Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை!

Featured Replies

  • மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை!
மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில்  தண்டனை!
 
மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை!

மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொள்வதும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என்ற அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

குற்றவியல் சட்டத்தில் விரைவில் இது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திருமணம் பாலியல் வன்கொடுகைகளை மேற்கொள்வதற்கான ஓர் அங்கீகாரமாக கருதப்பட முடியாது.

மனைவியர் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் வீட்டு வன்முறைகளாகவே கருதப்பட வேண்டும்.

மனைவியுடன் உறவு கொள்வது கணவனின் உரிமையாகவே கருதப்பட்டு வருகின்றது.

எனினும் தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் மனைவி, கணவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் மனைவியர் கணவருக்கு எதிராக இலங்கையில் முறைப்பாடு செய்வதில்லை.

மத, கலாச்சார காரணங்களினால் இவ்வாறு முறைப்பாடு செய்வதில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை தொடர்பான நிபந்தனைகளில் திருமண பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://newuthayan.com/story/55249.html

  • கருத்துக்கள உறவுகள்

சாட்சி இல்லாது சட்டத்தால் தண்டிக்க முடியாது....! மனைவி வழக்குப்போட்டால்.....! அதற்குச் சாட்சியும் வேண்டும்.!! ஆகவே சாட்சித் தொழில் புரிவதற்கு நிறையப்பேர் தேவைப்படுவார்கள். இந்தத் தொழிலுக்கு விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்.....?? :)
 
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

சாட்சி இல்லாது சட்டத்தால் தண்டிக்க முடியாது....! மனைவி வழக்குப்போட்டால்.....! அதற்குச் சாட்சியும் வேண்டும்.!! ஆகவே சாட்சித் தொழில் புரிவதற்கு நிறையப்பேர் தேவைப்படுவார்கள். இந்தத் தொழிலுக்கு விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்.....?? :)
 
படு கேவலமான
கருத்து

பெண்ணை பாலியல்
பண்டமாக பார்க்கும்
ஆணாதிக்க பார்வை தான்
இங்கும் வெளிப்படுகின்றது

பெண்ணின் விருப்பின்றி நடக்கும்
உடலுறவு ஒரு வன்முறை
வன்புணர்வு
வன்செயல்

சாட்சி இருந்தால் தான்
வன்புணர்வு என்று
ஒத்துக் கொள்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வைரவன் said:

பெண்ணின் விருப்பின்றி நடக்கும்
உடலுறவு ஒரு வன்முறை
வன்புணர்வு
வன்செயல்

சாட்சி இருந்தால் தான்
வன்புணர்வு என்று
ஒத்துக் கொள்வீர்களா?

எந்த நாடு.... என்ன தண்டனையை? யாருக்கு... கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லையா?
அதுகும்... சொறிலங்கா, நீதி மன்றத்துக்கு... நீங்கள் வக்காலத்து வாங்குவது ஏன்?

முதலில்... அந்த, நீதிமன்றம்... 
இதுவரை நடந்த ஈழப் போரில், எத்தனை எம் இன  சகோதரிகள், 
சிங்கள இராணுவத்தால்... வன்புணர்வு செய்யப் பட்டதோடு மட்டுமல்லாது, 
கொலை செய்யப் பட்ட ஆதாரம்... உலக அளவில் ஊடகங்களால் வெளிப் பட்டு இருந்தும்,
அந்த... சொறிலங்கா நீதிமன்றம், ஒரு துரும்பையாவது.. எமக்குச்  சாதகமாக எடுத்துக் போட்டதா?
அதனைக் கூறிய பின்... உங்கள் விவாதத்தை முன் எடுப்பது நல்லது.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, நவீனன் said:

மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொண்டால் இலங்கையில் தண்டனை!

மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொள்வதும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என்ற அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

அதே மாதிரி புருசன்மார் சம்மதமில்லாமல் பக்கத்திலையும் வரக்கூடாதெண்டு சட்டம் போடவேணும். ஏதும் காரியம் ஆகோணுமெண்டால் வந்து உரஞ்சிறது.....இல்லையெண்டால் எங்களாலை ஏதோ பெரிய கரைச்சல் மாதிரி  நடப்பு காட்டுறது.....:grin:

4 minutes ago, குமாரசாமி said:

அதே மாதிரி புருசன்மார் சம்மதமில்லாமல் பக்கத்திலையும் வரக்கூடாதெண்டு சட்டம் போடவேணும். ஏதும் காரியம் ஆகோணுமெண்டால் வந்து உரஞ்சிறது.....இல்லையெண்டால் எங்களாலை ஏதோ பெரிய கரைச்சல் மாதிரி  நடப்பு காட்டுறது.....:grin:

அப்படியானால் முதலில் ஓம் எண்டு போட்டு பிறகு அப்படி இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது !!!!

பேசாமல் கைஎழுத்து வாங்கி போட்டு தான்ப்காரியத்தில் இறங்க வேணும் ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Dash said:

அப்படியானால் முதலில் ஓம் எண்டு போட்டு பிறகு அப்படி இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது !!!!

பேசாமல் கைஎழுத்து வாங்கி போட்டு தான்ப்காரியத்தில் இறங்க வேணும் ???

என்ன கோதாரிக்கு கையெழுத்து? பேசாமல் எவ்வளவு காசு எண்டு கேட்டு எண்ணிக்குடுத்துட்டு........:grin:

மனுசியின்ரை விருப்பம் இல்லாமல் அது செய்யக்கூடாது எண்டால்....இதிலை கலியாணம் என்ன கோதாரிக்கு????? புரிந்துணர்வு இருக்குற படியாலைதானே கலியாணம் கட்டினனீங்கள்? :unsure:

1 hour ago, குமாரசாமி said:

என்ன கோதாரிக்கு கையெழுத்து? பேசாமல் எவ்வளவு காசு எண்டு கேட்டு எண்ணிக்குடுத்துட்டு........:grin:

மனுசியின்ரை விருப்பம் இல்லாமல் அது செய்யக்கூடாது எண்டால்....இதிலை கலியாணம் என்ன கோதாரிக்கு????? புரிந்துணர்வு இருக்குற படியாலைதானே கலியாணம் கட்டினனீங்கள்? :unsure:

அது தானே இப்ப மனிசியையும் தொட கூடாது என்று சட்டம் போட்டுட்டானுகள் ??

தண்டனை என்ன என்று விபரமாய் அறியமுன்னம் ஒருத்தரும் இங்கு குழம்பக்கூடாது. :24_stuck_out_tongue:

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காகவே காத்திருந்தது மாதிரி இப்பதான் சட்டம் போடுறாங்கள்.
வல்வை சகாரா அக்காவிடம் குறிப்பை கொடுத்துவிட்டு 
நல்ல செய்திக்கு போனை பார்த்துக்கொண்டு இருந்தால் 
இப்பிடி செய்தி வருது.......

இனி முதலிரவு முடிஞ்ச மாதிரிதான்.
ஓகே சட்டு புட்டென்று வேட்டியை அவிழுங்கோ என்று 
தமிழ் பெண்கள் வாயை திறந்து சொல்லுவார்களா ?

ம்ம் என்று உட்க்கார்ந்தா .........
2 கிழமை லீவு முடிஞ்சிடும் 
பாய்க்கை அடுக்கிக்கொண்டு வர வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ கணவனின் விருப்பம் இல்லாமல் மனைவி டச் பண்ணினால் அதுக்கு என்ன தண்டனை?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வைரவன் said:

படு கேவலமான
கருத்து

பெண்ணை பாலியல்
பண்டமாக பார்க்கும்
ஆணாதிக்க பார்வை தான்
இங்கும் வெளிப்படுகின்றது

பெண்ணின் விருப்பின்றி நடக்கும்
உடலுறவு ஒரு வன்முறை
வன்புணர்வு
வன்செயல்

சாட்சி இருந்தால் தான்
வன்புணர்வு என்று
ஒத்துக் கொள்வீர்களா?

கணவன் மனைவி உறவில் ஆயிரம் நடக்கும். அதன் துன்பத்தை, மறுநாளோ, அதற்கு அடுத்த நாளோ இன்பமாக மாற்றிக் கொள்வதும்தான் இல்லறவாழ்க்கை. மாறாக அதனைக் கோட்டுக்கு கொண்டுபோய் தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ள பண்பாட்டுடன் வாழும் எவரும் முன்வரமாட்டார்கள்.   
 
