Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை என் வாழ்வில் சகல பிரச்சனைகளும் ஓய்ந்து விட்டது ஓர் தேடலைத்தவிர என்று வாழ்வை அமைதியாக கழிந்த நாட்களில் அந்த ஓர் அழைப்பொன்று வாழ்வின் அடிமனதில்  புதைந்த ஓர் புதையலை மனதில் இருந்து மெதுவாக தோண்ட ஆரம்பிக்கிறது .ஹலோ வணக்கம் வணக்கம் நீங்கள் நான் கலியபெருமாள் பேசிறன்டா ஓ ஐயா சொல்லுங்க எப்படிடா இருக்க இருக்கன் ஐயா இருக்கன் நல்ல சுகம் நீங்கள் எப்படி நான் நல்லம் நலமா இருக்கிறன் என்ற பிள்ளைகள் உன்னை பார்க்க வேண்டுமாம் வாவன் உன்ற ரத்தமும் ஓடுது இங்க ஒருக்கா இந்தியா வந்துவிட்டு போவன் இல்லை ஐயா நான் இன்னும் பாஸ்போட் எடுக்கல எடுக்கவும் நினைக்கல எடுக்கணும் என்று நினைக்கிறன் நேரமும் கிடைக்கல அது எடுக்க போனால் இரண்டு மூன்று நாள் அங்க மெனக்கெடணும். அந்த கொழும்பில நிற்கிற நாளும் கஸ்ரமா இருக்கும் ஆனால் எடுப்பன் எடுத்திட்டு வருவன். சரி உடம்ப பார்த்துகொள் காலா காலத்துல கல்யாணம் கட்ட வேணும் சரியோ சரி ஐயா கல்யாணத்துக்கு சொல்லு கட்டாயம் வருவன் (ம்கும் பேச்சுக்கு சொல்லுது மனுசன் என்ற நினைப்பு என் மனதிற்குள்) சரி ஐயா அம்மா பிள்ளைகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தேன் நான்.

அழைப்பை துண்டித்து அந்த ஓர் அறையினுள் ஓட்டை கதிரையில்வெறும் உரப்பையினால் ஆன சாய்ந்த கதிரையில் இருந்து அந்த புதையலை மூடியிருக்கும் மணல்களை மெதுவாக கிளறிக்கொண்டு இருக்கிறேன் . இப்போது நடந்தால் போல் ஓர் ஞாபகம். நாளைக்கு ஓர் படகு போகபோகிறதாம் இந்தியாவுக்கு  தமிழரசா நீயும் போ நீ போன பிறகு அடுத்த படகு வெளிக்கிடக்குள்ள நாங்களும் அங்கு வந்து அகதிகளா சேருவம். என்று அம்மா சொல்ல இல்லையம்மா நான் உங்களை விட்டு போக மாட்டன் நீங்களும் வாங்க தம்பி நீ விசர் மாதிரி கதையாத நீ முதலில போ உன்ன வச்சிருக்கிறதுதான் இஞ்ச பெரும் பாடு அவனுகளும் விடமாட்டானுகள் இவனுகளும் விடமாட்டானுகள்  ஏற்கனவே ரெண்டு பேரை கொடுத்திட்டன் எனக்கு நீ மட்டும் தான் இப்ப இருக்கிற நீயாவது வேண்டும் சரீயே சொல்லுற விளங்குதா ஓர் அன்னையின் கட்டளை போல் ஒலித்தது.

நாங்க இங்குள்ள சொத்துக்களை ஆரிட்டையும்கொடுத்து விட்டு இல்லாட்டா வித்துவிட்டு அடுத்த செக்கனில் அங்கு நிற்பம் சரியா சரி அம்மா சொல்லுறத கேழு உன்ற நல்லதுக்குத்தான் சொல்லுறன் என்று சொல்லி அந்த மாலை வேலையில் கடற்கரைக்கு அழைத்து சென்றார்கள். மாலை இருளை கவ்விக்கொள்கிறது கன பேரின் வருகையை எதிர்பார்த்த எங்களுக்கு வெறும் 20 பேர்தான் வந்திருந்தார்கள் சிலரின் வருகையில் தடங்கலோ அல்லது சிக்கிவிட்டார்களோ தெரியாது சரி சரி கெதியா வாங்கோ கெதியா வாங்கோ என்று படக்குக்காரன் கத்திக்கொண்டு இருந்தான். ஒரு வழியாக எல்லோரும் ஏறும் போது அம்மாவை கட்டிப்பிடித்து அழுதுகொண்டேன் அழாத அம்மா வருவேன் நீ நல்லா படிச்சிருக்கிற அங்க போய் ஓர் வேலை தேடு நிலமை சரியான பிறகு  ஊருக்கு வந்திடலாம் என்று சொன்னாலும் அந்த சூழல் என்னை உயிரை உடம்பில் வைத்துக்கொள்ள தப்பித்து ஓடிவிடு என்று சொல்ல அன்று கடல் வழி பயணம் தொடர்ந்தது . கொஞ்ச தூரம் சென்றது கடல் காற்று உப்பையும் மண்ணெண்ணை மணம் மெல்ல மெல்ல மூக்கின் நுனியில் இருந்து மெல்ல இறங்கி ஓங்காளங்களாக சத்தி எடுக்க ஆரம்பித்தனர் படகில் இருந்தவர்கள். அவர்கள் சத்தி எடுத்ததும் அதை பார்க்கவில்லை இருட்டில் அந்த சத்தம் என் குடலையும் குடைந்தெடுத்து சத்தியாக கொண்டுவந்தது வந்தது உணவல்ல வெறும் தண்ணியும் ரத்தமும்தான் மெல்ல தலை சுற்ற அந்த படகில் எனை அறியாமல் மயக்கமான ஓர் நித்திரை வந்தது அந்த நித்திரையானது என்னை  கொலைசெய்து கடலில் தூக்கிபோட்டாலும் யார் என்று கண்டு பிடிக்க முடியாதளவுக்கு மயக்கமாக இருந்தது .

தூரத்தில் கேட்ட ஓர் எஞ்சின் சத்தத்தில் எமது படகின் எஞ்சினின் சத்தத்தை நிறுத்துவது என் கண் முன்னால் ஓடியது யாரும் சத்தம் போட வேண்டாம் குனிந்து படுத்து கொள்ளுங்கள் ஏற்கனவே ஒருத்தர் தலையும்  நிமிர்ந்தில்லை இதுக்குள்ள எங்க குனிந்து படுக்கிறதாம் அது கடற்படையின் ரோந்து கப்பல் தான் அவன் வேற திசையில் வேறு யாரையோ நோக்கி போய்க்கொண்டிருந்தான். ஒரு சில மணித்தியாலங்கள் பின்னர் அந்த படகு ஓர் மணல் திட்டில் கால் நடக்கும் பகுதியளவில் இறங்கி கொள்ளுங்கோ அந்த மணல் திட்டில் நின்றால் இந்திய நேவி வருவாங்கள் இல்லாவிட்டால் மீனவர்கள் உங்களை கண்டால் அகதி முகாம்களுக்கு சேர்த்துவிடுவார்கள் இன்று யார் செய்த புண்ணியமோ யார் கண்ணிலையும் நாம் அகப்படவில்லை போய் சேருங்கோ நாங்க அங்க போகணும். கெதியா இறங்குங்கோ என்றனர் அவர்கள் நாங்களும் பாதி மயக்கத்தில் மணல் திட்டில் வந்து அந்த உடுப்பு பையுடன் இறங்கி அந்த கூதல் காற்றில் அன்றைய இரவை கழித்தோம். அந்த மணல் திட்டில் 

அடுத்த நாள் காலை யாரும் வரமாட்டார்களா சாப்பாடும், தண்ணீரும் தா என வயிறு கேட்டுக்கொண்டது அப்போது அவ் வழியாக வந்த மீனவர்கள் எங்களை கண்டு கொண்டனர் அவர்களுக்கு சைகை காட்டி ஒரு வழியாக அவர்கள் வந்திறங்கி எத்தனை பேர் வந்து இருக்குறீர்க்ள் நாங்கள் 20 பேர் 15 பெண்கள் 4 சிறுவர்கள் நான் மட்டும் இருபத்து நான்கு வயது நிரம்பிய ஓர் இளைஞன் சரி வாங்கள் வந்து படகில் ஏறுங்கள் என்று சொல்லி ஏற்றிக்கொண்டார்கள் படகில் இருந்த உணவை தந்தார்கள் ஆனால் யாரும் சாப்பிட முடியவ்வில்லை காரணம் சத்தி எடுத்ததால் தொண்டையால் தண்ணி கூட இறங்குவது  சிரமமாக இருந்தது. நானும் தண்ணீர் மட்டுமே குடித்தேன் குடித்த பின்பு அங்கே ஓர் முகாம் அருகே கொண்டு விட்டார்கள் அப்போதுதான் சோதனைகள் ஆரம்பிக்கின்றன இந்திய தேசத்தில் எல்லோரது பெயர்களும் பதியப்பட்டு பெண்களை விசாரிக்கின்றனர் குழந்தைகளை விட்டுவிட்டார்கள் என்னை மட்டும் வேற இடத்திற்கு கொண்டு சென்றார்கள் அவர் பொலிஸ்க்காரரா என்று எனக்கு தெரியாது சிவிலில் நின்றார் உன்ற பெயர் என்ன தமிழரசன் உன்ற சொந்த பெயரா இல்லை இயக்கம் வச்ச பெயரா என்ற சொந்த பெயர்தான் ஏன் இங்க வந்த நீ  அங்க சரியான பிரச்சினையா இருக்கிறது எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறாங்கள் இருக்க முடியல அதான் இங்க அகதியாக வந்தன் சரி இயக்கிதில இருந்த நீ யா? இல்லை உன்மைய சொல்லு இருந்த நீயா? இல்லை உன்மையை சொன்னால் கூட அடித்தார்கள் இத்தனைக்கும் அவர்களும் தமிழர்கள். ஈழத்தில் தமிழனுக்கு சிங்களவர்கள் கேள்விகேட்காமலே அடிக்கிரார்கள் என்றால் இங்கே தமிழர்கள் கேள்வி கேட்டே அடிக்கிறார்கள்  இல்லை ஐயா.

