Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிக்க முனைவது அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல; உடனடியாக, படத்திலிருந்து விலகுகிற முடிவை அறிவிக்க வேண்டும்!

 

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிக்க முனைவது அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல; உடனடியாக, படத்திலிருந்து விலகுகிற முடிவை அறிவிக்க வேண்டும்!

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிக்க முனைவது அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல; உடனடியாக, படத்திலிருந்து விலகுகிற முடிவை அறிவிக்க வேண்டும்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான செய்தியை அறிந்தேன். தம்பிக்கு நாம் சொல்லத் தேவை எதுவுமிருக்காது; அவரே புரிந்துகொண்டு அப்படத்திலிருந்து விலகுவார் என அமைதி காத்தேன். ஆனால், தற்போது அப்படத்தின் அடுத்தகட்டப்பணிகள் தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன்.

முத்தையா முரளிதரனை வெறுமனே ஒரு விளையாட்டு வீரர் எனச் சுருக்கி மதிப்பிட முடியாது. தனது உலகளாவியப் புகழ் வெளிச்சத்தைக் கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையையும், இன ஒதுக்கல் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேச, தமிழர் எனும் இன அடையாளத்தைப் பயன்படுத்தும் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலியே முரளிதரன். 2 இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு ஈழ நிலம் முற்றாய் பிணக்காடாய் மாறி, இரத்தச் சகதியிலே எமது உறவுகளின் உடல்களும், எங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்விதத் தயக்கமோ, குற்றவுணர்வோ இன்றி, ‘இனமழிப்பு செய்யப்பட்ட அந்நாளை எனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளாகக் கருதுகிறேன்’ என அறிவித்தவர் முத்தையா முரளிதரன். இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சே நல்லாட்சி தருவதாகக் கூறிய முரளிதரன், அவரை கறுப்பினப்போராளி நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டவர். அங்கு நடந்தத் தேர்தல்களின்போது தீவிர தமிழர் எதிர்ப்பு மனநிலை கொண்ட சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாகவும், காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டி தமிழ்த் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை துச்சமென நினைத்து அதனைக் கொச்சைப்படுத்தியும் பேசியது துரோகத்தின் உச்சம். மாத்தையா, கருணா வரிசையில் பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்திட்ட முத்தையா முரளிதரனை பன்னாட்டுச்சமூகத்திற்கு தமிழினப்படுகொலை நிகழவில்லை எனக் கூற வைக்கவே சிங்களப்பேரினவாத அரசும், அதன் ஆட்சியாளர்களும் அவரை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள். அத்தகைய நிலைப்பாடு கொண்ட சிங்களக் கைக்கூலி முரளிதரன் வாழ்க்கையைத் திரைமொழியில் காட்சிப்படுத்துவது ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானதாகத்தான் அமையும்.

30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழ நிலத்தில் நடைபெற்ற வீரம்செறிந்த விடுதலைப்போராட்டம் பயங்கரவாதம் எனப் பழிசுமத்தப்பட்டு, முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டப் பின்னர், அந்நிலத்தில் இறக்கப்பட்ட புலிக்கொடியை தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான தமிழகத்தில் ஏற்றி நிறுவியிருக்கிறோம். இந்நிலையில், சிங்களக்கொடி பொறித்த இலங்கையின் சீருடையோடு தம்பி விஜய் சேதுபதி திரையில் தோன்றி, அதனை தமிழக வீதிகளில் திரைப்படங்களின் வழியே கொண்டுபோய் சேர்க்க நினைப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது. இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முரளிதரன் உட்பட எவரும் தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தடைவிதித்ததை தம்பி விஜய் சேதுபதி அறியாததா? அதுவெல்லாம் தெரிந்திருந்தும் முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் நடிக்க முனைவதை எப்படி நம்மால் ஏற்க முடியும்? திரையரங்குகளில் வெளியிடாது இணையம் வாயிலாகத் திரைப்படத்தை வெளியிடலாம் என தம்பி விஜய் சேதுபதி நினைத்து செயல்படத் தொடங்கினால் அது வருங்காலங்களில் அவரது மற்றப்படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

