Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரவணபவன் ராஜகோபாலாலின் 700 மில்லியன் டாலர் வெற்றிக்கதை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..!

குழந்தைப்பருவம்

ஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் கே.கே நகரில் ஒரு ஹோட்டல் கூட இல்லை என்று வருத்தப்பட்ட போது திரு. P.ராஜகோபால் ஒரு ஹோட்டலை தொடங்கினார். இப்போது அது தென்னிந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஹோட்டல்களின் சங்கிலித் தொடராக வளர்ந்துள்ளது. வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதால் P. ராஜகோபாலின் கதையைக் கேட்கும் போது ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக வெளியில் வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது. அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சி, ஒரு தனி மனித சாம்ராஜ்யம், குற்றம், கட்டுக்கடங்கா உணர்ச்சி, அதிகாரம் என மற்றும் பல முழுமையான விஷயங்களைக் கொண்டது இவரது வாழ்க்கை.

சரவணப் பவன்

சரவணப் பவன்

தற்போது சரவணப் பவனுக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் கடல் கடந்து வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன. அவர் தனது சுயசரிதையில் "நான் எனது இதயத்தை வெற்றியின் மீது பொருத்திவிட்டேன்" என்று கூறுகிறார்.

குழந்தைப்பருவம் 1947 - ஆம் ஆண்டு ஒரு மண் குடிசையில் பிறந்த ராஜகோபால் தமிழ்நாட்டிலுள்ள புன்னையாடி என்ற கிராமத்திலிருந்து வந்தவர். அவருடைய கிராமத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லை. ஏழாம் வகுப்போடு அவர் பள்ளிப் படிப்பிலிருந்து நின்று விட்டார். வயிற்றுப் பிழைப்புக்கு சம்பாதிப்பதற்காக ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். மேசைகளைத் துடைக்கும் வேலையைச் செய்து அங்கேயே தரையில் தூங்குவாராம் ராஜகோபால்.

டீ -

சாமானியர்களின் ரத்தம் மெதுவாக டீ போட கற்றுக் கொண்டார். விரைவில் ராஜகோபால் ஒரு மளிகைக் கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலையில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ராஜகோபால் அவருடைய அப்பா மற்றும் மைத்துனரின் உதவியோடு சொந்தமாக ஒரு மளிகைக் கடையைத் திறந்தார். வியாபாரத்தில் அதுவே அவரது முதல் அனுபவம்.

முதல் அனுபவம்.

கடையை நடத்த அவர் நிறையச் சவால்களைச் சந்தித்தார். திட்டமிட்டபடி வேலைகள் நடக்கவில்லை, இளைஞரான ராஜகோபாலுக்கு ஒரு கடையை நடத்துவதென்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் அவர் தனது மனோதிடத்தால் எல்லாச் சவால்களையும் ஜெயித்தார். பிறகு அவரது நிலைமை மேம்பட ஆரம்பித்தது.

மளிகைக் கடை

1979 ஆம் ஆண்டு அவரது மளிகைக் கடையில் ஒரு விற்பனையாளருடன் மேலே சொல்லப்பட்ட உரையாடல் நடந்தது. இந்த உரையாடல் தான் 1981 ஆம் ஆண்டுச் சரவணபவன் பிறப்பதற்குக் காரணமானது. அந்தக் காலத்தில் வெளியே சாப்பிடுவது நாகரிகம் என்பதை விட அத்தியாவசியமாக இருந்தது. வெளியிடங்களில் சாப்பாட்டிற்கு இருந்த தேவையை உணர்ந்த ராஜகோபால் அந்த வியாபாரத்தில் குதித்தார்.

தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி

ஆரம்பகாலம் முதலே ராஜகோபால் உணவின் சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினார். இப்போது இருப்பது போல இந்த வார்த்தைகளெல்லாம் முக்கிய நடைமுறையாக ஹோட்டல்களில் இல்லாத ஒரு காலத்திலேயே அவர் அதையெல்லாம் கடைபிடித்தார்.

