் மீன்குழம்பும் ஊட்டி வளர்த்த ஒரு தமிழ்த்தாயிடம் வளர்ந்த பிள்ளை என்று சொல்லிக்கொள்ள கார்த்தியிடம் ஒரு நல்ல அம்சம் கூட இல்லாமல் போனது சோகம்.

ஏ.ஆர்.ரகுமான் படத்துக்குப் பெரிதாக உதவவில்லை.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உழைப்பில் காட்சிகள் அழகு. அதேசமய்ம் எல்லாக்காட்சிகளுமே மணிரத்னத்தின் முந்தைய படங்களில் பார்த்த காட்சிகளாகவே இருப்பதால் சலிப்பு.

வசனங்கள் அரதப்பழசாக இருக்கின்றன. காதலியிடம் சண்டை வரும்போது, முறத்தை எடுத்துக்கொண்டு வரவேண்டாமா? என்று கேட்கிறார். மணிரத்னத்துக்குப் புறநானூறு தெரிகிறதாம்.

ஆனால், உன்னிடம் நாய்க்குட்டி போல நடந்துகொள்ள முடியாது என்று படத்தில் சொல்லும் நாயகி, காதலின் பேரால் படம் முழுதும் அப்படித்தான் நடந்துகொள்கிறார். இதுதான் பெண்ணியமோ?

மணிரத்னம், இனிமேல் திரைப்படம் எப்படி எடுப்பது என்று வகுப்பெடுக்கலாம். திரைப்படம் எடுக்கக்கூடாது.

http://www.tamizhvalai.com/archives/9702

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்  .....காற்று வெளியிடை ...காற்றிறங்கிப்போன சைக்கிள் டியுப் ....உள்ளே  ஒண்ணுமில்லை

படத்தில் மணி சாரை தவிர மற்ற எல்லோரும் உழைத்திருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன தான் சொன்னாலும் சேவிங்க் செய்த கார்த்திய விட அந்தப்பொண்ணு அழகா தெரிகிறாள் என் கண்ணுக்கு tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்க என்ன தான் சொன்னாலும் சேவிங்க் செய்த கார்த்திய விட அந்தப்பொண்ணு அழகா தெரிகிறாள் என் கண்ணுக்கு tw_blush:

வயது அப்படி...எல்லாரும் அழகாய்த்தான் தெரிவினம்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

வயது அப்படி...எல்லாரும் அழகாய்த்தான் தெரிவினம்..:cool:

ஹாஹாஹா சின்ன வயது தானே அப்படித்தான் இருக்கும் ஹிந்தி கார பிள்ளை போல என்ன  tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Nan padame paarthen. Kaathaliyudan kadalaipoda pokalam. Kudumpthudan ponal pinvilaivukal payangkaramaay irukkum. tw_confused:

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, suvy said:

Nan padame paarthen. Kaathaliyudan kadalaipoda pokalam. Kudumpthudan ponal pinvilaivukal payangkaramaay irukkum. tw_confused:

Why this sudden Tamiங்லிஷ்..? embaras.gif  vil-roulelangue.gif

1 hour ago, suvy said:

Nan padame paarthen. // நான் படமே பார்த்தேன்!!

அப்படி வேற என்னத்தைத்தான் பார்த்தீங்களோ :grin:

1 hour ago, குமாரசாமி said:

வயது அப்படி...எல்லாரும் அழகாய்த்தான் தெரிவினம்..:cool:

பனை மரத்துக்கு சேலையை சுத்திவிட்டாலும் சுத்தி சுத்தி ஆவெண்டு வாய பிளந்துகொண்டு பாக்கிற வயது உது கண்டியளோ :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

 

பனை மரத்துக்கு சேலையை சுத்திவிட்டாலும் சுத்தி சுத்தி ஆவெண்டு வாய பிளந்துகொண்டு பாக்கிற வயது உது கண்டியளோ :grin:

