Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!

Featured Replies

படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!

Capture-83-780x405.jpg

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/story/16/படையினர்-வசமிருந்த-காணி-விடுவிப்பு.html

On 8/31/2018 at 4:59 PM, நவீனன் said:

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2 * 16 = 32 பரப்பு 

இதாவது நடக்குதே.

இப்படித்தான் சென்ற வாரமும் காங்கேசன்துறையிலும் 4.7 ஏக்கர் விடப்பட்டது என்று ஊடகங்கள் முழங்கின 

அதுவும் வெறும் 4,7 * 16 = 75 பரப்புத்தான்

பரவாயில்லை இதாவது நடக்குதே.

இனியென்ன காத்தான்குடியானுக்கு வித்து போட்டு ஏஜென்சி காரனுக்கு 60  லட்சம் கொடுத்து போட்டு பிரான்ஸுகோ அல்லது பிரித்தானியாவுக்கோ வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Dash said:

இனியென்ன காத்தான்குடியானுக்கு வித்து போட்டு ஏஜென்சி காரனுக்கு 60  லட்சம் கொடுத்து போட்டு பிரான்ஸுகோ அல்லது பிரித்தானியாவுக்கோ வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

நானெல்லாம் எப்படி ஊருக்கு போகலாம் தோட்டமோ வயலோ எனக்கு பிடித்ததை செய்து கொண்டு நிம்மதியா இருக்கலாம் என்டு  பார்க்கிறன் அங்க இருப்பவை இங்கால வர இருக்கினம்..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

2 hours ago, அபராஜிதன் said:

நானெல்லாம் எப்படி ஊருக்கு போகலாம் தோட்டமோ வயலோ எனக்கு பிடித்ததை செய்து கொண்டு நிம்மதியா இருக்கலாம் என்டு  பார்க்கிறன் அங்க இருப்பவை இங்கால வர இருக்கினம்..

என் கடைசி கால ஆசையும் அதுதான் ஆனால் முடியுதில்லை அமைதியடைய இங்குள்ள நடப்புகள்.

மூன்று முறை இங்கு வந்து விட்டன் இன்னும் அந்த மரண ஓலம்கள் கேட்டு நடு இரவில் முழிக்க பண்ணுது கனவு .

9 hours ago, பெருமாள் said:

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

பெருமாள்,சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது....உண்மையில் வன்னி மக்களையும் விட கஷடப்படும் மக்கள் சிங்கள கிராமப் பகுதியில் இருக்கிறார்கள்....அதே மடடக்களப்பு வாகரைப் பகுதியில் இருக்கிறார்கள்.

மேலே ஜீவன் சொன்ன மாதிரி கொடுக்கும் காசை திருப்பி அனுப்பினால் சிங்களவன் என்ன செய்வான்?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2018 at 4:01 AM, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

இருந்தாலும் வெளிநாட்டு மோகம் கொஞ்சம் அதிகம் தான் பாருங்க இங்குள்ள சனத்துக்கு மற்றது உடம்பு வலிக்க கொஞ்சம் வேலை செய்வதென்பது பொறுப்பாத்தான் இருக்கு இங்குள்ள சனத்துக்கு :grin:

On 9/2/2018 at 4:16 PM, ரதி said:

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

அண்ணேயும் வந்து போனவர் ஆனால் சிங்கள பகுதிகளையும் காட்டுக்குள் இருக்கும் குடில்களையும் கண்டிருக்கமாட்டாரு  அங்கே தமிழர்களை குடியிருக்க சொன்னால் கூட குடியிருக்க மாட்டார்கள் 

5 hours ago, ஜீவன் சிவா said:

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

நாம தான் கண்கூடாக பார்க்கிறோமே இவனுகள் பிடிக்கிற சண்டையை ( மரியாதை இனி கொடுப்பதில்லை அரசியல் வாதிகளுக்கு )

1 hour ago, ரதி said:

பெருமாள்,சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது....உண்மையில் வன்னி மக்களையும் விட கஷடப்படும் மக்கள் சிங்கள கிராமப் பகுதியில் இருக்கிறார்கள்....அதே மடடக்களப்பு வாகரைப் பகுதியில் இருக்கிறார்கள்.

