Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ராசவன்னியன் said:

தகவல்களுக்கு நன்றி ஈழப்பிரியன்...bjr2.gif

ஆனால் இந்த ரண களத்திலும், கண்டந்துண்டமாக தமிழர்களை கூறுபோட்டு கொன்னு போட்டாலும் சிங்களக் கட்சிகளுக்கு யாழ்ப்பாண மக்களே வாக்களித்து வெற்றிபெறச் செய்யும்போது, தமிழக தமிழர்களைப் பார்த்து 'எங்களுக்கு தார்மீக உதவி செய்யவில்லை' என குறைப்படுவதில் மதிப்பில்லை!

இந்தக்கட்சிகளை பிரித்து வைத்து விளையாட விடுவதே இந்தியா தான் என்பது கசப்பான உண்மை.

  • Replies 142
  • Views 22.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தக்கட்சிகளை பிரித்து வைத்து விளையாட விடுவதே இந்தியா தான் என்பது கசப்பான உண்மை.

பிரித்து விளையாண்டாலும், தமிழர் கட்சிகளுக்குள்ளேயே வாக்குகள் இருந்தால் நல்லது. ஆனால் சிங்கள கட்சிகள் தமிழர் பகுதிகளில் வலுப்பெறுவது முரண்பாடாக தெரிகிறது.

இதே சூழலில்(இனவெறிக் கொலைக்களத்தில்) சிங்களப் பகுதிகளில் தமிழ் வேட்பாளர் வெற்றி பெற இயலுமா?

  • தொடங்கியவர்

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்! முதல் பெறுபேறு வெளியாகியது?

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதலாவது பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது.

மாத்தளை மாவட்ட பல்லேபொல பிரதேசசபையின் மெதிவல வட்டாரத்தின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 376

ஐக்கிய தேசியக் கட்சி - 146

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 44 என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்துகம, பொரலுகொட வட்டார பெறுபேறு

மத்துகம, பொரலுகொட வட்டாரத்தின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு – 179

ஐக்கிய தேசியக் கட்சி – 82

மக்கள் விடுதலை முன்னணி – 20

 

http://www.tamilwin.com/election/01/173802?ref=imp-news

9 minutes ago, ராசவன்னியன் said:

பிரித்து விளையாண்டாலும், தமிழர் கட்சிகளுக்குள்ளேயே வாக்குகள் இருந்தால் நல்லது. ஆனால் சிங்கள கட்சிகள் தமிழர் பகுதிகளில் வலுப்பெறுவது முரண்பாடாக தெரிகிறது.

இதே சூழலில்(இனவெறிக் கொலைக்களத்தில்) சிங்களப் பகுதிகளில் தமிழ் வேட்பாளர் வெற்றி பெற இயலுமா?

இங்கு தமிழர் பகுதிகளில் சிங்கள வேட்பாளர் வெல்லவில்லை; சிங்கள தேசியக் கட்சிகளில் போட்டியிட்ட தமிழர்கள் வெல்லுகின்றனர். அதே போன்று கொழும்பு / கண்டி போன்ற பகுதிகளில் தமிழர்கள் வென்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு இலங்கை பூரா இயங்கும் கட்சி என்று ஒன்று இல்லை.

 

உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது முன்னர் கட்சிகளின்  கொள்கைகள் பார்த்து வாக்களிக்கும் தேர்தலாக இருந்ததில்லை.குப்பை அள்ளிறது, நாய் பிடிக்கிறது என்று எவளவு கௌரவமான வேலைகளுக்கு முகாமைபடுத்தும் ஆட்களை தெரிவு செய்யும் ஒரு தேர்தலாகத் தான் இவ்வளவு காலமும் உள்ளூராட்சி தேர்தல் இருந்தது. அரசியல் வங்குரோத்தனம் காரணமாக அதுவும் 'இனப்பிரச்சனையை தீர்க்கும்' ஒரு தேர்தலாக மாறிவிட்டது,

  • தொடங்கியவர்

பளை உட்பட 5 இடங்களில் த.தே.கூ வெற்றி

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பளை, தம்பகாமம், முல்லையடி, சோரன்பற்று, முகாவில்  ஆகிய இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.

