Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் காலமானார்!

Featured Replies

முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் காலமானார்!

3338_thumb.jpg
 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார். 

YYYYYYYY_18141.jpg

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக, வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியானதும் பா.ஜ.க தலைவர்களும் தொண்டர்களும் பதற்றத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

 

இதையடுத்து, பிரதமர் மோடி, சுஷ்மா ஸ்வராஜ், அத்வானி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று  நலம் விசாரித்தனர். இவர்களைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் இன்று காலை நேரில் சென்று உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர். இந்த நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை மேலும் பின்னடைவு ஏற்பட்டதாகப் புதிய அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டது. இதனால், பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 5.05-க்கு வாஜ்பாய் காலமானார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்த வாஜ்பாய் தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.

 

 

vajpaeee_17134.jpg

அடல் பிகாரி வாஜ்பாய்... இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பி.ஜே.பி-யின் அதீத வளர்ச்சியில் இவரைத் தவிர்த்துவிட்டு எந்தவொரு தலைவரையும் சொல்லிவிட முடியாது எனலாம்...

https://www.vikatan.com/news/india/134203-atal-bihari-vajpayee-passed-away.html

ஓரளவுக்கு ஏனும் ஈழத் தமிழர்கள் மேல் அனுதாபம் மட்டும் சிறிதளவு ஆதரவு போக்கை கொண்ட இந்திய ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் இருவர். ஒருவர் வி.பி.சிங், மற்றவர் வாஜ்பாய்.

வாஜ்பாய் காலத்தில் தான் (1999 to 2004) இலங்கை இராணுவம் ஜெயசிக்குரு ஆரம்பித்து 1999 இல் படுதோல்வி அடைந்தது. இக் காலத்தில் புலிகள் ஆயுத மற்றும் வள ரீதியில் உச்சத்தை  அடையக் கூடிய விதமாக கடற்புலிகளின் பலம் பெரு வளர்ச்சி அடைந்து இருந்தது. இதற்கு வாஜ்பாய் அரசில் இருந்த புலிகளின் அனுதாபி என சொல்லப்படுகின்ற இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்திய கடற்படையை புலிகளுக்கு எதிராக பெரியளவில் இயங்க விடாமை தான் காரணம்  என அப்போது சொல்லப்பட்டது. புலிகளின் ஓயாத அலைகள் 3 உம் இவரது ஆட்சி காலத்தில் தான் இடம்பெற்றது. ஆனால் யாழ்ப்பாணத்தை புலிகள் முழுமையாக கைப்பற்ற முற்பட்ட வேளை ராஜதந்திர செயற்பாடுகள் மூலம் அதை தடுத்ததும் வாஜ்பாய் அரசு தான்

(மேலே நான் எழுதியுள்ளது என் நினைவுகளில் இருந்து- சில தவறுகள் இருக்கலாம்)

வாஜ்பாய் இற்கு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வாஜ்பாயின் அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த திரு ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் அவர்கள் தமிழர்மீது கொண்டிருந்த அனுதாபமும், புலிகள் மீது வைத்திருந்த பரிவும் அந்நாட்களில் கடற்புலிகளின் தங்குதடையின்றிய போக்குவரத்திற்கு உதவியது என்பது நாங்கள் அறிந்ததுதான். இதன் காரணத்தினாலேயே அப்போதிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அந்நாள் இந்தியக் கடற்படைத் தளபதியும் வெளிப்படையாகவே திரு ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் அவர்களை விமர்சித்து வந்தார்கள்.

புலிகளின் யாழ் நோக்கிய முன்னகர்வுக்கு எதிரான வாஜ்பாய் அரசின் அழுத்தமே இம்மோதலில் புலிகளைக் கட்டிப் போட்டதென்பதும், புலிகளின் முன்னேற்றத்தில் இந்தியாவினால் கட்டாயமாக ஏற்படுத்தப்பட்ட தொய்வே இலங்கை ராணுவத்திற்குத் தேவையான கால அவகாசத்தையும், மீள ஒருங்கிணையும் சந்தர்ப்பத்தையும் வழங்கியதோடு, பாக்கிஸ்த்தானிடமிருந்து பல்குழல் ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க உதவியதும் குறிப்பிடத் தக்கது.