மேலே ஜீவன் சொன்ன மாதிரி கொடுக்கும் காசை திருப்பி அனுப்பினால் சிங்களவன் என்ன செய்வான்?

பொழுது போக வேண்டாமா என்ன :)

On 9/2/2018 at 4:01 AM, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

உண்மையை கூற போனால் , நட்டில் என்ன தான் பிரச்சனை இப்போது....???

அதற்காக பிரச்சனைகள் இல்லை என்று கூறவில்லை.... ஆனால் நாட்டை விட்டு அகதி வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.....!!!!!!!

30 வருடங்களுக்கு முன்னர் மக்கள் அகதிகளாக வெளியேறிய பொழுது (ஸ்டுடண்ட் வீசா, வேலை வீசாவும் இதில் அகதிகள் வரையறைக்குள் அடங்கும்)  இருந்த அரசியல் பொருளாதார நிலைமைகள் வேறு ......!!!!  முன்னர்  புலம்பெயர் வாழ்வானது உயிர் பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் வழங்கியது..... இப்பொழுது புலம்பெயர் நாட்டில் BMW,Benz இல் வலம் வருவோர் தாயகத்தில் இருந்தால் ஓட்டை சைக்கிளில் தான் ஓடியிருப்பர், இல்லாவிடில் போரில் சிக்கி உயிர் இழந்து இருப்பர்.

ஆனால் இது 30 வருடங்களுக்கு முற்பட்ட நிலைமை...!!!!!! ஆனால் இப்போதைய நிலைமை வேறு.....!!!

2008 ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கு உலகத்தால் முன்னர் வழங்கிய பொருளாதார மேம்பாட்டை வழங்க முடியாது

2009 க்கு முன்னர் புலிகள் இருந்தனர் அவர்கள் எமது மண்ணை காப்பாற்றினார்கள், ஆனால் அவர்கள் இல்லாத நிலையில் எமது மக்களின் தொடர் வெளியேற்றமானது எம்மை பல்வீனமாக்கும்....சிங்களவனால் பெரிய பிரச்சனை வராது......முஸ்லீம்கள் நன்கு திட்டமிட்ட முறையில் முழுமையான இஸ்லாமிய மாவட்டமாக மாற்றவே திட்டமிட்டு செயற்படுகின்றனர்.... எமது வெளியேற்றமானது இதை இலகுவாக போகிறது (மன்னார் மாவட்டம் ஏற்கனவே அவுட்)

அதைவிட முக்கியமாக வெளினாடுகளில் என்ன என்ன சுக போகங்களை அனுபவிக்கலாமோ அவற்றையெல்லம்  இப்பொழுது தாயகதிலும் அனுபவிக்கலாம். இவ்வகையான வாய்ப்பை 2008 பிற்பட்ட இந்தியா-சீனாவை மையப்படுதிய புதிய பொருளாதார கட்டமைப்பு ஏற்பாடுத்தி உள்ளது.....!!!!

அதைவிட ஒரு அரசாங்கத்தால் உட்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே ஏற்படுத்தி குடுக்க முடியும் முதலீடானது தனியார் தரப்பிடம் இருந்து தான் வர முடியும்.

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர் செய்வார்கள்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் செய்வார்கள்

தமிழர் பிரதேசங்களுக்கு யார் செய்வார்கள்....?????

எமது மக்கள் மத்தியில் வெளி நாடு தான் வாழ்க்கை என்பது ஆழ பதிந்து விட்டது, இது  எமது மக்களை தாயத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் வாழ வைத்துள்ளது.

ஏன் என்றால் எல்லர் மனதிலும் எப்படி வெளியில் செல்லலாம் என்பது தான் கேள்வி...?????

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் காணி விடுவிப்பு.. அப்பி... தென்டப் புளுவங்.. கன்டப் புளுவங் என்று சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாத இராணுவத் தளபதி முழங்கின மாதிரியான விடயம் தான். ஆனால் இதுவே சில தமிழ் கூலி அரசியல்வாதிகளுக்கும்.. சிங்கள ஆக்கிரமிப்புப் பயங்கரவாத அரசியல்வாதிகளுக்கும்.. இன்னும் ஒரு 50 வருசத்துக்கு அரசியல் முதலீடாக இழுத்தடிக்கப்படும் போலவே தெரிகிறது.