3 ஆம் வட்டாரம் ; த.தே.கூ முன்னிலை

யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

http://newuthayan.com/

  • தொடங்கியவர்
 
jaffna.jpg

யாழ் . மாநகர சபை – த.தே.கூ 14 வட்டாரங்களில் முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாநகர சபையில் 14 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வட்டாரத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒருவட்டாரத்தையும் கைப்பற்றியது.

https://newuthayan.com/story/68117.html

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இங்கு தமிழர் பகுதிகளில் சிங்கள வேட்பாளர் வெல்லவில்லை; சிங்கள தேசியக் கட்சிகளில் போட்டியிட்ட தமிழர்கள் வெல்லுகின்றனர். அதே போன்று கொழும்பு / கண்டி போன்ற பகுதிகளில் தமிழர்கள் வென்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு இலங்கை பூரா இயங்கும் கட்சி என்று ஒன்று இல்லை.

பெரும்பாலும் கட்சிகளின் கொள்கைகளுக்காகத்தானே மக்கள் வாக்களிப்பார்கள்..? தனிமனித செல்வாக்கிற்காக அமைவது வெகு அபூர்வம்தான்.

சிங்கள கட்சிகளின் அரசியல் கொள்கை-இலங்கை முற்றும் சிங்களர்களுக்கு, தமிழர்கள் கள்ளத்தோணி வழித்தோன்றல்கள் அப்படித்தானே..?

சாதாரண அரசியல் சூழலைவிட இனவெறியை கண்டிப்பாக அமுல்படுத்தும் அனைத்து சிங்களக் கட்சிகளின் வேட்ப்பாளர்களாக தமிழர்கள் இருப்பதும், இனக்கொலைகளை மறந்து அவர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிப்பதும் வியப்பாக உள்ளது.

நெருடலாக இருந்தது அவ்வளவே..! It's up to them.

 

  • தொடங்கியவர்

சாவகச்சேரி  நகரசபையில 7 வட்டாரங்கள்  த.தே.ம.மு வசம்

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி  நகரசபையில 7 வட்டாரங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  கைப்பற்றியது.

3 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஒரு வட்டாரத்தை  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கைப்பற்றியது.

http://newuthayan.com/story/68119.html

  • தொடங்கியவர்

தெற்கில் மஹிந்தவின் கட்சி முன்னிலையில்

4 minutes ago, ராசவன்னியன் said:

பெரும்பாலும் கட்சிகளின் கொள்கைகளுக்காகத்தானே மக்கள் வாக்களிப்பார்கள்..? தனிமனித செல்வாக்கிற்காக அமைவது வெகு அபூர்வம்தான்.

சிங்கள கட்சிகளின் அரசியல் கொள்கை-இலங்கை முற்றும் சிங்களர்களுக்கு, தமிழர்கள் கள்ளத்தோணி வழித்தோன்றல்கள் அப்படித்தானே..?

சாதாரண அரசியல் சூழலைவிட இனவெறியை கண்டிப்பாக அமுல்படுத்தும் அனைத்து சிங்களக் கட்சிகளின் வேட்ப்பாளர்களாக தமிழர்கள் இருப்பதும், இனக்கொலைகளை மறந்து அவர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிப்பதும் வியப்பாக உள்ளது.

நெருடலாக இருந்தது அவ்வளவே..! It's up to them.

 

 தேசியக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் வெல்லுவது உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் தேசியத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்ட கட்சிகளின் வெற்றி அபாயகரமானது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ராசவன்னியன் said:

இதே சூழலில்(இனவெறிக் கொலைக்களத்தில்) சிங்களப் பகுதிகளில் தமிழ் வேட்பாளர் வெற்றி பெற இயலுமா?

1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது.[1] இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துக்கொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கியக் காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது.

இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.

பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.

https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலம்_இராமநாதன்

மேலே சொன்னது போல் நல்லத்தான் போனது பக்கத்தில் கிண்டியா என்று ஒரு நாடு உருவாகி இலங்கையை அழித்தது வரலாறு உங்களால் நியாயம் கூறமுடியுமா போராளிகளுக்கு ஆயுத உதவி பயிற்ச்சி வழங்கியதை ?

 

  • தொடங்கியவர்

களுதாவளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமோக வெற்றி

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுதாவளையிலுள்ள 2 வட்டாரங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.

களுதாவளை வடக்கு வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட எம்.தேவதாஸ் 1014 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட குவிராஸ் 705 வாக்குகளைப் பெற்றுள்ளர்.

