Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட் எமக்கு தேவை தானா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டாக்ரர் சிவராமின் அறிவுரைகளைக் கேட்டதிலிருந்து ரொம்பவுமே குழப்பமாக இருக்கிறது.

எனக்கு 1997 இல் இருதயநோய் வந்தது.இந்த நோய்க்கேற்ற சாப்பாடு ஓட் தான் என்று டாக்ரர்கள் மட்டுமல்ல பார்க்க வந்தவர்களுமே சொன்னார்கள்.

மெத்தப் படித்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சொன்னால் தட்ட முடியுமோ?அன்று தொடக்கம் இன்று வரை காலை உணவு ஓட் தான்.எனக்காக நலமாக இருக்கும் எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து தானும் ஓட்சைத் தான் சாப்பிடுவார்.எங்கேயாவது போனால் கூட நாய்க்குட்டியை கொண்டு திரிவதைப் போல ஒரு ஓட் பொதியையும் சுமந்து கொண்டு தான் வருவார்.

                   இப்போ இந்த டாக்ரரின் உரை அறிவுரையைக் கேட்ட பின் 
ஓட்சை எப்படி தயாரிக்கிறார்கள்?

எந்த எந்த இரசாயனங்கள் ஏன் கலக்கிறார்கள்?

மொத்தத்தில் குதிரைக்காக செய்த உணவை எம்மையும் சாப்பிட வைத்துவிட்டார்கள்.

வெறும் குப்பையிலே போடும் இந்த சாப்பாட்டை உலகம் பூராவும் விரும்பி சாப்பிடுகிறார்களே?  என்று மனவேதனையுடன் பேசுகிறார்.

இவரது பேச்சைக் கேட்டது முதல் ஆயிரம் பேர் சேர்ந்து சவுக்கால் அடித்தது போலவே இருந்தது.இருபது வருடத்திற்கு மேலாக இதையா சாப்பிடுகிறோம்?

          தொடர்ந்து சாப்பிடுவதா?ஏற்கனவே வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஓட் முடியவிடலாமா?சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்று ஓட்சையே தொடரலாமா? எல்லாமே ஒரே குழப்பமாக இருக்கிறது.
 
        போதாக்குறைக்கு நானும் ஏதோ டாக்ரர் மாதிரி பலருக்கு இலவச அறிவுரையும் வழங்கி இனிமேல் இதைத் தவிர வேறு எதையும் காலையில் சாப்பிட கூடாது என்று சொல்லி அவர்களுக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டேன்.இந்த காணெளியைப் பார்த்த பின் மிகவும் வெட்கமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

Edited by ஈழப்பிரியன்

On ‎3‎/‎22‎/‎2018 at 4:48 PM, ஈழப்பிரியன் said:

ஈழப்பிரியன் அண்ணா,

நேரப் பற்றாக்குறை காரணமாக நீங்கள் இங்கு இணைத்து இருக்கும் வீடியோவை பார்க்கவில்லை. ஆனால் உங்கள் பிரதானமான கேள்வி ஓட்ஸ் உண்பது இதய நோயிற்கு நல்லதா என்பதால் எனக்கு தெரிந்தவற்றை எழுதலாம் என நினைக்கின்றேன். நான் இந்த துறையில் வேலை செய்தவனோ அல்லது படித்தவனோ அல்ல.

Eats Ontario எனும் இலாப நோக்கற்ற அமைப்பு மற்றும் சில உணவு தொடர்பான அமைப்புகள் ஓட்ஸ் இனை சிறந்த காலை ஆகாரமாக சிபாரிசு செய்கின்றார்கள். கனடியர்கள் காலை உணவாக அதிக கொழுப்பு உள்ள பர்கர் / சொசேஜஸ் / பேகன் / சலாமி /3 முட்டைகள் அடங்கிய சாண்ட்விச்/ பீஸா பொக்கட் போன்றவற்றை வழக்கமாக உண்ணுகின்றவர்கள் என்பதால் அவர்களுக்கு சிபாரிசு அவசியாமகின்றது.

ஓட்ஸ் ஒரு முழு தானியம்; அதில் உள்ள கார்போஹைதரேட்டில் உள்ள அதிகபடியான Fiber குளுக்கோசாக மாற்றமடையாமல் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை கூட்டாமல் விடுகின்றது. இதுவே ஒரு கோதுமை மா சாப்பாடு என்றால் (புட்டு / இடியப்பம்/ தோசை )  அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைதரேட் (Carbs) நேரடியாக குளுக்கோசாக மாற்றப்பட்டு உடலில் சுகரின் அளவை கூட்டும். இதனால் தான் மற்ற உணவுகளை விட Fiber அதிகம் உள்ள உணவை சிபாரிசு செய்கின்றனர். Fiber இதய நோயையோ அல்லது கொழுப்பையோ அல்லது சுகரின் அளவையோ குறைக்கும் மருந்து அல்ல. ஆனால் மாச்சத்து எக்கச்சக்கமாக அடங்கி இருக்கும் உணவை எடுத்து இவற்றை கூட்டாமல் Fiber அதிகமான ஓட்ஸ் போன்றவற்றை உள்ளெடுக்கும் போது சுகரின் அளவை / கொழுப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கலாம்.

