Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.

Featured Replies

ரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.

ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியாரால் நடத்தப்பட்ட விதம் பற்றி, இடமிருந்து இரண்டாவதாகவுள்ள சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாமியும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ நேர்காணல் செய்ய முடியாமலிருப்பதால் அவர்களுடைய முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியாரால் நடத்தப்பட்ட விதம் பற்றி, இடமிருந்து இரண்டாவதாகவுள்ள சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாமியும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ நேர்காணல் செய்ய முடியாமலிருப்பதால் அவர்களுடைய முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன. (Tamil Workers Network)

CBC ரொறன்ரோவுடன் மட்டுமே பேசிய இரண்டு தொழிலாளர்களின் கருத்துப்படி, ரொறன்ரோவில் இருக்கும் இந்து ஆலயத்துக்கான சிற்பிகளாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த நான்கு தொழிலாளர்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழலுக்கு முகம் கொடுத்ததுடன் மிகவும் குறைவான ஊதியத்தையே பெற்றிருக்கின்றனர்.

சேகர் குருசாமி, 51 மற்றும் சுதாகர் மாசிலாமணி, 46 இன் கருத்துப்படி, ஆலயத்தின் மிகவும் புனிதமான பகுதிகளில் ஒன்றைப் பகல் நேரத்தில் செதுக்கி, பூச்சு வேலை செய்த அவர்கள், இரவில் அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் உயிர்ப்பற்ற நிலையில், கொதிகலனுக்குப் பக்கத்தில் மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்வார்கள். 

"நாங்கள் மிகவும் பசியுடன் இருந்தோம், எங்களால் அதைத் தாங்கமுடியாமலிருந்தது. சாப்பிடாமல் இருப்பதால், எங்களுக்குத் தலைசுற்றும்" என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக CBC உடன் பேசிய குருசாமி கூறினார்.

CBC ரொறன்ரோவுக்கான அறிக்கை ஒன்றில், குற்றச்சாட்டுகள் "பொய்யானவை," என ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் கூறுகிறது.

migrant tamil

ஆலயத்தின் அடித்தளத்தின் ஒரு அறையிலிருந்த நான்கு மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்ளும்படி தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தமிழர்கள் கூறுகின்றனர். (Tamil Workers Network)

'எங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை'

தேவாலயம் ஒன்றில் உள்ள தூபிக்கு ஒத்த, ஆலயக் கோபுரத்தின், $1.2 மில்லியன் பெறுமதியான புனருத்தான வேலைகளின் ஒரு பகுதியைச் செயலாக்குவதற்காக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் இந்தியாவிலிருந்து நேரடியாக இந்த நான்கு தமிழ் ஆண்களை வேலைக்கமர்த்தியது.   

இந்த நான்கு தமிழ்த் தொழிலாளர்களும் உணவுக்காக இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாருக்கு அழுத்தம் கொடுத்தபோது, அவர் சொற்களால் துன்புறுத்தியதுடன் வன்முறை செய்வதாக மிரட்டினார் எனக் குருசாமி கூறினார். 

"அவருக்கு மிகவும் கோபம் வந்தது, வெளியேறச் சொல்லி எங்களிடம் சொன்னார். 'நாயே வெளியேறு' என அவர் சொன்னார். தகாத சொற்களைப் பயன்படுத்தினார்." எனக் குருசாமி கூறினார். "என்னுடைய மனம் புண்பட்டுப்போனது. எங்களுக்குப் போதுமான உணவு கிடையாததால் நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். வேறு என்னத்தைச் செய்வதெண்டு எங்களுக்குத் தெரியேல்லை. எங்களுக்கு ஆரையும் தெரியாது. இந்த நாட்டுக்கு இப்பதான் முதல் தரமாக வந்திருக்கிறோம்."        

அவருக்கு அல்சர் இருப்பதாகவும், அதனால் ஒழுங்காகச் சாப்பிடுவது அவருக்கு முக்கியமானது எனவும் மாசிலாமணி CBC ரொறன்ரோவுக்குக் கூறினார்.

"சரியான சாப்பாடு எதுவுமில்லாமல். ஐந்து மாதமா நாங்க அங்கே வேலைசெய்திருக்கிறம்," என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக மாசிலாமணி கூறினார். "சாப்பாடு பற்றி அவரிடம் நாங்கள் கேட்க முடியாது. வணங்கவருபவர்கள் முதல் நாள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதியே எங்களுக்குத் தரப்படும்."

cots by boiler

அடித்தளத்தில் கொதிகலனுக்குப் பக்கத்தில் நித்திரை கொள்ளும்படி அவர்கள் நான்கு பேரும் வற்புறுத்தப்பட்டதாக அந்தத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றனர். (Tamil Workers Network)

ஒரு நாள் கூட ஓய்வில்லாமல், வாரத்தில் 60 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் வேலைசெய்ததாகவும், ஆனால், உணவும் நித்திரைக்கான வசதிகள்தான் அதிகம் கவலைதருவனவாக இருந்தன என்றும் மாசிலாமணியும் குருசாமியும் கூறினர்.

 "மூட்டைப் பூச்சிகளைப் பற்றி நான் சொன்னாலும்கூட [பிரதம சிவாச்சாரியாருக்குக்] கோபம் வரும். அவர் எங்களை மன அழுத்தம் உள்ளவர்களாகவும் வேதனைப்படுபவர்களாகவும் மாற்றியிருக்கிறார்." எனக் கூறினார் மாசிலாமணி.

 "அவருடைய நடத்தை சிவாச்சாரியார் ஒருவருடைய நடத்தை போன்றதல்ல. நிறையத் தகாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார்," எனக் குருசாமி கூறினார். "எங்களை அடிக்கப் போவதுபோல தனது கைகளை அவர் உயத்தினார்."