நஷ்டம்

அவரிடம் மட்டமான சமையல் பொருட்களைப் பயன்படுத்தும்படியும் மற்றும் பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தைக் கொடுக்கும்படியும் ஆலோசனை கூறிய ஒருவரை ராஜகோபால் திட்டி அனுப்பி விட்டார். தொடக்கக் காலத்தில் சிறந்த தரமான உணவை கொடுப்பதற்காக ஹோட்டலை நஷ்டத்திற்கு நடத்த வேண்டி வந்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் ரூபாய் 10,000 நஷ்டமடைந்தார். ஆனால் காலப்போக்கில் அவருடைய நற்பெயர் வளர்ந்து நஷ்டங்கள் லாபங்களாக மாறின.

நெறிமுறைகள்

மற்றும் பணியாளர்கள் சரவணபவனின் வெற்றியின் ரகசியம் நல்ல தரமான உணவை பரிமாறுவதில் மட்டுமில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதிலும் மற்றும் பணியிடத்தின் உயர் தரத்திலும் உள்ளது.

வாழை இலை

ராஜகோபால் தட்டின் மீது வாழையிலையைப் பரப்பி அதன் மீது உணவு பரிமாறும் பழக்கத்தைத் தொடங்கினார். அது ஏற்கனவே வேறொருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுகிறோமே என்கிற வாடிக்கையாளர்களின் சஞ்சலத்தைப் போக்கியதோடு பணியாளர்களுக்குத் தட்டுக்களைக் கழுவும் வேலையையும் சுலபமாக்கியது.

பணியாளர்கள் மீது கவனம்

ராஜகோபால் உணவில் முடி விழுந்திருக்கிறது என்கிற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வராமலிருக்கப் பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டச் செய்தார். மேலும் அது பணியாளர்களுக்குக் கண்ணியமான தோற்றத்தையும் அளித்தது. அடுத்த நாள் காலையில் வேலையைப் பாதிக்கும் என்பதால் பணியாளர்களில் யாரும் பின்னிரவு நேரங்களில் சினிமா பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

நல்ல மனிதர்

ராஜகோபால் செய்த முதல் விஷயம் அவரது பணியாளர்களுக்கு அளித்த வேலை பாதுகாப்பு. அவர் தனது பணியாளர்களுக்குத் தங்குமிட வசதியை அளித்தார் மற்றும் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார். மேலும் அவர் கிராமத்தில் குடும்பங்களை உடைய பணியாளர்கள் அவர்களின் குடும்பங்களைப் பார்த்து வருவதற்காக வருடாந்திர ஊக்கத் தொகையையும் கொடுத்தார். ஒவ்வொரு திருமணமான பணியாளருக்கும் இரண்டு குழந்தைகள் வரை கல்வி உதவியை அளித்தார். ஒரு பணியாளருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரைக் கவனித்துக் கொள்ள இரண்டு பேரை அனுப்பினார்.

உற்பத்தி திறன்

ஒரு பணியாளரின் நலன் அவருடைய குடும்ப நலத்தில் உள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகப் பணியாளர்களையும் அவரது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

படிப்படியான உயர்வு

இப்படித் தொடர்ந்து சிறப்பான முயற்சி மற்றும் திட்டங்களுடன் சென்னை கேகே நகரில் 14-12-1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சரவணபவன் இன்று உலகின் பல இடங்களிலும் விரிவடைந்து தற்போது 91 கிளைகளுடன் வெற்றிச் சாம்ராஜியமாக உள்ளது. கடைசியாகச் சரவணபவன் 04-03-2016ஆம் ஆண்டு நெதர்லாந்து, ஆம்ஸ்டரடேம் பகுதியல் தனது 9வது கிளையைத் திறந்ததுள்ளது.

700 மில்லியன் டாலர்

தூத்துக்குடியில் இருந்து வந்த இளைஞன் சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றியின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர்.