அதென்னவோ அந்த பனை மரமும் பெண்ணாக தெரிந்த்தால் ரசிப்போம்ல  அழகு  அழகு  அதிலும் அவள் அழகு tw_blush:

  • தொடங்கியவர்

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ காப்பி படமா? படக்குழு விளக்கம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படம் காப்பி படம் என்பதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

201704101540147156_Maniratnam-Kaatru-Vel
 
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்த ‘காற்று வெளியிடை’ கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. மணிரத்னம் படங்களில் இதுவரை எந்தளவிற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்குதான் அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. அதேநேரத்தில், படம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த படம் கொரியன் சீரியலான ‘டீசென்டன்ட்ஸ் ஆப் த சன்’ என்பதன் அப்பட்டமான காப்பி என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. இந்த தொடரின் நாயகன் ராணுவத்தில் பணிபுரிவர். நாயகி ஒரு டாக்டர். இருவருக்கும் இருக்கும் மோதல், காதல் இதுதான் இந்த தொடரின் கதை. அந்த தொடரின் கதையும், காற்று வெளியிடை படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

201704101540147156_kaatu-1-X._L_styvpf.g

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இந்த படம் 1971-ல் போர் விமானியாக இருந்த திலீப் பரூல்கர் என்பவருடைய விமானம் பாகிஸ்தானால் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது, அவர் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1972-ல் அவர் தன்னுடன் அடைக்கப்பட்டிருந்த இரண்டு சிறை கைதிகளுடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.

இந்த உண்மை கதை ‘Four miles to Freedom’ என்ற பெயரில் புத்தகமாக பெய்த் ஜான்ஸ்டன் என்பவர் எழுதியிருக்கிறார். ‘காற்று வெளியிடை’ படத்தில் சில காட்சிகள் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி எந்த சீரியலின், படத்தின் காப்பி கிடையாது என்று தெரிவித்துள்ளனர். 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/04/10154014/1079191/Maniratnam-Kaatru-Veliyidai-Copy-film-team-explain.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிரத்தினம் நல்ல டைரக்டர் தான்....ஆனால் எல்லா விடயத்திலும் திறமையானவர் அல்ல...


பின்னணியில் இருந்த யாரோ ஒருவர் சொதப்பிவிட்டார். அவ்வளவுதான்.:cool:


நீண்ட காலம் ஒரே சரக்கை வைத்து ரசம் காய்ச்சிய இசையமைப்பாளரும் இங்கேயும் இன்னும் பல படங்களிலும் கோவிந்தாவாகினார்.

ஆனால் நிச்சயம் விருது கொடுப்பார்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முனிவர் ஜீ said:

அதென்னவோ அந்த பனை மரமும் பெண்ணாக தெரிந்த்தால் ரசிப்போம்ல  அழகு  அழகு  அதிலும் அவள் அழகு tw_blush:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

அவ்வ்வ்வ்...... :grin: :grin: :D: 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

அவ்வ்வ்வ்...... :grin: :grin: :D: 

அப்படியே வாய்க்கு சக்கரை போடணும் அண்ண 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ராசவன்னியன் said:

Why this sudden Tamiங்லிஷ்..? embaras.gif  vil-roulelangue.gif

இன்னும் இரண்டு மூன்று நாள் எழுத்து அப்படி இப்படி தான் இருக்கும் வன்னியர். ?

  • தொடங்கியவர்

’காதலை ஃபேண்டஸி ஆக்கலாம்... காஷ்மீரையுமா?!’ - 'காற்று வெளியிடை' மணிரத்னத்துக்கு ஒரு ரசிகையின் கடிதம்

காற்று வெளியிடை

மீபத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தினைப் பற்றிய பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஒரு புறம் படம் பிடிக்கவில்லை என்றும், மற்றொரு புறம் படத்தை புரிந்துகொள்ள உங்களுக்கு அறிவு பத்தவில்லை என்றும், படத்தை பற்றிய விவாதங்கள், விமர்சனங்கள் சமூக வலைதளங்களை மட்டுமல்லாமல், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடங்களையும் நிறைத்து வருகிறது. 

