Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைமையைப் பாதுகாக்கும் முஸ்லிம்களுக்கு இனவாதிகள் தரும் பரிசா இது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Ad Space Available here
 
 
28795036_1655888774497448_55231277993864

 
-ஊடகப்பிரிவு-
அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் பாதுகாப்பில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடியது போன்று முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மதஸ்தலங்களையும் சொத்துக்களையும் நாசமாக்கும் காடையர்களுக்கு வழங்கும் தண்டனை மூலம் இனி ஒருபோதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்ற வகையில் அரசாங்கம் அம்பாறை மற்றும் திகன சம்பவங்களில் சம்பந்தப்பட்ட காவாலிகளுக்கும் காடையர்களுக்கும் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் உயர்சபையில் வலியுறுத்தினார்.
 
தெல்தெனியவில் குமாரசிறி என்ற அப்பாவி ஒருவரின் மரணத்துக்குக் காரணமான முஸ்லிம் பெயரை தாங்கிய குடிகாரர்களின் செயலுக்காக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை பழிவாங்கிய காடையர்களை எதுவித தயவு தாட்சண்யம் இன்றி சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்காத வரை முஸ்லிம்கள் இந்த நல்லாட்சியில் நம்பிக்கை வைக்கப் போவதில்லை.
 
நேற்று (05) கண்டி திகன கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களுக்கு நாங்கள் சென்றிருந்த போது இன்னும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கமில்லையா என அவர்கள் எம்மிடம் கேட்கும் போது நாம் எதைத்தான் கூறுவது?
 
தெல்தெனியவில் மரணமானவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் நாளான நேற்று அங்கு இனவாதிகளால் பாரிய அசம்பாவிதங்கள் நிகழ்த்தப்பட வாய்ப்புண்டு என நாங்கள் ஜானாதிபதியிடமும் பிரதமரிடமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம்.
 
பொலிஸாரும் அதிரடிப் படையினரும் போதுமானளவு குவிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் எமக்கு உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் அவைகள் எல்லாம் பொய்ப்பிக்கப்பட்டு ஓர் இன சங்காரமே நடந்து முடிந்திருக்கின்றது.
 
தெல்தெனிய சம்பவத்தில் அந்த ஊரில் வாழும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் புரிந்துணர்வுடன் சமாதானமாகி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.எனினும் மஹாசொன் பலகாய என்ற இனாவாத இயக்கத்தைச் சேர்ந்த அமித் வீரசிரி மற்றும் மட்டக்களப்பில் பௌத்த தருமங்களுக்கு மாற்றமாக நடந்துகொள்ளும் மதுகுரு ஒருவரும் சேர்ந்தே இந்த அடாவடித்தனத்தை நடாத்தி அத்தனை அழிவுகளுக்கும் காரணமாய் இருந்திருக்கின்றனர். 
 
இவ்வாறான கயவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்.        
 
முஸ்லிம் பெயர்களைத் தாங்கிய அந்த குடிகார இளைஞர்களுக்கு எந்தத் தண்டனை வழங்கினாலும் முஸ்லிம் சமூகம் அதனை பொருட்படுத்தவில்லை.
 
ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து இனவாதிகளை சுதந்திரமாக வீதிகளில் நடமாடச் செய்து காட்டுமிராண்டித் தனத்தை நடத்தி முடித்திருக்கின்றார்கள்.
 
அதேபோன்று கடந்த வாரம் அம்பாறை நகரில் ஹோட்டல் ஒன்றுக்குள் சென்று உலகத்திலேயே இதுவரை கண்டுபிடிக்கப்படாத மருந்தொன்றை கொத்துரொட்டிக்குள் போட்டதாக அச்சுறுத்தி கூறச் செய்து அதை காரணங்காட்டி அந்த ஹோட்டலை தகர்த்ததுடன் அதற்கு வெகுதொலைவில் இருந்த இரண்டு ஹோட்டல்களை அடித்து நொருக்கிவிட்டு பள்ளிவாசலையும் முற்றாகச் சேதப்படுத்தினர்.
 