தனியார் வைத்தியசாலைகளில் நடக்கும் தவறுகளுக்கான தண்டனை கொடுப்பதற்கு சிறீலங்காவில் இயலாதாம் அங்கு சட்டத்திலும் இடமில்லையாம்...! சமீபத்தில் கண்களைப் பறிகொடுத்தவர்களுக்கு நீதி கிடைப்பது கடினம் என்றும் தெரிவிக்கிறார்கள். அதுபோன்றவற்றில் சிந்தனையே அற்ற அரசு, கணவன் மனைவி பாலுறவில் வந்து மூக்கை நுளைப்பது கேவலமாகத் தெரியவில்லையா...??
 
கேவலமான சிங்கள அரசின் தீர்மானங்களை என் கருத்துப் பாராட்டவில்லை என்பதைத் தெரிப்படுத்திய தங்களுக்கு என் நன்றிகள்...!!

இந்தச் சட்டம் ஒன்றும் உலகிற்குப் புதியதல்ல. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதுதான். சிங்களவர் புதிதாகக் கண்டு பிடித்தது அல்ல.

உடல் உறவு என்பதன் அர்த்தம் இருவரும் ஒன்றுபட்டு அனுபவிப்பது. இல்லையேல் உடலுறவு என்ற வார்த்தை தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:
 
கணவண் மனைவி உறவில் ஆயிரம் நடக்கும் 

எனும் பொது வழக்கத்தின் அர்த்தம்

ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் என்பது தானேயொழிய

வல்லுறவு நடக்கும் என்பது அல்ல

பண்பாட்டுடன் வாழும் எந்த ஆணும் பெண்ணை

வல்லுறவு புரிய மாட்டான், அப்படி புரிவதை

விழுந்தடித்து நியாயப்படுத்தவும் மாட்டான்

உங்கள் வரட்டு கருத்துக்கு

சிறிலங்காவில் இருக்கும் நீதித்துறையில்

புரையோடிப் போயிருக்கும் சார்பு நிலையையும்

 அதன் தவறுகளையும் இழுத்து

தமிழ் தேசிய சாயலை கொடுத்து

நியாயப்படுத்த பார்க்கின்றீர்கள்.

இதே சிறிலங்காவில் தான் இன்னும்

இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றார்கள்

என்பதையும் அவர்கள் உங்கள்

ஐரோப்பிய நீதித்துறையிலோ  சட்டங்களிலோ

தங்கி இல்லாமல் சிறிலங்காவின் நீதித்துறையில்

தங்கு உள்ளார்கள் என்பதையும்

நினைவில் கொள்க. 

இதே நீதித்துறையில் இருந்து வந்த சி.வி தான் 

வடக்கு மாகாண சபை முதல்வர் என்பதும்

சிறிலங்காவின் சட்டம் தான் வித்யாவின்

கொலையாளிகளுக்கு தண்டனை கொடுத்தது

என்பதையும் கூட நினைவில் கொள்க

அப்படியான நீதித்துறையில் கொண்டு வரப்படும்

சரியான சட்டங்களை வரவேற்க வேண்டிய நேரத்தில்

வரவேற்க வேண்டும்

ஆனால் உடலுறவுக்கும் வல்லுறவுக்கும்

வித்தியாசம் தெரியாத 

பண்பாட்டில் இருக்கும் உங்களுக்கு

அதை வரவேற்க மனம் வராது

என்பதை அறியத் தந்தமைக்கு

நன்றி

22 hours ago, தமிழ் சிறி said:

எந்த நாடு.... என்ன தண்டனையை? யாருக்கு... கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லையா?
அதுகும்... சொறிலங்கா, நீதி மன்றத்துக்கு... நீங்கள் வக்காலத்து வாங்குவது ஏன்?

முதலில்... அந்த, நீதிமன்றம்... 
இதுவரை நடந்த ஈழப் போரில், எத்தனை எம் இன  சகோதரிகள், 
சிங்கள இராணுவத்தால்... வன்புணர்வு செய்யப் பட்டதோடு மட்டுமல்லாது, 
கொலை செய்யப் பட்ட ஆதாரம்... உலக அளவில் ஊடகங்களால் வெளிப் பட்டு இருந்தும்,
அந்த... சொறிலங்கா நீதிமன்றம், ஒரு துரும்பையாவது.. எமக்குச்  சாதகமாக எடுத்துக் போட்டதா?
அதனைக் கூறிய பின்... உங்கள் விவாதத்தை முன் எடுப்பது நல்லது.    