மணிரத்னம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த முகங்களில் ஒருவர்தான். இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். பெரும்பாலான படங்கள் வெறும் காதலை பற்றி மட்டுமே மையக்கதையாக கொண்டிருந்த நேரத்தில், நண்பர்களுக்கு இடையேயான ஒரு பந்தத்தை சொல்லும், 'தளபதி' என்கிற நண்பர்களுக்கான காவியத்தை படைத்தவர். இன்றைக்கும் சூர்யா-தேவராஜ் என்று ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளும் ‘உயிர் நண்பர்களை’ பார்க்க முடிகிறது என்றால், அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்குமான காட்சிகளை செதுக்கியிருப்பார் மணிரத்னம். தளபதி படத்தில் மட்டுமல்ல... அலைபாயுதே படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ‘பயந்துட்டியா?’, ‘உயிரே போய்டுச்சு’, ‘பொண்டாட்டி செத்தா ஜாலியா இருக்கலாம்-ன்னு பாத்தியா’ என்கிற மாதவனுக்கும் ஷாலினிக்கும் இடையிலான உரையாடல்; மெளன ராகம் படத்தில், ‘உனக்கு என்ன வேணும்னாலும் சொல்லு. வாங்கித் தரேன்’ என்று மோகன் கேட்க ‘எனக்கு விவாகரத்துதான் வேண்டும்’ என்று ரேவதி சொல்லும் காட்சி; அதே படத்தில், ‘நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊருரா மாதிரி இருக்கு’ என்று ரேவதி சொல்லும் காட்சி... என இன்னும் எத்தனையோ நிதர்சனமான நிகழ்வுகளை, மனிதர்களின் உணர்வுகளை அருமையாகக் காட்சிப்படுத்தி, நம் கண் முன்னே நிறுத்தியவர் மணிரத்னம். இவருடைய ரோஜா, தில் சே, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட அரசியல் படங்கள் மட்டுமல்லாமல் எல்லா படங்களிலும், கதைகளிலும், அவை காட்சிப்படுத்தப்பட்ட விதங்களிலும் நமக்கு பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது என்பதும் உண்மை. 

ஒரு கலைஞனுக்கு அவரை நோக்கி வரும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. அதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் கலைஞனின் பாடு. ஆனால், அதை விட மிக முக்கியமானது ஒரு கலைஞன் காலத்துக்கு ஏற்றார் போல் மாறுவதும், அவரின் கலைப்படைப்பை அந்த காலத்துக்கு ஏற்றார் போல் தருவதும். ஆனால், அவ்வாறான ஒரு மாற்றம் மணிரத்னம் படங்களில், சற்று காணாமல் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சமீபத்தில், வெளியான ‘காற்று வெளியிடை’ படத்திலும் அது அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக தேச பக்தியை அவர் காட்டிய விதம்.

படத்தில் ஒரு காட்சியில், கார்த்தியுடன் சேர்ந்து இருவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிக்கும் போது ஒரு லாரியை மடக்கி ஏறுவார்கள். இதில் அந்த ஆப்கானி லாரி ஓட்டுனர், 'நீங்கள் பாகிஸ்தானியா?’ என்று கேட்பார். அதற்கு அவர்கள் நாங்கள் இந்தியர்கள் (ஹிந்துஸ்தானி) என்பார்கள். அதற்கு அந்த லாரி ஓட்டுநர், ‘நம்ம ஆளுதான்’ என்பார். அவர்கள் ஹிந்துஸ்தானிகள் என்று தெரிந்ததும், அவர்கள் தப்ப அந்த லாரி ஓட்டுநரும் உதவுவார். 