எனக்கு இதுவரைக்கும் சுகர் / கொழுப்பு பிரச்சனை உள்ளது என மருத்துவ அறிக்கைகள் கூறவில்லை. நான் காலையில் உணவாக நான்கு நாட்களுக்கு ஒரு சமன் மீன் துண்டும் ஒரு முட்டை பொரியலும் (Avacado oil ல் பொரித்தது, முட்டையும் Free run hen's egg) உண்பது வழக்கம். ஒரு நாளுக்கு மட்டும் ஓட்ஸ். மிச்ச இரண்டு நாளும் வல்லாரை / கருவேப்பிலை / கீரை கஞ்சி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியம் நல வாழ்வு  fb குழுமத்தை சிறிது வாசித்து பாருங்கோ. குறை மாவு நிறை கொழுப்பு (paleo) உணவு பழக்கத்தின் நன்மைகள், சலரோகம் கட்டுப்படுத்தல், மற்றும் எடை குறைப்பு எவ்வாறு நிகழ்கிறது  என புரிந்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஓட்ஸ் ஒரு முழு தானியம்; அதில் உள்ள கார்போஹைதரேட்டில் உள்ள அதிகபடியான Fiber குளுக்கோசாக மாற்றமடையாமல் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை கூட்டாமல் விடுகின்றது. இதுவே ஒரு கோதுமை மா சாப்பாடு என்றால் (புட்டு / இடியப்பம்/ தோசை )  அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைதரேட் (Carbs) நேரடியாக குளுக்கோசாக மாற்றப்பட்டு உடலில் சுகரின் அளவை கூட்டும். இதனால் தான் மற்ற உணவுகளை விட Fiber அதிகம் உள்ள உணவை சிபாரிசு செய்கின்றனர். Fiber இதய நோயையோ அல்லது கொழுப்பையோ அல்லது சுகரின் அளவையோ குறைக்கும் மருந்து அல்ல. ஆனால் மாச்சத்து எக்கச்சக்கமாக அடங்கி இருக்கும் உணவை எடுத்து இவற்றை கூட்டாமல் Fiber அதிகமான ஓட்ஸ் போன்றவற்றை உள்ளெடுக்கும் போது சுகரின் அளவை / கொழுப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கலாம்.

நிழலி இந்த காணெளியை 25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நிழலி மட்டுமல்ல ஓட் சாப்பிடும் எல்லோருமே கண்டிப்பாக கேட்க வேண்டியது.

மொத்தத்தில் வெறும் குப்பை குப்பை குப்பை என்று அடித்து சொல்கிறார்.ஆனால் இன்றும் கூட அதே ஓட் தான் சாப்பிட்டேன்.

இத்தனை நாளும் மனம் நிறைவாக சாப்பிட்டேன்.இப்போ மனம் குழம்பி போய் ஒரு விரக்தியான நிலையிலேயே சாப்பிடுகிறேன்.

என்னைப் போலவே நீங்களும் ஓட் மேல் ஒரு உயர்வான எண்ணம் கொண்டவர் போலவே தெரிகிறது.

உங்கள் கருத்துக்கு நன்றி.

1 hour ago, ஏராளன் said:

ஆரோக்கியம் நல வாழ்வு  fb குழுமத்தை சிறிது வாசித்து பாருங்கோ. குறை மாவு நிறை கொழுப்பு (paleo) உணவு பழக்கத்தின் நன்மைகள், சலரோகம் கட்டுப்படுத்தல், மற்றும் எடை குறைப்பு எவ்வாறு நிகழ்கிறது  என புரிந்து கொள்ளலாம்.

நன்றி ஏராளன்.

3 minutes ago, ஈழப்பிரியன் said:

நிழலி இந்த காணெளியை 25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நிழலி மட்டுமல்ல ஓட் சாப்பிடும் எல்லோருமே கண்டிப்பாக கேட்க வேண்டியது.

மொத்தத்தில் வெறும் குப்பை குப்பை குப்பை என்று அடித்து சொல்கிறார்.ஆனால் இன்றும் கூட அதே ஓட் தான் சாப்பிட்டேன்.