புகார்கள் ஆதாரமற்றவை என்கிறது ஆலயம்  

பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜகுருக்களுடனான ஒரு நேர்காணலுக்கான வேண்டுகோளை ஸ்ரீ துர்கா இந்து ஆலயம் மறுத்துவிட்டது, ஆனால், அதன் மதரீதியான சிற்ப வேலைகளைப் பூர்த்திசெய்வதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிகத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என ஓர் அறிக்கையில் அது கூறியுள்ளது.

"மேலதிக நேர வேலை எதுவும் செய்யப்படவில்லை," அத்துடன் "கட்டுமானத் தளத்தை இலகுவாக அணுகுவதற்காகவும், போக்குவரத்துத்துக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், உணவுக்காகவும் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் ஆலயத்தை அணுகுவதற்காகவும்," தொழிலாளர்களுக்கு அங்கு இருப்பிடம் வழங்கப்பட்டது என ஆலயம் கூறுகிறது.

 "கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, எங்களுடைய மதரீதியான சிற்பவேலைத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சூழல்கள் தொடர்பாக ஒருபோதும் கரிசனைகளை வெளிப்படுத்தியதுமில்லை புகார்களை எங்களுக்குச் சொன்னதுமில்லை," என அந்த அறிக்கை கூறுகிறது. "ஊதியம், வேலைச் சூழல், வசிப்பிட வசதிகள் தொடர்பாக சிற்பிகள் திருப்தியடைந்திருந்ததை எங்ளுடைய கடந்த காலத் தொழிலாளர் திருப்திக் கருத்தாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன."

 "தொழிலாளர்கள்எவரையும் எங்களுடைய பணியாளர்கள் வார்த்தைகளால் தாக்கவுமில்லை, உடல்ரீதியாகப் பலமாகத் தள்ளவோ அல்லது தள்ளவோ இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்."

hindu priest

அந்த நான்கு தொழிலாளர்களையும் மோசமாக நடத்தியதாக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜாக்குருக்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். (Facebook)

'இது நவீன உலகின் அடிமைத்தனமாகும்': தமிழ் தொழிலாளர் வலையமைப்புக் கூறுகிறது

முடிவில், தொழிலாளர்கள் முகம்கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ள இந்த நிலைமைளை ஆலயத்துக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஒருவர் அறிந்து, தமிழ் தொழிலாளர் வலையமைப்பைத் தொடர்புகொண்டார்.

"இந்தப் பிரச்சினை பாரதூரமானது … நான் இளமையாக இருக்கும் போது, 20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்திருந்தால், அந்த ஆலயத்தை நான் கொளுத்தியிருக்கக்கூடும்," என்கிறார், தமிழ் தொழிலாளர் வலையமைப்பு தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரான ராம் செல்வராஜா. "நியாயமான ஊதியத்தை விடுவம் அதைப் பற்றி நான் கதைக்கவில்லை, மனிதர்கள் நடத்தப்பட்ட விதம் … நவீன உலகத்தின் அடிமைத்தனம் இது."

சாரக்கட்டுகளில், தரையிலிருந்து 20 மீற்றர் உயரத்தில் வேலைசெய்தபோதும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டாம் தரத் தலைக்கவசம் மற்றும் பூட்ஸ் தவிர்ந்த பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

tamil migrants

சாரக்கட்டுகளில், நிலத்திலிருந்து 20 மீற்றர் அளவு உயரத்தில் அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோதும், அவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். (Tamil Workers Network)

அந்த நான்கு தொழிலாளர்களும், கடந்த செப்ரெம்பரில் தமிழ் தொழிலாளர் வலையமைப்பைச் சந்தித்து தங்களுடைய தொழில் ஒப்பந்தங்களை வழங்கியிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், அந்த ஆண்களால் வாசிக்க முடியாத ஒன்றாக அது இருந்தது.  

அந்த நான்கு ஆண்களும் ஏப்ரல் 15, 2017 முதல் ஒக்ரோபர் 15, 2017 வரையான ஆறு மாதங்களுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததை அவர்களின் வேலைவாய்ப்புப் பதிவேடுகள் காட்டின.

வாரத்துக்கு 40 மணி நேரம், மணித்தியாலத்துக்கு $18படியும், மேலதிக நேரத்துக்கு மணித்தியாலத்துக்கு $27படியும் அந்த ஆண்கள் ஊதியம்பெறுவார்கள் என்பதை அந்த ஒப்பந்தம் வரையறுக்கிறது. மேலதிக நேரத்தைத் தவிர்ந்துப் பார்த்தால் இது மாதத்துக்கு கிட்டத்தட்ட $2,500 ஆக இருக்கும்.

paystub from migrant workers

ஒரு மாத வேலைக்கு $2,530 அவர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தொழிலாளர்கள் கூறும் காசோலை ஒன்றுக்கான ஓர் உதாரணம் இது. (Tamil Workers Network)

நான்கு தொழிலாளர்களும் ஒரு சில மணி நேரத்துக்குள் இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள் என பிரதம சிவாச்சாரியார் அவர்களுக்கு செப்ரெம்பர் 24ம்திகதி காலை கூறியதாகக் குருசாமியும் மாசிலாமணியும் கூறுகின்றனர்.

ஒப்பந்தம் முடிவதற்கு மூன்று வாரகாலத்துக்கு முன்னதாகவும், தமிழ் தொழிலாளர் வலையமைப்புடன் அந்த நான்கு ஆண்களும் கதைத்த சில நாட்களுக்குப் பின்பாகவும் அது நடந்தது.

தங்களுடைய ஐந்தாவது மாத வேலைக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என இந்தியாவிலிருந்து CBC உடன் பேசிய அந்த இரண்டு ஆண்களும் தெரிவித்தனர்.