நடுவில் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டும்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மடக்கிப் பிடிக்க முயற்சி செய்யும்போது, லாரியை அலேக்காகத் தூக்கி, எல்லையில் நடப்பட்டிருக்கும் பாகிஸ்தான் கொடியை சாய்த்துவிட்டு தப்புவதாகக் காட்சிப்படுத்தியிருப்பார். லாரி மீண்டும் ரோட்டுக்கு வரும்போது பாகிஸ்தான் கொடி மெல்ல கீழே சாயும். 

தினம் தினம் மாறி வரும் இந்த உலகில், நாளுக்கு நாள், நொடிக்கு நொடி பிரேக்கிங் நியூஸ் ஓடும் ஊரில், 25 வருடங்களுக்கு முந்தைய (ரோஜா படத்தில், எரிந்து கொண்டிருக்கும் இந்தியக் கொடியை அரவிந்த் சாமி அணைக்கும் காட்சியை) 'கொடி சென்டிமென்ட்டை' எப்படிதான் மணி சார் வைத்தார் என்று தெரியவில்லை. எல்லைகளை மதிக்காமல், எல்லைகளற்ற தேசம் விரும்பும், பயணங்களின் மீது காதல் கொண்ட இளைஞர்களுக்கு இடையே இந்தக் காட்சி சுத்தமாக ஒட்டவே இல்லை. 

மணிரத்னம்

மேலும், இந்த கதை நிகழும் காலகட்டமாக காட்டப்படுவது கார்கில் போர் நடைபெறும் காலகட்டம். அந்தக் காலகட்டத்தில், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவு அளித்ததாக வரலாறு சொல்கிறது. பிறகு எப்படி அந்த ஆப்கானி, ஒரு ஹிந்துஸ்தானிக்கு இவ்வளவு வரவேற்பு அளித்தார் என்று புரியவில்லை. அதுமட்டுமல்லாமல், கதை நகரும் ஆண்டு 1999 அதற்கு சற்று முந்தைய காலகட்டம். ஆனால், 1990-ல் இருந்து ராணுவ சிறப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் ஒரு இடத்தில், அதுவும் தெற்காசிய பிராந்தியங்களில் முக்கியமான அணு ஆயுத பலத்தோடு இருக்கும், இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் எல்லைப் பகுதியில் எப்படி எல்லோரும் இவ்வளவு எளிமையாக இரவு நேரங்களில்கூட வெளியில் சென்று வருகிறார்கள் என்றே தெரியவில்லை. அதுவும் உலகில் மிக அதிக அளவில் ராணுவமயப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாக உலக நாடுகள் குற்றம் சாட்டும் பகுதி காஷ்மீர். ஆனால், போர் பதற்றத்தில் இருக்கும்போதுகூட யாரும் அங்கு பரிசோதிக்கப்படுவதில்லை; எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம்; ராணுவமோ, மத்திய சிறப்பு பாதுகாப்பு படையோ, காவல் துறையோ கண்டுகொள்ளாது என்றெல்லாம் காட்டினால், அதை சிறு பிள்ளை கூட நம்பாதே.

போர் என்றால் முதலில் பாதிக்கப்படுவது இரு நாட்டு மக்கள்தான்; இந்தப் போரில் 30,000 மக்கள் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறினர். அதனை ஒரு ஃபிரேமில் கூட காட்டவில்லை. அதை கூட ஏன் என்று கேட்காமல் ஏற்றுக் கொள்ளலாம். நீங்கள் ‘குவியப்படுத்தி’ காட்டி இருக்கும் ராணுவ கேம்ப்களில் இருந்து 11,000 கடிதங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு பறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த மாதிரியான எந்த பரபரப்பையும் காட்டாமல், போருக்கு அடையாளமாக கார்த்தி குண்டு போட செல்வதை மட்டுமே காட்டி இருக்கிறீர்கள். அதுவும் அதற்கு முந்தைய காட்சியில் கார்த்தி, அதிதி-யின் பெற்றோர்களிடம் சண்டை பிடித்து வருவது போன்ற காட்சியை எல்லாம்… என்ன வென்று சொல்வது. உங்களுடைய படங்கள் எல்லாமே விஷுவல் ட்ரீட் ஆக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அதற்காக போர் நடைபெறும் ஒரு பகுதியை ஏதோ சொர்க்க லோகமாக காட்டி இருக்கிறீர்களே மணி சார்; போரை பற்றி அறியாத, யாரைப் பற்றியும் கவலை இல்லாத இன்றைய 'யோ யோ' தலைமுறை? போர் என்றால் உலுலாய்க்கு என்று நினைத்துக் கொள்ள மாட்டார்களா? 