விஜய் சேதுபதி உலக அரசியலும், நாட்டின் சூழலும் தெரியாதவரல்ல. அவர் ஆளும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகக் கருத்து வெளியிட்ட நேரத்திலெல்லாம் அவருக்கு ஆதரவாகவே நாம் நின்றிருக்கிறோம். இது வெறும் படமல்ல என்பதை உணர்ந்து, இதிலிருக்கும் அரசியலின் ஆபத்தைத் தெரிந்தே இப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்க்கிறோம். அதனை விஜய் சேதுபதி உணர்ந்துகொள்ள படத்திலிருந்து விலகுவதற்கான காலநேரத்தை அவருக்கு அளித்தோம். ஆனால், அதனையெல்லாம் துளியும் பொருட்படுத்தாது படத்தை உருவாக்கம் செய்ய முனைந்திடுவது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், அது உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப் பார்ப்பதாகவே இருக்கிறது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையையும், முத்தையா முரளிதரன் அதனை நியாயப்படுத்திப் பேசுவதையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இது அறியாமையால் நிகழ்ந்தவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழர்களின் உணர்வுகளுக்கு அணுவளவும் மதிப்பளிக்காது அப்படத்தில் நடித்திட முனைப்புகாட்டுவது விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல. ராஜபக்சேவின் மகன் இப்படத்தைக் கொண்டாடும்போதே அடுத்த நொடியே அப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். அதற்குப் பிறகும், எந்த நம்பிக்கையில் படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீட்டைச் செய்தீர்கள்?

இனத்துரோகி முரளிதரன் வாழ்க்கைப்படத்தை தமிழகத்திலேயே திரையிட்டு விடலாம் எனும் அளவுக்கு எண்ணம் எங்கிருந்து வந்தது? முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

https://www.naamtamilar.org/seeman-vijay-sethupathy-muthaiya-muralitharan-biopic-800-movie/

 

  • Replies 3k
  • Views 276.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாம்தமிழரால் தமிழ் ஈழம் சாத்தியமா ? : ஈழத்தில் இன்று என்ன நடக்கிறது ? - இயக்குனர் சோழன் களஞ்சியம்

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பழங்குடியின மக்களின் நலவாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த 83 வயதான மனித உரிமை ஆர்வலர் ஐயா ஸ்டான் சுவாமியை மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின்(NIA) கீழ் பொய்வழக்குத் தொடுத்து கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

காங்கிரசு ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசியப்புலனாய்வு முகமைச் சட்டத்தை சனநாயக விரோத ஆட்தூக்கிச் சட்டம் என மனிதவுரிமை ஆர்வலர்களும், சனநாயகப் பற்றாளர்களும் கண்டிக்கையில், அதில் திருத்தங்கள் கொண்டு வந்து கட்டற்ற அதிகாரங்களை உள்ளடக்கியதாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டபோதே இதன் மூலம் இசுலாமிய, கிருத்துவ மக்கள், மண்ணுரிமைப்போராளிகள் பாதிப்படையக்கூடும். அச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தித் தனிமனித வஞ்சம் தீர்க்க ஆளும் வர்க்கம் ஏவக்கூடும் எனக் கடுமையாக எதிர்த்தோம். இன்றைக்கு ஐயா ஸ்டான் சுவாமி எனும் மக்களின் நலனுக்காகத் துணைநின்ற பாதிரியாரைக் கைதுசெய்து அதனை நிரூபித்திருக்கிறது மத்திய அரசு.

பழங்குடியினர் நலனுக்காகப் போராடியதாலேயே அவரை மாவோயிஸ்டு என முத்திரைக்குத்தி, தளர்ந்த வயதினையும் பொருட்படுத்தாமல் கொரோனோ நோய்த்தொற்றுக் காலத்தில் சிறிதும் இரக்கமின்றி அவரை எந்தவொரு ஆவணமும் வழங்காமல் கைது செய்திருப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும். ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி இளைஞர்களை நக்சல் முத்திரை குத்தி தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் கீழ் கைது செய்துவருவதை ஐயா ஸ்டான் சுவாமி கடுமையாக எதிர்த்து போராடிவந்த வேளையில் அவர் மீதே நக்சல் முத்திரை குத்தி கைது செய்து அதிகார அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது மத்திய அரசு.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிலங்கள், காடுகள், நீர்நிலைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலனுக்காகவும் பழங்குடியினருக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் அரசுகளுக்கெதிராகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் நீதிமன்றங்கள் மூலம் கடுமையான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த ஐயா ஸ்டான் சுவாமியை கைது செய்திருப்பதன் மூலம் நாட்டில் அநீதிக்கு எதிராகக் குரல்கொடுத்து போராடத் துணியும் சமூக ஆர்வலர்களுக்கும், மண்ணுரிமைப் போராளிகளுக்கும் மறைமுக மிரட்டலைக் கொடுத்துள்ளது மத்திய அரசு.

