Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை

Featured Replies

நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, தூக்கிலிட்டு தற்கொலைசெய்துகொண்டார். பிளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக வாதிட உச்ச நீதிமன்றம் வந்திருந்த அனிதா. Image captionநீட் தேர்வுக்கு எதிராக வழக்கில் இணைந்துகொள்ள உச்ச நீதிமன்றம் வந்திருந்த அனிதா.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள குழுமூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அனிதா. 17 வயதான இவர், நடந்து முடிந்த 12ஆம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவரது மருத்துவத்திற்கான கட் - ஆஃப் மதிப்பெண் 196.75 ஆக இருந்தது. எனவே தமக்கு மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.

நீட் தேர்வையும் அனிதா எழுதியிருந்தார். அந்தத் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்களையே அவர் எடுத்திருந்தார் என்பதால், அவர் தேர்ச்சிபெறவில்லை.

இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை எதன் அடிப்படையில் நடக்கும் என்பதில் நீண்ட காலம் குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், விரைவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் நடத்தி முடிக்கவேண்டும் என சிபிஎஸ்சி மாணவர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அந்த வழக்கில் எதிர் மனுதாரராக அனிதா தன்னை இணைத்துக்கொண்டார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கல்லூரி சேர்க்கையை நடத்தினால், அதில் தன்னைப் போன்ற கிராமப்புற பின்னணியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வாதிட்டார். 12ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்தும், தன்னுடைய மருத்துவ கனவு பாழாகிவிடும் என்று கூறினார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் நீட் தேர்வில் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அனிதா துப்பட்டாவால் தூக்கிலிட்டு தற்கொலைசெய்துகொண்டார். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணத்தினாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு மீது குற்றச்சாட்டு

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த நிகழ்வு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளன. மத்திய - மாநில அரசுகள் இந்த மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "கையாலாகாத மாநில அரசுதான் இந்த மரணத்திற்குக் காரணம்" என்று குற்றம்சாட்டினார்.

ஊடகங்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மாணவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் தற்கொலை முடிவை எடுக்கக்கூடாது என்று மட்டும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் ஆவேசமான கருத்துகள் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன.

அனிதாவின் தந்தை சண்முகம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். அவருக்கு அனிதாவுடன் சேர்த்து ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-41126035

  • தொடங்கியவர்

'அனிதா என்னுடைய மகள்..!'- கொந்தளித்த கமல்

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், 'கட்சி கடந்து மாநிலம் கடந்து அனிதாவுக்காக வெகுண்டெழ வேண்டும்' என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது. நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரும் மனுவை, சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர் என்றும், இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையிட்டார். இந்த மனுவில் எதிர் மனுதாரராக அனிதா சேர்க்கப்பட்டார். அப்போது, ''நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல்போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்தார். ஆனால், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த அனிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், 'அனிதா என்ன ஊர், என்ன பெயர் என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை. என் பெண்ணாக இருந்தால்தான் நான் கோபப்பட வேண்டுமா? கனவோடு வந்தவ அனிதாவை மண்ணோடு மண்ணாக அனுப்பிவிட்டோம். கட்சி கடந்து, மாநிலம் கடந்து, இந்த விஷயத்துக்காக வெகுண்டெழ வேண்டும். மக்கள் அனைவரும் அனிதாவுக்காக போராட வேண்டாம். மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றங்கள் எல்லாம் நாம் அமைத்தது. அங்கேயெல்லாம் போய் நாம் தான் நன்றாக வாதாட வேண்டும். ஆனால், வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக் கொண்டிருந்தால் எப்படி மக்களால் வாழ முடியும். இந்த மாதிரி தற்கொலைக்குப் பிறகுதான் பாடம் கற்பீர்களா? அப்படி ஒன்றும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாம். நாங்கள் உங்களுக்கு  பாடம் கற்றுக்கொடுக்கிறோம்' என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்கள், 'விரைவில் கட்சி தொடங்குவீர்களா?' என்ற கேள்விக்கு, 'கட்சி தொடங்குவது பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். இன்னும் சில அரசியல் தலைவர்களையும் பார்த்து கருத்துகளையும் கேட்டறிவேன். அதன் பின்னர் கட்சி தொடங்குவது பற்றி என் முடிவை அறிவிப்பேன். கட்சி தொடங்கும் பட்சத்தில் நான் கண்டிப்பாக காவி பக்கம் சாயமாட்டேன். கேரளாவைப் பாருங்கள். இங்கு மக்கள், அரசு செயல்படுத்தும் திட்டங்கள்குறித்து பெறுமைப்பட வேண்டும்' என்று பதில் அளித்தார். 

