Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளாவை தலைகுனிய வைத்த நிகழ்வு!

Featured Replies

கேரளாவை தலைகுனிய வைத்த நிகழ்வு!

 

kerala2.png?resize=500%2C376

கேரளாவில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி வாலிபரை அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியா   முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் சிறந்த ஆட்சி நிலவுகிறது என்றும் கேரள மாநில முதல்வர் பல முற்போக்கான செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என்றும் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மாநிலமாக விளங்கியது கேரளா.

 
 
இந்த நிலையில் அம் மாநிலத்தை சேர்ந்த ஆதிவாசி வாலிபர் மது என்பவரை  அரிசி  திருடியமைக்காக சிலர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அம் மாநிலத்தை தலை குனிய வைத்துள்ளது. கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான மது என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர். ஆதிவாசி இனத்தை சேர்ந்த மது அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்தார். அடிக்கடி கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி செல்வார். நேற்று முன்தினம் இது போல கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் அரிசி வாங்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்றார்.
 
திருடியதாக தவறாக நினைத்ததால்?
 
மது அரிசி வாங்க சென்ற கடை வீதியில் அடிக்கடி அரிசி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளது.  இந்நிலையில், அரிசி திருடுபோன சம்பவத்தில் மதுவுக்கு தொடர்பு இருக்குமென்று கடைக்காரர்கள் சந்தேகப்பட்டனர். நேற்று முன்தினம் மது, அரிசி மூட்டையுடன் சென்றதை கண்டதும் மது, அரிசி திருடிச்செல்வதாக நினைத்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து, கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்ததுடன், அவர் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து கைகளையும் கட்டி காட்டுமிராண்டி தனமாக தாக்கினர்.
 
இதில் வலி தாங்க முடியாமல் துடித்த காட்சிகளை கொலை வெறி அடங்காத மனசாட்சி இல்லாத மக்கள் செல்ஃபி மற்றும் வீடியோக்களையும் எடுத்து வட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது.  சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த கொடூரமான காட்சிகள் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காட்சிகள் சமூக ஆர்வலர்கள், ஆதிவாசி நல ஆணைய உறுப்பினர்கள் பார்வைக்கும் சென்றன. உடனடியாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி அட்டப்பாடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிவாசி வாலிபர் மதுவை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். கட்டி வைத்து தாக்கப்பட்ட மது வாகனத்தில் ஏறியதும் போலீஸாரிடம், அனைவரும் என்னை கொடூரமாக அடித்து உதைத்தனர். திருடன் என்று கூறி என்னை தகாத வார்த்தைகள் திட்டினர். நான், எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்து, வாகனத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மதுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மது, போலீஸாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், மத்தாச்சன், மனு, அப்துல் ரகுமான், அப்துல் லத்தீப், அப்துல் கரீம், உம்மர் ஆகியோர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

kerala.png?resize=615%2C350
 
கேரள முதல்வர் கண்டனம்

இந்நிலையில், மது கொலை சம்பவம் தொடர்பாக இன்று 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதிவாசி வாலிபர் மது கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். நாகரீக சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமில்லை. இது கேரளாவிற்கு அவமானம். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

பொலிஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க திருச்சூர் சரக ஐ.ஜி. அஜித்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஐ.ஜி. அஜித்குமார் தலைமையிலான போலீஸார் அட்டப்பாடி சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். .

 
கொலையை கண்டித்துப் போராட்டம்
 
மதுவின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை பிரேத பரிசோதனை நடத்தக்கூடாது என்று மதுவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மதுவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில், வயிற்று பசிக்காக உணவுப் பண்டங்ளை திருடியவர்களை கொல்லப்படுகிறார்கள்; வசதியான ஆடம்பர வாழ்க்கைக்காக கோடிகணக்கில் கொள்ளையடிப்பவர்களை சர்வ சாதரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகிறார்களே அவர்களை கொல்லுவது யார்? என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வைரலாகி வருகின்றன.

 
மலையாள திரையுலகம் கண்டனம்

இச்சம்பவத்திற்கு மலையாளத் திரையுலக நடிகர் மம்மூடி தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,  கொல்லப்பட்ட மதுவை அதிவாசி என்று அழைக்காதீர்கள், அவர் என் இளைய சகோதரர். என்னை மன்னித்துவிடுங்கள் மது என உருக்கமான தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், மதுவின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக பாலக்காடு மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதேவேளை இக்  கொலை கும்பலைச் சேர்ந்த 2 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

28378042_994118830741112_768974503271858

http://globaltamilnews.net/2018/68233/

  • கருத்துக்கள உறவுகள்
அந்த கண்களில் தெரிவது அப்பாவித்தனம் மட்டுமல்ல,நான் ஒரு பிழையும் செய்யவில்லையே எனும் ஏக்கமும் ..
 
