Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.....!

 சில நாட்கள் செல்கின்றன.வெளியில் இராகவன் கிழிந்து கிடக்கும் வானின் சீற்றுகளுக்கு துணியில் கச்சிதமாய் உறைகள் தைத்து போட்டு கொண்டு இருக்கிறான். ஹேமாவும் அருகே சந்தியில் இருக்கும் புத்தரின் பாதத்தில் தாமரை பூக்கள் வைத்து வணங்கி விட்டு வருகிறாள்.தினமும் காலையில் அதுவே பழக்கமாகி விட்டது. வெளியில் இராகவனை பார்த்ததும் சற்று முறுவலித்து கொண்டு வருகிறாள். அவளும் இப்ப நடை உடை பாவனைகளில் நடுத்தர வர்க்கத்து சிங்கள பெண்கள்போல் நிறைய மாறிவிட்டாள். காலில் ரப்பர் பாட்டா செருப்பு, பெண்ணம் பெரிய  பூக்கள் போட்ட சீத்தை துணியில் நாலுமுழம் வேட்டி மாதிரி ஒரு லுங்கி இடுப்பு மடிப்புடன் தொப்புள் அருகே இழுத்து செருகியிருக்கு. மேலே நீள்வட்ட கழுத்து முன்னால் கீழிறங்கி அரைவாசி மார்புடன் இறுக்கமான சட்டை. பொம்மலான சுருக்கு வைத்த சிறிய கையுடைய சட்டை, கழுத்தில் மெல்லிய சங்கிலி, கைகளில் கண்ணாடி வளையல்கள், விரலில் கல்லு வைத்த எஸ் வடிவ மோதிரம்,காதில் சிகப்பு நிற எட்டுக்கல் தோடு, தலைமுடியை துணி ரிப்பன் பிடித்திருக்க அதில் செருகிய முழு செம்பருத்தி பூ,நெற்றியில் சிறிய வீபூதி கீற்றும் கீழே சின்ன ஸ்டிக்கர் பொட்டும்மாய் அம்சமாய் இருக்கிறாள். அவனை கடந்து அவள்போக அசையும் அழகை அவன் கல்மிஷமின்றி ரசிக்கிறான். அவள் கடைக்குள் நுழையவும் உள்ளிருந்து விமல் வந்து  அக்கே, டீ  எக்கக்  தெண்ட (ஒரு டீ  தாங்கோ) என்றவாறே வாங்கில் வந்து அமருகின்றான்.

ஹேமாவும் பழைய டீ  தூளை கொட்டிவிட்டு புது தூள் போட்டுக்கொண்டே விமல் ஒபே மித்ர சினாசெனவாத. கெமதாமா ஊரா வாகே  உர்ர்ர்.( உன் நண்பனுக்கு சிரிக்கவே தெரியாதா, எப்போதும் பன்றி மாதிரி உர்  என்று ).  

விமல்: ஓஹு  கவுத.... (யாருக்கு இவனுக்கா) எம காதகன் போற போக்கிலே சொல்லுவான், ஆனால் அவன் சிரிக்க மாட்டான்.(சிங்களத்தில் சொல்லுகிறான்).  அங்கு ஒரு சிகப்பு லம்பறட்டா ஸ்கூட்டர் வந்து நிக்க அதில் இருந்து டாக்டர் சுமணா இறங்கி வருகிறாள். அவளது கிளினிக்கில்தான் விமல் பத்து போடுறவன். பின்னால் கங்காணி அப்புஹாமியும் கக்கத்தில் பெரிய கருப்பு குடையுடனும் கையில் ஒரு பையுடனும் வந்து இராகவனிடம் ஹேய்  இராகவ் மாத்தையா... ஒவ் கங்காணி மாத்தையா மே எண்ட , ஆயுபோவன்.( வணக்கம் வாங்கோ). (அவர் கொஞ்சம் தமிழ் கதைப்பார்).  

கங்காணி: ஆயுபோவன், உனக்கு நம்ம டைலர் எங்க போனான் என்று தெரியுமா.... அவன் கடை மிச்ச நாளா பூட்டி கிடக்கு.

இராகவன்: உங்களுக்கு தெரியாதா....

கங்காணி: தெரியாது....

இராகவ்: டைலர் ஹரிணியை கூட்டிக்கொண்டு எங்கோ போயிட்டார்.

கங்காணி: யாரு... நம்ம ஹரிணியையா ......

இராகவ்: ஒவ், உங்கட ஹரிணியைத்தான்......

கங்காணி: மகே தெய்யோ..... நான் என்ட பிரிந்த மொனிக்கேக்கு (மனைவி) ஒரு கவுன் தைக்க குடுக்க வந்தது. பக்கத்தில் தையல் மெஷினையும் தைத்த துணிகளையும் பார்த்த அப்புஹாமி  இராகவ் நீ பொண்ணுங்களுக்கு கவுன் தைப்பியா.

இராகவ்: யாருக்கு நம்ம மொனிக்காவுக்கா.... ஓம் நான் தைச்சு தாறன்.

கங்காணி: இந்தா புது துணியும்,பழைய கவுனும் இருக்கு.பார்த்து தைத்து வை, நான் நாளைக்கு வரும். போகிறார்.

ஹேமாவும் விமலும் சுமணாவும் இவர்களின் சம்பாஷணையை கேட்டு சிரித்து கொண்டிருக்கிறார்கள்.

விமல்: மச்சான் நீ கவுன் எல்லாம் தைப்பியா....!

இராகவன்: இந்த வானுக்கு சீற் கவர் தைப்பதுதான் சிரமம். மொனிக்கா நோனாவுக்கு கவுன் சுலபமாய் தைச்சிடலாம். 

விமல்: என்ன சொல்கிறாய் ......

இராகவன் அளவு சட்டையை எடுத்து காட்டி "மே  பலன்ன" (இஞ்சை பார்)தோளில் இருந்து தொடை வரை ஒரே சைஸ் தமாய். உருட்டி தைத்துவிட்டு கழுத்தையும் கையையும் வெட்டி விட்டால் போதும் என்கிறான். இவர்கள் சிரிக்க அவன் எழுந்து போய் காதில் இருந்த பீடியை வாயில் வைத்து தொங்கும் கயிற்றில் இருந்த நெருப்பில் பத்த வைக்கிறான். வெடித்து சிரித்து கொண்டிருந்த ஹேமா திடீரென இராகவ் எனக்கு தலையை சுத்தி மயக்கமாய் வருது என்று சொல்லியவாறு கீழே சரிகிறாள். சுகுணாவும் இராகவனும் ஓடிப்போய் அவளை நிலத்தில் சரியாக படுக்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளிக்க விமல் ஒரு பேப்பரை எடுத்துவந்து விசிறுகின்றான். ஹேமாவின் இடது கையை பரிசோதித்து கொண்டிருந்த சுமணாவும் சற்று நேரத்தில், பயப்படத் தேவையில்லை. நல்ல செய்திதான்.இவள் கர்ப்பமாய் இருக்கிறாள் என்று சொல்கிறாள்.ஹேமா எழுந்து உட்கார கவனமாய் உடம்பை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு போகிறாள்.

சோதனை தொடரும்.......!

 

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிட்சயமா இந்த ராகவனும் விமலும் காரணம் அல்ல அந்த மயக்கத்துக்குtw_blush:  

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்  வெளிநாடுவந்தாலும்  மறவாத சிங்களபுலமையோடு  வீறுநடை போடுகிறது 

Posted

யாரைய்யா....யாரு அது?

நான் கேக்கும் போது இப்பவே உண்மையைச் சொன்னால் நல்லது.... பிறகு நானாக தெரிந்து கொண்டால் பெரிய பிரச்சனையாக போகும்..சொல்லிட்டன்

நான் இரவு படுத்து காலைல எழும்புவதற்குள் யாரைய்யா ஹேமாவை பிள்ளைத்தாச்சி ஆக்கினது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, நிழலி said:

யாரைய்யா....யாரு அது?

நான் கேக்கும் போது இப்பவே உண்மையைச் சொன்னால் நல்லது.... பிறகு நானாக தெரிந்து கொண்டால் பெரிய பிரச்சனையாக போகும்..சொல்லிட்டன்

நான் இரவு படுத்து காலைல எழும்புவதற்குள் யாரைய்யா ஹேமாவை பிள்ளைத்தாச்சி ஆக்கினது?

எனக்கு அந்த டவுட்டு இருந்திச்சு செல்லம் நீர் பாயாத நிலம் நனையாத மரம் போல் வெளியே வந்தவள்  கனிந்த பழமாகி கருவாகி நிற்கிறாளாம் இவருடன் சேர்ந்து  நமக்கு இலக்கிய புலமை வருது வர்துtw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் சுவி. நாங்கள் பயந்து ஓடமாட்டம். கனடா மாதர் கோழைகளல்ல. கதை நன்றாகப் போகிறது. உண்மையிலேயே சுவி எழுத்தாற்றலில் சிறந்தவர்தான். தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்......!

அன்று இரவு ஹேமா கவைலையுடன் தூங்காமல் யோசித்து கொண்டு பின் வராந்தாவில் இருக்கிறாள். வழமைபோல் டிரான்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் மனநிலையிலும் இல்லை. வேலைகளை முடித்த இராகவன் அவளுக்கும் ஒரு தேநீருடன் வந்து அருகில் அமர்கிறான்.

