Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலச் சுவடுகளில் .......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து வந்த  காலச் சுவடுகளில் திரும்பிப் பார்க்க விளைகிறேன்......

வாழ்க்கையின் வெற்றிடங்களினூடு பயணிக்கும் ஒவ்வொரு தறுவாயும் இந்த எண்ணம் வந்துபோகிறது

ஆனந்தங்கள், அருவருப்புகள், ஏமாற்றங்கள், இழப்புகள், ஆற்றமுடியாச் சோகங்கள் என்று எத்தனை பார்த்தாயிற்று?

பெருநதி, சிற்றோடையாகி, வற்றுப்போன வறட்டுப் பாலை நிலத்தில் நின்று இன்று திரும்பிப்பார்க்கிறேன்.

அன்னை மடியிலும் அரவணைப்பிலும் ஓடித்திரிந்த சிறுவயது நாட்கள்.....

பாசமறிய தந்தையுடனான எனது கசப்பான அனுபவங்கள்...

அநாதையாக மட்டக்களப்பில் எனது விடலைப்பருவம்...

கொழும்பில் அலைக்கழிந்த் நாட்கள்...

திருமணம், வெளிநாடென்று என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் காலவோட்டத்தில் பயணித்து விட்டேன்

எவரை இழந்தேன், எவரைச் சேர்த்தேன் என்று கூட நின்று பார்க்கவில்லை....

பலரிடம் பழகி, சிலரை மட்டுமே தொடர்ந்து...

சிலரை வெறுத்து, இன்னும் பலரால் வெறுக்கப்பட்டு....

எனக்கென்றோ இன்னும் எவருக்கென்றோ எதுவுமே செய்யாமல், அல்லது செய்யமுடியாமல்

வெற்றுக் கோப்பையாகி இன்று நின்று திரும்பிப் பார்க்கிறேன்...45 வயது!

மகிழ்ச்சிகள், கவலைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், இழப்புகள் என்று பல உணர்வுகள் கண்டு மனம் இன்று வெறுமையாக நிற்கிறது...

இதுவரை எதையுமே காவி வராத என்மனது இனியும் அதைத்தான் செய்யப்போகிறதென்பது எனக்குத் தெளிவாகவே தெரிகிறது.

அருமையாக வந்துபோன நட்புகள்....

நானறியா என்செய்கைகளால் என்னைவிட்டுப் பிரிந்தவர்கள்....

தெரிந்து தூரவே இருந்த சிலர்...

எல்லாவற்றையும் கடந்து என்மீது உண்மையான அக்கறையும் பாசமும் வைத்திருக்கும் ஓரிரு மனிதர்கள்..

அவர்களலேயே இன்று இழுத்துச் செல்லப்படும் எனது வாழ்வு.......

தேவையானதா அல்லது இல்லையா என்கிற புரியாத புதிரான எனது பிறப்பு...

வந்துவிட்டோம் அதற்காக வாழ்கின்றோம் என்று வாழ்ந்துவிட்ட எனது வாழ்க்கை...

"இப்படியிருந்தால் நன்றாகவிருக்கும்" என்று வாழ்வின் அடிப்படை சந்தோசங்களை எப்போதுமே ஏங்கிப் பார்த்த மனது......

அவையெல்லாவற்றையும் தாண்டி அதீத கதியில் ஒட்டிச் செல்லும் வயது.....

பார்க்கலாம் தரிப்பிடம் எங்கே வருகிறதென்பதை !

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

பார்க்கலாம் தரிப்பிடம் எங்கே வருகிறதென்பதை !

ரகு சராசரி மனிதனின் 

வாழ்வில் பலரும் வந்து போனாலும் கடைசி வரை கொண்டு போய் விடப்போவது மனைவி பிள்ளைகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 எக்கமனது  இடைவிடா ஆசையும் எதிர்பாரா நிகழ்வுகளும் கொண்டதே வாழ்வு. ஆனாலும் தரிப்பிடம் எல்லோருக்கும் ஒருநாள் வருவதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே நான்தொடங்கிய பல முயற்சிகள் தோல்விதான்.அதைவிட தோல்வி அடைய வைக்கப்பட்டேன். ஆயினும் கிடைத்தவற்ருள்  நிறைவாய் வாழுகிறோம். ஒருபோதும் தன்னிரக்கமோ கழிவிரக்கமோ கொண்டதில்லை. அவை புற்றுநோயை விடக் கொடியவை. அதைத்தான் நான் உங்களுக்கும் சொல்ல முடியும்.தரிப்பிடத்தை நினைக்க வேண்டாம்.அது வரும்போது வரட்டும்.நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சராசரி மனிதன்...எந்த நிலையிலிருந்து சிந்திக்கிறான் என்பதைப் பொறுத்தே....அவனது சிந்தனைகள் அமைகின்றன!

