Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்த  உலகம் தொழிநுட்பத்தில் வளர்கிறது  நாமும் அதன் போக்கில் காலத்துக்காலம் அதில் புதிய கண்டுபிடிப்புக்களில் ஈர்க்கப்பட்டு அதன் பின்பே சென்று கொண்டிருக்கிறம் என்பத விட ஓடிக்கொண்டிருக்கிறோம். நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி நம்மை எவ்வாறு அடிமையாக்கிறது நமது வாழ்வை அது எப்படி விளையாடுகிறது என்பதே இந்த கதை.  

 

இலங்கை போக்குவரத்துசபை பஸ் மட்டும் கைபோட்டால் நிற்குமா என்ன? நிற்கவில்லை அந்த கொழுத்தும் வெயிலில் மீண்டும் அடுத்த பஸ்ஸ்சுக்காக காத்திருந்தேன் அந்த மொபலை நொண்டிக்கொண்டே இந்த போணும் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் சாமி. என்ற நினப்பில் பஸ் கோர்ண் சத்தம் கேட்டது நிற்பானா ?மாட்டானா? என்று கைய போட்டாலும் அங்கே இறங்கும் பயணிக்காக நிற்பாட்டினான். உடனே ஏறிவிட்டன் பஸ் மெதுவாக நகர தொடங்கியது நான் ஏறியவுடனே என்னவோ நமக்கும் மட்டும் எல்லாம் மெதுவாத்தானே நடக்குது. என்ற நினைப்பு அடிக்கடி வந்து போகும் இருந்தாலும் பஸ்ஸுக்க அடிக்கடி என்னை ஒரு நிலைப்படுத்துவதென்றால் அந்த ஹெட்போணும் பாட்டுத்தான் இல்லையென்றால் ஆயிரம் கதைகளை காதில் வாங்கி போட்டுக்கொள்ள வேண்டி வரும்.

இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளினால் என்பதற்க்காக அதை ஏறிய உடன் தூக்கி மாட்டிக்கொள்வேன். பக்கத்தில் பெண்கள் இருந்தால் எங்கே கைபட்டாலும் குற்றம் என்று சொல்லும் பெண்கள் எழுந்து சீற் கொடுத்துவிட்டு நின்றாலும் உரஞ்சுகிறான் என்ற குற்றம் வேறு என்ன செய்வது எங்கேயாவது ஒரு மூலையில் சுவரில் ஒட்டிக்கொள்ளும் பல்லி போல உட்கார்ந்து வேலைக்கான பயணத்தை தொடர்வது வழமையாகும். அன்றைய நாளும் பக்கத்திலிருந்தவர் அந்த நேர காற்றின் சுழற்ச்சிக்கு நித்திரை செல்ல அடிக்கடி வந்து முட்டுக்கொடுத்துவிட்டு போனார் தலையால்.  நமக்கு மட்டும் இரண்டு பக்கமும் அடிதானே என நினைத்து அவரை சாய்த்து விட்டு திரும்பும் போது செல்வியை அந்த வங்கியில் கண்டேன். அது பாதையோரம் என்பதால் அவளை முழுமையாக பார்க்க கிடைத்தது இருந்தாலும் சந்தேகம் இவள் லண்டன் போனவள் மீண்டும் எப்படி வந்தாள்? திரும்பவும் என்ற யோசனை ஓடிகொண்டு போனது மறக்க முடியாமலும் நினைக்காமல் இருக்க முடியாமாலும் என் மனதில் இருக்கும் அவள்முகம். 

அவளைக்கண்டதும் அவளைப்பற்றி கேட்க ஆசை தோன்றியது. அவளது வங்கியில் வேலை செய்யும்  இன்னொரு அக்கா லதா. லதா அக்காவை அழைத்தேன் தொலைபேசியில் வணக்கம் அக்கா வணக்கம்  சொல்லுங்க ஜெய் என்றார்  அவரும் அக்கா செல்வியை போல ஒருவளை உங்க வங்கியில மற்ற கிளையில பார்த்தான் வந்துவிட்டாளா அவள்? இல்லை வேற யாருமா அக்கா?? அவள் தான் தான் தம்பி வந்துட்டாள் வந்து ரெண்டு மாசத்துக்கு மேலாகுதே உனக்கு தெரியாதா என்ன? இல்லை அக்கா எனக்கு தெரியாது இன்று அவளை போல ஒருத்தியை கண்டேன் சந்தேகம்  அதான் உங்களிடம்  கேட்டேன் ஓகோ நாளைக்கு நேரம் இருந்தால் வீட்டுக்கு வா முழுவதும் விபரமாக சொல்கிறேன் என்றார் அவரும் ஒரு பெண்ணைப்பற்றி அறிவதென்றால் ஒரு பெண்ணிடம் கேட்டால் தானே முடியும்.

