Jump to content

கோபம்


Recommended Posts

ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அருமையாக இருக்கும் என தோன்றியது. கைத்தொலைபேசியில் தலைபேசி வழி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் டவாலி போல மூன்று முறை கேட்ட பின்னரும் அவள் அசைவதாயில்லை. பல்லாயிரத்தி பல நூற்றி சொச்சம் முறையாக அவள் மீது கோபம் வந்தது.
"தேநீர் வருமா வராதா?"
"ஆ..." காதிலிருந்ததை அகற்றி கேட்டாள். உள்ளே கோபம் வந்தாலும் அமைதியாய்..
"தேநீர் வருமா வராதா?"
" தேநீர் எப்படி தானாய் வரும்?"
இது நகைச்சுவையாய் தோன்றவில்லை
"எனக்கு இப்போது தேநீர் வேண்டும்"
"எனக்கும் இப்போது வைர அட்டிகை..தங்க காப்பு பட்டுசேலை எல்லாம் வேண்டும்..ஆசைப்படுவதெல்லாம் உடனே நடக்குமா என்ன"
"சாதரண தேநீருக்கு என்ன எகத்தாளம்"
"அப்படியா..சாதரண தேநீரா..நீங்களே தயாரித்து அருந்துங்கள்"
கோபம் தலைக்கேற அவள் கையிலிருந்த கைத்தொலைபேசியை வாங்கி ஓங்கி நிலத்தில் எறிந்தேன். பிரதிபலிப்பாய் பெருங்கோபத்தை எதிர்பார்த்தேன். அமைதியாக உள்ளே போனவள். சிறிது நேரத்தில் தேநீருடன் வந்தாள்.
"ஒரு கோப்பை தேநீருக்காக உங்கள் தொலைபேசியையே உடைத்துவிட்டீர்களே..நல்ல வேளை நான் என் கைத்தொலைபேசியை வைத்திருக்கவில்லை"
ஆ..உடைந்தது எனது கைத்தொலைபேசியா..தலை கிறுகிறுக்க அப்படியே உறைந்துபோனேன்.

ஆத்திரம் கண்ணை மறைக்கும்.
நமது கோபம் நமக்கே நம் சாபம். 1f642.png:-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பை தேநீருக்கு ஒரு போண் போன கதை நன்றாக இருக்கிறது விகட கவி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா..., உங்களுக்கு ஒரு புதுக் கைபேசி கிடைக்கப் போகிறது. நல்லதொரு மாடலாய் வாங்க வாழ்த்துகின்றேன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் சந்தோசம்.

போன் காசுக்கு எத்தினயோ தேநீர் வாங்கியிருக்கலாம்.

நாமெல்லாம் சமைச்சே சாப்பிடறம் நீங்கள் என்னடாவென்றால் ஒரு தேநீருக்கு இவ்வளவு பிபி ஏறுறது கூடாதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபத்தைவிட பெண்டாட்டி மேலான அதிகாரம்தான் கதையில் தெரிந்தது.. கற்பனைதானே விகடகவி?:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தலைபேசி

என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

என்றால் என்ன?

 head  phone....?

Link to comment
Share on other sites

கதையின் முடிவில் சிரிப்பு தவிர்க்க முடியவில்லை விகடகவி. அதுசரி கோபம் வந்தா நீங்களும் தொலைபேசியை உடைப்பீங்களோ ?

Link to comment
Share on other sites

எனக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது .ஆரம்ப காலத்தில் நானும் கொஞ்சம் ஆணாதிக்க பேர்வழியாக இருந்திருக்கிறேன் .இரண்டு குழந்தைகள்  பத்து வருட வாழ்வில் பெண்கள் மீது மரியாதையும் மதிப்பும் உருவாகிவிட்டது.தாய்மை கொஞ்சம்  எனக்கும் புரிகிறது.இது கதை மட்டுமே .கோபம் மீறி எதையும் செய்ய கூடாது என்ற நீதிக்கதை மட்டுமே :-)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.