ஆயுள் தண்டனை

2009 ஆம் ஆண்டுச் சாந்தாராம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காதல் கதை

சாந்தாராம் என்பவர் ராஜகோபாலின் உதவி மேலாளர்களில் ஒருவருடைய மகளான ஜீவஜோதி என்பவருடைய நெருங்கிய நண்பர். ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவஜோதியோ சாந்தாராம் மீது ஆர்வமாக இருந்தார். பலமுறை எச்சரித்த பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சாந்தாராம் கடத்தப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர்ச் சாந்தாராமின் உடல் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜகோபால் தான் கொலை செய்தார் என்பதற்குச் சாட்சியம் இல்லாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Read more at: http://tamil.goodreturns.in/news/2017/05/05/the-saravana-bhavan-story/slider-pf33499-007753.html

  • கருத்துக்கள உறவுகள்

கதையை இடையில் நிறுத்திவிட்டீர்கள்போல் தோன்றுகிறது. சரவணபவனில் போய் சாப்பிட்டால் தெரியும் அங்குள்ள அசிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே... படித்த ஒருவர்,
எழுநூறு மில்லியன் டொலருக்கு.... வியாபாரத்தை பெருக்கியது என்பது, சாதாரண  விடயமல்ல.
சரவணபவன் ராஜகோபால்...  தனது சுயசரிதையில்.... 
"நான்.... எனது, இதயத்தை... "வெற்றியின்  மீது"   பொருத்திவிட்டேன்"  என்று நினைத்ததால் தான், இவ்வளவும் சாத்தியமானது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இரண்டு மூண்டுதரம் ஜேர்மனியிலை இருக்கிற சரவணபவனுக்கு போய் சாப்பிட்டிருக்கிறன்......
கோப்பையிலை சோத்தை போட்டு பாத்திகட்டி அமுக்கிற எனக்கு ஜேர்மனி சரவணபவன் பெரிசாய் எடுபடேல்லை......பத்தியப்படேல்லை......சும்மா ஸ்ரையிலுக்கு போய் சாப்பிடலாம்.......எக்ஸ்ராவாய் கறி கேட்டன்.....  குங்குமம் போடுற கிண்ணியை விட கொஞ்சம் பெரிய கிண்ணியிலை கறிகொண்டுவந்து வைச்சினம்....அது எங்கை எனக்கு தொட்டு நக்கவே காணாது.:mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

இட்லி, வடை, தோசை, ஊத்தப்பம், பொங்கல், பூரி வகையறாக்கு தான் சரவணபவன்.

நம்ம சோறு கறி, குழம்பு, பிரட்டல், வறை, சொதி, சம்பல் வேற லெவல். 

சரவணபவன், சாம்பாரு, காரக்குழம்பு, கூட்டு, பொரியல் வேற லெவல்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலும்....  "சரவணபவன் உணவு விடுதி   இருக்கின்றதா?
புதிய செய்தி... குமாரசாமி அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இட்லி, வடை, தோசை, ஊத்தப்பம், பொங்கல், பூரி வகையறாக்கு தான் சரவணபவன்.

நம்ம சோறு கறி, குழம்பு, பிரட்டல், வறை, சொதி, சம்பல் வேற லெவல். 

சரவணபவன், சாம்பாரு, காரக்குழம்பு, கூட்டு, பொரியல் வேற லெவல்.

அதுக்குத்தான்....  கலியாணம் கட்டி இருக்கிறம், 
எண்டு... சொல்ல வாறிங்க, போல கிடக்கு... முனி. 
:D: :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நானும் இரண்டு மூண்டுதரம் ஜேர்மனியிலை இருக்கிற சரவணபவனுக்கு போய் சாப்பிட்டிருக்கிறன்......
கோப்பையிலை சோத்தை போட்டு பாத்திகட்டி அமுக்கிற எனக்கு ஜேர்மனி சரவணபவன் பெரிசாய் எடுபடேல்லை......பத்தியப்படேல்லை......சும்மா ஸ்ரையிலுக்கு போய் சாப்பிடலாம்.......எக்ஸ்ராவாய் கறி கேட்டன்.....  குங்குமம் போடுற கிண்ணியை விட கொஞ்சம் பெரிய கிண்ணியிலை கறிகொண்டுவந்து வைச்சினம்....அது எங்கை எனக்கு தொட்டு நக்கவே காணாது.:mellow:

