Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை முஸ்லிம்களின் பூர்வீகமே ! கோடிஸ்வரனுக்கு பதிலடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை முஸ்லிம்களின் பூர்வீகமே ! கோடிஸ்வரனுக்கு பதிலடி!

FB_IMG_1509884635313.jpg

கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய நகரம் என்றும், அதை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு வருவது இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இழி செலாகும். அவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியாத இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

கல்முனை முதலாம் வட்டாரத்தில் வாடி வீட்டுத் தெருவில் ‘பிசர்’ என்னும் பெயருடைய ஒரு ஆங்கிலேயன் அரசாங்கத்திடமிருந்த 38 ஏக்கர் காணியை வாங்கி அதில் தெங்குப் பயிர் செய்கையை 50 ஆண்டுகளாகச் செய்த பின் அவனிடம் மனேஜர் வேலை பார்த்து வந்த இராஜநாயகம் என்னும் தமிழருக்கு அதனை நன்கொடையாகக் கொடுத்து விட்டு தனது தாய் நாட்டிற்குப் போய் விட்டார்.

பின்னர் இராஜநாயகத்திடமிருந்தும், அவரது பின்னுருத்தாளிகளிடமிருந்தம் காலத்துக்குக் காலம் தகுந்த விலைகளைக் கொடுத்து வாங்கிய பூமிகளிலேயே இன்று முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வரலாற்றுப் பின்னணிகொண்ட காணியைத்தான் முஸ்லீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் எனக் கதைகட்டி வருகின்றார்கள்.

இவ்வாறான சட்ட பூர்வமான நிலக் கொள்வனவை ‘ஆக்கிரமிப்பு’ என்றால் கண்டி, கொழும்பு போன்ற நகரங்களில் தமிழர்கள் காணி பூமி, தோட்டங்கள் என்று சட்டபூர்வமாகக் கொள்வனவு செய்துள்ளார்களே.. அதை எவ்வாறு அழைப்பது?

தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் – 1967

கல்முனையில் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வந்த முஸ்லிம் மீனவர்கள் குடிப் பெருக்கம், தொழில் விருத்தி காரணமாக கல்முனை கடற்கரையில் வாடிவீட்டை அண்மிய அரச இடத்தில் குடிபெயர்ந்தனர்.

அன்றைய அமைச்சராக இருந்த சி.பி.டி. சில்வா அவர்களால் இக்குடியிருப்பாளர்களுக்கு காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்குமாறு அரசாங்க அதிபருக்கு ஆணையும் வழங்கப்பட்டது. அரசாங்க அதிபரும் அனுமதி வழங்கி விட்டார். அப்பாவி ஏழை முஸ்லிம் மீனவர்கள் தாம் குடியிருந்த நிலத்தில் தமது நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கல்முனைப் பொலிசின் பொறுப்பதிகாரியாக நடராசா எனும் ஒரு தமிழரே கடமை செய்து கொண்டிருந்தார்.

கல்முனைப் பொலிசின் உதவியுடன் கல்முனை டி.ஆர்.ஓ.வும் கிராம சேவையாளரும் இது ஒரு இனரீதியான குடியேற்றம் எனக் குற்றஞ்சாட்டி நூற்றுக்கணக்கான ஏழை முஸ்லிம் மீனவர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அடைத்து வைத்தனர்.

பல நாட்களின் பின்னர்; நீதிபதியால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சில வாரங்களின் பின்னர் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. முஸ்லிம் மீனவர்களுக்கு நீதி வழங்கப்பட்டாலும் சில இனவாதிகளுக்கு பொறுக்க முடியவில்லை. 1967ம் ஆண்டு சித்திரைப் பெருநாளன்று அனைத்துக் குடிசைகளையும் அவர்கள் கொள்ளையடித்துவிட்டு தீயிட்டு நாசமாக்கினார்கள்.

இக்கலவரம் சுமார் ஒரு மாதம் நீடித்தது. ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டார். பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார்கள். இந்தக் கொடுமையால் ஆத்திரமடைந்த முஸ்லிம்களில் சிலர் கல்முனைக்குடிக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் வாழ்ந்த பறையாவட்டைத் தமிழர்களைத் தாக்கினார்கள். அவர்கள் பாதுகாப்பின் காரணமாக காரைதீவு, சம்மாந்தறை, பாண்டிருப்பு, கல்முனை போன்ற பக்கத்துக் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

சுமார் ஒரு மாதத்தின் பின் சமாதானம் உருவாக்கப்பட்டது. இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்களது இடங்களில் வந்து குடியேறுமாறு முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டனர்.