படத்தில் மூன்று, நான்கு இடங்களில்தான் காஷ்மீரிகளை பார்க்க முடிந்தது. அவர்களும் பெரும்பாலும் ‘வேலைக்காரர்களாகவும், எடுபிடிகளாகவும்’ மட்டுமே இருந்தார்கள். இது சத்தியமாக ஏன் என்று தெரியவில்லை. எங்களுக்கு ஒரு காஷ்மீரை பார்த்தது போல் இல்லை. பனி பிரதேசம் ஒன்றுக்கு தமிழ் நாட்டை ஷிஃப்ட் செய்ததுபோல் இருந்தது. அங்கு இருந்தவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசக்கூடிய மக்கள். பேருக்கு ஒரு ஆந்திரக்காரரையும், ஒரு அச்சம்மாவையும் (மலையாளி), ராணுவத்தில் சில வட இந்திய உடல் மொழியில் உள்ளவர்களையும் சேர்த்து இருக்கிறார்கள். மேலும், கார்த்தியின் வசனங்களில் பாரதி வெளிப்படுகிறார். ஆனால், படத்தின் பெரும்பாலான இடங்களில் தமிழ் உச்சரிப்பு கொடுமை.

அதுமட்டுமில்லை, படத்தில் இரண்டு முக்கியமான இஸ்லாமிய கதாபாத்திரங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஒன்று இலியாஸ். கதாநாயகி கார்த்திக்கை காதலிக்கிறாள் என்று தெரிந்தும், கேப் கிடைக்கும் போதெல்லாம், இருவரும் சண்டை இடும் போதெல்லாம் கதாநாயகிக்கு 'ரூட் விடும்’ ராணுவ முகாமைச் சேர்ந்த மருத்துவர். இவர் எப்போதும் ‘லைட்டாக வழிந்துகொண்டே’ இருப்பார். மற்றொருவர் பாகிஸ்தான் சிறையில் கார்த்தியுடன் இருக்கும் போர்க்கைதி. சிறையில் இருந்து தப்பிக்க ‘வெடிகுண்டு’ பயன்படுத்தலாம் என்று சொல்லும் ‘வன்முறை’யில் நம்பிக்கை கொண்ட ஒரு கதாபாத்திரம். அது மட்டுமல்ல. இவரால்தான் ஆப்கானிஸ்தானை அடைவதற்கு முன்னரே மீண்டும் பாகிஸ்தான் போலீஸாரிடம் மாட்டிக் கொள்வார்கள்.

பாம்பே படத்தில்கூட ஏதோ அவ்வளவு படுகொலைகளுக்குப் பின் இரண்டு தரப்பை சேர்ந்த தலைவர்களும் அதற்கு வருத்தப்பட்டதாக காட்டப்பட்டது. பாம்பே படுகொலைக்குப் பின் பால் தாக்கரே ''இஸ்லாமியர்களுக்கு நாம் யாரென்று காட்டிவிட்டோம்” என்றல்லவா பேசினார்? சிவ சேனா இந்து வெறி கும்பல், எப்படி படுகொலையை நடத்தியது என்று அனைவருக்கும் தெரிந்திருந்தும், ஏதோ இரண்டு தரப்புமே வெறிகொண்டு அலைந்ததாக காட்டினீர்கள்? எந்தெந்த வீட்டில் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்று கதவுகளில் குறித்து வைத்து கொலைவெறியாட்டம் நடத்தியவர்களையும், பதிலுக்கு ஒரு சில இடங்களில் தற்காப்பு தாக்குதல் நடத்தியவர்களையும் எப்படி ஒன்றாகவே பாவிக்க முடியும் என்று தெரியவில்லை. ரோஜா படத்தில், இஸ்லாமியர்களும், தில் சே படத்தில் வடகிழக்கு மக்களும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தமிழீழ விடுதலை அமைப்பும் இப்படித்தான் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். பாகிஸ்தானியர்களையும் இஸ்லாமியர்களையும் வெறுப்பதுதான் இந்திய தேசியப் பற்றா? இன்னும் எத்தனை படங்களில் இதனை வைத்தே தேசப் பற்றைக் காண்பிப்பார்கள் என்று தெரியவில்லை. 