அவரின் அடுத்தநாள் சந்திப்புக்கு  காத்திருந்தாலும் அவளைக் முதன் முதலாக கண்ட நாள் கண்முன் பிரள நினைவு முன்நோக்கி சுழன்றது  எனது தொழிலுக்கு  வங்கி தேவைப்பட்டது காசுகள் அறவிட்டால் அதனை வைப்பு செய்ய வங்கியை நாடுவது வழமை அன்று சரியான கூட்டம் வேறு. வரிசை வரிசையாக ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் வங்கியில் வரிசையில் நிற்கலாம் தற்போது வங்கியில் அத்தனையும் தேர்வு செய்து எடுத்த அழகிய பெண்கள் அவர்களும் அழகாக குட்டை பாவடை  வங்கியின் ரீ சேட் அணிந்து இன்னும் பல வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டிருந்தார்கள்.  நானும் தலையை ஆட்டாத ஆடு போல் வரிசையில் நின்றேன் அன்று தான் பார்த்தேன் அவள் நெஞ்சில் அங்கே அவளது அழகான பெயர் அன்புச்செல்வி என்ற பெயரும் பதவியும் பொறித்த அடையாள அட்டை மாலையாக தொங்க அப்படியே அவள் போண் நம்பரும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை இருந்தாலும் அன்று அவளை பார்த்த பின்பு ஓர் ஆசை. எத்தனை பெண்களைப்பார்த்தாலும் கூட ஒரு சில பெண்களைப் பார்த்தவுடன் இவர் நம்க்கு வாழ்க்கை துணைவியாக இருந்தால் நன்றாக  இருக்குமே என தோன்றும்.

அந்த உணர்வே என்னை தினமும் அந்த வங்கிக்கு அழைத்து சென்றது  சில நாட்களில் அவள் இருப்பாள் கவுண்டரில் சில நாட்கள் அவளை வேறு பிரிவில் இருப்பாள் எப்படியாவது அவளிடம் விருப்பம் கேட்க வேணும் என்ற ஆசை இருந்தாலும் ஒரு வங்கியில் வேலை செய்கிற பொண்ணுடன் நான் எப்படி கேட்கிறது என்ற தாழ்வு மனப்பாண்மை என்னிடம் குடிகொண்டே இருந்தது இருந்தாலும் அவளும் ஓர் பெண்தானே கேட்டால் என்ன பிரச்சினை என்றும் தோன்றியது   யாரை தூது விட்டு கேட்கலாம் என்று பார்த்தால் எந்த முகமும் தெரிந்த முகமாய் இல்லை.  அப்போது லதா அக்கா என்ற ஒருவரைக்கண்டேன் அவர் என்னுடன் வேலைசெய்யும் நண்பனின் அக்கா  ஆஹா நல்ல சந்தோஷம்  அவர் வேற பிரிவில் அங்கேயே இருந்திருக்கிறார் அவரைக்கண்டதும் அக்கா என்ன இங்க  இப்ப பிரான்ச்ஞ் மாற்றிப்போட்டானுகள் தம்பி ஒரு வங்கியில ஒழுங்கா வைக்கமாட்டானுகள்  குறிப்பிட்ட காலம் காலம் வேலை செய்த்து மாற வேண்டியதுதான் என்றார் அக்கா ஆர் அந்த பிள்ளை? ஓ அதுவா  உனக்கு செட்டாகாது அது லண்டன் போகப்போதாம் என்று சொல்லி திரியுது தம்பி ஓ அப்ப வெளிநாட்டு பார்ஷல் என்று சொல்லுறியள் என்ன??  உங்கபாஷையிலாடா அது? ம்ம்ம்ம் நாங்க இப்ப அப்படித்தான் சொல்லுற வெளிநாட்டுக்கு போற பிள்ளைகளை. பேஷ்புக்கு லவ்வாம்டா  ஓ அப்படியா சரி அக்கா நான் வாரன் பிறகு சந்திக்கிறன்.  என்று எனது தொலை பேசி தொல்லை கொடுக்க நான் அந்த வங்கியை விட்டு நகர்கிறேன். காசுகளை அறவிட

இப்படி நாழும் பொழுதும் போனது அவளை மறப்பதா விடுவதா என ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் விருப்பம் இல்லாவளை தொடவே கூடாது அதிலும் அவள் இன்னொருவனை விரும்பும் போது நாம் அவளை நினைக்கவே கூடாது என்று அந்த வங்கி கிளையை அவளுக்காக மறந்தேன் . பல மாதங்கள் கழிந்து விட்டன அவளை மறந்து .அடுத்த நாள் காலை லதா அக்கா வீட்டுக்கு சென்றேன் அக்கா அவள் கதையை முழுமையாக சொன்னார் லதா அக்காவிடம் முழுமையாக சொல்லி இருக்குறாள் அவள்.   அது  அவள் மனச்சுமையை குறைத்து வைத்திருக்கும் போல்.

முகநூலில் அவன் போடும் படங்களையும் இடங்களையும் பார்த்து ரசித்த அவளுக்கு அங்கு செல்ல ஆசை வந்திருக்கிறது அவன் போடும் படங்களுக்கு இவளும் லைக் , கொமன்ஸ் போட்டு வந்திருக்கிறாள்டா ஒரு நாள் அவன் இவளுக்கு மெசேச் போட்டு இருக்கிறான் ஆனால் இவள் ரீப்பிளே பண்ணல அவனும் நாள்தோறும் மெசேச் போட்டு வந்திருக்கிறான் ஒரு நாள் இவளும் ஏன் எனக்கு மெசேச் பண்ணுறீங்கள் நாம் நண்பர்களாக இருப்போமே முகநூலில்  என்று சொல்லி இருக்கிறாள். இவளும் மெசேஞ்சில்  ம் நண்பர்களாக இருக்கிறோம் தான் ஆனால் நான் உங்களை நான் படத்தில் பார்த்தேன் மிக அழகாக இருக்குறீர்கள் வங்கியில் வேலைபார்க்கிறீர்கள் ஆனாலும் உங்கள் குரலை கேட்கவில்லையே ஏன் என்னுடன் கதைத்தால் என்ன பிரச்சினை.  நான் ஒன்றும் கெட்டவன் இல்லையே என்று சொல்லி இருக்கிறான் பதிலிற்கு  உவள் நான் உங்களை கெட்டவன் என்று சொல்லவில்லையே  என்று சொல்லி இருக்கிறாள். இவள் அதன் பிறகு தொடர்பு எடுக்கவில்லை.