இராகவ்: என்ன ஹேமா கணக்க யோசிக்கிறிங்கள் போல.....

ஹேமா:இல்லை இராகவன், நான் இப்ப இருக்கும் நிலையில் இந்தக் குழந்தை தேவைதானா என்றுதான் யோசிக்கிறான்.......

இராகவ்: அதுக்கு......

ஹேமா: கருவை கலைச்சிடலாம் என்று..... (அவன் குறுக்கிட்டு)

இராகவ்: வேண்டாம் ஹேமா, அப்படி நீ நினைக்காதே.....

ஹேமா:இல்லை இராகவன், இப்பவென்றால் சுலபமாயிடும்.சுமணாவிடம் உதவி கேட்கலாம். நாள் போனால் அது கஷ்டம். மேலும் தந்தை பெயர் தெரியாத குழந்தை.... அவமானமாயிடும்.

இராகவன்: அதுக்காக ஜனித்த ஒரு உயிரை அழிக்க துணிய வேண்டாம்.

ஹேமா: நீ ஏன் இவ்வளவு பிடிவாதமாய் இருக்கிறாய் இராகவ்....

இராகவன்: உனக்கு விளங்காது ஹேமா,அது மிகக் கொடுமையானது. ஒருநாள் சுமணாவுடன் கதைத்து கொண்டிருக்கும் பொழுது தற்செயலாய் கருக்கலைப்பு பற்றி பேசினோம். அவளின் தாயார் சட்டத்துக்கு புறம்பாக இம்மாதிரி வேலைகள் செய்வது உண்டு. அப்பொழுது அந்த பெண்கள் படும் வேதனையே பிரசவத்தை விட வலி மிகுந்தது. பின் வயிற்றில் இருந்து வெளியில் விழும் அந்த சதைப்பிண்டம் ஒரு சிசுக் கொலையை நினைவு படுத்திக்  கொண்டிருக்கும் என்றாள். மேலும் அவர்களில் பலர் பிள்ளைகள் உண்டாகாமல் இருக்கிறதும் உண்டாம். உனக்கு அது வேண்டாம். நீ விரும்பினால் இங்கேயே இருந்து இந்தப் பிள்ளையைப் பெற்று என்னிடம் தா.நான் வளர்த்துக் கொள்கிறேன். அப்பாவாக என்னைக் காட்டு.அதற்காக நான் உன்னிடம் எந்த உரிமையும் எடுத்து கொள்ள மாட்டேன். என்னை நீ நம்பலாம்.

அவள் பக்கத்தில் இருந்த கப்பில் தலையை முட்டி அழுகிறாள். அவனும் அவள் அழுது ஓயட்டும் என்று விடுகிறான். தானாக மனசு சமாதானமாகி கட்டியிருந்த சேலையால் முகத்தை துடைத்து கொண்டு சொல்லுகிறாள்.... அதுக்கில்லை இராகவ்  இந்தக் குழந்தை ஒரு குடும்பத்துக்கு மிகவும் அவசியமான குழந்தை.எனது மாமியார் மிகவும் எதிர்பார்த்தார்கள். சில மாதங்களுக்கு முன்பே இது தெரிந்திருந்தால் எனக்கு விவாகரத்தே நடந்திருக்காது.என்று சொல்லிக் கொண்டு போனவள் பல்லைக் கடித்துக் கொண்டு பேச்சை நிறுத்துகிறாள். சில நிமிட மௌனத்தின் பின் இராகவன்.... ஹேமா நீ ஏதோ சில விடயங்களை என்னிடம் கூறத் தயங்குகிறாய் என நினைக்கின்றேன்.நான் அதைக் கேட்டு உன்னை ஒருநாளும் சங்கடப் படுத்தப் போவதில்லை. எதுவாயினும் பிள்ளையை பெற்றெடுக்கிற வழியைப் பார்.பிறந்தபின் அது தன் விதிப்படி வாழ்ந்திட்டுப் போகட்டும்.

ஹேமா: மெதுவாக, நன்றி இராகவன்.நானும் எதோ அவசரத்தில் அசட்டுத்தனமாக யோசித்து விட்டேன்.தனது வயிற்றை வாஞ்சையுடன் தடவிக் கொண்டு இனி ஒருபோதும் இப்படி நினைக்க மாட்டேன். அதுக்காக மிகவும் மனம் வருந்துகிறேன்.இருவரும் என்னை மன்னித்து கொள்ளுங்கோ. தேநீரை குடிக்க எடுக்கிறாள். இராகவன் அவளை தடுத்து இது ஆறி விட்டது ஹேமா, நீ போய் முகம் கழுவி விட்டு வா , நான் இஞ்சி போட்டு சுடச்சுட தேநீர் போட்டுக் கொண்டு வாறன்.

சோதனை தொடரும்....!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது வரை....வாசித்த வரையில்....கதையின் நாயகி ஹேமா அல்ல!

நம்ம ராகவனே தான்....!

நான் தலைப்பிட்டிருந்தால்.....கைதி ஒருவன்....கர்ப்பக்கிரகத்தில்..அமர்கிறான்! என்று வந்திருக்குமோ....என்னவோ!

துருச்சாமியைத் சின்னனாக்கி விட்டு நகரத்து செல்கிறது கதை...!

தொடருங்கள்...சுவியர்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.....!

அவளின் வானொலியில்....!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 

வாசல்தோறும் வேதனை இருக்கும் 

வந்த துன்பம் எதுவென்றாலும் 

வாடி நின்றால் ஓடுவதில்லை......! p .b . ஸ்ரீநிவாஸின் குரலில் வரிகள் உயிர் கொண்டு உலவுகின்றன.

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.  பாடல் மனசுக்கு ஒத்தடம் தருகிறது.

அவள் தனது அறைக்கு செல்ல,  அவன் அருகில் இருந்த தனது கயிற்று கட்டிலில் படுத்து கொள்கிறான்.அது கிர்ர்க் சத்தத்துடன் உள்வாங்கி கொள்கிறது. தினமும் படுக்கும்போது நினைப்பதுண்டு இந்தக் கயிற்றை இழுத்து இறுக்க வேண்டும் என்று பின் மறந்து போய் விடுகின்றது......!

காலையில் மிகவும் தெளிவுடன் எழுந்து அலுவல்களைக் கவனிக்கிறாள். எதிலும் ஒரு முடிவை எட்டும் வரைதான் கடினம்.இதுதான் முடிவு எனத் தெளிந்து விட்டால் பூதாகரமான பிரச்சினைகளும் பூப்போல மாறிவிடும். அவள் மீண்டும் பழையபடி கலகலப்பாகி விட்டாள். விமல் ஒரு சகோதர வாஞ்சையுடன் அவளை கடினமான வேலைகள் செய்ய விடாது பார்த்து கொண்டான் என்றால் இராகவன் அதுக்கும் மேல. அவளைவிட அவர்கள்தான் அந்தப் பிள்ளையின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அப்பப்ப சுமணாவும் வந்து ஹேமாவைப் பார்த்து ஆலோசனைகள் சொல்கிறாள். இருவரும் ஓரளவு சம வயதுடையவர்களாகி இருப்பதால் நல்ல தோழிகள் ஆகி விட்டனர்.

அன்று பகல் வேலைகளை முடித்து விட்டு இராகவன் தாமரை குளத்துக்கு வந்து உடுப்புகளை தோய்த்து அலம்பி கரையில் வைத்து விட்டு குளத்துக்குள் பாய்ந்து முங்கி நீந்தி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது ஹேமாவும் அங்கு வந்து தனது சீலையை குறுக்குக் கட்டிக் கொண்டு தனது ஆடைகளையும் சோப்பு போட்டு அலம்பிக் கொண்டிருக்கிறாள். குளத்திலும் நிறைய தண்ணீர். தாமரை பூக்களும் மொட்டுக்களும் நிறைந்திருக்கின்றன.

ஹேமா: தண்ணிக்கு மேலேயே  இவ்வளவு பூக்கள் என்றால் தண்ணிக்குள்ளும் நிறைய பூக்கள் இருக்கும் போல என்கிறாள்.

இராகவன்: சட்டென்று ஓயா பிசுத.... (விசரா) குளம் வத்தி இருக்கும் பொழுது இல்லை,பூ ,தண்டுகள் எல்லாம் கீழே சுருண்டிருக்கும். அப்பவும் நீர் மட்டத்தில்தான் இருக்கும். குளம் நிறைந்திருக்கும் பொழுதும் அவை அந்த மட்டத்துக்கு எழுந்து நிக்கும்.

ஹேமா: அப்போ நீருக்கடியில் பூ இருக்காது என்கிறாயா.

இராகவன்: அப்படியல்ல..... இருக்க சந்தர்ப்பம் இல்லையென்று சொன்னேன். இவ்வளவு நாளும் நான் இதைக் கவனிக்கவில்லை. இரு போய் பார்த்துட்டு வந்து சொல்லுறன் என்று நீருக்குள் சுழியோடிப் போகின்றான்.