அவ்வாறு குடியேறினால் முஸ்லிம்களும் தீக்கிரையாக்கப்பட்ட, தங்க ளுக்கு அரசாங்க அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் குடியேறுவர் என்கிற காரணத்தால் தங்களது நிலங்களை முஸ்லிம்களுக்கு கொழுத்த விலைகளுக்கு விற்றுவிட்டு முஸ்லிம்கள் விரட்டப்பட்ட குருந்தையடி போன்ற இடங்களில் அத்தமிழர்கள் குடியேறி அரசாங்க அனுமதிப் பத்திரம் பெற்று இன்றும் வாழ்கின்றனர்.

ஸாஹிராக் கல்லூரியை அண்டிய அக்காணிகளுக்கு ஞானமுத்து, கந்தையா, சந்திரசேகரன் போன்ற தமிழ் நொத்தாரிசுகளே உறுதியும் எழுதியுள்ளனர். இந்தச் சட்பூர்வக் காணிக் கொள்வனவை எவ்வாறு நில ஆக்கிரமிப்பு என்று கூறுவது?

எனவே, விடயமறிந்தோரும், படித்தவர்களும் இவ்வடயத்தில் தெளிவுபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
 
http://www.naspflanka.com

முஸ்லிம்களுக்கு பூர்வீகம் என்று ஓன்று எங்குமே கிடையாது!
திருடுக்காணிகள் பூர்வீகம் ஆகமுடியாது.
அப்படி பூர்வீகம் என்று ஒன்றை கருத்தவேண்டுமெனின் அது நரகமாகவே இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் கதை தயாரிக்கிறானுகள் கல்முனை நகரம் பூர்வீக கடைகள் யாழ்ப்பாணத்து காரர்களே வைத்திடுந்தார்கள் பிரச்சினை ஏற்பட கடைகள் ஆயீரம் ரூபா கணக்கில் அந்த நாட்களில் விற்று கைமாறப்பட்டன 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2017 at 2:22 AM, Rajesh said:

முஸ்லிம்களுக்கு பூர்வீகம் என்று ஓன்று எங்குமே கிடையாது!
திருடுக்காணிகள் பூர்வீகம் ஆகமுடியாது.
அப்படி பூர்வீகம் என்று ஒன்றை கருத்தவேண்டுமெனின் அது நரகமாகவே இருக்க முடியும்.

தமிழரின் பூர்வீகம் தமிழர்களை நரகத்துக்கு கொண்டு செல்லவில்லையா?  முள்ளிவாய்க்காலை அதற்குள் மறந்து விட்டீர்களே?

On 11/9/2017 at 4:27 AM, தனிக்காட்டு ராஜா said:

எப்படியெல்லாம் கதை தயாரிக்கிறானுகள் கல்முனை நகரம் பூர்வீக கடைகள் யாழ்ப்பாணத்து காரர்களே வைத்திடுந்தார்கள் பிரச்சினை ஏற்பட கடைகள் ஆயீரம் ரூபா கணக்கில் அந்த நாட்களில் விற்று கைமாறப்பட்டன 

பிரச்சினை ஏன் ஏற்பட்டது? அவர்கள் சொல்வது போல இல்லாவிட்டால் வேறு எப்படி பிரச்சினை ஏற்பட்டது?  தெரிந்தவர் போல எழுதுகிறீர்கள் - எங்களுக்கும் சொல்லலாமே?

யாழ்பாணத்து காரர்கள் அங்கு எப்படி பூர்வீக குடிகளாக இருக்க முடியும்? கடைகளை விற்றுவிட்டு அவர்கள் தமது பூர்வீக யாழ்ப்பாணம் போகவில்லையா? மேலும் அங்கு முஸ்லிம்கள் அன்றும்  பெரும் பான்மையாக இருந்ததால் தானே யாழ்பாணத்து காரர்கள் வெளியேற   வேண்டி   வந்தது?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