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து ஓரிரவு கூட சிறையில் அடைக்காது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குற்றச்சட்டை வாபஸ் வாங்கி வேறொரு சட்டத்தின் கீழ் அந்த சந்தேக நபர்களின் குற்றங்களை பதிவு செய்து நீதிமன்றத்தில் பிணை வாங்கிக் கொடுத்துள்ளனர். பொலிஸார் ஒருதலை பக்கச் சார்பாகவும் நடந்திருக்கின்றனர்.
 
பாரபட்சமாக நடந்துகொண்ட அம்பாறை பொலிஸாருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பிரதமரிடமும் பொலிஸ்மா அதிபரிடமும் வலியுறுத்தினோம். எமக்கு அவ்வாறான உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை வேதனையுடன் தெரிவிக்கின்றோம்.
 
திகன பல்லேகலையில் ஊரடங்குச் சட்ட நேரத்தில் வீடுகளைக் கொளுத்தியதால் அதற்குள் அப்பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிக்குண்டு அநியாயமாக உயிரை பறிகொடுத்துள்ளார்.
 
இந்த நாட்டில் முஸ்லிம்கள் செய்த தவறுதான் என்ன? நாட்டின் இறைமைக்காக பாடுபட்டது தவறா? சமாதானம் வரவேண்டுமென நினைத்தது தவறா? நாடு பிளவு படக்கூடாது என்று எண்ணியது தவறா? தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறா? ஏன் இந்த சமூகத்தை இவ்வாறு அழிக்கத் துடிக்கின்றார்கள்? முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்க ஏன் அலைந்து திரிகின்றார்கள்? என்று அமைச்சர் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இந்த நாட்டில் முஸ்லிம்கள் செய்த தவறுதான் என்ன? நாட்டின் இறைமைக்காக பாடுபட்டது தவறா? சமாதானம் வரவேண்டுமென நினைத்தது தவறா? நாடு பிளவு படக்கூடாது என்று எண்ணியது தவறா?

ஓகோ, இவையெல்லாம் நடக்கவேண்டும் என்றுதான் அன்று அத்தனை காட்டிக்கொடுப்புகளையும் செய்தீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

முஸ்லிம் பெயர்களைத் தாங்கிய அந்த குடிகார இளைஞர்களுக்கு எந்தத் தண்டனை வழங்கினாலும் முஸ்லிம் சமூகம் அதனை பொருட்படுத்தவில்லை.

 

11 hours ago, colomban said:

தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறா?

?.....?.....?.....?   = ?

  • கருத்துக்கள உறவுகள்

பாயாசுத்துக்கிள்ளை கிடக்கிற முந்திருப்பருப்பு....பாயசத்துக்கே உரிமை கோர வெளிக்கிட்ட மாதிரி....சிங்களத்தின் இறைமைக்கும், தன்னாதிக்கத்துக்கும்.....முந்திரிப் பருப்பு....உரிமை கோருகின்றது!

அது எப்பவோ.....சீனாக்காரனுக்கும்....இந்தியாக் காரனுக்கும், அமெரிக்காவுக்கும்....உலக வங்கிக்கும்...விலைப்பட்டுக் கன நாளாய்ப் போச்சுதே!

இது தெரியாமல் இவங்கள்....தங்களுக்குள்ளை....அடிபடுகிறாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் சிங்களப் பேரினவாதத்துடன் இணைந்து தமிழர்க்கெதிரான இன்வழிப்பில் பங்குகொண்டது உண்மைதான். 

இனவழிப்பில் நேரடியாகப் பங்குகொண்டது மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் தமிழரின் போராட்டத்திற்கெதிராகவும், தமிழர்க்கெதிரான இனவழிப்பை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்திருக்கிறார்கள். 2008 மற்றும் 2009 ஆகிய காலப்பகுதியில் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத்  போன்றவர்கள் மும்முரமாக இப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.சொந்த அரசியல் நலனுக்காகவும், தமிழரின் நிலைஅயினை மலினப்படுத்தவும் அவர்கள் இதைச் செய்தார்கள்.

ஆனால் இன்றோ நிலமை அப்படியில்லை. தமிழினத்தின் போராட்டத்தினை நசுக்க , முஸ்லீம்களைப் பாவித்த சிங்களப் பேரினவாதம், தமிழர்கள் முற்றாக ஒடுக்கப்பட்டுள்ள நிலையில், தமது அடுத்த எதிரியான முஸ்லீம்கள் மேல் கைவைக்கிறது.