இந்நிலையில் களுதாவளை தெற்கு வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஞா.யோகநாதன் 1230 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் இந்த வாட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் கோட்டியிட்ட திருநாவுக்கரசு 583 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

http://www.tamilwin.com/election/01/173826?ref=home-latest

 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

 தேசியக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் வெல்லுவது உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் தேசியத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்ட கட்சிகளின் வெற்றி அபாயகரமானது.

அபயகரமானது ஆனால் இந்த வெற்றி திட்டமிட்டு உருவாக்கபட்டது .

  • தொடங்கியவர்

வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களில் த தே கூட்டமைப்பு வெற்றி: உத்தியோகபூர்வ தகவல்

 

வவுனியா வடக்கு பிரதேச சபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, நான்கு சிங்கள வட்டாரத்திலும் மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜனபரமுன வெற்றிபெற்றுள்ளதுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தினை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றவர்களின் முழு விபரம் இதோ..

வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேச சபை சம்பத்நுவர வட்டாரம் பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை எத்தாவெட்டுணுவெல வட்டாரம் பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை கல்யாணபுர பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை கஜபாபுர பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை பட்டிக்குடியிருப்பு வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செந்தூரன் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை பரந்தன் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவராசா வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை நெடுங்கேணி வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியேந்திரன் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை குளவிசுட்டான் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சி. அருட்செல்வம் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை சின்னடம்பன் வட்டாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்) சஞ்சுதன் வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை புளியங்குளம் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோகராசா வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் தெற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ந.விநாயகமூர்த்தி வெற்றி.

வவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ச.தணிகாசலம் வெற்றி.

http://www.tamilwin.com/election/01/173825?ref=home-latest

 

 
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

தெற்கில் மஹிந்தவின் கட்சி முன்னிலையில்

சிங்களவர்கள் நல்லவர்கள் என்பவர்களுக்கு இது சமர்ப்பணம் .

  • தொடங்கியவர்

மூன்று மாகாணங்களில் மகிந்த முன்னிலையில்?

 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், இன்னும் சில நேரங்களில் முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், மூன்று மாகாணங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுண முன்னிலை பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.tamilwin.com/election/01/173827?ref=imp-news

 

 
1 minute ago, நவீனன் said:

மூன்று மாகாணங்களில் மகிந்த முன்னிலையில்?

 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், இன்னும் சில நேரங்களில் முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், மூன்று மாகாணங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுண முன்னிலை பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.tamilwin.com/election/01/173827?ref=imp-news

 

 

Deep south எனப்படும் காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை பகுதிகளும் குருணாகல், அனுராதபுரம், கேகாலை மாவட்டங்களும் எப்பவுமே கடும் சிங்கள போக்குடையை கட்சிகளை ஆதரிக்கும் மக்கள் வாழும் பகுதிகள். அத்துடன் வறிய மக்களை அதிகம் கொண்ட பகுதிகள் என்பதால் இராணுவத்தினரின் குடும்பங்களும் அதிகம் கொண்டவை இப் பகுதிகள். இவை எப்பவுமே மகிந்த / ஜே. ஆர் போன்றவர்களின் கோட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

...மேலே சொன்னது போல் நல்லத்தான் போனது பக்கத்தில் கிண்டியா என்று ஒரு நாடு உருவாகி இலங்கையை அழித்தது வரலாறு உங்களால் நியாயம் கூறமுடியுமா போராளிகளுக்கு ஆயுத உதவி பயிற்ச்சி வழங்கியதை ?

நல்லா போனதா..?

அப்புறம் ஏன் செல்வநாயகம் பொன்னம்பலம் கட்சியை விட்டு வெளியேறி தனிக்கட்சி துவங்கினார்..? பிராஜாவுரிமை சட்டத்தின் கருத்து வேறுபாடுகளால்தானே..? அவர் ஏன் தனித்தமிழ் ஈழமே தீர்வு என முடிவெடுத்தார்..? மக்களும் அதை ஆதரித்தனர்?

பொந்தியா வந்தது, அதன் பின்னர்தானே..? (பொந்தியாவை எக்காலத்திலும் நியாயப்படுத்தியதில்லை.)