பிரச்சினை ஏன் ஏற்பட்டது கிழக்கில் ஆரம்ப காலத்தில் அரசசாங்கத்திற்கும் தமிழற்களுக்கும் பிரச்சினையேற்பட பல தமிழ் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன கல்முனை வெஸ்லி பாடசாலை பின்புறமுள்ள கடைகள் இதர கடைத்தொகுதிகள் அனைத்தும் தமிழர்களுடையது  யாழ்ப்பாணத்து புகையிலை , தும்புக்கயிறு, தும்புத்தடி ஈர்க்கில்தடி மற்றும் சில்லறைக்கடைகள்  மலைகை கடைகள் என்று வைத்திருந்த கன பேர் பிரச்சினை காரணமாக விற்றார்கள் கல்முனை நகர் இன்று அமைந்துள்ள அதனை சூழவுள்ள பகுதிகள் அனைத்திலும் தமிழர்கள் இருக்க அதனை அண்டி குடியேறிய கல்முனைக்குடியிலிருந்து வந்த முஸ்லீம்கள் அதனை ஆள்கிறார்கள்  இத்தனைக்கும் அவர்கள் கல்முனையில் இல்லை  இது உங்களுக்கு தெரியாது என நினைக்கிறேன் இன்றும் கூட சொல்வார்கள் யாழ்ப்பாணத்தார் வைத்திருந்த கடைப்பக்கம் என்று  பய்த்தினால் சில ர் விற்றார்கள் ஒருவர் விற்க மற்றவர்களும் விற்று விட்டு போனது தான் கல்முனை சந்தைப்பகுதி  இதை உங்களுக்கு நிருபிக்க இயலாது அப்படி நீங்கள் உன்மையை அறிய வேண்டுமாக இருந்தால் கல்முனைக்கு வந்து ஒரு கடையின் தாய் உறுதியை கேட்டுப்பார்த்தால் நல்ல விளக்கம் கொடுக்கலாம் அவர்கள்  

பூர்வீக குடிகள் என்றில்லை வியபாரம் செய்ய வந்தவர்கள் தற்பொழுது கூடா ஒருவர் அவர்கள் பக்கத்தில் கடை வைத்திருக்க முடியாதாம்  என்று கடையை விற்றுவிட்டு வேறொரு இடத்தில் கடைவாங்கி நடத்துகிறார்  முஸ்லீம்கள் சந்தர்ப்பத்தை பயன் படுத்தினார்கள் கடை  வைத்திருப்பவர்கள் அன்றைய காலத்திலிருந்த பல கும்பல்களுக்கு கப்பம் வரி செலுத்த வேண்டிய நிலைப்பாடு கிழக்கில் தோன்றிய பல் குறுப்புகளை சொல்லமாம் மற்றது இரவு நேரங்களில் கடைகள் உடைத்து  கொள்ளை போன்ற சம்பவங்களால் கல்முனை விட்டு போனது  யாழ்ப்பாண  மக்களே மொத்த கடைகளையும் நடத்த வில்லை கல்முனை தமிழர்களும்  கல்முனையில் முஸ்லீம்கள் பெரும்பானையானது  சில பல ஆண்டுகளுக்குள்ளே காரணம் அவர்கள் இனப்பெருக்கம் அதிகம் இன்று கூட சாய்ந்த மருது தனி பிரதேச செயலகம் கேட்டு 4, 5 நாட்களாக ஹர்த்தால் நடக்கிறது ஆனால்கல்முனை முஸ்லீம்கள் சொல்லி கொள்வது  அப்படிகொடுத்தால் கல்முனை தமிழர் கையில் போய்விடும் அதனை பிரித்து கொடுக்க முடியாது  என்றும் கல்முனைமுஸ்ல்லிம்கள் சொல்லிக்கொண்டு திரியுறார்கள்  தமிழரின் பிடிக்குள் வாழ முடியாதாம் என்று ஆனால் தமிழ் மக்கள் வாழலாம் அவர்கள் பிடியில் இருந்து இத்தனைக்கும் ஒரு தமிழ் பிரதேச செயலகம் அமைக்க தன்னிச்சையாக செயலாற்ற அமைக்க முடியவில்லை 

23435056_130350097682138_138808438075863

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் களத்தில் இறங்கி கல்முனையில் துரத்தியடிக்கப்பட்ட கள்ள உருதி கும்பல்

