Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்

Featured Replies

செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்

 

 

செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பு கோப் சென்டர் மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

20862177_1826876660673619_1414848862_o.j

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் தீபம் ஏற்றி   ஆரம்பிக்கப்பட்டது.

வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 61 பேர் உயிரிழந்ததுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

20767768_1451918958210677_26173150640359

குறித்த படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலைகளின் ஆத்மசாந்திக்காகவும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/23139

உயிரிழந்த மழலைகளின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகள்!

  • தொடங்கியவர்

செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி

 
செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி
 

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வள்ளிபுனம், செஞ்சோலை வளாகத்தில் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செஞ்சொலை வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.

u2.jpg

U3-2.jpg

http://newuthayan.com/story/19304.html

  • தொடங்கியவர்

அரக்கத்தனமான தனது தாக்குதலால் 61 சிறார்களது உயிர்களைப் பறித்த மகிந்த அரசு

செஞ்சோலைத் தாக்குதல் கொடூரம் குறித்து அதிர்ச்சியில் உறைந்த பன்னாட்டுத் தரப்புக்கள்

 
அரக்கத்தனமான தனது தாக்குதலால் 61 சிறார்களது உயிர்களைப் பறித்த மகிந்த அரசு
 

ஓகஸ்ட் 14 ஆம் திகதி முல்லைத் தீவு மாவட்­டத்­தில் உள்ள வள்­ளி ­பு­னம் செஞ்­சோலை யில் இடம் பெற்ற மாண­வ­ரச் செல்­வங்­க­ளின் படு­கொ­லை­யா­னது அப்­போ­தைய மகிந்த ராஜ­பக்ச ஆட்­சி­யால் அரங்­கேற்­றப்­பட்ட கொடூர மனி­தப் படு­கொ­லை­யா­கும். மனித குலத்தால் ஏற்­றுக் கொள்ள முடி­யாத இந்­தப் படு­கொலை ஈழத்­த­மி­ழர்­களை அழிப்­ப­தற்­கான முன்­னேற்­பாட்­டின் ஒரு ஆரம்­பம் எனக் கொள்­ளத் தக்­கது.

குருதியில் நனைந்திட்ட
செஞ்சோலைப் பகுதி

வள்ளி புனம் பகு­தி­யில் அமைந்­தி­ருந்த செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தின் மீது 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி காலை வேளை­யில் இலங்கை அர­சின் வானூர்திப் படை­யி­ன­ரின் கொடூ­ர­மான குண்டு வீச்­சுத் தாக்­கு­த­லில் 61 பள்ளி மாண­வக் கண்­ம­ணி­கள் கொல்­லப்­பட்­ட­னர். குண்டு வீச்­சுத்­தாக்­கு­த­ லின் சித­றல்­க­ளில் அகப்­பட்டு 150 பேர்­வ­ரை­யில் படு­கா­ய ம­டைந்­தி­ருந்­த­னர்.

15 வய­தி­லி­ருந்து 18 வய­துக்­குட்­பட்ட மாண­வி­களே கொல்­லப்­பட்­டும் படு­கா­ய­ம­டைந்­த­வர்­க­ளு மா­வர் செஞ்­சோலை வளா­கத்­தில் ஒன்­று­ம் அறி­யாத மாண­வச் செல்­வங்­க­ளைக்­கொன்­றது மாத்­தி­ர­மல்­லா­மல் கொல்­லப்­பட்­ட­வர்­கள் அனை­வ­ரும் விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கத்­தி­லுள்ள சிறு­வர் போரா­ளி­க­
ளெ­னக் கூறி வெளி­யு­ல­கத்­துக்கு உண்­மையை மூடி­ம­றைக்க மகிந்த அரசு பிர­யத்­த­ னங்­களை எடுத்­தி­ருந்­தது.

முல்­லைத் தீவு மாவட்­டத்­தில் உள்ள வள்­ளி­பு­னம் மக்­கள் குடி­யி­ருப்­புக்­கள் மிக நெருக்­கம் நிறைந்த பகு­தி­யா­கும். இந்­தப்­ப­கு­தி­யில் செஞ்­சோலை வளா­கம் அமைந்­தி­ருந்­தது. மனித நேய நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­ டுக்­கப்­ப­டும் பகு­தி­யா­கவே வள்­ளி­பு­னம் விளங்­கி­யது. வள்­ளி­பு­னம் செஞ்­சோ­லைக்­கென தனி­வ­ர­லா­றுண்டு.