அவனும் பிறகு ஓர் நாளில் அவன் குடும்ப போட்டோவை அனுப்பியிருக்கிறான் இவளுக்கு இது என்னுடைய குடும்பம் எனக்கு பெண் தேடுகிறார்கள் உனக்கு விருப்பம் என்றால் நான் உன்னை கல்யாணம் கட்டலாமா? அதுவும் நம்ம இலங்கை தமிழ் பெண்ணைத்தான் நான் கல்யாணம் கட்ட விரும்புறன் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்றால் கூடியளவு விரைவாக பதிலை சொல்லு  என்றும் அனுப்பியிருந்தான்  அந்த தகவலை பார்த்த அவளுக்கு நம்ப முடியவில்லை  அந்த செய்தியை  என்ன செய்வதென்ற யோசனை ஓடியது அவளது அம்மாவிடம் சொல்ல அம்மாவோ ஆள் எப்படி ஒருக்கா காட்டு என்று பார்த்தாள் பார்த்தால் நல்ல பொடியன் மாதிரித்தான் இருக்கிறான் ஆரும் ஆட்களிட்ட விசாரிக்கணுமே விசாரிக்காமல் எப்படி பதில் சொல்ல்வது ஆ.. ஆ கொஞ்சம் பொறு அப்பாவும் வரட்டும் அவரிட்டயும் கேட்பமே ஐயோ எனக்கு பயமா இருக்கிறது  சும்மா இரடி பயப்படாத வெளீநாடு என்றால் சும்மாவா அங்க போய் நல்லா இரு இப்ப ஊருக்க வெளிநாட்டில் ஆராவது சொந்தக்காரர்கள் இருந்தால் தான் ஊரில மதிக்கிறாங்கள்.

மாலை நேரம் அப்பா வருகிறார் இஞ்சாருங்கோ என்ன சொல்லு நம்ம செல்வியை ஒரு பொடியன் போணில பாத்திருக்கான் கல்யாணம் கட்ட கேட்டிருக்கான் என்ன சொல்லுற அதான் இப்ப புதுசா பேச்சு புக்கு என்று இருக்காமே அதுல பழகினவனாம் . உனக்கு லூசா? உன்ற மகளுக்கும் லூசா? ஆள் ஆரெண்டு தெரியாது என்ன சாதியெண்டு தெரியாது ஊர் தெரியாது குலம் என்ன கோத்திரம் என்ன என்று தெரியாது இங்க நல்ல வேலையில் இருக்கும் போது என்னத்துக்கு வெளிநாடு கேட்குதாம். நாளைக்கு எதுவும் நடந்தால் யார் அங்க போய் பார்ப்பது சொல்லு ?? ம்ம் ஆனால் அவளுக்கும் வெளிநாடு என்றால் விருப்பம் தானே ம் அதுக்காக அவங்களை விசாரிக்காமல் எப்படி பிள்ளையை கட்டிக்கொடுப்பது ? விசாரிப்பம் விசாரிச்சு சரி வந்தால் கட்டிகொடுப்பம் எதுக்கும் அவளிடம் ஒருக்கா கேழு நீ சரியா ம் கேட்கிறன் ஏன்டி பிள்ளை உனக்கு சம்மதம் தானே ம் சம்மதம் பிறகென்ன. நம்மட ஆட்களிட்ட அவங்கள் போட்டோவை காட்டி ஆட்கள் எப்ப்டியென்று விசாரியுங்கள் அப்பா போட்டோவ காட்டு அப்படியே என்ற போணுக்கு அத அனுப்பு அவள் அப்பாவோ போட்டோவை எடுத்துக்கொண்டு விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சகல விசாரிப்பின் பிறகு அவரும் ஓகே சொன்ன பிறகு அவனுக்கு இவள் எனக்கு சம்மதம் என சொல்லி இருக்கிறாள் அதன் பிறகு பேச்சுக்கள் ஆரம்பமாகின புதிதாய் வருகை தந்த வட்ஸப்பும் வைப்பரும் குரல்களை பரிமாறி ஆசைகளை நாடுகடத்தி அழைப்பில் உருகிநின்றார்கள் இருவரும் கல்யாண நாளை எதிர்பார்த்து  நாள் நெருங்கியது குடும்ப அங்கத்தவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஊருக்கெல்லாம் சொல்லாமல் இந்தியாவில் கல்யாணம் நடத்தி முடித்து வைத்தார்கள் ஆனால் அங்கு குடியுரிமைக்கான சட்ட அங்கீகாரம் கிடைத்த பின்பே இவளை எடுக்க முடியும் என்று சொல்லி போனவர்கள் ஒரு வருடம்முடிந்த பின்பே அவளை எடுத்தார்கள் அங்கு இவளும் வேலையை தற்காலிகமாக விட்டு விலகுவதாக வங்கிக்கு கடிதம் கொடுத்து விலகிவிட்டு போனவள் தான் பிறகு  அங்கு போனவளுக்கு நடந்தது !!!!