தீ வரும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  உங்கள்  அகத்  தீயை  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்ல அண்ணா அடிக்காதீங்க படிச்சித்து இருந்த நான் எங்க சேட்டிபிகேட்ட காட்டு காட்டு அது கொண்டுவரல அவசரத்தில நீ பொய் சொல்லுற பொய் சொல்லுற என்று அடித்தார்கள் அப்போது ஓர் எண்ணம் தோன்றியது மனதில் அங்க என் அண்ணன் நாலு பேர அடித்துவிட்டு செத்து போனான் வீரனாக நான் அடிவாங்கி சாகிறேன் கோழையாக அடித்தார்கள் அடித்தார்கள் குடும்பத்தில் எத்தனை பேர் 5 பேர் அப்பா , அம்மா  நான் அண்ணா மூன்று பேர் சரி அவங்கள் எங்க அவர்களால் வர முடியல நான் இங்க வந்தன்  அவன்ட பையை பாருங்கள் என்றனர் வாந்தி நிரம்பிய பையும் சேட்டும் சாரனுமாக இருந்தது  எல்லாவற்றையும் எழுதிய பின் ஒரு கையெழுத்து வாங்கினார்கள் .வாங்கிய அவர்கள் இங்கு நடந்ததை யாரிடமும் சொல்ல கூடாது என்று சொன்னார்கள் நானும் ம் போட முகத்தை துடைத்து ஓர் அகதி முகாமுக்கு கூட்டி சென்றார்கள் பெண்களையும் கடும் போக்கில்தான் விசாரித்து இருக்கிறார்கள் என்பது அவர்கள் வாகனத்தில் இருந்த அவர்கள் முகத்தில் என் மனம் அறிந்து கொள்கிறது.

அகதிகள் முகாம் வந்ததும் எங்களை இறக்கி கட்டளை போல யாரும் 6 மணியின் பின்  வெளியே தங்க கூடாது இங்குதான் தங்க வேண்டும் வெளியில் செல்ல கூடாது அப்படி போவதென்றால் பொலிசாரின் அனுமதி  இல்லாமல் போக கூடாது என்றும் அவர்கள் அங்கு எழுதி எடுத்த பெயர் விபரங்களை கொடுத்து விட்டு போகிறார்கள். அந்த முகாமுக்கு பொறுப்பானவர்களிடம் நாங்கள் வந்து இறங்கினதை யாரோ வெளிநாட்டுக்காரர்கள் வந்து இறங்குனது போல் அங்கே நம் சனங்கள் வந்து பார்த்தாலும் யாரும் கண்டு கொள்ளவும் இல்லை கதைக்கவும் இல்லை.

காரணம் பின்பே அறிந்தேன் அங்கே சில உளவாளிகளை இறக்கி இருக்கிறார்கள் என்பது அதன் பின்பே அறிந்தேன் என்னை யாருக்கும்  அங்கே தெரியாது அங்கு அவர்களுக்கும் என்னை தெரியாது எல்லோரும் ஈழமக்கள் ஊர்த்தான் வேறு பெண்களை கூட்டிக்கொண்டு சென்றார்கள். எங்கள் வீட்டில் இரவில் தங்குங்கள் என்று ஆனால் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை அது எனக்கும் நல்லம் அவர்களுக்கும் நல்லம் என்று நானும் நினைத்து அந்த ஓர் குடை போல மரத்தில் படிக்காத புத்தகம் போல் அந்த இடத்தில் அமர்ந்துகொண்டேன்.

இருளும் சுழ அந்த இருளில் தம்பி இந்த சோறை சாப்பிடு இங்க கதைச்சாலும் சந்தேகப்படுவானுகள் தண்ணி இந்த போத்தலில் வைத்திருக்கிறன் குடி என்று ஓர் குரல் மட்டும் சொல்லிவிட்டு இருளில் நடந்து செல்கிறது யாரா இருக்கும் என்று என் கண் தேடினாலும் மனக்கண் அந்த குரலை பதிவு செய்து விட்டது.

அடுத்த நாள் காலை அந்த இடத்தில் வந்த ஓர் முதியவர் அவரை அங்குள்ளவர்கள் இரும்பு  அழைப்பார்கள் போல் ஏனென்றால் யாருக்கும் பயப்பாடதவர் அவர்தான் தம்பி கவலைப்படாத எந்த ஊர் தம்பி வவுனியா  ஐயா நான். சரி சரி நான் அரசரெத்தினம் என்னை இரும்பு மனிசன் என்று சனம் கூப்பிடும் எனக்கு இஞ்ச ஒருத்தருக்கும் பயமில்லை நான் தான் இங்க ராஜா என்றார். வார்த்தையிலும் ஓர் கம்பீரம் ஒலிக்கிறது யாரும் தெரிஞ்சவங்கள் இருக்கிறாங்களா இல்லை ஐயா எனக்கு ஓர் வேலை வாங்கி தாங்க எடுத்த உடனே வேலை எல்லாம் எடுக்க இயலாது இங்க. இங்க இருக்கிறவனுக்கே வேலை இல்லை இன்னும் எடுக்க இயலாம இருக்கு அப்படி எடுத்தாலும் இவனுகள் விடமாட்டானுகள்  பொலிஸ்க்காரன்கள். இஞ்ச உள்ள சனம் வெடிச்சதமும் ஷெல் சத்தமும் தான் கேட்கல மற்றும் படி இங்கேயும் செக்கிங் அடக்குமுறைதான் பார்த்திருப்பாதானே ஓம் பார்த்தன் இப்ப தான் யோசிக்கிறன் ஏன் வந்தன் என்று இங்கு ? உயிர் மட்டும் இருக்கும் அப்ப அப்ப வந்து அதையும் எடுப்பானுகள்  உன்னிட்ட ஓர் கேள்வி கேட்கவா எந்த வேலையென்றாலும் செய்வா தானே ம் செய்கிறேன் சோற்றுக்கு என்ன செய்வது தனியே நான் ம் சரி உன்னை எனக்கு நன்றாக பிடித்து போய்விட்டது நாளைக்கே உனக்கு ஓர் வேலை தேடி செல்கிறேன் கிடைத்தால் நான் அங்கே உன்னை கூட்டிக்கொண்டு போகிறேன் என்றார். சரி ஐயா மிக்க நன்றி அதை செய்து தாருங்கள் என்று அவரின் மீள் வருகையை எண்ணி காத்திருந்தேன்.

நாட்கள் கிழமையாகியது அரசர் ஐயா வந்தார் பையை எடு  என்னையா வேலை கிடைச்சிட்டுதா ஓம் ஓம் கிடைச்சிட்டுது என்னுடன் வா என்று வாசலில் இருந்த காவலர்களிடம் பதிந்து விட்டு என்னை கூட்டிப்போகும் போது அந்த காவலாளி எங்கு வேலை யார் முதலாளி அவர் சைன் பண்ன வேணும் என்றால் கலிய பெரும்மாள் வந்து சைன் பண்ணுவார் என்றதும் காவலாளி வாயடைத்து போனான் கலிய பெருமாள் பெரிய ஹோட்டல் முதலாளி பல ஹோட்டல்களின் அதிபதி மிகப்பெரிய பணக்காரர் கூட அந்த ஊரில் அவரின் அந்த உணவகத்துக்கு கூட்டி சென்றார் பெரிய ஹோட்டல் தான் உள்ள போக அனுமதிக்காக காத்திருந்தோம் அவரை சந்திக்க போகும் போது படிச்சிருக்கிறியா என்று கேட்டால் இல்லை என்று சொல்லு சரியா சரி. இல்லாட்டா வேலை தரமாட்டாங்கள் சரி ஐயா ……. ஐயா வணக்கம் இந்த பையன் தான் நான் சொன்ன பையன் ஓ என்ன பெயர் தமிழரசன் ஐயா சரி இந்த ஓட்டல்ல வேலை செய்வையா செய்வன் ஐயா சரி ஹனி ஹனி அவரது உதவியாளரை அழைத்து டிஸ் வோஸ்சிக்கு ஒரு ஆள் தேவை என்று சொன்னியே இந்த பையன வச்சிக்க சரியா ஆள சாய்ந்தரம் 6 மணிக்குள்ள விட்டிரணும் சம்பளம் 3000 ரூபா என்றார் சரி நன்றி ஐயா என்று சொல்லி விட்டு கீழே வந்தேன்.