இலங்கை அர­சி­னால் தமி­ழர்­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட போரில் தமது தாய், தந்­தை­யரை இழந்த சிறு­வர்­க­ளுக்கு உரிய பாது­காப்­ப­ளித்து அவர்­களைத் தங்­க­ளை­ வைத்து, பரா­ம­ரித்து அடை­க­ல­ம­ளிக்­கின்ற நோக்­கில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பால் உரு­வாக்­கப்­பட்ட அன்­புச் சோலை­யா­கும்.

வண்­ணத்­துப் பூச்­சி­க­ளாக தங்­களை மறந்து வட்­ட­ம­டிக்­கின்ற சுதந்­திர வாழ்­வுக்­குள் சிற­ க­டித்­துப் பறக்­கின்ற மழ­லை­கள் வாழ்­வ­கம் 1991 ஆம் ஆண்டு யூலை­மா­தம் 10 ஆம் திகதி 15 மாண­வர்­க­ளு­டன் யாழ்ப்­பா­ணத்­தில் புலி­கள் அமைப்­பி­ன­ரால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

செஞ்­சோலை ஆரம்­பிக்­கப்­பட்­டது முதல் நூற்­றுக்­க­ணக் கான சிறு­வர்­கள்­அ­தில் இணைக் கப்­பட்­ட­னர். மாண­வச் சிறார்க­ ளின் அதி­க­ரிப்­புக்­க­மைய 1991 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 22 ஆம் திகதி இந்த நிலை­யம் சண்­டி­லிப்­பாய்க்கு இடம் மாறி­யது.

யாழ். குடா­மீ­தான போருக்­குப் பின்­னர் 1996 ஆம் ஆண்டு முல்­லைத்­தீவு வள்­ளி­பு­னம் என்ற இடத்­தில் நிரந்­த­ர­மாக செஞ்­சோலை இல்­லம் பல­நூறு பிள்­ளை­களைக் கொண்டு விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் பிர­பா­க­ர­னின் நேர­டிக் கண்­கா­ணிப்­பின் கீழ் செயற்­பட்டு வந்­தது.

ஈழத்­த­மிழ் இனத்­தின் இளம் சந்­த­தி­யி­னரை வளர்த்து உரிய அந்­தஸ்­து­டன் கௌர­வ­மாக, ஆளு­மை­யுள்­ள­வர்­க­ளாக ஆக்­க­வேண்­டும் என்ற எண்­ணத்­தின் அடிப்­ப­டை­யில் உரு­வா­கி­யதே செஞ்­சோலை சிறு­வர் இல்­ல­மா­கும். நூற்­றுக்­க­ணக்­கான எதிர்­கா­லச் சிற்­பி­களை உரு­வாக்­கிய செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தில், வர­லாற்­றில் மறக்க முடி­யா­த­தொரு படு­கொ­லை­யின் கொடூர நிகழ்வு நடந்து இன்­று­டன் 11 ஆண்­டு­கள் நிறை­வ­டை­ கின்­றன.

வள்­ளி­பு­னம் செஞ்­சோலை வளா­கத்­தில் வதி­வி­டப் பயிற்­சிப்­பட்­ட­றை­கள், நடப்­பது வழ­மை­யா­கும். ஏற்­க­னவே சிறு­மி­யர் இல்­ல­மா­கச் செயற்­பட்­ட­மை­யால் மாண­வி­கள் தங்­கி­யி­ருந்து பயிற்­சி­க­ளைப் மேற்­கொள்­வ­தற்கு வச­தி­யா­க­வும் அது அமைந்­தி­ருந்­தது. அத்­து­டன் செஞ்­சேலை வளா­கம் ஐ.நா. அமைப்­புக்­க­ளூ­டா­கப் பயிற்­சிப் பட்­ட­றைக்­கான இட­மா­க­வும் இலங்கை அர­சி­னா­லும் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பல பயிற்­சிப் பட்­ட­றை­கள் செஞ்­சோலை வளா­கத்­தில் இடம்­பெற்­று­வந்­தன.