ஆயினும் இவரை மூன்று வேளையும் உண்டு பசி அறியாதவர்களே அடித்துக் கொன்றனர்

poor.jpg

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

திருடப்பட்டது உணவாக இருந்தால்... திருத்தப்பட வேண்டியது கேரளா மலையாளி  சமுதாயம் மட்டுமே!

பலமான கூட்டத்தின் முன் பலவீனமாக ஒரு மனவளம பாதிக்கப்ப்ட்ட மனிதரின் பாரிதாப நிலை மிக துயரமானது. இந்த சமபவம் கழுவ முடியாத  கறையாக வரலாற்றில் நிலைத்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லாமையைப் போதித்த புத்தனை....சிங்களத்துக்கு வித்துப் பெருமை கொண்டது...இந்திய தேசம்!

அந்தப் புத்தனின் கையில்....தானியங்கித் துப்பாக்கியைக் கொடுத்துப் பெருமை கொண்டது சிங்கள தேசம்!

எல்லா நாடுகளிலும்...இப்படியான சம்பவங்கள் ....எப்போதாவது நடப்பது எனினும்....இந்தியாவிலும்...பாகிஸ்தானிலும்...ஆப்கானிஸ்தானிலும்..இப்படியான சம்பவங்கள்...தினசரிச் சம்பவங்களாக உள்ளன!

நம்பூதிரிகளுடன் கலந்து.......தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்ட கேரளப்  பிரமுகர்களுக்கு...ஒரு தூய இந்தியனைக் கண்டால்....இளக்காரமாகத் தெரிந்ததில்...எந்த ஆச்சரியமும் இல்லை!

திருப்பதி வாவியில்.....மிதந்த பிணங்களை......நினைத்துப் பார்த்தால்...பல உண்மைகள் புரியம்!

எப்போதாவது நிகழ்ந்தால் தான்.......அது ஒரு கறை!

இதற்கான விசாரணை என்பது......வேட்டியை வெள்ளையாக்கிற ஒரு விளையாட்டு மட்டும் தான்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை மனிதன் அடித்து கொல்லுவது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

சட்டம் செய்ய வேண்டியதை சாதாரண பிரஜை செய்கிறான்.

சட்டம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

4 hours ago, சண்டமாருதன் said:

 

 

நான் இந்த காணொலியை பார்க்கவில்லை. வன்முறை, பயங்கரமான காணொலிகள் இணைக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் நல்லது என்பது எனது அபிப்பிராயம். எழுத்தில் கூறினாலே போதும் விளங்கிக்கொள்ளலாம். அதை விசுவலாக காண்பிக்கத்தேவையில்லை. உண்மையில் இப்படியான அகோரமான காட்சிகளை பார்ப்பது எமது மனதுக்கு ஆரோக்கியமானது இல்லை. இந்த காணொலியின் கப்சன் படத்தை பார்த்தால் மோசமான காணொலியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

Edited by கலைஞன்

5 minutes ago, கலைஞன் said:

 

நான் இந்த காணொலியை பார்க்கவில்லை. வன்முறை, பயங்கரமான காணொலிகள் இணைக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் நல்லது என்பது எனது அபிப்பிராயம். எழுத்தில் கூறினாலே போதும் விளங்கிக்கொள்ளலாம். அதை விசுவலாக காண்பிக்கத்தேவையில்லை. உண்மையில் இப்படியான அகோரமான காட்சிகளை பார்ப்பது எமது மனதுக்கு ஆரோக்கியமானது இல்லை. இந்த காணொலியின் கப்சன் படத்தை பார்த்தால் மோசமான காணொலியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்த காணோளியில் வன்முறையாக எதுவும் இல்லை. அந்த அப்பாவி தன் பையில் எதையும் எடுத்து செல்லவில்லை என்பதை காணோளி காட்டுகின்றது.