இத்தனை நாளும் மனம் நிறைவாக சாப்பிட்டேன்.இப்போ மனம் குழம்பி போய் ஒரு விரக்தியான நிலையிலேயே சாப்பிடுகிறேன்.

என்னைப் போலவே நீங்களும் ஓட் மேல் ஒரு உயர்வான எண்ணம் கொண்டவர் போலவே தெரிகிறது.

உங்கள் கருத்துக்கு நன்றி.

வீட்டை போனபின் பார்க்கின்றேன். 

ஓட்ஸ் பற்றி நல்ல எண்ணம் உள்ளது, ஆனால் அதை வாரத்தில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நேரம் மட்டுமே உண்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

வீட்டை போனபின் பார்க்கின்றேன். 

ஓட்ஸ் பற்றி நல்ல எண்ணம் உள்ளது, ஆனால் அதை வாரத்தில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நேரம் மட்டுமே உண்கின்றேன்.

முழு காணெளியும் பார்க்க தேவையில்லை.25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓட்ஸ் எனக்கு விருப்பமில்லை.இருந்தாலும் ஓரிரு தடவைகள் சாப்பிட்டுளேன்.ஊரில் மாட்டுக்கு புண்ணாக்கு கரைச்சு ஊத்திய ஞாபகம் வந்து போச்சுது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

காலை உணவாக எனது மனைவி ஓட்ஸ் சாப்பிட்டுக்கொண்டு வந்தார்.....சுகர் கூடிக்கொண்டு வருவதாக மருத்துவர் கூறினார். அன்றுடன்(2010) எனது வீட்டில் ஓட்ஸ் தடைப்பொருள்...

சாப்பாட்டு விசயத்திலை நான் முடிந்தளவுக்கு என்ரை தாய் தகப்பன் பாட்டன் முப்பாட்டன் சாப்பிட்டதையே சாப்பிட்டன்....சாப்பிடுறன்......சாப்பிடுவன்.
நாகரீகம் எண்ட பெயரிலை கண்ட களிசறைகளை சாப்பிட நான் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சனி, ஞாயிறு தவிர்ந்த மற்றைய நாட்களில்...காலை உணவாக 'ஓட்ஸ்' தான் சாப்பிடுவது வழக்கம்!

சனி, ஞாயிறு...அனேகமாக..தோசை...புட்டு..போன்ற உணவுகள் தான்!

இன்னும் ஈழப்பிரியன் இணைத்த காணொளியைப் பார்க்கவில்லை!

பின்னேரம் பார்த்து விட்டுக் கருத்தை எழுதுகின்றேன்!

முட்டை...அதிக கொழுப்புள்ளது என்று ஒரு காலத்தில் கூறினார்கள்!

தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்புள்ளது என்றும் கூறினார்கள்!

இப்போது இரண்டுமே...உடலுக்கு நல்லது என்று கூறுகிறார்கள்!

காலத்துக்குக் காலம்...சந்தைப் படுத்தலுக்கு இசைய...இவற்றை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்!

குமாரசாமி அண்ணை மேலே கூறியது போல....இப்போதெல்லாம் இறைச்சி அதிகம் சாப்பிடுவதில்லை! மீன் தான் அதிகம் சாப்பிடுவது!

ஏனெனில் எமது முன்னோர்...சாப்பிட்ட உணவு..அது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, புங்கையூரன் said:

முட்டை...அதிக கொழுப்புள்ளது என்று ஒரு காலத்தில் கூறினார்கள்!

தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்புள்ளது என்றும் கூறினார்கள்!

இப்போது இரண்டுமே...உடலுக்கு நல்லது என்று கூறுகிறார்கள்!

காலத்துக்குக் காலம்...சந்தைப் படுத்தலுக்கு இசைய...இவற்றை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்!

 முந்தியொருக்கால் வருசத்துக்கு இரண்டு தரம் ஆட்டுறைச்சி சாப்பிட்ட என்னை துப்பரவாய் சாப்பிடாதை எண்டு வெருட்டிச்சினம்.....

நான் இப்ப  ஆட்டுறைச்சி சாப்பிடுறேல்லை எண்டால் முறைச்சு பாக்கினம்.tw_blush:

ஓட் பற்றியும் உடலில் சேரும் சீனி பற்றியும் பலருக்குச் சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.

இரத்தத்தில் சீனியின் அளவைக் குறைக்க வேண்டுமாயின் இனிப்புப் பண்டங்களை மட்டும் தவிர்த்தால் போதுமானதல்ல.