ஆலயம், தனது அறிக்கையில் அவர்கள் நேரத்துடன் அனுப்பப்பட்டதை மறுத்திருந்ததுடன், அந்த இரண்டு தொழிலாளர்களும், "அந்தச் செய்திட்டத்தை பூர்த்திசெய்வதற்காக 2018 வசந்த காலத்தில் திரும்பிவருவதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருந்தாகவும்," கூறியுள்ளது.

குருசாமியுடனும் மாசிலாமணியுடனும் வேலைசெய்த மற்ற இரண்டு சிற்பிகளினதும் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் CBC ரொறன்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில் அவர்களும் தங்களுடைய வேலைச் சூழல்கள் பற்றி அதே மாதிரியான குற்றச்சாட்டுகளையே கூறியுள்ளார்கள்.

ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் ஒரு 'வர்த்தகமாக' மாறியுள்ளது, என ஒரு செயற்பாட்டாளர் குற்றம்சாட்டுகிறார்.

குற்றச்சாட்டுகள் கவலைதருவனவாக உள்ளன, ஏனெனில் அந்தப் பிரதம சிவாச்சாரியார் ஆலயத்தை ஒரு "வர்த்தகம்" போல இயக்கிறார் போலிருக்கிறது என்கிறது, தமிழ் தொழிலாளர் வலையமைப்பு

சிவாச்சாரியார் தியாகராஜக்குருக்கள் மேலான CBC ரொறன்ரோவின் புலன்விசாரணை BMW ஒன்று அவர் பெயரில் இருப்பதையும் Mercedes S5A  அற நிலையமான ஆலயத்தின் பெயரில் இருப்பதையும் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் செய்த கனேடியர்களுக்கு மதிப்பளிக்க வழங்கப்படும் விருதான, Queen's Diamond Jubilee Medalஐயும் (ராணியின் வைரவிழாப் பதக்கம்) 2012இல் தியாகராஜக்குருக்கள் பெற்றிருக்கின்றார்.   

 "முக்கியமாக 'நான் கடவுளின் அடியான்; இது வழிப்பாட்டுக்குரிய ஓர் இடம், என நீங்கள் சொல்லும்போது, உங்களுக்குத் தெரியும், மக்கள் தங்கடை நம்பிக்கைகளையும் கனவுகளையும் விரக்திகளையும் ஆலயம் ஒண்டுக்குள் கொண்டுவருவினம், அதோடை இது ஒரு வர்த்தகமாகிட்டுது என நான் நினைக்கிறன்; இது ஒரு சுரண்டல்,'' என்கிறார் செல்வராஜா.

கோபுரத்துக்கான கட்டுமான நிதிக்கு அவருடைய தாயார் அன்பளிப்புச் செய்திருக்கிறார். அத்துடன் அவருடைய சமூகத்துக்குள் உள்ள மிக முக்கியமான மதத் தலைவர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதலால், இவை "பாரதூரமான குற்றச்சாட்டுகளாக" இருக்கின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

 "என்னுடைய அம்மா, 'இல்லை, இல்லை, இல்லை, அப்படி இருக்கேலாது. இது ஒரு ஆலயம். ஆலயங்களிலை இப்பிடி நடக்கிறதில்லை.' என்கிறார். ஆனபடியால், இது மிகப் பாரதூரமான ஒரு விஷயம். சமூகத்துக்குள்ளை நிறைய எதிர்முழக்கங்களை இது கொண்டுவரப் போகுது எண்டது எனக்கு நிச்சயமாய்த் தெரியுது," என்கிறார், செல்வராஜா.

நகரிலுள்ள தொழிலுக்காக இடம்பெயர்ந்த தமிழர் தொடர்பில் கேள்விப்பட்ட முதலாவது விடயமாக இது இருப்பதால், முறைசாராத புலன்விசாரணைகளை ரொறன்ரோ தமிழ் சமூகத்தினுள் தமிழ் தொழிலாளர் வலையமைப்பு ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் இது மட்டுமல்ல இப்படிப் பல நடந்திருக்கும் என அது நம்புகிறது.

 "இதன் பூதாகாரத்தை நாங்கள் புரிந்துகொள்ளும்போது, இப்படிப் பல விடயங்கள் வெளியில் வரப்போகின்றன என்பது எங்களுக்கு நன்கு தெரிகிறது," என அவர் கூறினார். "இப்போது இது எங்களுடைய radarஇல் இருக்கிறது."

பனிப்பாறையின் முனை, என்கிறார் சட்டத்தரணி

Parkdale Community Legal Services (சமூக சட்ட சேவைகள்) இந்த வழக்கினை இலவசமாக நடத்துகிறது. உண்மையிலேயே அந்த ஆண்கள் எவ்வளவு ஊதியத்தைப் பெற்றார்கள் என்பதைக் காட்டும் இந்திய வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை அறிக்கைகளைப் பெறுவதற்கு அந்தச் சட்ட மையம் தற்போது முயற்சிக்கின்றது.

 "எங்களுடைய ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் குறைந்த வேதனம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு இரண்டிலும் கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டியுள்ளது என நாங்கள் நம்புகிறோம்," என்கிறார், அந்த மையத்தின் தொழிலாளர் உரிமைகள் பிரிவுச் சட்டத்தரணி, John No

தற்காலிக வேலை அனுமதிப்பத்திரம் உள்ள வெளிநாட்டவர்கள், கனடாவில் ஒரு வேலைவழங்குநருடன் மட்டுமே வேலைசெய்யலாம்.

 "கனடாவில் தங்கியிருப்பதற்கான திறனும், வாழ்வதற்கான ஊதியம் பெறலும் அந்த ஒரு வேலைவழங்குநரில்தான் முற்றாகத் தங்கியுள்ளது. அதனால் வேலைச் சூழலிலோ அல்லது வேலைவாய்ப்புத் தரங்களிலோ அந்த வேலைவழங்குநர் அவர்களை மோசமாக நடத்தினாலும் அந்த வேலையை அவர்கள் விட முடியாது என்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்தளவு மாற்றீடுகளே உள்ளன,"என்கிறார், No.