ஊரில் இருப்பவனிடம்..எவ்வாறாவது வெளி நாடு ஒன்றுக்குச் சென்று விட வேண்டும் என்னும் சிந்தனை மட்டுமே இருக்கும்!

வெளி நாட்டுக்குப் போனால்.. தனது சொந்தங்களுக்கும்...தனது உறவுகளுக்கும் உதவி செய்யலாம் என்ற அளவோடு..அவனது சிந்தனை நின்று விடும்!

ஆனால் ...வெளி நாட்டில் வாழ்பவர் ஒருவரின்...சிந்தனை.....ரகுநாதனின் சிந்தனை போலவே அமையும்!

எம்மில் ஏராளமானோர் பட்டுத் தான் ..படித்தவர்கள்!

வாழ்க்கை என்பது ஒரு நவரசமான புத்தகம்!

அதில்....சோகம்...துன்பம்...இன்பம்....காதல்....எல்லாமே வந்து போகும்!

பள்ளங்கள் இருக்குமிடத்தில்....நிச்சயம் மேடுகளும் இருந்தாக வேண்டும்!

எதைக் கொண்டு வந்தாய்....நீ இழந்து போவதற்கு? எனக் கிருஷ்ணன் பாரதத்தில் கேட்கிறான்!

அதே தான் வாழ்வு என்பதும்...!

ஒரு மருத்துவனுக்குத் தலையிடி வந்தால்....அவன் எல்லாவிதமான ..காரணிகளையும் தேடி....வீணாக அவதியுறுவான்!

ஒரு கிராமத்தானுக்குத் தலையிடி வந்தால்.....குரு தைலத்தைத் தடவி விட்டுத்... தன் பாட்டில்...மற்ற வேலைகளைக் கவனிப்பான்!

இரண்டாவது முறையில் வாழ்ந்தால்.....பல தேவையில்லாத பிரச்சனைகள் வராது!

எனக்கு விலையுயர்ந்த சப்பாத்துகள் வாங்க இயலவில்லையே என்று கவலைப் பட்டாராம் பெர்னாட் ஷா!

ஒரு கால்களில்லாத மனிதரைக் காணும் வரை ...அவரது கவலை நீடித்ததாம்!

கடவுளே....என்னை இந்த நிலையிலாவது வைத்திருக்கின்றாயே....உனக்கு எனது நன்றி..!

அவ்வளவு தான்....!

அதிகம் எதிர்பார்ப்புகள் இல்லாதவனுக்கு...அதிக கவலைகளும் இல்லை!

15 hours ago, ragunathan said:

எனக்கென்றோ இன்னும் எவருக்கென்றோ எதுவுமே செய்யாமல், அல்லது செய்யமுடியாமல்

வெற்றுக் கோப்பையாகி இன்று நின்று திரும்பிப் பார்க்கிறேன்...45 வயது!

தலைவா....அதிகம் கவலைப் படாதீர்கள்!

45  வயசெல்லாம் ஒரு வயசா?

அருமையான ஒரு வாழ்வின் இரை மீட்டல்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான், அதிகமான எதிர்பார்ப்புகள் இல்லாதவனுக்கு, அதிகமான பிரச்சனைகளும் இருக்கப் போவதில்லை.