  • தொடங்கியவர்

`ஒரு பருக்கை சோறுகூட மது வயிற்றில் இல்லை!’ - உடற்கூறு ஆய்வறிக்கை தகவல்

 
 

கேரள மாநிலம் அட்டப்பாடியில் 27 வயது ஆதிவாசி இளைஞர் மது, கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார். மதுவின் உடற்கூறு ஆய்வறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறுகூட இல்லை என்று தெரிய வந்துள்ளது. சில காட்டுப்பழங்களும் வாழைப்பழத் துண்டு ஒன்றே ஒன்று மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது. பல நாள்கள் பட்டினியாகக் கிடந்துள்ளதால், அவரின் எலும்புகளும் தசைகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்துள்ளன. வியாழக்கிழமை மது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை திருச்சூர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. சனிக்கிழமை அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. 

கொலை செய்யப்பட்ட மது

 

இந்தியாவில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், சுமார் 3 மணி நேரம் உடற்கூறு ஆய்வு நடந்தது. அவரின் உடல் முழுவதும் காயம் இருந்துள்ளது. தலையிலும் பலத்த காயம் காணப்பட்டுள்ளது. மார்புக்கூடு இரண்டாக உடைந்துள்ளது. மதுவின் உள்ளுருப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பின், மேலும் சில உண்மைகள் தெரிய வரலாம். மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம், கேரள அரசிடம் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ரூ.200 மதிப்புள்ள அரிசி திருடியதற்காக மதுவை அந்தக் கும்பல் காட்டுக்குள் சென்று பிடித்தது. அப்போது, அவர் சமையல் செய்து கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த அரிசி உணவை சமைத்து மது உண்டிருந்தால்கூட அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறாவது எஞ்சியிருந்திருக்கும். கடைசி வரை காய்ந்த வயிற்றுடன் அவர் உயிரை விட்டதுதான் வேதனையிலும் வேதனை!

https://www.vikatan.com/news/india/117642-no-rice-in-madhus-stomach-says-report.html

  • கருத்துக்கள உறவுகள்

வேதனையிலும் வேதனை.    

  • தொடங்கியவர்

அரிசி திருடியதாக அடித்து கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மதுவின் வீட்டுக்கு சென்று முதல்வர் பினராயி விஜயன் ஆறுதல்

 

 
pinarayi%20visiting%20madhus%20home

மதுவின் குடும்பத்தாருடன் பேசும் முதல்வர் பினராயி விஜயன்   -  படம் உதவி: ட்விட்டர்

கேரள மாநிலத்தில், அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டபாடி அருகே முக்காலியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் மது. இவர் குறும்பர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த வாரம், மது அப்பகுதியில் உள்ள கடையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை திருடிவிட்டததாகக் கூறி ஒருகும்பல் அடித்து கொலை செய்தது.

மதுவின் கைகளைக் கட்டி, முகத்தில் ரத்த காயத்துடன் அவர் கண்ணீர் விட்டு அழுதவாறு இருந்தார். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவுடன் செல்பி எடுத்து இணையத்தில் பரப்பினர். அதன்பின் போலீசார் வந்து மதுவை அழைத்துச் செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பசிக்காக உணவு திருடிய மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை மனிதநேயமில்லாமல் அடித்துக் கொன்ற சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கல்வியறிவு 100சதவீதம் இருக்கும் கேரள மாநிலத்தவர் மனிதநேயம் இல்லாமல் நடந்து கொண்டதும், பழங்குடியின மக்களுக்கு மாநிலத்தில் இருக்கும் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து உயிரிழந்த பழங்குடியின இளைஞர் மதுவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

இந்நிலையில், அட்டபாடியில் இருக்கும் அந்த இளைஞனின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது மதுவின் தாய், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விரைவில் மதுவை கொன்ற குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார்.

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் அங்கிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:

மதுவை அடித்துக் கொலை செய்ததாக இதுவரை 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மதுவை கொலை செய்த அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும், தண்டனை பெற்றுத்தரப்படும் என்று அவரின் பெற்றோர், குடும்பத்தாரிடம் உறுதி அளித்தேன்.

மேலும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் என்ன வகையான திட்டங்கள் வகுக்கலாம் என்று ஆலோசிக்கப்படும். பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் சுகாதாரமான குடிநீர், போதுமான உணவு, வேலைவாய்ப்பு கிடைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். இதில் மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்டில் 200 நாட்களாவது பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் திட்டங்கள் தொடங்குவது குறித்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள், மதுபோதைக்கு அடிமையாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த பழக்கத்தில் இருந்து இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/india/article22908352.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.