நானும் பார்த்திருக்கிறேன் அதே கிண்ணங்கள் ஊரில் சீனி கடன் கொடுக்கிற கிண்ணங்கள் போல்   குழைச்சு சாப்பிட கறி போதாது ஆனால் காசு மட்டும் கரட்டா கொடுக்கணும் முள் மீல்ஸ்சுக்கு :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியிலும்....  "சரவணபவன் உணவு விடுதி   இருக்கின்றதா?
புதிய செய்தி... குமாரசாமி அண்ணா. :)

ஓம் சிறித்தம்பி! பெரிசாய் எழுப்பமில்லை.அதிலை வேலைசெய்யுற பொம்புளை நல்லவடிவு.நான் நிமிர்ந்தும் பார்க்கேல்லை எண்டது முக்கிய விசயம்:cool:

http://www.saravanaabhavan.de/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இலண்டனில் ஒருகாலத்தில் இரண்டு பவுனுக்கு மசாலா தோசை என்று கடை பரப்பின சென்னை தோசா போன்றவை இப்போது ஈயோட்டுகின்றன சரவணபவன் விலைகூட ஆனாலும் பின்னேரங்களில் போனால் வரிசையில் நின்றுதான் இடம் எடுக்கணும் குசா சொன்னது போல் சாப்பாட்டின் அளவு குறைவு தான் ஆனாலும் சுத்தம் தரம் என்பதில் அடிக்க ஏலாது  இதில் இருந்து நம்ம லண்டன் ஒரு பவுனுக்கு நான்கு ரோல் வடை விற்பவர்களுக்கு செய்தி அடங்கியுள்ளது இனி இப்படி தொடந்து விற்று வந்தால் காணாமல் போவது உறுதி  லண்டனை விட்டு வெளியில் இருப்பவர்கள் விளங்கி கொள்ள

இங்கு கிழமையில் ஒருக்கா ரோலை சுத்தி ரோலின் இருபக்கமும் இரண்டு இறைச்சி துண்டை வைத்து மிகுதி முழுவதும் சந்தையில கழிக்கப்படும் பச்சை மேவின உருளைகிழங்கை வினிகர் சொட்டு விட நன்றாக அவியும்  அதில் பச்சை செத்தல் மிளகாய்த்தூள் போட்டு கறி என்று சுத்தி பிரீசரில் வைத்து விடுவார்கள் அந்த வாரம் முழுக்க அப்படி வைக்கபட்ட ரோல் தான் பொரித்து தருவார்கள் .

அடுத்து வடை இங்கு உளுந்து விலை கூடின பொருள் கிலோ ஐந்து பவுன் அதற்கு மேலும் உள்ளது வடையில் உளுந்துக்கு பதில் அரிசி யும் அப்ப சோடாவும் அதிகம் வடை சும்மா பெருத்து காணப்படும் அதே வடை இரவு போனால் மூன்றில் ஒரு பங்குக்கு சிறுத்து காணப்படும் காரணம் மூன்று முறை சுடு எண்ணையில் குளித்து இருக்கும் இப்படியான கேசுகள் கூட இங்குதான் .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சரபணபவானுக்கு தோசை,பூரி,சாம்பார் வடை சாப்பிடப் போறது...செம ருசி:101_point_up:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஓம் சிறித்தம்பி! பெரிசாய் எழுப்பமில்லை.அதிலை வேலைசெய்யுற பொம்புளை நல்லவடிவு.நான் நிமிர்ந்தும் பார்க்கேல்லை எண்டது முக்கிய விசயம்:cool:

http://www.saravanaabhavan.de/

ஒரு போட்டோவாவது தம்பிக்கு கண்ணில காட்டுனியளா நீங்கள் :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

