Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களுடன் கலைஞனின் உரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....கலைஞன்!

வேலையில் இருக்கிறேன்!

வீட்டுக்குப் போன பின்னர் கருத்தெழுதுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். கலைஞன் நேர்காணல் செய்வதும், அதுவும் யாழ் இணையத்திற்காக, மிகவும் நன்றாக உள்ளது.  எல்லோரும் காணொளியை முழுமையாக பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் குருஜி......பின்பு கருத்து எழுதுகின்றேன்......!

  • தொடங்கியவர்

முழுமையாக உரையாடலை கேட்ட பின் உங்கள் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டால் சிறப்பாக அமையும்; நன்றி!

மிக்க நன்றி கலைஞன்.. கன காலத்திற்கு பிறகு பிரயோசனமான ஒரு நேர்காணால். வாழ்த்துக்கள்

கவிஞரின் பாடல்கள் முன்பு கேட்டிருக்கின்றேன். அவரோடு உரையாடியதை பார்த்தது மிக மன நிறைவு.

சம காலத்தை இலக்கியமாக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மிக உயர்ந்தது. அவர் அதையே செய்தார். இப்ப கூட நாட்டில் நடக்கும் வாள்வெட்டு கஞ்சா போதை புழக்கத்தை இலக்கித்தினூடாக சுட்டிக்காட்ட வேண்டும் என்கின்றார். இலக்கியப் பற்றும் காலத்தோடு ஒன்றிய சமூக அக்கறையும் ஒருமித்த எண்ணமாக வெளிப்படுகின்றது. 

நினைவு மீட்டிய வள்ளலார் பாடலும் பாரதிதாசன் பாடலும் மிக இனிமையாக இருந்தது. எம்மவர்களில் கவிஞர் போன்று சரளமாக இயல்பாக துணிவாக பேசுகின்றவர்கள் அதிகமில்லை. எம் சமூகத்திற்கு இவர் ஒரு முன்உதாரணம். 

மீண்டும் நன்றிகள்.. 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் கலைஞன். நல்லதொரு முயற்சி.

நாங்கள் வாழ்வில் சந்திக்கும் பல் துறை சார்ந்தோர்கள் மற்றும் சான்றோர்களை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையுமானால் இப்படி பிரத்தியேக பேட்டிகள் எடுத்து யாழ் களத்தில் கோப்புக்களாக சேமிப்பது மிகவும் போற்றத்தக்கது.

- 14:00 - 17:00 உங்களின் சமகால இலக்கியம் குறித்த கேள்விக்கு; கவிஞர் ஐயா அவர்களின் பதில் நெத்தியடியாக இருந்தது. அவ்வளவு யதார்த்தமான பதில். இந்த பதில் சமகால அரசியல்வாதிகளுக்கு சாளப் பொருந்தும்.

- வாசிப்புத்திறன், மொழிஆளுமை, ரசிப்புத்திறன் மற்றும்  இலக்கணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு கவிதை வரைந்தால் ..கவிதையில் உயிர்ப்பு இருக்காது போன்ற கருத்துக்கள் மிகவும் ஆழமானவை.

கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு இறைவனை தொழுது, 
தமிழ் வளர்த்த அவருக்கும், அவரை இங்கே அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றியயை தெரிவிக்கின்றேன்...?

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

நேரம் செலவளித்து உரையாடலை கேட்டு, அத்துடன் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சண்டமாருதன், சசிவர்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நானும் இப்போது தான் முழுமையாகப் பார்த்து முடித்தேன்!

உங்கள் குரலும்.....கேள்விகளும்...அருமை!

கமராவை....முழு நேரமும்....கவிஞர் ஐயாவை நோக்கி இருக்காமல்....இடைக்கிடை...நீங்கள் கேள்விகளைக் கேட்கும் போது...உங்களையும் நோக்கித் திருப்பியிருந்தால்..பேட்டி...இன்னும் உயிருள்ளதாக அமைந்திருக்கக் கூடும் என்பது எனது தாழ்மையான கருத்து!

பேட்டியின் இறுதியில்....மனதில்...ஒரு இனம்புரியாத இறுக்கம் ஏற்பட்டது!