செல்பி வரும் ........................................tw_blush:tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகா நல்ல தொடர். கெதியா மிச்சத்தையும் எழுதி முடியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/18/2018 at 9:23 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆகா நல்ல தொடர். கெதியா மிச்சத்தையும் எழுதி முடியுங்கோ

லண்டன் என்றவுடன் ஆசையை பாரன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கு போனவளுக்கு நடந்தது !!!! எல்லாம் தலைகீழாக.

 இரு ஜெய் டீ போட்டுக்கொண்டு வாரன் என்று சொல்லி அக்கா குசினிக்க டீ போட போன .

இந்தா டீ குடி சூடா இருக்கு எனக்கும் அவள் கதையை கேட்க சூடாத்தான் இருக்கு ஏன் அக்கா இவளோ நல்ல ஓர் வேலையில் இருந்தவள் இங்க பார்த்து எவனையாவது கல்யாணம் கட்டி சந்தோஷமாக வாழ்வதை விட்டுட்டு இப்ப பாருங்க வாழ்கையை தொலைத்துவிட்டு வந்து நிற்கிறத்தை ம் என்ன செய்வது ஜெய் சிலநேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் நல்லது போன்றே இருக்கும் ஆனால் அது நடந்து முடிந்த பிறகே கொஞ்சம் யோசித்து இருக்ககூடாதா என்று நினைப்பம் ம்ம் உன்மைதான் அக்கா. அவளின்ற அம்மாவுக்கு வெளுக்கணும் அவங்கப்பா நல்ல வெழுத்திருக்கிறார் ஓ அப்ப நல்ல பூஜை போல அவள் அம்மாவுக்கும் ம்ம் அதுவும் சொன்னாள் தன்னால தன்ற அம்மாவும் அப்பாகிட்ட அடி வேண்டினதா..

லண்டன் போனவள் அவங்கட வீட்டில் தான் எல்லோரும் இருந்திருக்கிறார்கள் பெரும் வரவேற்பெல்லாம் இல்லையாம் ஒரு சொந்தக்காரர் வந்தது போன்ற மரியாதை மட்டும் தானாம் மருகள் என்ற பெயர் கூட இல்லாமல்.  இவளுக்கு போன புதிதில் லண்டனை மிகப்பெரும் கற்பனை பண்ணிய அவளுக்கு அங்கே கட்டிடங்களும் காலநிலையும் காசின் பெறுமதியும் கலரான வெள்ளைக்காரர்களும் கலராகத நம்ம ஆட்களும் மிகப்பிரமிப்பாக இருந்திருக்கிறார்கள் லண்டனும் ஓர் நாடுதான் கடிகார நேரம் தான் வித்தியாசம்.

மற்ற மடி ஒன்றும் இல்லையென  நாட்கள் செல்ல செல்ல புரிந்து கொண்டாள் அவள். (பண்ணிய கற்பனையில் பாரிய சரிவு அவளுக்கு ) அவர்கள் இவளை மாத்திரம் வீட்டில் விட்டு வேலைக்கு போவார்களாம் இவளும் வீட்டில் சமையல் வேலைகள் எல்லாம் செய்து விட்டு வீட்டில் தனியே இருப்பாளாம் வீட்டு வேலைக்காரி போன்று  அந்தநேர துணை அந்த யன்னல் காட்சியும் காற்றும் மட்டுமே அவள் துணையாக இருந்த்து . அவள் கணவன்கூட சில வேளைகளில் நள்ளிரவில் கூட தான் வீட்டுக்கு வருவானாம் கேட்டால் வேலையென்பானாம்  வெளியில் கூட போவதில்லையாம் கிழமையில் ஒரு நாள் கூட போவதில்லையாம்  மாதத்தில் சிலவேளைகளில் எங்கேயாவது போவது அதுவும் சந்தோஷம் இல்லாமலே யாராவது வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வது எப்போதாவது  இப்படி மாதங்கள்  கழிந்து விட்டது .

அவனிடம் ஓர் கேள்வி கேட்டிருக்கிறாள் தீபன் என்ற தகமைக்கும் ஓர் வேலையை எடுத்தால் நாம் சேர்ந்து உழைத்தால் தனியா ஓர் வீடு வாங்கி செட்டிலாகலாம் தானே அதுக்கு தீபனோ ஒன்றும் தேவையில்லை.  நீ வீட்டில் இரு நான் உழைக்கிறேன் தானே என்று சொல்லி இருக்கிறான் அவன் அன்றிலிருந்து இவனுக்கும் அவளுக்கும் விரிசல் ஆரம்பமாகியது . அது நாழுக்கு பெரிதாகி ஓர் இடைவெளியை கருத்து முரண்பாடுகளுடன் கழிந்தது .  ஓர் நாள் இவளுக்கு அங்குள்ள காலநிலை மாற லேசான காய்ச்சல் அடிக்க அன்றைய நாள் இவள் சமைக்கவில்லை படுத்த படுக்கையாகவே இருக்க வீட்டிற்கு வந்த அவன் அக்காவோ என்ன வீடு இப்படி அழுக்காக கிடக்கு வீடு எப்படி இருக்க வேண்டும் தெரியாதவளையெல்லாம் வெளிநாட்டுக்கு கூட்டி கொண்டு வந்தால் இப்படித்தான்.