அப்புவுடன் கேட்டதற்கு

அங்கிள் ஏன் வொலன்டியராக 

ஆஜர் ஆகின்றீர்கள்?

இருவரும் உறவினர்களா அல்லது ஒரே ஆள்

இரு ஐடிக்களா?

1 hour ago, இணையவன் said:

இந்தச் சட்டம் ஒன்றும் உலகிற்குப் புதியதல்ல. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதுதான். சிங்களவர் புதிதாகக் கண்டு பிடித்தது அல்ல.

உடல் உறவு என்பதன் அர்த்தம் இருவரும் ஒன்றுபட்டு அனுபவிப்பது. இல்லையேல் உடலுறவு என்ற வார்த்தை தேவையில்லை.

நன்றி இணையவன்

கொஞ்சம் விசயம் தெரிந்த ஆக்கள்

தான் மட்டுக்களாக இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தினால் தமிழர்களுக்கு ஒரு தீர்ப்பை வழங்க முடியவில்லை,

வித்தியா கொலையில் சம்பந்தப்பட்ட அமைச்சரை விசாரணை செய்ய முடியவில்லை.

இது பொதுத்தளம், யாரும் எழுதலாம்.

57 minutes ago, வைரவன் said:

கணவண் மனைவி உறவில் ஆயிரம் நடக்கும் 

எனும் பொது வழக்கத்தின் அர்த்தம்

ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் என்பது தானேயொழிய

வல்லுறவு நடக்கும் என்பது அல்ல

பண்பாட்டுடன் வாழும் எந்த ஆணும் பெண்ணை

வல்லுறவு புரிய மாட்டான், அப்படி புரிவதை

விழுந்தடித்து நியாயப்படுத்தவும் மாட்டான்

உங்கள் வரட்டு கருத்துக்கு

சிறிலங்காவில் இருக்கும் நீதித்துறையில்

புரையோடிப் போயிருக்கும் சார்பு நிலையையும்

 அதன் தவறுகளையும் இழுத்து

தமிழ் தேசிய சாயலை கொடுத்து

நியாயப்படுத்த பார்க்கின்றீர்கள்.

இதே சிறிலங்காவில் தான் இன்னும்

இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றார்கள்

என்பதையும் அவர்கள் உங்கள்

ஐரோப்பிய நீதித்துறையிலோ  சட்டங்களிலோ

தங்கி இல்லாமல் சிறிலங்காவின் நீதித்துறையில்

தங்கு உள்ளார்கள் என்பதையும்

நினைவில் கொள்க. 

இதே நீதித்துறையில் இருந்து வந்த சி.வி தான் 

வடக்கு மாகாண சபை முதல்வர் என்பதும்

சிறிலங்காவின் சட்டம் தான் வித்யாவின்

கொலையாளிகளுக்கு தண்டனை கொடுத்தது

என்பதையும் கூட நினைவில் கொள்க

அப்படியான நீதித்துறையில் கொண்டு வரப்படும்

சரியான சட்டங்களை வரவேற்க வேண்டிய நேரத்தில்

வரவேற்க வேண்டும்

ஆனால் உடலுறவுக்கும் வல்லுறவுக்கும்

வித்தியாசம் தெரியாத 

பண்பாட்டில் இருக்கும் உங்களுக்கு

அதை வரவேற்க மனம் வராது

என்பதை அறியத் தந்தமைக்கு

நன்றி

அப்புவுடன் கேட்டதற்கு

அங்கிள் ஏன் வொலன்டியராக 

ஆஜர் ஆகின்றீர்கள்?

இருவரும் உறவினர்களா அல்லது ஒரே ஆள்

இரு ஐடிக்களா?

நன்றி இணையவன்

கொஞ்சம் விசயம் தெரிந்த ஆக்கள்

தான் மட்டுக்களாக இருக்கினம்

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வைரவன் said:

நன்றி இணையவன்

கொஞ்சம் விசயம் தெரிந்த ஆக்கள்

தான் மட்டுக்களாக இருக்கினம்

வாவ்.... நான் இவ்வளவு நாளும் நினைச்சுக்கொண்டிருந்தது பொய்த்து விட்டது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்ம்...