வன்­னிப் பெரு­நி­லப்­ப­ரப்­பி­லுள்ள பல பாட­சாலை மாண­வர்­க­ளின் 500 பேரை இணைத்து தலை­மைத்­து­வப் பயிற்சி நெறி­யொன்­றுக்­காக ஓகஸ்ட் 14 ஆம் திகதி காலை செஞ்­சோலை வளா­கத்­தில் ஒன்று கூடி­னர். இயற்கை இடர்­க­ளி­லி­ருந்து பாது­காப்­புத்­தே­டும் நட­வ­டிக்­கை­கள், பால்­ச­மத்­து­வம், குழு­வேலை, நேர­மு­கா­மைத்­து­வம், தன்­னம்­பிக்­கை­யைக் கட்­டி­யெ­ழுப்­பும் செயற்­பா­டு­கள் தலை­மைத்­து­வத்­துக்­கான மேம்­பாடு, ஆளு­மை­வி­ருத்தி, இணைப்­பா­ட­வி­தானச் செயற்­பா­டு­கள் போன்­ற­வற்­றுக்­கான பயிற்­சி­கள் வழங்­கப்­ப­ட­வி­ருந்­தன.

கிளி­நொச்சி கல்வி வல­யத்­தி­னால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­தப் பயிற்­சி­நெ­றி­யில் பெண்­கள் புனர்­வாழ்வு அபி­வி­ருத்தி நிலை­யத்­தின் நிதி­யு­த­வி­யின் கீழ் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, ஒட்­டு­சுட்­டான் போன்ற கல்வி வல­யங்­க­ளைச் சேர்ந்த 18 பாட­சா­லை­களை உள்­ள­டக்­கிய க.பொ.த உயர்­தர வகுப்­பில் கல்வி கற்று வந்த சுமார் 500 மாணவ, மாண­வி­யர்­கள் குறித்து பயிற்சி நெறிக்கு உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

ஓகஸ்ட் 11 ஆம் திகதி செஞ்­சோலை வளா­கத்­தில் பத்­து­நாள் வதி­வி­டப் பயிற்சி நெறி ஆரம்­ப­மா­கி­யது. தொடர்ந்து நான்­காம் நாளான 14.08.2006 திங்­கட் கிழ­மை­யன்று தீ, மற்­றும் மின் இடர்­க­ளி­லி­ருந்து பாது­காப்­புப் பெறல் குழு­வேலை போன்ற பயிற்­சி­களை வழங்க துறை­சார் நிபு­ணத்­து­வம் பெற்ற ஆசி­ரி­யர்­கள் தயா­ரா­கிக் கொண்­டி­ருந்­த­னர்.

திட்டமிட்டு மேற்கொண்ட
தொடர் தாக்குதல்கள்

காலை 7 மணிக்கு புலி­க­ளின் குரல் வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பா­கின் போர்க்­கால செய்­தி­களை மாணவ மாண­வி­கள் செவி­ம­டுத்­துக் கொண்­டி­ருந்­த­னர், வன்­னி­யில் இரவு பக­லாக படை­யி­ன­ரின் மும்­மு­னைப்­புத் தாக்­கு­தல்­கள் ஓ­யாது தொடர்ச்­சி­யாக நடை­பெ­று­வது வழ­மை­யான செயல் என்­ப­தால் தின­மும் வன்­னி­மக்­கள் அந்­தச் செய்­தி­களை புலி­க­ளின் குரல் வானொ­லி­யில் கேட்­டுத் தெரிந்து கொள்­வது வழமை. அதே போல் மாணவ மாண­வி­க­ளும் செய்­தி­க­ளைக் கேட்­ப­தை­யும் பயிற்சி நெறி­ பட்­ட­றைக்­கா­லத்­தி­லும் வழ­மை­யா­ன­தொரு செயற்­பா­டாக வைத்­தி­ருந்­த­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பரந்­தன் பகு­தி­யில் அதி­காலை 4 மணி­ய­ள­வில் ஆளில்லா வேவு வானூர்தியொன்று தாழப்­ப­றந்து வட்­ட­மிட்­டுக் கொண்­டி­ருந்­தது. தேவி­பு­ரம், வள்­ளி­பு­னம் கிரா­மங்­க­ளுக்கு மேலாக­வும் வேவு வானூர்தி பறந்து வட்­ட­மிட்­ட­மை­ய­டுத்து அந்­தப் பிர­தே­ச­மக்­கள் மத்­தி­யில் அச்ச உணர்வு ஏற்­பட்­டி­ருந்­தது. மேலும் வள்­ளி­பு­னம், தேவி­பு­ரம் பகு­தி­யில் குண்டு வீச்சு விமா­னங்­கள் தாக்­கு­தல்­களை நடத்­தப் போகின்ற செய்தி மக்­கள் மத்­தி­யி­லும் செஞ்­சோலை வளா­கத்­தி­லும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­தது.