காற்று வெளியிடை

நீங்கள் அனைவருமே விதவைகள் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், காஷ்மீரில் அரை விதவைகள் நிறைய இருக்கிறார்கள். அது என்ன அரை விதவை? காஷ்மீரில் சிறப்பு ராணுவ சட்டம் நடைமுறையில் இருக்கிறதல்லவா? சிறப்பு ராணுவ சட்டத்தின் மூலம், இந்திய ராணுவம் அந்தப் பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும், தேடுதல் வேட்டையில் ஈடுபடலாம். அப்போது யாரை வேண்டுமானாலும், வாரண்ட் இல்லாமல், காரணம் சொல்லப்படாமல் கைது செய்யலாம். ஏன், ‘அமைதியை நிலைநாட்டுவதற்காக’ சுட்டுக் கொல்லப்படலாம். அந்த தேடுதல் வேட்டையில் பிடித்து செல்லப்பட்டு உயிரோடு இருக்கிறார்களா, செத்துவிட்டார்களா என்று கூட தெரியாமல் தங்கள் கணவரை உயிருடனோ அல்லது சாமாதியாகவோ பார்க்க மாட்டோமா என்று காத்திருப்பவர்கள் பேர்தான் அரை விதவைகள். இதெல்லாம் தற்போது நடைபெறுகிறதுதானே என்று யாரேனும் வாதிட நேரிடலாம். 

உங்களுக்கு குனான் புஷ்பாரா கொடூர சம்பவம் பற்றி தெரியுமா? காஷ்மீரில் உள்ள குனான் புஷ்பாரா உள்ளிட்ட கிராமங்களில் இந்திய ராணுவம் 1991-ம் ஆண்டு ‘தேடுதல் வேட்டை’ என்கிற பெயரில் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது. அதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 23. ஆனால், உண்மையில் அன்று இரவு இந்திய ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல். ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி காஷ்மீரில் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். பத்தாயிரம் பேர் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்றே தெரியாமல், ‘காணாமல் அடிக்கப்பட்டு’ இருக்கிறார்கள். காஷ்மீரில் இன்றைய அளவில் 2,500-க்கும் மேற்பட்ட அரை விதவைகள் வாழ்ந்து வருகிறார்கள். 1989 முதல் 2006-ம் ஆண்டு வரை நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து 510 காஷ்மீரிகளிடம் எடுத்த கணக்கெடுப்பில், 12 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள், பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