நேற்றைய தினம் கல்முனை மாநகரின் தமிழரின் எல்லைக்கு அச்சுறுத்தலாக உருவாகிய கல்முனைக்குடி முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர் கனவு சிதறடிக்கப்பட்டது.
கல்முனை மாநகரின் எல்லைக்கிராமமாக திகழும் கல்முனை 3ம் பிரிவு ஆகும். இதன் இருபக்க எல்லையான பிரதான வீதியில் தரவைச்சித்தி பிள்ளையார் ஆலயம் மிளிர்கின்றது.
மறுபக்க உட்புறமான எல்லையாக கடற்கரையோரமாக கண்ணகியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
வடகிழக்கில் முஸ்லிம் தமிழ் கலவரம் உருவாகினால் பிட்டு தேங்காய்ப்பூ உறவை பரிசோதிக்கும் இடமாக முஸ்லிம்களின் தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகும் ஆலயங்களின் இவ்விரண்டும் எல்லைப்புறமாக காவலாக இருப்பதால் அழிவின் விழிம்பில் இருந்து தற்போது வீறுநடை போடுகின்றது.
ஆனால் இவ்வளவு அழிவுகளை கொடுத்த கல்முனைக்குடி முஸ்லிம்களுக்கு இரு பக்க கோயில் அருகே சமகாலத்தில் தமிழர் காணி விற்றதும் அவ் முயற்சி இரு கோயில்களுக்கு பொதுவான நிர்வாகத்திடம் சேமிப்பாக பணவசதி குறைவாகயிருந்தாலும் இவ் காணிவிற்பனையை தம்மால் முடிந்தவரை தடுத்து நிறுத்தி வெற்றி கண்டுள்ளார்கள்.கருணா அம்மான்
அதில் தரவைச்சித்தி ஆலயம் முன்னாலிலுள்ள காணி பல இலட்சத்திற்கு ஆசைப்பட்டு விற்க முயன்ற போது அதை எப்பாடு பட்டாவது தமிழரிடம் வாங்கிக்கொடுக்கும் முயற்சியின் பலனாக வீரமுனை  பிள்ளையார் ஆலயம் வாங்க முன்வந்துள்ளது.
ஆனால் உட்புறமாக கரையோர எல்லையான இதே நிர்வாகத்தின் மற்றைய கோயிலான கண்ணகியம்மன் எதிரேயுள்ள சுமார் 25முஸ்லிம் குடும்பம் குடியேற முடியுமான நிலப்பரப்பு சத்தமில்லாமல் ஆரையம்பதி சேர்ந்தவரால் தரகர் மூலம் விற்பனைக்கு பேரம் பேசி விற்றுள்ளார்.
அவரிடம் அடக்கமாக நாகரிகமாக பேசியும் விற்பதை நிறுத்தவில்லை அதற்கு மறுவழி முறை அராஜகம் அந்த வழிதான் நேற்று கல்முனை வாழ் தமிழ் இளைஞர்கள் பின்பற்றி ஆக்கிரமிப்பு மதில், அத்திவாரம் தகர்த்தெறியப்பட்டு இனி வரும் காலத்தில் கல்முனை மாநகர் தமிழர் பகுதியில் எவனும் முஸ்லிம்களுக்கு காணி விற்றால் இப்படி தண்டனை கிடைக்கும் என்பதை வெளிக்காட்டியுள்ளார்கள்.
கல்முனைக்குடி முஸ்லிம்களுக்கு வன்னி ரிசாத் கண்டி பைசர் முஸ்தபா காத்தான்குடி ஹிஸ்புல்லா கேகாலை காதர் ஆதரவு தெரிவித்து பலமாக உள்ள போது 

Image may contain: 1 person, plant, tree, outdoor, nature and water
Image may contain: plant, tree, sky, outdoor and nature
Image may contain: plant, tree, outdoor, nature and water
Image may contain: one or more people

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஜீட் இதையும் ஒரு தடவை வாசிக்கவும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12.11.2017 at 1:48 AM, Jude said:

தமிழரின் பூர்வீகம் தமிழர்களை நரகத்துக்கு கொண்டு செல்லவில்லையா?  முள்ளிவாய்க்காலை அதற்குள் மறந்து விட்டீர்களே?

பிரச்சினை ஏன் ஏற்பட்டது? அவர்கள் சொல்வது போல இல்லாவிட்டால் வேறு எப்படி பிரச்சினை ஏற்பட்டது?  தெரிந்தவர் போல எழுதுகிறீர்கள் - எங்களுக்கும் சொல்லலாமே?

யாழ்பாணத்து காரர்கள் அங்கு எப்படி பூர்வீக குடிகளாக இருக்க முடியும்? கடைகளை விற்றுவிட்டு அவர்கள் தமது பூர்வீக யாழ்ப்பாணம் போகவில்லையா? மேலும் அங்கு முஸ்லிம்கள் அன்றும்  பெரும் பான்மையாக இருந்ததால் தானே யாழ்பாணத்து காரர்கள் வெளியேற   வேண்டி   வந்தது?