சமையலறை பல ஆண்கள் தலையில் தொப்பி நெஞ்சுக்கு சட்டை வாய்க்கு கவர் எல்லாம் போட்டு சமைத்துக்கொண்டிருந்தார்கள்…… ஹனி யோ எல்லோரிடமும் ஶ்ரீ லங்கா பையன்  இவன் புதுசா வந்திருக்கா புள்ள வேலைக்கு என்று ஒரு வெளிநாடு அமைச்சர் அறிமுகப்படுத்துபோல என்னை அறிமுகப்படுத்தினார் எல்லோரும் சிரித்த முகத்துடன் இந்த அமைச்சரை என்னை வரவேற்றார்கள் இந்த சிறிலங்காவை ஶ்ரீ லங்கா என்று அழகாக சொன்னார்கள் சொல்வார்கள் தமிழ் நாட்டு மக்கள் ஶ்ரீலங்காவில எங்க மட்டக்களப்பா கனபேருக்கு மட்டக்களப்பு பரீட்சியமாக இருந்தது அதேபோல யாழ்ப்பாணமும் பரீட்சியமாக இருந்தது இல்லை நான் வவுனியா என்றேன் சாப்பிட்டியா இல்லை சாப்பிடு என்றார்கள் நானும் சாப்பிட்ட பிறகு எனக்கு இன்னுமொரு அயல் நாட்டு எங்கதுறையை சார்ந்த உமர் என்பவரை அறிமுகப்படுத்தினார்கள் அவரோ அண்டாக்குள் இறங்கி சாதரணமாக பாத்திரங்களை கழுவுவார் ஆள் குள்ளம் அங்கே முஸ்லீம்கள், இந்துக்கள் சம்மாம பழகி வேலைசெய்கிறார்கள்.

இலங்கையிலோ மாறாக இருக்கும் மூவினமும் சொல்ல கூடியதாக இராது இருந்தாலும். உமரோ நான் கீழைக்கரையை சேர்ந்தவன் எனக்கு அதெல்லாம் எங்க்ருக்கு என்று தெரியாப்பா வணக்கம் என்ன பெயர் தமிழரசன் சரி சோட்டா தமிழு என்று கூப்பிடவா என்று கேட்டான் உமர் சரி உன் துறைக்கு வந்த பிறகு தமிழ் என்ன இங்கிலிசு என்ன அப்படியே கூப்பிடு என்றேன் இதான் வேலை காலையில ஆறு மணிக்கு வரணும் மாலையில நீ ஆறு மணிக்கு போகலாம் சரியா சரிங்க ஐயா இந்தாப்பா நம்மள ஐயா என்று கூப்பிடக்கூடாது சரியா சரி ஐயா என்னடா நீ திரும்பவும் ஐயா என்று கிட்டு .....  இன்னும் வரும் 

  • கருத்துக்கள உறவுகள்

அனல் பறக்கட்டும். நாங்கள் குளிர்காயுறம் ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...முனி! அட...தனி...!

ஆழமான கடலின் அலைகள் எப்போதும் கொக்கரித்த படியே இருக்கும்!

அதைக் கண்டு பயந்து விட்டால்....அதன் உள்ளே புதைத்திருக்கும் பொக்கிசங்களைப் பற்றி அறிந்து கொள்ளவோ....அவற்றை அடைந்து கொள்ளவோ முடியாது!

தமிழ் நாட்டு முஸ்லிம்கள் ...இலங்கை முஸ்லிம்களிலிருந்து வேறு பட்டவர்கள் என்பதை அறிந்திருக்கிறேன்! தமிழாய்ந்த அறிஞர்கள் பலர் அவர்களுக்குள் அடங்குகிறார்கள்!

மற்ற இனத்தவருடனும்....சகஜமான முறையில் பழகுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்!

இலங்கையில் முஸ்லிம்கள்....தங்களுக்கு மட்டும் தான்...அல்லா...மூளையை அளவுக்கு அதிகமாக வைத்து விட்டார் என்று எண்ணிக்கொள்ளும் மனநிலையில் வாழ்கின்றனர்!

உங்கள் தொடர்....பல...பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!

அம்மாக்கள்...எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும்...ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள் போல உள்ளது!

தொடருங்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தனி. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான் என்பர்.அதுபோல தான் அகதியும். உங்கள் அகத்திலுள்ள தீ எரியட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 ஐயாவ மாத்திரம் தான் ஐயா என்று கூப்பிடணும் சரியா யாரு கலிய பெருமாள் ஐயாவையா கூடவா ஆமாப்பா அவர பெயர சொல்லகூடாது சரியா ஏன் பெயரை சொல்லித்தானே கூப்பிட வேண்டும் அது உங்க ஊரில  இங்க ஐயா என்றுதான் கூப்பிட வேண்டும் சரியா சரி சரி அங்கே முதலாளிக்கு அதிகமாக மரியாதை கொடுப்பது அங்கே நான் கண்ட உன்மை. ஐயா வருகிறார் என்றாலே அங்கே வேலை செய்பவர்கள் நடுக்குவார்கள் என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை இடையில் உள்ளவர்களால் அங்கு பெரும் மாயை ஒன்று உருவாக்கப்படிருப்பது தெரிந்தது இருந்தாலும் அங்கிருந்த பயம் மெதுவாக குறைந்தது எனக்கு வேலை ஆரம்பமானது .மூன்று நீர்த்தாங்கிகளுள் நீரை நிறைப்போம் அந்த நீர்தாங்கிகளுள் முதலாவதாக வரும் கோப்பைகளை கழுவி ஓர் நிரில் இடுவோம் அடுத்த நீர் அடுத்த நீர் இப்படி மூன்று நீரில் கழுவி அடுக்கிவிடுவோம் அடுக்கியவை மீண்டும் உணவுக்கழிவை ஏந்தி மீண்டும் வரும் இப்படி நாட்கள் சென்றது மாதங்களும் சென்றது  கைகளும் அந்த சம்பூ (சோப்பு) பட்டு கை இடவுகள் எல்லாம் அவிந்தது. சூடு நீரும் பட்டு லீவு எடுக்க முடியாது வேலை போய்விடும் முதலாளியிடம் காட்டி லீவு எடுக்கலாம் என்று பார்த்தாலும் இடைத்தரகர்கள் விடமாட்டார்கள். ஐயாவையெல்லாம் சந்திக்கவும் முடியாது பார்க்கவும் முடியாது என்றார்கள் ஏமாற்றம் திருப்பமும் வேலையில் களைப்பு அடுக்கு மாடிகள் போல் குவியும் தட்டுக்கள் சனி ஞாயிறு கிழமைகளில் சாப்பிடக்கூட நேரம் இருக்காது வேலைகள்.

ஓர் நாள் பரோட்டா சாப்பிடுவதற்க்காக எடுத்து வந்தேன் அந்த பரோட்டா மாஸ்டர் பரோட்டா எடுக்க கூடாது என்றார் எனக்கும் ஒன்றும் புரியவில்லை ஆ சரி இனிமேல் எடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு ஓர் படிக்கட்டில் இருந்து சாப்பிட்டேன் உமரிடம் கேட்ட போது அவனோ பரோட்டா தீர்ந்து விட்டால் இவனிடம் மீண்டும் பரோட்ட போட சொல்வார்கள் அதனால் அப்படி சொல்கிறான். இருந்தாலும் பரோட்ட எடுக்க கூடாது என்றான் ஐயா திட்டுவார் என்றான். ஏன்றா அது அப்படித்தான் அடப்பாவிகளா நேற்றுதானே 50 நூறு பரோட்டாக்களுக்கும் மேலாக கொட்டினீர்கள் மனிசன் சாப்பிட்டால் என்ன?? என்னையும் மிஞ்சும் உணவுகளை கட்டிக்கொண்டு செல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று சொன்னேன் இல்லப்பா இந்த ஓட்டல்களில் இப்படித்தான் றூல்ஸ் என்றான் உமர். அதுக்காக மிஞ்சுவதை மக்களுக்கு கொடுத்தால் என்ன அது மனிசன் வயித்துல சமிச்சு போகும் தானே அதெல்லாம் இங்க பார்க்க இயலாது என்றான் சரிடா நேரம் ஆகிறது அங்க சைன் வைக்கணும் இல்லாட்டா அந்த கவலாளி அடிக்க வருவான் என்று சொல்லி விட்டு ஊரை நினைத்த ஞாபகமும் அம்மா அப்பாவின் தேடல்களும் வழியில் தேடி வந்தேன் கண்ணை குளமாக வைத்து.வீட்டை விட்டு வந்தால் தெருவில் திரியும் தெருநாய் போல.

அடுத்த நாள் யாரும் அகதிகள் முகாமை விட்டு போக கூடாது என்றார்கள் காரணம் யாரோ டெல்லியில் இருந்து அமைச்சர்கள் வருகிறார்களாம் என்பதற்க்காக எல்லோரும் திறந்த வெளி சிறைச்சாலையில் அமர்ந்திருந்தோம் அப்போது அரசன் ஐயா வை காண்கிறேன் ஐயா எப்படி இருக்குறீங்கள் நானோ கொஞ்சம் உடம்பு சரியில்லை ஏதாவது பணம் இருக்கிறதா ஓம் இன்னாங்க. ஆயிரம் ரூபா வைத்துக்கொள்ளுங்கள் கொடுக்காத தம்பி கொடுக்காத ஏன் ஏன் இப்ப அவரு சரியா குடிக்கிறாரு ஊரில யாரோ செத்து போயிட்டாங்களாம் சொந்தகாரர்கள் என்று சொன்னார்கள் யார் ஐயா சொல்லுங்க. என்ற சொந்தங்கள்தான் ஷெல் வீழ்ந்ததில எல்லோரும் செத்திட்டாங்களாம் எப்படி உங்களுக்கு தெரியும் சனம் பொய் சொல்லும் சும்மா உதுகளை நம்ப வேண்டாம் என்று சொன்னாலும் அழுத மனுசர் நிறுத்த வில்லை ஒரு இரும்பு மனுசன் அழலாமா ? என்று கேட்க நானும் மனுசன் தானேடா என்றார் அவரை கட்டியணைத்து  அழுது ஆறுதல் சொல்ல மட்டுமே முடிந்தது அந்த நேரத்தில்.