எல்லாம் இருக்கும் என்று சொன்னது இவள் காதுக்கு வீழ்ந்தது இவளும் நான் மட்டும் தானா இந்த வீட்டில் பெண் இருக்கிறன் நீங்களும் இங்க தானே இருக்கிறியள் நீங்கள் செய்தால் என்ன குறைஞ்சா போய்விடுவியள் என்று இருந்த காய்ச்சல் வலி வேதனையில் சொல்ல அவன் அக்காவோ தீபனிடம் போணை போட்டு இல்லாதது பொல்லாததுகளை சொல்ல வீட்டுக்கு வந்த அவன் இதோ பாரு செல்வி நானும் கொஞ்சநாளா பார்த்துக்கொண்டுதான் வாரன் உன்ற நடவடிக்கை சரியில்லை உனக்கு என்ன பிரச்சினை??  எனக்கு எல்லாம் என்ற சொந்தங்கள்தான்  உனக்கு விருப்பம் என்றால் அவங்கள் சொல்லுறத கேட்டு வாழு இல்லையென்றால் நீ போகலாம் என்று மிக சாதரணமாக சொல்லி இருக்கிறான் .

அவளோ அவர்கள் உன் சொந்தம் என்றால் நான் யார் தீபன் தாலி கட்டின பெண்டாட்டி ம் உன்மைதான் அதுக்காக என் சொந்தங்களையெல்லாம்  விட்டு கொடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறான் அவன் . அவளோ நீங்கள் எல்லாம் இங்கே மெசினாக வாழ்ந்து கொண்டிருக்கிறயள் என்று சொல்வதை விட நடித்துக்கொண்டிருக்கிறியள்  வெளிநாடு என்ற திரையில் இருக்கும் விம்பங்கள் நீங்கள்  இங்கு கட்டிடங்களும் காட்சிகளும் மட்டுமே அழகாய் இருக்கிறது மனிதர்கள் அல்ல எனக்கு நல்ல வேலை எடுத்து இங்கு வாழ முடியும் என் தகமைகளுக்கு . நான் இங்கு இருக்க விரும்பல அப்படி இருந்தால் போட்டோவுக்கும் வாழ்க்கைக்கும் நடிக்க வேண்டியதாக இருக்கும்  தீபன் என்னை நீங்கள் நாட்டுக்கு அனுப்புங்கள் அங்கு எனக்கு தொழில் இருக்கிறது நான் நல்லபடியாக வாழ்வேன் என்று சொல்லி விட்டு பெட்டி படுக்கையோடு வந்துவிட்டாள் செல்வி என்று சொல்லி முடித்த லதா அக்கா.

என்ன மாதிரி ஜெய் நீ அவளை லவ் பண்ணுன நீ தானே அவளை கல்யாணம் கட்டுற ஐடியா இருந்தால் சொல்லன் ஆனால் நீ விரும்புனதும் அவளுக்கு தெரியும் ஓ அப்படியா தெரிந்து என்ன செய்யுறது. எனக்கு புறப்போஸ் பண்ணிருக்கு என்று பொய் சொல்லிவிட்டு அவர் வீட்டை விட்டு செல்கிறேன் ஏதோ ஒன்று மனதை குடைகிறது அவள் திருமணமானவள் என்றும்  இரண்டாம் தாரம் என்றும் நாளைக்கு ஊர் சொல்லும் அவச்சொல்லும் குத்தும் குடையும் அவளையும் என்னையும் என்ற காரணத்தால்.

இருந்தாலும் அடுத்தநாள் அவளைக்காணாத ஆள் போல் அந்த வங்கிக்கு போகிறேன் என்னைக்கண்டதும் கவுண்டர் குளோஸ் என்ற  அட்டையை தொங்க விட்டு விட்டு செல்கிறாள் என்னைக்கண்டு………………………………………………:104_point_left:

யாவும் கற்பனையில்tw_blush:tw_blush:tw_blush:       

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கற்பனை என்றாலும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் விடயம்தான், நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தனி......! tw_blush:

Posted

குளோசான கவுண்டர் நாளைக்கும் திறக்கும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முகப் புத்தகத்தில் பார்த்த தீபனுக்கும் நேரே பார்க்கிற தீபனுக்கும் ரொம்ப ரொம்ப வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விம்பங்கள் நீங்கள்  இங்கு கட்டிடங்களும் காட்சிகளும் மட்டுமே அழகாய் இருக்கிறது மனிதர்கள் அல்ல எனக்கு நல்ல வேலை எடுத்து இங்கு வாழ முடியும் என் தகமைகளுக்கு . நான் இங்கு இருக்க விரும்பல அப்படி இருந்தால் போட்டோவுக்கும் வாழ்க்கைக்கும் நடிக்க வேண்டியதாக இருக்கும்  

எதோ ஒரு ஏக்கத்தில் எழுதின மாதிரி இருக்கு ....போனவள் திரும்பி வந்தால் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, suvy said:

கற்பனை என்றாலும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் விடயம்தான், நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தனி......! tw_blush:

ம் உன்மைதான் இது போல சில சம்பவங்களும் வேற மாதிரியும் சில சம்பவங்களும்  நடந்திருக்கு சுவி அண்ண.

 

20 hours ago, நிழலி said:

குளோசான கவுண்டர் நாளைக்கும் திறக்கும் தானே?

ம்  திறக்கும் ஆனால் அவள் செய்கைகையை கண்டு அதன் அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும் 

 

20 hours ago, ஈழப்பிரியன் said:

முகப் புத்தகத்தில் பார்த்த தீபனுக்கும் நேரே பார்க்கிற தீபனுக்கும் ரொம்ப ரொம்ப வித்தியாசம்.