விடுவிக்கிற காணி எல்லாம் இப்ப ஒற்றை இலக்க.. ஏக்கருக்குள் வந்துவிட்டது. 

சிலபேர் மக்களிடம் பெருந்தொகை பணத்தை வாங்கிக் கொண்டு பள்க்கா காணி விடுவிக்கப் போறம் என்று சொல்லி வழக்குகள் தாக்கல் செய்திச்சினம்... இப்ப அந்த வழக்குகளுக்கு என்னாச்சுன்னே தெரியாது. பொக்கட் நிரப்பினதும்.. சும் கோமாளி இன்னொரு கட்டத்துக்கு தாண்டிவிட்டார். சம் கோமாளி அதை விடுப்புப் பார்க்கிறார். இதில் இடையில நல்லாட்சிக் கோசம் வேற.

போர் முடிஞ்சு 10 வருசம் ஆகப் போகுது.. இன்னும் காணி விடிவிப்பு முடியல்லைன்னா.. அது தான் இப்ப அரசியலில் முதலீடுன்னு தெரிஞ்சுக்கனும் மக்களே. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Dash said:

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர் செய்வார்கள்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் செய்வார்கள்

தமிழர் பிரதேசங்களுக்கு யார் செய்வார்கள்....?????

நீங்கள் யதார்த்தத்துடன் பந்தி பந்தியாக எழுதினாலும்  ஒரு நிறுதிட்டமான சிறந்த அரசியல் முன்னெடுப்புகள் இல்லாமையாலும் சிறந்த திடகாத்திரமான அரசியல் தலைமை இல்லாமையாலும் தான் தமிழர் பிரதேசமக்கள் அல்லல்படுகின்றனர்.

"உவங்களோ" என்று  ஒரு சில இடங்களில் விளிக்குமளவிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் இருக்கின்றனர்.  காசு பணத்தை மட்டும் கணக்கில் வைத்து அரசியல் செய்யும் தமிழ்த்தலைமைகள் கொழும்பில் உள்ள குளிரூட்டி வாசஸ்தலங்களில்  எல்லாம் அவன் செயல் என்ற போக்கில் வசிக்கின்றார்கள். உருவாக்கிய இனவாத பிரச்சனையில் குளிர்காய்கின்றவர்களும் இவர்களே.

புலம்பெயர் தமிழரை விட இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் வெளிநாட்டு சொத்துக்களை தேடிப்பாருங்கள் அவர்களின் இலட்சணம் தெரியும்.

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய அரசியல்வாதி ஒரு ஜனநாயகத்துடன் கூடிய சர்வாதிகாரியாக இருக்கவேண்டுமென்பது எனது  எண்ணம். கடுமையான அரசியல் திட்டங்களால் மட்டுமே வடகிழக்கை நீட்டி நிமிர்த்த முடியும்.

13 hours ago, ஜீவன் சிவா said:

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

விக்கிக்கு ஒன்றை திறம்பட கொண்டு நடத்திற திறன் பத்தாது தான்.. தற்போது வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக யாரை முன்மொழிவீர்கள்.. உங்கள் பார்வையில் 

7 hours ago, nedukkalapoovan said:

உந்தக் காணி விடுவிப்பு.. அப்பி... தென்டப் புளுவங்.. கன்டப் புளுவங் என்று சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாத இராணுவத் தளபதி முழங்கின மாதிரியான விடயம் தான். ஆனால் இதுவே சில தமிழ் கூலி அரசியல்வாதிகளுக்கும்.. சிங்கள ஆக்கிரமிப்புப் பயங்கரவாத அரசியல்வாதிகளுக்கும்.. இன்னும் ஒரு 50 வருசத்துக்கு அரசியல் முதலீடாக இழுத்தடிக்கப்படும் போலவே தெரிகிறது.

விடுவிக்கிற காணி எல்லாம் இப்ப ஒற்றை இலக்க.. ஏக்கருக்குள் வந்துவிட்டது. 