என்னை தேடி உமர் வந்திருந்தான் முகாமில் முன்பே ஐயா கூட்டிட்டு வரச்சொன்னாரு தமிழரசனை மட்டும் காவலாளி மறுத்தாலும் இந்தியாவில் அதிகாரத்திற்கும் பணத்துக்கும் சட்டம் வளையாத என்ன நானும் கைஒப்பத்தை வைத்து விட்டு அவனுடன் செல்கிறேன். போகும் வழிகள் பொலிஸ்காரர்கள் வழி நெடுகிலும் பாதுகாப்புக்கு நின்றார்கள் அங்க இங்க பார்க்காத நேராக ஓட்டலுக்கு வா என்று இழுத்துகொண்டு சென்றான் உமர் எனக்கு அன்றைய நாள் விடுமுறை கிடைக்கும் என்று இருந்தாலும் கிடைக்கவில்லை. எங்கிருத்தோ வரும் ஒருவனுக்காக அன்று பூட்டியது முகாமை மடுமல்ல அன்றைய தினக்கூலிக்கு போகும் அத்தனை என் உறவுகளின் வயிற்றையும் தான் . வாழ்க பாரத தேசம் என்ற பாட்டு  மனதில் இருந்து வாய்க்குள் வந்து எச்சிலாக துப்பிவிட்டு போகிறேன்.

வேலை ஆரம்பமானது ஒரு 2 மணித்தியாலங்கள் முடிந்ததும் ஐயா வீட்டில் இருந்து போண் வந்தது போல் அங்கே ஏதோ வாட்டர் பைப்பு உடைந்து விட்டதாம் குழி வெட்ட ஆள் வேணுமாம் நீ போ நானோ ஐயா வீடு என்னக்கு தெரியாது என்றேன். உன்னை கூப்பிட்டு போக ஒரு பிளம்பரு வருவாரு என்று உமர் என்னை மாட்டி விட்டான். நான் போவது முதலாளிக்கு கூட தெரியாது அந்த பிளம்பர் வந்ததும் அவரது சிறிய மோட்டார் வாகனத்தில் கூட்டிக்கொண்டு போனார் பெரிய வீடு வீட்டு தோட்டம் பல வேலை ஆட்கள் இருந்தாலும் அடி மட்ட வேலைக்காரன் தான் எங்க போனாலும் அடிமாடு என்ற  எண்ணம் வந்தாலும் குழி தோண்ட ஆரம்பமானேன். கிரவல் மண்ணூம் கற்களும் மீண்டும் தேய்ந்த கைகள் புண்ணாகி ரத்தம் வழிய ஆரம்பித்தது சீலையை கட்டிக்கொண்டு வேலையை முடிக்க வேண்டும் ஆறு மணிக்கு முகாமுக்கு போக வேண்டும் எண்ணம் இருந்தாலும் வேலையை தொடர்ந்தோம். நாங்கள் வேலை முடியும் தருவாயில் அந்த வாசலை கீபீரின் சத்தம் போல் ஊடறுத்து மோட்டார் பைக் ஒன்று முதலாளி  மகன் ஊடறுத்து வீட்டின் வாசலில் நிறுத்தி இருந்தான். அப்போது அந்த குடும்பத்தின் உள்ளவர்களை காண்கிறேன் முதலாளிக்கு இரண்டு பிள்ளைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று நாங்கள் வேலை செய்யும் இடத்தில் வந்தவர்கள் முடிந்து விட்டதா வேலை என்ன நடந்திருக்கிறது. நிலத்தில் குழாய் ஒன்று வெடித்திருக்கிறது அம்மா  நீங்கள் வந்தது எங்களுக்கு தெரியாது சாப்பிட்ட நீங்களா ? ஓம் சாப்பிட்டம் (ஆனால் சாப்பிடல்ல) சரி எதாவது குடியுங்கள் என்று சொல்லி விட்டு உங்கள் பேச்சு வித்தியாசமா இருக்கு நீங்கள் எந்த ஊர் நான் இலங்கை ஓ அதான் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

என்று சொல்லி விட்டு போனார்கள் ஐயாவின் மனைவியும் நல்லவர்தான் போல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் களைப்பாறும்  போது ஐயோ அம்மா என்று அழுகுரல் கேட்டது பாரிய சத்தத்துடன் முதலாளி மகன் பைக்கை வட்டம் போட்டு திருப்பியதில் பைக் சறுக்கி முன்னிருந்த தூணில் மோதி தலை பிளவாக மயக்கிய நிலையில் ரத்தத்தில் மிதக்கிறான் அவர் அம்மாவோ என் பிள்ளையை காப்பாற்றுங்கள் அவசரத்தில் அவர்கள் கார் கூட அங்கில்லை பைக்கை நிறுத்தி அவர் மகனை நடுவில் நிறுத்தி பிளம்பரிடம் ஆஸ்பிட்டல் தூரமா இல்லை ஒரு மூணு கிலோமீற்றர்தான் போகணும் என்றார் நீங்கள் இவரை பிடித்து கொள்ளுங்கள் நான் ஓட்டுகிறேன் பைக்கை  எடுத்து அந்த பையனை நடுவில் வைத்து பைக்கை ஓட்டுகிறேன் ரத்தம் என் சட்டைகளை நனைக்கிறது நீண்ட நாட்களின் பின் அங்கே நான் அந்த வாடையை உணர்கிறேன். ஆஸ்பத்திரி வந்ததும் அக்சிடண்டா இல்லை அவரே தடக்கி விழுந்தார் பொலிசை கூப்பிட வேண்டும் இல்லை கூப்பிடாதீங்க ஹோட்டல் முதலாளி பையன் கலிய பெருமாளின் என்றேன் உள்ளே எடுத்தார்கள் ரத்தம் அதிகமாக போய் இருக்கிறது ரத்தம் வேண்டும் என்றார்கள் எனது ரத்தமோ சர்வ வழங்கி ரத்தத்தின் குறுப்பை சொன்னேன் வாங்கோ வந்து ரத்தம் கொடுங்கோ என்றார்கள். கொடுத்துவிட்டு வந்ததும் அங்கே முதலாளி பதட்டத்துடனும் அவரது மனைவியும் அழுது கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் என்னை கண்டு கொள்ள வில்லை மகனின் உள்ள பிரியத்தால் தேம்பி தேம்பி அழுதார்கள்  நான் அவர்களுக்கு தெரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து முகாமுக்கு செல்ல ஒரு சந்தியில் திரும்பும் போது பொலிஸ் பார்த்துவிட்டார்கள்.

தீயில் ஓர் பகுதி மீதம் இருக்கிறது ........................

நீங்கள் இருபத்தி நான்கில் இந்தியாவில் அகதியாகக் கோப்பை கழுவியிருக்கிறீர்கள். நான் கனடாவில் பதின்மத்தில் அகதியாகக் கோப்பை கழுவியிருந்தேன். நீங்கள் விபரிக்கும் உமர் போன்றவர்களின் அன்பு இங்கு அங்கங்கு இருந்தது. ஆனால் உரிமையும் கண்ணியமும் நீங்கள் விபரிப்பதோடு ஒப்பிடுகையில் அபரிமிதமாக இருந்தது. 

நான் கனடாவிற்கு அதிகாலை ஒரு மணிக்கு அகதியாக விமான நிலையத்தில் வந்திறங்கியபோது எனது கவனத்தைக் கவர்ந்த முதல் விடையம், தரை துப்புரவு செய்பவர் சகஜமாக கோப்பி பருகியபடி கதிரையில் அமர்ந்திருந்தமை தான். ஏனெனில் அத்தகைய ஒரு சமூகத்தில் இருந்து நான் வந்திருந்தேன். 

எங்கள் வீட்டில் வேலையாட்கள் எங்கள் கதிரைகளில் அமர்வதில்லை. எனது வயதொத்த ஒரு சிறுமியும் எங்கள் வீட்டில் வேலைக்கு நின்றிருந்தாள். நாங்கள் கதிரையில் இருந்து பார்த்த பிறேடிபன்ச் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை அவள் தரையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டுவேலையாள் கதிரையில் அமரும் காட்சி தொலைக்காட்சியில் வந்தது. அவள் கேட்டாள் அம்மா அங்கு வேலையாட்கள் கதிரையில் அமர்கிறார்கள் நானும் அமரட்டுமா என்று. அந்தக் காத்திரமான நெஞ்சைத் துழைக்கும் கேழ்விக்கான அத்தருணத்தின் பதில் கொல்லென்ற சிரிப்பாக மட்டும் இருந்தது. நானும் சேர்ந்து சிரித்ததாகத் தான் ஞாபகம். ஆதலால் கனேடி விமானநிலையில் தரை துரப்புரவுசெய்பவர் கோப்பி அருந்தியபடி அமர்ந்தது என் கவனத்தைப் பெற்றது. 

நான் பாலகனாய் வந்து மனிதனாகியது கனடவில். தமிழன் மனிதம் அற்றவன் என்பதோ அல்லது நான் இ;ங்கு வந்தபோது இருந்த மனநிலைக்குக் காரணம் தமிழன் பாரம்பரியம் என்பதோ அல்ல நான் கூறுவது. மாறாக எந்தச்சமூகத்திலும் பெருநீரோட்டம் வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கும். யாழிலிலும் இருந்தது. தற்போது இந்தியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பின் அங்கும் தெரிகிறது. காரணம், வர்க்க மனநிலையில் எப்போதும் அடுத்த தட்டு மட்டுமே தெரியும். அடுத்த தட்டின் அங்கீகாரம் அதற்கு மிகமுக்கியம். ஆதலால் அது விழிப்பற்று இருக்கும்.

