Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்

Featured Replies

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்

 

 

யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் தமிழ் கலாச்சார முறைப்படி இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ் பாரம்பரிய கலை அம்சங்களான மங்கள வாத்தியம் முழக்கம், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளைக் கொண்ட ஊர்வலம் ப்றவுன் வீதி வழியாக பல்கலைக்கழக மைதானத்தினை வந்தடைந்துள்ளது.

தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கலை,கலாச்சார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

 

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக இந்திய தமிழ்நாடு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் கு.புகழேந்தி கலந்து சிறப்பித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அத்துடன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களின் வரலாற்றினையும், வாழ்வையும், அரசியலையும் நிர்ணயிக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/events/01/193616?ref=home-feed

  • தொடங்கியவர்

மாபெரும் தமிழ் விழா – யாழ்.பல்கலைக்கழகத்தில்!!

 
 
41931814_10217383822413895_1747756706823

 

 

“நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் ” என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் – மாபெரும் தமிழ் விழா தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் கலாசார ஊர்வலம் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, பல்கலைக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட ஓவியர் எனப் புகழப்படும் தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

41992028_10217383853534673_854380337047541991986_10217383823173914_629638376200741965085_10217383824413945_307610351352541946185_10217383825213965_497061731582241934093_10217383826413995_207185604708041926131_10217383821773879_245787071245941861686_10217383823933933_887031655966341858744_10217383825773979_194365531915442085517_10217383822813905_2863515538749

https://newuthayan.com/story/11/மாபெரும்-தமிழ்-விழா-யாழ்-பல்கலைக்கழகத்தில்.html

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் யாழ்ப்பாணத்தில் சைவத்தையும் தமிழையும் காக்க ஆங்கிலேய.. கிறிஸ்தவ ஆதிக்கத்துக்குள் இருந்து எப்படி போராட வேண்டி இருந்ததோ.. அதை விடப் பல மடங்கு நிலை இன்று தமிழையும் தமிழர் தேசத்தையும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் வடக்குக் கிழக்கில்.. சிங்கள பெளத்த.. இஸ்லாமிய முஸ்லீம்.. மத வெறியர்களிடம் இருந்தும்.. சர்வதேச, பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்க போராட வேண்டி உள்ளது. 

Edited by nedukkalapoovan

3 hours ago, நவீனன் said:

வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்

தன்ற வாள்வெட்டு குஞ்சுகளை மறந்திடாரோ?

முகப்புத்தக பலாத்காரங்களையும் மறந்திடாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் தமிழ்விழாக்கள் என்று கொண்டாட ஆசையிருந்தால், அதனை மட்டகளப்பில்  முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படும் ஊர்களில்,மற்றும்  அம்பாறை ,மணலாறு...திருமலையில் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள், அதுவே எம் இருப்பை இறுமாப்பை பிற இனங்களுக்கு உணர்த்தும்...

அதைவிடுத்து யாழ்நகரத்துக்குள்ளயே சுற்றி சுற்றி தமிழ்விழா என்று பொங்குவது வெறும் ஏமாற்று வித்தை...

நீங்கள்  இப்போ செய்வதை  சிங்களவன்கூட விரும்புவான் ஒரு வட்டத்துக்குள்ளயே நீங்கள் இருங்கோ என்ற அவன் ஆசையை நீங்கள் நிறைவேற்றுவதால்.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Elugnajiru said:

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

தோணியைக் கவிழ்த்தது போன்ற தலைப்பாகை அணிந்த ஆண்களே சிங் என்ற இனத்தை அடையாளப்படுத்துகின்றனர். அங்கு பெண்களைக்கொண்டு சிங் இனத்தை அடையாளம் காண்பது கடினம்.

இடுப்பை மறைத்து சேலை அணியும் பெண்களே தமிழினத்தை அடையாளப்படுத்துகின்றனர். இங்கு ஆண்களைக்கொண்டு தமிழ் இனத்தை அடையாளம் காண்பது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இடுப்பில் ஒட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு கலாச்சாரத்தைக் காப்பாத்திறம் எனவும் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்ப  எல்லாத்துக்கும் இந்தியக்காரரை சீப் கெஸ்ட்ட்தாக கூப்பிட்டினம்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஏன் இப்ப  எல்லாத்துக்கும் இந்தியக்காரரை சீப் கெஸ்ட்ட்தாக கூப்பிட்டினம்?

அவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Elugnajiru said:

அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

அவையள் கோட்டு சூட்டோடைதான் பிறந்து வளர்ந்தவையள்.....:cool:

எண்டாலும் பட்டுவேட்டி திலகங்களுக்கும்  தமிழ்க்கலாச்சாரம் பெரிசாய்..tw_tounge: tw_tounge_xd: tw_thumbsdown:

13 hours ago, நவீனன் said:

அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மாணவர்களின் முயற்சி பாராட்டுக்கு உரியது! 

வரும் காலங்களில் மேலும் மேலும் சிறப்படையும் என்ற எதிர்பார்ப்பு உண்டு! 

  • தொடங்கியவர்

ஈழத்தில் தமிழ் வளர்வதை பார்க்கையில் பெருமையே- கலைஞர் புகழேந்தி!!

 
 
625.0.560.320.160.600.053.800.700.160.90
 
 
 

தமி­ழ­கத்­தில் தமிழ் அழிந்து கொண்­டி­ருந்­தா­லும் தமி­ழீ­ழத்­தில் தமிழ் வளர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. இத­னைப் பார்க்­கும் போது பெரு­மை­யாக இருக்­கி­றது எனறு தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி தெரி­வித்­தார்.

இலங்­கை­யி­லுள்ள 15 பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­கள் ஒன்­றி­ணைந்து நடத்­தும் மாபெ­ரும் தமிழ் விழா பல்­க­லைக் கழக மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு தெரி­வித்­த­தா­வது:

தமி­ழீழ மண்­ணில் எனக்­குப் பல அனு­ப­வங்­கள் உள்­ளன. நான் இங்கு பல தட­வை­கள் வந்­துள்­ளேன். நாம் ஒரு வர­லாற்­றுக் கால­கட்­டத்­தில் உள்­ளோம். கடந்த காலத்­தில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளோம்.

இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் நிகழ்­வாக அமைந்­துள்­ளது. தமி­ழர்க் கலை என்­பது உல­கின் மூத்த குடி­க­ளின் கலை­யா­கும். நாங்­கள் பல­வற்றை இழந்து விட்­டோம். அது­மட்­டு­மல்­லாது இருப்­ப­தை­யும் இழந்து கொண்­டி­ருக்­கின்­றோம்.

தமி­ழர் கலையை மீட்­டெ­டுக்­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கின்­றோம். தமிழ் நாட்­டில் தமிழ் அழிந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் தமி­ழீ­ழத்­திலே தமிழ் வளர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. அதற்­காக முத­லில் தமி­ழீழ மக்­க­ளுக்கு நன்­றி­க­ளைக் கூற­வேண்­டும்.உல­கெங்­கும் தமிழ் பர­வி­யுள்­ளது.

அதற்கு மூல கார­ணம் ஈழத்­துத் தமி­ழர்­களே. ஏனெ­னில் அவர்­கள் கடந்த காலங்­க­ளில் இடப்­பெ­யர்­வு­க­ளைச் சந்­தித்து உல­கின் பல நாடு­க­ளில் வாழ்­கின்­ற­னர். இத­னால் உல­கம் முழு­வ­தும் தமிழ் பர­வி­யுள்­ளது. அது­மட்­டு­மல்­லாது தமி­ழ­ரின் கலை, கலா­சா­ர­மும் பர­வி­யுள்­ளது. இதன் விளை­வாக தமி­ழ­ரின் வாழ்­வி­யல் அர­சி­யல் அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

நாம் இன்று தோற்­றி­ருக்­க­லாம் பின்­ன­டை­வு­ க­ளைச் சந்­தித்­தி­ருக்­க­லாம். இவை அனைத்­தும் நாம் முன்­னோக்­கிப் பய­ணிப்­ப­தற்­கான பாட­மா­கவே நாங்­கள் பார்க்க வேண்­டும். நான் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கிளி­நொச்சி மாவ­ட­டத்­துக்கு வந்­தி­ருந்­தேன். அங்கு எத்­த­னையோ நிகழ்­வு­கள் உணர்வு பூர்­வ­மா­க­வும் இடம்­பெற்­றி­ருந்­தது. நான் இப்­போ­தும் அதே உணர்­வி­னைப் பார்க்­கின்­றேன் -– என்­றார்.

இந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன், தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­ம­னற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஈ.சர­வ­ண­ப­வன், சி.சிறி­த­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவா­ஜி­லிங்­கம் சயந்­தன், கஜ­தீ­பன் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­உள்­ளிட்ட பலர் கலந்­து­ கொண்­ட­னர்.