ஒரு போட்டோவாவது தம்பிக்கு கண்ணில காட்டுனியளா நீங்கள் :unsure:

வடிவான பொம்பிள்ளையாம், என்று யாரோ சொல்லக் கேட்டு, நம்ம முனியரை கரை சேர்ப்போம் எண்டு தான் போனவர். சோத்துக்குள்ள பாத்தியைக் கட்டுறதிலேயே மினக்கெட்டு கடுப்பில் இருந்து இருப்பார்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இங்கு இலண்டனில் ஒருகாலத்தில் இரண்டு பவுனுக்கு மசாலா தோசை என்று கடை பரப்பின சென்னை தோசா போன்றவை இப்போது ஈயோட்டுகின்றன சரவணபவன் விலைகூட ஆனாலும் பின்னேரங்களில் போனால் வரிசையில் நின்றுதான் இடம் எடுக்கணும் குசா சொன்னது போல் சாப்பாட்டின் அளவு குறைவு தான் ஆனாலும் சுத்தம் தரம் என்பதில் அடிக்க ஏலாது  இதில் இருந்து நம்ம லண்டன் ஒரு பவுனுக்கு நான்கு ரோல் வடை விற்பவர்களுக்கு செய்தி அடங்கியுள்ளது இனி இப்படி தொடந்து விற்று வந்தால் காணாமல் போவது உறுதி  லண்டனை விட்டு வெளியில் இருப்பவர்கள் விளங்கி கொள்ள

இங்கு கிழமையில் ஒருக்கா ரோலை சுத்தி ரோலின் இருபக்கமும் இரண்டு இறைச்சி துண்டை வைத்து மிகுதி முழுவதும் சந்தையில கழிக்கப்படும் பச்சை மேவின உருளைகிழங்கை வினிகர் சொட்டு விட நன்றாக அவியும்  அதில் பச்சை செத்தல் மிளகாய்த்தூள் போட்டு கறி என்று சுத்தி பிரீசரில் வைத்து விடுவார்கள் அந்த வாரம் முழுக்க அப்படி வைக்கபட்ட ரோல் தான் பொரித்து தருவார்கள் .

அடுத்து வடை இங்கு உளுந்து விலை கூடின பொருள் கிலோ ஐந்து பவுன் அதற்கு மேலும் உள்ளது வடையில் உளுந்துக்கு பதில் அரிசி யும் அப்ப சோடாவும் அதிகம் வடை சும்மா பெருத்து காணப்படும் அதே வடை இரவு போனால் மூன்றில் ஒரு பங்குக்கு சிறுத்து காணப்படும் காரணம் மூன்று முறை சுடு எண்ணையில் குளித்து இருக்கும் இப்படியான கேசுகள் கூட இங்குதான் .

அப்படி பட சிலுவாரித்தனம் செய்யும் கடைகள் பல காணாமல் இறுதியில் போகின்றன. அதுமட்டுமல்ல, கவுன்சில்காரர்கள் வாடிக்கைகையாளர்கள் போல செக் பண்ணுகிறார்கள். இவ்வகையில், கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பல சரக்கு கடையில வடை வியாபாரம் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.
  
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

வடிவான பொம்பிள்ளையாம், என்று யாரோ சொல்லக் கேட்டு, நம்ம முனியரை கரை சேர்ப்போம் எண்டு தான் போனவர். சோத்துக்குள்ள பாத்தியைக் கட்டுறதிலேயே மினக்கெட்டு கடுப்பில் இருந்து இருப்பார்.

சேத்துல விழுந்ததை விட சோத்துல விழுந்தவர்கள் அதிகம் நாதா நம்ம கும்மாரசாமியாரையும் சேர்த்து  போல்  சோத்தடிமைகள் நாங்கள் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி

நெறிமுறைகள் மற்றும் பணியாளர்கள்

பணியாளர்கள் மீது கவனம்

நல்ல மனிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெருடும் ஒரே விடயம்....