கோப்பை கழுவியது எனது முதலாவது போதிமரம். இன்று வீட்டில் நான் எனது கோப்பை கழுவும் போதும் அந்த அமைதி வந்துபோகும்.

நன்றாக எழுதுகிறீர்கள் தமிழரசன். தொடர்ந்து எழுதுங்கள்.

பல பழைய நினைவுகளை கிழறுகின்றது உங்கள எழுத்துக்கள்..ஈழத்தில் போர் உக்கிரமான காலத்தில் வாழ்தல் என்பது அச்சம் மிகுந்த நெருக்கடிக்குள் இருந்தது. தமிழகம் நகர்ந்தபோது வாழ்வாதாரங்களை இழந்து வாழ்தலுக்கான போராட்டத்தில் இருந்துதான் சமூகம் சார் அனுபவங்கள் ஏராளமாக கிடைத்தது. கடற்தொழிழில் இருந்து தோட்ட வேலைகள், வீதி வேலைகள் தொழிற்சாலைகள் என பல பத்து விதமான வேலைகள், பல நுறு ஊர்கள் கிராமங்கள் குக்கிராமங்கள் நகரங்கள் அங்குள்ள விதவிதமான மனிதர்கள் அவர்ளோடு இணைந்த தொழில்சார் உறவுகள் நினைவுகளில் அதிக இடத்தை தமிழகமே நிரப்பிவிட்டது. ஈழவாழ்கை வடுக்கள் காயங்கள் சிறைகள் வேதனைகள் என பலதை பதிந்து விட்டது. கனடா வழ்க்கை அவை எதற்கும் மாற்றாக அமையவில்லை. அவைகளை மீழ நினைத்துப் பார்த்துவிட்டு மண்டையை போடுவது என்று அமைந்துவிட்டது. 

பதிவுக்கு நன்றிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இந்த அனுபவங்கள் இல்லை என்பதால், அகதியாக வாழ்வதன் வலி தெரியாது..

ஈழத்தின் துயரங்களையும், அம்மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் மன அழுத்தங்களையும், ஏக்கங்களையும் ஊடகங்கள், எழுத்துக்கள், ஈழ நண்பர்கள் சிலரின் மூலமாகவே உணர்ந்துள்ளேன்.. இவைகள் எமக்கு உணர்த்தியவை துயரத்தில் பத்து சதவீதம்கூட இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

முனியின் பதிவுகள் மனதை இளக்கிவிட்டது.

1 hour ago, சண்டமாருதன் said:

.. கனடா வழ்க்கை அவை எதற்கும் மாற்றாக அமையவில்லை. அவைகளை மீழ நினைத்துப் பார்த்துவிட்டு மண்டையை போடுவது என்று அமைந்துவிட்டது.

Just a thought..

மாற்றாந் தாயாக இருந்தாலும், ஏற்கனவே வாழ்ந்த தமிழகத்திற்கு ஏன் திரும்பக் கூடாது..? :unsure:
முதுமையில் கனடாவில் பொறுப்பான கவனிப்பு இருந்தால் தொடரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டை முழுவதும் ரத்தம் ஏய் நில்லு நில்லு என்ன சட்டையெல்லம் ரத்தம்  ஐயா மகன் அக்சிடன்ட் பட்டவர் அவரை ஆஸ்பத்த்ரிக்கு கொண்டு வந்தன் என் பேச்சில் இலங்கை என்பதை கண்டுகொண்டார்கள் நீ ஶ்ரீ லங்காவா ஓம் பிடித்து வாகனத்தில் ஏற்றினார்கள். அக்சிடண்ட் என்றால் என்ன கையெல்லாம் துணியால் கட்டி இருக்குறாய் காயம் நீ என்னவோ தப்பு பண்ணியிருக்கிறாய் உன்மையை சொல்லாவிட்டால் நடப்பது வேறு என்று பயமுறுத்தியே ஸ்டேசனுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள் . இது முதலாளிக்கு தெரியவில்லை அங்கே கொண்டு சென்றவர்கள் இன்று நீங்கள் அகதி முகாமை விட்டு வெளியில் செல்ல கூடாதே ஏன் சென்றாய் என்ன திட்டம் வைத்திருக்கிறாய் என்று சொல்லு சொல்லு சம்பந்தமில்லாமல் அடித்து நொருக்கிவிட்டார்கள். உன்மையை சொன்னால் கூட அதை ஏற்காத பாரத தேசம். அந்த ரத்தம் படிந்த சட்டையை எடுத்து கைகளை பின் கையால் கட்டி மீண்டும் மீண்டும் அடித்து என்ன செய்ய போகீறீர்கள் உன் கூட்டாளிகள் எங்கே என்று சொல்லு சொல்லு வாயில் உதைத்தார்கள். நான் மட்டும் தான் கலிய பெருமாள் ஐயாடா ஹோட்டல்ல வேலை செய்யிறன் ஐயாட வீட்ட வேலையென்று சொன்னாங்க போனபோது அவர் பொடியன் பைக்கால விழுந்திட்டான் நான் தான் ஆஸ்பத்த்ரிக்கு பைக்கில வச்சி ஏத்திட்டு வந்தன் எனக்கு இங்க உள்ள லைசன்ஸ் இல்லை பொலிஸ் கேசாகினால் யாரு கொண்டு வந்தவங்கள் என்று பிரச்சினையாகிடும் என்றுதான் ஆஸ்பத்திரிய விட்டு ஓடி வந்தன் என்று சொன்னேன். அவர்கள் நம்புவதாகவில்லை இன்று டெல்லியில் இருந்து அமைச்சர்கள் வரும் நாள் நீ இங்கே இரு நாளை விசாரித்து விட்டு கேஸ் ஒன்றுதான் போட்டு அனுப்புவம் என்றார்கள் .

இந்த சம்பவம் நடந்ததிலிருந்து ஐயா என்னை தேடி அகதி முகாம்கள் அவர் வீட்டு வீதிகள் எல்லாம் தேடி இருக்கிறார். ஆனால் உமர் தான் நாய் போல எல்லா இடங்களிலும் தேடி அலைந்திருக்கிறான் என்னை அந்த பழகிய பாசமா நட்பா என்று தெரியவில்லை.  நான் கிடைக்கவில்லை  அடுத்த நாள் காலையில் பொலிஸ் ஸ்ரேசனுக்கு ஓர் அழைப்பு போட்டு அந்த விபரத்தை சொல்லி அதிகாரியை கேட்டிருக்கிறார்  ஓம் ஐயா நாங்கதான் பிடித்தோம் பொய்சொல்கிறான் என நினைத்து செல்லில வச்சிருக்கிறம் என்றார் அவரோ போணில் திட்டியிருப்பார் போல செல்லுக்கு ஓடி வந்த அதிகாரி சட்டையை போடு அடிச்சதா சொல்லாத சரியா கேஸ் ஒன்றும் போட மாட்டோம் சரியா என்றனர். ஐயா வந்து என்னை பார்த்ததுமே அறிந்து கொண்டார் ஸ்டேசனில் அந்த பொலிஸ்க்காரனுக்கு அடிக்காத குறையா ஒன்று சொன்னார் அங்க தான் அடி வேண்டிக் கொண்டு உயிர் பிழைக்க வாராணுகள் என்றால் இங்கேயும் அடித்து சாகவைக்கிறீங்களேடா மனுசனா நீங்கள் ? உங்களை கவனிக்கிற விதத்தில் கவனிக்கிறேன். என்று சொல்லி விட்டு அவர் வீட்டுக்கு அழைத்து போனார். நீ ஏன் போன நீ அந்த ஆஸ்பிட்டல விட்டு. இல்ல ஐயா எனக்கு லைசன்ஸ் இல்ல பொலிஸ் வந்து கேட்டால் பிரச்சினை ஆகிவிடும் என்றுதான் போனநான். இடயில பொலீஸ்கிட்ட மாட்டிக்கொண்டேன் உங்க பையன் எப்படி ம் வீடு வந்திட்டான் நீ படிச்சிருக்கிறியா ம் ம் உன்மையை சொல்லு ஒம் டிகிரி முடிச்சிருக்கிறன். ஏன்றா பிறகு பொய் சொன்ன அரசன் ஐயா தான் சொன்னவர் படிச்சிருந்தால் வேலை கொடுக்க மாட்டார்கள் இங்கே என்று. வீடு வந்து சேர்தோம் சட்டை இல்லை கிழிந்த சட்டையை பார்த்ததும் ஐயா பொலிஸ் ஸ்டேசனில் மாட்டிக்கொண்டதையும் சொல்ல அவர் மனைவியோ அழுது கண்ணீர் வடித்துவிட்டார்.என் மகனை உன் ரத்தம் கொடுத்து காப்பாற்றி இருக்கிறாய் நன்றி நன்றி கையை கூப்பினார் ஐயோ அம்மா அப்படி சொல்லாதீங்க உங்க கடை சோற்றை சப்பிட்டு இருக்கிறன் அதற்கான நன்றிதான் இது . வா உள்ளே வா வந்து பாரு அவனை  அவர் மகனோ கையை ஆட்டிக் கொண்டு என்னை கூப்பிட்டான் இங்கே இருந்துவிடு எங்களுடன். முகாமுக்கு போக வேண்டாம் என்றான் அவர்கள் அனைவரினதும் விருப்பமுமாக இருந்தது  நானோ இல்லை நான் ஊருக்கு போக போகிறேன்.