ஹேமாவும் ஆடைகளை அலம்பிப் பிழிந்து கரையில் வைத்துவிட்டு குளத்தில் இறங்குகின்றாள்.தண்ணீர் "சில்"....குளிர் உடல் பூராவும் பரவுகின்றது. தயங்கி தயங்கி இறங்க ஆடை தாமரை இலைபோல் நீர் மட்டத்துக்கு உப்பி பரவுகின்றது.சிரமப்பட்டு இரு கைகளாலும் கீழே அமுக்குகின்றாள். இராகவனும் ஆங்காங்கே சில பூக்கள் கொடிகளில் பின்னி நீருக்குள் இருப்பதை பார்த்து விட்டு பூவை பார்த்து விட்டேன் என்று சொல்வதற்கு அவளருகே மேல் எழுந்தவன் அவளது போராட்டத்தை பார்த்து ஒன்றும் சொல்லாமல் கரையேறி துவைத்த ஆடைகளை எடுத்துக்கொண்டு செல்கிறான்......ஹேய்  இராகவ் பூக்களை பார்த்தாயா என்று அவள் கேட்க  அவன் ஓற்றை சொல்லில் "ம் " நீ அதிகம் ஆழத்துக்கு போகாதே, சுழி இருக்கும் என்று சொல்லிவிட்டு போகிறான். என்ன இவன் எதோ நினைப்புடன் போகிறான் என்று எண்ணிக்கொண்டு கரையோடு நின்று முங்கிக் குளிக்கிறாள். ஒருவேளை பார்த்திருப்பானோ...."ம்".....!

ஹேமா சில சந்தனக் குச்சிகளும், பூக்களும் கொண்டுவந்து வீதியில் இருக்கும் புத்தர் பிரானுக்கு வைத்து விட்டு நிமிர்கையில் அங்கு அவன் கண்களை மூடி தியானித்துக் கொண்டு இருக்கிறான்.கும்பிட்டு முடிந்ததும் இருவரும் கதைத்து கொண்டு கடைக்கு வருகின்றனர். ஏன்  இராகவ் பகவானுக்கு ஒரு பூ கூடவா நீ கொண்டுவந்து வைக்கக் கூடாது. அதுதான் நீ நிறைய பூக்கள் கொண்டுவந்து வைத்து விட்டாயே. சும்மா சமாளிக்காதே ஆலயங்களுக்கு போகும் போதும், குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு போகும் போதும் பூக்களோ, இனிப்புக்களோ கொண்டு போக வேண்டும் அதுதான் முறை.குளத்தில் அவ்வளவு பூ பூத்திருக்கு இருந்தாலும் உனக்கு கஞ்சத்தனம். நான் வெள்ளவத்தை கோயிலுக்கோ அல்லது கொட்டகேன சிவன் கோயிலுக்கு போகும் போது கூட  நிறைய பூக்கள் வாங்கிக் கொண்டு போவன்.

அது கிடக்கட்டும், நீ பிறகு சுமணாவை பார்க்க போகவில்லையா. எனக்கு அவள் கிளினிக் எங்க என்று தெரியாது. அதோ அந்த மலையில் இருக்கிறது. ஏறிப்போனால் நடந்தே போயிடலாம்.காரில் கொஞ்சம் சுற்று.இப்ப கடை யாவாரத்தை பார்த்திட்டு மாலையில் உன்னை நான் வானில் அழைத்து போகிறேன்.அப்படியே அருகில் ஒரு பழமை வாய்ந்த சிவன் கோவிலும் இருக்கு போயிட்டு வரலாம்....!

சோதனை தொடரும்.....!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தாள் என்ன இருக்கிற நிக்கிற நடக்கிற நேரம் எல்லாம் கதை எழுதிறாரா. ???? ஒரு மாறுபட்ட கோணத்தில் கதை நகர்கிறது. காத்திருக்கிறோம் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.....!

அன்று மாலை இருவரும் வானில் சுமணாவின் கிளினிக்குக்கு சென்றார்கள்.சுமார் 50 வருடங்களுக்கு முன் அந்த ஆஸ்பத்திரி நல்ல செழிப்பாக இருந்திருக்க வேண்டும்.அதை அந்த கட்டிடத்தின் கட்டுமானங்களும், சுற்றியுள்ள பென்னம்பெரிய இறப்பர் மரங்களும், கோப்பி,கறுவா  செடிகள் தோட்டங்களுமே சொல்கின்றன.இன்று அந்த கட்டிடத்தில் அரைவாசி இடம் பாவனையற்று பாவிக்க முடியாத நிலையில் இருந்தது.சில அறைகளில் மட்டும் பிள்ளைபெற வந்தவர்களும் தூர இடங்களில் இருந்து வந்தவர்களும் தங்கியிருந்தார்கள்.நாட்டு வைத்தியம் செய்யும் சுமணாவின் தாயாரும் அவருக்கு உதவியாய் இரண்டு பேரும் ஏதோதோ பச்சிலைகள், மூலிகைகள் அரைத்துக் கொண்டும், மருந்துகள் காய்ச்சிக்கொண்டும் இருக்கின்றனர். சுமணா மட்டும் m .b .b .s படித்து வைத்தியராய் இருக்கிறாள்.அத்துடன் அவளுக்கு நாட்டு வைத்தியமும் அத்துப்படி.

சிறிது நேரத்தில் சுமணா ஸ்கூட்டரில் அங்கு வருகிறாள்.இவர்களை தாயாருக்கு அறிமுகப்படுத்தி விட்டு ஹேமாவை உள்ளே அழைத்து போகிறாள்.சில பரிசோதனைகள் செய்து விட்டு எல்லாம் நார்மலாய் இருக்கு என்று சொல்லி இருவரும் வெளியே வருகின்றனர். அப்போது அங்கு ஒரு ஜீப் நிலத்தை தேய்த்தபடி வேகமாய் வந்து நிற்கிறது.அதில் ஓட்டுநர் உள்ளே இருக்க பக்கத்தில் இருந்தவர் இறங்கி வருகிறார்.பணியனும் சாரமும் அணிந்திருக்கிறார்.ஒரு மணிபர்ஸ் வைத்த அகலமான பெல்ட்டும் அதில் சங்கிலியில் தொங்கியபடி திறப்புகள்,கத்தி என்று இருக்கின்றன.காலில் தடிமனான தோல் செருப்பு, அவர் நேரே சுமணாவிடம் போய் தர்க்கம் செய்து ,தாயாரையும் கண்டபடி ஏசிப்போட்டு கோபத்துடன் இவர்களையும் முறைத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறார்.சற்று நேரத்தில் சுமணாவும் அழுத முகத்தை துடைத்து கொண்டு இவர்களை வழியனுப்ப வருகிறாள்.

இராகவன்: என்ன சுமணா ஏதாவது பிரச்சனையா, இவன் ஒரு ரவுடியாச்சே  என்று கேட்க.... சுமணாவும் ஓம் இராகவன்,முன்பு அப்பா இந்த கிளினிக்குக்கு வேண்டி இவனிடம் பணம் கடன் பட்டிருந்தார். இன்னும் குடுக்கவில்லை.இடையில் அப்பாவும் காலமாகி விட்டார்.அது இப்ப ஐந்து லட்சம் வரை வளர்ந்து நிக்குது. நான் இதை பூட்டிபோட்டு கொழும்பில் போய் வேலை செய்யலாம்.ஆனால் இங்குள்ள சனங்களுக்காக பார்க்கிறன்.மேலும் இது தலைமுறை தலைமுறையாய் நடந்துவாற ஆஸ்பத்திரி.நாங்கள் காலாகாலமாய் செய்துவரும் சித்த வைத்தியமும் இல்லாமல் போயிடும். அவருக்கு இந்த இடத்து மேல ஒரு கண். எப்படியாவது வாங்கி போட வேணும் என்று துடிக்கிறார். ஹேமாவும் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர்.

அது ஒரு சோழர் காலத்து கோவில்.கோபுரம் இல்லை.வெளியில் இருந்து பார்த்தால் அங்கு ஒரு கோயில் இருப்பதே தெரியாது. சிறிது தூரத்தில் சல சல வென்று ஒரு சின்ன அருவி விழுந்து சிற்றாறாக ஓடிக்கொண்டிருக்கு.உள்ளே விசாலமான பெரிய மண்டபம். கருவறையில் சுயம்பு லிங்கம். தரையில் இருந்து ஒரு முழ உயரமே இருக்கும். அதன்மேல் எப்போதும் நீர் சொட்டு சொட்டாய் விழுந்து கொண்டிருக்கு. மேலிருந்து சங்கிலியில் தொங்கிய தூண்டாமணி விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருக்கு.கருங்கல் தூண்கள் ஒவ்வொன்றிலும் அழகிய பதுமைகள், சிற்பங்கள். நீளமான பிரகாரத்தில் சமயக்குரவர் நால்வருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் அழகாய் வேட்டி உடுத்தி விபூதி சந்தனத்துடன் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். மிக அமைதியான இடம்.ஹேமா கூடையில் எடுத்து வந்த பூக்களை குருக்களிடம் குடுத்து அர்ச்சனை செய்து விட்டு நாயன்மார்களுக்கும் புஷ்பம் வைத்துக் கொண்டு வருகிறாள். இராகவன் அந்த வயதான குருக்களுடன் கதைத்து கொண்டு நிக்கிறான். ஒரு கட்டத்தில் மலர்கள் காணாமல் கையை பிசைந்து கொண்டு இராகவனை பார்க்க அவன் இன்னும் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறான்.