இந்தியா, இலங்கை எங்குமே சமையலறை சுத்தமாக இருப்பதில்லை.

ஒரு முறை பின்னால் போய்ப் பார்த்தால், ஜன்மத்துக்கும் போகமாட்டீர்கள் அங்கு சாப்பிட...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நெருடும் ஒரே விடயம்....

இந்தியா, இலங்கை எங்குமே சமையலறை சுத்தமாக இருப்பதில்லை.

ஒரு முறை பின்னால் போய்ப் பார்த்தால், ஜன்மத்துக்கும் போகமாட்டீர்கள் அங்கு சாப்பிட...

இத நான் லைக்கு  பண்ரன் வீட்டிலும் அதே நிலை தானே  tw_blush:

1 hour ago, முனிவர் ஜீ said:

இத நான் லைக்கு  பண்ரன் வீட்டிலும் அதே நிலை தானே  tw_blush:

வெளிநாட்டில இருக்கிறவையின் குசினிக்குள்ள ஸ்டோவை கொஞ்சம் முன்னால இழுத்துப் பாத்தால் தெரியும் எது திறம் எண்டு. :grin::grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, முனிவர் ஜீ said:

சேத்துல விழுந்ததை விட சோத்துல விழுந்தவர்கள் அதிகம் நாதா நம்ம கும்மாரசாமியாரையும் சேர்த்து  போல்  சோத்தடிமைகள் நாங்கள் tw_blush:

சோத்தடிமைகள் என்று நக்கலாக சொல்லப்படாது கண்டியளோ.

சோத்தை சாப்பிட்ட எங்கடை மூதாதையர் ஒருத்தரும் சுகர் வருத்தத்தாலை அவதிப்படேல்லை..

குளிசை போடேல்லை....

வயித்திலை ஊசி போடேல்லை.

விடிஞ்சால் பொழுதுபட்டால் தேங்காய் / தேங்காய்ப்பால் எண்டு மினைக்கெட்ட எங்கடை சனத்துக்கு கொலஸ்ரோல் பிரச்சனை வரேல்லை.
இப்ப என்னடாவெண்டால் கண்டறியாத டாக்குத்தர்மார் சொல்லீனம்...
சோறு சாப்பிட்டால் சுகர்வருத்தம் வருமாம்...
தேங்காய் தேங்காய்ப்பாலிலை சாப்பாடு சமைச்சால் கொலஸ்ரோல் பிரச்சனை வருமாம்...

அடிங்......:grin:

இந்த தம்பி! என்னதொரு அழகாய் சொல்லுறார் பாருங்கோ...tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2017 at 9:06 AM, Nathamuni said:

குழந்தைப்பருவம்
 
700 மில்லியன் டாலர்

தூத்துக்குடியில் இருந்து வந்த இளைஞன் சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றியின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர்.

ஆயுள் தண்டனை

2009 ஆம் ஆண்டுச் சாந்தாராம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காதல் கதை

சாந்தாராம் என்பவர் ராஜகோபாலின் உதவி மேலாளர்களில் ஒருவருடைய மகளான ஜீவஜோதி என்பவருடைய நெருங்கிய நண்பர். ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவஜோதியோ சாந்தாராம் மீது ஆர்வமாக இருந்தார். பலமுறை எச்சரித்த பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சாந்தாராம் கடத்தப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர்ச் சாந்தாராமின் உடல் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜகோபால் தான் கொலை செய்தார் என்பதற்குச் சாட்சியம் இல்லாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Read more at: http://tamil.goodreturns.in/news/2017/05/05/the-saravana-bhavan-story/slider-pf33499-007753.html