இங்கே இருந்தால் நான் அடிக்கு மேல் அடிவாங்கி ஓர் அடிமையாகிவிடுவேன் ஐயா உங்களால் முடிந்தால் என்னை என் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள் அங்கே என் கல்வி தகமைக்கு ஓரு வேலை எடுத்துகொள்வேன் என்று கூறினேன் ஐயாவோ உனக்கு ஹோட்டலில் வேலை வெயிட்டராக  வேலை போட்டு தருகிறன் இல்லாவிட்டால் இந்த வீட்டில எங்களுடன் ஒத்தாசைக்காவது இரு என்றார் இப்படி  எல்லோரும் என் மீது அனுதாபத்தை தெரிவிக்க நான் மறுத்துக்கொண்டே இருந்தன் என் அம்மா இன்னும் வரவில்லை அப்பாவும் வரவில்லை நான் அவர்களைகண்டு பிடிக்க வேணும் ஊருக்கு போய் ஐயா.  ஐயாவோ நீ விரும்பினால் எப்போதும் என் வீட்டுக்கு வரலாம் இது உன்வீடு போல் என்றார் நன்றி ஐயா

ஐயாவோ சரி உனக்கு பாஸ்போட் எடுக்க முடியாது இங்கே படகில் தான் அனுப்பமுடியும் என்று சொல்லிவிட்டு  ஒருதொகை பணத்தையும் ஒரு பெரிய பை நிறைய உடுப்புகளையும் தந்தார்கள்  அந்த உடுப்பு பைகளை வாங்கினேன் அது அவர்களின் ஞாபகத்திற்க்காக.பணத்தை சொன்னேன் ஐயா உங்களால் முடிந்தால் அந்த முகாம்களில்  இருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லி அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு  ஆனந்த கண்ணீருடன் விடபெற்றேன் படகின் வரவுக்காக …………………………………………………………………………………………………………………………….. ஓரு வாரத்தில் வந்துவிட்டேன் ஈழத்திற்கு இன்னும் அம்மா அப்பா உறவுகள் கிடைக்கவில்லை எங்குதான் சென்றார்களோ தேடிக்கொண்டிருக்கிறேன்.??

வெளிநாட்டில் நாங்கள் சுத்ந்திரமாக வாழ்கிறோம் என்று சொல்லி கொண்டாலும் மனது  அங்கு எல்லைக்கோடு ஒன்று போட்டு வைத்திருக்கும் அதை தாண்டக்கூடாது என. ஆனால் சொந்த நாட்டில் வாழும் போது மட்டும் அந்த எல்லைக்கோடு எங்கிருக்கிறது என்று தெரியாமல் வாழ்கிறேன்  ஆனாலும்  ஓர் தமிழன் என்ற குயுரிமை பெற்ற அடிமையாகவும் அடிமை இல்லாமலும் .

தீ அணைகிறது . 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி பார்த்தாலும் இக்கரைக்கு அக்கரை பச்சை , ஆனால் உயிர் வாழ்தல் எனும் போது எங்காவது போய்த் தொலைவதுதான் விதி.....!

நல்ல அனுபவப் பகிர்வு.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2018 at 11:04 PM, நிலாமதி said:

தொடருங்கள்  உங்கள்  அகத்  தீயை  

ம்  முடிந்து விட்டது அகத்தீ ( அகதி )  மிக்க நன்றி அக்கா உங்கள் ஊக்கத்திற்கு 

On 3/9/2018 at 11:28 PM, suvy said:

அனல் பறக்கட்டும். நாங்கள் குளிர்காயுறம் ....!  tw_blush:

எனது தீயில் வந்து எண்ணெய்யை ஊற்றி போன அண்ணைக்கு மிக்க நன்றிகள் 

1 hour ago, suvy said:

எப்படி பார்த்தாலும் இக்கரைக்கு அக்கரை பச்சை , ஆனால் உயிர் வாழ்தல் எனும் போது எங்காவது போய்த் தொலைவதுதான் விதி.....!

நல்ல அனுபவப் பகிர்வு.....!  tw_blush:

உன்மைதான் அகதியாக வாழ்வது மிக கொடியது அதிலும் அடிமையாக வாழ்வது அதை விட கொடியது ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க இந்தியாவில் அகதி வாழ்க்கை மிக மிக கொடியது 

நன்றி சுவி அண்ண

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தீ அணைய வேண்டும். அகதியை அணைக்க வேண்டும்.

நல்லதொரு பதிவு தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2018 at 11:54 AM, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தில் தமிழனுக்கு சிங்களவர்கள் கேள்விகேட்காமலே அடிக்கிரார்கள் என்றால் இங்கே தமிழர்கள் கேள்வி கேட்டே அடிக்கிறார்கள்  இல்லை ஐயா.

ஆழ்மனதில் ஊன்றிப் போயிருக்கும் கேள்வி.

      அகதியாக இந்தியா போனவர்கள் இன்னமும் கஸ்டப்படுவதாக சொல்கிறார்கள்.மிகவும் அருமையாக மனதைத் தொடும்படியாக எழுதியுள்ளீர்கள்.

19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில் நாங்கள் சுத்ந்திரமாக வாழ்கிறோம் என்று சொல்லி கொண்டாலும் மனது  அங்கு எல்லைக்கோடு ஒன்று போட்டு வைத்திருக்கும் அதை தாண்டக்கூடாது என. ஆனால் சொந்த நாட்டில் வாழும் போது மட்டும் அந்த எல்லைக்கோடு எங்கிருக்கிறது என்று தெரியாமல் வாழ்கிறேன்  ஆனாலும்  ஓர் தமிழன் என்ற குயுரிமை பெற்ற அடிமையாகவும் அடிமை இல்லாமலும் .

உங்கள் அனுபவப் பகிர்வு அருமை.  ஈழத்தில் இருந்து தமிழர்கள் அதிகளவாக அகதிகளாகப் போனது தமிழத்துக்குதான். 30 வருடங்களுக்கு முதல் அகதிகளாகப்போனவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் தமிழகத்துடன் ஒன்றிவிட்டது. அதேபோல்தான் வெளிநாடுகளுக்கு போனவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளும்.  அவர்களுக்கு தாயகம் ஒரு வெளிநாடுபோல் உணர்வுதான். 

நீங்கள் கூறும் எல்லைக் கோடுகளும் ஒரு வேதனையான உணர்வுதான் அடிமைத்தனமும் வேதனையான வாழ்வுதான். உலகில் தமக்காக ஒரு தேசம் வைத்திருந்த மக்களின் வாழ்வும் சிதைந்துபோயுள்ளது. ஈராக் ஆப்கான் இன்றைய சிரியா போன்ற பல நாடுகள் உதாரணம். கனடாவைப் பொறுத்தவரை பல்வேறு நாட்டு மக்களை சந்திக்கலாம்  அவர்களுடன் கதைக்கும் போது அவர்கள் கனடா வருவதற்கு அவர்கள் சொந்த நாட்டில் ஏதோ ஒரு பிரச்சனையை முன்வைப்பார்கள்.  

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எல்லா ஊரும் எம் ஊரே எல்லா மக்களும் நம்மக்களே என்று சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றனார் எழுதியது இவவாறான மக்களுக்கன மன ஆறுதல் என்று எண்ணத்தோன்றுகின்றது. 

On 3/10/2018 at 11:37 AM, ராசவன்னியன் said:

எங்களுக்கு இந்த அனுபவங்கள் இல்லை என்பதால், அகதியாக வாழ்வதன் வலி தெரியாது..

ஈழத்தின் துயரங்களையும், அம்மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் மன அழுத்தங்களையும், ஏக்கங்களையும் ஊடகங்கள், எழுத்துக்கள், ஈழ நண்பர்கள் சிலரின் மூலமாகவே உணர்ந்துள்ளேன்.. இவைகள் எமக்கு உணர்த்தியவை துயரத்தில் பத்து சதவீதம்கூட இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

முனியின் பதிவுகள் மனதை இளக்கிவிட்டது.

Just a thought..

மாற்றாந் தாயாக இருந்தாலும், ஏற்கனவே வாழ்ந்த தமிழகத்திற்கு ஏன் திரும்பக் கூடாது..? :unsure:
முதுமையில் கனடாவில் பொறுப்பான கவனிப்பு இருந்தால் தொடரலாம்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் சென்று வாழ்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கின்றது.  உண்மையில் பலருக்கு இலங்கைக்கு திரும்பச் சென்று வாழ்வதை விட தமிழகத்துக்கு சென்று வாழ்வதே பிடித்திருக்கின்றது. பொருளாதார அடிப்படையிலும்  இலங்கையை விட தமிழகத்தில் வாழ்வதே இலகுவானது. பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்ப திரும்ப போய்வருகின்றார்கள். பலருக்கு ஒருமுறை போய்வந்தபின் போக பிடிக்கவில்லை. ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுவேறாக உள்ளது.  

அடுத்தடுத்த வருடங்களில் தமிழகம் சென்ற வரும் எண்ணமுள்ளது... பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்திற்கு இன்னும் அம்மா அப்பா உறவுகள் கிடைக்கவில்லை எங்குதான் சென்றார்களோ தேடிக்கொண்டிருக்கிறேன்.??

உங்கள் அனுபவப்பகிர்வினை வாசித்தேன். எவ்வளவு காலமாக உங்கள் பெற்றோர்களைத் தேடுகிறீர்கள். சிலவேளை அவர்கள் உங்களைத்தேடி தமிழகம் சென்றிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
 
On 3/9/2018 at 8:54 PM, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தில் தமிழனுக்கு சிங்களவர்கள் கேள்விகேட்காமலே அடிக்கிரார்கள் என்றால் இங்கே தமிழர்கள் கேள்வி கேட்டே அடிக்கிறார்கள்  இல்லை ஐயா.

வருந்துகிறேன்.

தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் நிலை இந்த கி.மு. கி.பி கோடுபோட்டு பிரிப்பது மாதிரிதான்.