இந்நிலையில் , தமிழர்களின் நிலை என்னவென்பது புதிரான விடயம்தான். முஸ்லீம்களை ஆதரிப்பதா அல்லது , அழிய விட்டு வேடிக்கை பார்ப்பதாவென்பது.

முஸ்லீம்கள் சிங்களவர்களுடன் இணைவதற்கு தமிழர்களின் தரப்பிலிருந்தும் சில செயற்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. நாம் எவற்றைக் காரணங்களாகக் கூறினாலும், யாழ்ப்பாண வெளியேற்றம், கிழக்கு மாகாண பள்ளிவாசற் படுகொலைகள் என்று சில நடவடிக்கைகளைச் செய்திருக்கிறோம்.

அவ்வாறே, முஸ்லீம்களும் ஊர்காவற்படை கொலைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், அரச ஆதரவிலான ஆக்கிரமிப்புக்கள். காட்டிக் கொடுப்புகள், இனக்கொலையினை நியாயப்படுத்தல்,  என்று தம் பங்கிற்குச் செய்திருக்கிறார்கள்.

சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தெரிந்தே பலியாகிய எம்மிரு இனங்களும் இன்று ஒன்றன் பின் ஒன்றாக பலியிடப்பட்டு வருகிறோம். இதில் சந்தோஷப்படவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. முடிந்தால் இப்போது நடக்கும் முஸ்லீம்களுக்கெதிரான வன்முறையினை, எமது தரப்பு வாதத்தினை வலுவாக்க உபயோகிக்க முடியுமா என்று பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ragunathan said:

 

சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தெரிந்தே பலியாகிய எம்மிரு இனங்களும் இன்று ஒன்றன் பின் ஒன்றாக பலியிடப்பட்டு வருகிறோம். இதில் சந்தோஷப்படவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. முடிந்தால் இப்போது நடக்கும் முஸ்லீம்களுக்கெதிரான வன்முறையினை, எமது தரப்பு வாதத்தினை வலுவாக்க உபயோகிக்க முடியுமா என்று பார்க்கலாம். 

பேரினவாதிகளுடன் உறவை வைத்துகொண்டால் தான் நாம் தப்பி பிழைக்கலாம்,எமது தரப்பில் எவ்வளவு நியாயம் இருந்தாலும் அது எடுபட்ப்போவதில்லை...சர்வதேச் நாடுகள் பெரும்பான்மை சமுகத்துடன் உறவு கொண்டிருக்கதான் விரும்புவார்கள் சிறுபான்மை சமுகத்துடன் அல்ல ....

முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதால் எங்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்க போவதில்லை...காரணம் அவர்களே சிறுபான்மையினர் அவர்களின் இலக்கு முஸ்லிம்கள் என்ற சர்வதேச அடையாளத்தை நிலை நிறுத்தி உலக முஸ்லிம்கள் ஆவது.
முஸ்லிம் அடிப்படை வாதிகள்...சிங்கள பேரினவாதிகள்  இவர்கள் தான் இரு சமுகத்தையும் வழிநடத்தப்போகிறார்கள்...

சிங்கள பேரின்வாதிகள் எமக்கு தெரிந்த பேய்...

நாங்களும் சிறுபான்மை ,முஸ்லிம்களும் சிறுபான்மை அதனால் பேரினவாதிகள் எம்மை அழிக்கிறார்கள் என்று விவாதத்திற்காக சொல்லலாம் இதனால் முஸ்லிம்களுக்கு சர்வதேசத்தில சில சமயம்
அனுதாபம் கிடைக்க சந்தர்ப்பம் உண்டு ஆனால் சிங்கள்விடமிருந்து நாம் பகமையை தேடிக்கொள்வோம்...

அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் எப்படி சுழிச்சு ஒடினார்களோ அப்படி நாமும் சுழிச்சு ஒடி இருப்பை தக்க வைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, colomban said:

நாட்டின் இறைமைக்காக பாடுபட்டது தவறா?

எங்கட சம்பந்தரைப்பற்றி சொல்லுங்கோ ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆனால் நீங்கள் சுயநலத்திற்கு பாடுபடுபவர்கள்.