ஆனால், அந்த மண்ணை சேர்ந்த மக்களிடம்தான் இந்தியப் பிரதமர் மோடி, 'அவர்கள் தீவிரவாதத்தை கை விட வேண்டும்' என்றும் 'அமைதி நிலவ அவர்கள் சுற்றுலாத்துறையை வளர்க்க வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த நிலையில் உள்ள ஒரு பகுதியை‘காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீராக’ மட்டுமே நாம் பார்த்தால், கண் முன்னே அரங்கேறி வரும் மற்றொரு மிகப்பெரிய இனப்படுகொலையை கடந்து சென்றவர்கள் ஆகி விடமாட்டோமா? இந்தப் படத்தில், இன்னும் முக்கியமாக பார்க்க வேண்டியது, படத்தின் கதாநாயகி ஒரு ‘சுயமரியாதை’ உள்ள பெண். கதாநாயகன் முரட்டு குணம் படைத்த ஆணாதிக்கவாதி. ஆனால், கதாநாயகன் என்னதான் அவருடைய சக ராணுவ வீரர்களுக்கு மத்தியில் வைத்து அசிங்கப்படுத்தினாலும், தள்ளிவிட்டாலும், கதாநாயகர் ஒரு மன்னிப்பு கேட்டதும் மன்னித்து விடுகிறார். கடைசியில் விட்டுப் பிரிந்து சென்றாலும், கார்த்தி தேடி வந்து மன்னிப்பு கேட்டதும் இணைந்து விடுகிறார். அதாவது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன். ஆண் முரடன். அவனை மாற்றுவதுதான் பெண்ணுக்கு வேலை. அதிலும் கதாநாயகி வெறுமனே சுயமரியாதை உள்ள ஒரு பெண்ணாக காட்டவில்லை. கதாநாயகன் என்ன சொன்னாலும், ‘பனிச்சரிவு எற்பட்டு நாம் செத்துவிடுவோம்’ என்று கூறினாலும் 'நான் ஒரு பெண் என்பதால் தான் இப்படி நடத்துகிறாய்' என்று சொல்லும் ஒரு வறட்டு பெண்ணியவாதி. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு நடந்தேறி வரும் வேளையில், பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது மட்டும்தான் என்று ஆண்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், இரு பாலினத்திலும் முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்படும் இந்த நேரத்தில், பெண்கள் ‘வறட்டு பிடிவாதம்’ பிடிப்பவர்கள்தான், பெண்ணியம் என்று பேசி ‘சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத முட்டாள்கள்’ என்பது போன்றே இந்தப் படம் சித்தரிக்கிறது. கதாநாயகனின் அம்மாவை அவரது அப்பா திட்டும்போது கதாநாயகன், 'பொறுத்துக்கொள்ள மாட்டேன்' என்கிறார். ஆனால், தன் காதலியை மட்டும் அடிமையாக நடத்துகிறார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஆண்கள் ‘பீஸ்ட்’ ஆகவும், பெண்கள் ‘பியூட்டி’யாகவுமே இருக்கப்போகிறார்கள்? மணிரத்னம் அவர்கள் இதனை திட்டமிட்டே செய்தாரா என்று நமக்கு தெரியாது. ஆனால், இந்தக் காட்சிகள் நமக்கு இதையே உணர்த்துகின்றன. புதிய சிந்தனைகளை தன்னுடைய படங்களில் வைப்பதற்கு முன்னுதாரணமாக விளங்கும் மணி சார் படங்களில், இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. 

தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. முன்பு போல் அல்லாமல் உலக விஷயங்களை நொடிப்பொழுதில் இணையதளங்களில் இளைஞர்கள் பார்த்து விடுகிறார்கள். காஷ்மீர் பிரச்னை குறித்த புரிதல் மக்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. ஆனால், இன்னும் இப்படி ‘க்ளிஷே’வாக காட்சிப்'படுத்த' வேண்டாம். இது போன்ற கதைக்களங்களை படமாக்கும்போது, தயவு செய்து அந்த கதைக்களத்தை சேர்ந்த மக்களிடம் சென்று பேசி, அங்கிருக்கும் நடைமுறைகளை ஆழமாக தெரிந்துகொண்டு, படைப்புகளை இயக்குனர்கள் வெளியிட வேண்டும். நாம் ஆப்பிள் சாப்பிடவும், சுற்றுலா செல்லவும், நம்முடைய படத்தை திரையரங்குகளில் ஓட்டுவதற்காகவும், வணிக நோக்குக்காகவும் அந்த மக்களை ரத்தம் சிந்த வைக்க வேண்டாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/86078-dear-manirathnam-dont-romanticize-the-kashmir-issue-an-open-letter.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.