அண்மைய செய்திகளின் படி யாழ்மாவட்டத்திலும் வெகுவிரைவில் முஸ்லீம்கள் சனத்தொகை கணிப்பில் முன்னுக்கு வந்து விடுவார்களாம். அப்போது உங்கள் பெரும்பான்மை கணக்கை எப்படி வகுப்பீர்கள் ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2017 at 12:48 AM, Jude said:

தமிழர்களை வந்தேறு குடிகள் என்றுவிட்டு இப்போது எப்படி பூர்வீக யாழ்ப்பாணம் வந்தது? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அண்மைய செய்திகளின் படி யாழ்மாவட்டத்திலும் வெகுவிரைவில் முஸ்லீம்கள் சனத்தொகை கணிப்பில் முன்னுக்கு வந்து விடுவார்களாம். அப்போது உங்கள் பெரும்பான்மை கணக்கை எப்படி வகுப்பீர்கள் ஐயா?

சனத் தொகை கணிப்பில் அதிகமாக இருப்பவர்கள் பெரும்பான்மை - இல்லையா?

அவர்களின் சனத்தொகை ஏன் அதிகரிக்கிறது? அவர்களால் நாலு முதல் ஏழு மனைவியருடன் பிள்ளைகள் பெற்று பராமரிக்க முடிகிறது. தமிழர்களால் இருப்பவர்களையும் கடந்த ஐம்பது வருடங்களில் அழித்தொழிக்க தான் முடிந்தது.   இனியாவது மற்றவர்களை பார்த்தாவது திருந்துவோம் என்று சிந்திக்க வருகிறதா? இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

ஏழுபேருடன் பிள்ளையைப்பெற்று குடும்பமாக வாழ்வது விலங்குகளே மனிதர்களல்ல.அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிய பூர்வீக சமூகங்களுக்கு இப்படித்தான் எழுதத்தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனைப் படுகொலைகள் நடக்கேக்கையே தெரியும்.. ஒரு நாள்.. இந்தப் புனைகதை பூனைக்குட்டி வெளில வருமென்று.

கல்முனை தமிழ் மக்கள் முஸ்லிம்களால்.. இன சுத்திகரிப்புக்குள்ளான நகர்களில் ஒன்று.

இதை எல்லாம் சம் சும் கும்பல்.. இன சுத்துகரிப்புன்னே சொல்லாது. அரசியல் செய்ய பாக்கெட் நிரப்ப அது வசதில்லை என்பதற்காக.

கல்முனை என்பது தமிழர்களின் வியாபார மையமாக இருந்த நிலை போய் இன்று.. கல்முனை என்பது முஸ்லீம்களின் பூர்வீகம் ஆனது என்பது...

தமிழர்கள் மீதான..இனச்சுத்திகரிப்பின் வேகம்.. தாக்கத்தை அப்படியே இனங்காட்டி நிற்கிறது. :rolleyes:tw_angry:

On 11/12/2017 at 6:18 AM, Jude said:

தமிழரின் பூர்வீகம் தமிழர்களை நரகத்துக்கு கொண்டு செல்லவில்லையா?  முள்ளிவாய்க்காலை அதற்குள் மறந்து விட்டீர்களே?

சம்பந்தமே சம்பந்தம் இல்லாத உங்கள் உளறல் எனக்கு விளங்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆரையம்பதியில் 35 ஆண்டுகளாக குடியிருந்த தமிழ் மக்களை விரட்டி நடுத்தெருவில் விட்ட முஸ்லீம்கள்  எல்லாம்கள்ள உறுதிகும்பல்

எம்மினம் நடுத்தெருவில். எம் இனத்தை விற்றுப் பிழைப்பு நடாத்தும் வேடதாரிகளே இனியாவது உங்கள் வேடம் கலையுமா?

 ·
Image may contain: one or more people and outdoor

நடுத்தெருவில் அடிக்கும் கொழுத்தும் வெயிலுக்கு மத்தியில் நடு ரோட்டிலிருக்கும் அந்த  குடும்பம் வேலை  இதற்கு முஸ்லீம்களுக்கு வக்காளத்து வாங்கும் சக நண்பர்களுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/14/2017 at 5:47 AM, Rajesh said:

சம்பந்தமே சம்பந்தம் இல்லாத உங்கள் உளறல் எனக்கு விளங்கவில்லை!

உங்களுக்கு உளறலாக தெரிவது மற்றவர்களுக்கு விளங்கி இருக்கிறதே? 

விளக்கம் குறைவானவர்கள் எங்கள் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். 