தொழிலுக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படும் சுமார் 50 வழக்குகளை அவரின் அலுவலகம் ஒவ்வொரு வருடமும் கையாள்வதாக No கூறினார்.

"இது பனிப்பாறையின் முனை என்றுதான் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார். "அனேகமான தொழிலாளர்கள் முன்னுக்கு வருவதற்குப் மிகவும் பயப்படுகிறார்கள்." 

http://www.cbc.ca/news/canada/toronto/ர-றன-ர-ஆலயத-த-ல-த-ங-கள-தவற-க-நடத-தப-பட-டத-க-வ-ள-ந-ட-ட-த-தம-ழ-த-ழ-ல-ளர-கள-க-ற-க-ன-ற-ர-கள-1.4490157

http://www.cbc.ca/news/canada/toronto/hindu-priest-abuse-allegations-1.4485863

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

தொழிலாளர்களின் ஊதியம் சம்பந்தப்பட்ட விஷயத்தை பற்றி விசாரணைகள் முடியும்வரை உண்மைகள் நூறுவீதம் தெரிய வாய்ப்பில்லை, ஆனால்,

 உலகின் அதிநவீன வசதிகள்,அதிகபட்ச மனித உரிமைகள் பேணப்படும் ஒரு நாட்டில்..

 இங்கு காட்டப்பட்டிருக்கும்  பொய்லருக்கு பக்கத்தில்தான் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள் என்றால்,அவர்கள் தங்குமிடத்தில் இந்தளவு வசதிகள்தான் செய்து கொடுக்கப்பட்டிருந்தது என்றால்,  உடலியல் துன்புறுத்தல் , மன உழைச்சல் உணவு விஷயங்களில் நூறுவீதம் துன்புறுத்தப்பட்டிருப்பார்கள் அதில் சந்தேகமேயில்லை!

புலம்பெயர் தேசத்து ஆலயங்களில் பல மிக சிறந்த லாபகரமான  தொழில், அந்த லாபத்தில் ஆண்டவனைதவிர நிர்வாகிகள் அனைவருக்கும் பங்குண்டு! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஜேர்மன் சைவக்கோயில்களிலையும் உப்பிடியான சம்பவங்கள் நடத்திருக்கு....நடந்துகொண்டுமிருக்கு..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2018 at 9:39 PM, குமாரசாமி said:

எங்கடை ஜேர்மன் சைவக்கோயில்களிலையும் உப்பிடியான சம்பவங்கள் நடத்திருக்கு....நடந்துகொண்டுமிருக்கு..:cool:

தகவலுக்கு நன்றி நிர்வாகம் ஆர் ஆட்கள் அதையும் சொல்லுங்களன் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உயிருள்ள மனிதர்கள் கஷ்டப்படுகின்றார்கள். உயிர‌ற்ற ஆண்டவருக்கு எல்லா வசதிகளும் உண்டு. மனித மனம்தான் எவ்வளவு விசித்திரமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தகவலுக்கு நன்றி நிர்வாகம் ஆர் ஆட்கள் அதையும் சொல்லுங்களன் :unsure:

ஆட்கள் ஆரெண்டு சொல்லுறத்துக்கு எனக்கென்ன விசரே? பப்பிளிக்கிலை ஆர் ஆட்கள் எண்டு சொல்லிப்போட்டு பிறகு நான் ரோட்டாலை தெருவாலை நடந்து போறேல்லையே???? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் ஆன்மீக, சமய உணர்வுகளை மூலதனமாகக் கொண்டு செயற்படும் கோவில்களும் அவற்றின் உரிமையாளர்களும் மக்கள் சேவையாளர்களாக ஒருபோதும் இருப்பதில்லை. பணம் பார்க்கவும் சமூக அந்தஸ்துக்காகவும் பெரிய மனிதர் என்ற பேரெடுப்பதுமே அவர்களின் நோக்கம். இந்தியாவில் இருந்து  வரவழைத்த சிற்பாசிரியர்களை மோசமாக நடாத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இலண்டனில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் சிலருக்கு அடிப்படைச் சம்பளமே கொடுப்பதில்லை. அவர்கள் வெளியே ஏதாவது வீட்டு நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டாலும் கோவில்காரர்களுக்கு ஒரு கமிஷன் கொடுக்கவேண்டும்.

மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டும் கொள்ளையர்களின் கூடாராமகக் கோவில்கள் மாறிவிட்டன என்பது சிவாஜியின் முதல் படமான பராசக்தியிலே தெரிந்தவிடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் அழைக்கப்பட்டு ரொறன்ரோ ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்தினால் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக குற்றச் சாட்டை முன்வைத்துள்ளவர்களில் ஒருவரான சுதாகர் மாசிலாமணி எழுதிய நாட்குறிப்பொன்று .....

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருந்து வரும்போது எப்படியாவது லண்டன், கனடா போனால் காணும் என்று சிற்ப்பகலை தெரியும் இது தெரியும் அது தெரியும் என்று சான்றிதள்களை பொய்யாக காட்டி இங்கு வருவது பின்பு உண்மை வெளியாகும்போது நிர்வாகத்துக்கும் வந்தவையளுக்கும் கொள்ளுபாடு தொடங்கும் இங்கிருப்பவர்களும் ஊரை அடிச்சு உலையில் போடும் கூட்டம்கள் இப்படி நிறைய கதைகள் இருந்தாலும் இப்படியான விசாவில் வருவதுக்கு நீண்ட  வரிசை அங்கு இருக்கு .