அதாவது 1991 முன் 1991 பின்..

தமிழகத்தில் 1991 முன் ஈழத்தமிழர்களுக்கான வரவேற்பு எப்படியிருந்தது என்பதை அனைவரும் அறிவர்..

அவ்வப்போது நடைபெற்ற போராளிகளின் போட்டிக் கொலைகள், குற்றங்கள் ஆகியன கெடுபிடிகள் இறுக முதல் காரணம். மிக அதிகமான கெடுபிடிகள், நெருக்குதல் இறுகியது 1991க்கு பிறகுதான். ஆனால் மற்ற நாட்டு அகதிகளை நடத்துவதற்கும், ஈழத்தமிழர்களை நடத்துவதற்கும் பாரிய பாரபட்சம் இருப்பது உண்மை. அது மத்திய அரசுக்கு பொதுவாக தமிழ்/தமிழர்கள் மீது இன்றும் நிலவும் காழ்ப்புணர்ச்சிதான்.

தமிழகம் ஒரு மூன்றாந்தர பொருளாதார நாட்டின் ஒரு பகுதி. ஆகவே வேகமாக பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான அடிப்படை பொருளாததார வசதிகளோ, வேலை வாய்ப்புகளோ இங்கே இல்லை. தனிமனித வருமானமும் குறைவு. இருக்கும் வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் போக மீதமுள்ளவையே பொதுமக்களுக்கு கிடைக்கிறது. ஆகவே இங்கு வரும் ஈழத்தமிழர்கள், ஈழத்தில் கிடைத்த/அனுபவித்த வாழ்க்கை தரத்தை தமிழகத்தில் எதிர்பார்க்க இயலாது. (உதாரணமாக, ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களை பார்த்து கூறும் வார்த்தை  "முதலில் உங்கள் ஊரில் கக்கூஸ் கட்டிக்கொள்ளுங்கள்.. இங்கே ஈழத்தில் நாங்கள் மிக வசதியாக வாழ்ந்தோம்" என ஏளனமாக சொல்வது ! :mellow:)

அதே மாதிரி புலம்பெயர் நாடுகளுக்கு அகதிகளாக சென்று தங்கிவிட்ட ஈழத்தமிழர்களும், முன்னேறிய நாடுகளில் தாங்கள் அனுபவித்துவரும் வசதிகள், சலுகைகைகளை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கமுடியாது. தமிழகத்தில் வாழும் தமிழர்கள் இங்கே இருப்பதை பகிர்ந்து வாழ்கிறார்கள்.

இதுவே யதார்த்தம்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

On 3/10/2018 at 8:31 PM, சண்டமாருதன் said:

..கனடா வழ்க்கை அவை எதற்கும் மாற்றாக அமையவில்லை. அவைகளை மீழ நினைத்துப் பார்த்துவிட்டு மண்டையை போடுவது என்று அமைந்துவிட்டது.

சாமிகளே, நீங்கள் மேலே சொல்லியுள்ளது மனதை நெருடியதால், 'இவ்வளவு விருப்பபடுகிறாரே, ஏன் தமிழகத்தில் வந்து 'செட்டில்' ஆகக் கூடாது..?' என எழுதினேன் ! vil-fleurs4.gif

1 hour ago, சண்டமாருதன் said:

அடுத்தடுத்த வருடங்களில் தமிழகம் சென்ற வரும் எண்ணமுள்ளது... பார்க்கலாம்.

So, உங்கள் வேர்கள் கனடாவில் ஆழமாக ஊன்றிவிட்டது, இனி தமிழகம் உங்களுக்கும் சுற்றுலா போல் வந்துபோகும் இடம்தான்..! rire-2009.gif (புலம்பெயர் ஈழத்தமிழர்கள், விடுமுறைக்கு இலங்கை சென்று வருவது மாதிரி ! )

Edited by ராசவன்னியன்

1 hour ago, ராசவன்னியன் said:

சாமிகளே, நீங்கள் மேலே சொல்லியுள்ளது மனதை நெருடியதால், 'இவ்வளவு விருப்பபடுகிறாரே, ஏன் தமிழகத்தில் வந்து 'செட்டில்' ஆகக் கூடாது..?' என எழுதினேன் ! vil-fleurs4.gif

So, உங்கள் வேர்கள் கனடாவில் ஆழமாக ஊன்றிவிட்டது, இனி தமிழகம் உங்களுக்கும் சுற்றுலா போல் வந்துபோகும் இடம்தான்..! rire-2009.gif (புலம்பெயர் ஈழத்தமிழர்கள், விடுமுறைக்கு இலங்கை சென்று வருவது மாதிரி ! )

நிச்சயமாக கனடாவில் வேர்கள் ஊன்ற சாத்தியமே இல்லை ஆனால் விருப்பம் இருந்தாலும் தமிழகத்தில் செட்டில் ஆகக் கூடிய பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்சனை.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சண்டமாருதன் said:

நிச்சயமாக கனடாவில் வேர்கள் ஊன்ற சாத்தியமே இல்லை ஆனால் விருப்பம் இருந்தாலும் தமிழகத்தில் செட்டில் ஆகக் கூடிய பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்சனை.  

image.gif

நல்வரவு

சரிங்க சார், சட்டுபுட்டுனு யோசிச்சு, திட்டமிட்டு முடிவுக்கு வாங்க..!  :)

வயசாகிப் போச்சுதுன்னா உடல் நலம், குடும்ப சூழல், பொருளாதார சூழல், சமூக சூழல் என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2018 at 3:33 AM, புங்கையூரன் said:

தொடருங்கள்...முனி! அட...தனி...!

ஆழமான கடலின் அலைகள் எப்போதும் கொக்கரித்த படியே இருக்கும்!

அதைக் கண்டு பயந்து விட்டால்....அதன் உள்ளே புதைத்திருக்கும் பொக்கிசங்களைப் பற்றி அறிந்து கொள்ளவோ....அவற்றை அடைந்து கொள்ளவோ முடியாது!

தமிழ் நாட்டு முஸ்லிம்கள் ...இலங்கை முஸ்லிம்களிலிருந்து வேறு பட்டவர்கள் என்பதை அறிந்திருக்கிறேன்! தமிழாய்ந்த அறிஞர்கள் பலர் அவர்களுக்குள் அடங்குகிறார்கள்!

மற்ற இனத்தவருடனும்....சகஜமான முறையில் பழகுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்!

இலங்கையில் முஸ்லிம்கள்....தங்களுக்கு மட்டும் தான்...அல்லா...மூளையை அளவுக்கு அதிகமாக வைத்து விட்டார் என்று எண்ணிக்கொள்ளும் மனநிலையில் வாழ்கின்றனர்!

உங்கள் தொடர்....பல...பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!

அம்மாக்கள்...எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும்...ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள் போல உள்ளது!

தொடருங்கள்...!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி புங்கையூரான்  ஒவ்வொரு அகதி என்ற சொல்லுக்குள்ளும் ஆயிரம் புதையல்கள் புதைந்து இருக்கிறது காலங்களில் அவை வெளிவரும் சிலவைகள் அவர்களிடதே புதைந்திடும்  அது எங்களுக்குளேயே புதைந்துவிட்டு போகட்டும் என்று 

ம் தமிழ் நாட்டு முஸ்லீம்களை பொறுத்த வரைக்கும் அவர்கள் எல்லோரும் அல்ல சிலர் மாப்பிள்ளை என்று சொல்வார்கள் வணக்கம் சொல்வார்கள் முஸ்லீம்களுக்கு மட்டும் சலாம் சொல்வார்கள் மதம் பெரிதாக இராது எல்லோரும் உறவுகள் பழகி கொள்வார்கள் 

 இலங்கையில் முஸ்லீம்கள் வேற இனம் போல நடந்து கொள்வார்கள் உன்மையான அரபிகள் கூட அப்படியில்லை ஆனால் இவர்கள் வேற இனம் தாம் கொழும்பில் இருக்கும் முஸ்லீம்களும் வேறு ரகம் அவர்கள் கொஞ்சம் சுதந்திர பறவைகள் என்று சொல்லலாம்  

அம்மாக்கள் எல்லோரும் அப்படித்தானே தான் வயிற்றை காய போட்டு பிள்ளைகளை சோறூட்டி வளர்ப்பவள் தாய் அல்லவா தன் குஞ்சை எப்படி பாது காக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன? எல்லா அம்மாக்களும் அப்படித்தான் தன் குஞ்சு பொன் குஞ்சு 

On 3/10/2018 at 4:33 AM, Kavallur Kanmani said:

தொடருங்கள் தனி. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான் என்பர்.அதுபோல தான் அகதியும். உங்கள் அகத்திலுள்ள தீ எரியட்டும்

நன்றி அக்கா அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தி தான் என்பார்கள் இந்த கதைக்கும் அதான் பெயர் வைத்தேன் அர்த்தம் புரிந்தவர்கள் புத்திசாலிகள் அகதியின் அகத்தீ(தி) 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2018 at 6:58 PM, Innumoruvan said:

நீங்கள் இருபத்தி நான்கில் இந்தியாவில் அகதியாகக் கோப்பை கழுவியிருக்கிறீர்கள். நான் கனடாவில் பதின்மத்தில் அகதியாகக் கோப்பை கழுவியிருந்தேன். நீங்கள் விபரிக்கும் உமர் போன்றவர்களின் அன்பு இங்கு அங்கங்கு இருந்தது. ஆனால் உரிமையும் கண்ணியமும் நீங்கள் விபரிப்பதோடு ஒப்பிடுகையில் அபரிமிதமாக இருந்தது. 