என்ன செய்வது ? உங்கள் விதி உங்களை விளக்கம் குறைவானவராக உருவாக்கி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/14/2017 at 4:09 AM, Eppothum Thamizhan said:

ஏழுபேருடன் பிள்ளையைப்பெற்று குடும்பமாக வாழ்வது விலங்குகளே மனிதர்களல்ல.அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிய பூர்வீக சமூகங்களுக்கு இப்படித்தான் எழுதத்தோன்றும்.

முருகனுக்கு இரண்டு மனைவியர் - அனுமாருக்கு எத்தனை? பிள்ளையாருக்கு எத்தனை?   யார் விலங்கு?

தமிழர் சாதி முறையை எந்த சலுகைகளுக்காக ஏற்று கொண்டார்கள்?

எந்த அற்ப சலுகைகளுக்காக தமிழர் இந்துகளாக மாறி  தாங்கள் தாழ்ந்த சாதி என்றும் பிராமணர் உயர் சாதி என்றும் சமஸ்கிருதம் தெய்வமொழி என்றும் ஏற்றுக்கொண்டார்கள்?

முஸ்லிம்களையும், கிறீஸ்தவர்ளையும்,  ஏன், சைவத் தமிழர்களுக்குள்ளேயே கீழ் சாதி என்று மேலும் பலரையும் தாழ்த்தி வைத்து    தாம் தான் உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் மற்றவர்களால் அடக்கி வைக்கப்படுவது வரலாறு. இது இன்று  ஈழத்தமிழர் வரலாறு.

முஸ்லிம்களின் பண்பாட்டையும் சிங்களவர்களின் பண்பாட்டையும் கிறீஸ்தவர்ளையும், பண்பாட்டையும் மதித்து  வாழ   பழகுங்கள் - உங்களுக்கும் தன்மானத்துடன் வாழ வழி   கிடைக்கும்.

8 hours ago, Jude said:

முருகனுக்கு இரண்டு மனைவியர் - அனுமாருக்கு எத்தனை? பிள்ளையாருக்கு எத்தனை?   யார் விலங்கு?

தமிழர் சாதி முறையை எந்த சலுகைகளுககாக ஏற்று கொண்டார்கள்?

எந்த அற்ப சலுகைகளுக்காக தமிழர் இந்துகளாக மாறி  தாங்கள் தாழ்ந்த சாதி என்றும் பிராமணர் உயர் சாதி என்றும் சமஸ்கிருதம் தெய்வமொழி என்றும் ஏற்றுக்கொண்டார்கள்?

முஸ்லிம்களையும், கிறீஸ்தவர்ளையும்,  ஏன், சைவத் தமிழர்களுக்குள்ளேயே கீழ் சாதி என்று மேலும் பலரையும் தாழ்த்தி வைத்து    தாம் தான் உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் மற்றவர்களால் அடக்கி வைக்கப்படுவது வரலாறு. இது இன்று  ஈழத்தமிழர் வரலாறு.

முஸ்லிம்களின் பண்பாட்டையும் சிங்களவர்களின் பண்பாட்டையும் கிறீஸ்தவர்ளையும், பண்பாட்டையும் மதித்து  வாழ   பழகுங்கள் - உங்களுக்கும் தன்மானத்துடன் வாழ வழி   கிடைக்கும்.

ஜீட் நீங்கள் கூறுதில் நியாயம் இருந்தாலும் இந்து சமயத்தையும் வருணா சிரமம் எனப்படும் சாதி முறையையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியது ஈழத்தமிழர் அல்ல. வட இந்தியர்களே. துரதிஸ்ரவசமாக தமிழ் மக்கள் மீது வட இந்தியரின் வருண சிரம முறை காலாகாலமாக திணிக்கபட்டு அதன் தாக்கத்தினால் பாதிக்பட்டு தமிழ் மக்கள் உள்ளார்கள். தற்போதைய அரசியல் சூழலில் கூட இந்து சமய வருண சிரமத்தை மேலும் வலுப்படுத்த  இந்து என்ற ஒற்றை வரிகளுக்குள் முழு இந்தியாவையும் கொண்டு வர இந்திய மத்திய அரசு முழு முனைப்புடன் ஈடுபட்டு வரும் இன்றைய சூழ்நிலையில்  ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்ப முள்ளிவாய்க்கால் என்றாலும் சரி இந்து சமய சாதி முறை என்றாலும் சரி முழுப்பழியையும் பலவீனமான இனத்தின் மீது போட்டு இன்றய சூழ்நிலையில்  பலசாலிகள் செய்யும் அங்கிரமங்களை கூட கண்டும் காணாமல் விடும் விசுவாச மனநிலையில் இருந்து வெளியே வந்து நடுநிலமையாக கருத்து எழுதுவது நல்லது.