என்ன இவர்களின் பக்கம் தீர்ப்பு வருமாக இருந்தால் நிர்வாகம் பல்டி அடித்துவிடும் ஊடகங்களுக்கு தீனி அவ்வளவுதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ähnliches Foto

கோயிலுக்கு பக்கத்திலை ஐயர்மாருக்கு இப்பிடி ஒரு கொன்டைனர் வாங்கிக்குடுத்திருக்கினம்....அதுக்குள்ளைதான் சீவியம்.....ஒண்டுக்கு இரண்டுக்கு போகோணுமெண்டால் கோயிலை ஒரு சுத்து சுத்தித்தான் வரோணும். ஹப்பியாய் சுக்லாம் பரதரம் சொல்லிக்கொண்டு திரியினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரெலியாவும் விதிவிலக்கல்ல‌

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

Ähnliches Foto

கோயிலுக்கு பக்கத்திலை ஐயர்மாருக்கு இப்பிடி ஒரு கொன்டைனர் வாங்கிக்குடுத்திருக்கினம்....அதுக்குள்ளைதான் சீவியம்.....ஒண்டுக்கு இரண்டுக்கு போகோணுமெண்டால் கோயிலை ஒரு சுத்து சுத்தித்தான் வரோணும். ஹப்பியாய் சுக்லாம் பரதரம் சொல்லிக்கொண்டு திரியினம்.

பல்லைகடிச்சு கொண்டு நிர்வாகத்துக்கு ஆமா போட்டு கொண்டு இங்கு நிரந்தர வதிவுடமை எடுக்கும் மட்டும் இப்படி ஒரு ஏழு எட்டு வருடம் வாழ்ந்து விட்டு வெளியில் வந்து இருவருடன்களிலே தனியாக புரோகிதம் செய்து இருவருடங்களில் தனி வில்லோ ஹவுசும் ,பிள்ளைகள் பிரைவேட் ஸ்கூலும் ,அவுடி g8 என்று படாபோகமாய் வாழ்க்கை ஆனால் புரோகிதம் செய்ய வரும்போது பழைய காரில் வருவினம் இல்லை மினி கப் வேணும் என்று அடம் பிடிப்பினம் .

தமிழ்புலம்பெயர் அடுத்த இருபது ஆண்டுகள்  கோவில் நம்பிக்கை இல்லாதவர்களும் கோவிலை தேடும் வயதுகளை நெருங்குகின்றனர் எப்படியும் இந்த பெட்டிக்குள் இருப்பவை பங்களா வீட்டில் இருப்பினம் குசா அதே வீட்டில் இருப்பியல் .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

ஆட்கள் ஆரெண்டு சொல்லுறத்துக்கு எனக்கென்ன விசரே? பப்பிளிக்கிலை ஆர் ஆட்கள் எண்டு சொல்லிப்போட்டு பிறகு நான் ரோட்டாலை தெருவாலை நடந்து போறேல்லையே???? :cool:

இல்ல நிர்வாக திறமையை அறிந்துகொள்ளதான் நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டீர்கள் நான் ஒன்றும் செய்ய ஏலாது சேதாரத்துக்கு tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

பல்லைகடிச்சு கொண்டு நிர்வாகத்துக்கு ஆமா போட்டு கொண்டு இங்கு நிரந்தர வதிவுடமை எடுக்கும் மட்டும் இப்படி ஒரு ஏழு எட்டு வருடம் வாழ்ந்து விட்டு வெளியில் வந்து இருவருடன்களிலே தனியாக புரோகிதம் செய்து இருவருடங்களில் தனி வில்லோ ஹவுசும் ,பிள்ளைகள் பிரைவேட் ஸ்கூலும் ,அவுடி g8 என்று படாபோகமாய் வாழ்க்கை ஆனால் புரோகிதம் செய்ய வரும்போது பழைய காரில் வருவினம் இல்லை மினி கப் வேணும் என்று அடம் பிடிப்பினம் .

தமிழ்புலம்பெயர் அடுத்த இருபது ஆண்டுகள்  கோவில் நம்பிக்கை இல்லாதவர்களும் கோவிலை தேடும் வயதுகளை நெருங்குகின்றனர் எப்படியும் இந்த பெட்டிக்குள் இருப்பவை பங்களா வீட்டில் இருப்பினம் குசா அதே வீட்டில் இருப்பியல் .

பெருமாள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
பாதிக்கப்பட்டவன் குரல் கொடுக்கும் போது , அது அப்படி இல்லை, இது இப்படி இல்லை என்று நொண்டி சாட்டு சொல்வது போல் அல்லவா இருக்கிறது.
கோயில் கோபுரம் அமைப்பதற்கு வந்தவர்களுக்கு அதற்கான தகைமைகள் நிச்சயம் உண்டு. இது போன்ற ஒரு தொழிலை செய்பவன் சும்மா பொய்யாக சான்றிதழ்களை காட்டி வர முடியாது என்பது என்னுடைய அபிப்பிராயம்.
தவிர இந்த கோயில் தியாகராஜ குருக்கள், இது போல நிறைய ஜில்மால் , கோக்குமாக்குகளில் பிரபல்யமானவர்.
கனேடிய சட்டம் கூடிய விரைவில் இவரின் ஆட்டங்களுக்கு முடிவு காட்டும் என எதிர் பார்க்கிறேன்.
  
நம்ம முட்டாள் ஜனங்கள் என்ன திருந்தவா போகுது? 
1008 விளக்கு, 9000 பால்குடம், 10 லட்சம் சங்கு பூஜை, லிங்க பூஜை இப்படி அவாவும்  புதுசு புதுசா விளம்பரம் போட எங்கள் குலப் பெண்களும் மஞ்சள் தோய்ந்து, 500 டாலர் செலவில் புது சேலை அணிந்து, தோடு, மூக்குத்தி, ஒட்டியாணம், தொங்கட்டான், தாலி, டாலர் செயின், காப்பு, மோதிரம், ஜிம்மிக்கி, "தொப்பிள் பட்டன்"
இப்படி வகையறாக்களை மாட்டி ரயில் பெட்டி மாதிரி வரிசையாக நின்று அவாக் கையால் சுமங்களி  பொட்டு  அணிந்து கொள்கிறது தொடரத்தான் போகிறது. 