இலங்கை, இந்தியாவில் சட்டம் இயற்றும் போது, மறு பக்கத்தில் உண்டாக்கக் கூடிய விளைவுகளை கருத்தில் கொள்ள மாட்டார்கள்.

பாதிக்கப் பட்ட தரப்பினை மனதில் வைத்துக் கொண்டே சட்டம் வரும்.

உதாரணமாக, தமிழகத்தின், சீதன வன்கொடுமை மிக தேவையான, முக்கியமான சட்டம். இருப்பினும் கணவருடன் பிரச்னை என்று வந்தவுடன், அதனை சீதன வன்கொடுமையாக சொல்லி முறைப்பாடு செய்வதும் உண்டு.

அதேபோல இங்கும் கணவருடன் பிரச்னை என்று வந்துவிடடால்..... பலாத்காரம் என்று சொல்லி, உள்ள போட வைக்க முடியும். இன்னும் சொல்ல வேண்டுமானால்.... கோபத்தினை மனதில் வைத்துக் கொண்டே, குலைந்து நடித்து, உறவு கொண்டு.... அதனை பாலியல் பலாத்காரம் என்று சொல்லி, மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கி, ஆப்பினை நன்கு இருக்கலாம்.

இங்கிலாந்தில் கடந்த வாரம் ஒரு வழக்கு.

22 வயது லீட்ஸ் பல்கலைக்கழக மாணவன். 20 வயதாக இருக்கும் போது, இங்குள்ள வழக்கப் படி தனது வயதொத்த ஒரு பெண்ணை சந்திக்கிறார்.

பல்கலைக்கழகம் செல்லும் போது.... அங்க வேறு நண்பிகள் கிடைக்கும் என்பதால் வெட்டி விடுகிறார். தான் பல்கலை செல்ல முடியாமல், கிறக்கத்தில் இருந்து விட்டொமே.... அவன் போகிறான்....

எரிச்சல்... விளைவு.... தன்னை 6 தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்தார் என முறைப்பாடு செய்கிறார்.

2 வருட நரக வேதனை மாணவன் லியாம் அலன் க்கு.

இருவரும் இணங்கியே உடலுறவு கொண்டோம் என்கிறார் அவர். பெண்ணின் தொலைபேசி குறும்செய்திகளை சமர்ப்பிக்கும் படி எதிர்தரப்பு கோருகிறது. அதெல்லாம் நாம் பார்த்து விடடோம். அதில் ஒன்றுமே இல்லை என்கிறது போலீஸ்.

குறைந்தது 10 வருடம்...

இறுதியில் முடிக்குரிய வழக்கு தொடரகம் சார்பில் வழக்கினை நடத்திய அரச வழக்குரைஞர் மாற, புதிதாக வந்தவரோ, வழக்கினை ஆராய்ந்து அதிர்ந்து போகிறார். போலீசாருக்கு, உடனடியாக குறும்செய்தி பதிவுகளை, 40,000 வரை சமர்ப்பிக்குமாறு உத்தரவு போடுகிறார்.

'அவனுடன் கட்டிலில் இருக்கும் கணங்கள் அருமையானவை'. அவன் என்னை பாலியல் வன்புணர்வு செய்வது போல், உறவு கொள்ள செய்வதை விரும்பி பல முறை கேட்டிருக்கிறேன்',என தனது நண்பிகளுக்கு அனுப்பிய செய்திகளை, பார்த்தவுடன் தலையில் அடித்துக் கொண்டார்.  'இன்றாவது உறவுக்கு வா' பலமுறை இவரே லியாமை அழைத்துள்ளார்.

டிசம்பர் 14ம் திகதி தீர்ப்பு.

ஜட்ஜ் ஐயா, அவரை விடுவித்தது மட்டுமல்லாமல், 'முடிக்குரிய வழக்கு தொடரகம்', போலீஸ் ஆகிய இரு துறைகளையும் கிழியோ, கிழி என்று கிழித்து, இருதுறைகளிலும் உயர் மடட விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

பெண், பழி வாங்க நினைத்தால்.....