எம்முள்ளேயே இருக்கும்....எத்தனை கவிஞர்களை....அறிவு ஜீவிகளை....எழுத்தாளர்களை...நாம் அறியாமல் இருந்திருக்கிறோம் என்பதனால் தான் அந்த இறுக்கம் எனக் கருதுகிறேன்!

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்....இவ்வாறானவர்களை...வெளிச்சத்துக் கொண்டு வாருங்கள்!

அவர்கள் வாழும் காலத்திலேயே...அவர்களுக்கான அங்கீகாரத்தையும்....எம்மாலானா உதவிகளையும்....செய்வோம்! 

மீண்டும் நன்றி......!

  • தொடங்கியவர்

நன்றி புங்கையூரன் உங்கள் நேரத்துக்கும், கருத்துக்கும். நீங்கள் கூறிய விடயங்களை கவனத்தில் எடுக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் அதே திடத்தோடு  எண்ணங்களை வெளிப்படுத்துவது என்பது கவிஞரய்யாவுக்கே உரித்தானது.சமூகம் தொடர்பான கவலையும் மீட்பும் அவரிடம் முன்பைவிட இன்னும் அடர்த்தியாகத்தான் இருக்கிறது. அங்கு இன்றைய காலத்தில் தோன்றியிருக்கும் இலக்கிய வறட்சி பற்றி இதுவரையும் யாரும் வெளிப்படுத்தவில்லை. நேற்று முடிந்தேறிய விடயத்தை மட்டுமே இருக்கும் சிலரும் எழுதுவதும்... அவற்றைக் கடந்த காலமாக கருதி சமூகம் விலகி நடப்பதும் இன்றைய நாளுக்குரியதை சொல்லும் திராணியற்று இலக்கியவெளி இருண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டும் திறன்மிக்க நெம்புகோல் இவர். தமிழும், தமிழர் சமூகமும் அவர்தம் வாழ்வும் பற்றி ஒரு உணர்ச்சிக்குழம்பான கவிஞராக அல்லாமல் சிறந்த திறனாய்வு மிக்க விசாலமான சிந்தனையாளராக பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். எதிர்வரும் 15 - 9 - 2018 அவருடைய நூல் வெளியீட்டுக்கு செல்ல உள்ளேன். பலர் புகழ் மிக்கவர்களாக  சுயநலமிகளாக இலக்கிய வெளிகளில் ஆணவம் நிறைந்தவர்களாக இருக்கும் இந்நாளில் இவரைப்போன்ற ஒரு பெருமகனைப்பார்க்கமுடியாது. இப்போதெல்லாம் நூல் வெளியீடுகளை அறவே தவிர்த்து வருகிறேன். ஆனால் சிலருக்கு மட்டும் தலை வணங்குவேன். அத்தகைய என் வணக்கத்திற்கு உரிவர்கள் மிகச்சிலரே. அதில் கவிஞர் ச. வே பஞ்சாட்சரம் அய்யாவும் ஒருவர்.  அவருடைய நூல் வெளியீட்டுக்குச் செல்வது எனக்கு காலத்தால் கிடைத்திருக்கும் பொக்கிசமாகும். நேர்காணலுக்கு நன்றி கலைஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

 கவிஞர்  பஞ்சாட்சரம் ஐயாவிடம், கலைஞன்  கேட்ட கேள்விகள்...
ஐயாவின்  வாழ்க்கை அனுபவத்திலிருந்து, நாம் என்ன அறிய வேண்டுமோ.... அதனை அழகாக கேட்டிருந்தார். 
யாழ். களத்துக்காக,  பிரத்தியேகமாக... எடுக்கப் பட்ட  பேட்டிக்கு,  ஆயிரம் நன்றிகள் கலைஞன்.  ?

  • தொடங்கியவர்

நன்றி சகாறா அக்கா, தமிழ்சிறி உங்கள் நேரத்துக்கும், கருத்துக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகனாக இருந்தால்தான் கலைஞனாக உருவாகலாம் என்று கவிஞர் சொல்லுகின்றார். வாசிப்புப் பழக்கம் குன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கலைஞன் தொடர்ந்தும் நம்மவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்.... இதற்கு முன்பும், இலங்கையில் வசிக்கும் முக்கியமான ஒருவரை....
பல வருடங்களின் முன்பு,   பேட்டி கண்டவர்.  அதுகும்... மறக்க முடியாதது.