எந்தச் சட்ட முறைமைகள் மூலம் நீதியை நிலைநாட்ட ஐயா ஸ்டான் சுவாமி போராடினாரோ, அச்சட்டத்தின் மூலமே அவரை அடக்கி ஒடுக்கிக் கைதுசெய்திருப்பது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதமாகும். 2017 ல் நடைபெற்ற பீமா கோரேகான் சம்பவத்தில் தொடர்புடையவராகவும், மாவோயிஸ்ட் எனவும் அவரைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும்.

ஆகவே, தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிற மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அதற்குச் சனநாயகப் பற்றாளர்கள் யாவரும் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/naam-tamilar-seeman-extends-support-to-83-year-old-tribal-rights-activist-father-stan-swamy-arrested-nia/

  • கருத்துக்கள உறவுகள்

 

சாதியை தாண்டி தமிழர் யார்? என்பதை நாம் தமிழர் எவ்வாறு அடையாளப்படுத்துகிறது? - இடும்பாவனம் கார்த்திக் பதில்.!
சமூகநீதி மண்ணில் சாதி கொடுமைகள்: காரணம் யார்? தீர்வு என்ன?
 

 

  • கருத்துக்கள உறவுகள்

TANISHQ AD லவ் ஜிகாத்தைத் தூண்டுகிறதா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களின் அரசியல் இதுதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

இது fake video அல்லவா? விஜய் எதுவும் சொல்லவில்லையே?

இப்படி தலைப்பை மாற்றிப் போட்டு பல வீடியோக்கள் உலா வருகின்றன. "வி.சே விலகி விட்டார் என்றே சில வீடியோக்கள் தலைப்பை மட்டும் போட்டு உள்ளே வேறெதாவது சொல்லியிருக்கிற வகையில் வந்திருக்கின்றன.

வழமை போல உள்ளடக்கத்தை வாசிக்காமல்/பார்க்காமல் இணைக்கிற வேலை தொடருது போல இருக்கே நாதம்! 🤔

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவில் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட புலிப்போராளிகளின் படங்கள் திரையில் காண்பிக்கப்பட அண்ணன் சீன் man உறுமுகின்றார். அதைக்கேட்டு சிலர் விசிலடிக்கின்றார்கள்.😱

யாழ் களம் குப்பைத்தொட்டியாக இருக்குதென்றுதானே யூரியூப் வீடியோக்கள் தினமும் கொட்டப்படுகின்றன. இணைப்பதை இணைப்பவர்களும் பார்ப்பதில்லை. மட்டுக்களும் பார்ப்பதில்லை.🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு..! ஆவணங்களை ஆற்றில் விட்ட தம்பிகள்

 

சீமானின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைவதாக தெரிவித்துள்ள கும்பகோணம் நாம்தமிழர் கட்சியினர் பூத் கமிட்டியை கலைத்ததோடு கட்சியில் இருந்து விலகுவதாக கூறி கட்சி ஆவணங்களை அரசலாற்றில் தூக்கி எறிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியில் 700 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்நிலையில் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் செயல்பாடுகள் கொள்கைக்கு முரணாக இருப்பதாக கூறி ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா தலைமையிலான நிர்வாகிகள் 700 பேரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கும்பகோணம் பூத் கமிட்டியை கலைத்ததோடு, பூத் கமிட்டி கட்டமைப்பு படிவத்தை அரசலாற்றில் வீசி எறிந்தனர்

உறுப்பினர் அட்டையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் உள்ளதால் அந்த அட்டைகளை வீசி எறியாமல், கட்சியின் தலைமையிடம் ஒப்படைக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்

சீமான் எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியில் உள்ள அனைவரையும் புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டிய நிர்வாகிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிடும் சீமான், வேறு மாநிலத்தவருக்கும், வேற்று மொழி பேசுபவர்களுக்கும் பல இடங்களில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

அந்த வகையில் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக சவுராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார் ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா. 