http://www.vikatan.com/news/india/101045-anitha-is-my-daughter-kamals-strong-message.html

'அனிதாவின் வேதனையை என் மனம் உணர்கிறது' - கவலை தெரிவித்த ரஜினி

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.  மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு, நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது. நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரும் மனுவை, சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர் என்றும், இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையிட்டார். இந்த மனுவில் எதிர் மனுதாரராக அனிதா சேர்க்கப்பட்டார். அப்போது, ”நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்தார். ஆனால், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த அனிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், 'அனிதாவுக்கு நிகழ்ந்தது மிகவும் எதிர்பாராத ஒன்று. அவர் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், அனுபவித்த வலியையும் வேதனையையும் என் மனம் உணர்கிறது. எனது இரங்கலை அவரது குடும்பத்துக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/101050-rajinikanth-condoles-for-anithas-death-in-twitter.html

  • கருத்துக்கள உறவுகள்

21192613_670544890000930_573451037498025

  • கருத்துக்கள உறவுகள்

'சொம்பு தூக்கி அடிமைகளின் அரசியல்வியாதி'களின் விளையாட்டில் அநியாய உயிர்ப்பலி..

sympathy-card-messages.jpg

  • கருத்துக்கள உறவுகள்

21151642_350549345369758_713797771271509

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

21199479_475056692869024_110340899170239

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவில்லாதவர்கள் ஆட்சியில்..... மாணவியின் அநியாய சாவு. 
"நீட்" தேர்வு என்றால் என்ன? அதனால்... அரசுக்கு என்ன லாபம்?
தமிழக மாணவர்கள் அனைவரும்  இதனை எதிர்க்கும் போது..... 
மற்றைய  மாநிலங்கள், இதனை  எதிர்க்காமல் இருப்பது ஏன்?   
மாநில அரசின் கல்வி சம்பந்தப் பட்ட விடயத்தில் .... மத்திய அரசு ஏன் தலையிடுகின்றது?

இதனைப்  பற்றி, விபரம் அறிந்த... 
ராஜவன்னியன், இசைக் கலைஞன், குமாரசாமி அண்ணா போன்றோர்,  எழுதினால்  நல்லது. 

அந்த மாணவிக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

DIqFiXOWAAAZoRh.jpg

இந்த சந்திப்புதான் என்ரை மண்டையை போட்டு குழப்புது சிறித்தம்பி.......

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

DIqFiXOWAAAZoRh.jpg

இந்த சந்திப்புதான் என்ரை மண்டையை போட்டு குழப்புது சிறித்தம்பி.......

திருமுருகன் காந்தி அவர்களின், முன் எச்சரிக்கை, காணொளி இணைப்பிற்கு. நன்றி குமாரசாமி அண்ணா.
நீங்கள், இணைத்த  படத்தில்  கறுப்பு  கண்ணாடி போட்ட   ஆள்... யார்?   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

திருமுருகன் காந்தி அவர்களின், முன் எச்சரிக்கை, காணொளி இணைப்பிற்கு. நன்றி குமாரசாமி அண்ணா.
நீங்கள், இணைத்த  படத்தில்  கறுப்பு  கண்ணாடி போட்ட   ஆள்... யார்?   

