Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு

Featured Replies

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு

 

குடியரசு தின விழாவை முன்னிட்டு 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Ilaiyaraja_21303.jpg

 


கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட  துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. கடந்த 1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (25.1.2018) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல், ’’எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை  இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர்.விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார். 

padma_21062.jpeg

 

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞரான விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்  குறிப்பில், ’தமிழ் நாட்டுப்புறக் கலைகளின் என்சைக்ளோபீடியா’ என்று விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் புகழப்பட்டுள்ளார். பாரம்பர்யமான தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலைகளை ஆவணப்படுத்துவதற்காகத் தனது வாழ்நாளைச் செலவிட்டதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதில் முன்னோடியான ராஜகோபாலன் வாசுதேவன், பாம்புக் கடிக்கு இயற்கை மருத்துவம் செய்துவரும் கேரளாவைச் சேர்ந்த லஷ்மிகுட்டி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த 99 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி சுதான்ஷூ பிஸ்வாஸ் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.vikatan.com/news/tamilnadu/114575-maestro-ilayaraja-has-been-awarded-with-padmavibushan.html

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது
மகிழ்ச்சி!
ஆனந்தம்!
பரவசம்!

  • கருத்துக்கள உறவுகள்

அறுநூறுக்கும் மேற்பட்ட லங்களவன் மீனவர்களை கொன்றோளிக்கும் பொழுது கையை கட்டிக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு என்ன அருகதை இருக்கிறது வாழ்நாள் சாதனையாளரான ஒரு தமிழனுக்கு விருது வழங்கி கௌரவப்பிதற்க்கு... 

மானமும் உணர்வுகளற்ற சதைப் பிண்டங்களுக்கு இதற்க்கான சம்பந்தம் எங்கே புரியப் போகிறது...

சோனியா காந்தியை நான் கொலை செய்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோம்" ராகுல்காந்தி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவார் (அப்டியா?)... பிறகு நரேந்திர மோடி என்னை டெல்லிக்கு வரவழைத்து கண்டிக்கிறார்... 

பிறகு ராகுல் காந்தி குடிசை வீட்டுக்குள் படுத்துக்கொள்வது. ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் மண்ணள்ளி கொட்டுவது போன்ற காமெடிகளுக்கு விருது வழங்குகிறார்... ராகுல்காந்தி என்ன செய்வார் என்ன சொல்வார்... (இதை ஒரு உவமையாக எடுத்துக்கொள்ளவும்)

  • கருத்துக்கள உறவுகள்

Ilaiyaraaja gets 2018 Padma Vibhushan

இசையமைப்பாளர், இளையராஜாவிற்கு... பத்ம விபூஷண் அறிவிப்பு!

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருதுஅறிவிக்கப்பட்டு இருக்கிறது.

2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிப்பு. இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/ilaiyaraaja-gets-2018-padma-vibhushan-309460.html

  • தொடங்கியவர்

பத்ம விபூஷண் விருது தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்ததாகக் கருதுகிறேன்: இளையராஜா

 

 
Raja

கமல், இளையராஜா   -  கோப்புப் படம்.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இளையராஜா கூறும்போது, “பத்ம விபூஷண் விருது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசு என்னைக் கவுரவித்ததாகக் கருதவில்லை, தமிழகத்தையும் தமிழக மக்களையும் கவுரவித்ததாகக் கருதுகிறேன், விழாவில் கலந்து கொள்வதாக நான் தெரிவித்திருந்தேன்” என்றார்.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அளிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், பாஜகவின் எச்.ராஜா உள்ளிடோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்: கிராமிய இசையை உலக அரங்கிற்கு எடுத்துசென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர். இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரையை பதித்தவர் இளையராஜா. இளையராஜா மேலும் பல விருதுகளை பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன்: எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதாமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும், நாடும், தமிழகமும் பெருமை கொள்கிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22524502.ece?homepage=true

  • தொடங்கியவர்

பத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவிற்கு ரஜினி, கமல் வாழ்த்து

 
அ-அ+

பத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவிற்கு நடிகர் ரஜினி, கமல், விஷால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Ilayaraja

 
201801252121122304_Rajini-and-Kamal-wish
 
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் போனிலும், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
201801252121122304_1_kamalilayaraja._L_s
 
கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.
 
201801252121122304_2_vishalilayaraja._L_
 
விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷண் விருது இசையின் கடவுள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரும் பெருமை படுகிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/01/25212113/1142241/Rajini-and-Kamal-wishes-to-Ilayaraja.vpf

  • தொடங்கியவர்

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - இளையராஜா.