நல்ல தரிசனம்தான்.ஆனால் இவன் வேணுமென்றுதான் தன்னை இந்த கோயிலுக்கு கூட்டி வந்திருக்கிறான்..... என்ன ஹேமா ஏதாவது பிரச்சினையா. ஓம் பூக்கள் பற்றாது அதுதான் என்று இழுக்க,  சரி சரி கவலைப்படாதே என்று சொல்லி அவள் வைத்த மலர்களை எடுத்து இதழ் இதழாக பிரித்து எல்லா நாயன்மாருக்கும் வைத்துவிட்டு மிகுதியை அவள் கைகளில் தருகிறான். அட...இந்த ஐடியா எனக்கு வரவில்லையே என்று தன் தலையில் தானே குட்டிக் கொள்கிறாள்......! 

சோதனை தொடரும்.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன சுவி  தூவானமாய் தொடங்கின மழை கொட்டோ கொட்டெண்டு கொட்டுது. இந்த மழைக்கு குடை பிடிச்செல்லாம் சரிவராது. முழுசா நனைய வேண்டியதுதான். எழுதுங்கோ இன்னும் எதிர்பார்க்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kavallur Kanmani said:

என்ன சுவி  தூவானமாய் தொடங்கின மழை கொட்டோ கொட்டெண்டு கொட்டுது. இந்த மழைக்கு குடை பிடிச்செல்லாம் சரிவராது. முழுசா நனைய வேண்டியதுதான். எழுதுங்கோ இன்னும் எதிர்பார்க்கிறோம்

அதுதான் குறுநாவல் என்று எழுதியுள்ளேன். எப்படியும் இந்த வாரத்துல முடியும். உங்கள் அனைவரினதும் ஆதரவுக்கு நன்றி சகோதரி....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.........! ( 12 ).

சில நாட்களின் பின் ஒருநாள் காலை வேலைகளை முடித்து விட்டு விமல் இராகவனிடம் வருகின்றான். (அவன் இவர்களுடன் பழகி இப்ப கொஞ்சம் தமிழ் கதைக்கிறான்).மச்சான் நான் ஒரு மாதம் வேலைக்கு வாரது இல்ல.  ஏன் விமல் என்ன விஷயம். நான் நண்பர்களுடன் யாப்பணய போகுது.  ஏதாவது விசேஷமா..... இல்லடா மச்சான்,அந்த விபத்துக்கு பின் வேலை வீடு என்று மனசு சரியில்ல. நண்பன் சரத், குணவர்தன, காதர் எல்லாரும் கூப்பிடுறாங்கள். அதுதான்.... ஓம் ஓம் நீ சொல்லுறதும் சரிதான்.இரு வாறன் என்று உள்ளே போன இராகவன் வந்து அவனிடம் நிறைய பணம் எடுத்து வந்து குடுத்து விட்டு, தேவையென்றால் போன்செய் அனுப்பி வைக்கிறன்.... இதுவே அதிகம்டா, என்னிடமும் இருக்கு.....  சுகமாய் போய்வா. விமலும் ஹேமாவிடம் சென்று அவளிடமும் சொல்லிவிட்டு செல்கிறான். 

வானொலியில் "லஷ்சனை பலன்ன ஓயாகே மல்கின" சன்னமான ஒலியில் போய்கொண்டிருக்கு. ஹேமா கல்லாவில் இருக்கிறாள். இராகவன் வானில் வெளியே போகிறான்.

ஒரு ஜீப் வந்து கடை முன் நிக்கிறது.அதில் இருந்து நாலுபேர் வந்து முன் வாங்கில் அமர்கின்றனர்.ஒருவர் வந்து நாலு டீ  க்கு ஓடர் பண்ணி விட்டு நாலு மாலு பணிஸ் வாங்கிக் கொண்டு போய் அமருகின்றார். அவர்களுள் மெதுவாய் கதைத்தவர்கள் வர வர சத்தமாய் காத்திக் கொண்டு கதைக்கின்றனர்.அப்போதுதான் அவர்களை நன்றாகப் பார்க்கிறாள். இருவர் அன்று சுமணாவின் கிளினிக்கில் வந்து சண்டை போட்டவர்கள்.இப்பவும் அங்கு சென்று சண்டை போட்டு விட்டுத்தான் வருகிறார்கள் போல .... இந்த மாதம் காசு தரவில்லை என்றால் ஆட்களையும் துரத்திவிட்டு கிளினிக்கையும் அடித்து நொறுக்குவதாக சிங்களத்தில் பேசிக் கொள்கிறார்கள்.எதிர் பாராவிதமாய் சுமணாவும் ஸ்கூட்டரில் அங்கு வருகிறாள். அவள் மிகவும் பணிவாக மன்றாடிக் கதைக்க அதை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை.சுமணா அழுவாரைப்போல் அங்கிருக்க அவர்கள் கடைக்கு  பணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

ஹேமா சுமணாவின் அருகில் சென்று அமர்ந்து கைகளைப் பற்றி வருடிக் கொண்டே ஆறுதல் கூறுகின்றாள்.அப்போது சுமணா மடை திறந்த வெள்ளம்போல் குழறி அழுது கொண்டு ஹேமாவின் தோளில் சாய்கிறாள்.அவளும் இவளின் தலையை வருடி முதுகை தடவி ஆறுதல் படுத்த அவள் ஆசுவாசமடைந்து சிறிது நேரம் விக்கி விக்கி அழுது இயல்பு நிலைக்கு வருகின்றாள்.

ஹேமா: நீ கவலைப்படாதே சுமணா. நான் என்னால் முடிந்தளவு உனக்கு உதவி செய்கிறேன்.

சுமணா: உன் நல்ல மனசு எனக்கு புரிகின்றது ஹேமா.ஆனால் இது சிறு தொகையல்லவே.இவ்வளவு பணத்துக்கு நான் எங்கு போவது.( இந்த கதை நடக்கும் காலம் ஒரு அரச உத்தியோகத்தரின் சம்பளம் இரண்டாயிரத்துக்குள்தான் இருக்கும்).காணியில் ஒரு பக்கமாய் விக்கலாம் என்றாலும் உடனே சாத்தியமில்லை.அவர் முழுவதையும் தனக்கு அப்படியே தரட்டாம். மிகுதி கொஞ்சக் காசு தான் தருகிறாராம். அவர் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர் அதுதான் பயமாய் இருக்கு.

ஹேமா: சரி சரி கணக்க யோசிக்காதே. குழம்பிய மனதுடன் ஒரு முடிவும் சரியாய் எடுக்க முடியாது. நான் திக்காய் ஒரு டீ  போட்டு கொண்டு வாறன் நீ அமைதியாய் இரு என்று சொல்லி எழுந்து சென்று பால் தேத்தண்ணி போட்டு எடுத்து வந்து அவளருகே வைத்து விட்டு உள்ளே போகிறாள்.சுமணாவும் அதில் அரைவாசி குடித்து விட்டு தலை குப்புற கவிழ்ந்து படுத்திருக்கிறாள். ஹேமா வந்து....!

சுமணா...ஏய் சுமணா எழுந்திரு, எழுந்தவள் என்ன என்று ஹேமாவை பார்க்க, ஹேமாவின் கையில் ஒரு தடிப்பான கவரில் கடிதம் ஒன்று இருக்கு. சுமணா கவனமாக கேள். இந்த கவரில் இருக்கும் விலாசத்துக்கு நேரே போ.கொழும்பு ஹோல்பேசுக்கருகில் பெரிய ஹோட்டலுடன்  ஷோரூம் இருக்கு. அங்கு போய் வந்தனா என்று கேட்டு அவளிடம் இந்தக் கடிதத்தைக் குடு.மேலும் நான் இதை தந்ததை மறந்துவிடு.நான் இங்கிருப்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம்.உள்ளே போய் முகத்தை கழுவிவிட்டு செல் என்கிறாள்.சுமணா ஒரு நிமிடம் திகைத்து ஹேமா இது என்ன என்று கேட்கும் போது அவள் அங்கில்லை.......!

சோதனை தொடரும்.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.....! ( 13 ).