இந்தச் சந்தர்ப்பதை  பயன்படுத்தி சர்வதேசத்துக்கு பிரச்சனையை கொண்டு போவோமெண்டு இல்லை, நாட்டின்  மரியாதையை காப்பாற்ற புலம்புது எங்கடை ஒண்டு. காற்றுள்ள போது தூவாமல் நழுவ விட்டிட்டு  வாயாலை தூவப்போறார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் எப்படி சுழிச்சு ஒடினார்களோ அப்படி நாமும் சுழிச்சு ஒடி இருப்பை தக்க வைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.  

இங்குதான் நாம் கையறு நிலையில் இருக்கிறம் புத்தன் எமது அரசியல் தலைவர்கள் முஸ்லீம் அரசியலவாதிகள் போல இருந்தால் பரவாயில்லை அதைவிட நாய் கூட விசுவாசம் காட்டும் அதுவும் ஒரு எல்லைக்கே காட்டும், சாப்பாட்டு தட்டில் கை வைத்தால் தெரியும் .ஆனால் நமது சம்பந்த சுமத்திர கூட்டம் சிங்கள அரசு வேண்டினால் உரிஞ்சு விட்டு காவடி எடுங்க என்று சொன்னால் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு காவடி எடுக்க அடிபடுவினம் விசுவாசம் அப்படி .

இதுக்குள்ள சுழிச்சு ஓடுவதா கனவிலும் நடக்காத விடயம் .நமது அரசியலில் விடயமுள்ளவர்கள் சத்தமின்றி ஓரம்கட்டப்பட்டுவிட்டனர் அல்லது  இல்லாது ஆக்கப்பட்டு விட்டனர் . சிங்களவர்கள் நன்றாகவே நிகழ்ச்ச்சி நிரலை தொடர்கின்றனர் .அடுத்து என்ன இதே முஸ்லீம்கள் வடகிழக்கு எங்கும் அடாத்தாக இந்த கலவரம்களை சாட்டாக வைத்து குடியேத்தபடுவர் கதைக்க முடியாது எங்களால் அப்போது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உள்ளூர் தமிழ் மகனுக்கு அரசாங்க வேலை கூட குடுக்க வக்கில்லாமல் சம்பந்தர் இந்த பதவிகாலத்தில் இருக்கிறார் அதுதான் கொடுமையிலும் கொடுமை விளைவு சாதாரண கரண்டு மீற்றர் பார்த்து எழுதுவதுக்கு கூட வடகிழக்கு எங்கும் பெரும்பான்மை இனத்தவர்கள் வேலை பெற்று வருகிறார்கள்  அதை விட தமிழே தெரியாத சிங்கள் வைத்தியர்களின்  பொறுப்பு அற்ற தன்மை அண்மையில் விக்கியர் இந்த விடயத்தை போட்டு உடைத்தவர். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragunathan said:

 யாழ்ப்பாண வெளியேற்றம், 

 
இன்றுவரை அந்த வெளியேற்றத்துக்கான அடிப்படைக் காரணங்களை உணர்ந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ சில தமிழ்த் தலைவர்களும் தயாராக இல்லை. பிரபாகரன் தலைமையில் ஈழவிடுதலைப் போராட்டத்தை விரும்பாதவர்கள் அவரையும் அவரது போராளிகளையும் மலினப்படுத்துவதற்கு வலுவான காரணங்களைக் கண்டுகொள்ள முடியாதபோது... யாழ்ப்பாண வெளியேற்றத்தையே துருப்புச் சீட்டாகப் பாவிக்க முனைகின்றனர்.
 
இனப்பிரச்சனை உலகம் பூராவும் உள்ளது. இசுலாமியரின் யாழ்ப்பாண வெளியேற்றத்தின்போது, அவர்களது வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதா? எரிக்கப்பட்டதா? அல்லது உடல் உயிருக்கு சேதங்கள் ஏற்பட்டதா?  பெண்கள் மானபங்கத்துக்கு உள்ளாக்கப்பட்டார்களா??
 
சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழரை அழித்த இசுலாமியரும் அவர்கள் தலைவர்களும் இதனை ஒருமுறை நினைவுகூரட்டும்.
On 3/6/2018 at 7:07 PM, colomban said:

முஸ்லிம் பெயரை தாங்கிய குடிகாரர்களின் செயலுக்காக

ஓ! அந்தளவுக்கு போயாச்சோ?  "முஸ்லீம் பெயரை தாங்கிய ....." அப்படி என்றால் முஸ்லீம் இல்லையோ?
இலங்கையில் முஸ்லீம் பெயரை தாங்கிய கள்ளக்காணிக் காடையர்கள் தான் நிறைய இருக்கிறார்கள் என இவர் இப்போது சொல்ல வருகிறாரோ?

On 3/6/2018 at 7:07 PM, colomban said:

சிங்களவர்களும் முஸ்லிம்களும் புரிந்துணர்வுடன் சமாதானமாகி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.

முஸ்லீம் பெயரை தாங்கியவர்களின் காடைத்தனத்துக்கு முஸ்லீம்கள் எதற்காக பணம் சேர்த்து கொடுக்க போனார்கள்? ரிஷாட் பதியுதீன் என்ற முஸ்லீம் பெயரை தாங்கிய கள்ளக்காணி பிடிப்பவரின், போதைப்பொருள் கடத்தல்காரனின் உளறலில் எங்கையோ ஏதோ உதைக்குது

On 3/6/2018 at 7:07 PM, colomban said:

இந்த நாட்டில் முஸ்லிம்கள் செய்த தவறுதான் என்ன? நாட்டின் இறைமைக்காக பாடுபட்டது தவறா?

"தமிழினப் படுகொலைகளை/அழிப்பை செய்வதுவும் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதுவும் தான் நாட்டின் இறைமையை காப்பாற்றுவது" என்பது சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் மந்திரம். அந்த தொப்பியை முஸ்லீம் காடையர்கள் போட முடியாதே? போட்டால் விளைவு ..... விளங்கியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

அவ்வாறே, முஸ்லீம்களும் ஊர்காவற்படை கொலைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், அரச ஆதரவிலான ஆக்கிரமிப்புக்கள். காட்டிக் கொடுப்புகள், இனக்கொலையினை நியாயப்படுத்தல்,  என்று தம் பங்கிற்குச் செய்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி அவர்கள் அவர்கள் இடத்தில் இருக்கட்டும் முதலில் அவர்களால் 400க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லபட்ட வீரமுனை போன்ற கிராமங்களை விட்டுத்தருவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை கொன்றுவிட்டு அடாத்தாக முஸ்லீம்கள் இன்றுவரை குடியேறி உள்ளார்களே அங்கு காலம்காலமாக இருந்த பூர்வீக தமிழ் குடிகள் இன்றும் சொந்த மண் திரும்ப முடியாமல் அகதியாக திருக்கோவிலில் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன பதில் ?

  • கருத்துக்கள உறவுகள்
On 7.3.2018 at 2:40 AM, புங்கையூரன் said:

பாயாசுத்துக்கிள்ளை கிடக்கிற முந்திருப்பருப்பு....பாயசத்துக்கே உரிமை கோர வெளிக்கிட்ட மாதிரி....சிங்களத்தின் இறைமைக்கும், தன்னாதிக்கத்துக்கும்.....முந்திரிப் பருப்பு....உரிமை கோருகின்றது!

அது எப்பவோ.....சீனாக்காரனுக்கும்....இந்தியாக் காரனுக்கும், அமெரிக்காவுக்கும்....உலக வங்கிக்கும்...விலைப்பட்டுக் கன நாளாய்ப் போச்சுதே!

இது தெரியாமல் இவங்கள்....தங்களுக்குள்ளை....அடிபடுகிறாங்கள்!

இது வரை கேள்விப் படாத, பொருத்தமான... அருமையான உவமானம். புங்கை. :)

13 hours ago, பெருமாள் said:

எல்லாம் சரி அவர்கள் அவர்கள் இடத்தில் இருக்கட்டும் முதலில் அவர்களால் 400க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லபட்ட வீரமுனை போன்ற கிராமங்களை விட்டுத்தருவார்களா?

தமிழரிடம் பறித்தவற்றை தமிழர்கள் வட்டியும் முதலுமா திருப்பிப் பெறும் நேரம் வருகிறது!

இதற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.