நான் கனடாவிற்கு அதிகாலை ஒரு மணிக்கு அகதியாக விமான நிலையத்தில் வந்திறங்கியபோது எனது கவனத்தைக் கவர்ந்த முதல் விடையம், தரை துப்புரவு செய்பவர் சகஜமாக கோப்பி பருகியபடி கதிரையில் அமர்ந்திருந்தமை தான். ஏனெனில் அத்தகைய ஒரு சமூகத்தில் இருந்து நான் வந்திருந்தேன். 

எங்கள் வீட்டில் வேலையாட்கள் எங்கள் கதிரைகளில் அமர்வதில்லை. எனது வயதொத்த ஒரு சிறுமியும் எங்கள் வீட்டில் வேலைக்கு நின்றிருந்தாள். நாங்கள் கதிரையில் இருந்து பார்த்த பிறேடிபன்ச் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை அவள் தரையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டுவேலையாள் கதிரையில் அமரும் காட்சி தொலைக்காட்சியில் வந்தது. அவள் கேட்டாள் அம்மா அங்கு வேலையாட்கள் கதிரையில் அமர்கிறார்கள் நானும் அமரட்டுமா என்று. அந்தக் காத்திரமான நெஞ்சைத் துழைக்கும் கேழ்விக்கான அத்தருணத்தின் பதில் கொல்லென்ற சிரிப்பாக மட்டும் இருந்தது. நானும் சேர்ந்து சிரித்ததாகத் தான் ஞாபகம். ஆதலால் கனேடி விமானநிலையில் தரை துரப்புரவுசெய்பவர் கோப்பி அருந்தியபடி அமர்ந்தது என் கவனத்தைப் பெற்றது. 

நான் பாலகனாய் வந்து மனிதனாகியது கனடவில். தமிழன் மனிதம் அற்றவன் என்பதோ அல்லது நான் இ;ங்கு வந்தபோது இருந்த மனநிலைக்குக் காரணம் தமிழன் பாரம்பரியம் என்பதோ அல்ல நான் கூறுவது. மாறாக எந்தச்சமூகத்திலும் பெருநீரோட்டம் வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கும். யாழிலிலும் இருந்தது. தற்போது இந்தியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பின் அங்கும் தெரிகிறது. காரணம், வர்க்க மனநிலையில் எப்போதும் அடுத்த தட்டு மட்டுமே தெரியும். அடுத்த தட்டின் அங்கீகாரம் அதற்கு மிகமுக்கியம். ஆதலால் அது விழிப்பற்று இருக்கும்.

கோப்பை கழுவியது எனது முதலாவது போதிமரம். இன்று வீட்டில் நான் எனது கோப்பை கழுவும் போதும் அந்த அமைதி வந்துபோகும்.

நன்றாக எழுதுகிறீர்கள் தமிழரசன். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி இன்னுமொருவன் உங்களி கருத்துக்கும் ஊக்கத்திற்கும்  ஒரு சிலரின் உள்ளக்கிடங்கை கதையாக கற்பனையாக்கி இருந்தேன் எனது பெயர் இல்லை  இந்த கதையின் பாத்திரத்திரத்திற்கு இட்டது தமிழரசன் என  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 

On 3/10/2018 at 10:01 PM, சண்டமாருதன் said:

பல பழைய நினைவுகளை கிழறுகின்றது உங்கள எழுத்துக்கள்..ஈழத்தில் போர் உக்கிரமான காலத்தில் வாழ்தல் என்பது அச்சம் மிகுந்த நெருக்கடிக்குள் இருந்தது. தமிழகம் நகர்ந்தபோது வாழ்வாதாரங்களை இழந்து வாழ்தலுக்கான போராட்டத்தில் இருந்துதான் சமூகம் சார் அனுபவங்கள் ஏராளமாக கிடைத்தது. கடற்தொழிழில் இருந்து தோட்ட வேலைகள், வீதி வேலைகள் தொழிற்சாலைகள் என பல பத்து விதமான வேலைகள், பல நுறு ஊர்கள் கிராமங்கள் குக்கிராமங்கள் நகரங்கள் அங்குள்ள விதவிதமான மனிதர்கள் அவர்ளோடு இணைந்த தொழில்சார் உறவுகள் நினைவுகளில் அதிக இடத்தை தமிழகமே நிரப்பிவிட்டது. ஈழவாழ்கை வடுக்கள் காயங்கள் சிறைகள் வேதனைகள் என பலதை பதிந்து விட்டது. கனடா வழ்க்கை அவை எதற்கும் மாற்றாக அமையவில்லை. அவைகளை மீழ நினைத்துப் பார்த்துவிட்டு மண்டையை போடுவது என்று அமைந்துவிட்டது. 

பதிவுக்கு நன்றிகள்....

கருத்துக்கு மிக்க நன்றி  ம் உங்களை போல பலபேருக்கு தமிழகம் அடைக்கலம் கொடுத்து அனுபமும் கொட்டுத்துள்ளது 

On 3/10/2018 at 11:07 PM, ராசவன்னியன் said:

எங்களுக்கு இந்த அனுபவங்கள் இல்லை என்பதால், அகதியாக வாழ்வதன் வலி தெரியாது..

ஈழத்தின் துயரங்களையும், அம்மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் மன அழுத்தங்களையும், ஏக்கங்களையும் ஊடகங்கள், எழுத்துக்கள், ஈழ நண்பர்கள் சிலரின் மூலமாகவே உணர்ந்துள்ளேன்.. இவைகள் எமக்கு உணர்த்தியவை துயரத்தில் பத்து சதவீதம்கூட இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

முனியின் பதிவுகள் மனதை இளக்கிவிட்டது.

Just a thought..

மாற்றாந் தாயாக இருந்தாலும், ஏற்கனவே வாழ்ந்த தமிழகத்திற்கு ஏன் திரும்பக் கூடாது..? :unsure:
முதுமையில் கனடாவில் பொறுப்பான கவனிப்பு இருந்தால் தொடரலாம்.

நன்றி ராஜவன்னியன் அண்ண சும்மா பல நாள் கேட்ட சம்பவம்  காதுக்குள் ஒலித்தது அதை கற்பனைகள் சேர்து கதையாக தவள விட்டதுதான் இந்த கதை  தமிழகம் அடைக்கலம் கொடுத்தது உயிர் மட்டும் காக்க அகதி வாழ்க்கையின் வலி அதை அனுபவித்தவன் மட்டுமே அறிவான் 

17 hours ago, Kavi arunasalam said:

அகத்தீ அணைய வேண்டும். அகதியை அணைக்க வேண்டும்.

நல்லதொரு பதிவு தனிக்காட்டு ராஜா

மிக்க நன்றி அருணாசலம் ஐயா உங்கள் கதைகளும் சூப்பர் அதே தான் நால் சொல்வதும் அகதிகளை அணையுங்கள் குறிப்ப்பாக தமிழர்களை அணைக்கலாம் நன்றி உள்ளவர்கள் (அதிகம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்மனதில் ஊன்றிப் போயிருக்கும் கேள்வி.

அகதியாக இந்தியா போனவர்கள் இன்னமும் கஸ்டப்படுவதாக சொல்கிறார்கள்.மிகவும் அருமையாக மனதைத் தொடும்படியாக எழுதியுள்ளீர்கள்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணை ம் இன்னும் சிலட் கஸ்ரப்படுகிறார்கள் அவர்கள் கஸ்ரங்கள் தீரவேண்டும் அங்கே அமைதியும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதும் எனது ஆசையும் ஒன்று 

9 hours ago, சண்டமாருதன் said:

உங்கள் அனுபவப் பகிர்வு அருமை.  ஈழத்தில் இருந்து தமிழர்கள் அதிகளவாக அகதிகளாகப் போனது தமிழத்துக்குதான். 30 வருடங்களுக்கு முதல் அகதிகளாகப்போனவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் தமிழகத்துடன் ஒன்றிவிட்டது. அதேபோல்தான் வெளிநாடுகளுக்கு போனவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளும்.  அவர்களுக்கு தாயகம் ஒரு வெளிநாடுபோல் உணர்வுதான். 

நீங்கள் கூறும் எல்லைக் கோடுகளும் ஒரு வேதனையான உணர்வுதான் அடிமைத்தனமும் வேதனையான வாழ்வுதான். உலகில் தமக்காக ஒரு தேசம் வைத்திருந்த மக்களின் வாழ்வும் சிதைந்துபோயுள்ளது. ஈராக் ஆப்கான் இன்றைய சிரியா போன்ற பல நாடுகள் உதாரணம். கனடாவைப் பொறுத்தவரை பல்வேறு நாட்டு மக்களை சந்திக்கலாம்  அவர்களுடன் கதைக்கும் போது அவர்கள் கனடா வருவதற்கு அவர்கள் சொந்த நாட்டில் ஏதோ ஒரு பிரச்சனையை முன்வைப்பார்கள்.  

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எல்லா ஊரும் எம் ஊரே எல்லா மக்களும் நம்மக்களே என்று சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றனார் எழுதியது இவவாறான மக்களுக்கன மன ஆறுதல் என்று எண்ணத்தோன்றுகின்றது. 

சண்டமாருதன் இது எனது அனுபவபகிர்வு என்று சொல்ல முடியாது சில சம்பவங்களை மத்திய கிழக்கில் அனுபவித்தேன் அதையும் சேர்த்து கற்பனையாக்கி ஓர் கதையாக்கினேன் இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கிறது தமிழகத்தில் என்றும் சொல்ல வந்தேன் 

உங்கள் கருத்துக்கு தலைவணங்குகிறேன் நல்ல ஊக்கம் கொடுக்கும்  உங்கள் கருத்து:100_pray:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.