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து சிலர் விலகியுள்ள நிலையில் ஒரு ஊரில் பூத் கமிட்டியே கலைக்கப்பட்டிருப்பது தம்பிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.
 

https://www.polimernews.com/amp/news-article.php?id=124544&cid=6 

 

தமிழரல்லாதோருக்கு முன்னுரிமை வழங்கபடுவதாக முறையிட்ட ஒன்றிய செயலாளர் பெயர் பூபேஷ் குப்தா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வீடியோவில் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட புலிப்போராளிகளின் படங்கள் திரையில் காண்பிக்கப்பட அண்ணன் சீன் man உறுமுகின்றார். அதைக்கேட்டு சிலர் விசிலடிக்கின்றார்கள்.😱

யாழ் களம் குப்பைத்தொட்டியாக இருக்குதென்றுதானே யூரியூப் வீடியோக்கள் தினமும் கொட்டப்படுகின்றன. இணைப்பதை இணைப்பவர்களும் பார்ப்பதில்லை. மட்டுக்களும் பார்ப்பதில்லை.🤣🤣🤣🤣


ஒரு பிரபலமான செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி பலர் இணையத்தில் தேடி சமீபத்தைய தகவல் என்ன என்று அறிய முயல்கின்றனர். இந்த தேடலை இரு வழிகளில் பயன்படுத்துகின்றனர் "கப்" இல் கடா வெட்டுவோர்!

1. தாங்கள் பரப்ப நினைக்கும் ஒரு அரசியல் கருத்தைப் பற்றி பழைய வீடியோவை எடுத்து தலைப்பாக பிரபலமான தற்போதைய செய்தி பற்றிய புனைவொன்றை வைத்து ஆட்கள் கிளிக் செய்ய வைப்பது! (அது தான் இங்கே நடந்திருக்கிறது என நான் நினைக்கிறேன்)

2. மேலுள்ள மாதிரியான வீடியோவை ஒரு விளம்பரத்துடன் இணைத்து ஒவ்வொரு கிளிக்கிற்கும் சில பைசாக்கள் வீடியோவை ஏற்றியவரின் கணக்கில் விழும் படி செய்வது.

இரண்டுமே click bait என்றாலும் இரண்டாவது வகை உழைப்பும் மூலதனமும் அற்ற ஒரு வியாபாரம் என்பதால் இதைச் செய்வோரை "சில்லறை பொறுக்கிகள்" என்று நான் அழைப்பதுண்டு ("ப்" இல்லையென்ப்தைக் கவனிக்கவும்!).

பொது இடங்களில் யாசிக்கும் ஒருவர் சில்லறை பெற முன்வைக்கும் உழைப்புக் கூட இந்த சில்லறை பொறுக்குவோரிடம் இருக்காது!   

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

வீடியோவில் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட புலிப்போராளிகளின் படங்கள் திரையில் காண்பிக்கப்பட அண்ணன் சீன் man உறுமுகின்றார். அதைக்கேட்டு சிலர் விசிலடிக்கின்றார்கள்.😱

யாழ் களம் குப்பைத்தொட்டியாக இருக்குதென்றுதானே யூரியூப் வீடியோக்கள் தினமும் கொட்டப்படுகின்றன. இணைப்பதை இணைப்பவர்களும் பார்ப்பதில்லை. மட்டுக்களும் பார்ப்பதில்லை.🤣🤣🤣🤣

வணக்கம் மேட்டுக்குடி! 
ஈழத்தமிழர்களுக்கு நடந்த அவலங்களை உங்கள் கோட்டு சூட்டு ஜென்ரில்மேன்மார் வெளியுலகிற்கு எடுத்து செல்கின்றார்களா?அல்லது ஏதாவது செய்கின்றார்களா?உங்கள் மொழியில் விசிலடிச்சான் குஞ்சுகள் செய்த நல்லவைகளில் ஒரு வீதத்தையாவது மேடுக்குடி கோட்டு சூட்டுக்கள் செய்தார்களா?   எதற்கெடுத்தாலும் விசிலடிச்சான்.....விசிலடிச்சான். இது அவரவர் மண்வாசனைச்சொல்.