  அந்த சிறிய சொகுசு விமானம் அதிகாலை 4: 00 மணியளவில் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.அதில் இருந்து இறங்கியவர்களுடன் விமலும் அவனது நண்பர்கள் மூவரும் இறங்கினார்கள்.அவர்கள் எல்லோரும் பெரிய பிரமுகர், அதிகாரிகளின் பிள்ளைகள். விமல் மட்டும்தான் வசதி குறைந்தவன்.இருந்த போதிலும் அவர்களின் பால்யகாலத்தில் இருந்து வளர்ந்து வரும் நட்பில் எவ்வித ஏற்றத்தாழ்வுமில்லை. அதனால் அவர்கள் எங்கு சென்றாலும் விமலையும் கூடவே அழைத்து செல்வார்கள். யாழ்ப்பாணத்துக்கு அவர்களை அழைத்து செல்ல ஹோட்டலில் இருந்து ஒரு சொகுசு வான் வந்து இருந்தது. அதன் முகப்பிலும் பக்கவாட்டிலும் "சினேகா இன்" என்னும் பெயர் மூன்று நட்ஷத்திரங்களுடன் பொன் எழுத்துக்களில் பிரகாசித்தது. அதன் சாரதி அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களை யாழ்ப்பாணம் டவுனுக்கு சிறிது தூரத்தில் கடற்கரைக்கு அருகாக இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். நால்வரும் தங்கள் அறைகளில் தங்கி சிறிது ஓய்வெடுத்து விட்டு குளித்து ஸ்மார்ட்டாக உடுத்திக் கொண்டு கீழே டைனிங் ஹாலுக்கு வந்தார்கள். அலங்கார விளக்குகளும், ஓரிரு ஓவியங்களும் அந்த இடத்தின் ஆடம்பரத்தை பறைசாற்றின. நல்ல நறுமணமும் மென்மையான இசையும் அங்கு நிரம்பியிருந்தன.மேசையில் ப்ரெட், ஜாம், பட்டர்ரோடு பிளாஸ்கில் கோப்பி,தேநீர்மற்றும் பழங்கள் என இருக்கின்றன.அவர்கள் கதைத்து கொண்டு தங்களின் காலை சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள். 

அப்போது அதிகமான ஒப்பனைகளுடன் கவர்ச்சியான ஆடைகள் அணிந்து மூன்று இளம் பெண்கள் வந்து அவர்களுடன் கலந்து கொள்கிறார்கள். அந்த பெண்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உள்ளே மானேஜர் சசிதரன் இன்ரர்போனில் மேடம் ஒரு சின்ன பிரச்சினை....

குரல்: என்ன சசி சொல்லுங்கோ....

சசி:மேடம், இங்கு விருந்தினர்கள் வந்து விட்டார்கள். எமது பெண்கள் நால்வரில் மூவர்தான் வந்திருக்கினம்.ஒருவருக்கு உடல் நலமில்லை. அதுதான்.....

குரல்: வேறு இடங்களில் முயற்சி பண்ணி பார்த்தாயா....

சசி: யெஸ் மேடம், கிடைக்கவில்லை.....

குரல்: சரி, பிரச்சினையில்லை... நீ அந்த மூவரையும் அவரவர்களுடைய பார்ட்னர்களுடன் கார்களில் அனுப்பி வை.ஒருவரிடம் இன்னும் பத்து நிமிடத்தில் அவரின் பார்ட்னர் வருவார் என்று சொல்லு.  சரி மேடம்.

மேனேஜரும் அப்படியே மூவரை கார்களில் அனுப்பிவிட்டு நின்ற விமலிடம் பத்து நிமிடத்தில் உங்கள் பார்ட்னர் வந்திடுவார் என்று சொல்ல அவனும்  வெளியே வந்து  பாக்கட்டில் இருந்த சிகரெட் பக்கட்டை எடுத்து மனேஜரிடமும் நீட்டி தானும் ஒன்றை எடுக்க , பின்னாலிருந்து எனக்கும் ஒரு சிகரெட் கிடைக்குமா....இருவரும் திரும்பிப் பார்த்து மலைத்து நிக்கின்றனர்.

மிஸ்ட்டர் விமல்....ஐயாம் ஸ்னேகா, இன்று உங்களின் பார்ட்னர் நான்தான் என்று உதட்டை நெளித்து  ஒரு கண்ணை சுருக்கி புன்முறுவலுடன் கூறினாள். விமல் வியப்புடனும் சிறிது தடுமாற்றத்துடனும் பார்க்க மானேஜர் சசிதரனுக்கு நம்பவே கஸ்டமாய் இருக்கு.அவர் வேலைக்கு சேர்ந்த இவ்வளவு நாட்களில் அவளை இப்படி பார்த்ததே கிடையாது. இந்த "சினேகா இன்" னின் முதலாளி அவள்.ஒருநாளும் இருபோன்ற ஆடையில் அவளை பார்த்ததேயில்லை. வெளிர் மஞ்சள் நிற ப்ளவுஸ்  கீழே அதே நிற தொடை வரையிலான டைட்ஸ் ஸ்கேர்ட், இரண்டையும் மெல்லிய லேஸ் நெட் துணி இணைத்திருக்கு. அதே நெட் துணி தொப்பிளின் கீழிருந்து சுற்றிவந்து இடது பக்க இடையில் முடிகிறது. அவள் நடக்கும்போது இடதுபக்க காலும் ,மடிப்பில்லாத  சின்ன இடையில் தொப்புளுடன் சிறிது மேடிட்ட வயிறும் அழகாய் அசைகின்றன. அதற்கேற்ற நிக்கல் ஆபரணங்கள் கொஞ்சமாய்  போட்டிருக்கிறாள்.முதுகு முழுவதுமாய் தெரிய பின்னழகு பவுர்ணமியாய் பரிமளிக்கிறது. முடி கடற்காற்றில் அலைய..... விமல் நான் உங்களிடம் சிகரெட் கேட்டேன் நீங்கள் இன்னும் தரவில்லை. .... ஓ...சாரி ப்ளீஸ் என்று தன் கையில் இருந்த சிகரட்டை அவளிடம் தந்து விட்டு தானும் ஒன்றை எடுத்து கொண்டான்.ஒரே லைட்டரின் தீயில் மூவரும் பற்ற வைத்து கொண்டனர்.

நீங்கள் மிகவும் அழகாய் இருக்கிறீர்கள் அதுவும் இந்த ஆடையில் அவ்சம் என்று விமல் சொல்ல, சசி நாசுக்காக அவ்விடத்தை விட்டு அப்பால் செல்கிறார். இருவரும் அவளின் சிகப்பு நிற வோல்க்ஸ்வேகன்  காரில் ஏற, அந்த காரும் சீறிக் கொண்டு கடற்கரை சாலையில் பறக்கிறது.....!

சோதனை தொடரும்.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

29 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னும் எத்தனை பாகம் சார்?

இந்த வாரத்தில் முடியும் சார் .....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.........! ( 14 ).

     சுமணாவுக்கு அந்த ஷோரூமை கண்டு பிடிப்பதில் சிரமமேற்படவில்லை.அதன் ஆடம்பரத்தை பார்த்து ஒரு நிமிடம் திகைத்துதான் போனாள் . ஒரு அழகான பெண் வந்து யெஸ் ....உங்களுக்கு என்ன வேண்டும் என வினவ இங்கு நான் வந்தனாவை பார்க்க வந்தேன் என்று சொல்கிறாள். ஓம் நான்தான் வந்தனா, நீங்கள் யார் என்று சொல்லுங்கள். சுமணா ஒன்றும் பேசாமல் அந்தக் கவரை கொடுக்கிறாள். வந்தனாவும் அதனுள் இருந்த கடிதத்தை எடுத்து படித்து கொண்டே உங்களுக்கு ஹேமாவை தெரியுமா, எங்கிருக்கிறாள் ,நலமாக இருக்கிறாளா எனக் கேட்க.... மன்னிக்கவும் அதைக் கூற எனக்கு அனுமதி இல்லை, அவர் என் கிளையண்ட்...நான் டாக்டர் சுமணா. மாற்றினிற்ரி ஹோம் வைத்திருக்கிறேன்.என்று சுமணா சொல்கிறாள். கடிதத்தில்...., 

அன்பு தோழி வந்தனாவுக்கு.....!

நான் நலம். அதுபோல் நீயும் நலமாய் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.அங்கு யாவரும் நலமா....! மேலும் இந்த கவரில் இருக்கும் நீல வைரத்துக்கு, அதன் பெறுமதியை இந்தப் பெண் சுமணாவிடம் கொடுத்து விடவும்.தற்சமயம் ஐந்து லட்சம் பணமாகவும், மிகுதியை அவளிடம் செக்காக கூட நீ கொடுக்கலாம்......!

என்றும் உன் அன்புத் தோழி 

ஹேமா....!

அதில் இருந்த நீல வைரத்தை எடுத்து பார்த்தாள், அது நீல நிற வெல்வெட் துணியில் அழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து எடை போட்டு பரிசீலித்தவள் அது மிகவும் பெறுமதி மிக்க "ப்ளூ டைமண்ட் " சுமாராகவே இருபத்தைந்து லட்ஷத்துக்கு மேல் போகும். உள்ளே சென்று யாரிடமோ போனில் கதைத்து விட்டு வந்து சுமணாவை உள்ளே அழைத்து அவளது அடையாள அட்டை எல்லாம் சரிபார்த்து விட்டு  ஒரு சிறிய பையில் ஐந்து லட்ஷம் ரூபாயும் மிகுதிக்கு காசோலையும் வைத்து சுமணாவிடம் தருகிறாள்.பின் அவளுக்கு குளிர்பானமும் குடுத்து கவனமாய் போகும்படி சொல்லி அனுப்புகிறாள். சுமணாவும் வெளியே வந்து வங்கியில் காசோலையை செலுத்திவிட்டு நேராக ஹேமாவிடம் வந்து நடந்ததை கூறுகிறாள். ஹேமா உனக்கு மிகவும் நன்றி. மிகுதிப்  பணத்தை செக் மாறியதும் எடுத்து உன்னிடம் தருகிறேன் என்று சொல்ல ஹேமா மறுத்து, இந்த வைரம் திருமணமான அன்று மாமி எனக்கு பரிசளித்தது.குடும்ப சொத்தாக வைத்திருந்தேன். அது எப்படியும் மாமியின் கைக்கு போய்விடும். நீ மிகுதி பணத்தில் உனது கிளினிக்கை புதுப்பித்து இந்த மலைக்கிராம மக்களுக்கு சேவை செய் என்கிறாள்.மேற்கொண்டு என்னிடம் எதுவும் கேட்காதே.எல்லாவற்றையும் மறந்துவிடு.யாருக்கும் சொல்ல வேண்டாம்.....! 