  • கருத்துக்கள உறவுகள்

ரசினி, கமல், விஷால் இன்னும் நடைப் பிணமாக அலைவதாக இந்த திரியில் தரப்பட்ட செய்திகள் மூலம் விளங்குகிறது...

இவர்கள் வாழ்த்தும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா திக்ஷித், ஒரு வேளை சாப்பாட்டிற்க்கு ஒரு மனிதனுக்கு பத்து ரூபாய் போதும் என்று சொன்னதற்க்கு நிகரானது...

தமிழர்கள் நிலையறியாதவர்கள் அரசியலில்...

தமிழ் செம்மொழி...

மயில் அழகு என்று நான் சான்றிதழ் வழங்கயிருக்கிறேன்... இதுவரை எவரும் அது போல் வழங்கியதில்லை என கருதுகிறேன்... மயில் அழகு என்று சான்றிதழ் வழங்கத் தேவையில்லை...

மயில் அழகு என்று பேசிக் கொள்ளுங்கள்... ஆனால் அதற்க்குண்டான அருகதை உன்னிடம் இருக்க வேண்டும்... அதற்க்கு நீ மயிலின் இறைச்சியை கபளிகரம் செய்யாமல் இருக்க வேண்டும்...

ஒரு அருகதையும் இல்லாமல் வந்துட்டானுங்க சான்றிதழை வழங்குவதற்க்கு பல்லை இளித்துக் கொண்டு...

தமிழன் சபை நாகரிகமும் தெரியாதவனல்ல...

எல்லா பழி பாவத்தையும் தமிழனின் தலை மீது இறக்கி வைத்துவிட்டு உணர்ச்சிகளற்ற மாமிச பிண்டங்களாகவே அலையுங்கள் மாமிச பிண்டங்களே...

  • கருத்துக்கள உறவுகள்

பத்ம விபூஷண் விருது பெற்ற இசைஞானி இளையராஜாவின் இசையைக் கேட்காத நாளில்லை. விருது கிடைத்ததற்கு நாமும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்தது கண்டு மகிழ்ச்சி!

இதற்கு அவர் முற்றிலும் தகுதியானவரே!

இந்த விருதுகளில்...எது பெரியது என்று அறிய ஆவல்!

பத்ம விபூசணா அல்லது பத்ம சிறியா?

 

6 minutes ago, புங்கையூரன் said:

இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்தது கண்டு மகிழ்ச்சி!

இதற்கு அவர் முற்றிலும் தகுதியானவரே!

இந்த விருதுகளில்...எது பெரியது என்று அறிய ஆவல்!

பத்ம விபூசணா அல்லது பத்ம சிறியா?

 

முதலாவது பெரிய விருது பாரத ரத்னா. இரண்டாவது பெரிய விருது பத்ம விபூஷண் என அறிய முடிகின்றது

https://en.wikipedia.org/wiki/Indian_honours_system#Selection_process

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

முதலாவது பெரிய விருது பாரத ரத்னா. இரண்டாவது பெரிய விருது பத்ம விபூஷண் என அறிய முடிகின்றது

https://en.wikipedia.org/wiki/Indian_honours_system#Selection_process

நன்றி...நிழலி!

இதைக்கேட்ட...காரணம்....மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு...சாகும் வரைக்கும்..இந்தப் பாரத ரத்னா...பட்டம் கிடைக்கவேயில்லை!

எனக்குத் தெரிய...மறைந்த முதலமைச்சர்...எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இது கிடைத்திருந்தது! அவர் தமிழக முதலமைச்சாராக இருந்தாலும், பிறப்பால் அவர் ஒரு மலையாளி!

அதே வேளை.... மகிந்த ராஜபக்க்சவுக்கு...பாரத ரத்னா பட்டத்தை வழங்க....சுப்பிரமணியன் சுவாமி...ஒரு காலத்தில் தலை கீழாக நின்றதாகவும்..ஒரு வதந்தி உண்டு!

திறமை அடிப்படையில், சாதனைகளின் அடிப்படைகளின் படி பார்த்தால்....இளைய ராஜா அவர்களுக்கு...பாரத ரத்னா பட்டம் வழங்கப்  பட்டிருக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் கிரிக்கெட் விளையாடிய ஆங்கிலேயர் ஒருவர் இளையராஜாவின் பாடல்களை விரும்பி கேட்பதாக சொன்னார். இளையராஜாவின் பெயரை உச்சரிக்க நேரமெடுத்தவன், இசையை இலகுவாக விளக்கினான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இளையராஜாவின் இசை இயக்கையுடன் இரண்டற கலந்திருக்குக்கும். தென்றல் காற்றும் புல்லாங்குழல் வாசிக்கும், அருவிகளில் மணியோசை ஒலிக்கும், இடி முழக்கம்  பறையோசை எழுப்பும் இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம்.