அதற்காக தமிழர்களான எம்மிடம்  உள்ள குறைபாடுகளுக்கு பத்தாம் பசலி மனப்பாங்களுகளுக்கு  நான் வக்காலத்து வாங்கவில்ல. அவை திருத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் தோல்வியடைந்த பலவீனமான இனம் என்பதால் மற்ற இனத்தவரின் குற்றங்களை மன்னிக்கும் அதே வேளை எடுத்ததற்கெல்லாம் நடந்த சம்பவங்களுக்கான எல்லா பழியையும் தமிழர்களின் மீது  தொடர்ச்சியாக போடும் தங்களின் மனப்பாங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. பலத்திற்கு விசுவாசமாக இருப்பதும் தமிழர்களின் குறைபாடுகளில் ஒன்று. அது ஒரு தமிழர் என்ற ரீதியில்  உங்களை பாதித்துள்ளதா அல்லது உண்மை விளங்கியும் இங்கு யாழ்களத்தில் எழுதும் சில கருத்தாளர்களின் மீதுள்ள வெறுப்பினால் அவர்களை சீண்ட இவ்வாறு எழுதுகிறீர்ளோ தெரியவில்லை.  ஏனெனில் தமிழர் முஸ்லீம் முரண்பாட்டில் தமிழர் தரப்பு மீது தான் முழுதவறும் உள்ளது என்று நினைக்கும் அளவுக்கு பேதைத்தனமாக   நீங்கள் இருப்பீர்கள் என்று  நான் கருதவில்லை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

முருகனுக்கு இரண்டு மனைவியர் - அனுமாருக்கு எத்தனை? பிள்ளையாருக்கு எத்தனை?   யார் விலங்கு?

முஸ்லிம்களின் பண்பாட்டையும் சிங்களவர்களின் பண்பாட்டையும் கிறீஸ்தவர்ளையும், பண்பாட்டையும் மதித்து  வாழ   பழகுங்கள் - உங்களுக்கும் தன்மானத்துடன் வாழ வழி   கிடைக்கும்.

சிங்களவர் & முஸ்லீம்கள் பண்பாட்டை மதிச்சு வாழ பழகுறதுனா ..எப்படி... இரண்டுநாளா சிங்களவரும் முஸ்லிம்களூம் காலியில்...காலிதனமா நடந்துக்குறாங்களே அந்த பண்பாடா அண்ணா? அப்படி ஒரு தன்மானத்துக்கு வழிகாட்டின உங்கள எத்தன தரம் வேணும்னாலும் தமிழன் கும்பிடலாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

சிங்களவர் & முஸ்லீம்கள் பண்பாட்டை மதிச்சு வாழ பழகுறதுனா ..எப்படி...

கீழே "எப்போதும் தமிழன்"  எழுதியுள்ளதை கவனமாக படியுங்கள்.

On 11/14/2017 at 4:09 AM, Eppothum Thamizhan said:

ஏழுபேருடன் பிள்ளையைப்பெற்று குடும்பமாக வாழ்வது விலங்குகளே மனிதர்களல்ல.அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிய பூர்வீக சமூகங்களுக்கு இப்படித்தான் எழுதத்தோன்றும்.

இப்படி அவர்களின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் "விலங்குகள்" என்று எழுதும் தமிழர்களை எப்படி முஸ்லிம்கள் மதிப்பார்கள்?

ஒரு பலவீனமான தோற்றுப்போன இனத்தை சேர்ந்த ஒருவர், ஒரு பலம் கூடி வரும் இனத்தை பற்றி இப்படி எழுதினால் அவர்கள் ஏறி மிதிக்க மாட்டார்களா?

நானும் விபூதி பற்றியும் லிங்கம் பற்றியும் சாமத்திய சடங்கு பற்றியும் தாராளமாக அவதூறாக எழுதலாம். ஆனால் அவை  சைவ தமிழ் மக்களின் பண்பாடு. ஆகவே நான் அவற்றை மதிக்கிறேன். எல்லா பண்பாடுகளிலும் மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள கடினமான வழக்குகள் இருக்கின்றன. அவற்றை மதித்து பழக மறுக்கும் ஒரு இனமாக தமிழ் இனம் இருக்கும் வரை மற்றவர்களின் மதிப்பு கிடைக்காது. முஸ்லிம்களின் பண்பாட்டை மதிக்க பழகினால் மட்டுமே தமிழர் இனி இலங்கையில் வாழ முடியும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

ஜீ ஏனெனில் தமிழர் முஸ்லீம் முரண்பாட்டில் தமிழர் தரப்பு மீது தான் முழுதவறும் உள்ளது என்று நினைக்கும் அளவுக்கு பேதைத்தனமாக   நீங்கள் இருப்பீர்கள் என்று  நான் கருதவில்லை.