IMG_20180917_103524.jpgIMG_20180917_094019.jpgIMG_20180917_090712.jpgIMG_20180917_104220.jpg

IMG_20180917_093906.jpg

https://newuthayan.com/story/09/ஈழத்தில்-தமிழ்-வளர்வதை-பார்க்கையில்-பெருமையே-கலைஞர்-புகழேந்தி.html

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நவீனன் said:

மாபெரும் தமிழ் விழா – யாழ்.பல்கலைக்கழகத்தில்!!

41934093_10217383826413995_2071856047080

                                         :101_point_up:                                           :102_point_up_2:

 

மிழர் விழா நிகழ்வில் ஏன் முதல்வர் விக்கினேசுவரனைக் காணவில்லை...? அவர் ஒதுங்கினாரா…?? அல்லது ஒதுக்கப்பட்டாரா...??? அல்லது அவருக்கு எப்படி வேட்டி உடுக்கவேண்டும் என்பதில் பிரச்சனையா...? இடப்பக்கமா வலப்பக்கமா…?  

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Paanch said:

மிழர் விழா நிகழ்வில் ஏன் முதல்வர் விக்கினேசுவரனைக் காணவில்லை...? அவர் ஒதுங்கினாரா…?? அல்லது ஒதுக்கப்பட்டாரா...??? அல்லது அவருக்கு எப்படி வேட்டி உடுக்கவேண்டும் என்பதில் பிரச்சனையா...? இடப்பக்கமா வலப்பக்கமா…?  

 

பத்த வைச்சிடீ ங்களே பாஞ்ச் ..?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பத்த வைச்சிடீ ங்களே பாஞ்ச் ..?

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி இல்லை. மக்கள் ஆட்சி என்று சொல்கிறார்கள். அப்படியாயின் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என எண்ணுவதில் தவறில்லையே தேசிகரே.!!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

அவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️

நெடுக்கர்  உங்களை    போன்றவர்களுக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்து புரியாது 

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

நெடுக்கர்  உங்களை    போன்றவர்களுக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்து புரியாது.

ஒரு ஆபத்தும் இல்லை. அவர் தேசிய தலைவரால் கூட வரவேற்கப்பட்ட ஒருவர். மேலும் எமது விடுதலைப் போராட்ட வடிவங்களை ஹிந்திய தடைகள் மத்தியிலும் ஓவியங்களாக தமிழகத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர்.

இவரையும்.. ஹிந்திய துணைத்தூதரகம் அமைத்து.. ரோவின் திட்டங்களை செயற்படுத்தும் கூலிகளையும் ஒரே கூடையில் போட முடியாது. ?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎9‎/‎18‎/‎2018 at 7:28 AM, nedukkalapoovan said:

ஒரு ஆபத்தும் இல்லை. அவர் தேசிய தலைவரால் கூட வரவேற்கப்பட்ட ஒருவர். மேலும் எமது விடுதலைப் போராட்ட வடிவங்களை ஹிந்திய தடைகள் மத்தியிலும் ஓவியங்களாக தமிழகத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர்.

இவரையும்.. ஹிந்திய துணைத்தூதரகம் அமைத்து.. ரோவின் திட்டங்களை செயற்படுத்தும் கூலிகளையும் ஒரே கூடையில் போட முடியாது. ?

நான் அவரை மட்டும் சொல்லவில்லை....தமிழ்நாட்டுக்காரரும் தமிழ் தான் கதைக்கிறார்கள்...அவர்களும்,நாங்களும் ஒரே கலாச்சராம் தான் ஆனால் அவர்கள் வேற நாங்கள் வேற .

நூலகத்திற்கு நூல் வழங்குதல் அது,இது என்று அவர்கள் காலடி எடுத்து வைப்பது  மிச்ச சொச்ச போராடடத்தையும் மழுங்கடிக்க செய்வதாகும்....என்ன மாதிரியான நூல்களை அன்பளிப்பு செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இப்பவே கட்டவுட்டுக்கு பால் ஊத்துறது என்று தொடங்கி இருக்குது...எழுத இன்னும் கனக்க இருக்கு...இது இப்படியே போனால் தமிழ்நாடடை விட தமிழீழம் சீரழிந்து போகும்...

அதே நேரத்தில்  தமிழ்நாட்டில் எமக்காக உயிர் நீத்த/தியாகம்  செய்தவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்  

 

 

 

17 hours ago, ரதி said:

தமிழ்நாட்டுக்காரரும் தமிழ் தான் கதைக்கிறார்கள்...அவர்களும்,நாங்களும் ஒரே கலாச்சராம் தான் ஆனால் அவர்கள் வேற நாங்கள் வேற . 

குறைந்தது 6 வேறுபாடுகளை கூற முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.