20 வருடங்களின் முன்பே அந்த ஆங்கிலேயன் விருது கொடுத்து விட்டான். தாமதமாக வந்தாலும் தகுதியான இடத்திற்கு விருது வந்து விட்டது. வாழ்த்துக்கள்  இளையராஜா சார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் கிந்தியர்களே இந்த விருதுக்களை மதிப்பதுவும் இல்லை , ஏறெடுத்துப் பார்ப்பதுவும் இல்லை.

மாறாக இந்த விருதுக்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.

ஏனெனில், இந்த விருதுகள் யாவும் எதோ ஓர் வகையில் செல்வாக்கின் அடிப்படையிலேயே தகுதியும், யாருக்கு   வழங்கபடுவதுவும் தீர்மானிக்கப்படுகிறது என்பதே அவர்களின் மிகப் பெரிய ஆதங்கம்.  

மிக சொற்பமானவைகளே உண்மையான தகுதியின் அடிப்படையில் இந்த விருதுகளை பெற்றிருக்கிறார்கள் என்பதை கிந்தியர்களே மிகவும் வருத்தத்துடன் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, புங்கையூரன் said:

நன்றி...நிழலி!

இதைக்கேட்ட...காரணம்....மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு...சாகும் வரைக்கும்..இந்தப் பாரத ரத்னா...பட்டம் கிடைக்கவேயில்லை!

எனக்குத் தெரிய...மறைந்த முதலமைச்சர்...எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இது கிடைத்திருந்தது! அவர் தமிழக முதலமைச்சாராக இருந்தாலும், பிறப்பால் அவர் ஒரு மலையாளி!

 

நான் நினைக்கிறேன் பாரதரத்னா  இந்தி(ய) அளவில் சாதித்தவர்களுக்கே வழங்க்கபடுகிறது என்று, எம்ஜிஆருக்கும், காமராஜருக்கும் கிடைத்தது  மத்திய அரசியலுடன் கலந்திருந்தபடியால் என்று நினைக்கிறேன், இளையராஜாவுக்கு அவர் வாழ்நாளுக்குள் பாரத ரத்னா கொடுப்பார்களோ இல்லையோ  தெரியாது, இந்திக்காரர்களுடன் ஐக்கியமாகிவிட்ட  AR. ரஹ்மானுக்கு கண்டிப்பாக பாரதரத்னா விருது ஒருநாள் கொடுப்பார்கள் என்பது பலரது நம்பிக்கை!

ஒருவேளை பாரத ரத்னாவும் கிடைத்துவிட்டால் ஏற்கனவே பத்மபூஷன் விருது பெற்றுவிட்ட இளையராஜா, இப்போ பத்மவிபூஷன்...

*பாரதரத்னா..

*பத்மவிபூஷன்

*பத்மபூஷன் என்று

இந்திய முதல் மூன்று உயர்விருதுகளையும் பெற்ற ஒரு இசை தமிழனுக்கு இதைவிட பெரிய கெளரவம் என்ன வேண்டும்?

’’நீதானே நாள்தோறும் நாம் பாட காரணம்’’..... வாழ்த்துவோம் இசைஞானியை!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

நான் நினைக்கிறேன் பாரதரத்னா  இந்தி(ய) அளவில் சாதித்தவர்களுக்கே வழங்க்கபடுகிறது என்று, எம்ஜிஆருக்கும், காமராஜருக்கும் கிடைத்தது  மத்திய அரசியலுடன் கலந்திருந்தபடியால் என்று நினைக்கிறேன், இளையராஜாவுக்கு அவர் வாழ்நாளுக்குள் பாரத ரத்னா கொடுப்பார்களோ இல்லையோ  தெரியாது, இந்திக்காரர்களுடன் ஐக்கியமாகிவிட்ட  AR. ரஹ்மானுக்கு கண்டிப்பாக பாரதரத்னா விருது ஒருநாள் கொடுப்பார்கள் என்பது பலரது நம்பிக்கை!

ஒருவேளை பாரத ரத்னாவும் கிடைத்துவிட்டால் ஏற்கனவே பத்மபூஷன் விருது பெற்றுவிட்ட இளையராஜா, இப்போ பத்மவிபூஷன்...

*பாரதரத்னா..

*பத்மவிபூஷன்

*பத்மபூஷன் என்று

இந்திய முதல் மூன்று உயர்விருதுகளையும் பெற்ற ஒரு இசை தமிழனுக்கு இதைவிட பெரிய கெளரவம் என்ன வேண்டும்?

’’நீதானே நாள்தோறும் நாம் பாட காரணம்’’..... வாழ்த்துவோம் இசைஞானியை!