இந்த பல்குழல் ஏவுகணைகளின் பாவனையே இறுதியில் சாவகச்சேரி வரை முன்னேறியிருந்த புலிகளின் அணிகளுக்கு பலமான இழப்புகளை ஏற்படுத்தி முகமாலைவரை பின்னகரத்தியென்பதும் ஈழப்போராட்டத்தின் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

அரச, வெளிவிவகார அதிகாரங்களுக்கு அப்பால்சென்று, உண்மையாகவே ஈழத் தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்ட பெர்ணான்டஸ் போன்றவர்களைச் செயற்பட அனுமதி தந்த திரு வாஜ்பாயிற்கு எனது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டு சோதனை இழுத்துக்கொண்டு கிடந்தபோது உறுதியாக அனுமதியை குடுத்த மனிதர் இன்றும் அதன் சோதனை முடிவுகள் பலத்த முரண் இருந்தபோதிலும் இந்தியா எனும் தேசம் தலைநிமிர செய்தவர் .அவரின் நாட்டிக்கு விசுவாசமாய் இருந்தார் அந்த வகையில்  அவருக்கு அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

திரு வாஜ்பாய் அவர்களுக்கு  அஞ்சலிகள்.

திரு வாஜ்பாயிற்கு எனது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள்  இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை ஆட்சி செய்த,  இந்தியப்  பிரதமர்களில்...
மக்களின் மன ஓட் டத்தையும், நாட்டின் நிலைமையையும்  நன்கு அறிந்து,  
ஆட்சி செய்த சிறந்த பிரதமர் வாஜ்பாய்.
திரு வாஜ்பாய் அவர்களுக்கு, எனது   அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த பிரதமருக்கு....எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

இவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை ஒன்றும் அப்போது உலாவியது!

இவர் தனக்குப் பிடித்துப் போன....பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகத் தந்தையிடம் கூறினார்!

அப்போது தந்தையார்....கொஞ்சம் பொறுத்திரு...என்று கூறுவாராம்!

இவர் எப்போது தந்தையைக் கேட்டாலும்....அதே பதில் தான் வந்ததாம்!

அவ்வாறே....இவருக்குத் திருமணம்...நடக்காமலே போய் விட்டதாம்!

மிகச் சிறந்த பொறுமைசாலி...யாரென்றால்....இவர் தான் என்று அடித்துக் கூறுவேன்!

  • தொடங்கியவர்

வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அமைச்சர்கள்

 

Atal-Bihari-Vajpayee-300x200.jpgஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும், ரிஷாட் பதியுதீனும் பங்கேற்கவுள்ளனர்.

மூன்று தடவைகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்த அடல் பிகாரி வாஜ்பாய்  நேற்று புதுடெல்லியில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் புதுடெல்லியில், யமுனை ஆற்றங்கரையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும், ரிஷாட் பதியுதீனும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தி ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அதில், “வாய்ஜ்பாயின் மரணம் ஆழ்ந்த துக்கத்தை தந்துள்ளது. அவர் சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்தவர்.

1975ஆம் ஆண்டு தொடக்கம் வாஜ்பாயை எனக்குத் தெரியும்.  நான் பிரதமராக இருந்த 2001 2004 காலப்பகுதியில் அவருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

சிறிலங்காவில் உறுதியான நிலையை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கை வகித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/17/news/32373

  • தொடங்கியவர்

மிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்

 

Vajpayee-1.jpeg

இந்தியா தனது மிகச்சிறந்த அரசியல் தலைவரை இழந்துள்ளது என முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பாய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார்.