முஸ்லிம்கள், சிங்களவர், அமெரிக்கர், இந்தியர், சர்வதேசம் எல்லாம் விட்ட தவறுகள் பற்றி கேட்டால் காவியங்கள் எழுத இங்கு பலர் இருக்கிறார்கள். அவற்றை நாம் திருத்த முடியாது. தமிழர் தரப்பில் உள்ள தவறுகள் என்ன? பட்டியலிட முடியுமா? அவற்றை திருத்த நாம் என்ன செய்யலாம்?

On 11/18/2017 at 6:34 PM, Jude said:

முஸ்லிம்களின் பண்பாட்டையும் சிங்களவர்களின் பண்பாட்டையும் கிறீஸ்தவர்ளையும், பண்பாட்டையும் மதித்து  வாழ   பழகுங்கள் - உங்களுக்கும் தன்மானத்துடன் வாழ வழி   கிடைக்கும்.

2000 வருடங்களாக உலகில் நடந்த அத்தனை இனப்படுகொலைகளுக்கும் காரணமான மதவெறியர்கள் சார்ந்திருந்த மதம் கிறிஸ்தவம், பௌத்தம், இஸ்லாம் என்பது வரலாறு அறிந்த சிறுபிள்ளைகளுக்கும் தெரிந்த விடயம்.

On 11/18/2017 at 6:34 PM, Jude said:

முருகனுக்கு இரண்டு மனைவியர் - அனுமாருக்கு எத்தனை? பிள்ளையாருக்கு எத்தனை?   யார் விலங்கு?

தமிழர் சாதி முறையை எந்த சலுகைகளுக்காக ஏற்று கொண்டார்கள்?

எந்த அற்ப சலுகைகளுக்காக தமிழர் இந்துகளாக மாறி  தாங்கள் தாழ்ந்த சாதி என்றும் பிராமணர் உயர் சாதி என்றும் சமஸ்கிருதம் தெய்வமொழி என்றும் ஏற்றுக்கொண்டார்கள்?

அவரவர் அவரவர் அறிவுக்கேற்பவே சிந்திக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:

அவரவர் அவரவர் அறிவுக்கேற்பவே சிந்திக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

அவரவர் அவரவர் அறிவுக்கேற்பவே சிந்திக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

3 hours ago, Jude said:

அவரவர் அவரவர் அறிவுக்கேற்பவே சிந்திக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

ஜூட் க்கு கொஞ்சமாவது தன்னைப்பற்றி விளங்கினது மகிழ்ச்சி.
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறாமல் இருந்தால் சரி.

On 11/18/2017 at 6:17 PM, Jude said:

உங்களுக்கு உளறலாக தெரிவது மற்றவர்களுக்கு விளங்கி இருக்கிறதே?

யார் யாருக்கு விளங்கி இருக்குது?

பட்டியல் போட்டால் நல்லது! இல்லையென்றால் உளறல் 1000% உறுதியாகிவிடும்.

On 11/18/2017 at 6:17 PM, Jude said:

விளக்கம் குறைவானவர்கள் எங்கள் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். 

என்ன செய்வது ? உங்கள் விதி உங்களை விளக்கம் குறைவானவராக உருவாக்கி இருக்கிறது. 

இத உங்க வீட்டு கண்ணாடி முன்னாடி நின்று தினமும் காலை, மாலை வாசித்து வந்தால் திருந்தும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/18/2017 at 2:47 PM, Jude said:

உங்களுக்கு உளறலாக தெரிவது மற்றவர்களுக்கு விளங்கி இருக்கிறதே? 

விளக்கம் குறைவானவர்கள் எங்கள் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். 

என்ன செய்வது ? உங்கள் விதி உங்களை விளக்கம் குறைவானவராக உருவாக்கி இருக்கிறது. 

மற்றவர்களுக்கு விளங்கி உங்கள் உளறலுக்கு பதில் எழுதாமலில்லை. விளக்கம் குறைந்தவர்களுக்கு பதில் எழுதி நேரத்தை அவர்கள் வீணடிக்க விரும்பவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.