Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்­த­ லிங்­கத்­தின் சிலை நாளை திறப்பு!!

Featured Replies

  •  
  • அமிர்­த­ லிங்­கத்­தின் சிலை நாளை திறப்பு!!
download-13.jpg

அமிர்­த­ லிங்­கத்­தின் சிலை நாளை திறப்பு!!

முன்­னாள் எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் புதிய உரு­வச் சிலை நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை வலி. மேற்கு பிர­தேச சபை­யில் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

காலை 9 மணிக்கு வலி. மேற்கு பிர­தேச ஒருங்­கி­ணைப்பு குழு தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஈஸ்­வ­ர­பா­தம் சர­வ­ண­ப­வன் தலை­மை­யில் திறப்பு விழா நிகழ்­வு­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

முதன்மை விருந்­தி­ன­ராக தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் தற்­போ­தைய எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன் கலந்­து­கொண்டு திரு­வு­ரு­வச் சிலையை திறந்­து­வைக்­க­வுள்ளார்.

சிறப்பு விருந்­தி­ன­ராக இலங்கை தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மாகா­ண­சபை உறுப்­பி­னா்­கள் எனப் பல­ரும் கலந்து­ கொள்­ள­வுள்­ள­னா்.

http://newuthayan.com/story/76777.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கம் அவர்கள் அப்படி என்ன அமிர்தத்தை....! எதனைக் கடைந்து தமிழர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.....?? :rolleyes::rolleyes:

3 hours ago, நவீனன் said:

ஓம் சிலை வைக்கணும் அதுவும் மிக முக்கியம் இவரின் சிலை இப்ப உள்ள டகால்டி டுகால்டி  அரசியல்வாதிகளுக்கு இந்த சிலையை பார்க்கும்போது எச்சரிக்கை உணர்வினை குடுக்கனும் .

அவருடை.ய  ஊரில  சிலை  வைக்கிறதில எங்களுக்கு பிரச்ச்னை இல்லை. இளைஞரை  உசுப்பேத்தி போட்டு    தாங்க சுக போகம் கண்டு விட்டு செத்தவர் தானே.

  • தொடங்கியவர்
  • அமிர்­த­லிங்­கத்­தின் உரு­வச் சிலை திறப்பு
 
அமிர்­த­லிங்­கத்­தின் உரு­வச் சிலை திறப்பு

முன்­னாள் எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் புதிய உரு­வச் சிலை இன்று வலி. மேற்கு பிர­தேச சபை­யில் திறந்து வைக்­கப்­பட்டது.

சுழிபுரம் வலி.மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலையை எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திறந்து வைத்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

http://newuthayan.com/story/77213.html

Edited by நவீனன்

On 3/17/2018 at 10:14 AM, நவீனன் said:

முன்­னாள் எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் புதிய உரு­வச் சிலை நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை வலி. மேற்கு பிர­தேச சபை­யில் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

சிலை வைப்பதில் தவறில்லை!

ஆனால் உண்மையில் சிலைகள் வைக்கப்பட வேண்டியவர்களுக்கு அவற்றை நிறுவும் சூழல் இல்லாத நேரத்தில் இது வெறும் கேலிக்கூத்தாக பார்க்கப்படலாம்.

தமிழீழம் தான் தீர்வென்று கூறிககொண்டு பேரினவாதக் கூடாரத்துள் தென்னிலங்கையில் இருந்தவர் தற்போது சிலையாக தமிழர் தாயக பூமிக்கு வந்துள்ளார். ஏன் இவர் தமிழர்களாலேயே கொல்லப்பட்டார் என்ற கேள்வியை இச் சிலை எழுப்பிக்கொண்டே இருக்கும். அதற்கு பலர் பலவிதமான பதிலை முன்வைத்து கதைப்பார்கள். அக்கதைக்குள் தமிழர்களின் முதுகெலும்பற்ற அண்டிப்பிழைக்கும் பேரினவாதத்தை அனுசரித்துப் போகும் அரசியல் பற்றியும் கதைக்கப்படும். 

முன்னேஸ்வரம் திருக்கேதீச்சரம் திருக்கோணேச்சரம் போன்ற தமிழர் பூமிகள் வெளித்தெரியாமல் நல்லூர் கலாச்சார அடயாளமாக வெளித்தெரிகின்றதோ அவ்வாறுதான் தமிழர்களின் அரசியலும். இக்கோயில்கள் அமைந்துள்ள புத்தளம் திருகோணமலை மனனார் போன்ற தமிழர் பிரதேசங்களின் பெரும்பகுதி தமிழர் கைகளை விட்டுப் போய்விட்டது. தமிழர் கூட்டணிகள் கூத்தமைப்புகளின் அரசியல் என்பது யாழுக்கும் கொழும்புக்குமான போக்குவரத்துப்போன்றது. பேரினவாதமும் மையவாதமும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் தாயகம் சுதந்திரம் பெறமுடியாது மாறக அவற்றை தாரை வார்த்துதான் நல்லூரை காப்பாற்ற முடியும் என்பதை இச்சிலைக்குரியவர் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதிலக பேசப்படும்.  