DIqFiXOWAAAZoRh.jpg

அனைத்திந்திய கொலை/கொள்ளைக்கூட்டத்தலைவன். :cool:

  • தொடங்கியவர்

அனிதாவுக்காக தமிழகம் முழுக போராட்டம்

நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட அனிதாவிற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல இடங்களில் போராட்டங்கள் கூடிக்கொன்டே வருகின்றன.

  • தொடங்கியவர்

கண்ணீரில் மிதக்கும் தமிழகம்..! எரியூட்டப்பட்டது அனிதாவின் உடல்

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா உடல் குழூமுர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

1-2_23128.jpg

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் மருத்துவக் கனவு நீட் தேர்வினால் தகர்ந்ததால் விரக்தி அடைந்தவர், நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியப் பின், இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமாக பங்கேற்றனர்.

மேலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களும் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனிதாவின் வீட்டிலிருந்து மயானம் அமைந்துள்ள இடம் வரை ஆயிர்க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி ஊர்வலத்தில், மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று நடந்துசென்றனர். விஜயகாந்த், தகன மேடைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி ஊர்வலத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டன. குழுமூர் கிராமம் முழுக்க கண்ணீரில் மிதந்திருக்க அனிதாவின் உடல் எரியூட்டப்பட்டது. 

http://www.vikatan.com/news/tamilnadu/101179-anithas-body-has-been-cremated.html

அனிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார்..! இறுதிச் சடங்கில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் வேதனை

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவின் உடலுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

fdf_23039.jpg

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் மருத்துவக் கனவு நீட் தேர்வினால் தகர்ந்ததால் விரக்தி அடைந்தவர், நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நேற்று இரவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சற்று நேரத்துக்கு முன்னர் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குழுமூருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார். தி.மு.க சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியை அவரது குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தவறான தகவல்கள் அளித்து மாணவர்களை ஏமாற்றிவிட்டனர். மாணவி அனிதா, தற்கொலை செய்யவில்லை. படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  அனிதாவின் இறப்புக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பதவி விலகவேண்டும்' என்று தெரிவித்தார். 

அதன்பின்னர், அனிதாவின் உடல் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று நடந்து சென்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/101178-mkstalin-tributes-to-anithas-body.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

மூதேவி !

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

அந்த இரும்பு பெட்டியில் தான்... அவளின்,  மொத்த உடைகளும்,

இரண்டு அடி அகலம் எட்டு அடி நீளம் 
பள்ளம் மேடுமான தரைகள் இது தான் அவள் படித்து, படுத்தும் உறங்கும் அறை.

மின்விசிறி கூட இல்லாத அறையில் படித்தவள் வாங்கிய மதிப்பெண் 1176.

நீ படிச்சி டாக்டர் ஆகனும் என்று தன் தாய் அவள் குழந்தையாய் இருக்கும் போது கூறியது அவள் மருத்துவ படிப்பை நேசிக்க இதுவும் ஓர் காரணம்.

அந்த தாய் அவள் ஏழு வயது குழந்தையாய் இருக்கும் போது இறந்துவிட்டாள்.

தாய் இல்லாத பிள்ளை 
தகப்பன் கூலி தொழிலாளி
அண்ணன்கள் மூன்று பேர்
இவர்களுக்கு சோறாக்கி 
போடும் தாய் இவள்
அந்நிலையிலும் அவள் தாயின் கனவை நினைவாக்க விடாது படித்தாள்.

நீட் என்னும் எமனை வழக்கு மூலம் எதிர் கொண்டால்..
இருந்தபோதும் அரசும் அதிகாரமும் முன் தோல்வியை கண்டால்.

அவள் தேர்வில் தோல்வியடைந்து இறக்கவில்லை..
தன் தாயின் கனவை நிறைவேற்ற முடியாமல் இறந்தால்..

அவள் இறப்பு 
தமிழினித்தின் பேரிழப்பு.

#இரா.ஐயனார்.#

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதாவுக்காக குரல் கொடுக்கும் 9 வயது அமெரிக்க வாழ் தமிழ் சிறுமி!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.