அந்­தப்­ப­குதி மக்­கள் பாது­காப்­புத் தேடி ஆயத்­த­மா­கிக் கொண்டு பதுங்கு குழி­க­ளுக்­குள் தங்­க­ளைப் பாது­காத்­துக் கொண்­டி­ருந்­த­னர். பாட­சா­லைக்­கும் பிள்­ளை­களை அனுப்­பாது பாது­காப்­ப­தில் பெற்­றோர்­கள் அதிக அக்­கறை எடுத்­தி­ருந்­த­னர்.

செஞ்­சோலை வளா­கத்­தி­லும் உற்­சா­கத்­தோடு குதூ­க­ லித்­துக் கொண்­டி­ருந்த மாணவ மாண­வி­யர்­கள் புலி­க­ளின் குரல் செய்­தி­க­ளைச் செவி­ம­டுத்­துக்­கொண்­டி­ருந்­த­வே­ளை­யில் 7 மணி தாண்டி கிபீர் குண்­டு ­வீச்­சு­வி­மா­னம் ஒன்று பேரி­ரைச்­ச­லோடு எவ­ருமே எதிர் பாரா­த­வே­ளை­யில் குண்டு வீச்­சுத்­தாக்­கு­ தலை செஞ்­சோலை வளா­கத்­தில் நடத்­தி­ய­போது மாண­வர்­கள் அல­றி­ய­டித்­துக் கொண்டு ஓடு­கை­யில் மேலும் இரண்டு குண்­டு­களை சிதறி ஓடிய மாண­வர்­கள் மீது வீசித் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டது.

செஞ்சோலை எங்கும் சாவு ஓலங்கள்

எங்­கும் புகை­மண்­ட­லம் செஞ்­சோலை வளா­கம் இரு­ளில் மூழ்­கி­யி­ ருந்­தது. ஐயோ…. ஐயோ… அம்மா காப்­பாற்றுங்­கள் எங்­க­ளைக் காப்­பாற்­றுங்­கள் தண்­ணீர் தாங்கோ… என்ற அவ­லக்­கு­ரல்­கள்­மட்­டுமே செஞ்­சோ­லையை கௌவிக் கொண்­டி­ருந்­தன. அந்த இடத்­தில் 61 மாண­விகள் உடல் சித­றிப் பலி­யா­கி­யி­ருந்­த­னர். பல மாண­விகள் அங்­கங்­களை இழந்து குருதி வெள்­ளத்­தில் மிதந்­த­ப­டி­யி­ருந்­த­ னர் இன்­னும் பலர் பலத்த காயங்­க­ளுக்­குள்­ளாகி உயி­ருக்­கா­கப் போரா­டிக் கொண்­டி­ருந்­த­னர்.

மாணவ மாண­வி­யர்­க­ளின் பெற்­றோர்­கள் மற்­றும் உற­வி­னர்­க­ளா­லும் பொது­மக்­க­ளா­லும் செஞ்­சோலை வளா­கம் நிரம்பி வழிந்­தி­ருந்­தது. அந்­தக் காட்­சி­யைக் கண்ட அனை­வ­ருமே பெரும் குர­லில் கதறி அழு­த­னர். புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தே­சம் சோக­ம­ய­மா­கி­யது.

உயி­ரி­ழந்த மாண­வர்­க­ளின் உட­லங்­க­ளைப் பார்த்­த­வாறு பெற்­றோர்­கள் மண்­ணில் உருண்டு புரண்டு ஓ.. வென்று கதறி அழுத காட்சி பல மணி நேரம் நீடித்­தி­ருந்­தது. குண்டு வீச்­சி­லி­ருந்து தப்­பிக்க இன்­னும் பல மாண­வர்­கள் தவழ்ந்­தும் ஊர்ந்­தும் செஞ்­சொலை வளா­கத்து வேலி­யைத் தாண்­டிச் சென்­ற­த­னால் அவர்­கள் தப்­பித்­துக்­கொண்­ட­னர்.