அந்த இணைப்பையும்.... இணைத்து விடுங்களேன். ?

எமக்கு... ஒரு  ஒப்பீட்டுக்கு, பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.  ?

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

நன்றி கிருபன், தமிழ்சிறி. 

தமிழ்சிறி, நீங்கள் கூறுவது சுவிஸ் வானொலி அஜீவனுடனான உரையாடல் என்று நினைக்கின்றேன். அந்த திரி யாழில் இருக்கவேண்டும், ஆனால் ஒலிப்பதிவு அழிந்துவிட்டது, குறிப்பிட்ட ஈசினிப்ஸ் இணையம் தற்போது பாவனையில் இல்லை என்று நினைக்கின்றேன். கனடாவில் தமிழ் திரைப்படம் எடுத்த கலைஞர் ஒருவரையும் முன்பு பேட்டி கண்டேன். இவை தவிர, அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கே. எஸ். பாலச்சந்திரன் ஐயா, தமிழ் வாணம் (நோர்வே வசீகரன்) இன்னும் சிலரது நூல்கள்/படைப்புக்கள் பற்றியும் முன்பு விமர்சனங்கள் கொடுத்தேன். 

இவை எல்லாம் யாழ் கருத்துக்கள உறவுகள், நண்பர்களின் ஊக்கத்தினால் சாத்தியம் ஆகின.

  • 4 months later...

அருமையான உரையாடல், கலைஞன். எனது உண்மையான பெயரைச் சூடியவர் கவிஞர் ஐயா தான். நம் ஊரவர். சிறுவயதில் எனது தமிழாசான்; நாட்டுச் சூழலால் ஏற்பட்ட பிரிவு நிறைய விடங்களை ஐயாவிடமிருந்து கற்பதைத் தடுத்துவிட்டது. 

நன்றி கலைஞன். ☺️

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான பேட்டி குருஜி........! இப்பொழுதுதான் முழுதும் பார்த்தேன். பண்டிதர் அய்யாவின் கம்பீரம் ஒரு சிங்கம் கர்சிப்பதுபோல் இருந்தது....பலப்பல விடயங்களை அருமையாக எடுத்து சொல்கின்றார்......!

அன்று எங்களுக்கு வெளியில் பொழுது போக்குவது என்றால் சினிமாதான் இருந்தது. என்றாலும் கூட தமிழ் படங்கள் எல்லாம் சுத்தமான தமிழ் படங்களாகவும், பாடல்கள் எல்லாம் எதுகை மோனை சந்தங்களுடன் கூடியதாகவும் சிறப்புற அமைந்திருந்தது எமது தலைமுறை செய்த பெரும்பேறு. பிறகு பார்த்தால் எப்போதும் மாறி மாறி கோவில்களில் கருத்தான பாடல்களுடன் கூடிய பிரசங்கங்கள் வில்லுபாட்டுகள் மற்றும் சொற்பொழுவுகள்  நடைபெறும். அங்கு செல்லாமல் வீட்டுக்குள் படுத்திருந்தாலும் கூட அவை ஒலிபெருக்கி வழியாக எமது செவிக்குல் நுழைந்து கொண்டே இருக்கும். இன்றைய தலைமுறையின் வாழ்க்கை பாதையே முற்றிலுமாக மாறி இருக்கின்றது. ஆகவே எல்லாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் ஆகியிருக்கு. வீடுகளிலும் சமூகத்திலும்  பழமொழிகளுக்கு பஞ்சமிருந்ததில்லை. இப்போது அவை பஞ்ச்  டயலாக் ஆக மாறி விட்டது. பழமொழி தெரியாத சின்னஞ் சிறுசுகள் எல்லாம் பஞ்ச் டயலாக்கை பஞ்சு போல் பறக்க விடுகின்றார்கள். நாம் இவற்றை ஏற்றுக் கொண்டுதான் கடந்து போக வேண்டும்......!

பகிர்வுக்கு நன்றி குருஜி.....!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.