 பகவானுக்கே அடுக்காது.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Sasi_varnam said:

பெருமாள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
பாதிக்கப்பட்டவன் குரல் கொடுக்கும் போது , அது அப்படி இல்லை, இது இப்படி இல்லை என்று நொண்டி சாட்டு சொல்வது போல் அல்லவா இருக்கிறது.
கோயில் கோபுரம் அமைப்பதற்கு வந்தவர்களுக்கு அதற்கான தகைமைகள் நிச்சயம் உண்டு. இது போன்ற ஒரு தொழிலை செய்பவன் சும்மா பொய்யாக சான்றிதழ்களை காட்டி வர முடியாது என்பது என்னுடைய அபிப்பிராயம்.
தவிர இந்த கோயில் தியாகராஜ குருக்கள், இது போல நிறைய ஜில்மால் , கோக்குமாக்குகளில் பிரபல்யமானவர்.
கனேடிய சட்டம் கூடிய விரைவில் இவரின் ஆட்டங்களுக்கு முடிவு காட்டும் என எதிர் பார்க்கிறேன்.
  
நம்ம முட்டாள் ஜனங்கள் என்ன திருந்தவா போகுது? 
1008 விளக்கு, 9000 பால்குடம், 10 லட்சம் சங்கு பூஜை, லிங்க பூஜை இப்படி அவாவும்  புதுசு புதுசா விளம்பரம் போட எங்கள் குலப் பெண்களும் மஞ்சள் தோய்ந்து, 500 டாலர் செலவில் புது சேலை அணிந்து, தோடு, மூக்குத்தி, ஒட்டியாணம், தொங்கட்டான், தாலி, டாலர் செயின், காப்பு, மோதிரம், ஜிம்மிக்கி, "தொப்பிள் பட்டன்"
இப்படி வகையறாக்களை மாட்டி ரயில் பெட்டி மாதிரி வரிசையாக நின்று அவாக் கையால் சுமங்களி போட்டு அணிந்து கொள்கிறது தொடரத்தான் போகிறது. 

அபிஷ்ட்டு... அபிஷ்ட்டு ... ஏண்டாம்பி நோக்கே இது நன்னா இருக்குறதோ ? பகவானுக்கே அடுக்காது.

hindu priest

நேற்று...  இந்தத் தலைப்பை... பார்த்து,  மிகவும் வேதனை அடைந்தேன். சசி வர்ணம்.
அதிலும்... பெருமாளிடம் இருந்து, இந்தக் கருத்து வந்தது, நான் எதிர் பார்க்காத விடயம்.
அங்குள்ள... ஐயரின், கண்களை பார்க்கவே.... இவர்,  எல்லாம் செய்யக் கூடிய ஆள் என்று தெரிகின்றது.
ஏழைகள்... வெளிநாட்டு வேலைக்கு, அதுகும்... கோயில் திருப்பணி செய்ய வர்கின்றவர்களுக்கு....
நல்ல மரியாதை... கொடுக்க வேண்டும். 

அத்திவாரம் நன்றாக... இருந்தால் தான்,  கட்டிடம்  பாதுகாப்பாகவும், பார்ப்பவர்களுக்கு அழகாகவும் இருக்கும்.
சமய விடயங்களில்....  சில்லறைத்தனமான வேலைகளை, கோயில் நிர்வாகங்கங்கள்,
நேர்மையுடனும், மனிதாபிமானத்துடனும்  நடக்க வேண்டும் என்பதே... எமது விருப்பம்.

எந்தக்  கோயிலும்...... காட்டு மிராண்டிகளின், கூடாரம்  ஆகி விடக்  கூடாது.  
நல்லூர் கோவிலை பார்த்து.. திருந்துந்துங்கள்.
ஈழத்தில், பணக்கார கடவுள், நல்லூர்  கந்தன்.
ஆனால்.... அவருக்கு, இன்றும்... ஒரு ரூபாய்க்கு,   சீட்டு வாங்கியும்  அர்ச்சனை பண்ண முடியும்.

தயவு செய்து.... வெளிநாட்டுக்கு... வந்து கோயில், கட்ட வெளிக்கிடும் ஆட்களே... கொஞ்சம் திருந்துங்களேன்.
பெரிய... புண்ணியம் கிடைக்கும், உங்களுக்கு. 
இவை ... எல்லாம், பொது வெளியில்... தெரிய வருவது, எவ்வளவு கேவலம், தெரியுமா?  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பக்கமும் பிழை இருக்கு எண்டு சொன்னது பிழையா ?

மற்றபடி பார்ப்பனர்களை நான் நம்புவது கிடையாது சாமியை கும்பிட போகையில் இந்த நாதாரிகள் ஏன் குறுக்கே வருகின்றனர் ? இங்கு கரும்கல்லு கோவில் ஒன்றில் பூசாரியை தூக்கி கைகளால் நான்கு பேர் ஏந்தி ஊஞ்சல் ஆட்ட போட்டி போட்டு சண்டையும் நடக்கும் எனக்கு அந்த நாதாரி விபூதி பூசி விட்டாலே அந்த கிழமை தரித்திரம் பிடித்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நோ..... ரென்சன், பெருமாள். :)

உங்களின்....  கணனி திறமைக்கு,  தலை வணங்குபவன், நான்.

உங்களின்.... தமிழ் ஈழ அரசியல் கருத்துக்கள், திறமையானவை. 

ஆறுதலாக... கதைக்க வேண்டிய விடயம் இது. 