முகப்புத்தகம் எல்லாம் போலிதானே அண்ண போட்டோக்களும் பொய்யான பேச்சுக்களும் தான் அங்கு அதிகம் எல்லோரும் நல்லவர்களாக இருக்கும் போது இந்த உலகத்தில் எவ்வளவு பிரச்சினை நடக்கிறது 

5 hours ago, putthan said:

எதோ ஒரு ஏக்கத்தில் எழுதின மாதிரி இருக்கு ....போனவள் திரும்பி வந்தால் tw_blush:

இருக்கு ஆனால் இல்ல அது போன்ற நிலைதான் புத்தன் நன்றி கருத்துக்கு

கருத்திட்ட வர்களுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனிக்காட்டுராஜா, இது கற்பனையா? இல்லை உங்கள் அனுபவமா? 

கதவுகள் மூடுவது மீண்டும் திறப்பதற்காகத்தானே.?

சமூக அக்கறையோடு ஒரு ஆணின் மனதில் உள்ள கவலையும் கலந்து உங்கள் பதிவு நன்றாக வந்திருக்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் செல்வி மீண்டும் திருமதி ஆகவில்லையா? காத்திருங்கள் கதவுகள் திறக்கும். பதிவு நன்றாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டடக் காட்டுக்குள் இயந்திர வாழ்வுதான் நம் வாழ்க்கை. நிமிடங்களை எண்ணித்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். ஆனால் பழகிய இயந்திர வாழ்வை விட்டு காலம் மெதுவாக ஓடும் இலங்கை போன்ற நாடுகளுக்கு திரும்பவும் வரமுடியுமா என்ன?

செல்வி சாதாரண விடயத்திற்காக திரும்பியிருக்கின்றா. திரும்பவும் தீபன் வந்து கூட்டிக்கொண்டு போகும்வரைதான் ஜெய் கவுண்டரில் பார்க்கலாம். அதன் பின்னர் கவுண்டர் நிரந்தரமாகவே குளோஸ்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதைக்குள்ள....எழுத்தாளரின் ஏக்கங்கள் ...அவரை அறியாமலே...புகுந்து விளையாடுகின்றன போல உள்ளது!

சில மனிதர்கள்....வளர்வதில்லை!

அவர்களது உறவுகள்...அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையுடன்...விளையாடுவதை..ஏன் தான் அனுமதிக்கிறார்களோதேரியாது!

இந்த விடயங்களில்...விலங்குகளும்...பறவைகளும்....இப்படியான மனிதர்களை விடவும்...மேம்பட்டன போல உள்ளன!

செல்வியைத் திருமணம் செய்து கொள்வதில்....ஊராரின் அபிப்பிராயத்தை எண்ணிப் பயப்பிடுவது என்பது.....சமுதாய வேர்கள்...எவ்வாறு எமது வாழ்க்கையை இறுக்குகின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது!

மொத்தத்தில்...ஒரு அருமையான கதை!

நன்றி.....தனிக்காட்டு ராஜா! ( எத்தனை நாளைக்குத் தான் ...தனிக்காட்டு ராசாவாக அரசோச்சப் போறாரோ தெரியவில்லை!)

 

Posted

யாவும் கற்பனை என்றபோதும் உணர்வுகளின் வெளிப்பாடு உண்மைகலந்தது போலுள்ளது

ஒருவகையில் இப்படியான பெண்களை திருமணம் செய்வது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒரு பண்பட்ட உணர்வும் உறவும் இருக்கும். அனுபவத்தால் ஏற்படும். ஆனால் ஊர் என்ன சொல்லுமோ என்று பயந்தால் வாழ்க்கை நரகம்தான். என்னவோ தெரியவில்லை எம்மவர்கள் சந்தோசத்தை அதிகளவு தீர்மானிப்பது பக்கத்துவீட்டுக்காரன் முன்வீட்டுக்காரனாகவே இருக்கின்றான். 

தொடர்ந்து எழுதுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/21/2018 at 1:11 AM, Kavi arunasalam said:

தனிக்காட்டுராஜா, இது கற்பனையா? இல்லை உங்கள் அனுபவமா? 

கதவுகள் மூடுவது மீண்டும் திறப்பதற்காகத்தானே.?

சமூக அக்கறையோடு ஒரு ஆணின் மனதில் உள்ள கவலையும் கலந்து உங்கள் பதிவு நன்றாக வந்திருக்கிறது??

ம் கற்பனையென்று மட்டும் சொல்லி இருக்குகிறேன் ஆனால் ? .................... எனது அனுபவம் இல்லை நமக்கு லண்டன் என்ன கலர் என்றே தெரியாது அண்ண சில கதவுகளுக்கு திறப்புகள் தொலைந்து உள்ளன மெதுவாக உடைக்க வேண்டும் இல்லையென்றால் அதனை பூட்டியுள்ள  பூட்டுகள் பழுதாகிவிடும் tw_blush:

On 3/21/2018 at 1:51 AM, Kavallur Kanmani said:

இன்னும் செல்வி மீண்டும் திருமதி ஆகவில்லையா? காத்திருங்கள் கதவுகள் திறக்கும். பதிவு நன்றாக உள்ளது

நன்றி அக்கா இப்பவரைக்கும் அவள் மிஸ்ஸிஸ் தீபன் தான்  காத்திருப்பதில் பலன் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, கிருபன் said:

கட்டடக் காட்டுக்குள் இயந்திர வாழ்வுதான் நம் வாழ்க்கை. நிமிடங்களை எண்ணித்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். ஆனால் பழகிய இயந்திர வாழ்வை விட்டு காலம் மெதுவாக ஓடும் இலங்கை போன்ற நாடுகளுக்கு திரும்பவும் வரமுடியுமா என்ன?