நாம் உணவு உட்கொண்ட இரண்டு மணித்தியாலத்துக்கு உட்பட்ட நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவை ( blood sugar level) அதிகரிக்கும் எல்லா உணவுகளும் இனிப்புப் பண்டத்துக்கு ஒப்பானவை.

அது சோறாக இருக்கலாம் ஓட்டாகவும் இருக்கலாம். சோறை நன்றாக அவித்தால் சீனியின் அளவு அதிகரிக்கும். இது குத்தரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குத்தரிசி நல்லது என்ற எண்ணத்தில் கோப்பை நிறைய நன்றாக அவித்த குத்தரிசிச் சோறு சாப்பிடுபவர்கள் உள்ளனர். இதே போல்தான் Omega-3 உள்ளது என்பதற்காக கடைகளில் விற்கும் எண்ணையை அதிகளவில் பாவிப்பவர்களும் உள்ளனர்.

சாதாரண அரிசியைக் கூட முக்கால் அவியலாக உண்டால் அதிலுள்ள மாப்பொருள் சீனியாக மாறி இரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். பச்சையாகக் கரட் சாப்பிடுவதை விட அவித்துச் சாப்பிட்டால் 30 வீதமான சீனி உடலில் உடனடியாகச் சேரும். பச்சைக் கரட்டிலும் அவித்த கரட்டிலும் ஒரே அளவான கலோரிகள் இருந்தாலும் கரட்டை அவித்தால் 30 வீதமான சீனி அதிகரிக்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். 

இப்போது கீழுள்ள கலோரி அளவுகளைப் பாருங்கள்.

தீட்டாத அரிசி (அவிக்காதது) 100 கிராம்  - 370 கிலோ கலோரிகள்
தீட்டாத கோதுமை மா 100 கிராம்  -  342 கிலோ கலோரிகள்
ஓட் 100 கிராம்  - 389 கிலோ கலோரிகள்

ஓட் எப்படி சீனியையும் கொழுப்பையும் குறைக்கிறது என்று பார்க்கலாம். ஓட் தானியத்தில் உள்ள தவிடு அதன் கனவவைப்போல் 30 மடங்கு கனவளவான திரவத்தைத் தன்னுள் இழுத்து வைத்திருக்கும் தன்மையைக் கொண்டது. இதுதான் முக்கியமாக உடலில் சீனியின் அளவை உடனடியாக அதிகரிக்காமல் தடுப்பது. உடலில் சீனி உடனடியாக ஏறும்போது மிதமிச்சிய சீனியை ஈரல் கொழுப்பாக மாற்றி இரத்தத்தில் கலந்துவிடும். இதைப் புரிந்து கொண்டால் உடல் எடை, நீரிழிவு நோய், கொலஸ்ரறோல் எல்லாவற்றையும் எமது சாப்பாடு மூலம் குறைக்கலாம்.

ஓட் சாப்பிடுவதில் என்ன பிரச்சனை ?
ஓட் கஞ்சியில் ஏனைய தானியங்களைப் போலவே சீனியின் அளவு உள்ளது. அதனை அதிகமாகச் சாபிட்டுக் கொண்டு அதில் உள்ள தவிட்டால் ஓரளவு சீனியைக் குறைத்துக் கொள்வது அதிக பலன் தராது.

ஓட் தவிடு மட்டும் பொடியாக விற்கிறார்கள். அதனை நீங்கள் சாப்பிடும் எல்லாச் சாப்பாட்டிலும் 1 அல்லது 2 தேக்கரண்டி கலந்து சாப்பிட்டால் சீனியை வெகுவாகக் குறைக்கலாம். ஆனால் அதிலும் பிரச்சனை. ஓட் தவிடு சாப்பாட்டிலுள்ள விற்றமின்களையும் உறிஞ்சிக் கொள்ளும். அதிகமாக ஓட் தவிடு சாப்பிடுபவர்கள் விற்றமின்களைக் குறிப்பாக விற்றமின் D போன்றவற்றை மருந்துகளாக உட்கொள்ள வேண்டும்.

அப்படியானால் உடல் எடையைக் குறைக்க வழிதான் என்ன ?
என்னைப் பொறுத்த வரைக்கும் ஒட் சாப்பிடுவது கடைசி முயற்சியாகவே இருக்கும்.

