Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா தயார்!

Featured Replies

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா தயார்!

Flag-1-720x450.png

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாட்டு திட்டங்கள் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  வடக்கு, கிழக்கு மக்களும் அதன் பயன்களை பெறவேண்டுமென்ற நோக்கத்தில் இச்செயற்பாட்டினை சீனா மேற்கொள்ள முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை வடக்கு, கிழக்கு  பகுதிகளில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் லுவா சொங் குறிப்பிட்டுள்ளதாவது,

“தென் பகுதிகளுக்கு மாத்திரமின்றி வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வீதி நிர்மாண பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அப்போதுதான் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களுக்கு அதன் பயன்களை பெற்று தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

மேலும் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் பாரிய மாற்றத்தினை தற்போது காணக்கூடியதாக உள்ளது.

இதனால் வடக்கு, கிழக்கு மக்களும் நாட்டில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளை அனுபவிக்க வேண்டியது அவசியம்” என லுவா சொங் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/யுத்தத்தினால்-பாதிக்கப-6/

  • தொடங்கியவர்

வடபகுதியில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க சீனாவும் விரும்புகிறது….

china-srilanka-india.jpg?resize=595%2C33

இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

கொழும்பிற்கான சீனா தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி லுவோ சொங் இதனை தெரிவித்துள்ளார் எனவும் உள்நாட்டு யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வீடுகளையும் வீதிகளையும் அமைத்துக்கொடுப்பதற்கு சீனா விரும்புகின்றது என அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது நிலைமை வேறுமாதிரியானதாக உள்ளதால் அதிகளவு திட்டங்களை இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ் சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்க தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனா வடக்கில் வீடுகளை கட்டி வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையை இரு அமைச்சர்கள் உறுதி செய்துள்ளனர் எனவும் ஏனைய போட்டியாளர்களை விட குறைந்த செலவில் சீனா கட்டித்தர முன்வந்துள்ளதாக அந்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

கிராமிய அபிவிருத்தி தி;ட்டங்களான வீடுகளை அமைத்தல் நீர்சேகரிப்பு வசதிகளை அமைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு கூட சீனா தயாராகவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ள ரொய்ட்டர் கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் நிறுவனமொன்று வடக்கில் 40,000 வீடுகளை கட்டுவதற்கான 300 மில்லியன் டொலர் திட்டத்தை பெற்றது எனவும் சீனாவின் எக்சிம் வங்கி இதற்கு நிதி உதவ வழங்க முன்வந்தது எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் பொதுமக்கள் செங்கல் வீடுகளை கோரியதை தொடர்ந்து இந்த திட்டம்; இடைநிறுத்தப்பட்டதாகவும் இது இந்தியா இந்த விடயத்தில் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ள ரொய்ட்டர் செய்தி சேவை இந்திய உதவியுடன் வீடமைப்பு திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அதிகாரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

http://globaltamilnews.net/2018/92725/

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறீர்க்ளோ இல்லையோ..

வட-கிழக்கிற்கு வாருங்கள் உங்கள் துணை தூதரகம் அது இது எது- என்று எது வேண்டுமென்றாலும் பண்ணுங்கள்...

இந்தியா மட்டும் எங்கள் பகுதியில் வேண்டாம்...வேண்டுமென்றால் எங்கள் பிரதேசத்தில் வாழ்ந்தபடி அவர்களை அச்சுறுத்துங்கள்....

அது இனிமையான விஷயம்..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, valavan said:

பாரதம் என்ற அகண்ட தேசத்தை அடிமைப்படுத்தி அதற்குள் அமைந்திருந்த நாடுகளை ஒன்றிணைத்து இங்கிலாந்துக்காரன் வைத்த பெயர்தான் இந்தியா. இந்தியாவுக்குள் அடங்கிவிட்ட பரந்த தமிழ்நாட்டுப் பரப்பளவை குறுக்கிவிட்டதோடுமட்டும் அல்லாது தமிழையும் அழிப்பதற்கு பெரும் பிரயத்தனத்தை இந்தியா எடுத்துவருகிறது. இதற்கெல்லாம் அப்பால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சீனர்களும் தமிழர்களும் நகமும் சதையுமாக இணைந்திருந்த வரலாறுகளை, பல நாவல்களும் வெளியிட்டுள்ளன. சீன நாடு இன்றும் தமிழைப் போற்றித் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. சீனா வடகிழக்கிற்கு வந்தால் அதனால் தமிழனுக்குப் பாதிப்பு வரும் என்று தோன்றவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா, வாங்கையா வாங்க... நல்லா பாத்து வாங்க... ஆ...ஆ.. அப்படித் தான்யா, அப்படிதான்... 