நான் அதிகம் சினிமா படங்கள் பார்ப்பது இல்லை 
அதலாலோ என்னவோ பார்க்கும் படங்கள் பொதுவாக 
எல்லா கட்டமும் கவனமாக பார்ப்பது உண்டு.
எனக்கு படைப்புக்களில் உள்ள கவனத்தை விட 
படைப்புக்களில் உள்ள படைப்பாளியின் திறமையே கவனத்தை ஈர்க்கும்.
ஆதலால் தமிழ் படங்கள் பொதுவாக பிடிப்பத்தில்லை 
யாரும் இங்கு வித்தியாசமாக ஏதும் எழுதி ... நல்ல கிளியாராக எங்காவது 
பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பேன். 
அப்படி பார்த்த படங்களில் ......... ஆசை படத்தின் திரைக்கதை நகர்வு பிடித்து இருந்தது 

அதில் ஒரு வசனம் நிழல்கள் ரவி  அவர்கள் பிரகாஷ்ராஜிற்கு சொல்லுவார் 
இந்த உலகில் ராவணனைப்போல் அதி உச்ச திறமையாளி ஒருவனும் இருக்கவில்லை 
பெண் ஆசையால் ராவணைப்போல் மண் ஆகியவனும் இல்லை என்று 
(பார்த்து 15 வருடம் வரலாம் வார்த்தைகள் மாறலாம் கரு பொருள் இதுதுதான்) 

எனக்கு ரொம்ப பிடித்த வசனவும் ..... பல நேரங்களில் எனது சொந்த வாழ்க்கையில் 
நேரான பாதையில் செல்ல எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் வசனமாகவும் அது 
அமைந்துவிட்ட்து .

ராஜகோபாலுக்கும் ரொம்ப பொருந்திவிட்ட்து ..... 700 மில்லியன் டாலர் பணம் இருந்தும் 
சிறையில் களிதான் வாழ்வுக்கு உணவாகி இருக்கு உலகம் பூரா உணவாக கிளைகள். 

தப்பு எப்போதும் ... ஒரு தப்பையே உருவாக்கி கொடுக்கிறது.
இங்கிருக்கும் எமது உறவுகளும் ....... தயவு செய்து ஆசையால் மோசம் போய்விடாதீர்கள்.
அவன் அவுடி ஓடுறான் ....... மெர்சிடஸ் ஓடுறான் என்று .... மட்டை போடுற ... சட்டை போடுற 
வேலைகளில் இறங்கி விடாதீர்கள்.  
விரலுக்கு ஏற்றால்போல் நாமும் வாழ்ந்து ... வீக்கத்திட்கு ஏற்றால்போல் இன்னும் சிலரையும் 
வாழ வைத்தாலே போதும் .... நல்ல சந்தோசமா மகிழ்ச்சியாக வாழலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

தப்பு செய்தாலும், தப்பில்லாமல் செய்யணும்.

அந்தாளிடம் உள்ள பணத்துக்கு ஒன்று அல்ல பத்து பெண்களை ஊருக்கே சொல்லி கட்டி இருக்கலாம். (பதிவுத் திருமணம் செய்தால் தான் சடடப் பிரச்னை) 

ஆனாலும் உதவாக்கரை கணவர்களினால் அவலப்படும் பெண்களுக்கு உதவுவதாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

எவ்வளவு தான் கடின உழைப்பு இருந்தாலும், விவேகம் வேண்டும். அந்த விவேகம் ( தமிழில் உள்ள இந்த வார்த்தைக்கு சமமான விளக்கம்  ஆங்கிலத்தில் cleverness with common sense ) என்பது கல்வியறிவினால் மட்டும் வருவதல்ல.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

சோத்தடிமைகள் என்று நக்கலாக சொல்லப்படாது கண்டியளோ.

சோத்தை சாப்பிட்ட எங்கடை மூதாதையர் ஒருத்தரும் சுகர் வருத்தத்தாலை அவதிப்படேல்லை..

குளிசை போடேல்லை....

வயித்திலை ஊசி போடேல்லை.