முதலாவதாக உண்ணும் உணைவைப் புரிந்து உண்ண வேண்டும். நிழலி குறிப்பிட்டதுபோல் காலையில் கொழுப்பு, புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.  உதாரணமாக 2 அவித்த முட்டைகளைச் சாப்பிட்டு வெறும் நீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஒரு முட்டையில் வெறும் 90 கி.கலோரிகளே உள்ளன. அத்துடன் பெருமளவு விற்றமின்களும் கனியுப்புகளும் உள்ளன. அல்லது உலகில் சிறந்த காலை உணவான இட்டலி, தேங்காய்ச் சம்பல் நல்லது. எமது ஊரில் சாப்பிட்ட புட்டும் சம்பலும் நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்கய்ப் பொருயலையும் சாப்பிட வசதி இருந்தால் தெரிவு செய்வேன்.

இரண்டாவதாக உடற்பயிற்சி. 1 மணித்தியால மிதமான உடற்பயிற்சி சுமாராக 500 கி.கலோரியை (80 கிராம் சீனியையும் 20 கிராம் கொழுப்பையும்) உடலிலிருந்து வெளியேற்றும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் நிறைய தகவல்கள் தந்திருக்கிறீர்கள். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1.4.2018 at 11:19 PM, இணையவன் said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. எல்லாரும் சாகும் மட்டும் நோய் நொடியில்லாமல் 80,90 வயதுமட்டும் வாழ்ந்தவையள்.
இப்பவெல்லாம் புதுப்புது படிப்புகள் வரவர புதுப்புது வருத்தங்களும் வந்து கொண்டேயிருக்குது.....புதுப்புது மருந்து மாத்திரைகளும் வந்து கொண்டேயிருக்குது...

சாப்பாட்டிலை நஞ்சு...தண்ணியிலை நஞ்சு...சுவாசிக்கிற காத்திலை நஞ்சு....

18 hours ago, குமாரசாமி said:

உண்மைதான்,  ஆனால் வாழ்விட சூழல் வேறாக இருந்தது. அங்க இயல்பாக வேர்க்கும் ஆனால் இங்கு உடலை வேர்க்க வைப்பதே மிப்பெரிய பிரச்சனை. காசு கொடுத்து உண்ணவேணும் உண்டு உடல் பெருத்த பின்னர் காசுகொடுத்து ஜிம்முக்கு போகவேணும்.

உணவை பார்த்து ஆசைப்பட்டு ரசித்து ருசித்து சாப்பிடும் காலம் போய் பயப்பிடும் நிலமையாகிவிட்டது. 

மேலும் நீங்கள் கூறுவதுபோல் உணவு தண்ணி மருத்துவம் இவைகள் மிகப்பெரிய வியாபாரம்.  ஊரில் எமக்கென்று தோட்டம் இருந்தது அல்லது எங்க உணவுப்பொருட்கள் விளைகின்றது என்பது தெரிந்திருந்தது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தொடர்பிருந்தது. இங்கே அதற்கு இடமில்லை. எமக்கும்  சூப்பர்மார்க்கெட்டுக்கும் தான் தொடர்பு. வருங்காலத்தில் அத்தொடர்பும் குறைந்து ஒன்லைனில் ஓடர் செய்தால் வீட்டு பொருட்கள் வரும். எங்க என்ன எப்படி செய்கின்றார்கள் என்ன கலக்கின்றார்கள் எதுவும் தெரியாது. அந்த உணவு நல்லது இந்த உணவு நல்லது என்று கணணியில் பார்த்து அவற்றை உண்ணவேண்டியது தான். நல்லது கூடாது என்ற காணொளிகளிலும் வியாபாரம் எமாற்று வேலைகள் உண்டு. பகல் இருந்தால் இரவு இருப்பது போல் தொழில் நுட்ப வளர்ச்சி மனிதனை மிகப்பெரிய புத்திசாலியாக்கின்ற  அதேநேரம் மிமோசமான முட்டாளாகவும் மாற்றுகின்றது.

On 4/1/2018 at 4:19 PM, இணையவன் said:

சாதாரண அரிசியைக் கூட முக்கால் அவியலாக உண்டால் அதிலுள்ள மாப்பொருள் சீனியாக மாறி இரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். பச்சையாகக் கரட் சாப்பிடுவதை விட அவித்துச் சாப்பிட்டால் 30 வீதமான சீனி உடலில் உடனடியாகச் சேரும். பச்சைக் கரட்டிலும் அவித்த கரட்டிலும் ஒரே அளவான கலோரிகள் இருந்தாலும் கரட்டை அவித்தால் 30 வீதமான சீனி அதிகரிக்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். 

நல்ல தகவல்கள்.. நன்றி

19 hours ago, குமாரசாமி said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. 

உண்மை.
எனது பாட்டனார் தனது ஆயுட்காலம் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று ஒரு பிள்ளை தனது 7 வயதிற்குள் சாப்பிட்டு விடுகிறது.
இன்று ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமானால் கலோரிகளை எண்ணிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

19 hours ago, குமாரசாமி said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. எல்லாரும் சாகும் மட்டும் நோய் நொடியில்லாமல் 80,90 வயதுமட்டும் வாழ்ந்தவையள்.