காதுக்குளாள புகை போகும், டெல்லிவாலாக்களுக்கு...

கண்டுக்காம, வாங்க , வாங்க! ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

பாரதம் என்ற அகண்ட தேசத்தை அடிமைப்படுத்தி அதற்குள் அமைந்திருந்த நாடுகளை ஒன்றிணைத்து இங்கிலாந்துக்காரன் வைத்த பெயர்தான் இந்தியா. இந்தியாவுக்குள் அடங்கிவிட்ட பரந்த தமிழ்நாட்டுப் பரப்பளவை குறுக்கிவிட்டதோடுமட்டும் அல்லாது தமிழையும் அழிப்பதற்கு பெரும் பிரயத்தனத்தை இந்தியா எடுத்துவருகிறது. இதற்கெல்லாம் அப்பால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சீனர்களும் தமிழர்களும் நகமும் சதையுமாக இணைந்திருந்த வரலாறுகளை, பல நாவல்களும் வெளியிட்டுள்ளன. சீன நாடு இன்றும் தமிழைப் போற்றித் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. சீனா வடகிழக்கிற்கு வந்தால் அதனால் தமிழனுக்குப் பாதிப்பு வரும் என்று தோன்றவில்லை. 

வரலாற்றை மேலும் ஆய்வு செய்து ஏழாம் அறிவு 2.0 எடுக்கவேணும் தோழர் ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அய்யா, வாங்கையா வாங்க... நல்லா பாத்து வாங்க... ஆ...ஆ.. அப்படித் தான்யா, அப்படிதான்... 

கண்டுக்காம, வாங்க , வாங்க! ?

போகிற போக்கை பார்த்தால், சீன மொழி கற்க, முதல் ஆளாக நிற்பார் போல தெரியுது. :)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

பாரதம் என்ற அகண்ட தேசத்தை அடிமைப்படுத்தி அதற்குள் அமைந்திருந்த நாடுகளை ஒன்றிணைத்து இங்கிலாந்துக்காரன் வைத்த பெயர்தான் இந்தியா. இந்தியாவுக்குள் அடங்கிவிட்ட பரந்த தமிழ்நாட்டுப் பரப்பளவை குறுக்கிவிட்டதோடுமட்டும் அல்லாது தமிழையும் அழிப்பதற்கு பெரும் பிரயத்தனத்தை இந்தியா எடுத்துவருகிறது.

....

சிறு திருத்தம்.. பாரதம் என்றொரு தேசமே இருந்ததில்லை. பல பல சிற்றரசுகளாக சிதறிக்கிடந்தவற்றை தங்களின் நிர்வாக ஆளுமைக்காக ஆங்கிலேயர்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார்கள்.. ஆகவே இது, கூட்டு தேசங்களின் செயற்கையான இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார தடை இருந்த போது ஆயுதங்களை கொடுத்து அழித்தவர்கள் எல்லாம் இப்போ போட்டிக்கு உதவுவது தமது சுய நலனுக்காகவே அன்றி வேறொன்றுக்கும் அல்ல,tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

சிறு திருத்தம்.. பாரதம் என்றொரு தேசமே இருந்ததில்லை. பல பல சிற்றரசுகளாக சிதறிக்கிடந்தவற்றை தங்களின் நிர்வாக ஆளுமைக்காக ஆங்கிலேயர்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார்கள்.. ஆகவே இது, கூட்டு தேசங்களின் செயற்கையான இணைப்பு.