இவ்வளவு.... புத்திசாலியான,  உங்களுக்கு,  விளங்கும்  என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொழிலாளியை தொழில் தருணர் தெரிவு செய்யும் போது அவரது தகைமைகளையும், அனுபவங்களையும் அடிப்படையாக கொண்டே தெரிவு செய்ய வேண்டும். இதைவிட மேலும் இரண்டு  ஆட்கள் (referee)  மூலம் இவரது வேலை திறமையை கேட்டு அறிந்து கொள்ளலாம். கனடா போன்ற வளர்ச்சியடந்த நாடுகளிலே இப்படியே தொழிலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பின்பு உள்வாங்கப்படுகின்றார்கள்.

அதேபோல் தொழில் தருண‌ருக்கு என்று சில கடமைகள் உண்டல்லவா? வேலையில் பாதுகாப்பு, மேலதிக கொடுப்பனவு, தங்குமிடம வசதி, மருத்துவம், காப்புறுதி என்று பல உண்டல்லவா?

இந்த தொழிலாளர்களை பார்த்தால் இவர்கள் ஏமற்றப்படுள்ளார்கள் என தெரிகின்றது. உடனடியாக இவர்கள் சட்டத்தை நாடி தகுந்த compensation பொற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இவர்களது விசா கலம் நீடிக்கப்பட்டு வேறுவேலைகள் தேடிக்கொள்ள சட்டத்தில் இடமுன்டு.

 நீண்ட நாள் சந்தேகம் ஒன்று யாரிந்த ஐயர்கள்?

இவர்கள் மட்டும்தான் இந்துமத்தில் குருவாக முடியுமா?

சாதரண மனிதனுக்கு வரமுடியாத?

ஒருவர் ஐயராக வருவதற்கு என்ன தகைமகள் கொண்டிருக்க வேண்டும்?

தயவு செய்து யாராவது விளங்கப்படுத்துக்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, colomban said:

நாடுகள் நல்ல நாடுகள்....வந்து குடியேறின சனங்கள் தான் சரியில்லை.:27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழன் என்றொரு இனம் உண்டு

தனியே அவர்க்கொரு குணம் உண்டு...”

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2018 at 2:26 AM, colomban said:

ஒரு தொழிலாளியை தொழில் தருணர் தெரிவு செய்யும் போது அவரது தகைமைகளையும், அனுபவங்களையும் அடிப்படையாக கொண்டே தெரிவு செய்ய வேண்டும். இதைவிட மேலும் இரண்டு  ஆட்கள் (referee)  மூலம் இவரது வேலை திறமையை கேட்டு அறிந்து கொள்ளலாம். கனடா போன்ற வளர்ச்சியடந்த நாடுகளிலே இப்படியே தொழிலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பின்பு உள்வாங்கப்படுகின்றார்கள்.

அதேபோல் தொழில் தருண‌ருக்கு என்று சில கடமைகள் உண்டல்லவா? வேலையில் பாதுகாப்பு, மேலதிக கொடுப்பனவு, தங்குமிடம வசதி, மருத்துவம், காப்புறுதி என்று பல உண்டல்லவா?

இந்த தொழிலாளர்களை பார்த்தால் இவர்கள் ஏமற்றப்படுள்ளார்கள் என தெரிகின்றது. உடனடியாக இவர்கள் சட்டத்தை நாடி தகுந்த compensation பொற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இவர்களது விசா கலம் நீடிக்கப்பட்டு வேறுவேலைகள் தேடிக்கொள்ள சட்டத்தில் இடமுன்டு.

 நீண்ட நாள் சந்தேகம் ஒன்று யாரிந்த ஐயர்கள்?

இவர்கள் மட்டும்தான் இந்துமத்தில் குருவாக முடியுமா?

சாதரண மனிதனுக்கு வரமுடியாத?

ஒருவர் ஐயராக வருவதற்கு என்ன தகைமகள் கொண்டிருக்க வேண்டும்?

தயவு செய்து யாராவது விளங்கப்படுத்துக்கள்?

பிராமணர்கள் யார்? ... பிரம்மாவின் படைப்பில் இவர்கள் "ஸ்பெஷல் எடிஷன்" என ஒரு மாயை உருவாக்கி, மற்றையவர் எல்லாறையும் விட கடவுளிடம் நெருக்கம் கூடியவர்களாகவும் , கடவுள் விரும்பும் பாஷை "சமஸ்கிருதம்" அது ஒன்றையே மூலதனமாக ஆக்கிக் கொண்டு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு இடைத் தரகராக ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பவர்கள்.
புலால் உண்ணாமல் இருப்பதால் இவர்கள் அஹிம்சாவாதிகள். 
சகுனம், ஜாதகம், குரி, இப்படி பலவற்றை "பார்ப்பதால்" பார்ப்பனர்கள்.

அவர்கள் வம்சத்தில் பிறந்த குழந்தைகள் மட்டுமே அந்தணர்கள்/ஐயர்கள்  ஆகலாம்.
இந்த ஒரு விசித்திர வழமை உலகில் "இந்துக்கள்" செறிந்து வாழ்ந்த இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இப்படியான நாடுகளில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கிறது.

மற்றைய மதங்களில் இப்படியான ஒரு சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை.
இறை தொண்டு செய்ய தடை ஏது ? 
யாரும் கத்தோலிக்க பாத்திரியாராக / கன்னியாஸ்திரியாக  வரலாம். 
இஸ்லாத்தில் யாரும் இமாம் ஆகா வரலாம் 
பௌத்தத்தில் யாரும் துறவியாக வரலாம்.

எங்களால் பூசாரியாகக் கூட வரமுடியுமா என்பது சந்தேகமே.
எல்லாம் ஆக்கிரமிப்பு ஆரியர்களின் அடாவடி.
 
On 1/19/2018 at 5:47 PM, பெருமாள் said:

இரண்டு பக்கமும் பிழை இருக்கு எண்டு சொன்னது பிழையா ?