தவறான கருத்து. ஒருசிலரை நோய் நொடியில்லாமல் 80-90 வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறலாம். 70 - 80 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விடத் தற்போது சராசரி ஆயுட் காலம் அதிகரித்து வருகிறது.
https://data.worldbank.org/indicator/SP.DYN.LE00.IN?locations=LK

அன்றுபோல் என்றும் வாழ்க்கையும் சுற்றாடலும் ஒன்றாக இருப்பதில்லை. தற்போதைய சுற்றாடலுக்கு ஏற்றவாறு எமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே செல்லவேண்டுமே தவிர சுற்றாடல் எமக்காக மாறப் போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சண்டமாருதன் said:

உண்மைதான்,  ஆனால் வாழ்விட சூழல் வேறாக இருந்தது. அங்க இயல்பாக வேர்க்கும் ஆனால் இங்கு உடலை வேர்க்க வைப்பதே மிப்பெரிய பிரச்சனை. காசு கொடுத்து உண்ணவேணும் உண்டு உடல் பெருத்த பின்னர் காசுகொடுத்து ஜிம்முக்கு போகவேணும்.

உணவை பார்த்து ஆசைப்பட்டு ரசித்து ருசித்து சாப்பிடும் காலம் போய் பயப்பிடும் நிலமையாகிவிட்டது. 

மேலும் நீங்கள் கூறுவதுபோல் உணவு தண்ணி மருத்துவம் இவைகள் மிகப்பெரிய வியாபாரம்.  ஊரில் எமக்கென்று தோட்டம் இருந்தது அல்லது எங்க உணவுப்பொருட்கள் விளைகின்றது என்பது தெரிந்திருந்தது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தொடர்பிருந்தது. இங்கே அதற்கு இடமில்லை. எமக்கும்  சூப்பர்மார்க்கெட்டுக்கும் தான் தொடர்பு. வருங்காலத்தில் அத்தொடர்பும் குறைந்து ஒன்லைனில் ஓடர் செய்தால் வீட்டு பொருட்கள் வரும். எங்க என்ன எப்படி செய்கின்றார்கள் என்ன கலக்கின்றார்கள் எதுவும் தெரியாது. அந்த உணவு நல்லது இந்த உணவு நல்லது என்று கணணியில் பார்த்து அவற்றை உண்ணவேண்டியது தான். நல்லது கூடாது என்ற காணொளிகளிலும் வியாபாரம் எமாற்று வேலைகள் உண்டு. பகல் இருந்தால் இரவு இருப்பது போல் தொழில் நுட்ப வளர்ச்சி மனிதனை மிகப்பெரிய புத்திசாலியாக்கின்ற  அதேநேரம் மிமோசமான முட்டாளாகவும் மாற்றுகின்றது.

ஏன் தோட்டம் துரவு என்று பெரிய வார்த்தையெல்லாம் எழுதுகின்றீர்கள்?

நாம் வாழும் மேலைத்தேய நாடுகளிலும் எமக்கிருக்கும் அதே உணவுப்பிரச்சனைதான் இவர்களுக்கும் இருக்கின்றது.

புதுப்புது உணவுகளின் வருகையால் இவர்களும் அவதிப்படுகின்றார்கள். இங்கிலாந்தில் புதிதாக இனிப்பு பதார்த்தங்களுக்கு மேலதிக வரி அறவிடப்போகின்றார்களாம்.

நிலவரம் இப்படியிருக்க....

ஆரோக்கிய உணவுகளை உண்ணும் நாடுகளில் இருந்து வந்த எம்மவர்களோ விபரம் தெரியாமல் நுணுக்கம் பிடிக்கின்றார்கள்.
இங்கேயும் எமது ஆசிய நாட்டு உணவுகளுக்கீடான காய்கனிகள் தானியங்கள் நிறையவே உள்ளன.

அவற்றை எமது நாட்டு முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அசந்து போவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, இணையவன் said:

அன்றுபோல் என்றும் வாழ்க்கையும் சுற்றாடலும் ஒன்றாக இருப்பதில்லை. தற்போதைய சுற்றாடலுக்கு ஏற்றவாறு எமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே செல்லவேண்டுமே தவிர சுற்றாடல் எமக்காக மாறப் போவதில்லை.

 ஒவ்வொரு மனிதனும் வியாபாரிகளுக்கேற்ப தன் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்ல விழைகின்றீர்கள்?