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடத்திய வாஜ்பாய் அவர்கள் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்

 

mahinda-vajpayee.jpg

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணத்திற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவும் தனது டுவிட்டரில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

“முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் என்னும் பெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது. இந்திய மக்களுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவரது கீச்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல், எய்ம்ஸ் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி

 

Maithripala-Sirisena-Vajpayee.jpg

இலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம் என, அடல் பிஹாரி வாஜ்பாய் மரணத்திற்கு இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில், டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார்.

அவரது மறைவுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன் படி அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இன்று, நாம் ஒரு பெரிய மனிதநேயமுடையவரையும், இலங்கையின் உண்மையான நண்பனையும் இழந்துள்ளோம். முன்னாள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு தொலைநோக்கு தலைவர் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு தீவிர பாதுகாவலராவார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

2009 இல் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மாற்றம் வரக்கூடும் என்று பலர் நம்பியிருந்தார்கள். ஆனால் இந்தியாவின் போரைத்தானே மகிந்த நடாத்திக்கொண்டிருந்தார் என்பதால் குறுகிய இடைவெளியில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது.

  • தொடங்கியவர்

யமுனை நதிக்கரையில் வாஜ்பேயி சிதைக்கு தீவைப்பு

வியாழக்கிழமை உயிரிழந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

அடல் பிஹாரி வாஜ்பேயி Image captionஅடல் பிஹாரி வாஜ்பேயி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோதி, பூடான் மன்னர், ஆப்கன் முன்னாள் அதிபர் அமீர் கர்சாய் உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி, இன்னாள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்களும் மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

டெல்லியில் யமுனை நதிக்கரையில் ஸ்மிரித் ஸ்தல் என்ற இடத்தில் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பேயியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. முப்படை வீரர்கள் அன்னாருக்கு மரியாதை செலுத்தினார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. தேசியக் கொடியை வாஜ்பேயியின் பேத்தி நிகாரிகா பெற்றுக் கொண்டார்.

வாஜ்பேயி Image captionவாஜ்பேயியின் இறுதி அஞ்சலி செலுத்த கூடிய மக்கள்

யமுனை நதிக்கரையில் எரியூட்டப்படும் அன்னாரின் உடலுக்கு முப்படைதளபதிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, தமிழகத் தலைவர்கள், தம்பிதுரை, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத், ஆகியோரும் இறுதிச்சடங்குகளில் கலந்துக் கொண்டுள்ளனர்.

வாஜ்பேயியின் குடும்ப உறுப்பினர்கள் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்படுகிறது. டெல்லியில் யமுனை நதிக்கரையில் ராஷ்ட்ரிய ஸ்ம்ருதி ஸ்தல் என்ற இடத்தில் இந்து மத முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

21 ராணுவ குண்டுகள் முழங்க அடல் பிஹாரி வாஜ்பேயியின் உடலுக்கு மரியாதை வழங்கப்பட்டது. பிறகு, இந்து மத சம்பிரதாயப்படி வேத மந்திரங்கள் முழங்க சிதையூட்டப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-45223545

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, புங்கையூரன் said:

மரணித்த பிரதமருக்கு....எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

இவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை ஒன்றும் அப்போது உலாவியது!

இவர் தனக்குப் பிடித்துப் போன....பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகத் தந்தையிடம் கூறினார்!

அப்போது தந்தையார்....கொஞ்சம் பொறுத்திரு...என்று கூறுவாராம்!

இவர் எப்போது தந்தையைக் கேட்டாலும்....அதே பதில் தான் வந்ததாம்!

அவ்வாறே....இவருக்குத் திருமணம்...நடக்காமலே போய் விட்டதாம்!

மிகச் சிறந்த பொறுமைசாலி...யாரென்றால்....இவர் தான் என்று அடித்துக் கூறுவேன்!

வாஜ்பாய் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார் என்ற கதையும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.