மற்றபடி பார்ப்பனர்களை நான் நம்புவது கிடையாது சாமியை கும்பிட போகையில் இந்த நாதாரிகள் ஏன் குறுக்கே வருகின்றனர் ? இங்கு கரும்கல்லு கோவில் ஒன்றில் பூசாரியை தூக்கி கைகளால் நான்கு பேர் ஏந்தி ஊஞ்சல் ஆட்ட போட்டி போட்டு சண்டையும் நடக்கும் எனக்கு அந்த நாதாரி விபூதி பூசி விட்டாலே அந்த கிழமை தரித்திரம் பிடித்துவிடும். 

உங்களை பிழை சொல்லவில்லை பெருமாள்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை கோபுரம் அமைக்க வந்த ஆசாரியர்களின்  அப்பாவிகள்.
இந்த கோயில் உரிமையாளர் (குருக்கள்) மனிதாபிமானம் அற்ற செயல்களை செய்வது ஒன்றும் முதல் முறை அல்ல.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

எங்களால் பூசாரியாகக் கூட வரமுடியுமா என்பது சந்தேகமே.

http://srividya.org/

இங்கு பிராமணர்கள் பூசை செய்வதில்லை. புலால் உண்ணாமல் இருக்கும் மனிதர்களே பூசை செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

பிராமணர்கள் யார்? ... பிரம்மாவின் படைப்பில் இவர்கள் "ஸ்பெஷல் எடிஷன்" என ஒரு மாயை உருவாக்கி, மற்றையவர் எல்லாறையும் விட கடவுளிடம் நெருக்கம் கூடியவர்களாகவும் , கடவுள் விரும்பும் பாஷை "சமஸ்கிருதம்" அது ஒன்றையே மூலதனமாக ஆக்கிக் கொண்டு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு இடைத் தரகராக ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பவர்கள்.
புலால் உண்ணாமல் இருப்பதால் இவர்கள் அஹிம்சாவாதிகள். 
சகுனம், ஜாதகம், குரி, இப்படி பலவற்றை "பார்ப்பதால்" பார்ப்பனர்கள்.

அவர்கள் வம்சத்தில் பிறந்த குழந்தைகள் மட்டுமே அந்தணர்கள்/ஐயர்கள்  ஆகலாம்.
இந்த ஒரு விசித்திர வழமை உலகில் "இந்துக்கள்" செறிந்து வாழ்ந்த இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இப்படியான நாடுகளில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கிறது.

மற்றைய மதங்களில் இப்படியான ஒரு சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை.
இறை தொண்டு செய்ய தடை ஏது ? 
யாரும் கத்தோலிக்க பாத்திரியாராக / கன்னியாஸ்திரியாக  வரலாம். 
இஸ்லாத்தில் யாரும் இமாம் ஆகா வரலாம் 
பௌத்தத்தில் யாரும் துறவியாக வரலாம்.

எங்களால் பூசாரியாகக் கூட வரமுடியுமா என்பது சந்தேகமே.
எல்லாம் ஆக்கிரமிப்பு ஆரியர்களின் அடாவடி.
 
உங்களை பிழை சொல்லவில்லை பெருமாள்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை கோபுரம் அமைக்க வந்த ஆசாரியர்களின்  அப்பாவிகள்.
இந்த கோயில் உரிமையாளர் (குருக்கள்) மனிதாபிமானம் அற்ற செயல்களை செய்வது ஒன்றும் முதல் முறை அல்ல.
 
எல்லாமே பிராமணர்களால்...வளர்க்கப் பட்ட மாயைகள் தான்!

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் ...கங்கை வாழ் சடைக்கரர்ந்தார்க்ன்பராகில்...அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே..என்று பாடியுள்ளார் திருநாவுக்கரசர்! நாயன்மார்களிலேயே...பிராமணர் அல்லாத ஒருவராக இவர் இருந்தார்! அதனால் சிவபெருமானின் சோதனைகள் இவருக்கு ஏராளம்! அதே போலவே ஒரே ஒரு பெண் நாயனார்....காரைக்காலம்மையார்! அவருக்கு வைக்கப்பட்ட சோதனைகளும் ஏராளம்!

சிவபெருமானும்... பிராமணர் போலத் தான் உள்ளது! அல்லது அவருக்கும் பூணூல் அணிந்து விட்டார்கள்!

வாளன கண்மடவாள்...அவள் வாடி வருந்தாமே.....கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லுப் பெற்றேன்! ஆளிலை எம்பெருமான், அவை அட்டிதரப்பணியே....என்று சுந்தரர் பாடியதும் ஓடோடி வருகின்ற சிவன்....கதவு திறக்க...அப்பர் பாடும்போது....ஆற அமரத் தான் வருகின்றார்!

இருந்தும்...சைவமதம்...ஒரு கால கட்டத்தில்...இந்தப் பிராமண மாயையை ஒரு காலக்கட்டத்தில்...உடைத்தெறிந்து இருக்கின்றது!

அது மீண்டும்...மேட்டுக்குடிகளால் உயிர்பிக்கப் படுகின்றது என்பது தான் உண்மை!

பார்ப்பனை அய்யன் என்ற காலும்ம் போச்சே....என்று பாடினான் பார்ப்பனக் கவிஞன் பாரதி!

அதற்காக ..அக்கிரகாரத்தை விட்டே துரத்தப் பட்டான்!

அவன் கொடுத்த இறுதி விலை என்ன தெரியுமா?

அவனது மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ...பதின்மூன்று பேர் மட்டுமே!

எனினும் அவனைத் தூற்றியவர்கள்..அனைவரும் விலாசமில்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார்கள்!

எனினும்....மரப் பொந்தினுள்...வைத்த அக்கினிக் குஞ்சாக...அவன் இன்னும் எம்மிடையே வாழ்கிறான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.