சூழலையும் சுற்றாடலையும் வியாபாரிகள் தான் தீர்மானிக்கின்றார்கள். அதை  மாற்றும் சிந்தனை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் வரவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சூழலையும் சுற்றாடலையும் வியாபாரிகள் தான் தீர்மானிக்கின்றார்கள். அதை  மாற்றும் சிந்தனை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் வரவேண்டும்.

இதற்காகவே சிறு சிறு முதலாளிகளை ஒழித்து பெரு முதலாளிகளை உருவாக்குகிறார்கள்.அவர்கள் தான் அரசுகளுக்கு விசுவாசமாக இருந்து வேண்டியன செய்து கொண்டிருப்பார்கள்.

25 minutes ago, குமாரசாமி said:

ஏன் தோட்டம் துரவு என்று பெரிய வார்த்தையெல்லாம் எழுதுகின்றீர்கள்?

நாம் வாழும் மேலைத்தேய நாடுகளிலும் எமக்கிருக்கும் அதே உணவுப்பிரச்சனைதான் இவர்களுக்கும் இருக்கின்றது.

புதுப்புது உணவுகளின் வருகையால் இவர்களும் அவதிப்படுகின்றார்கள். இங்கிலாந்தில் புதிதாக இனிப்பு பதார்த்தங்களுக்கு மேலதிக வரி அறவிடப்போகின்றார்களாம்.

நிலவரம் இப்படியிருக்க....

ஆரோக்கிய உணவுகளை உண்ணும் நாடுகளில் இருந்து வந்த எம்மவர்களோ விபரம் தெரியாமல் நுணுக்கம் பிடிக்கின்றார்கள்.
இங்கேயும் எமது ஆசிய நாட்டு உணவுகளுக்கீடான காய்கனிகள் தானியங்கள் நிறையவே உள்ளன.

அவற்றை எமது நாட்டு முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அசந்து போவீர்கள்.

ge-map.png

நீங்கள் கூறுவது ஒரு பார்வை. இருக்கும் நாடுகளைப் பொறுத்து சில நுணுகக்கங்களை பாரக்கவேண்டியுள்ளது.  கனடாவைப் பொறுத்தவரை மரபணுமாற்றப்பட்ட உணவுகள் எது என்று கண்டுபிடிக்க அதற்கான லேபிள் எதுவும் பிரத்தியோகமாக இல்லை. அதற்கான சட்டமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட வளர்ப்பு மீன்கள், பன்றிகள் காய்கறிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றது. பல நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை தனித்துக்காட்டும் லேபிளுடன் தான் விற்க முடியும் என்ற சட்டங்களை கொண்டுள்ளது பல நாடுகள் வியாபாரிகளுக்குச் சாதகமாக உள்ளது. உணவு விசயத்தில் பல விசயங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றது. இவ்வாறான சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

"தான் அறியா சிங்களம் தன் பிடரிக்கு சேதம்"

காரசாரமான விவாதம் நடக்கும்போது இப்போ "ஓட்"டுக்குள்ள 
போறது பொருத்தமாக இருக்காது என்று எண்ணி 
பொதுவாக எங்கு பிரச்சனை குழப்பம் வருகிறது என்று பார்க்கலாம்.

மீன் உண்ணுவதால் பாரிய அளவில் உடலுக்கு பாதிப்பு இல்லை 
என்பது பொதுவான கருத்து..... அது உண்மையும் கூட.
ஆனால் .......... நாம் சாப்பிடும் மீனில் பிரச்சனை இருக்கா இல்லையா ?
என்பதுதான் குழப்பம். அதை புரிந்து தெளிய 
இந்த மீன் எங்கு வளர்க்க படுகிறது ?
இதற்கு இரையாக எதை ஊட்டுகிறார்கள் ?
நெரிசலான இடத்தில் வளருவதால் நோய் தோற்று இல்லாமல் 
இருக்க நீரில் என்ன இரசாயனம் கலக்கிறார்கள்??

போன்ற கேள்விகளுக்கான விடைகளில்தான் 
குறித்த மீன் ஆரோக்கியமா ? உடலுக்கு அழிவா?
என்பதை நிற்னயிக்க போவது 

இது ஓட் டுக்கும் பொருந்தும் ........உருளைக்கிழங்கிக்கும் பொருந்தும். 
இப்போ கெட்டுவிடாமல் இருக்க ..... குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைய 
கூடிய விளைச்சல் தர என்று பல தரப்படட இரசாயனம் கலக்கப்பட்டு இருக்கிறது 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் கஞ்சி (Porridge) எனது காலை உணவாக நீண்ட காலம் உள்ளது. மாற்றும் எண்ணமில்லை. Process பண்ணாத உணவுகளை உண்பதுதான் ஆரோக்கியம். 