இரு மாதங்களாகி விட்டன. விமல் இன்னும் வேலைக்கு வரவில்லை.போனிலும் சரிவர கதைக்க வில்லை.நழுவுகிறான்.ஹேமாவேறு நிறைமாத கர்பிணியாய் இருக்கிறாள். அன்று அதிகாலையில் அவளுக்கு பிரசவ வலி எடுக்க உடனே சுமணாவுக்கு போனில் தகவல் சொல்லிவிட்டு ஹேமாவை வானில் கிளினிக்குக்கு கொண்டுபோய் விடுகிறான்.அங்கு தயாராய் இருந்த சுமணாவும் உடனே அவளை ஸ்டெர்சரில் அறைக்கு கூட்டிப் போக அங்கு அவளுக்கு சுகப்பிரசவமாகின்றது.அழகிய ஆண்குழந்தை.தாயும் பிள்ளையும் நலம் என்று சுமணா சொல்ல இராகவனுக்கு பெரும் நிம்மதி. உள்ளே போனவன் ஹேமாவின் தலையை மெல்ல வருடிக் கொடுக்கிறான்.குழந்தையை வாங்கி நெற்றியில் முத்தமிட்டு, பின்பு அவனும் சுமணாவும் அவள் சாய்ந்திருக்க வசதியாக கட்டிலை சரி செய்துவிட்டு பிள்ளையை அவளிடம் குடுக்க அது பால் குடிக்க சுமணா உதவி செய்கிறாள்.ஹேமாவிடம் தாய்மையின் பொலிவையும் பிள்ளை பொச்சடித்து பால் குடிப்பதையும் பார்த்தவன் ஒரு நெகிழ்வான உணர்வுடன் வெளியே வருகிறான். ஒரு பீடியை பற்ற வைத்து கொண்டு சுமணாவிடம் அவளை கவனமாய் பார்த்துக்கொள்.வேலைகள் இருக்கு போயிட்டு கெதியாய் வருகிறேன் என்று கூறி விட்டு போகிறான்.

சுமணா நான் எப்போது போகலாம்.இராகவ் பாவம் தனியாக கஷ்டப்படுவான்.விமலும் இன்னும் வரவில்லை.....அடிப்பாவி...! இப்பதான் பிள்ளை பெற்றிருக்கிறாய்.ஒரு ஆறு நாளைக்கு அப்புறம் நீ போகலாம். இப்ப இது உன்னுடைய கிளினிக் ஹேமா.அன்று மட்டும் நீ உதவி செய்யவில்லை என்றால் எல்லாமே மாறி இருக்கும். அப்போதுதான் ஹேமா கவனிக்கிறாள்.அறைகள் எல்லாம் பெயின்ற் அடித்து சுத்தமாயும் அழகாகவும் இருக்கு. நீ அவரது கடனை செலுத்தி விட்டாயா.... ஓம் ஹேமா.எனது வக்கீலுடன் சென்று எல்லாம் செட்டில் பண்ணி பாத்திரங்களையும் வாங்கி வந்து விட்டேன்.அவருக்கு ஏமாற்றம்தான். தான் நடந்து கொண்டதற்கு வருத்தமும் தெரிவித்தார்.......!

சோதனை தொடரும்........!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்......! ( 15 ).

ஐந்தாம் நாளே ஹேமாவும் பிள்ளையும் கடைக்கு வந்து விட்டனர்.சுமணாவின் தாயார் அவளிடம் வெந்நீரில் குளிப்பதில் இருந்து ,வயிற்றை துணியால் இறுக்கி கட்டுவது,பிள்ளையை எண்ணை  பூசி மெல்லிய வெய்யிலில் தடுக்கில் விடுவது வரை எல்லாம் ஐந்து நாட்களாக சொல்லி விட்டிருந்தார்.இராகவனும் விசேஷமாய் புதுப் படுக்கை தொட்டில் எல்லாம் வாங்கிப் போட்டிருந்தான்.சுமணாவும் அவளுக்கு பகலில் உதவி செய்ய சில நாட்களுக்கு ஒரு பெண்ணை அனுப்பியிருந்தாள். அன்று காலை ஒரு விண்ணப்பத்துடன் வந்த சுமணா ஹேமாவை கேட்டு நிரப்புகிறாள்.பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்க அவளும் கல்லாவில் இருந்த இராகவனிடம் நீயே ஒரு நல்ல பெயராய் சொல்லு என்கிறாள்.அவன் உடனே ரஜினி என்று சொல்ல அவள் யோசித்து விட்டு வேண்டாம் பெண்களுக்கும் அந்த பெயர் இருக்கு, அடிக்கிறமாதிரி கம்பீரமான பெயராய் சொல்லு, அப்ப ரகுவரன் என்றுதான் வைக்க வேண்டும். அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவள் "அட இதுவும் நல்லா இருக்கே" இரகுவரன்...இராகவன்/ இராகவன்... இரகுவரன். அதையே வைக்கலாம், இரகுவரன் என்று சொன்னாள். இராகவனும் இந்த பொம்பிளைகளுக்கு ஹீரோவை விட வில்லனைதான் பிடிக்கும்போல என்று அலுத்துக் கொண்டான்.இருவரும் சிரித்து கொண்டனர்....!

யாழ்ப்பாணத்தில் விமலும் நண்பர்களும் நன்றாக உல்லாசம் அனுபவித்தார்கள்.ஒருநாள் எல்லோருமாய் நயினாதீவு சென்று வந்தார்கள். பத்து நாட்கள் போனதே தெரியவில்லை.விமலுக்கு லீவு இருப்பதால் அவன் ஆறுதலாய் வரட்டும் என்று மூவரும் கிளம்புகிறார்கள்.அவர்களை சினேகாதான் வானில் பலாலிக்கு அழைத்து செல்கிறாள்.பின்பு இருவரும் கீரிமலைக்கு சென்று கடலில் நீந்திக் குளிக்கிறார்கள்.கவனம் விமல் அலைகள் அடித்து கொண்டு போய் விடும். ஹோல்பேசுடன் பார்க்கும்பொழுது இங்கு அலைகள் குறைவுதான் ஸ்னேகா.கீழே கற்கள்தான் மிகவும் கூராய் இருக்கு. வெய்யிலில் அவனது உடல் தக தகவென்று மின்னுவதை அவள் ரசிக்கிறாள்.அவள் பச்சை ஜீன்சும் வெள்ளை பெனியனுடனும் குளித்ததால் கரையேறி வரும்பொழுது ஈரம் சொட்ட  சொட்ட சிலையொன்று அலுங்கி குலுங்கி அசைவது போல் இருந்தது. அவன் ரசித்த மாதிரி தெரியவில்லை.பின்பு அவனும் வெளியே வந்து ஏய் ஸ்னேகா இங்கு "ரொடி" கிடைக்குமா.கிடைக்கும். வா போய் பார்ப்போம்.பக்கத்து கிராமத்துக்கு போகின்றார்கள்.அங்கு ஒரு வீட்டில் காலையில் இறக்கிய கள்தான் கிடைத்தது. இருவரும் அதை வாங்கி குடித்து விட்டு, கடையில் வந்து பேருக்கு சாப்பிட்டு விட்டு ஹோட்டலுக்கு வருகின்றனர். இருவருக்கும் போதை ஏறி இருந்தது. அவனால் நடக்க முடியவில்லை.புசித்த தொடங்கி விட்டான். அவனை ஒருவாறு அவனது அறைக்கு கொண்டுபோய் போர்த்து விட்டவள் கூடவே அவனுடன் போர்வைக்குள் முடங்கி கொண்டாள். சிறிது நேரத்தில் விமல் ஈனஸ்வரமாய் மட்ட அவஷ்ய நேகே (எனக்கு வேண்டாம்).என்ற சத்தம் குறைந்து முனகளாக வெளிவர அங்கு ஒரு சுவாரஸ்யமான பாலியல் வல்லுறவு அரங்கேறுகிறது.