சிலபேர் மக்களிடம் பெருந்தொகை பணத்தை வாங்கிக் கொண்டு பள்க்கா காணி விடுவிக்கப் போறம் என்று சொல்லி வழக்குகள் தாக்கல் செய்திச்சினம்... இப்ப அந்த வழக்குகளுக்கு என்னாச்சுன்னே தெரியாது. பொக்கட் நிரப்பினதும்.. சும் கோமாளி இன்னொரு கட்டத்துக்கு தாண்டிவிட்டார். சம் கோமாளி அதை விடுப்புப் பார்க்கிறார். இதில் இடையில நல்லாட்சிக் கோசம் வேற.

போர் முடிஞ்சு 10 வருசம் ஆகப் போகுது.. இன்னும் காணி விடிவிப்பு முடியல்லைன்னா.. அது தான் இப்ப அரசியலில் முதலீடுன்னு தெரிஞ்சுக்கனும் மக்களே. ?

அப்படியானால் அரசியல்வாதிகளை மாற்ற வேண்டியது தான்.....!!!!!

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எந்த ஒரு பயமும் இல்லை , தேர்தல் வந்தால் சமஷ்டி+ புலி ஆதர்வு= தேர்தல் வெற்றி என்று தெரியும் எதுவும் செய்ய போறதில்லை.....!!!!!

இவர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பதை தவிர்த்தால். மட்டுமே ஏதாவது வெளிச்சம் ஏற்படும்.

On 9/4/2018 at 7:09 AM, அபராஜிதன் said:

விக்கிக்கு ஒன்றை திறம்பட கொண்டு நடத்திற திறன் பத்தாது தான்.. தற்போது வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக யாரை முன்மொழிவீர்கள்.. உங்கள் பார்வையில் 

ஆனது பார்வையில் பல கிலோ மீட்டர் தூரத்திலும் யாரும் தென்படவில்லை என்பதுதான் உண்மையே. அதற்காக நிர்வாகத்திறன் அற்ற ஒருவரைத் தூக்கிப் பிடிக்கவும் நான் தயாரில்லை.

On 9/4/2018 at 3:07 AM, குமாரசாமி said:

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய அரசியல்வாதி ஒரு ஜனநாயகத்துடன் கூடிய சர்வாதிகாரியாக இருக்கவேண்டுமென்பது எனது  எண்ணம். கடுமையான அரசியல் திட்டங்களால் மட்டுமே வடகிழக்கை நீட்டி நிமிர்த்த முடியும்.

இதுதான் யதார்த்தம் 

ஆனால் யார் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஜீவன் சிவா said:

இதுதான் யதார்த்தம் 

ஆனால் யார் 

நீங்கள் ஊரில் இருக்கின்றீர்கள் அல்லவா!

உவ்விடத்து அரசியல் நீரோட்டம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தரமான ஒரு பெயரை சொல்லுங்கள்.

இல்லையேல் இலைமறைகாயாக இருக்கும் ஒருவரையாவது சொல்லுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஊரில் இருக்கின்றீர்கள் அல்லவா!

உவ்விடத்து அரசியல் நீரோட்டம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தரமான ஒரு பெயரை சொல்லுங்கள்.

இல்லையேல் இலைமறைகாயாக இருக்கும் ஒருவரையாவது சொல்லுங்கள்! 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 
சூர்யனுக்கு பக்கத்தில் நிக்கும்மட்டும் தான் இந்த பூமிக்கு மரியாதை விலகி தானும் சூரியன் என்று இந்த பூமி தன் பாட்டுக்கு விலகி  போகுமாயிருந்தால் கடைசியில் ஒன்றும்முடியாமல் பிண்டமாக வேண்டியதுதான்.பிணத்துக்கு சமமான ஆளிடம் எந்த திறமையும் இனி இருக்காது . 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 
அதுதான் அம்மாண்ட வலது கை பிள்ளையான் ஆட்சி கிழக்கிலே பார்த்தமே...

அதை விட வேற என்ன 'அத்தாச்சி' வேணும்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 
இதென்ன கோதாரி விழுந்த கதையாய்க்கிடக்கு........கொண்ணர் இப்பவே தவண்டடிக்கிறாராம்.....இதுக்கை சரியான ஆள் அவர்தான் எண்டு புலுடாக்கதை வேறை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.