தானியங்களான தினை, வரகு, குரக்கன், கொள்ளு எல்லாம் சாப்பிடலாம். தமிழ்க் கடைகளில் கிடைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் காலையில் நேரத்தை மீதப்படுத்தி தயாரிக்க முடியும்.இதனால் சில வருடங்கள் இதனையே தொடர்கிறேன். ஆராய்ச்சி எனும் பெயரில் வரும் கதைகள் எந்தளவு சரியானவை என்று தெரியவில்லை. எதுவும் அளவோடு சாப்பிட்டு வந்தால் சரி. இதுவே என் நிலைப்பாடு.

நான் துபாய்க்கு வேலைக்கு போன புதிதில் காணாததை கண்டமாதிரி கண்ட கண்ட பீசா பர்கர் எல்லாம் சாப்பிட்டு 1 1/2  வருடத்தில் வெயிட் 100kg ஐ தாண்டிவிட்டது. அத்துடன் வெயிட் கூடினதால முழங்கால் வலி வேறு வந்துவிட்டது. அப்போதுதான் இந்த மரமண்டைக்கு தெரிஞ்சது, வெயிட்  கடுமையாக கூடிவிட்டது எப்படியாவது குறைக்க வேண்டும் என்று. எனக்கு தெரிந்த சில நண்பர்களின் ஆலோசனைப்படி, காலைச்சாப்டாக ஓட்ஸ் சாப்பிட தொடங்கினான். காலையில் ஓட்ஸ்  சாப்பிடுவதால் மத்தியானம் கடுமையான பசி பசிக்கும் எனவே ஒரு full கட்டு காட்டுவதுதான் வேலை. வெயிட் குறைந்தபாடில்லை. 

இப்படியே சில மாதங்கள் போனபின்பும் சொல்லிக்கொள்ளும்படி வெயிட் குறையவில்லை. ஒருமுறை ஊருக்கு விடுமுறையில் சென்றபொது, எதேச்சயாக ஒரு தமிழ்வைத்திய பரியாரியார் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் உரையாடும்போது, வெயிட் குறைப்பது பற்றியும் ஓட்ஸ் சாப்பிடுவது பற்றியும் கதைத்தேன். அவர் சொன்னார் "தம்பி ஓட்ஸ் சாப்பிடுவதால் வெயிட் ஐ குறைப்பது கடினம். நீ மூன்று நேரமும் அளவான (மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது) ஆரோக்கியமான சாப்பாடு  சாப்பிடு, சாப்பாடுக்கு இடையில் பசித்தால் நொறுக்கு தீனி சாப்பிடாமல் ஏதாவது பழம் சாப்பிடு. ஒவொருநாளும் குறைந்தது 1 மணித்தியாலம் வியர்வை வரும்படி ஏதவது வேலைசெய். ஒரு 5 அல்லது 6 மாதத்தில் குறிப்பிடத்தக்க வெயிட் குறையும்." என்று சொன்னார். எனக்கு அதில் அப்போது பெரிதாக நம்பிக்கை இல்லை என்றாலும் கொஞ்ச நாளுக்கு அவர் சொன்னதை செய்வது என்ற முடிவுடன் விடுமுறை முடிந்த மீண்டும் துபாய்க்கு வந்துவிட்டேன்.

பிறகு அவர் சொன்னமாதிரி 3 நேரமும் நல்ல உணவு அளவாக சாப்பிட்டு, குறைந்தது 1 மணித்தியாலம் நடை பயிற்சி செய்து வந்தேன் (பீசா பர்கர் மற்றும் பாஸ்ட் food சாப்பிடுவதை முற்றாக நிறுத்திவிட்டன்). அவர் சொன்ன மாதிரி சிறிது சிறிதாக வெயிட் குறைய தொடங்கியது. இப்படியே தொடந்து செய்துவர 1 வருடத்தில் கிட்ட த்தட்ட 15kg குறைந்து விட்டது.இதன் மூலம் உற்சாகம் அடைந்த நான் நடக்கும் நேரத்தை 1.5 மணியாக அதிகரித்து இப்பொது 78kg வெயிட் ல இருக்கிறான். இப்ப நான் எல்லாசப்படும் சாப்பிடுகிறானான் ஆனால் அளவாக. எவ்வளவு டேஸ்ட் ஆக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதில்லை. அத்துடன் ஒவொருநாளும் குறைந்தது 1.5 மணித்தியாலம் உடற்பயிற்சி செய்ய தவறுவதில்லை. வெயிட் ம் கண்ட்ரோலுக்குள்ளை இருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.