  • கருத்துக்கள உறவுகள்

எனகென்னமோ இந்த சிலை, இப்படித்தான் எல்லோருக்கும் செய்தி சொல்வது போல தெரிகிறது..!  :)

2dklbo1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காகங்கள்  இயற்கை கடன் செய்ய இன்னுமொரு இடம் கிடைத்துள்ளது....

இந்திய இராணுவத்திற்கே சிலை வைக்கும் பொழுது இவருக்கும் ஒரு பக்கமா சிலையை வைப்பதில் தப்பில்லை என்று நினக்கிறன்...காகங்களும் பாவம் தானே

11 hours ago, ராசவன்னியன் said:

எனகென்னமோ இந்த சிலை, இப்படித்தான் எல்லோருக்கும் செய்தி சொல்வது போல தெரிகிறது..!  :)

2dklbo1.jpg

ரஜனிகாந் போலவும் இச் சிலை உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சண்டமாருதன் said:

ரஜனிகாந் போலவும் இச் சிலை உள்ளது. 

சிலையை பார்த்தவுடனே என் மனதில் தோன்றியது அதுதான்..

சிலை வடிவத்திற்கு ஆலோசனை சொன்னவர், ரஜினி ரசிகராக இருந்திருப்பார். :grin:

24 minutes ago, putthan said:

காகங்கள்  இயற்கை கடன் செய்ய இன்னுமொரு இடம் கிடைத்துள்ளது....

இந்திய இராணுவத்திற்கே சிலை வைக்கும் பொழுது இவருக்கும் ஒரு பக்கமா சிலையை வைப்பதில் தப்பில்லை என்று நினக்கிறன்...காகங்களும் பாவம் தானே

நல்ல ஒப்பீடும், அதில் தெளிவும் இருக்கிறது..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17.3.2018 at 8:04 AM, Paanch said:

இந்த அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கம் அவர்கள் அப்படி என்ன அமிர்தத்தை....! எதனைக் கடைந்து தமிழர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.....?? :rolleyes::rolleyes:

இவர் தமிழ் இளைஞர்களை தமிழ்/தமிழீழம் என  உசுப்பேற்றி தாடி வளர்க்கவிட்டு மறியல் போராட்டம் செய்ய வைத்து ஆயுதம் ஏந்த வைத்து  விட்டு...... அரசியல் எனும் போர்வையில் எதிர்க்கட்சி கதிரையில் அமர்ந்து கொண்டு பின்கதவு அரசியல் செய்த முன்னோடி. அதை முன்னுதாரணமாகக்கொண்டே இன்றும் அதே அரசியலை இன்றையவர்களும் செய்கின்றார்கள். 
இவர் சம்பந்தன் சுமந்திரன் போன்றோருக்கு சிறந்த வழிகாட்டியுமாவார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

"300 இளைஞர்கள் கையொப்பமிட்டு எங்களுடன் இணைந்தால்  போதும், தமிழருக்கான தனியரசை உருவாக்கித் தருவோம்" என்று, அன்று ஆவரங்காலில் நடந்த தமிழரசுக் கட்சிக் கூட்டமொன்றின்போது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முழங்கியதும், அதில் முன்னூறு இளைஞர்களுக்கும்மேல் கையொப்பமிட்டதாகவும், செய்தி எங்கும் பரவியது. அதன்பின் சிறிது காலம் கழியக் கட்டுவனில் ஒரு கூட்டம் நடைபெற்றது அதற்கு நானும் சென்றிருந்தேன். கூட்டத்தில் தெல்லிப்பளை வீமன்காமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஆவரங்கால் கையொப்பம் பற்றிக் கேள்வி எழுப்பினர். அமிர்தலிங்கம் அதற்குப் பதிலளிக்கவில்லை. இளைஞர்கள் மேடை அருகே செல்ல முற்பட்டனர். அச்சமயம் நாலைந்து தடியன்கள் வந்து அவர்களைத் தடுத்து "தம்பியவை இங்கு நிற்கவேண்டாம் நின்றால் வீண் பிரச்சனை வரும். நீங்கள் வீட்டுக்குப்போங்கோ." இளைஞர்கள் நிலமையைப் புரிந்துகொண்டு அவ்விடம்விட்டு அகன்றனர். அமிரின் முழக்கம் தொடர்ந்தது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இவரின் இறப்பு என்பது அரசியல் முரண்பாட்டின் அடிப்படையிலேயே நடந்தது.

நம்ம ஒன்றை சிந்திக்க வேண்டும், துரையப்பா துரோகத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது.

ஆயினும், அதை செய்தவர், வல்லரசுகளின் ராணுவ, அரசியல், ராஜதந்திர  நுட்பங்களையும், குயுக்திகளையும் கையாண்டு, மேவி தமிழ் ஈழ நடைமுறை அரசை நிறுவியவர் கூட துரையப்பா அரங்கை அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. அந்த துரையப்பா அரங்கை அவர் புனருத்தாரணம் செய்யாமல் இருந்தாரே தவிர, அவரிடம் இருந்த அதிகாரத்தையே, பலத்தையோ அவர் அத்தகைய நடவடிக்கைகளுக்கு உபயோகிக்கவில்லை.