நன்றி...வளவன்!

பாரத ரத்னா பட்டம் வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப் படக் கூடியவாறு...இப்போது சட்டத்தைத் திருத்தி உள்ளார்கள்!

நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்க்ம் இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா அப்பர் (திருநாவுக்கரசு நாயனார்) பூளும் , MGR திருஞான சம்பந்தர் போலும். இதை யாழில் எழுதினால் சில வேளைகளில் நான் சாதியை தூக்கி பிடிப்பதாக்க பலர் நினைக்க கூடும்.

திருஞான சம்பந்தர் பிரமாண வம்சம் என்பதால் அழுதவுடன் பார்வதியே ஞானப்பாலாய் ஊட்டினார் என்றும் அவரின் திருமணத்திலேயே சிவன் முத்தியடைவதற்கு அழைத்தார் என்றும், அப்பர் சூத்திரர் என்பதால் சம்பந்தரை சுமந்தும், சூலை நோய்வாய்ப்பட்டும், சுண்ணாம்பு வெதுப்பியில் அவிந்ததும், அப்பரின் தள்ளாத முதுமையிலும் சிவனுக்கு மனம் வரவில்லை அப்பரிற்கு  முத்தியளிப்பதற்கு.

ஆயினும், ஆதி யோகியை  கிந்தியாவுடன் ஒப்பிடவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

நன்றி...வளவன்!

பாரத ரத்னா பட்டம் வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப் படக் கூடியவாறு...இப்போது சட்டத்தைத் திருத்தி உள்ளார்கள்!

நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்க்ம் இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது!

நான் சொல்ல வந்தது தென்னிந்தியர்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி :)

இசைஞானியை சேர்ந்ததால் இந்த விருதின் மதிப்பு கூடியுள்ளது. 

  • தொடங்கியவர்

காற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் சென்று தங்கும்: இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

 

 
ilaiyaraaja-vairamuthu-after-28-years-idam-porul-eval

 

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமையன்று (ஜன.25) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டிலேயே 2-ஆவது உயரிய விருதாகும். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் எழுதியுள்ளதாவது:

பத்ம விருதுகள்  பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” 
- என்ற காதல் ஓவியம்  வரிகளால் வாழ்த்துகிறேன் என்று வைரமுத்து வாழ்த்தியுள்ளார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/26/காற்றின்-தேசம்-எங்கும்-உந்தன்-கானம்-சென்று-தங்கும்-இளையராஜாவுக்கு-கவிஞர்-வைரமுத்து-வாழ்த்து-2851760.html

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவைத்தவிர வேறு எந்த ராஜாவால் இவ் விருதுக்கு பெருமை சேர்க்க முடியும்....!

வாகனம் ஓடும்போது விழித்தோடுவதும் 

உன் இசையில் 

வீடுவந்து தூங்கும் போது தாலாட்டுவதும் 

உன் இசையே

உடலுக்கு உற்சாகம் உன்னதமான காபி 

உணர்வுக்கு ஊற்று உன் விரல் தரும் காபி 

சப்தஸ்வரங்களின் துகள்களை இசை 

நரம்புகளில் சேகரித்து 

கர்ணத்தில் கரைத்துவிடும் உன் 

கரங்களுக்கு  நமஸ்காரம்....!  tw_blush:

 

  • தொடங்கியவர்

''ராகதேவன் இளையராஜாவால் விருதுக்குத்தான் கௌரவம்!'' - சிவக்குமார் புகழாரம்

 
 

பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டவுடன் இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. முன்னதாக கமல், ரஜினி, வைரமுத்து, நாசர் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து மூத்த நடிகர் சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிவக்குமார் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

சிவக்குமார் | இளையராஜா

 
 

இதுதொடர்பாக சிவக்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண். 68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம். ராகதேவன் இளையராஜாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இல்லை. அந்த விருதுக்கு ராஜாவால் கௌரவம் கிடைத்துள்ளது. பஞ்சு அருணாசலம் அவர்களால் 'அன்னக்கிளி'- படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்குக் கிடைத்த புதையல் அவர். அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். 50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்திருக்கிறார். எனது 100-வது படம் 'ரோசாப்பூரவிக்கைக்காரி '-' சிந்துபைரவி ' படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது. தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்த அபூர்வ கலைஞர். அவரால் கலையுலகமும் தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அவர் இசையுலகில் சாதித்ததற்கு அவை ஈடாக முடியாது. வாழ்க இசைஞானி .ஓங்குக அவர் புகழ்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/114639-actor-sivakumar-congratulates-ilayaraja-for-padma-award.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.