பொரும்பாலனாவர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான எண்ணம் என்றாலும் ஒவ்வொருவருக்கும் இவ் எண்ணம் தனித்துவமானது. பெரிய சாதனைகள் செய்யவேண்டும் அல்லது பிறவிக்கு அர்த்தமாய் ஏதோ ஒன்றைச் செய்யவேண்டும்  பேர் சொல்லும் படியாக வாழவேண்டும் என்பது  அவசியமில்லை என்ற உணர்வுதான் என்னிடம் உள்ளது. முடிந்தவரை சக மனிதனுக்கு உதவியய் இருக்க முயலுதல் முடியாவிட்டால் இடைஞ்சல் இல்லாமல் இருந்துவிட்டுப் போதல். பூமியில் எங்கோ ஒரு இடத்தில் நாலு மரத்தை நட்டால் நடுவதற்கு உதவினால் அதுவே ஒரு பிறவிச் சாதனைதானே !  

  • கருத்துக்கள உறவுகள்

ரகு  இந்த வயசில் இந்த சிந்தனை வரக்கூடாது இன்னும் காலம் இருக்கு .....நீங்கள் செய்த சேவைகள் பல மாணவர்களுக்கு புரிந்திருக்கும் என் நம்புகிறேன் அவர்கள் நிச்சயம் உங்களை பாராட்டுவார்கள்..குறிப்பாக அவுஸ் மாணவர்கள்  தமிழ்மொழி கற்பதற்காக நீங்கள் செய்த பல உதவிகளை ,மாணவ்ர்களும் அவர்களது பெற்றோர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள்...அந்த பெற்றோர்களில் நானும் ஒருவன்....இதுவும் கடந்து போகும்.....தொடரட்டும் உங்கள் பயணம் ....என்றும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தன் அண்ணா,

என்னிடத்தில் எவர் இருந்தாலும் அதையேதான் அல்லது அதைக் காட்டிலும் திறமையாகச் செய்திருப்பார்கள் என்பது உண்மை.

எனக்கு முன்னால் சென்ற தமிழ் ஆர்வளர்கள் பலர் ஆரம்பித்த நல்ல விடயங்களில் நானும் இணைந்துகொண்டேன். அவ்வளவுதான். இதில் நான் பெருமைப்படவோ அல்லது உரிமை கோரவோ எதுவுமில்லை.

எனக்குக் கிடைத்த ஒரு நல்ல விடயத்தை அதன் தரம் குன்றாமல் காத்து எனக்குப் பின்னால் வருபவரிடம் ஒப்படைப்பதென்பதே மிகக் கடிணமானதுதான். அதை நான் எப்படிச் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.

உங்களின் ஆதரவிற்கு எனது மனமுவர்ந்த நன்றிகள் !!
 
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு ரகு. 

எனக்கும் உங்கள் வயதுதான். பல மாதங்களாக இப்டியான எண்ணங்கள் என்னுள் ஓடிக்கொண்டிருக்கின்றது. அப்படியே எழுதி இருக்கின்றீர்கள். 

இது முதுமையை குறித்தான பயமா? அல்லது தன்னிரக்கமா அல்லது இழந்து போனதை குறித்தான கவலையா புரியவில்லை.  ஆனால் அடிக்கடி இப்படியான எண்ணங்கள் வருகின்றது. எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் அவற்றை மேற்கொள்ள முடியவில்லை. 
 
5 hours ago, putthan said:

"ரகு  இந்த வயசில் இந்த சிந்தனை வரக்கூடாது இன்னும் காலம் இருக்கு"

புத்தன் இது எனக்கு புரியவில்லை. ஏன் இப்படியான சிந்தனைகள் வரக்கூடாது? இது பிழையா? உங்கள் பதில் மூலம் என்னையும் திருதிக்கொள்ள நினைக்கின்றேன்.
விளக்குங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்றால் மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வரும். நீங்கள் சாதித்தவை அளப்பரியவை. உங்கள் குடும்பம் தாய் மண்ணுக்காக செய்த தியாகம்  அளவிடமுடியாது. சிங்களத்து தரப்படுத்தலை எதிர்கொண்டு சிங்களநாட்டில் பொறியியல் படித்தது சாதனையல்லவா.   சிட்னி மாணவர்கள் தமிழ் கற்க ,நீங்கள் செய்த பல உதவிகள் எண்ணிலடங்காதவை. தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் உங்கள் கடமைகளை செய்யுங்கள் . கவலை வேண்டாம்.  45 ஒரு வயதா? .  60க்குபிற்குதான் ரஜனியும், கமலும் அரசியலில் குதிக்கிறார்கள். நல்லநண்பர்களுடன் பழகுங்கள். இடையிடையே சுற்றுலா செல்லுங்கள்.    வருகிற வருடம் இதேநாளில் நீங்கள் யோசிப்பீர்கள். "இதுக்குத்தானா போயும் போயும் கவலைப் பட்டேன்".