 அது சரி இலங்கையில் போர் குற்றமே நடக்கவில்லை என்பவர்களிடம் எதை என்னத்தை எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

விலகும் விஜய்சேதுபதி | திரைப்படமாகும் கலைஞர் வாழ்க்கை வரலாறு | சாட்டை | நாட்டுநடப்பு |

 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவின் ஊதுகுழல் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

+

 

  • கருத்துக்கள உறவுகள்

திமுக CCTV camera parithabangal

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வணக்கம் மேட்டுக்குடி! 
ஈழத்தமிழர்களுக்கு நடந்த அவலங்களை உங்கள் கோட்டு சூட்டு ஜென்ரில்மேன்மார் வெளியுலகிற்கு எடுத்து செல்கின்றார்களா?அல்லது ஏதாவது செய்கின்றார்களா?உங்கள் மொழியில் விசிலடிச்சான் குஞ்சுகள் செய்த நல்லவைகளில் ஒரு வீதத்தையாவது மேடுக்குடி கோட்டு சூட்டுக்கள் செய்தார்களா?   எதற்கெடுத்தாலும் விசிலடிச்சான்.....விசிலடிச்சான். இது அவரவர் மண்வாசனைச்சொல்.

 அது சரி இலங்கையில் போர் குற்றமே நடக்கவில்லை என்பவர்களிடம் எதை என்னத்தை எதிர்பார்க்க முடியும்?

பார்க்கலாமோ..... ரைம் வேஸ்டாகுமோ எண்டு நினைத்துக் கொண்டு மினக்கடாம, இங்க லிங்கை கொடுத்தா, அதை அக்குவேற, ஆணிவேறையா ஆராய்ந்து சொல்ல, அன்பு உறவுகள் இருப்பதாலை.... கவலையில்லை.
 

நான் மினக்கட்டு பார்க்க தேவையில்லை.... அவர்கள் நேரத்துக்கு நன்றி... 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத் தடை ஆணையை மீறி திருச்சி, திருவானைக்கோயிலிலுள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை இடிப்பதா? – சீமான் கண்டனம்

நீதிமன்றத் தடை ஆணையை மீறி திருச்சி, திருவானைக்கோயிலிலுள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை இடிப்பதா? – சீமான் கண்டனம்

 

நீதிமன்றத் தடை ஆணையை மீறி திருச்சி, திருவானைக்கோயிலிலுள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை இடிப்பதா? – சீமான் கண்டனம்

திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, திருவானைக்கோயில் அருகே திருவரங்கம் பாலத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்துள்ள செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது. பள்ளிவாசலை இடிக்கக்கூடாது எனப் பள்ளிவாசல் சார்பாக நீதிமன்றத் தடையாணையைப் பெற்றுள்ளபோதும் அதனைப் பொருட்படுத்தாது இடித்துச் சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாது, பள்ளிவாசல் நிர்வாகிகளைக் காவல்துறையினர் தாக்கியும் இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத அதிகாரிகள், பள்ளிவாசல் முன்பகுதியை மட்டும் இடித்துத் தரைமட்டமாகியிருப்பதன் மூலம் மிகப்பெரும் அதிர்வலைகளை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினரின் துணையோடு வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் தடையாணையையும் மீறி, முன்பகுதி இடிக்கப்பட்டுள்ளது சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்ற மிகப்பெரும் அநீதியாகும். எளிய மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே, நீதிமன்ற உத்தரவை சிறிதும் மதியாது தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வதும், உணர்வுப்பூர்வமான இவ்விவகாரத்தில் மூர்க்கமான அணுகுமுறையைப் பின்பற்றுவதும் வெட்கக்கேடானது.

சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் மேலோங்கி மதம் கடந்து மனிதம் போற்றும் தமிழ் மண்ணில் நடந்தேறும் இதுபோன்ற செயல்கள் தேவையற்ற சலசலப்பையும், சச்சரவையும் உருவாக்கி வருவது மதத்துவேச அரசியல் செய்து, பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் வாக்குவேட்டையாட முற்படும் மதஅடிப்படைவாதிகளின் அரசியலுக்கே வலுசேர்க்கும். அவரவர் மதம் அவரவருக்கு உயர்ந்தது. உங்கள் மதம் உயர்ந்ததென்றால், நீங்கள் வழிபடுங்கள். அவர்கள் மதம் அவர்களுக்கு உயர்ந்தது; வழிவிடுங்கள் என்ற மாண்போடு செயல்பட வேண்டிய தமிழக அரசு இதுபோன்ற கொடுஞ்செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

ஆகவே, இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இடிக்கப்பட்ட பள்ளிவாசலின் முன்பகுதியை மீண்டும் கட்டித்தர வேண்டுமெனவும், அத்துமீறி பள்ளிவாசலை இடித்துத் தாக்குதல் தொடுத்திட்ட அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/naam-tamilar-seeman-condemns-tn-govt-demolition-of-mosque-facade-to-set-up-service-road-trichy-thiruvankoil/

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

வணக்கம் மேட்டுக்குடி! 
ஈழத்தமிழர்களுக்கு நடந்த அவலங்களை உங்கள் கோட்டு சூட்டு ஜென்ரில்மேன்மார் வெளியுலகிற்கு எடுத்து செல்கின்றார்களா?அல்லது ஏதாவது செய்கின்றார்களா?உங்கள் மொழியில் விசிலடிச்சான் குஞ்சுகள் செய்த நல்லவைகளில் ஒரு வீதத்தையாவது மேடுக்குடி கோட்டு சூட்டுக்கள் செய்தார்களா?   எதற்கெடுத்தாலும் விசிலடிச்சான்.....விசிலடிச்சான். இது அவரவர் மண்வாசனைச்சொல்.

 அது சரி இலங்கையில் போர் குற்றமே நடக்கவில்லை என்பவர்களிடம் எதை என்னத்தை எதிர்பார்க்க முடியும்?

விட்டுவிடுங்கள் புத்தகங்களை வாசித்து இன்னும் அறிவை வளர்க்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

பார்க்கலாமோ..... ரைம் வேஸ்டாகுமோ எண்டு நினைத்துக் கொண்டு மினக்கடாம, இங்க லிங்கை கொடுத்தா, அதை அக்குவேற, ஆணிவேறையா ஆராய்ந்து சொல்ல, அன்பு உறவுகள் இருப்பதாலை.... கவலையில்லை.
 

நான் மினக்கட்டு பார்க்க தேவையில்லை.... அவர்கள் நேரத்துக்கு நன்றி... 

அது தானே? நீங்கள் ஏன் மெனக்கெட வேணும், இருக்கவே இருக்கே டஸ்ற்பின் மாதிரி யாழ் களத்தின் இந்த மூலை? கொண்டு வந்து கொட்டி விட்டால் சில்லறை பொறுக்கிகள் கொஞ்ச காசு பார்த்ததாயும் ஆகும், சீமானுக்கு ஓசி பிரச்சாரம் செய்ததாயும் ஆகும்!🤣

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பார்த்து சொல்லுங்கோ.... நீஙகள் சொன்னா பார்க்கிறேன்.... மெத்தப பெரிய உபகாரம்.... நன்றி... உறவுகளே!

Edited by Nathamuni

22 minutes ago, Nathamuni said:

இதையும் பார்த்து சொல்லுங்கோ.... நீஙகள் சொன்னா பார்க்கிறேன்.... மெத்தப பெரிய உபகாரம்.... நன்றி... உறவுகளே!

தங்களுக்கே  அலுத்துப்போன இந்த திருட்டு மூஞ்சியை பார்க்குமாறு சிபார்சு வேறு. 😂 

  • கருத்துக்கள உறவுகள்

முரளி பற்றிய திரிகளில் ஒருக்கா “பிரெசண்ட் சேர்” போட்டுட்டு எஸ் ஆகிய இலங்கை மீது பேரபிமானம் கொண்ட கருத்தாளர்கள்,

சிமான் திரியில் போஸ்டர் மேல் போஸ்டர் ஒட்டி - தீயாய் வேலை செய்கிறார்கள். 

என்ற விடயத்தையும் அவையின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் 🤣

#கொண்டையை மறையுங்க சார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.