இதே போல ஒரு பங்காளதேசி டாக்ஸி ஓட்டுனருக்கும் நிகழ்ந்தது. அதிஷ்டாவசமாக, தனது போனில், உரையாடல்களை பதிவு செய்திருந்த படியால் தப்பினார்.

http://www.dailymail.co.uk/news/article-5181277/Judge-slams-police-rape-trial-student.html

12 hours ago, குமாரசாமி said:

வாவ்.... நான் இவ்வளவு நாளும் நினைச்சுக்கொண்டிருந்தது பொய்த்து விட்டது. :cool:

:grin: 

23731 vs 173 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2017 at 7:02 AM, valavan said:

அப்போ கணவனின் விருப்பம் இல்லாமல் மனைவி டச் பண்ணினால் அதுக்கு என்ன தண்டனை?

சட்டம் இயற்றிய வல்லுநர்கள் பற்றி நீங்கள் தவறாக எடைபோட்டுள்ளீர்கள்.....! மனைவி விரும்பாவிட்டாலும் டச் பண்ணிட்டு போகலாம், கணவன் விரும்பாவிட்டால் டச் மட்டும்தான் பண்ணலாம்....! இயற்கையின் டிசைன் அப்படி.....!  tw_blush: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீச்சீ....நாங்கள்   புட்டுக்கு மா  எப்பிடி குழைக்கிறது எண்டு கதைச்சுக்கொண்டிருக்கிறம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

சட்டம் இயற்றிய வல்லுநர்கள் பற்றி நீங்கள் தவறாக எடைபோட்டுள்ளீர்கள்.....! மனைவி விரும்பாவிட்டாலும் டச் பண்ணிட்டு போகலாம், கணவன் விரும்பாவிட்டால் டச் மட்டும்தான் பண்ணலாம்....! இயற்கையின் டிசைன் அப்படி.....!  tw_blush: 

நீங்கள் ஆழமா இறங்கி ஆய்வு செய்திருக்கிறீர்கள்...சட்டத்தை , அது வரவேற்கதக்கது! அதுசரி,  அப்பிள்மேல கத்தி விழுந்தாலும், கத்திமேல அப்பிள் விழுந்தாலும் சேதம் என்னவோ அப்பிளுக்குத்தான்,  அப்பிளால் கத்திக்கு ஒரு சேதாரமும் பண்ணமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

நீங்கள் ஆழமா இறங்கி ஆய்வு செய்திருக்கிறீர்கள்...சட்டத்தை , அது வரவேற்கதக்கது! அதுசரி,  அப்பிள்மேல கத்தி விழுந்தாலும், கத்திமேல அப்பிள் விழுந்தாலும் சேதம் என்னவோ அப்பிளுக்குத்தான்,  அப்பிளால் கத்திக்கு ஒரு சேதாரமும் பண்ணமுடியாது!

ஐயா....

ஆப்பிள் கத்தி மேல விழுந்து, கத்தி முறிந்த கதைகள் ஏராளம், ஏராளம்...tw_cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16.12.2017 at 7:11 PM, இணையவன் said:

இந்தச் சட்டம் ஒன்றும் உலகிற்குப் புதியதல்ல. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதுதான். சிங்களவர் புதிதாகக் கண்டு பிடித்தது அல்ல.

உடல் உறவு என்பதன் அர்த்தம் இருவரும் ஒன்றுபட்டு அனுபவிப்பது. இல்லையேல் உடலுறவு என்ற வார்த்தை தேவையில்லை.

சில நேரம் விருப்பமில்லாதமாதிரி நடிப்பினம்..... சில நேரம் "நோ" எண்டும் சொல்லுவினம். அதின்ரை மீனிங் கண்டு பிடிக்க மிசின் ஏதாவது இருக்கா?  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, குமாரசாமி said:

சில நேரம் விருப்பமில்லாதமாதிரி நடிப்பினம்..... சில நேரம் "நோ" எண்டும் சொல்லுவினம். அதின்ரை மீனிங் கண்டு பிடிக்க மிசின் ஏதாவது இருக்கா?  tw_blush:

இருக்கின்றன சிங்கள அரசுபோன்ற சில அரசுகள். அதுபோன்ற அரசுகளை நியாயப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.