காய­மடை 155 மாண­வர்­கள் உட­ன­டி­யாக அவ­ச­ர­சி­கிச்­சைக்­காக பொது மருத்­து­வ­ம­னை­கள் நோக்கி நோயா­ளர்­கள் காவு வண்­டி­யி­லும், பிற­வா­க­னங்­க­ளி­லும், ஏற்­றிச் செல்­லப்­பட்­ட­னர், செஞ்­சோலை வளா­கம் சிறு­வர்­க­ளைப் பரா­ம­ரிக்­கின்ற இட­மென நன்கு தெரிந்­தும் மகிந்த அரசு நன்கு திட்­ட­மிட்டே குண்டு வீச்­சுத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு 61 மாணவிகளைப் படு­கொ­லை­செய்­தும் 155 பேரைப் படு காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­யு­மி­ருந்­தது.

மகிந்த அர­சின் தமிழர் மீதான படு­கொ­லைச் சம்­ப­வங்­க­ளில் கொடூ­ரத்­தின் அதி உச்­ச­மா­ன­தாக இருந்­தது செஞ்­சோலை சிற­வர் இல்­லத்­தாக்­கு­தல் சம்­ப­வ­மே­யா­கும். 61 சிறு­வர் பேரா­ளி­க­ளை­யும் அவர்­கள் தங்­கி­யி­ருந்து பயிற்சி பெற்ற முகா­மை­யும் நிர்­மூ­ல­மாக்­கி­விட்­டோம் என மகிந்த அரசு சகல ஊட­கங்­க­ளி­லம் பரப்­பு­ரை­க­ளைச் செய்து கொண்­டி­ருந்­தது.

செஞ்­சோ­லை­யில் மாண­வர்­கள் தான் கொல்­லப்­பட்­ட­வர்­கள் என்ற விட­யங்­கள் ஐக்­கிய நாடு­கள் சபை போர் நிறுத்­தக் கண்­கா­ணிப்­புக் குழு­வி­ன­ ரும், யுனி­செப் நிறு­வ­னத்­தி­ன­ரும் உறு­தி­ செய்­த­மை­யி­னால் அவர்­களே சாட்­சி­யங்­க­ளாக இருந்­த­மை­யா­லும். மகிந்த அரசு கூறிய உண்­மைக்கு மாறான பரப்­பு­ரை­களை பன்­னாடு ஏற்­றுக்­கொள்­ள­வில்ல.

செஞ்சோலைத் தாக்குதல்
கீழ்த்தரமான செயல்

இரண்­டா­வது ஈழப்­போ­ரில் மண்­ணில் அவ­த­ரித்த மழ­லை­கள் நான்­கா­வது ஈழப்­போ­ரில் மகிந்த ஆட்­சி­யி­ல் படை­யி­ன­ரால் துவம்­சம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட மிரு­கத்­த­ன­ மான செயல் மட்­டு­மன்றி நாக­ரீக சமு­தா­யம் வெட்­கித்­த­லை குனி­கின்ற கொடூ­ர­மான செயல் என்ற உண்மை தென்­னி­லங்­கை­யில் சில தரப்­பி­ன­ரால் உண­ரப்­ப­ட­வும் செய்­தது.

11 ஆண்­டு­கள் கழிந்­து­போன நிலை­யில் காயப்­பட்டு உயிர்­தப்­பிய சில மாண­வர்­க­ளும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளும், செஞ்­சோலை வளா­க­மும் அன்­றைய அந்த கொடூர படு­கொ­லை­களை இன்றும் மனக்­கண்­முன் கொண்டு வந்து நிறுத்­து­கின்­ற­னர்.

அரக்­கத்­த­ன­மாக மாண­வர்­களை சிங்­கள அர­சு­கள் படு­கொலை செய்­த­மைக்கு வர­லாற்­றுப் பதி­வு­க­ளுண்டு சந்­தி­ரிகா அம்­மை­யார் ஆட்­சி­யி­லும் வட­ம­ராட்சி கிழக்கு நாகர் கோயில் பாட­சா­லை­யில் கல்­வி­கற்­றுக்­கொண்­டி­ருந்த மாண­வர்­கள் மீது வானூர்திக் குண்டு வீச்­சுத்­தாக்­கு­தலை மேற்­கொண்டு பல மாண­வர்­களை ஈவு இரக்­க­மின்­றிப் படு­கொ­லை­செய்­தி­ருந்­தது போல் சந்­தி­ரிகா ஆட்­சியை அடி­யொற்றி ஆட்­சி­செய்த மகிந்த ராஜ­பக்ச தரப்­பி­ன­ரும் மாண­வச் சிறார்­க­ளைக் கொன்று குவிப்­ப­தில் சளைத்­த­வர்­க­ளல்ல என்­பது செஞ்­சோலை சிறு­வர்­இல்ல வளா­கத்­தில் நடத்­தப்­பட்ட படு­கொலை மூலம் நிரூ­ப­ண­மா­கி­யது.