நான் அறிந்ததை வைத்து இத்திரிக்குப் பின்னூட்டம் எழுதினேன். ஆனால் உங்கள் கருத்து என் பின்னூட்டத்திற்கு ஊக்கம் கொடுக்காததால் கூக்கிள் ஆண்டவரை வேண்டினேன். ஆண்டவரோ சுப்பிரமணிய பாரதியாரைக் காட்டினார். வன்னியரா, பாரதியா? உண்மை யாரிடம் உள்ளது.??
 
பாரத நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு

சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே,
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே,
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

நன்மையி லேயுடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே,
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின்
புகழினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

ஆக்கத்தி லேதொழி லூக்கத்திலே - புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைக்
கடலினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

வண்மையி லேயுளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றற்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபய னீந்திடுங் காலி
யினத்தினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
யீட்டத்தி லேபயி ரூட்டத்திலே
தேட்டத்தி லேயடங் காத நிதியின்
சிறப்பினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, ராசவன்னியன் said:

போகிற போக்கை பார்த்தால், சீன மொழி கற்க, முதல் ஆளாக நிற்பார் போல தெரியுது. :)

காந்தி சிலை நேருமாமா சிலை எல்லாம் வைச்சு வடிவு பார்த்தம்....பள்ளியில் காந்தி நேருமாமா வரலாறு எல்லாம் படிச்சம்.....
கிந்திப்பாட்டுகள்,கிந்தி பாட்டுகள் எல்லாம் கேட்டு ரசிச்சு நாங்களும் உங்கள்  உறவுதான் எண்டு சைகை காட்டினம்.........கடைசியிலை கிந்தி தன்ரை ஆரிய புத்தியை காட்டிப்போட்டுது.....ஆனால் சிங்களம் சீனாவுக்கு அன்று தொடக்கம் பின்பக்கத்தை கழுவிக்கொண்டுதான் இருந்தது......அது இப்பவும் தொடருது

நாங்களும் மாவோ சேதுங்குக்கு சிலை வைச்சு.....சீன பாட்டுக்கள் கேட்டிருந்தால் சிலவேளை????????

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Paanch said:
நான் அறிந்ததை வைத்து இத்திரிக்குப் பின்னூட்டம் எழுதினேன். ஆனால் உங்கள் கருத்து என் பின்னூட்டத்திற்கு ஊக்கம் கொடுக்காததால் கூக்கிள் ஆண்டவரை வேண்டினேன். ஆண்டவரோ சுப்பிரமணிய பாரதியாரைக் காட்டினார். வன்னியரா, பாரதியா? உண்மை யாரிடம் உள்ளது.??
 
பாரத நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு
 
அனைத்திலும் பலம் மிக்க ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து விடுதலை பெற வேண்டிய தேவை அப்போதைய சிற்றரசுகளாக ஆனால் ஆங்கிலேய நிர்வாக அமைப்பில் உள்ளடங்கிய மக்களுக்கு இருந்தது. சிறதிக்கிடந்த மக்களின் உணர்வுகளை ஒருங்கிணைத்து போராட புறப்பட்ட ஒரு கவியின் கற்பனை வார்த்தையை நிசமென நம்பி ஏமாறாதீர்கள்.

இதே மாதிரியான புனைவுகள்/கற்பனைகள் இதிகாசங்களிலும் உண்டு. எல்லாம் வடக்கத்தியரின் சித்து/சொல் விளையாட்டு.

1 minute ago, குமாரசாமி said:

காந்தி சிலை நேருமாமா சிலை எல்லாம் வைச்சு வடிவு பார்த்தம்....பள்ளியில் காந்தி நேருமாமா வரலாறு எல்லாம் படிச்சம்.....
கிந்திப்பாட்டுகள்,கிந்தி பாட்டுகள் எல்லாம் கேட்டு ரசிச்சு நாங்களும் உங்கள்  உறவுதான் எண்டு சைகை காட்டினம்.........கடைசியிலை கிந்தி தன்ரை ஆரிய புத்தியை காட்டிப்போட்டுது.....ஆனால் சிங்களம் சீனாவுக்கு அன்று தொடக்கம் பின்பக்கத்தை கழுவிக்கொண்டுதான் இருந்தது......அது இப்பவும் தொடருது

நாங்களும் மாவோ சேதுங்குக்கு சிலை வைச்சு.....சீன பாட்டுக்கள் கேட்டிருந்தால் சிலவேளை????????