  • தொடங்கியவர்

யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு பெரும்பான்மை வட்டாரங்களில் வெற்றி

 

tnaயாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும்  நிலையில் உள்ளது. யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐதேகவும், ஈபிடிபியும் தலா ஒவ்வொரு வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ளன.

விகிதாசார முறையிலான, 18 உறுப்பினர்களின் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும், 7 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/02/10/news/29005

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வலிகாமம் மேற்கு 4 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது.

 

http://newuthayan.com/story/68122.html

  • தொடங்கியவர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்தவின் கட்சிக்கு அதிகளவானவர்கள் வாக்களித்துள்ளனர்

mahintha-party.jpg?resize=640%2C270
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கட்சிக்கு அதிகளவானவர்கள் வாக்களித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. அநேகமான பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்கு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகப் பற்றற்ற ரீதியில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு கனிசனமான அளவு வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலவாக்கலை லிந்துலை நகரசபை, பலப்பிட்டிய பிரதேசசபையின் வத்துகெதர வட்டாரம் உள்ளிட்டவற்றில் மலர்மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றியீட்டியுள்ளதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/2018/66293/

 

  • தொடங்கியவர்

அ‘புரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு

 

அனுராதபுரத்தில் வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முன் அனுராதபுரத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் என, தேர்தல் அதிகாரி ஆர்.எம்.வன்னினாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுத்துறையில் வாக்குகளை எண்ணும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் 50 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

http://www.virakesari.lk/article/30506

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

நல்லா போனதா..?

அப்புறம் ஏன் செல்வநாயகம் பொன்னம்பலம் கட்சியை விட்டு வெளியேறி தனிக்கட்சி துவங்கினார்..? பிராஜாவுரிமை சட்டத்தின் கருத்து வேறுபாடுகளால்தானே..? அவர் ஏன் தனித்தமிழ் ஈழமே தீர்வு என முடிவெடுத்தார்..? மக்களும் அதை ஆதரித்தனர்?

பொந்தியா வந்தது, அதன் பின்னர்தானே..? (பொந்தியாவை எக்காலத்திலும் நியாயப்படுத்தியதில்லை.)

உங்களுக்கும் கிந்திக்கும் இருக்கும் பிரச்சனை போல் தொடர்கதையாக இருந்தது அவை இலகுவாக தீர்க்கப்படலாம் எனும் நிலையில் இருந்தன கிந்தியா வந்த பின்  பெருபிக்கப்டடது இன்று சிங்கள கட்சி  சந்தர்ப்பத்துக்கு  தமிழ் பகுதிகளில் வெற்றி பெற்றதை      நீங்களும் நானும் ஜீரணிக்க முடியாமல் இருப்பது உண்மை ஆனால் உண்மை எம்மை விட டெல்லி     கொள்கை       வகுப்பாளர்களினால் ஒத்துகொள்ள முடியாது இருக்கும் என்பது 100 வீத உண்மை .

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்…

ITK-TNA.jpg?resize=622%2C390

இன்று இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளையும்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
 
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரமாரின் சுயேட்சைக் குழுவும்  வெற்றிப்பெற்றுள்ளது.
 
பச்சிலைப்பள்ளியில்  எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 2 வட்டாரங்களில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரமாரின் சுயேட்சைக் குழுவும்  வெற்றிப்பெற்றுள்ளது.
 
பூநகரி பிரதேச சபையில் 11 வட்டாரங்களில் அனைத்து வட்டாரங்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெற்றுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்வி தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்ச்சிகள் கனவில் கூட காலுன்ற முடியவில்லை ?

22 minutes ago, ராசவன்னியன் said:

நல்லா போனதா..?

அப்புறம் ஏன் செல்வநாயகம் பொன்னம்பலம் கட்சியை விட்டு வெளியேறி தனிக்கட்சி துவங்கினார்..? பிராஜாவுரிமை சட்டத்தின் கருத்து வேறுபாடுகளால்தானே..? அவர் ஏன் தனித்தமிழ் ஈழமே தீர்வு என முடிவெடுத்தார்..? மக்களும் அதை ஆதரித்தனர்?

பொந்தியா வந்தது, அதன் பின்னர்தானே..? (பொந்தியாவை எக்காலத்திலும் நியாயப்படுத்தியதில்லை.)

ஒரு கேள்வி தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்ச்சிகள் கனவில் கூட காலுன்ற முடியவில்லை ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.