நீதி எப்போது?

தமி­ழர்­கள் மீது நடத்­தப்­பட்ட இந்­தப் படு­கொ­லை­க­ளுக்கு எந்த விசா­ர­ணை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தில்லை நீதி­யும் வழங்­கப்­ப­ட­வில்லை. உண்­மை­ க­ளை­ஆட்­சி­யா­ளர்­கள் ஒத்­துக் கொள்­ள­வு­மில்லை. மகிந்த அர­சி­னால் ஏற்­றுக் கொள்­ளப்­ப­டாத பல தமி­ழர் படு­கொ­லை­க­ளில் செஞ்­சோலை வளாக மாண­வர்­கள் மீதான படு­கொ­லை­யு­மொன்­றா­கும்.

இந்­தப்­ப­டு­கொ­லை­கள் சம்­பந்­த­மான உண்மை அதன் பின்­னணி தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன­ரால் சட்ட நட­வ­டிக்­கை­கள் மூலம் வெளிக்­கொண்­டு­வ­ரப் படா­தமை சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த சிறார்­க­ளது பெற்­றோர் உறவி­னர்­கள் மத்­தி­யில் இன்­றும் மனதை வாட்­டு­கின்ற மனக் குறை­யா­கத் தொடர்­கி­றது.நல்­லாட்சி அர­சி­லா­வது இந்­தப் படு­கொலை சம்­பந்­த­மான விசா­ரணை ஏதா­வது இடம்­பெற வாய்ப்­புண்டா?

http://newuthayan.com/story/19315.html

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

இதுக்கெல்லாம்.. யுனிசெப் போன்ற வெட்டி ஐநா நிறுவனங்கள்.. நீதி கேட்டு போராட மாட்டினமோ..???! :rolleyes:

9 minutes ago, nedukkalapoovan said:

இதுக்கெல்லாம்.. யுனிசெப் போன்ற வெட்டி ஐநா நிறுவனங்கள்.. நீதி கேட்டு போராட மாட்டினமோ..???! :rolleyes:

நாங்கள் கடுமையாக போராடினால் தான் அவர்கள் கொஞ்சமாவது போராடுவார்கள் என்று நினைக்கிறன். tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராச­பக்ச ஆட்­சி­யால் அரங்­கேற்­றப்­பட்ட கொடூர தமிழின அழிப்பில் ­கொ­ல்லப்பட்ட செஞ்சோலை சிறுவர்கள் அனைவரதும் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன். :100_pray:

  • தொடங்கியவர்

செஞ்சோலை படுகொலையின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது.

sencholai.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

செஞ்சோலை படுகொலையின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது.

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் இ. விக்னேஸ்வரன் உட்பட பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள் மற்றும்  மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

02-1-2.jpg02-6.jpg02-8.jpg

http://globaltamilnews.net/archives/36681

  • கருத்துக்கள உறவுகள்

இரக்கம் அற்ற ஈன சிங்களவரின் கொடூர செயலை நினைவு படுத்தி மீண்டும் கண்டிக்கின்றோம்.

நினைவஞ்சலிகள். 

Kulu-696x479.jpg

கண்ணீர் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் !! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DHLbyHXXkAAuD5Q.jpg

கண்ணீர் அஞ்சலிகள் !! 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்படைகளின்
கந்தகப் புழுதியுள்
கரைந்த மலர்களாய்
எம்தமிழ் குழந்தைகள்
தமிழராய் பிறந்ததால்
தம்வாழ்வினையிழந்தவர்
நினைவினில் நனைகிறோம்!

சாட்சியங்களோடு நடைபெற்ற இப்படுகொலைக்காவது இந்த உலகு நீதியைக்காணுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கா நினைவஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 19 people, indoor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.