செல்வி சாதாரண விடயத்திற்காக திரும்பியிருக்கின்றா. திரும்பவும் தீபன் வந்து கூட்டிக்கொண்டு போகும்வரைதான் ஜெய் கவுண்டரில் பார்க்கலாம். அதன் பின்னர் கவுண்டர் நிரந்தரமாகவே குளோஸ்தான்!

நன்றி கிருபன் உங்கள் கருத்துக்கு இலங்கைக்கு வரமுடியாதுதான் ஆனால் வெளிநாடு நம் சொந்த நாடு அல்ல புகலிடம் என்பதும் புகழ் இடம் என்றும் சொல்லலாம் அது சிலருக்கு சரிப்பட்டு வரும் சிலருக்கு சரியாக அமைவதில்லை நடந்தது நாள் தோறும் சித்திரவதைகள், ஏச்சுக்கள் பேச்சுக்கள் கணவன் குடிப்பது போன்றன சொல்ல வில்லை வெளிநாட்டில் குடி ஒரு பேஷன் ஆகிபோனதும் அது அவளுக்கு பிடிக்காமல் போனதும் சிறைவாழ்க்கை வாழ்ந்து வெளிநாட்டில் இருக்க வேண்டுமா என்ற கேள்விகள் அவளை மீண்டும் இங்கே கொண்டு வந்தது எனலாம் இவை கதையில் சொல்லப்பட வில்லை .

ஜெய்யின் நிலை ! ?..............................

13 hours ago, புங்கையூரன் said:

கதைக்குள்ள....எழுத்தாளரின் ஏக்கங்கள் ...அவரை அறியாமலே...புகுந்து விளையாடுகின்றன போல உள்ளது!

சில மனிதர்கள்....வளர்வதில்லை!

அவர்களது உறவுகள்...அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையுடன்...விளையாடுவதை..ஏன் தான் அனுமதிக்கிறார்களோதேரியாது!

இந்த விடயங்களில்...விலங்குகளும்...பறவைகளும்....இப்படியான மனிதர்களை விடவும்...மேம்பட்டன போல உள்ளன!

செல்வியைத் திருமணம் செய்து கொள்வதில்....ஊராரின் அபிப்பிராயத்தை எண்ணிப் பயப்பிடுவது என்பது.....சமுதாய வேர்கள்...எவ்வாறு எமது வாழ்க்கையை இறுக்குகின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது!

மொத்தத்தில்...ஒரு அருமையான கதை!

நன்றி.....தனிக்காட்டு ராஜா! ( எத்தனை நாளைக்குத் தான் ...தனிக்காட்டு ராசாவாக அரசோச்சப் போறாரோ தெரியவில்லை!)

 

ம் எழுத்தாளர் உள் நுழைந்த சந்தர்ப்பங்களும் வந்துள்ளது நன்றி சுட்டிக்காட்டியமைக்கு எழுதி தீர்க்க வேண்டும் என்ற அவா

Quote

நன்றி.....தனிக்காட்டு ராஜா! ( எத்தனை நாளைக்குத் தான் ...தனிக்காட்டு ராசாவாக அரசோச்சப் போறாரோ தெரியவில்லை!)

ஹாஹா ஹாஹா  ஆருக்கு தெரியும் எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம் 

நன்றி கருத்து புங்கையூரன் 

12 hours ago, சண்டமாருதன் said:

யாவும் கற்பனை என்றபோதும் உணர்வுகளின் வெளிப்பாடு உண்மைகலந்தது போலுள்ளது

ஒருவகையில் இப்படியான பெண்களை திருமணம் செய்வது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒரு பண்பட்ட உணர்வும் உறவும் இருக்கும். அனுபவத்தால் ஏற்படும். ஆனால் ஊர் என்ன சொல்லுமோ என்று பயந்தால் வாழ்க்கை நரகம்தான். என்னவோ தெரியவில்லை எம்மவர்கள் சந்தோசத்தை அதிகளவு தீர்மானிப்பது பக்கத்துவீட்டுக்காரன் முன்வீட்டுக்காரனாகவே இருக்கின்றான். 

தொடர்ந்து எழுதுங்கள்..

உங்கள் கருத்து மிக பொருந்தும் நான் , நாம் நாங்கள் சமுதாயம் என்ற வட்டத்திற்குள் அதுவும் பயந்து வாழ்கிறோம் வரவிற்கு நன்றி சண்ட மாருதன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கதை. கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையான கதை. கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.

நீங்கள் வேற....அவர் நிறைய இடைவெளி விட்டதாலதான் இந்தக் கதையே உதித்திருக்கு......!  tw_blush:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/20/2018 at 3:11 AM, தனிக்காட்டு ராஜா said:

 

என்ன மாதிரி ஜெய் நீ அவளை லவ் பண்ணுன நீ தானே அவளை கல்யாணம் கட்டுற ஐடியா இருந்தால் சொல்லன் ஆனால் நீ விரும்புனதும் அவளுக்கு தெரியும் ஓ அப்படியா தெரிந்து என்ன செய்யுறது. எனக்கு புறப்போஸ் பண்ணிருக்கு என்று பொய் சொல்லிவிட்டு அவர் வீட்டை விட்டு செல்கிறேன் ஏதோ ஒன்று மனதை குடைகிறது அவள் திருமணமானவள் என்றும்  இரண்டாம் தாரம் என்றும் நாளைக்கு ஊர் சொல்லும் அவச்சொல்லும் குத்தும் குடையும் அவளையும் என்னையும் என்ற காரணத்தால்.