அமீருக்கு சிலை வைப்பதை அவர் செய்திடிருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது, அனால் வேறு யாராவது அமீரின் சிலை வைத்திருப்பின்   தடுத்தும் இருக்கமாட்டார் என்பதே அவர் அதிகாரத்தில் இருந்த வரைக்குமான செய்கைகள் புலப்படுத்துகின்றன.  

அதை வரலாறே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

அமீரிடம் தவறுகள் உள்ளன. ஆயினும், அமீரின் தலைமை இன்றி அந்த நேரத்தில் போராட்டம் இவ்வளவு வளர்ந்திருக்குமா என்பது ஆழ்ந்து நோக்கப்பட வேண்டும்.

தலைமை என்பது ஓர் இலக்கை அடைவது என்பதற்கு மிகவும் அப்பாற்றப்பட்டது.  தலைமை என்பது தான்  சாதிப்பதை  விட, தனது காலத்திற்கு பின்னும் அந்த இலக்கை நோக்கி ஏனையோர் ஏதாவது ஓர் வழியில் முன்னேற முயல்வதற்கான தைரியமான நம்பிக்கை, மன வலிமை, மற்றும் இலக்கை விட்டுக்கொடாமல் இருப்பதற்கான மனா உறுதியையும் செய்கைகள் மூலம் வளர்ப்பதாகும்.

அதாவது, காலத்தில் நிலை மாற்றுகின்ற தனமையில் நிலையான ஓர் போக்கை வளர்ப்பதாகும். இதை அமீர் தனது காலத்தில் எதோ ஓர் வகையில் செய்துள்ளார் என்றே தோன்றுகிறது.

இதுவும், அவர் (பிரபாகரன்) ஒப்பாரும் மிக்காரும் இன்றிய தமிழ் தேசத்தின் தலைவனும், தமிழீத்தின் தன்னிகரில்லா  தேசிய தலைவனும் என்பதற்கு சிறிய எடுத்துக்காட்டு.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

அமீரிடம் தவறுகள் உள்ளன. ஆயினும், அமீரின் தலைமை இன்றி அந்த நேரத்தில் போராட்டம் இவ்வளவு வளர்ந்திருக்குமா என்பது ஆழ்ந்து நோக்கப்பட வேண்டும்.

தந்தை செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப் பின்னர் அவர் வகித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு வரவேண்டிய மட்டக்களப்பு எம். பி இராசதுரை அவர்களை அந்தப் பதவிக்கு வரவிடாது பல தில்லுமுல்லுகள் செய்து, அந்தப் பதவியைத் தட்டிப்பறித்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். இதுதான் அவர் செய்த மிகப்பெரிய போராட்டம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கு இப்படி நிக்கிறம் முகநூளில் இந்த சிலை உடைப்பத்துக்கு ரெட் பேசிக்கொண்டு இருக்குது ஒரு கூட்டம் .:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

தந்தை செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப் பின்னர் அவர் வகித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு வரவேண்டிய மட்டக்களப்பு எம். பி இராசதுரை அவர்களை அந்தப் பதவிக்கு வரவிடாது பல தில்லுமுல்லுகள் செய்து, அந்தப் பதவியைத் தட்டிப்பறித்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். இதுதான் அவர் செய்த மிகப்பெரிய போராட்டம்.

உங்களோடு சமகால சரித்திரத்தை வாதிட வரவில்லை.

அமீர் என்ற ஓர் தனி ஒருவரின் தில்லு முல்லு வேலைகளால் கட்சி தலைவர் ஆகி இருக்க முடியுமா அல்லது பி இராசதுரை பதவிக்கு வராமல் தடுத்து தலைமைப் பொறுப்பை தட்டிப்பறித்திருக்க (உங்கள் கூற்றுப்படியே) முடியுமா?

அதுவும், அன்றைய நிலையில், ஈழத்த்தமிழ் அரசியலில் இரு பெரும் கட்சிகளில் ஒன்றிட்கான தலைமைப் பொறுப்பை.

ஆகக் குறைந்ததது, கட்சியின் செயற்குழுவோ அல்லது மத்தியகுழுவோ அமிரோடு இல்லாமல் அல்லது எதிர்த்து அமீர் தலைமைப் பொறுப்பை  அடைந்திருக்க முடியுமா?

இதனால் என்னை அமிரினதோ, கூட்டணியினதோ சார்பு என்று கருதிவிட வேண்டாம்.

சமீபத்தில், சீன அதிபர் க்ஸி ஜின்பிங் வாழ்நாள் அதிபராக இருப்பதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு யாப்பை மாற்றியதை பற்றியும் இதே கருத்தையே சொல்லியுளேன்.      

Edited by Kadancha
add info.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.