அவர்களை இணைக்க 'பெளத்தம்' என்ற மதம் இருக்கிறது, தமிழர்களிடத்தில் என்ன இருக்கிறது..? புட்டும், சம்பலும்தானே? :)

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமைதான் இங்கு பல சீனர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். 

சீன வம்சாவளி சிங்களவர்கள் என ஓர் இனம் வரப்போகின்றது. கொழும்பு மருதானையில் சாகிராக் கல்லூரிக்கு அருகே சீனர்களின் கடைகளை காணலாம்.

இவர்களும் புத்தரை கும்பிடுபவர்களே இவர்களால் தமிழர்களுக்கு ஏது நன்மை இல்லை

19 சீன, இலங்கை தம்பதிகள் இலங்கையில் திருமணம்

à®à¯à®©, à®à®²à®à¯à®à¯ தமà¯à®ªà®¤à®¿ 19 பà¯à®°à¯ à®à®²à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ திரà¯à®®à®£à®®à¯

இலங்கையின் நிகோம்போ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற மிகப் பெரிய திருமண விழாவில் 19 சீனா மற்றும் இலங்கைத் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் 12 தம்பதி சீனாவையும், 7 தம்பதி இலங்கையையும் சேர்ந்தது.

திருமணம் புரிந்த தம்பதியினர் சீன அரசுக்குச் சொந்தமான கட்டமைப்பு பொறியியல் நிறுவனத்தில் பணியாற்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் காலத்தில்தான், தம்பதியினர் ஒருவரை ஒருவர் சந்திதுள்ளனர். அதனால், “ஒரு மண்டலம் ஒரு பாதைக்காக நாங்கள் கூடினோம், இலங்கையில் திருமணம் செய்து கொண்டோம்” என்ற முழகத்துடன் இச்சிறப்புத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி பெங் சுன்சுயே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெங் சுன் சுயே கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் நம்மை எல்லாம் ஒருங்கிணைத்ததைப் போலவே, திருமணம் புரிந்து கொண்ட தம்பதியினரையும் ஒன்றிணைத்துள்ளது. புதுமணத் தம்பதிகளின் பிரகாசமான வாழ்வைப் போல சீனா-இலங்கையின் உறவும் பிரகாசிக்கும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

இத் திருமண நிகழ்வு, இலங்கை திருமணம் செய்வதற்கான சிறந்த இடம் என்ற அந்தஸ்துக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.

http://tamil.cri.cn/news/southasia/519/20180817/171598.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

சிகிரியா பகுதிக்கு உல்லாச பயணம் வரும் சீனாக்காரர்களுக்கு, கைடாகா, முறையாக, லைசன்ஸ் வைத்துள்ள உள்ளுர்கார சிங்களவர்களுக்கு, கட்டுமான வேலைக்கு வந்த, வேறு விசா வைத்துள்ள சீனர்கள், தாமே கைடாகி,  கொடுக்கும் குடைச்சல்.....

சீன குங்ங்பூ, கராட்டி அடியும் வாங்கி, ஆஸ்பத்திரில படுக்கவும் வேண்டும்.

http://www.dailymirror.lk/article/Chinese-tout-menace-goes-rampant-in-several-areas-152521.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சைனா இலங்கையில் ஏதாவது செய்கிறான் என்றால் சிங்களம் பத்து மடங்கு அதை ஊதி பெரிதாக்கி  காட்டும் காரணம் மேற்குலகும் இந்தியாவும் உதவும் போட்டியை கூட்ட கடைசியில் உண்மையாகவே சைனா ஒட்டகம் சொறிலங்கா கூடாரத்துக்குள் புகுந்து விட்டது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, ராசவன்னியன் said:

அவர்களை இணைக்க 'பெளத்தம்' என்ற மதம் இருக்கிறது, தமிழர்களிடத்தில் என்ன இருக்கிறது..? புட்டும், சம்பலும்தானே? :)

புலம்பெயர்ந்த எம் இளைய சமுதாயம் மேற்கத்தையவர்களை மணம் முடிக்கின்றார்கள்....அதன் மூலமாவது  விடிவு வரட்டும். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.