    தனது ஷோரூமுக்குள் வந்த தெய்வநாயகி நேராக தனது அறைக்குள் வந்து வந்தனாவை அழைத்து, நீ ஒரு டைமண்ட் வாங்கியதாய் சித்தார்த் சொன்னான்.எங்கே கொண்டுவா பார்ப்போம். அவள் கொண்டுவந்து கொடுத்ததும் இது அந்த வைரமாய் இருக்குமோ என்று நினைத்து ஹேமா இங்கு வந்திருந்தாளா என்று கேட்டாள். இல்லை மேடம்.ஒரு பெண்ணிடம் குடுத்தனுப்பினாள். அவளிடம்தான் போதிய பணமிருக்கே இதை விக்கும் அளவு என்ன தேவையாய் இருக்கும்.வந்தனா யார் கொண்டுவந்தது,எங்கு இருக்கிறார்கள் என்று தெரியுமா.....தெரியாது மேடம்.ஆனால் அந்தப்பெண் ஒரு டொக்டர். மார்டனிட்டி ஹோமை புதுப்பிக்க வேண்டும் என்று சொன்ன ஞாபகம். தெய்வநாயகியின் மனதுக்குள் ஒரு கேள்வி குடைந்தது. மார்டினிட்டி ஹோமுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்.போய் ஒரு வருடமாகுது.ஒருவேளை அப்படி இருக்குமோ...! சித்தார்த்துக்கு கலியாணம் செய்து வைத்த இரண்டாவது பெண்ணும் ஆறு மாதத்திலேயே அவனை இம்பொடன்ற் ஆண்மையற்றவன் என்று வைது விட்டு போய்விட்டாள்.அது அவனை நிலைகுலைய வைத்து விட்டது.இப்போது அவனும் முன்ன மாதிரியில்லை.யாவாரத்தை பொறுப்பாய் கவனித்து கொள்கிறான். இதை மிகவும் கவனமாய்த்தான் விசாரிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு சரி நீ போ நான் பின்பு அழைக்கிறேன் என்றாள்.

சோதனை தொடரும்.....!

Posted

கதையை அவசரமாக முடிக்க வேண்டும் என்று கெதிப்படுத்துவது போல இருக்கு. முதல் அத்தியாயங்களில் இருந்த நிதானமான வருணிப்புகள் ஒன்றையும் கடைசி இரண்டு அத்தியாயங்களில் காணவில்லை

மற்றது, கதை நடக்கும் காலத்தில் ரகுவரன் நடிக்க தொடங்கி இருக்க மாட்டார் என நினைக்கின்றேன்  (கதையின் காலம்  83 ஜூலை கலவரத்துக்கு முற்பட்ட காலம் என நம்புகின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நிழலி said:

கதையை அவசரமாக முடிக்க வேண்டும் என்று கெதிப்படுத்துவது போல இருக்கு. முதல் அத்தியாயங்களில் இருந்த நிதானமான வருணிப்புகள் ஒன்றையும் கடைசி இரண்டு அத்தியாயங்களில் காணவில்லை

மற்றது, கதை நடக்கும் காலத்தில் ரகுவரன் நடிக்க தொடங்கி இருக்க மாட்டார் என நினைக்கின்றேன்  (கதையின் காலம்  83 ஜூலை கலவரத்துக்கு முற்பட்ட காலம் என நம்புகின்றேன்)

உண்மைதான் நிழலி.ரகுவரனும்  ரஜனியும் பாட்ஷாவுக்கு (1994) பின்தான் .... இது ஒரு ப்ளோஅப்பில் எழுதியது.அதை கவனிக்கவில்லை. மேலும் இந்த கதையில் நான் அதிகம் வர்ணிப்புகள் செய்யவில்லை.பெண்களும் சுதந்திரமாக எழுதட்டும் என்று. நன்றாக கவனிக்கிறீங்கள் நன்றி நிழலி. இனி கவனத்தில் எடுத்து எழுதுகிறேன். கதையின் காலம் 80 க்கு முன். மேலும் இதில் நான் ஒன்றை சொல்ல வேண்டும் சினேகாவின் பாத்திரத்தை மட்டும் ஒரு தொடர்போல கொண்டு வந்திருக்கிறேன்.முதல் எழுதிய "வாந்தி"யில் அவள் தெருவோர விபச்சாரி. பின் தந்தையுமானவன் கதையில் நாகரீகமானவளாயும் call girl  டைப். இதில் அவள் ஒரு மில்லியனர். எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்....! tw_blush:

ரகுவரன் "ஒரு ஓடை நதியாகிறது" ஸ்ரீ தரின் படம் (1982) பேசப்படுபவராக வந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்.....! ( 16 ).

  இராகவனும் வேலை நேரம் போக மிச்ச நேரமெல்லாம் குழந்தையுடனேதான் பொழுதை கழிக்கிறான்.கடைக்கு இப்போ சனம் நிறைய வருவதால், கடைக்கு முன்னாலும் பெரிதாக்கி நாலு மேசைகள் போட்டிருந்தான்.ஒரு வேலையாளையும் வேலைக்கு வைத்திருந்தான்.இரவுகளில் பிள்ளையை மடியில் வைத்து கொண்டு டிரான்சிஸ்ட்டரில் ஹேமா போடும் தமிழ் பாடல்களை கேட்கிறான். ஹேமாவும் இப்பவெல்லாம் தனது இடத்திலிருக்கும் திரையை மூடுவதில்லை.எந்நேரத்திலும் குழந்தை எழும்பி அழும்.அவள் அசதியாய் தூங்கி இருப்பாள். இராகவன் எழுந்து சென்று தொட்டிலில் இருந்து பிள்ளையை எடுத்து அவளை எழுப்பி குடுத்து விட்டு வருவான்.அவள் அணிந்திருக்கும் சிங்கள பெண்களின் ஆடை அந்த நாலுமுழ துண்டும் அகலம் குறைந்த சட்டையும் ஹேமாவுக்கு வேலை செய்வதற்கு மட்டுமன்றி பிள்ளைக்கு பால் கொடுக்கவும் வசதியாய் இருக்கு. பல சமயங்களில் பால் குடுத்த படியே அவள் தூங்கி விடுவாள்.விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளையை அவன் சென்று தூக்கி வந்து தன்னுடன் வைத்து கொள்வான்.

இப்பொழுதெல்லாம் மாலை வேளைகளில் சிலமணி நேரமாவது விமலுடன் பொழுதைக் கழிப்பதை ஸ்னேகா வழமையாக்கிக் கொண்டாள். அப்பப்ப இரவிலும் அவனுக்கு கம்பெனி குடுக்கிறாள்.அவர்கள் ஒரு வர்த்தகர் /வாடிக்கையாளர் என்னும் உறவையும் தாண்டி அந்நியோன்னியமாய் நிறைய பேசிக் கொள்கிறார்கள்.இராகவனிடம் இருந்து வரும் போன் கோலை மட்டும் விமல் தவிர்க்கிறான்.ஒருநாள் இதை கவனித்து ஸ்னேகா கேட்ட போது எல்லாவற்றையும் சொல்லி விட்டான்.இராகவனுடன் வாழும் வாழ்க்கை முறை எதையும் மறைக்க வில்லை.அவள் சொன்னாள், அவருக்கு நீ கதைக்காததுதான் ஏமாற்றமாய் இருக்கும்.போன் வந்தால் எடுத்து பேசு. இல்லை ஸ்னேகா.அவன் மிகவும் நல்லவன். நான் நேரில் சென்று சொல்வதுபோல் வராது அதுதான் என்று சொல்ல, அவளுக்கும் அது சரியென்றே படுகிறது.

சினேகாவும் தன்னைப்பற்றி எல்லாம் கூறிக் கொண்டே வந்தாள். இங்கு இரண்டு ஹோட்டல் இருப்பதையும், கொழும்பிலும் ஒரு மசாஜ் செண்டருக்கு இடம் வாங்கி வைத்திருப்பதையும், அங்கு எல்லாம் தயாராய் இருந்தும் சில சட்ட பிரச்சினையால் அது தாமதமாகுவதாகவும், மேலும் இங்கிருக்கும் வெளிநாட்டு பெண்கள் கூட அங்கு வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள். இவர்கள் முறைப்படி மசாஜ் செய்யவும் கற்று கொண்டவர்கள் என்று கூறுகின்றாள். அந்த இடத்தை சரியாக கேட்ட விமல், நீங்கள் அதைப்பற்றி யோசிக்க வேண்டாம்.எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் மூலமாக பிரச்சனைகளை சரிபண்ணி லைசென்ஸ் எடுத்து தருகிறேன் என்கிறான். சரி விமல் அதைப்பற்றி பிறகு பேசுவோம். இப்பொழுது நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா. ம்.... என்ன சொல்லு. என்னை உனக்கு பிடித்திருக்கா. சிறிது யோசித்தவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு பெண் சுகம் என்னவென்று புரிய வைத்தவள் நீதான். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கு. ஆனால் எனது நண்பனை கலந்தாலோசிக்காமல் இப்ப ஒன்றும் சொல்ல முடியாது. அதனால் நீ குறை நினைக்க வேண்டாம்.மேலும் நான் வசதியானவன் இல்லை. நீயோ பெரிய பணக்காரி, இது சரிவருமா என்று நீதான் யோசிக்க வேண்டும். என்ன பணம் விமல், சில வருடங்களுக்கு முன் நானும் மிக மிக ஏழைதான்.ஏதோ  உன்னை பார்த்ததும் பழகியதும் கேட்கத் தோன்றியது. நீ உன் நண்பனுடன் கதைத்து விட்டு எனக்கு சொல்லு.இல்லையென்றாலும் பரவாயில்லை.டேக்  இட்  ஈஸி என்கிறாள். 

சோதனை தொடரும் ......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சான்றிதழ்......! (17 ).