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ragunathan said:

வணக்கம் புத்தன் அண்ணா,

என்னிடத்தில் எவர் இருந்தாலும் அதையேதான் அல்லது அதைக் காட்டிலும் திறமையாகச் செய்திருப்பார்கள் என்பது உண்மை.

எனக்கு முன்னால் சென்ற தமிழ் ஆர்வளர்கள் பலர் ஆரம்பித்த நல்ல விடயங்களில் நானும் இணைந்துகொண்டேன். அவ்வளவுதான். இதில் நான் பெருமைப்படவோ அல்லது உரிமை கோரவோ எதுவுமில்லை.

எனக்குக் கிடைத்த ஒரு நல்ல விடயத்தை அதன் தரம் குன்றாமல் காத்து எனக்குப் பின்னால் வருபவரிடம் ஒப்படைப்பதென்பதே மிகக் கடிணமானதுதான். அதை நான் எப்படிச் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.

உங்களின் ஆதரவிற்கு எனது மனமுவர்ந்த நன்றிகள் !!
 
உண்மை.... ஆனால் பலர் பெயருக்காகவும் புகழுக்காகவும் இப்படியான செயல்களை செய்வாகள் ஆனால் நீங்கள் அந்த எண்ணம் ஒரு துளிகூட இல்லாம் செய்தீர்கள்....மீண்டும் ஒரு முறை நன்றிகள் ....குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உங்கள் பொன்னான நேரத்தை செலவுசெய்யுங்கள்...மனம் ஒரு பொல்லாத சாமான் அதை சும்மா ஒடவிட்டால் எங்கன்ட எண்ணங்களே எங்களை பயித்தியகாரானாக்கி விடும் ....அனுபவத்தில் சொல்லுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

அருமையான பதிவு ரகு. 

எனக்கும் உங்கள் வயதுதான். பல மாதங்களாக இப்டியான எண்ணங்கள் என்னுள் ஓடிக்கொண்டிருக்கின்றது. அப்படியே எழுதி இருக்கின்றீர்கள். 

இது முதுமையை குறித்தான பயமா? அல்லது தன்னிரக்கமா அல்லது இழந்து போனதை குறித்தான கவலையா புரியவில்லை.  ஆனால் அடிக்கடி இப்படியான எண்ணங்கள் வருகின்றது. எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் அவற்றை மேற்கொள்ள முடியவில்லை. 
 
"ரகு  இந்த வயசில் இந்த சிந்தனை வரக்கூடாது இன்னும் காலம் இருக்கு"

புத்தன் இது எனக்கு புரியவில்லை. ஏன் இப்படியான சிந்தனைகள் வரக்கூடாது? இது பிழையா? உங்கள் பதில் மூலம் என்னையும் திருதிக்கொள்ள நினைக்கின்றேன்.
விளக்குங்கள்?

உண்மையை சொல்லப்போனாள் ஒவ்வொரு வயசிலயும் ஒவ்வொரு எண்ணங்கள் வந்து போய் கொண்டே இருக்கும் ....சின்ன வயசில் படிப்பு, பிறகு காதல் இது இன்பத்தையும் துன்பத்தையும் தரும்,பிறகு வேலை ,உத்தியோகம்,கலியாணம் ,குடும்பம், பிள்ளைகள் என்று வந்து வாழ்க்கையை முக்கால்வாசி கடக்கிற நேரத்தில் என்னடா வாழ்க்கை என்ற எண்ணம் வரத்தொடங்கும் ...இது தான் வாழ்க்கை என்று நாம் சமாதானம் ஆகிட்டோம் என்றால் மகிழ்சி இல்லையென்றால் கொஞ்சம் பயம் வரதொடங்கும் ....அதனால் தான் பலர் சாமிமாரிடம் ஓட தொடங்குவார்கள்....சிலர் அதானால் நிம்மதியடைகிறார்கள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.