ஊர் சொல்லும் என்று நினைத்து விருப்பமில்லாதவர்களுடன் வாழ்ந்து  ஏதோ குடும்பம் நடாத்துவதை விட விருப்பமானவருடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/23/2018 at 3:01 AM, suvy said:

நீங்கள் வேற....அவர் நிறைய இடைவெளி விட்டதாலதான் இந்தக் கதையே உதித்திருக்கு......!  tw_blush:

சில சம்பவங்கள் நடக்கும் போது அவை கதையாக்க நினைப்பேன் அதற்க்கான தருணம் வரும் போது அது கதையாக மாறும்  எனக்கும் காதல் வருகிறது போய் கேட்டால் ஏற்கனவே அவள் மனக்கதவு வேறொரு சாமிக்கு திறக்கப்பட்டுள்ளதாக பதில் சொல்கிறாள் எந்த கதவு திறக்குதோ அங்கே குடித்தனம் இருந்திட வேண்டியதுதான் சுவி அண்ணtw_blush:

 

14 hours ago, கந்தப்பு said:

ஊர் சொல்லும் என்று நினைத்து விருப்பமில்லாதவர்களுடன் வாழ்ந்து  ஏதோ குடும்பம் நடாத்துவதை விட விருப்பமானவருடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

ம்ம் நான் நினைத்து இருப்பதும் இதான் மனதிற்கு பிடித்தவளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கந்தப்பு . இது எனது அனுபவம் இல்லை என்று கூறுகிறேன் .தெரிந்த சம்பவம் ஒன்றை கதையாக்கினேன் நடந்த நிகழ்வுகள் இன்னும் அதிகம் அதை எழுத விரும்பவில்லை:104_point_left: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி! அனுபவிச்சு எழுதியிருக்கிறாரு....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

தம்பி! அனுபவிச்சு எழுதியிருக்கிறாரு....:cool:

ஆணின்ற மனசு ஆணுக்குத்தான் தெரியும்  சிங்கம்யா நீர் tw_blush::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/23/2018 at 2:53 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையான கதை. கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.

நேரம் கிடைக்கும் போது எழுதிட வேண்டும் வாசிப்பவர்கள் தண்ணி குடித்து குடித்து வாசிக்க வேண்டும் tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல முன்னுதாரணமான முடிவு. ரனிலின் கடந்த கால கணக்கு வழக்குகளையும் ஒருக்கால் சரி பார்க்க அநுர அரசு முயல வேண்டும்.
    • உங்களுக்கு இந்த தரவினை பெறக்கூடியதாக இருக்கிறதா? உங்களுக்கு இந்த  தரவினை பெறுவதற்கு இந்த இணைய கணக்கு தேவை என கூறுகிறது.
    • பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்! 10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில்  ஏகமனதாக  தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412204
    • நன்றி உங்கள் கருத்திற்கு, அன்னிய செலாவணிக்கட்டுப்பாடுள்ள நாடுகள், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களினால் இந்த கவாலா மற்ற நாடுகளில் பிரபலம், இலங்கையில் அன்னிய செலாவணி பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது (கட்டுப்பாடுகள் இருக்கிறதா என தெரியாது) என கருதுகிறேன். பெரும்பாலும் இந்த கவாலா arbitrage ஆக பயன்படுத்துவார்கள். நாட்டின் பொருளாதார கொள்கையினால் நாணய பரிமாற்றம் சரியான விகிதத்தில் இருப்பதில்லை, இதனையே கவாலா முகவர்கள் உப்யோகித்து பணம் பார்க்கிறார்கள், அதனால் பெரும்பாலும்  காவாலா காசு அன்னிய செலாவணியாகவே நாட்டிற்குள் வலம் வரும் . https://www.investopedia.com/ask/answers/forex/forex-arbritrage.asp அன்னிய செலாவணி கட்டுப்பாடு உள்ள நாடுகளில் கூட நாட்டிற்குள் அன்னிய செலாவணியாக வராவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து அனுப்படும் காசினால் உள்நாட்டு பொருளாதாரத்தினை வளப்படுத்தும் மற்ற நாடுகளை பற்றித்தெரியவில்லை, இங்கு அவுஸில் தமிழ் கடையில் காசு அனுப்பும் போது பற்றுச்சீட்டு கொடுப்பார்கள் அதில் எந்த நிறுவனத்தின் மூலம் அனுப்புகிறார்கள் என்பது இருக்கும் (நான் முன்பு அனுப்பிய கடை மணிகிராம் மூலம், தற்போது ஒரு 6 -7 வருடமாக நேரடியாகவே மணிகிராம் அல்லது வெஸ்ரன் யூனியன் மூலம் இணையத்தினூடாக அனுப்புவதுண்டு). ஆண்டொன்றிற்கு 5.4 பில்லியன் வெறும் பெரும்பான்மை இனத்தவர்கள், இஸ்லாமியர்களாலும் அனுப்பப்பட முடியுமா? நான் அறிந்த பெரும்பான்மை இனத்தவர்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதில்லை, ஆனால் விசேட  தினங்களிற்கு வாழ்த்து அட்டை அனுப்புகிறார்கள் (இது நகைசுவைக்காக கூறவில்லை, அது அவர்களின் இயல்பு). உங்கள் கருத்தும் சரியானதே (எனது கருத்து தவறாக இருக்கலாம்), தொடர்ந்து எழுதுங்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.