தெரு முனையில் இருந்த புத்தருக்கு பூவும் சந்தன குச்சியும் வைத்து விட்டு கடைக்கு வருகிறாள் ஹேமா.வாசலில் நின்ற மோட்டார் சைக்கிளை பார்த்து விட்டு அட  விமல் வந்துடுதான் போல என்று உள்ளே போகிறாள். அங்கு இராகவன் பெரிதாய் சத்தம் போட்டுக் கொண்டு விமலை அடிக்கிறான்.விமல் சிறிதும் அவனை எதிர்த்து அடிக்காமல், இராகவ் பொட்டக் எண்ட மச்சான் மம கியனவா. (கொஞ்சம் பொறு மச்சான் நான் சொல்லுறன்) என்று சொல்ல அதை கேட்கும் நிலையில் இராகவன் இல்லை. உனக்கு விருப்பமில்லை என்றால் இது வேண்டாம் என்கிறான்.மூர்க்கமாய் அவனை அடிக்கிறான்.ஹேமா ஓடிவந்து தடுக்க அவள்மீதும் தவறி அடி விழுகிறது. உள்ளே ஓடியவள் அழுது கொண்டிருக்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு குறுக்கே வருகிறாள்.இராகவன் தென்னை மட்டையை ஓங்கிக் கொண்டு நிக்கிறான். ஹேமா விலகிப் போ அங்கால, இப்படி ஒரு ஆக்ரோஷத்தை அவள் இதுநாள் வரை அவனிடம் பார்த்ததில்லை. அவள் குழந்தையுடன் விமலுக்கு அருகில் கவசமாய் நிக்கிறாள். குழந்தை குழறுகிறது. சிறிது நேரம் பிள்ளையையும் அ வளையும் வெறித்து பார்த்தவன்  மட்டையை  அப்பால் எறிந்து விட்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டு குளத்தருகில் போய் இருக்கிறான்.அவனை சமாதானப்படுத்த போன விமலை ஹேமா தடுத்து கடைக்குள் கூட்டிக் கொண்டு போகிறாள். அங்கு அவன் தான் போனதில் இருந்து நடந்தது எல்லாவற்றையும் ஹேமாவிடம் சிங்களத்தில் சொல்லுகிறான். சரி நீ போய்விட்டு பின்னேரம் வா.நான் முடிந்தவரை அவனை சமாதானப் படுத்துறன் என்று சொல்ல விமலும் முகத்தை துடைத்து கொண்டு சைக்கிளை எடுத்து கொண்டு போகிறான்.

ஹேமா இராகவனை தேடிப்போக அவன் ஒரு பீடியை புகைத்துக்கொண்டு இருக்கிறான்.கோபம் சற்று தணிந்து இருக்கு. பிள்ளையுடன் அவனருகில் சென்று அமர்ந்தவள், அவன் கையை எடுத்து தனது கைக்குள் பொத்தி வைத்து கொண்டு சிறிது நேரம் மெளனமாய் இருக்கிறார்கள்.அவள் மடியில் இருந்த குழந்தை அவன் இடுப்பில் தன பிஞ்சு கால்களால் உதைய, கையில் இருந்த பீடியை எறிந்து விட்டு பிள்ளையை எடுத்து தனது மடியில் வைத்து கொள்கிறான். அது அவன் மார்பு முடிக்குள் விரல் விட்டு அளையுது.

ஹேமா மெதுவாய் பேச்சை ஆரம்பிக்கிறாள். இப்ப எதுக்காக இவ்வளவு கோபம். 

இராகவ்: அவன் என்னை ஏமாத்திப் போட்டான். அதுதான். அவன் என்ன கேட்டிருந்தாலும் குடுத்திருப்பன். ஆனால்.....

ஹேமா: ஆனால் என்ன இப்ப.... யாரும் யாரையும் ஏமாத்தவில்லை. விமல் மீது அவ்வளவு அன்பிருந்த படியால்தான் இவ்வளவு கோபம் உனக்கு வந்திருக்கு. அதை அவன் உணர்ந்த அளவுக்கு நீ உணரவில்லை. கோபம் கண்ணை மறைத்திருக்கு.

இராகவ்: இல்லை ஹேமா.நான் என் உலகமே அவன்தான் என்றிருந்தேன்.

ஹேமா: அவனும் உன்னை அப்படித்தானே நினைத்திருந்தான்.

இராகவ்: இல்லையே ....அவன் எவளோ ஒரு .......அவளிடம் சொல்ல முடியாமல் நிறுத்துகிறான்.

ஹேமா: நாங்கள் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன இராகவ்.எவ்வளவோ தத்துவங்கள் படித்த உனக்கு இது புரியாமலா இருக்கும்.

இராகவ்: நீ இவ்வளவு கதைக்கிறாயே...! இதோ உன் பிள்ளை இருக்கிறது. இந்த பத்து மாதமாய் பிள்ளையை பெற்றெடுத்து வளர்க்க எவ்வளவு கஷ்டப் படுகிறாய்.அதை நான் அருகில் இருந்து பார்க்கிறேன். அப்படியான பிள்ளையை இன்னொருத்தருக்கு தூக்கிக் குடுத்து விடுவியா.சும்மா சொல்லுறது சுலபம். (உடனே அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன. மறுபுறம் திரும்பி அதை மறைத்து கொள்கிறாள்). என்ன பேச்சு மூச்சை  காணவில்லை.

ஹேமா: நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. என்ன சொல்கிறாய் ஹேமா....! உனக்கு ஞாபகம் இருக்கா அன்று நான் பிள்ளை வேண்டாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன்.அப்பொழுது நீதான் அதைத் தடுத்தாய்.அதற்காக உனக்கு நன்றி. உனக்கு தெரியுமா, இவன் ஒரு பெரிய கோடிஸ்வரன். தெய்வநாயகி குடும்பத்தின் ஒரே வாரிசு.சில மாதங்களுக்கு முன்பே இவன் உண்டாகி இருப்பது தெரிந்திருந்தால் எனக்கு விவாகரத்தே நடந்திருக்காது.திருமணமான ஐந்து வருடங்களாக இல்லாத பிள்ளை, ஏதோ  ஒரு சந்தர்ப்பத்தில் ஜனித்ததும் பெற்றோர் நாங்கள் பிரிந்து விட்டோம். சரி பிள்ளை வேண்டாம் என்று நினைத்த போதும், அதையும் தாண்டி மாளிகையில் பிறக்காமல் மலையில் பிறந்து எங்கள் மடியில்  தவழுது. ஏதோ  ஒரு காரணத்துடன் தான் எல்லாம் நடக்குது.நாங்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே. புரிந்து கொள்வது கடினம்தான் ஆனால் அதுதான் யதார்த்தம். என்று தன் வாழ்வில் நடந்ததையெல்லாம் அவனிடம் சொல்லி, சித்தார்த் மறுமணம் செய்து கொண்டதாகவும்.ஆயினும் அவருக்கு இனியொரு குழந்தை கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதனால்தான் அந்த வம்சத்தின் வேரை அழிக்க நான் விரும்பவில்லை.

இராகவ்: சரி, இனி அவர்களுக்கு பிள்ளை பிறந்து விட்டால்.....!

ஹேமா:அப்படி ஒன்று நடந்தால் பிரச்சினை இல்லை.இவன் என் பிள்ளையாக இல்லை உன் பிள்ளையாக உன் நிழலில் வளருவான்.

 இராகவ்: எவ்வளவு ரணத்தை மனதில் வைத்து கொண்டு வாழ்ந்து வருகிறாய் ஹேமா.உன்னை நினைக்க பெருமையாய் இருக்கு.

ஹேமா: பலபிள்ளைகள் இருப்பவர்களுக்கு அவற்றின் அருமைகள் தெரிவதில்லை.ஒரு பிள்ளை இல்லை என்பவர்களை கேட்டு பார்த்தால் தெரியும் அதன் அருமை. அதுவும் சொத்து பத்து இருந்து விட்டாலோ சொல்லவே வேண்டாம். நீ விமலிடம் சண்டை போட வேண்டாம். அவன் மிக நல்லவன்.கல்யாணம் செய்து போட்டு வரவில்லை.உன்னிடம் கதைத்து விட்டு வருகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறான். விதி எங்கெங்கோ, யார் யாருக்கோ ஒரு முடிச்சை போட்டுக்கொண்டுதான் இருக்கு.அந்த பெண்ணை மணம் புரிவதால் அவன் வாழ்க்கை வளம் பெறும் என்றால் அதை எதுக்காக தடுக்க வேண்டும்.

இராகவ்: அதாவது இந்தப் பிள்ளையை நீ .... இல்லை நாங்கள் வளர்ப்பதுபோல் என்று சொல்கிறாய்.

ஹேமா: ம்....அப்படியும் சொல்லலாம். பொதுவாய் எதன்மீதும் அதிக ஆசை வைத்தால் துன்பத்தையே தரும். ஆசையே துன்பத்துக்கு காரணம்.

இராகவ்: தெரு மூக்கு புத்தர் சொன்னாரா.....அவள் சிரித்து கொண்டே எழுந்து போக அவனும் சாந்தமாக பிள்ளையுடன் பின்னால் போகிறான்....!

சோதனை தொடரும்....!

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெயிட்டிங்  உங்க செட்டிபிகேட்டுக்கு tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
    • நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
    • 1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும். 2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம். 3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே.  நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.