விடிஞ்சால் பொழுதுபட்டால் தேங்காய் / தேங்காய்ப்பால் எண்டு மினைக்கெட்ட எங்கடை சனத்துக்கு கொலஸ்ரோல் பிரச்சனை வரேல்லை.
இப்ப என்னடாவெண்டால் கண்டறியாத டாக்குத்தர்மார் சொல்லீனம்...
சோறு சாப்பிட்டால் சுகர்வருத்தம் வருமாம்...
தேங்காய் தேங்காய்ப்பாலிலை சாப்பாடு சமைச்சால் கொலஸ்ரோல் பிரச்சனை வருமாம்...

அடிங்......:grin:

இந்த தம்பி! என்னதொரு அழகாய் சொல்லுறார் பாருங்கோ...tw_thumbsup:

சோறு சாப்பிடுவது பிரச்சனை இல்லை அண்ணா...ஊரிலை என்டால் சாப்பிட்டு விட்டு வயல்,வரப்பிலை குனிஞ்சு,நிமிர்ந்து வேலை செய்வீங்கள்.இங்கே சோத்தை பாத்தி கட்டி அடிச்சு விட்டு கும்பிறப்படுத்தால் வருத்தம் வராமல் என்ன செய்யும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

சோறு சாப்பிடுவது பிரச்சனை இல்லை அண்ணா...ஊரிலை என்டால் சாப்பிட்டு விட்டு வயல்,வரப்பிலை குனிஞ்சு,நிமிர்ந்து வேலை செய்வீங்கள்.இங்கே சோத்தை பாத்தி கட்டி அடிச்சு விட்டு கும்பிறப்படுத்தால் வருத்தம் வராமல் என்ன செய்யும்?

மொட்டைக்கறுப்பன்/மற்ற புழுங்கல் அரிசி சாப்பிட்டால் பரவாயில்லை தங்கச்சி....உவங்கள் இடையிலை புதிசாய் கண்டுபிடிச்ச வெள்ளை அரிசியளாலைதான் ஊரிப்பட்ட பிரச்சனையள்.அதோடை சோறு அவிச்சால் கட்டாயம் கஞ்சிவடிக்கவேணும்.இது அப்பிடியில்லை...சுகத்துக்காக றைஸ்குக்கரிலை சோத்தை உமியவிட்டால் வருத்தங்கள் வரத்தான் செய்யும்.

On ‎5‎/‎8‎/‎2017 at 2:50 AM, Nathamuni said:

தப்பு செய்தாலும், தப்பில்லாமல் செய்யணும்.

அந்தாளிடம் உள்ள பணத்துக்கு ஒன்று அல்ல பத்து பெண்களை ஊருக்கே சொல்லி கட்டி இருக்கலாம். (பதிவுத் திருமணம் செய்தால் தான் சடடப் பிரச்னை) 

ஆனாலும் உதவாக்கரை கணவர்களினால் அவலப்படும் பெண்களுக்கு உதவுவதாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

எவ்வளவு தான் கடின உழைப்பு இருந்தாலும், விவேகம் வேண்டும். அந்த விவேகம் ( தமிழில் உள்ள இந்த வார்த்தைக்கு சமமான விளக்கம்  ஆங்கிலத்தில் cleverness with common sense ) என்பது கல்வியறிவினால் மட்டும் வருவதல்ல.
 
நாதம்,

உதவாக்கரை கணவர்களினால் அவலப்படும் பெண்களுக்கு உதவ நினைத்து சிக்கலில் ஆள் மாட்டவில்லை. இணக்கமாக போன பெண்ணை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க நினைத்து அவர் கணவனை கொன்றதால் தான் ஆள் மாட்டப்பட்டு போனார். அந்தப் பெண் தன்னை காட்டிக் கொடுக்காது என நினைத்து விட்டார். வழக்கு நடக்கும் போது அந்த பெண்ணுக்கு கொடுத்த சிரமங்கள் எக்கசக்கம்.

அண்மையில் சென்னையில்  இருக்கும் இவ் உணவு விடுதிகளில் ஒன்று  விதிகளை மீறி நடத்தப்படுவதாக சொல்லி சீல்  வைத்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.